மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumBhagya Novels: Kadhal Siraikadhal sirai -11Post ReplyPost Reply: kadhal sirai -11 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-default" href="#">bhagyasivakumar</a> on June 29, 2021, 10:43 PM</div>இந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிய கதிரை தடுத்து நிறுத்தி தானே நிதானத்தோடு சொல்ல எத்தனித்தாள். "மா, பா, கவி,தாத்தா மாமா மாமி நீங்களும் தான்" என்று இன்முகத்துடன் எல்லோரையும் அழைத்து வரவேற்பு அரையில் அமரச்சொன்னாள். கையில் இருந்த ஸ்வீட் டப்பாவை அவர்களிடம் நீட்டியவுடன். அனைவரும் அவள் முகத்தையே ஏறியிறங்க பார்த்தனர். "உங்கள் எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போறேன்" என்றதும். "ஸ்வீட் தரும்போதே தெரியுது முதல்ல விஷயத்தை சொல்லு" என்று அகிலாண்டேஷ்வரி கேட்க. "அது வந்து எங்களுக்கு இயக்குனர் சங்கத்துல எல்லாரும் சேர்ந்து பரிசா இந்த வீடு கொடுத்துருக்காங்க." "என்னது உங்களுக்கு பரிசா" என்று சண்முகம் தாத்தா கேட்க. "அட ஆமாம் தாத்தா எங்கள் கல்யாணத்துக்கு தந்த கிப்டா நினைச்சுக்க சொன்னாங்க. இவரு இந்த திரைத்துறைக்கு வந்த கொஞ்ச நாளிலயே எல்லார் மனசுலையும் இடம்பிடிச்சிட்டாராமா. அதான்" என்றாள் புன்னகையுடன். "அட இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே" என்று கவியரசி சொல்ல. "நீ நம்புலனாலும் அதான் நிஜம். சரி அது போகட்டும் இந்த வீட்டுக்கு ஒரு நல்ல நாளா பார்த்து பால் காய்க்கனும் அதுக்கு பெரியவங்க நீங்க நாள் குறித்து கொடுத்தால் நல்லாருக்கும்." என்றதுமே... "அட அதுக்கென்ன குறிச்சிட்டா போச்சு" என்று சந்திரலேகா சொல்லி சிரித்து வைக்க ஒருவழியாக வீடு பிரச்சினை தீர்ந்தது என்று கதிர் பெருமூச்சு விட்டபடி அமைதியானான். நாட்கள் இப்படியே மெல்ல கடந்தது. காயத்ரிக்கும் ப்ரவீனுக்கும் பிரம்மாண்டமான மண்டபத்தில் திருமணம் அறங்கேறியது. அந்த பிருந்தாவனம் இல்லமே பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாப்பிள்ளையும் பெண்ணும் மறுவீட்டுக்காக அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு இடையே நடக்க வேண்டிய முதலிரவு சம்பிரதாயம் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காயத்ரியை அலங்கரித்தப்படி அருந்ததி அவளிடம். "ஏய் காயூ உண்மையை சொல்லு நீ மாப்பிள்ளையை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணியா." "ஆமாம் அண்ணி ஏன் கேக்குறீங்க" "இல்லை நீ ஒருத்தர விரும்புறதா தானே சொன்ன ஆனால் நீ முதலிரவுக்கு தயாராகுறத பார்த்தால் அப்படி எதுவும் தெரியலையே" "ஹாஹா...அப்போ உங்களுக்கு இன்னுமே புரியல அதானே" "ம்" "அட அண்ணியாரே நான் விரும்புன பையனும் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையும் இரண்டும் ஒன்று தான்." "அடிப்பாவி இதெல்லாம் தற்செயலா நடந்துச்சா" "ஆமாம்". காயத்ரி அலங்கரித்துக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள். அவனோ சற்று பதற்றத்துடன் காணப்பட்டான். "அட முதலிரவுக்கு வந்த மாப்பிள்ளை மாதிரி தெரியலையே இதென்ன முகமெல்லாம் வியர்த்துருக்கு" "ஒன்றுமில்லை நீ உட்காரு" அவனருகில் உட்கார்ந்ததும் மெல்ல அவன் கைகளை பற்றினாள். ஆனால் அவனோ தன் சிந்தனையை வேறெங்கோ செலுத்திக்கொண்டு இருந்தான். "ஹலோ ப்ரவீன்" "என்ன காயூ" "ம்ம ஒன்றுமில்லை நான் தூங்குறேன் குட்நைட்" என்று இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கியே போனாள். அவனும் உறங்கிப்போனான். மறுநாள் பொழுது விடிந்ததும் நியாபகம் வந்தது தான் இருப்பது முதலிரவு அறையில் என்று. உடனே வேகவேகமாக கண்ணாடி முன் நின்று எல்லாம் அறங்கேறியது என்று காட்டிக்கொள்ள சில மாற்றங்களை செய்துவிட்டு வெளியே வந்தாள். "அம்மாடி சுடுதண்ணீர் போட்டு வச்சுருக்கேன்" என்று அகிலாண்டேஷ்வரி சொன்னதும். தலையசைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள். என்னதான் வீட்டில் உள்ளவர்களை சமாலித்தாலும் தன் கணவன் மனதில் என்ன இருக்கிறது. ஏன் அவர் நேற்று இரவு சரியாக முகம் தந்து பேசக்கூட இல்லை. அப்படி என்ன ஆயிற்று. என்னிடம் சொல்லக்கூட முடியாது அளவு என்று யோசித்தாள். ப்ரவீனும் குளித்துவிட்டு தானும் வெளியே கிளம்பிவிட்டான். "ஏய் காயூ மாப்பிள்ளை கூட கோவிலுக்கு போலாம்ல அவரு எங்கேயோ தனியா கிளம்பி போயிருக்காரு" என்று கவியரசி கேட்க. "ப்ச்ச் போடி என்னத்த சொல்ல" என்று விரக்தியில் பதிலளிக்க.. "என்ன ஆச்சு காயூ' "நீ சின்ன பொண்ணு விடு இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. நீ வேலையை பாரு" "ம்க்கும் எப்படியோ போ.." என்று முகத்தை சுளித்துவிட்டு உள்ளே அறைக்குள் சென்று மறைந்தாள். மாலை ஐந்து மணியளவில் தான் வீட்டுக்குள் நுழைந்தான் ப்ரவீன். கையில் தேநீர் கோப்பையுடன் அறைக்குள் வந்தவள் கதவை தாழிட்டப்பிறகு. "என்னங்க இந்தாங்க டீ" "ம்ம் தாங்க்ஸ்" "இது என்ன புதுசா தாங்க்ஸ் எல்லாம். ஆமாம் அது இருக்கட்டும் என்ன நடக்கிறது உங்களுக்குள்ள. ஏன் விலகி விலகி போறிங்க எதாவது பிரச்சனையா' "ஒன்றுமில்லை' "என்ன ஒன்றுமில்லை அப்டினா ஏன் விலகிபோகனும்" "நான் ஒன்று சொன்னால் தப்பா நினைக்க மாட்டல" "என்ன"...? அவன் சொல்ல எத்தனிப்பதற்குள் அழைப்பேசி மணி ஒலித்தது. உடனே அதனை எடுத்து காதில் வைத்தவன். சந்தோஷத்தில் முகமலர்ச்சியுடன். "அப்படியா? எனக்கா? இது எப்போ? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல" "அதான் இப்ப சொல்லிட்டேனே பி. ஹேப்பி மிஸ்டர் பிரவீன்". இவனும் சிறிது உரையாடலுக்கு பின் அழைப்பை வைத்துவிட்டு. "ஏய் காயூ ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப்போறேன்" "என்ன"? "ம்ம்ம் நான் செல்ப் எம்ப்ளாய்மென்ட் லோன் அப்ளை பண்ணிருந்தேன் அது சாங்க்ஷன் ஆயிடுச்சான். பேங்க் ல இருந்து ப்ரண்டு போன் பண்ணான்" "ஓ...சூப்பர் அப்படினா பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணபோறிங்களா ப்ரவீன்" "ஆமாம் காயூ...ஒரு சின்ன பேக்ரி ஷாப்" "சூப்பர் என்ன இந்த திடிர் ஐடியா" "ஐடியா எல்லாம் பழசு தான் உனக்கு ஒன்று தெரியுமா நான் நல்லா கேக் பண்ணுவேன் தெரியுமா. அதை ஏன் பிஸினஸா பண்ணக்கூடாதுனு தோன்றுச்சு. அதான் இந்த ஐடியா. "ஓ...அதுசரி" "சரி சரி இந்த ஹேப்பினஸ் கொண்டாடியே ஆகணும். டின்னருக்கு வெளியே போலாமா" என்றவுடன். "அதெல்லாம் சரிதான் தேத்து எல்லாம் பியூஸ் போன பல்ப் மாதிரி இருக்க என்ன காரணம்'? "அது அது வந்து. அதெல்லாம் சொல்ல முடியாது. அதெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமும் இப்ப கிடையாது" இருவரும் மிடுக்காக தங்களை அலங்கரித்துக்கொண்டு வெளியே ஹோட்டலுக்கு சென்றனர். "ஆமாம் நேத்தெல்லாம் டல் அடிச்ச ப்ரவீன் மாமா. இன்று சாயந்தரமே இவ்வளவு பிரகாசமா ஆனதுக்கு என்ன காரணம்"என்று கவியரசி யோசிக்க அருகில் இருந்த அருந்ததி... "ஹலோ உன் மைண்ட் வாய்ஸ் புரியுது" என்க. "உங்களுக்கு புரியுது ஆனால் எனக்கு புரியலையே" என்று தோள்பட்டை குலுக்கிவிட்டு நகர்ந்தாள். தொடரும். </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா