மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestவீரா : அபிPost ReplyPost Reply: வீரா : அபி <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">ABILASHINI V</a> on January 3, 2020, 2:21 PM</div>"யோவ் ஒரு தபா சொன்னா புரியாது...நான் தரைலோக்கல்.வியாசர்பாடில தான் என் வூடு...வேணா வந்து பாரு..அத்தோட ஓடி போயிருவ"இப்டி கெத்தான பொண்ணுதாங்க வீரா.வாழ்க்கைல நடக்குற சில நிகழ்வுகள் நம்மோட வாழ்க்கை பாதையையே மாற்றும்.அப்டிப்பட்ட ஒரு அசம்பாவிதத்தால அம்மாவை இழக்குறா வீரா.உயிர் பிரியிற நேரத்தை விட உறவு பிரியிற நேரம் கொடுமைங்கிற மாதிரி அம்மாவை இழந்தவ பட்ற கஸ்டங்கள் ஆவேசமா வீராவை எழவைக்குது.அப்பாவே தப்பாயிருக்கும் போது இரண்டு தங்கச்சிகளுக்கும் நாம தான் எல்லாம்ன்ற நிதர்சனம் வீராவை முற்றிலும் வேறா மாற்றுது.தலைமுடியை பையன் மாதிரி வெட்டிட்டு "என்னை அழகா காட்டுற எதுவும் எனக்கு வேணாம்"ன்னு சொல்றதோட ஆழமான வலி நமக்கு புரியாம இல்லை.நம்மளே கையறு நிலைல இருக்கிறோம்; இருந்தாலும் சாரதியோட உயிரை காப்பாத்துறது,தங்கச்சிக்கு கேக் வெட்டி கொண்டாடுறது இப்டி சின்ன சின்ன சந்தோஷத்துல தனக்கு ஏற்பட்ட பெருந்துயரை மறக்க முயற்சிக்கிறது,அரசியல் மீட்டிங்ல விசில் அடிக்கிறது,சாரதிக்கே சாரதியா வேலைக்கு சேர்றது,பொண்ணுங்களுக்கு படிப்பு முக்கியம் தான் ஆனால் தற்காப்பு ரொம்ப முக்கியம்ன்னு சொல்றது இப்டி எல்லாத்துலயும் வியப்பு மேலிட வீராவை பாத்தேன்.யாருக்கும் அஞ்சாத வீரியமும் எதற்கும் வளைந்து கொடுக்காத தன்மானமும் உள்ள வீரா பாரதியோட "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்..."வரிகளை தான் ஞாபகப்படுத்துறா.எத்தனையோ கதாபாத்திரங்களை கடந்து வந்துருக்கலாம்.ஆனால் சில பாத்திரங்கள் தான் மனசில ஆழப்பதியும்.அப்டிப்பட்ட பாத்திரங்களுக்கே சிம்ம சொப்பனம் தான் வீரா. நன்றி தமிழால் இணைவோம்.</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா