மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aathiyum AnthamumAA - 41Post ReplyPost Reply: AA - 41

Quote from Krishnapriya Narayan on May 19, 2021, 9:33 PM

ஆதிபரமேஸ்வரி
செல்லம்மாவைப் பற்றி ஊருக்குள் பரவி இருந்த வதந்தி எல்லாம் முற்றிலும் மாறி இருந்தது. அவரின் துணிச்சலும் அவர் தன்னந்தனியாய் கடந்து வந்த பாதையும் ஆதித்தபுரம் மக்களை வியக்கச் செய்தது. துர்பாக்கியசாலி மற்றும் பல அவப்பெயர்கள் செல்லம்மாவிற்கு அந்த ஊரில் இத்தனை ஆண்டுகளாய் வலம் வந்த நிலையில், ஆதி தன் தாயின் மீதான அவப்பெயரை மாற்றி அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் செல்லம்மாவை ஒரு உதாரண பெண்மணியாய் நிலைநிறுத்தியிருந்தாள். ஆதித்தபுரம் ஊரே செல்லம்மாவைப் பற்றியும் ஆதியைப் பற்றியும் பெருமையாய் பேசிக்கொண்டன. ****** ஆதிபரமேஸ்வரி கோயில் வாயில். மக்கள் எல்லோரும் தீவிரமான வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டிருந்தனர். குடமுழுக்கு திருவிழாவை நடத்துவது சாத்தியமா என்பதே எல்லோருடைய குழப்பமும் கவலையுமாக இருக்க, ஆதி நடப்பதையெல்லாம் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கோயிலில் பூஜைகளும் அபிஷேகங்களும் வெகுவிமர்சையாய் நடைபெற, அப்போது மேள தாளங்களெல்லாம் காதினை செவிடாக்கும் அளவுக்கு முழங்கத் தொடங்கின. கும்பாபிஷேகத்தை நடத்த ஆதிபரமேஸ்வரியே பிரதிஷ்டையாகி சம்மதம் தரவே எல்லோரும் அத்தனை ஆவலாய் காத்திருந்தனர். அங்கிருந்த மக்கள் எல்லோரின் முகத்தில் பெருத்த எதிர்பார்ப்பும் தவிப்பும் குடிகொண்டிருக்க, கற்பூர தீபாரதனையைக் கருவறையில் காண்பித்தபடியே ஆதிபரமேஸ்வரியை குருக்கள் அழைக்க அவளே ஒரு கன்னிப்பெண்ணின் மீது வந்து குறி சொல்வாள் என்பது ஆதித்தபுர மக்களின் பல ஆண்டு கால ஆழமான நம்பிக்கை. இந்தச் சடங்கு ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்த நேரங்களிலேயே நடக்கும். அதேநேரம் அத்தனை சுலபமாய் எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்தபடி ஆதிபரமேஸ்வரி பிரசன்னம் ஆகிவிடவும் மாட்டாள். அன்றும் எல்லோரின் காத்திருப்பும் நீண்டுக் கொண்டே போனது. எல்லோரும் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். ஆதிபரமேஸ்வரி வருவாளா வரமாட்டாளா என்ற விவாதங்கள் போய் இனி வரமாட்டாள் என்று எல்லோரும் அவநம்பிக்கை கொள்ள, “ஏய்ய்ய்ய்ய்.......” அப்போது சங்கரி பயங்கர ஒலி எழுப்பிச் சத்தமிட சங்கரியின் தாய் வடிவு இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் அப்படியே மிரண்டு நிற்க மக்கள் அனைவரும் சங்கரியை நோக்கி பார்வையைத் திருப்பினர். ஆதிபரமேஸ்வரியே அழைப்பை ஏற்று சங்கரியின் ரூபமாய் நிற்பதாய் எண்ணி எல்லோருமே ஆவேசமாய், "ஆத்தா... அம்மா" என்று வணங்கி, அந்த ஊரே பக்திமயமாய் கையெடுத்துக் கும்பிட்டபடி நின்றது. எல்லோரின் மனநிலையையும் கவனித்தபடி ஆதி மெல்ல அந்தக் கூட்டத்திலிருந்து விலகி வர, அப்போது அன்னம்மாவும் அதிசயித்தபடி தன் கொம்பை ஊன்றி எழுந்து நின்று வணங்கிக் கொண்டிருந்தார். அதேநேரம் அன்னம்மா ஆதியின் புறம் திரும்பி தன் கை அசைவால் ரொம்ப ஆண்டிற்குப் பிறகு இப்படி ஒரு அதிசயம் நிகழ்கிறது என்று தெரிவிக்க, "ஓ... அப்படியா?!" என்று ஆச்சர்யமாய் ஒரு 'ஓ' போட்டாள். ஆதியின் இந்த ஆச்சர்யமான பாவனைக்கு பின்னணியில் ஒரு சூட்சமம் ஒளிந்திருந்தது. அதை யார் கண்டறிய கூடும்? சங்கரி தன் பாட்டுக்கு ஆக்ரோஷமாய் ஆடிக் கொண்டிருக்க அந்த இடத்தில் தாரை தப்பட்டை ஒலி ஓங்காரமாய் ஒலித்து, அந்த ஊர்மக்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தியது. சங்கரி வெகுநேரம் பேசாமல் எல்லோரையும் மிரட்டியபடி குரல் கொடுக்க, அப்போது கோயில் குருக்கள் முன்னே வந்து தீபாராதனையெல்லாம் காட்டி, "நீதான் ஒரு நல்ல வாக்கு சொல்லி இந்த ஊர்மக்களோட மனக்குழப்பத்தைத் தீர்த்து வைக்கணும் தாயி" என்றார். "என்ன மனக்குழப்பம்? சொல்லு" ஆங்காரமாய் அவள் மிரட்ட, "ஆத்தா! கோயில் கும்பாபிஷேகத்தை எப்போ நடத்தலாம்... சொல்லும்மா?!" என்றுக் கேட்க சங்கரி தன் கண்களை உருட்டியபடி, "நடத்தவே கூடாது... நடத்த விடமாட்டேன்" என்றாள். மக்கள் எல்லோரும் அதிர்ச்சியோடு நிற்கக் குருக்கள், "ஏன் ஆத்தா?" என்று கேட்க... "முதல்ல நான் இருக்கிற இடத்தில கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்துங்கடா" என்றாள். எல்லோருமே புரியாமல் நிற்க மீண்டும் அடுத்தக் கேள்வி எழுந்தது. "என்ன ஆத்தா சொல்ற... எங்க இருக்க நீ... எங்க கோயில் கட்டனும்?" என்றார் குருக்கள். "நான் எங்க இருக்கன்னு தானேவே தெரியவரும்... அந்த இடத்தில கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துகிற அதே நாள்ல இந்த கோயில்லயும் நடத்துங்கடா" என்று அவள் சொல்ல கேட்டவர்களுக்குதான் புரிந்தும் புரியாமலும் இருந்தது. "என்ன ஆத்தா சொல்ற?" என்று குருக்கள் கேள்வி எழுப்ப சங்கரி பயங்கரமாய் ஒலி எழுப்பிவிட்டு மயங்கினாள். மக்கள் எல்லோருமே ஒன்றும் விளங்காமல் குழம்பிக் கொண்டிருக்க, சரவணன் நடந்தவற்றை எல்லாம் குழப்பமாய் பார்த்துவிட்டு ஆதியை சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே நெருங்கி வந்தான். அப்போது ஊர்மக்கள் நடந்தேறிய நிகழ்வைப் பற்றி சலசலத்து கொண்டிருக்க, ஊர்க்காரன் ஒருவன் கோயிலை நோக்கி ஓடி வந்து எல்லோரையும் பிரமிக்க வைக்கும் அந்த அதிசயத்தை உரைத்தான். "ஃபேக்டரிக்கு அஸ்திவாரம் தோண்டும் போது சாமி சிலை கிடைச்சிருக்காம்" என்று மூச்சு வாங்கியபடி சொல்ல மக்கள் எல்லோரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர். ஊர்மக்கள் அதிவிரைவாய் பேக்டரி கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு விரைய, அப்போது அன்னம்மா ஆதியிடம் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்றுக் கேட்க பதிலுரைக்காமல் அவளுமே ஸ்தம்பித்துப் போயிருந்தாள். திட்டம் தீட்டியது அவள்தான். ஆனால் இம்முறை அது இத்தனை சரியாய் எப்படிச் செயல்பட்டது என ஆதிக்கே புரியவில்லை! மயங்கி விழுந்த சங்கரியும் அவள் அம்மாவும் மட்டும் அங்கே இருக்க அனைவரும் தொழிற்சாலைக் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த இடத்தைச் சூழ்ந்தனர். ஆச்சர்யம்! அதிசயம்! பிரமிப்பு! இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அப்படியே சிலாகிக்க... அப்படி என்னதான் இருந்தது அங்கே? ஆதிபரமேஸ்வரி சிலை! ஆம்! ஆதிபரமேஸ்வரிதான். ஒற்றைக் காலை மடித்தபடி மணல்கள் ஒட்டிய வண்ணம் ஆதிபரமேஸ்வரியின் சிலை அங்கே கிடைக்கப்பெற்றிருந்தது. மக்கள் எல்லோரும் பக்தியின் மிகுதியால், "ஆதிபரமேஸ்வரி தாயே!" என்றுத் தொடர்ந்து கோஷமிட அந்த இடமே அதிர்ந்து போனது. சிலிர்த்துப் போனது. சொல்லிலடங்கா பக்திகடலில் மூழ்கிப் போனது. காண கண்கள் கோடி வேண்டும் என்பார்களே! அந்தச் சொற்றொடரை இங்கே சொன்னால் வெகுபொருத்தமாய் இருக்கும். அழகின் ரூபமாய் அதீத கம்பீரமாய் தீட்சண்யமாய் இருந்த ஆதிபரமேஸ்வேரி சிலையைக் காண நிச்சயம் கண்கள் கோடி வேண்டும் என்றுத் தோன்றியது. இந்தச் செய்தி மெல்ல அருகாமையில் உள்ள கிராமங்களில் பரவ அங்கே மக்களின் கூட்டம் பெருகிக் கொண்டே வர, அந்தக் கணம் தொழிற்சாலைக் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. மக்கள் எல்லோரும் சங்கரியின் வாக்கு உண்மையிலேயே அருள் வாக்குதான் என்று நம்ப ஆரம்பித்தனர். அந்த இடத்தில்தான் கோயில் கட்டவேண்டும் என்று மக்கள் எல்லாம் கூடி முடிவுக்கு வர, அந்தத் தொழிற்சாலை தலைமை பொறுப்பாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர். நடப்பது இறைவனின் செயல் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்க, ஆதிக்கும் அன்னம்மாவிற்கும் மட்டுமே நடந்த நிகழ்வின் சூட்சமம் தெரியும். அன்று ஆதித்தியவர்மன் நிறுவிய ஆதிபரமேஸ்வரி சிலை ஓர் அதிசய பஞ்சலோக கலவை! அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, துத்தம், ஈயத்தின் கலவையால் செய்யப்படுவது. அதன் சரியான கலவையும் செய்முறையும் ஆதித்தியவர்மனின் பெரும் சூட்சமம். நம் கோயில்கள் பலவற்றில் பஞ்சலோக சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் சிலை ஆயிரம் வருடப் பழமையான அரியப் பொக்கிஷம்! அத்தனைப் பெரிய அழகிய நுணுக்கமான பஞ்சலோக சிலையின் மதிப்பை அந்த ஊர்மக்கள் அறிந்திருக்கவில்லை. அது ஒரு சிறிய ஆலயம் என்பதால் யாருமே ஆதிபரமேஸ்வரி சிலையில் அத்தனை சிறப்பிருக்கும் என்று இதுவரை எண்ணியதில்லை. அதுவும் அல்லாது ஆதித்தியவர்மன் படைத்த ஆதிபரமேஸ்வேரி சிலை பார்க்கக் கற்சிலை போலவே தோற்றமளிக்கும். அதுவும் அச்சிலையின் மற்றொரு சிறப்பம்சம்! அத்தகைய பஞ்சலோக சிலைகளை நாம் வழிப்படுவதே, அதாவது தரிசிப்பதே நமக்கு ஆக்கப்பூர்வமான சக்தியை அளிக்கவல்லது. அங்கே நிற்கிறான் தமிழனும் அவன் அறிவியல் அறிவும்! மற்றுமொரு சிறப்பு அத்தகைய பஞ்சலோக உலோகத்தை அணிவது கூட சிறப்பு மிகுந்த சக்தியை நமக்கு அளிக்கும் என்பதுதான். அன்று செல்வி அணிந்திருந்த அந்த டாலரும் அத்தகைய பஞ்சலோக கலவை. அதுதான் அவளின் மனோபலத்திற்கும் காரணகர்த்தா! மனோகரன் அந்த ஆயிரம் கால பழமையான பஞ்சலோக சிலையின் மதிப்பை அறிந்து கொண்டதுமே, அவன் அதை நம் நாட்டின் பொக்கிஷம் என்று பாராமல் அந்தச் சிலையை வியாபார நோக்கத்தோடு பார்த்திருக்கிறான். பல கோடி மதிப்பிலான அந்தச் சிலையை தன் சுயநலத்திற்காக வெளிநாட்டிற்குக் கடத்த வேண்டும் என்று குரூரமாய் திட்டம் தீட்டினான். அதற்காக வேண்டி ஓர் போலி சிலையை உருவாக்கி கோயிலில் வைத்துவிட்டு உண்மையான ஆதிபரமேஸ்வேரி சிலையை கடத்தியிருக்கிறான். அதனை மக்கள் நடமாட்டம் இல்லாத தோப்பில் வெள்ளையப்பன் உதவியோடு அவன் புதைத்திருக்க, இந்த விஷயத்தை எப்படியோ அறிந்து கொண்ட அன்னம்மா இதைப் பற்றி சிவசங்கரனிடம் தெரிவித்திருக்கிறார். அன்று சிவசங்கரன் அவர்களின் சதியை கண்டறியத் தோப்பிற்குள் மனோகரனையும் வெள்ளையப்பனையும் பின்தொடர்ந்து செல்ல, அவர்கள் அதற்கு முன்னரே அந்தச் சிலையைப் புதைத்துவிட்டனர். ஆதிபரமேஸ்வரி சிலையை ஊரைவிட்டு வெளியே எடுத்துச் செல்லும் அவர்கள் எண்ணத்தை சிவசங்கரன் முறியடிக்க முயற்சி செய்ய, மேலே நடந்தவை எல்லாம் நம் வாசகர்களுக்குத் தெரிந்ததே! இந்த விவரத்தை எல்லாம் அன்னம்மாவின் மூலமாக அறிந்து கொண்ட ஆதி, தொல்பொருள் ஆய்வாளர் தமிழ்வேந்தனை வரவழைத்து கோயிலில் தற்போதுள்ள சிலை போலியானது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். உடனடியாய் அன்று இரவே அந்தச் சிலை எங்கே புதைக்கப்பட்டிருக்கும் என்று கண்டறியும் ஆவலில் அவள் தோப்பிற்குள் சென்ற போதுதான் விஷ்வாவிற்கு அத்தகைய அசம்பாவிதம் நேர்ந்தது. ஊர்மக்களிடம் இதைச் சொல்லி தோப்பிற்குள் அந்தச் சிலையைத் தேட வைப்பதும் நம்ப வைப்பதும் அத்தனை சாத்தியமயான விஷயம் இல்லை. அதனால் பெரும் குழப்பங்கள் விளையலாம். அங்கே வேலை செய்தது ஆதியின் புத்திக்கூர்மை! அவளைப் பொறுத்தவரை அந்தச் சிலை நிச்சயம் தொழிற்சாலை கட்டுமான வேலை நடக்கும் போது கிடைத்துவிடும். ஆதலால் அந்தத் தோப்பில் சிலை இருப்பதை மறைமுகமாகச் சங்கரி மூலமாய் தெரியப்படுத்தி, அங்கே கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை ஊர்மக்கள் மனதில் விதைத்தாள். அப்போது தானாக அந்த பேக்டரி கட்டுமானத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு வலுக்கும் என்ற அவளின் யோசனை சரியாகவே செயல்பட்டது. ஆதி இது எல்லாவற்றையும் சிலைக் கிடைத்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையிலேயே செய்திருக்க, அவளுக்கே ஆச்சர்யம் என்னவெனில்! சங்கரி அருள்வாக்கு சொன்ன மறுகணம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இடத்தில் ஆதிபரமேஸ்வரி பிரசன்னமானதுதான். யாருக்குத் தெரியும்? இதில் ஆதியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டாலருக்கும் கூட பங்கு இருக்கிறதோ என்னவோ?! அது அவளுக்கே தெரியாத ரகசியம். அவள் நினைத்தது எப்படி அப்படியே அரங்கேறியது என்று! சில நாட்கள் கழித்து... ஆதித்தபுர மக்கள் எல்லோரும் அந்தத் தோப்பில் ரசாயன தொழிற்சாலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, சரவணன் அந்தத் தொழிற்சாலை நிறுவனரிடம் அந்த நிலங்களை தங்களுக்கே கொடுத்துவிட வேண்டினான். அதற்காகத் தரப்பட்ட பணத்தையும் நஷ்டத்தையும் அளிப்பதாகவும் உரைத்தான். ஆனால் அந்த நிறுவனர் அதற்குச் சம்மதிக்க மறுத்தார். இதற்குப் பிறகு நடந்தவை மீண்டும் ஆதியின் கைவசம்! அவள் தன் புத்திக்கூர்மையோடு தன் பேனா கூர்மையையும் சேர்த்து கொண்டாள். பழமை வாய்ந்த ஆதிபரமேஸ்வரி சிலை ஆதித்தபுரத்தில் கிடைத்திருப்பதாக அவள் எழுதிய கட்டுரை மக்கள் மத்தியில் பிரபலமானது. எல்லோரையும் மெய்சிலிர்க்கும்படி செய்தது. அதேநேரம் தமிழக அரசும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மூலமாக அந்தச் சிலையினைப் பற்றிய ஆய்வை வெளியிட்டது. அதாவது அந்தச் சிலை ஆயிரம் காலம் பழமை வாய்ந்தது என்று அறிவிக்க, அந்தச் சிலையை காணத் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து மக்கள் ஆதித்தபுரத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த நிகழ்வு பரபரப்பான செய்தியாய் தமிழக எல்லையைத் தாண்டியும் பரவிக் கொண்டிருக்க, இத்தனைக்கு பிறகும் அங்கே தொழிற்சாலை கட்ட முடியுமா என்ன? கடைசியில் சரவணன் சொன்னதைப் போல பணத்தைப் பெற்று கொண்டு அந்த நிலத்தை ஆதித்தபுரத்திற்கே திருப்பிக் கொடுத்தனர். ஆதித்தபுரமும் ஆதிபரமேஸ்வரி சிலையும் எங்கும் பிரபலமாகிவிட அங்கே கோயில் எழுப்புவதற்கான செலவை பல செல்வந்தர்கள் தாமே முன்வந்து வழங்கினர். அன்று ஆதித்தியவர்மன் ஆதிபரமேஸ்வரிக்கு கம்பீரமான கோயில் ஒன்றை நிர்மாணிக்க வேண்டுமென அவன் கண்ட கனவு ஆயிரம் ஆண்டு காலத்திற்கு பின் இன்று நிறைவேறப் போகிறது. அன்று சங்கரி சொன்ன அருள்வாக்கு அந்த அம்மன் ஆதிபரமேஸ்வரியே சொன்ன வாக்கு என்று மக்கள் இன்னும் பேசிப் பேசி வியக்கின்றனர். ஆம்! அது ஆதிபரமேஸ்வரியின் வாக்குதான்! ஆதி என்னும் ஆதிபரமேஸ்வரியின் வாக்கு! 45 அந்தம் கோயிலின் கட்டுமானப் பணி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. அவற்றின் எல்லாப் பொறுப்புகளையும் மணிமாறன் கவனித்துக் கொண்டான். நடந்த சம்பவங்கள் அவனுக்குள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அதேநேரம் சரவணன் ஆதியின் அறிவுரைப்படி ஆதித்தபுரத்தில் இயற்கை விவசாயம் செய்வதற்கான விழிப்புணர்வைப் பரப்பினான். முதலில் எல்லோருமே இயற்கை விவசாயத்தின் மீது முனைப்பு காட்டவில்லை எனினும் அவனின் விடாமுயற்சியால் அதன் சிறப்புணர்ந்து நாளடைவில் மக்கள் இயற்கை விவசாயத்தை ஊருக்குள் நடைமுறைப்படுத்த, அதன் சிறப்பும் பயனும் அவர்களை வெகுவாக ஈர்த்தது. பல்வேறு சிரமங்களுக்கு பின் அவனின் முயற்சி வேலை செய்ய தொடங்கியது. *** சென்னை - பாரதி பத்திரிக்கை அலுவலகம். ஆதி தம் ஆலுவலக அறையில் அமர்ந்து மும்முரமாய் ‘ஆதியே அந்தமாய்’ கதையின் முடிவை எழுதினாள். கற்பனையிலாவது தன் தந்தை உயிரோடு இருக்கட்டுமே என சிவசங்கரன் கதையின் முடிவில் வருவது போல் எழுதிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தமிழ்வேந்தன் அவளைச் சந்திக்க வந்திருப்பதாக அமுதா உரைக்க, ஆதிக்கு ஆச்சர்யம்! அவரை அவள் மரியாதையாக வரவேற்க அவரும், "எப்படி இருக்கீங்க ஆதிபரமேஸ்வரி" என்று அவளிடம் பரிவாய் நலம் விசாரித்தார். "ரொம்ப நல்லா இருக்கேன் சார்... திரும்பியும் உங்களை மீட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றவள் முறுவலிக்க, "எனக்குமே" என்றார். அவர் மேலும், "நீங்க செய்த காரியம் எல்லோரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிச்சிடுச்சு" என்றவர் அவளைப் பார்த்து வியக்க, "நான் எதுவும் செய்யல சார்" என்றாள் ஆதி தன்னடக்கத்தோடு! தமிழ்வேந்தன் மறுப்பாய் தலையசைத்து புன்னகைத்தவர், "அந்த சிலையை மீட்டு, அந்த ஊரையும் காப்பாத்தி, ஆதித்தியவர்மனோட ஆசையையும் நிறைவேற்றி... உங்களை பாராட்ட வார்த்தையே இல்லை ஆதி... யூ ஆர் கிரேட்... சிம்பிளி கிரேட்" என்றார். அவர் இப்படி புகழாரம் சூட்டிக் கொண்டிருக்க, ஆதி பதில் பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். பின்னர் ஆதி அவரை கேள்வியோடு பார்த்து, "ஒரு சின்ன டௌட்" என்றவள் அவரை ஆழ்ந்து பார்த்து, "இத்தனை ஆண்டுகளாக ஆதித்தபுர மக்கள் எப்படி அந்தச் சிலை போலியானதுன்னு கண்டுபிடிக்காம இருந்தாங்க?" என்றுக் கேட்டாள். "மக்களுக்கு விழிப்புணர்வு இல்ல ஆதி... அதுவும் இல்லாம அந்த சிலை பார்க்க கற்சிலை மாதிரியே வடிமைக்கப்பட்டிருக்கு... பக்தியோட பார்த்தா அது வெறும் கடவுள்... ஆனால் உன்னிப்பா அறிவியலோடு பார்த்தால்தான் அந்தச் சிலையின் ஆச்சர்யம் புரியும்... அதேபோல அந்தச் சிலை சரித்திரமாய் பார்த்தா விலை மதிப்பில்லாத நம் நாட்டோட பொக்கிஷம்... அந்த மக்கள் சாமியா மட்டுமே அந்தச் சிலையைப் பார்த்ததினால் அது போலியானதுன்னு அவங்களால கண்டுபிடிக்க முடியல... அன் இது ஒன்னும் முதல்முறை இல்ல ஆதி... இப்படி நம் நாட்டோட பொக்கிஷமான ஆயிரம் ஆண்டு பழமையான பல சிலைகளைக் கடத்தி வெளிநாட்டுகளுக்கு விற்கப்பட்டுட்டு இருக்கு... அதுவும் இந்த மாதிரியான சிறு கிராமங்களிலிருந்து சிறு கோயில் சிலைகள் கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கு... இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கிறவங்க இதனைக் கண்டு கொள்வதே இல்லை... அதுவும் இது இன்னைக்கு நேத்து ஆரம்பிக்கல... முகலாயர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது நம் நாட்டுக் கோயில்களும் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன... பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில நம் நாட்டுப் பொக்கிஷங்கள் சுரண்டப்பட்டு அவங்க நாட்டுக்குக் கடத்தப்பட்டது... இன்னைக்கி நாடும் ஆட்சியும் நம் கையில இருக்கு... இருந்தும் சொந்த நாட்டு பொக்கிஷத்தை பேரம் பேசி வெளிநாட்டுக்கு நம் நாட்டினரே அதன் அருமை தெரியாமல் வித்துட்டிருக்கான்... சில லட்சங்களுக்கு விற்கப்படுகிற அந்த சிலைகள் விலைமதிப்பற்றதுன்னு நமக்கு இதுவரை கற்பிக்கபடவில்லை... நாம தெரிஞ்சிக்க முயிற்சி செய்யவும் இல்லை... நம்முடைய தமிழ் வெறும் மொழியாய் கற்பிக்கப்படும் வரை பல ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாது... தமிழில் அறிவியல், சரித்திரம், இலக்கியம், பொருளாதாரம், அரசியல், நற்பண்புன்னு எல்லாமே இருக்கு... என்ன செய்யறது? இதெல்லாம் நாமே தெரிந்து கொள்ளாத அவலம்" என்று தமிழ்வேந்தன் இயலாமையோடு சொல்லிக் கொண்டிருக்க ஆதி வியப்பு அடங்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். "ரொம்ப சரியா சொன்னிங்க... ஆங்கில மோகத்தால நம்மையும் நம் இனத்தின் பாரம்பரியத்தையும் நாம எப்பவோ தொலைச்சிட்டோம்... இனி அதை மீட்பதும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது என்பதெல்லாம் சாத்தியமான்னு தெரியல" என்றவள் சொல்ல, "ஹ்ம்ம் உண்மைதான்" என்று தமிழ்வேந்தனும் அவள் சொன்னதை ஆமோதித்தார். அவர் மேலும், "சரி ஆதி... நான் கேட்கணும்னு நினைச்சேன்... அந்த உண்மையான ஆதிபரமேஸ்வரி சிலையை நீங்க கவனிச்சீங்களா?!" என்று ஆச்சர்யம் பொங்க கேட்க, "பார்த்தேன்... ஆனா அதன் சூட்சமத்தை என்னால புரிஞ்சிக்க முடியல" என்றாள். "அந்த சிலையில் உண்மையிலேயே அந்த கோயில் கல்வெட்டில் இருக்கிறது போல, அந்த ஊரைப் பசுமையோடும் செழுமையோடும் வைத்திருக்கும் சக்தி இருக்கு... அந்தச் சிலை ஒரு அறிவியலின் ஆச்சர்யம்... இன்னும் மூடி மறைக்கப்பட்ட ரகசியங்கள் அதில் நிறைய இருக்கு... அதை நாம் தெளிவான ஆராய்ச்சியின் மூலமாதான் தெரிஞ்சிக்க முடியும்" என்றார். "வேண்டாம் சார்... சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும்... அது தெரிய வரும்போது பயபக்தி மறைஞ்சி அதனை பணமாவும் பொக்கிஷமாவும் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க... அதனால்தான் நம்ம முன்னோர்கள் நிறைய ரகசியங்களைக் கடவுளெனும் பக்திக்கு பின்னணியில் ஒளிச்சு வைச்சிருக்காங்க... நாம நல்லா யோசிச்சா ஒரு விஷயம் புரியும்... நம் மன்னர்கள் கட்டிய அரண்மனைகள் இன்னைக்கி இல்லை... ஆனா அவர்கள் கட்டிய கோயில்கள் இன்றும் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திட்டிருக்கு... அதற்குக் காரணம் பக்தியும் கடவுள் நம்பிக்கையும்தான்" என்று ஆதி சொல்லிக் கொண்டிருக்கும் போது மேஜை மீதிருந்த தொலைப்பேசி ஒலித்தது. அமுதாதான் பேசினாள். அவள் விஷ்வா வந்திருப்பதாகச் சொல்ல ஆதி சிறிது நேரம் அவனைக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு மேலும் தமிழ்வேந்தனிடம் பேசினாள். அவர்கள் இருவரும் வெகுநேரம் பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாய் பரிமாறிக் கொண்ட பின், அவர் விடைபெற்று செல்ல ஆதி விஷ்வாவை உள்ளே அனுப்பச் சொன்னாள். அவன் நேராய் அறைக்குள் நுழைந்தவன் அவள் முன்னே முறைப்பாய் நின்றான். அவன் பார்வையில் தெறிக்கும் கோபத்தை உணர்ந்தவள், "சாரி விஷ்வா ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டேனா?!" என்று அவள் தயங்கியபடி சொல்ல அவன் இன்னும் சீற்றமானான். "உன் சாரியைத் தூக்கிட்டு போய் குப்பையில போடு" என்றவன் எரிச்சலாய் சொல்ல, "விஷ்வா" என்றபடி ஆதி ஏதோ பேச எத்தனிக்க, அவன் அவளைப் பேசவிடாமல், "யாரைக் கேட்றி கோயில் கும்பாபிஷேகம் நடந்த பிறகு நமக்கு கல்யாணம்னு சொன்னே?!" என்று ஆங்காரமாய் கேட்டான். "ப்ளீஸ் விஷ்வா இது ஆஃபிஸ்... கொஞ்சம் மெதுவா" "ஆமா இது ஆஃபிஸ்னு எனக்கு தெரியாது பாரு" என்று முறைத்தவன் மீண்டும் இடைவெளிவிட்டு அவனே தொடர்ந்தான். "மேடமை வெளியே மீட் பண்ண முடியல... வீட்டிலயும் பாக்க முடியல... ஃபோன் பண்ணா வேலை இருக்குன்னு சொல்ற... இங்க பேசினா... இது ஆஃபிஸ்னு சொல்ற... எனக்கென்னவோ நமக்குள்ள இந்த காதல் கல்யாணம் எல்லாம் செட் ஆகாதுன்னு தோணுது... நீ முதல்லயே சொன்ன... நான் தான் கேட்கல... இட்ஸ் மை மிஸ்டேக்" என்றவன் சரவெடி கணக்காய் பொறிய ஆதிக்கு கலவரமானது. அவன் மேலும், "குட் பை... இனிமே நமக்குள்ள ஒன்னுமில்ல" என்றவன் சொல்லிவிட்டு செல்லப் பார்க்க, ஆதி அவனை வழிமறித்துக் கொண்டாள். "கொஞ்சம் பிஸியா இருந்திட்டேன்...சாரி" அவள் பரிதாபமாய் சொல்ல, "வழி விடு ஆதி" என்றவன் முறைத்துக் கொண்டு நிற்க, "ரிலேக்ஸ் விஷ்வா" என்றவள் சொல்லியபடி அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளின் அணைப்பும் நெருக்கமும் அவனைப் பேசவிடாமல் செய்ய அவனின் கோபமெல்லாம் கரைந்து காணாமல் போனது. ஆதி அவன் மார்பில் சாய்ந்தபடி, "என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ விஷ்வா... நம்ம கல்யாணம் புதுசா கட்டிட்டிருக்கிற ஆதிபரமேஸ்வேரி கோயில்ல நடக்கணும்னு நான் ஆசைபடறேன்... ஏன் தெரியுமா?" என்று அவனை அணைத்தபடியே தலையை நிமிர்த்தி பார்க்க, விஷ்வா அவள் முகத்தைக் கேள்வியாய் ஏறிட்டான். அவன் மனம் அப்படியே அவள் புறம் நொடி நேரத்தில் சாய்ந்துவிட்டது. அவள் மேலும், "அந்த கோயில் கட்டிட்டிருக்கிற இடத்திலதான் எங்கப்பாவோட நினைவுகள் இருக்கு... அந்தச் சிலையைக் காப்பாத்ததான் எங்கப்பா போராடி இருக்கிறார். ஆதிபரமேஸ்வரி சிலையை அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யணும்... கும்பாபிஷேகம் நடக்கணும்... அப்புறம்தான் என் கடமை முழுமை அடையும்... அதுவும் இல்லாம அந்த கோயிலில் நம்ம கல்யாணம் நடந்தா எங்க அப்பாவோட ஆசீர்வாதமும் கிடைக்கும்னு என்னோட நம்பிக்கை.... அதனாலதான்" என்று அவள் சொல்ல அவன் மனமுருகிப் போனான். அத்தனை நேரம் இறுக்கமாய் இருந்தவன் மனம் இறங்கி அவளை அணைத்துக் கொள்ள எத்தனிக்கும் சமயம்... ஹரீஷ் அவசரமாய் கதவை திறந்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். ஆதி சட்டென்று விலக விஷ்வாவின் முகம் மீண்டும் கடுப்பாய் மாறியது. ஹரீஷ் அவர்கள் இருவரையும் அப்படி பார்த்ததும் அசடுவழிந்தவன் ஆதியிடம் சில போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உடனடியாக வெளியேறினான். "விஷ்வா" என்று அவள் ஏதோ சொல்ல, அவன் அவள் முகத்தை பாராமல், "நீ எதுவும் சொல்ல வேண்டாம்... கல்யாணம் வரைக்கும் நாம இரண்டு பேரும் பாத்துக்கவோ பேசிக்கவோ வேண்டாம்" என்றான். "ஏன்?" அவள் அதிர்ந்தபடிக் கேட்க, "நான் உன்னைப் பார்க்க வந்து நீ பிஸியா இருந்து... வேண்டாம்... நமக்குள் தேவையில்லாத சண்டையும் பிரிவினையும் வர்றதை விரும்பல...சோ பை" என்று சொல்லிவிட்டு ஆதியின் அழைப்பைக் காதில் வாங்காமல் அவன் அந்த நொடியே அறைக் கதவைத் திறந்து வெளியேறினான். அவன் நேராய் ஹரீஷின் முன்னிலையில் வந்து அவன் தோளில் கைபோட்டு, "போனாப் போதுன்னு இந்த தடவை மன்னிச்சு விடுகிறேன்... இனிமே கதவைத் தட்டிட்டு வரணும்... இல்லன்னா கன்னம் வீங்கிடும்" என்றவன் எச்சரிக்க, "இனிமே நீங்க உள்ளே இருந்தா நான் வரவேமாட்டேன் சார்" என்று ஹரீஷ் பயத்தோடு சொல்ல, "தட்ஸ் பெட்டர்" என்று சொல்லிவிட்டு விஷ்வா அலுவலகத்தைவிட்டு வெளியேறினான். விஷ்வா ஆதியிடம் சொன்ன வார்த்தையை அப்படியே கடைப்பிடித்தான். ஆதி சந்திக்க வந்தாலும் அவன் அதிகம் பேசாமல் அவளை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட சாரதாவுக்கும் செல்விக்கும் அவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அந்த ஊரே எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. ஆதிபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம். அதேநேரத்தில் பழைய கோயிலிலும் குடமுழுக்கு நடைபெற்றது. மனோகரன் போலியாய் அமைத்தாலும் அதைத் தெரிந்து கொள்ளாமல் அந்தச் சிலையையும் மக்கள் கடவுளாகவே வணங்கினர். ஒரேசமயத்தில் இரு கோயில்களிலும் பூஜைகளும் அபிஷேகங்ளும் நடைபெற ஆதிபரமேஸ்வரி அழகின் சொரூபமாய், கம்பீரத்தின் அடையாளமாய் தரிசிப்பவர்களை வசீகரித்துக் கொண்டிருந்தாள். மற்றொரு புறம் நம் ஆதி அழகாக சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்திக் கொண்டு அம்மன் சிலை போல் காட்சியளிக்க, அவளின் சௌந்தரியம் அங்கிருந்த எல்லோரின் பார்வையையும் வெகுவாய் ஈர்த்தது. ஆனால் விஷ்வா மட்டும் அவள் அருகில் வராமல் விலகியே நின்றான். அவனின் பிடிவாதம் ஆதியைக் காயப்படுத்திய போதும் இரண்டு நாட்களில் திருமணம் நடைபெற இருப்பதால் அவளை அவளே சமாதானம் செய்து கொண்டாள். அதேநேரம் மற்றொரு முக்கியமான விஷயம். ஆதி அவளுக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் வசந்தாவை அழைத்துச் சென்றதன் விளைவாக இன்று வசந்தா நிறைமாதமாய் இருக்கிறாள். இருப்பினும் அந்தக் கூட்டத்தில் தானும் கோயிலுக்கு வருவேன் என அவள் அடம்பிடிக்க செல்லம்மாவும் ரஞ்சிதமும் கண்ணும் கருத்துமாய் அவளைப் பார்த்துக் கொண்டனர். கும்பாபிஷேகத்தில் திரண்டிருந்தது மனித கூட்டமல்ல மனிதக் கடல். எல்லோருமே திக்குமுக்காடிப் போயினர். கோபுரக் கலசத்தில் பூஜை நடத்தப்பட்டு புனிதத் தீர்த்தம் தெளிக்கப்பட எல்லோரும் அவரவர்களின் பாவம் கரைந்துவிட்டதெனவும் புண்ணியம் பெற்றுவிட்டதாகவும் சந்தோஷ களிப்புற்றனர். சரவணனும் மணிமாறனும் தலைமைத் தாங்கி அந்தப் பொறுப்பை செவ்வனே செய்து முடித்தனர். பேய்கள் நடமாடிக் கொண்டிருந்த, தீமைகளே நடக்கும் என்ற மக்களின் அவநம்பிக்கையின் அவதாரமாய் இருந்த , அந்த தோப்பில் இன்று ஆதிபரமேஸ்வரி பிரமாண்டமான கோயில் கோபுரத்திற்குள் வீற்றிருக்கிறாள். இனி அங்கே பாவங்களுக்கு பதிலாய் பக்தி நிரம்பி இருக்கும். (பேய்கள் நடமாட்டம் நிறைந்தப் பகுதி என்று மக்கள் நம்பப்பட்டு, பல விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கொண்டதுமான அந்தத் தோப்பு இன்று ஆதிபரமேஸ்வரியின் பிரம்மாண்டமான கோபுரத்தையும், மண்டபத்தையும் விசாலமான சுற்றுப்புறத்தையும் கொண்டு, ஆகம விதிப்படி நிறுவப்பட்டக் கோயிலாக திகழ்கிறது. இதுவரையில் அங்கு நிறைந்திருந்தப் பாவங்களுக்குப் பதிலாக இன்று பக்தி மணம் கமழ்கிறது.) (அவநம்பிக்கை, அவதாரம் போன்ற சொற்கள் மிக கடினமானதாக இருக்கிறது.)

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா