மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 11Post ReplyPost Reply: Monisha's VET - 11

Quote from monisha on November 3, 2021, 5:38 PM

11
கனவலிருந்து விழித்தவளுக்கு அந்த அறை முழுவதும் இன்னமும் தன் தாத்தாவின் சிரிப்பொலி எதிரொலிப்பது போன்ற பிரமை! அவர் இல்லை என்பதை இன்றும் அவளுக்கு ஏற்றுக் கொள்ள சிரமமாய்தான் இருந்தது. சிறுபிள்ளைத்தனமாய் தாத்தாவிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் வரிசையாய் அப்போது நினைவுக்கு வந்து அவளின் இதழ்களின் ஓரமாய் புன்னகை மலர்ந்தது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். அதேநொடி அவள் கண்களில் கண்ணீரும் துளிர்த்தது. ‘சாரி தாத்தா... உங்க ஆசை நடக்காது... ராஜா மாதிரி மாப்பிள்ளையும் வரமாட்டான்... என் கல்யாணம் அரண்மனையில் நடக்கிறதுக்கு வாய்ப்பும் இல்ல... உங்க பிள்ளை அரண்மனையை மட்டும் இல்ல... என் வாழ்க்கையையும் சேர்த்தே பணயம் வைச்சிட்டாரு... இனிமே எதுவும் பண்ணவும் முடியாது.. இந்த நிமிஷம் நீங்க இல்லங்கிறதுதான் நல்லதுனு தோணுது... நீங்க நினைச்சுதெல்லாம் நடக்கலேயேன்னு அப்புறம் மனசு கஷ்டபடுவீங்க' என்று எண்ணியிருக்க, அவள் சிந்தனையைத் தடை செய்யும் விதமாய் அவள் கைப்பேசி மீண்டும் ஒலித்தது. அப்போதுதான் உணர்ந்தாள். அவள் கிட்டதட்ட படுக்கையின் ஓரத்தில் புரண்டு வந்துவிட்டதை… விழாமல் தப்பியவரை சந்தோஷம் என்று மெல்ல சுதாரித்து எழுந்து கொண்டவள் கைப்பேசியை எடுத்து பார்த்தாள். ரகுவின் பெயரை கண்டதும் அதனை ஏற்க, "நான் எத்தனை தடவை கால் பண்ணேன்... ஏன் எடுக்கல?" என்றவன் கடுப்பாக, "சாரி ரகு தூங்கிட்டிருந்தேன்... என்ன விஷயம் சொல்லு?" என்றாள். "நான் இப்ப உடனே காஞ்சிபுரம் கிளம்பிறேன்... தமிழ்" "இப்ப உடனேவா? அப்போ நானும் புறப்பட்டு வரவா?" என்று அவள் கேட்க, "இல்ல தமிழ்... நான் அங்க போனதும் நிலவரம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு... அப்புறமா நானே கால் பண்றேன்... நீ புறப்பட்டு வா... அந்த ஏசிபிக்கு வேற கல்யாணமாம்... ஸோ அவன் இப்போ இந்த கேஸ்ல சீர்யஸா இறங்கல... அவன் இன்வால்வ் ஆகிறதுக்கு முன்னாடி நாம அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் வீட்டுக்குப் போயிட்டு வந்திருவோம்... ஆனா இப்பவும் ஒரு தடவை யோசிச்சுக்கோ... இதுல நிறைய ரிஸ்க் இருக்கு" என்றான். "யோசிக்காம நான் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்யணும்னு சொல்வனா ரகு" "அந்த காரணத்தினாலதான் நானும் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறேன்" "ஓகே ரகு... நீ போயிட்டு எப்போ வரணும்னு பார்த்துட்டு கால் பண்ணு... நான் உடனே கிளம்பி வர்றேன்" என்று அவள் சொல்ல, அவனும் ஆமோதித்து அழைப்பைத் துண்டித்தான். தான் எத்தனை பெரிய ஆபத்தில் தலையைக் கொடுக்க போகிறோம் என்று தெரிந்திருந்தும் அவள் அதை செய்ய துணிந்தாள். அதனால் விளையப் போகும் எதையும் எதிர்கொள்ள இன்று அவள் மனம் தயாராக இருந்தாலும் நாளைய நிலைமை முற்றிலும் மாறுபட போவதை அவள் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. தமிழை விரேந்திரனுக்கு மணமுடித்து வைக்க மகேந்திரபூபதி முடிவெடுத்த கணமே அதை எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற முடிவோடு விக்ரமவர்மனை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் எதிர்பாராத அதிர்ச்சியோடு ஆச்சர்யத்தையும் உண்டு பண்ணியது. தமிழுக்கு தானே தேடினாலும் வீரேந்திரன் போன்ற மாப்பிள்ளை கிடைப்பது அரிது. அதுவுமின்றி அரண்மனையில் தன் தந்தை எண்ணியது போல அத்தனை ஆடம்பரமாய் இப்போது இருக்கும் நிலையில் தன்னால் தமிழுக்கு திருமணம் செய்து வைக்கவும் இயலாது. விதியாய் தன் மகளுக்கு அமைத்து தரும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுக்க அவருக்கு மனம் வரவில்லை. அதுவுமில்லாமல் தமிழ் எந்த மாப்பிள்ளையைப் பார்த்தாலும் தனக்குச் சம்மதம் என்று உரைத்திருந்தாள். ஆதலால் அவருக்கு இந்த விஷயத்தில் முடிவு எடுக்க மிகவும் வசதியாயிருந்தது. தமிழின் விருப்பத்தைக் கேட்காமலே திருமணத்திற்குச் அவர் சம்மதம் அளித்துவிட, நினைத்ததைப் போல மகனின் திருமணத்தை நடத்திவிடலாம் என்ற புத்துணர்ச்சி உண்டாகிவிட்டது மகேந்திரனுக்கு. * அன்று இரவு தமிழ் சில வரலாற்று புத்தகங்களைப் புரட்டில் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது தேவி கதவைத் தட்டவும் நிமிர்ந்து பார்த்தவள், "வா தேவி" என்று அழைத்துவிட்டு மீண்டும் தன் வேலையில் மும்முரமாக, "அக்கா… கீழே... அப்பா" என்று தேவி வார்த்தைகளை மென்று விழுங்கினாள் “என்னாச்சு? ஒழுங்கா புரியுற மாதிரி சொல்லு” என்று தமிழ் அழுத்திக் கேட்கவும் அவள் சைகையில் சொல்ல, "சரி சரி வர்றேன் போ" என்றாள். அதன் பின் தன் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தந்தையின் அறைக்கு சென்றவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்போதாவது விக்ரமவர்மன் மது அருந்துவது வழக்கம்தான் எனினும் தன் நிலை தப்பும் அளவிற்கெல்லாம் அவர் குடிப்பதில்லை. அதுவும் வீட்டிலேயே மது பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அவளுக்குக் கோபமாக வந்தது. ஆனால் குடிப்பது கூடச் சமுதாய அந்தஸ்து என்று மாறிவிட்ட நிலையில் அதிலிருந்து இன்றைக்கு யாருமே தப்புவதற்கு வாய்ப்பில்லை. விரைவாக அறைக்குள் வந்தவள் ,"என்னப்பா இதெல்லாம் புதுசா.. அதுவும் இந்த அளவுக்கு... முதல்ல போய் படுங்க" என்று அதிகாரமாய் உரைத்துவிட்டு அந்தப் பாட்டில்களை எல்லாம் அவ்விடத்திலிருந்து அகற்றினாள். "உங்க தாத்தாவுக்கு அப்புறம் என்னை அதிகாரம் பண்றது நீ மட்டும்தான் தமிழ்... இப்போ நீயும் போயிட்டேன்னா?" என்று விக்ரமவர்மன் போதையில் புலம்ப, "நான் எங்கே போகப்போறேன்... நீங்க முதல்ல எழுந்திரீங்க" என்று கைத்தாங்கலாய் அவரைத் தூக்கிவிடவும், "நீ... கல்யாணம்.. பண்ணிப் போயிட்டா?!" என்றார் அவர் வருத்தம் நிரம்பிய குரலோடு! "நான் இங்க இருக்கிறதுதான் உங்களுக்கு பிடிக்கலயே... அப்புறம் நான் கல்யாணம் பண்ணிப் போனாதான் என்ன? இல்ல எங்கயாவது தொலைஞ்சு போனாதான் உங்களுக்கு என்ன?" என்று சொல்லியவள் அவரை சிரமப்பட்டுப் படுக்கை மீது கிடத்த அவரோ, "கல்யாணம் ஆகி நீ போனதும் இங்க யாரு தமிழ் என்னை இவ்வளவு அக்கறையா பார்த்துப்பா?" என்று அவர் தன் புலம்பலைத் தொடர்ந்தார். அவள் எரிச்சலடைந்தவளாய், "அய்யோ அப்பா... ஏன் இப்படி பேசிட்டிருக்கீங்க... என்னவோ நாளைக்கே எனக்கு கல்யாணம் ஆகிட போகுதா... சும்மா புலம்பாம தூங்குங்க" என்றவள் அந்த அறையை விட்டு வெளியேற எத்தனிக்க, "நாளைக்கே இல்ல... இன்னும் ஒரு வாரத்தில" என்று சொல்ல அவள் அப்படியே அதிர்ந்தபடித் திரும்பினாள். விக்ரமவர்மன் தனக்குத்தானே சிரித்தபடி, "உங்க தாத்தா ஆசைப்பட்டபடி உனக்கு நம்ம அரண்மனையில கல்யாணம் நடக்கப் போகுது!" என்று சொல்லவும் அவள் நம்பாமல் தலையிலடித்துக் கொண்டு, "சத்தியமா உங்களுக்குப் போதை தலைக்கேறிப் போச்சு" என்றுரைத்து அறையின் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஜயாவும் தன் மகனிடம், "எதுக்கடா உங்க அப்பா என்னைக்கும் இல்லாத திருநாளா இப்படி அளப்பறை பண்றாரு... உண்மையிலேயே அவர் சொன்னது போலப் பொண்ணுக்கு அரண்மனையில கல்யாணம் பண்ண போறாரோ!" என்று கேட்டு வைக்கவும் ரவிவர்மன் எள்ளலாக நகைத்து, "போம்மா... நீ வேற... அந்த அரண்மனை இப்போ நம்ம கையிலயே இல்ல... இதுல அவர் பொண்ணுக்கு அங்க கல்யாணமாமா!... உன் புருஷனுக்குப் போதை தலைகேறிடுச்சு... அதுல உளறிட்டிருக்காரு" என்றான். யாருமே அன்று விக்ரமவர்மன் சொல்வதை நம்பத் தயாராக இல்லை. அடுத்த நாள் பொழுது புலர்ந்தது. விக்ரமவர்மன் மகளிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிவிடலாம் என்பதற்குள் அவள் அலுவலகத்திற்குச் சென்றிருந்தாள். இரவு வந்துதும் பொறுமையாய் பேசலாம் என அவர் எண்ணியதற்கு நேர்மாறாக, அன்று விரைவாய் வீட்டிற்கு வந்தவள் காரை எடுத்துக் கொண்டு அவசரமாய் புறப்பட்டுச் சென்றுவிட்டாள். இந்தத் தகவலை எல்லாம் வேலையாள் கருணா மூலமாக அறிந்து கொண்டவருக்கு இப்படி அவள் எந்த விவரமும் உரைக்காமல் சென்றது மனதை கலக்கமடைய செய்தது. அவளின் கைப்பேசிக்கு அழைத்து பார்த்தால் அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இறுதியாக தேவியை விசாரித்த போது அக்கா காஞ்சிபுரம் வரை ஏதோ முக்கியமான வேலையாகப் போயிருப்பதாகச் சொல்லவும் எப்படி திருமணம் குறித்த தகவலை தமிழுக்குத் தெரிவிப்பது என்ற பதட்டம் அவரை ஆட்கொண்டது. இதில் ஒரே நல்ல விஷயம் அவள் காஞ்சிபுரம் வரை போயிருப்பதுதான். எப்படியாவது அவளைத் தொடர்பு கொள்ள முடிந்தால் அவளை நேரடியாய் அரண்மனைக்கு வரவழைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். இப்போதைக்கு வீட்டிலிருப்பவர்களிடமாவது திருமண ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லித் தீர வேண்டும் என எல்லாவற்றையும் அவர் விவரிக்க, தேவி உட்பட மூவரும் அதிரிச்சி அடைந்தனர். ரவிக்கும் விஜயாவுக்கும் அதிர்ச்சி தாளவில்லை. ரவிக்கு தான் சிரமப்பட்டுத் தீட்டிய திட்டமெல்லாம் இப்போது மொத்தமாய் (திட்டம் மொத்தமும் இப்போது) தூள்தூளாய் நொறுங்கிவிட, இத்தனை நெருக்கத்தில் திருமணத்தைத் தடைபடுத்துவது சாத்தியமில்லை என்று விஜயாவும் நம்பிக்கை இழந்தாள். ரவி அப்போது தாத்தாவின் படத்தைப் பார்க்க, அவர் ஏளனமாய் சிரிப்பது போன்ற உணர்வு உண்டாக, அத்தனை சுலபமாக அவன் தோல்வியை ஏற்றுக் கொள்ள தயாராகயில்லை. 'நான் எப்படியாச்சும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன்... இப்படி ஒரு வாழ்க்கையை உங்க பேத்திக்கு அமையவே விடமாட்டேன்... நெவர்' என்று சவால் விட்டவன், எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்திவிட தீவிரமாக யோசித்தான். அதே சமயத்தில் விக்ரமவர்மனோ இந்தத் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட மனதளவில் உறுதியாய் இருந்தார். விக்ரம்வர்மனுக்கோ இந்தத் தகவலை தமிழிடம் ஃபோனில் தெரியப்படுத்தினால் அவள் ஏடாகூடாமாய் கோபத்தில் முடிவெடுத்து திருமணத்திற்கு வராமல் போய்விட்டால் என்று அச்சம் ஏற்பட, அவளை நேரில் சந்தித்த பின்னரே இதனைத் தெரியப்படுத்த வேண்டும் என முடிவெடுத்திருந்தார். ஆதலால் தேவியிடம் தமிழ் கைப்பேசியில் பேசினால் திருமணம் குறித்த தகவலைப் பற்றி உரைக்காமல் அரண்மனைக்கு வரவழைத்திட சொல்ல, அக்காவிடம் எப்படி உண்மையை மறைப்பது என்ற இக்கட்டான நிலையில் அவள் சிக்கிக் கொண்டு பரிதவித்தாள். ஆனால் இவற்றைக் குறித்து எதையும் அறிந்து கொள்ளாமல் தமிழ் தன் நண்பன் ரகுவோடு சேர்ந்து அன்று நடுநிசியில் அந்த ஆர்க்கியாலஜிஸ்ட் தர்மாவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்டுக் கொண்டிருந்தாள். "இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை தமிழ்... பேசாம இந்த யோசனையைக் கை விட்டுவிடுவோம்" என்றான் ரகு. தமிழ் அவனைப் பார்த்து முறைக்க ரகு தவிப்போடு, "ஏய் அந்த ஏசிபியை நினைச்சாலே பயமா இருக்குடி... ப்ளீஸ் டி திரும்பிப் போயிடுவோம்" என்றான். "ஏன்டா இந்த நேரத்தில அந்த ஏசிபியை ஞாபகப்படுத்திற?! எனக்கே அவனை நினைச்சா பயமாதான் இருக்கு... சரியான சிடுமூஞ்சி... ஒரு சாரி கேட்கிறதுக்குப் போனா என்னைப் போட்டுப் பாடா படுத்திட்டான்... எந்த ஜென்மத்திலேயும் அந்த மூஞ்சியை நான் பார்க்கவே கூடாது?" "அதனால்தான் சொல்றேன்... இந்த வேலையே வேண்டாம்" "நான் உள்ளே போய் பார்க்காம போறதா இல்ல... என்ன பிரச்சனை வந்தாலும் சரி... பேசாம கதவைத் திற... கொன்னுடுவேன்" என்று அவனை மிரட்ட, வேறுவழியின்றி ரகு கதவைத் திறந்தான். அந்த வீடு இருளடர்ந்திருந்தது. தமிழ் டார்ச் லைட்டை வைத்து கொண்டு அந்த வீட்டின் ஒவ்வொரு மூளை முடுக்குகளையும் பார்த்து கொண்டே, "ஒன்னும் சரியா தெரியல… பேசாம லைட் போட்டு பார்க்கலாமா?" என்று அவள் நண்பனிடம் கேட்க, "அதுக்கு நீ பேசாம போலீஸைக் கூப்பிட்டு நாம இங்கதான் இருக்கோம்னு இன்ஃபார்ம் பண்ணிடலாம்" என்றான். "இல்லடா... இருட்டா இருக்கு ஒன்னும் தெரியல" என்று அவள் சொன்னதும், "பேசாம சாவகாசமாய் காலையில் வந்து தேடுவோமா... லூசாடி நீ.. பூட்டி இருக்கிற வீட்டில... அதுவும் போலீஸ் கஸ்டடில இருக்கிற வீட்டில திடீர்னு நடு ராத்திரில லைட் எரிஞ்சா... வேற வினையா வேண்டாம்.. நாமலே போய் அதுக்கு போலீஸ்ல சரண்டர் ஆகிடலாம்" என்று சொல்ல இருட்டில் அவள் நினைத்த எதையும் கண்டுபிடிக்க முடியுமா என்ற கவலை அவளை ஆட்கொண்டது. எப்படியோ தமிழ் அந்த மங்கிய வெளிச்சத்திலும் அந்த ஓவியங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த அலமாரி முழுவதும் புத்தகங்கள் வரிசையாய் அடுக்கியிருந்தன. அதேநேரம் நிறைய ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தது. அவள் டார்ச் லைட் வைத்து அந்த ஓவியங்களைத் தீவிரமாய் ஆராய்ந்தபடி ஒவ்வொன்றாய் பார்க்க அப்போது ரகு அவளிடம், "இதெல்லாம் என்ன பெயின்டிங்? இதிலிருக்கிற பெயின்டிங்க்கும் தர்மா டெத்துக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறியா?!" என்று கேட்க அவள் பதிலேதும் பேசாமல் அந்த ஒவ்வொரு ஓவியத்தையும் கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்தாள். பின்னர் பொறுமையாய் எல்லாவற்றையும் ஆராய்ந்தவள், "ஒரு பெயின்டிங் மிஸ்ஸிங் ரகு" என்றாள். அவன் அதிர்ச்சியோடு, "ஒரு பெயின்டிங் மிஸ்ஸிங்னு உனக்கெப்படி தெரியும்?! நீ ஏற்கனவே இதை எல்லாம் பார்த்திருக்கியா?!" என்று கேட்டான். "பார்க்கல ரகு... கேட்டிருக்கேன்" என்றாள். "புரியலயே" என்று ரகு குழப்பமாய் கேட்க, "எங்க தாத்தா இதை பத்தி எல்லாம் கதையாய் சொல்லிக் கேட்டிருக்கேன்... பட் அதை எல்லாம் இப்போ கண்ணெதிரே இந்த ஓவியங்கள் கொண்டு வந்து நிறுத்திடுச்சு... என்னோட கணிப்புப்படி நிச்சயம் ஒரு பெயின்ட்டிங் மிஸ்ஸாகுது... நீயே பாரு ரகு... இந்த போர்ட்ல மட்டும் பெயின்டிங் இல்லாம காலியாயிருக்கு... யாராவது இந்த பெயின்ட்டிங்கை எடுத்துட்டுப் போயிருந்தா?! ஒய் நாட் அவங்களுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இருக்க கூட வாய்ப்பிருக்கு" என்றாள். ரகு அவள் சொல்வதைப் பொறுமையாய் கேட்ட பின், "நீ சொன்ன மேட்டரெல்லாம் நேரடியா போலீஸ்ல சொல்லி இந்த மார்டர் கேஸை டீல் பண்ணா என்ன?" என்று கேட்டான். தமிழ் அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்தபடியே, "போலீஸ்ல சொல்றதும் திருடன்கிட்ட நாமலே சாவி கொடுக்கிறதும் ஒன்னு... அந்த ரிஸ்க்கை நான் எடுக்க விரும்பல!" என்றாள். "எங்க டிப்பார்ட்மெண்ட் பத்தி என்கிட்டயே தப்பா பேசிறியா... உனக்கு இருந்தாலும் ரொம்பதான்" என்றான் கோபமாக, அப்போது தமிழ் ஏதோ ஒரு புத்தகத்தை அந்த ரேக்கிலிருந்து எடுக்க போனாள். ரகு அவளைத் தடுத்துவிட்டான். "வேண்டாம் தமிழ்... எதையாச்சும் நீ மாற்றி வைச்சிட்டா பிரச்சனையாயிடும்... வா போயிடலாம்" என்று அவன் அழைக்க, "சரி போயிடலாம்" என்றவள் அவன் பின்னோடு நடக்க அவள் கைத்தவறி டார்ச் லைட் கீழே விழுந்தது. அது அணைந்துவிட இருளில் ரகு அதனை எடுத்து மீண்டும் சரி செய்து ஆன் செய்ய, அதற்குள்ளாக அவள் அந்த அலமாரியிலிருந்த ஒரு டைரியை எடுத்து தன் சட்டைக்குள் மறைத்து கொண்டாள். ரகு நிமிர்ந்தபடி, "என்னாச்சு?! என்ன சத்தம்?" என்று கேட்க, அவள், "நத்திங்... இடிச்சிக்கிட்டேன்" என்று பொய்யுரைத்தாள். "ஒன்னும் ஆகலேயே" என்று அவன் அக்கறையாகக் கேட்க இல்லையென்று சொல்லி சமாளித்தாள். இருவரும் ஒரு வழியாய் தர்மா வீட்டிலிருந்து புறப்பட்டுவிட, தமிழுக்கு நிறையக் குழப்பங்களும் கேள்விகளும் மனதைச் சூழ்ந்து கொண்டன. ரகு தங்கியிருந்த போலீஸ் குவட்டர்ஸை இருவரும் வந்தடைந்தனர். தமிழ் வீட்டிற்கு வந்ததும் மறைத்து வைத்திருந்த டைரியை எடுத்து தன் பேகிற்குள் திணித்தாள். அத்தனை நேரம் அணைத்து வைத்திருந்த ஃபோனை ஆன் செய்து வைக்க, விடிந்தும் விடியாமலும் அதிகாலையிலேயே தமிழுக்கு தேவி அழைப்பு விடுத்தாள். "அக்கா இப்போ எங்க இருக்கீங்க!" என்று பதட்டத்தோடுக் கேட்க, "அதான் சொன்னேனே காஞ்சிபுரத்தில... ஏன்டி கேட்கிற?" "உடனே புறப்பட்டு நம்ம அரண்மனைக்கு வாங்க அக்கா" என்றாள். "அரண்மனைக்கா… எதுக்கு தேவி?" "அப்பாதான் வரச் சொன்னாரு" "எதுக்காக?" என்று மீண்டும் சந்தேகத்தோடு அவள் கேட்க அப்போது எங்கே தான் உளறிவிடப் போறோம் என்ற பயத்தில், "எதுவாயிருந்தாலும் நீங்க அப்பாகிட்ட கேட்டுக்கோங்க அக்கா... எனக்கு தெரியாது?" என்று அழைப்பைத் துண்டித்தாள். தமிழும் என்னவாயிருக்கும் என்ற யோசிக்க, அப்போது பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து ரமணியம்மாள் கைப்பேசியில் அழைத்தார். "சொல்லுங்கம்மா... ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்க, எதிர்புறத்தில் "நீ இப்போ எங்க இருக்க?" என்று கேட்டார். "காஞ்சிபுரத்தில... ஏன்?" "எங்க யார்கிட்டயும் சொல்லணும்னு தோனலயா தமிழ் உனக்கு?" என்று ரமணியம்மாள் கேட்க, தமிழ் புரியாமல், "என்ன சொல்லலியா... புரியலியே ரமணியம்மா" என்று கேட்டாள். "உன் கல்யாணத்தைப் பத்திதான் கேட்கிறேன் தமிழ்" "எனக்கு கல்யாணம்ணு உங்களுக்கு யார் சொன்னது?" என்று அவள் கேட்கவும் அமைதியாய் இருந்தவர் மீண்டும் அவளிடம், "அப்போ பேப்பர்ல வந்த நீயூஸ்" என்று கேட்டார். "என்ன நீயூஸ்? எனக்கு புரியலியே" "நீயே போய் பாரு" என்று ரமணியம்மாள் சொல்ல என்ன ஏதென்ற குழப்பத்தோடு அழைப்பைத் துண்டித்துவிட்டு ரகுவிடம் அவசரமாய் செய்தி தாளைக் கேட்க அவனும் அப்போது அதிர்ச்சியில் உறைந்திருந்தான். "என்னாச்சு ரகு?" என்று தமிழ் அவனிடம் கேட்க எதுவும் சொல்லாது செய்தித்தாளை நீட்டினான். தமிழ் புரியாமல் அதனைப் பிரித்தவள் அதில் அரைப்பக்கத்திற்கு வீரேந்திரனுக்கும் அவளுக்குமான திருமணச் செய்திப் புகைப்படத்தோடு வந்திருப்பதைப் பார்த்து சொல்லவொண்ணா அதிர்ச்சியடைந்தாள்

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா