மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumContest: Ungalil enaku pidithathu Contestசாக்ஷி @ ஜென்னித்தா - நான் அவள் இ …Post ReplyPost Reply: சாக்ஷி @ ஜென்னித்தா - நான் அவள் இல்லை <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">kavyajaya</a> on January 4, 2020, 10:03 AM</div>சில கதாபாத்திரம் ஏன் என்றே தெரியாமல் நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிரும். அப்படிப்பட்ட ஒன்னு தான் சாக்ஷி @ ஜென்னித்தா. அவளைக் கண்ணை மூடி நினைச்சாலே கண்ணுல கண்ணீரும் உதட்டுல புன்னகையும் ஒருங்கே தேங்கிரும் எனக்கு. அந்தக் கோர விபத்தில் மருத்துவமனைல இருக்கும் பொழுதே எப்போ டாக்டர் வந்து ஷி இஸ் பிளின்ட், கண்ணு தெரியாது அப்படின்னு சொன்னாரோ அந்த நொடி எனக்குள் ஆரம்பித்தது கண்மூடித்தனமான பாசம் அவ மேல. சாக்ஷியாக இன்ட்ரோவே “ஐ வான்ட் டு லிவ்” சொல்லுவா பாருங்க அதுவும் எப்பேர்ப்பட்ட நிலைமையில்? பளார்ன்னு கன்னத்துல அறையும் எல்லாமே இருந்தும் என்னடா வாழ்க்கை இது என்று சலிப்பவர்க்கு. (நானு நானு) கூடவே மகிழுடன் மகிழ்வான காதல். எந்தப் பெண்ணும் என்னை இப்படி ரெண்டு காதல் பண்ணும் போது ரெண்டையும் ரசிக்க வச்சதில்லை. ஏதோ ஒன்னுதான் பிடிக்கும் இதுல ரெண்டு ஆத்மார்த்தமான காதலை தவிப்பை கொட்டிட்டு கொள்ளை அடிச்சிட்டா சாக்ஷி @ ஜென்னித்தா. ஜென்னித்தாவும் குறைஞ்சவ இல்லை. “அந்த கடவுளாவே இருந்தாலும் நாளைக்கு காலையில் கால் பண்ண சொல்லு” ஒத்த வரி ஒத்த வரில அதுல இருந்த கெத்து, கம்பீரம், தன்னம்பிக்கைத் திமிருல பாஹ் சொல்ல வார்த்தை இல்லை சாச்சுப்புட்டா அக்கா சாச்சுப்புட்டா. அந்த கடவுளாவே இருந்தாலும்.... இந்த வரி வர இடத்துலலாம் கண்டிப்பா சபாஷ் போடத் தோணும். இந்தக் கதை எழுதுன மூணு மாசமா ராப்பகலா என் உணர்வோட கலந்திருந்தா ஜென்னித்தா. இப்போவும் மனசுல நீங்காம இருக்கா இனியும் இருப்பா. அதை விட முக்கியமா எனக்கும் எழுத வரும்ன்னு தூண்டிவிட்ட வழிகாட்டியா ஜென்னி இருக்கும்போது இன்னும் இன்னும் அவ மேல பைத்தியமாகுறேன். அட்லாஸ்ட் “இன்னைக்குதான் எனக்கு கண்ணு வந்ததுக்காக நான் ரொம்ப ரொம்ப சந்தோசப்படுறேன்” என்று வலியோடு சொல்லும் போது எனக்கும் அந்த உணர்வை அப்படியே கடத்திட்டா. கண்டெஸ்ட் என்றாலும் நான் டேவிட்டை ஜென்னிகிட்ட இருந்து பிரிக்க விரும்பல. டேவிட்டையும் எனக்கு பிடிக்கும் எந்த அளவுன்னு நச்சுன்னு நாலு வரில சொல்லட்டா? கல்யாணம் பண்ணனும்னா டேவிட் குணநலத்தோட இருக்குற ஒருத்தனைத்தான் பண்ணனும்ன்னு ஆசை இல்லை இல்லை பேராசைப்படுறேன். டேவிட் மாதிரி வேணும் என்றுக்கூட சொல்லவில்லை ஏன்னென்றால் டேவிட் என்னைக்கும் எப்போதும் ஜென்னித்தாவிற்கு உடைமையானவன் உரிமையானவன்... சரிதானே?</blockquote><br> Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா