மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMoniisha's VET - 4Post ReplyPost Reply: Moniisha's VET - 4

Quote from monisha on October 26, 2021, 9:07 PM

4
அந்தப் பயங்கர சத்தத்தைக் கேட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த செந்தமிழ் அதிர்ந்தாள். உடனடியாக வீட்டின் வாயிலிற்கு அவள் விரைய, அங்கே ரவி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தான். அவன் வந்த கார் ஏடாகூடமாக மோதி நின்றிருந்தது. மிதமிஞ்சிய போதையில் நடந்து வந்தவனை அவள் வழிமறித்து நிற்க, அவனால் அவளை அடையாளம் கூட காண முடியவில்லை. அந்தளவு போதை தலைக்கு ஏறியிருந்தது அவனுக்கு. “போதையில உன்னால சரியா கூட நிற்க முடியல… இந்த நிலைமைல ஏன் டா டிரைவ் பண்ணிட்டு வந்த” என்றவள் கண்டிப்புடன் கேட்டாள். அப்போதே ஒரளவு அவளை அடையாளம் கண்டுகொண்டவன் அலட்சிய புன்னகையை உதிர்த்துவிட்டு, “அப்படிதான்டி பண்ணுவேன்… என்னடி பண்ணுவ?” என்று தெனாவட்டாகக் கேட்க, அவளுக்கு கோபம் பொங்கியது. அந்த நொடியே செந்தமிழ் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட, அவன் கதிகலங்கி நின்றான். தலைகேறியிருந்த போதையெல்லாம் சரசரவென இறங்கியிருந்தது. "இன்னொரு தடவை இந்த மாதிரி குடிச்சிட்டு நீ டிரைவ் பண்ணிட்டு வர்றதை மட்டும் நான் பார்த்தேன்... என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்று அவள் எச்சரித்துவிட்டு செல்ல, ரவி கன்னத்தை அழுந்தி தேய்த்தபடி நின்றான். சிறு வயதிலிருந்தே அவள் மீது அவனுக்கு அளவில்லாத வஞ்சமும் குரோதமும் இருந்தது. சிம்மவர்மன் அரணாய் இருந்ததால் அவனால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. யாரின் துணையும் இல்லையெனினும் இப்போதும் தன்னால் இவளை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமை அவன் மனதில் தீயாய் கனனென்றது. நாளுக்கு நாள் அவள் மீதான பழியுணர்வு காட்டுத் தீயாக வளர்ந்து கொண்டே இருந்தது. தமிழ் தன் அறைக்குள் நுழைந்ததும் ரவியின் செயல்களை எண்ணி எரிச்சலடைந்தவள் மெல்ல அந்த எண்ணத்திலிருந்து மீண்ட போது அவளுக்கு வந்த கனவைக் குறித்து ஞாபகம் வந்தது. கனவில் வந்தக் காட்சிகள் எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்தான். அந்தக் கத்தியின் புகைப்படம் கூட அவளின் அறையிலிருக்கிறது. அப்படி ஒரு கனவு வந்ததன் காரணத்தைக் கண்டறிய எண்ணிய போது தன் தாத்தா இந்த இருமுனைக் கத்தியைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நம் நாக்கும் ஒருவித இருமுனைக் கத்திப் போலதான்... நாம பிரயோகிக்கும் வார்த்தைகள் பிறரை தாக்க முற்படும் போது... கொஞ்சம் கவனாம இல்லாமல் போனால் அது நம்மையே பதம் பார்த்து விடும்' என்று அவர் கூறியது நினைவிற்கு வர, தான் இன்று வீரேந்திரனிடமும் அப்படி ஒரு இருமுனைக் கத்திக் கொண்டு தாக்கி, தானுமே இப்போது அதனால் காயப்பட்டு நிற்கிறோம் என்று எண்ணினாள். அவள் ஏற்படுத்திய அந்தக் காயம் சாதாரணமாய் மறையப்போவதில்லை. அவள் வாழ்க்கை முழுக்க ஆறாத வடுவாய் மாறக் காத்திருந்தது. இந்த எண்ணங்களுக்குள் சிக்கிக் கொண்டவளை உறக்கம் நெருங்க மறுக்க, விடிந்தும் விடியாததுமாய் அவள் மனம் முதல் வேலையாய் வீரேந்திரனை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டது. எப்போதும் போல் அறையைப் பூட்டிவிட்டு அவள் புறப்பட எத்தனிக்க, அவள் விழிகளை இரு கரங்கள் மறைத்துக் கொண்டது. அந்த மென்மையான கரம் யாரென்று கணித்துவிட்டவள், "தேவி" என்றழைத்தாள். அதுமட்டுமின்றி அவளைத் தவிர வேறு யார் அத்தகைய விளையாட்டை அவளிடம் விளையாட முடியும். அவள் கரம் விலக, துருதுருப்பான விழிகளோடும் முகம் மலர்ந்த புன்னகையோடும் அவள் தங்கை தேவி நின்றிருந்தாள். சகோதிரிகள் இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். அதன் பின் செந்தமிழ் தங்கையிடம், "நேத்தே ஹாஸ்டலை வெக்கேட் பண்ணிட்டு வர்றேன்னு சொன்னே இல்ல... சாரி டா... நான்தான் மறந்திட்டேன்... எக்ஸேம்ஸ் எல்லாம் ஒழுங்கா பண்ணியா?!" என்று கேட்க, தேவியின் முகம் களையிழந்து போனது. "ப்ளீஸ் அக்கா! அதைப்பத்தி மட்டும் கேட்காதீங்க” என்றாள். செந்தமிழ் பரிகசித்து சிரிக்க, இது ஒன்றும் புதிதல்ல. தேவி படிப்பில் மந்தம்தான். இருப்பினும் எப்படியோ முயன்று பொறியியல் சேர்ந்துவிட்டாள். இவர்கள் இருவரும் மாற்றாந்தாய் வயிற்றில் உதித்திருந்தாலும் அவர்களுக்கு இடையிலான சகோதரத்துவம் அன்பால் மிக ஆழமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் பேசிக் கொண்டே முகப்பறை நோக்கி வர, அங்கே ரவிவர்மன் தலையைத் தாங்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். அவர்களின் வருகையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் அவள் அடித்த அறையின் தாக்கமும், இரவு போதையும் கொஞ்சம் கூட தெளியவில்லை என்பது நன்காகவே தெரிந்தது. தமிழ் தன் தங்கையிடம் திரும்பி, "சரி தேவி... டைமாச்சு நான் கிளம்பிறேன்" என்றவள் ரவிவர்மனை ஏளனமாகப் பார்த்து, "உங்க அண்ணனுக்கு லெமன் ஜுஸ் கொடு... அப்பதான் நைட்டடிச்சது தெளியும்" என்று சொல்லிவிட்டு வெளியேறினாள். தேவி தமையனைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள். ரவி கடுப்பானான். 'என்னை அடிச்சதில்லாம எகத்தாளமாடிப் பேசிட்டுப் போற... இனிமேதான்டி இருக்கு உனக்கு... உன் தைரியத்தை உடைச்சு யாருடைய துணையும் இல்லாம உன்னைக் கதற கதற அழ வைக்கிறேன்... பாரு?' என்று தன் மனதிலிருந்த வஞ்சத்தைக் கொட்டிக் கொண்டிருந்தான். சரியாக அந்த நொடி அவன் தலையில் ஏதோ விழவும் அவன் பதறி நிமிர, அங்கே சிம்மவர்மானின் படம் இருந்தது. அந்தப் படத்திலிருந்த காய்ந்த மாலைதான் அவன் தலையில் வந்து விழுந்தது. "ஓ... உங்கப் பேத்தியை ஒண்ணும் சொல்லிட கூடாதோ?” என்று அந்தப் படத்தைப் பார்த்து கடுகடுத்தவன், “சொல்றது மட்டுமில்ல... நான் சொன்னதைச் செஞ்சிக் காட்டுறேன்... முடிஞ்சா உங்க பேத்திக்கு வர போற பிரச்சனையை எல்லாம் தடுங்க... பார்ப்போம்" என்று வீரதீரமாய் சவால் விட்டுச் சென்றான். ரவிவர்மனுக்கு மறைந்த தன் தாத்தாவால் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம்தான் எனினும் அவரின் பரிபூரண ஆசீர்வாதம் எப்பொழுதும் செந்தமிழிற்கு அரணாய் நிற்கப் போகிறது என்பதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு அவனுக்குப் புத்திக்கூர்மை இல்லை. * கட்சி அலுவலகத்தில் விக்ரமவர்மன் வந்திருந்த அதே சமயத்தில் மகேந்திர பூபதியும் உள்ளே நுழைந்தார். அங்கிருந்த எல்லோரும் பயபக்தியோடு அவர்களை வணங்கினர். இருவருமே அந்தக் கட்சியில் சரிசமமான பலம் கொண்டவர்கள் என்பதை சொல்லாமலே அக்கணம் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரே கட்சியில் இருந்தாலும் இருவருக்கிடையிலும் எப்போதுமே ஒருவித மோதல் இருக்கும். அவர்கள் இருவருமே இரு துருவங்கள் போலத்தான். இன்று நேற்று அல்ல. இரண்டு மூன்று சந்ததிகளுக்கு முன்பிலிருந்தே மகேந்திரபூபதியின் குடும்பமும் விக்ரமவர்மனின் குடும்பமும் எதிர்எதிர் அணியில் நின்று யார் பெரியவர்கள் என மோதிக் கொண்டிருந்தனர். சமீபமாக விக்ரமவர்மனின் நிதி நிலைமை மிகவும் மோசமான போது மகேந்திரபூபதிதான் அவரைக் கைத்தூக்கிவிட்டுக் காப்பாற்றினார். ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. சிம்மவர்மன் குடும்பத்தின் பிரம்மாண்டமான அரண்மனை. அந்த அரண்மனையைச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவருடைய பேராசையால்தான் விக்ரமனுக்கு அவர் பணம் கொடுத்து உதவியது எல்லாம். இருந்தாலும் அந்த அரண்மனை செந்தமிழின் கையெழுத்து இல்லாமல் முழுமையாய் அவரால் சொந்தமாக்கிக் கொள்ள இயலாது என்று அவருக்குத் தெரியும். அதுவே அவருக்கு நெருடலாய் இருந்தது. இந்த நிலையில் தெரிந்தோ தெரியாமலோ செந்தமிழ் அவர் மகனைப் பற்றி பத்திரிகையில் தவறாய் எழுதி தானே வலிய பிரச்சனையை இழுத்துவிட்டுக் கொண்டாள். இதெல்லாம் அவரைப் பெரிதும் கோபப்படுத்தி இருந்தது. பொங்கிய சினத்தோடு மகேந்திரபூபதி விக்ரமவர்மனை சந்திக்க வந்தார். விக்ரமவர்மன் மகேந்திரனை வரவேற்று அமரச் சொல்ல, அவர் தமிழச்சி பத்திரிக்கையைக் கோபத்தோடு வீசிவிட்டு, "என்ன விக்கிரமா இதெல்லாம்?!" என்று அதிகார தொனியில் கேட்க, விக்ரமவர்மனுக்கு விஷயம் என்னவென்று ஒன்றும் புரியவில்லை. "உன் பொண்ணு என்ன நினைச்சிட்டு என் பையனைப் பத்தி இவ்வளவு தரக்குறைவா எழுதியிருக்கா?" என்று அவர் கேட்கவும்தான் அவர் அந்தப் பத்திரிக்கையைப் புரட்டி பார்த்து அதிர்ச்சியடைந்தார். "உன் பொண்ணு செஞ்சது கொஞ்சங்கூட சரியில்ல... நான் உனக்கு கஷ்டத்தில உதவினதுக்கு இது எனக்கு தண்டனையா?!" என்று மகேந்திரன் கொந்தளிக்க, "எனக்கு உண்மையிலேயே இதை பத்தி எதுவும் தெரியாது” என்றவர் தாழ்ந்த குரலில், “நீங்க முதல்ல உட்காருங்க.... பொறுமையா பேசுவோம்" என்றார். "உட்கார்ந்து பேச எல்லாம் நான் வரல விக்ரமா... ஒண்ணு நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடு... இல்லன்னா அந்த அரண்மனையை என் பேருக்கு மாத்திக் கொடு" என்றவர் திட்டவட்டமாகக் கூற "இப்போ என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல... அதே நேத்தில அரண்மனையோட உரிமையை என்னால உடனே மாத்திக் கொடுக்க முடியாது... என் பெரிய பொண்ணு செந்தமிழோட கையெழுத்து வேணும்... அதுவும் அவ கல்யாணம் ஆன பிறகு, போட்டாதான் செல்லுபடியாகும்" என்று விக்ரமன் கலக்கத்தோடுக் கூறினார். "அதெல்லாம் எனக்கு தெரியாது விக்ரமா... ஒரு மாசம் உனக்கு டைம்... அரண்மனையை என் பேருக்கு மாத்தி கொடுக்கணும்... இல்லன்னா நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கணும்" என்று மகேந்திரன் விட்டுக் கொடுக்காமல் பேச, ஒரே மாதத்தில் மகளுக்கு திருமணம் முடிப்பதா? என்று விக்ரமன் அதிர்ந்தார். மகேந்திரன் அப்போது, “என்னதான் நம்ம குடும்பத்துக்குள்ளயும் நமக்குள்ளயும் ஆயிரம் பகை இருந்தாலும் ஒரே கட்சியில இருக்கோமே” என்று சொல்லிவிட்டு, “அடுத்த வாரம் என் பையனோட கல்யாணம்… இந்தா இன்விட்டேஷன்" என்று அழைப்பிதழைக் கொடுக்க, விக்ரமவர்மனுக்குக் கடுப்பானது. எனினும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டார். மகேந்திரன் மேலும், "அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... எதுக்கு அந்த அரண்மனைப் பூட்டியே இருக்கனும்னு... அந்த அரண்மனையிலதான் என் பையனோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்... கிராண்டா... கடைசி கடைசியா நீ உன் குடும்பத்தோட வந்து அந்த அரண்மனையைப் பார்த்துட்டுப் போறதுக்கு ஒரு சேன்ஸ்... அதனால குடும்பத்தோட வந்துரு" என்றவர் ஏளன புன்னகையோடுச் சொல்லிவிட்டுச் செல்ல, விக்ரமன் மனம் வேதனையில் புழுங்கியது. தன் முன்னோர்கள் எல்லாம் கம்பீரமாய் செழிப்போடு வாழ்ந்த அரண்மனை அது. ஆனால் இன்று தன் காலத்தில் அதை இழக்க நேரிடுவது பெரும் அவமானத்திற்குரிய விஷயம் என்றவர் எண்ணி வருத்தமுற, அது இனி காலம் கடந்த ஞானோதயம்தான். இவற்றை எல்லாம் விடப் பெரிய வேதனை சிம்மவர்மன் தன் பேத்திக்கு அந்த அரண்மனையில்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார். இப்போது அவரின் தந்தையின் கனவு ஈடேறாமலே போகப் போகிறது என்பதை நினைக்கும் போது அவரின் கண்கள் கலங்கி வேதனை அவரை மூழ்கடித்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா