மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 14Post ReplyPost Reply: Monisha's VET - 14

Quote from monisha on November 6, 2021, 2:56 PM

14
இனி நடக்க போகும் எதையும் தன்னால் தடுக்க இயலாது என்ற கவலையுடன் படுக்கையின் மீது சரிந்தவளின் மொத்த கோபமும் இப்போது அவள் தாத்தா சிம்மவர்மன் மீதுதான். ‘தாத்தாதாதாதா... இப்ப மட்டும் நீங்க என் கண் முன்னாடி வந்தீங்க... அவ்வளவுதான்... அன்னைக்கு என்ன சொன்னீங்க … உன்னைக் கட்டிக்கப் போறவன் ராஜா மாதிரி வருவான்னுதானே... வந்திருக்கான்… நல்லா ராட்சஸன் மாதிரி வந்திருக்கான்... என்னை இரிடேட் பண்றான் தாத்தா... உயரமா கம்பீரமா வருவான்னு எல்லாம் வேற சொன்னீங்க… அதென்னவோ பார்க்க அப்படிதான் இருக்கான்... ஆனா அதுக்கப்புறம் ஒன்னு சொன்னீங்களே... உன்னை தங்கமா வைச்சுத் தாங்குவான்னு... உஹும்… அவன் என்னை தகரமா கூட மதிக்கமாட்றான்... ஹீ ஹேவ் நோ ரெஸ்பெக்ட் டூ மை ஃபீலிங்ஸ்... போச்சு... என் வாழ்க்கையே போச்சு... எல்லாம் முடிஞ்சிடுச்சு... ஃபினிஷ்... ரகு அப்பவே சொன்னான்... போகாதன்னு... நான் கேட்டேனா... எனக்கு வேணும்... இன்னும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்...’ அவள் பாட்டுக்கு தன் வேதனைகளைப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தாள். கதவை மெல்ல திறந்து அச்சத்தோடு எட்டிப் பார்த்த தேவி, "மாமாவைப் பார்த்தா அப்படி எல்லாம் தெரியலக்கா?" என, அவளைக் கடுமையாக முறைத்த தமிழ் தலையணையைத் தூக்கியடித்து, "மவளே! என் பக்கத்தில மட்டும் வந்துராதடி... உன்னைக் கொன்னுடுவேன்... மாமாவாம் மாமா... யாருடி மாமா உனக்கு?" என்று சீற்றமாகப் பொங்கினாள். "அதான் அக்கா உயரமா கம்பீரமான்னு சொன்னியே... அவர்தான் ராஜ வீரேந்திர பூபதி... ராஜா மாதிரிரிரிரிதான்... எனக்கு தோணுது" என்று தயக்கத்தோடு தேவி இழுக்க, "தோனுமுடி தோனும்... உனக்கு நேத்து வந்தவங்க எல்லாம் என்னைவிட ரொம்ப முக்கியமா போயிட்டாங்க இல்ல?!!" என்று சொல்லி முடிக்கும் போது தமிழின் கண்கள் கலங்கின. "அய்யோ அப்படி எல்லாம் இல்லக்கா... நீ தப்பா புரிஞ்சுட்டிருக்க... எனக்கு எப்பவுமே நீ மட்டும்தான் முக்கியம்... வேற யாரும் முக்கியமில்ல... ப்ளீஸ் தப்பா எடுத்துக்காம நீ இந்தப் புடவையை மட்டும் கட்டிக்கிட்டு வந்துறேன்... எல்லோரும் வெளிய கூப்பிடுறாங்க" என்று தமக்கையை சமாதானம் செய்யும் விதமாகப் பேசி கொண்டே தன் கையில் மறைத்து வைத்திருந்த ரோஸ் வண்ண சரிகை புடவையை நீட்ட, அவளின் கோபம் தாறுமாறாக ஏறியது. அவள் தங்கையைச் சீற்றத்துடன் அடிக்க துரத்த தேவி சுவரோரம் பதுங்கியபடி, "ப்ளீஸ்க்கா அடிக்காதே" என்று தலைக் கவிழ்ந்து கெஞ்சத் தொடங்கினாள். "ஏன்டி இப்படி எல்லாரும் சேர்ந்து என்னை டார்ச்சர் பண்றீங்க... உங்க எல்லாருக்கும் அப்படி நான் என்னதான்டி பண்ணனேன்" என்று அவள் மனம் தாளாமல் பொறும, தேவி மெல்லத் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். "உன்னை யாரும் அடிக்கல... எழுந்திறி" தேவி மீண்டும், "புடவை" என்று நீட்ட, வேறுவழியின்றி அவளும் அதனைப் பெற்றுக் கொண்டாள். "கட்டித் தொலையறேன்... ஆனா… இதெப்படிறி கட்டிறது... அம்மான்னு யாராச்சும் இருந்திருந்தா... இதெல்லாம் கட்டிப் பழகியிருக்கலாம்... எனக்குதான் அந்தக் கொடுப்பனையே இல்லையே" என்றவள் ஆதங்கப்பட, "நான் இருக்க நீ ஏன்க்கா கவலை படற" என்று தமக்கைக்கு தைரியம் கூறினாள். "உனக்கு கட்டத் தெரியுமாடி?!" "உம்ஹும்... நான் பியூட்டிஷ்யன்ஸை வரவைச்சிருக்கேன்... எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க" என்றதும் தமிழ் அவளை உறுத்து பார்த்து, "எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டீங்க... ஆனா என்கிட்ட மட்டும்தான் சொல்ல மறந்திட்டீங்க… அப்படிதானே?!" என்று அவள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வரவும், 'இதென்னடா வம்பா போச்சு... வேதாளம் திரும்பியும் முருங்கை மரம் ஏறுதே' என்று அச்சமுற்ற தேவி, "அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாமே... நீ போய் பிரெஷ்ஷாகிட்டு வா... நான் போய் பியூட்டிஷியன்ஸைக் கூப்பிடுறேன்" என்று தேவி சாமர்த்தியமாக நழுவிக் கொண்டாள். தமிழ் விரும்பாவிட்டாலும் வேறு வழியில்லாமல் அந்தச் சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஒப்பனையாளர்கள் தமிழுக்குப் புடவையை அணிவித்து அலங்காரங்கள் செய்து அவளின் கூந்தலைப் பின்னி முடித்து, ”ஓகேவான்னு பார்த்து சொல்ல்லுங்க மேடம்” என, “ஆன்…ஓகே ஓகே” என்றவள் தன் முகத்தைக் கூட பார்க்காமல் வேண்டா வெறுப்பாகத் தலையசைத்து வைத்தாள். அப்போது ரகுவிடமிருந்து அவள் கைப்பேசிக்கு அழைப்பு வர, தமிழ் நண்பனிடன் நடந்தவற்றை எல்லாம் விவரித்து முடிக்கவும், "இதென்னடிக் கொடுமையா இருக்கு?” என்று அவன் அதிர்ச்சியுற்றான். தமிழுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்றே புரியவில்லை. “செத்து போன உங்க தாத்தாவுக்காக... உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்க போறியா” என்று ரகு ஆதங்கத்துடன் கேட்க, “எந்தக் காரணத்தைக் கொண்டும் என் தாத்தாவுக்கு என்னால கெட்ட பேரோ கௌரவ குறைச்சலோ ஏற்படுற மாதிரியான வேலையை நான் எந்தக் காலத்திலயும் செய்யமாட்டேன்" என்று அவள் தீர்க்கமாக உரைத்தாள். “பைத்தியக்காரத்தனமா உளறாதே… ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு... பேசாம யாருக்கும் தெரியாம நீ கிளம்பி வந்திரு... யாரோ எக்கேடுக் கெட்டோ போகட்டும்" என்று சொன்ன ரகுவிடம், "அப்படி எல்லாம் செய்ய கூடாது ரகு… அது தப்பு” என்றாள். “உன் வாழ்க்கையை நரகமா போயிடும்… ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு” என்று ரகு அழுத்தமாக எச்சரிக்க, “எப்படியோ போகட்டும்… இதுக்கு மேல என்னை நடந்தாலும் பரவாயில்ல… இந்த முடிவினால என் வாழ்க்கையே போனாலும் கூட பரவாயில்ல” என்றாள் முடிவாக! "நான் சொல்றதை நீ கேட்க மாட்ட இல்ல... போடி... எக்கேடுக் கெட்டோ போ... இத்தோடு உனக்கு ரகுன்னு ஒரு ஃப்ரண்டு இருக்கான்றதை மறந்திடு" என்று அவன் படபடவென பொறிந்து தள்ளிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான். அவளுக்கு வேதனையாக இருந்தது. இத்தனை வருட நண்பனே தன்னைப் புரிந்து கொள்ளாத போது வீரேந்திரனிடம் எத்தகைய புரிதலை தான் எதிர்பார்க்க முடியும். யாரும் தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என்று அவள் மனம் வெதும்பிய சமயத்தில் அங்கே வந்த தேவி தன் தமக்கையின் அழகைப் பார்த்து வியந்து, "புடவையில நீ அவ்வளவு அழகா இருக்கக்கா" என்று நெகிழ்ந்து கூறி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தன் சிந்தனையிலிருந்து மீண்டு வந்தவள் எதிரே கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவள்தானா அது? அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நாளும் அவள் அலங்கரித்து கொண்டதே இல்லை. ஒரு வகையில் அதற்கான சந்தர்ப்பமும் அவளுக்கு வாய்த்ததில்லை. திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குப் போனாலும் கூட எப்போதும் போல பேன்ட் ஷர்ட்தான். அதென்னவோ அவளுக்கு அப்படியே பழகிப் போய்விட்டது. ஆனால் அவளின் இந்த புது மாற்றத்தை அவளால் ஏற்று கொள்ளவோ இன்பமுறவோ முடியவில்லை. அப்போது அறைக்குள் விறுவிறுவென நுழைந்த விஜயா கொந்தளிப்புடன், "நீ என்ன இவளுக்கு வேலைக்காரியா... இதெல்லாம் செய்யணும்னு உனக்கென்னடி தலையெழுத்து" என்று சொல்லி தேவியை வலுகட்டாயமாய் அங்கிருந்து இழுத்து செல்ல முயல “நான் அக்கா கூடத்தான் இருப்பேன்… வரமாட்டேன்” என்றவள் முரண்டு பிடித்தாள். “ப்ச்… போ தேவி… அம்மாதானே கூப்பிடுறாங்க” என்று தமிழ் தங்கையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். தேவி சென்ற பின் அந்த அறை முழுவதும் தனிமையும் அமைதியும் சூழ்ந்து கொண்டது. அப்போதைய சூழ்நிலைக்கு அந்த அமைதி தமிழுக்கும் தேவையாயிருந்தது. ஆனால் அவளின் அந்த அமைதியைக் குலைக்க வேண்டி அங்கே வந்த விக்ரமன், "இதெல்லாம் உன்னோட அம்மாவோட நகை... அப்புறம் நமம் குடும்ப பாரம்பரிய நகை தமிழ்" என்று கூறி அவளருகில் ஒரு நகைபெட்டியை வைக்க அவள் அலட்சிய பார்வைப் பார்த்து, "பரவாயில்லையே... இதை எல்லாம் நீங்க விற்காம பத்திரமா பாதுகாத்து வைச்சிருக்கீங்க.. அதிசயமா இருக்கு" என்று குத்தலாகக் கூறினாள். "உங்க தாத்தா இந்த நகை எல்லாம் உனக்குதான் கொடுக்கணும்னு வைச்சுருந்தாரு" "ஓ... அதனால்தான் இதெல்லாம் பத்திரமா இருக்கா?" என்று அவள் ஏளனமாக கேட்க, அவளின் அந்த வார்த்தை அவரை மிகவும் காயப்படுத்தியது. இருந்தும் மகள் திருமணத்திற்கு சம்மதித்துவிட்ட காரணத்தால் இதை எல்லாம் அவர் பெரிதாக எடுத்து கொள்ள விரும்பவில்லை. "உன் கோபமும் வருத்தமும் எனக்கு நல்லா புரியுது தமிழ்... ஆனா ஒரு விஷயத்தை நீ புரிஞ்சிக்கோ... நானே பார்த்து பார்த்து தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை உனக்கு கிடைச்சிருக்க மாட்டாரு" என்றவர் பொறுமையாக எடுத்துரைக்க, "ஆமாம் ஆமாம்... நீங்க தேடித் தேடிப் பிடிச்சிருந்தாலும் இப்ப்ப்ப்படி ஒரு மாப்பிள்ளையை நிச்சயமா எனக்கு நீங்க பார்த்திருக்கவே முடியாது" என்று அவள் அவர் பாணியிலே கடுப்புடன் கூறினாள். அந்த வார்த்தையின் மூலம் அவள் இன்னமும் வீரேந்திரனை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றிய போதும் அவர் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல், "சரி தமிழ்... நீ இந்த நகையெல்லாம் போட்டுக்கோம்மா... வெளியே எல்லோரும்" என்று அவர் சொல்லி முடிப்பதற்கு முன்னதாக, "ஹம்ம்ம்... எல்லோரும் காத்திட்டிருக்காங்க... நான் பொம்மை மாதிரி வந்து அவங்க முன்னாடி நிக்கணும்... அப்படிதானே" என்று கேட்டாள். ஒவ்வொரு விஷயத்திற்கும் மகளின் சம்மதம் வாங்குவது விக்ரமவர்மனுக்கு பெரும் போராட்டமாய் இருந்தது. போதாக்குறைக்கு இந்த நகை எல்லாம் பார்த்துவிட்டு விஜயா தன் மகளுக்குத்தான் பாரம்பரிய நகைகளைத் தர வேண்டும் எனச் சண்டையிட்டு வெளியே கோபத்தில் கொந்தளித்து கொண்டிருக்கிறார். அவரைச் சமாளித்துவிட்டு வந்த பின் இவள் இப்படி முரண்டு பிடிக்கிறாளே என அவர் தவிப்போடு நிற்க, தமிழ் தன் தந்தையின் எண்ண ஓட்டத்தையும் தவிப்பையும் புரிந்தவளாய்,"சரி போங்க நான் வர்றேன்" என்றாள். அவர் நிம்மதியடைந்து பெருமூச்சுவிட்டபடி அந்த அறையை விட்டு வெளியேறினார். இனி இதுதான் தன் வாழ்க்கை. இந்த நிலையைத் தான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று மனதிற்குள்ளேயே ஜபித்துக் கொண்டு அந்தப் பாரம்பரிய நகைகளைப் போட்டுக் கொள்ளக் கண்ணாடி முன்பு அவள் அமர்ந்து போது, சட்டென்று அவள் கழுத்தொட்டியிருந்த செயினில் டாலர் இல்லாததைக் கண்டு குழம்பி நின்றாள். அது அவள் குடும்பத்தின் முத்திரை பதித்த சிங்கமுக டாலர். தன் தாத்தாவிடம் இருந்தது போலவே அவளிடமும் ஒன்று இருந்தது. எங்கே தொலைத்திருப்போம்... உடனே அவள் சுற்று முற்றும் தேட ஆரம்பித்தாள். அறை முழுக்கவும் தேடிவிட்டு பின்பு அங்கில்லை என்று எண்ணம் தோன்ற எங்கே தொலைத்தோம் எனத் தீவிரமாக யோசிக்கலானாள். கடைசியாய் எப்போது பார்த்தோம் என்று வரிசையாய் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவளுக்கு ஆர்க்கியாலஜிஸ்ட் தர்மா வீட்டிற்குச் சென்றது நினைவுக்கு வந்தது. அங்கே விட்டிருப்போமோ என்று சந்தேகிக்க, அவளுக்கு அதிர்ச்சியில் இதயமே நின்றுவிடும் போலிருந்தது. அவள் மனமோ அப்படி இருக்காது எனவும் அப்படி இருந்தால் எனவும் மாறி மாறி ஊசலாடிக் கொண்டிருந்தது. இறுதியாய் ரகுவின் வீட்டிலும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் தோன்ற எதற்கும் ரகுவிடம் இதைப் பற்றி சொல்ல வேண்டும் என அவனுக்குக் கைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தாள். நிலைமை புரியாமல் அவனோ அவள் மேலிருந்த கோபத்தில் அழைப்பை ஏற்க மறுத்தான். 'பிக் அப் தி கால் ரகு' என்று பல குறுஞ்செய்தியும் அனுப்பிவிட்டாள். ஆனால் பதில் அழைப்பு வராமல் போக, அவள் பதற்றம் அதிகரித்தது. அப்போது தேவி எப்படியோ தன் அம்மாவிடம் இருந்து தப்பிக் கொண்டு வந்து, "இன்னுமா நீங்க நகை எல்லாம் போட்டுக்கல... எல்லோரும் வெயிட்டிங்?" என்று அவசரப்படுத்த, “என் செயின்ல இருந்த டாலரைக் காணோம் தேவி” என்று தமிழ் தவிப்புடன் கூற, “அந்த சிங்க முக டாலரா க்கா” என்று கேட்டாள் தேவி. “ஆமான்டி… நீ பார்த்தியா?” “கவனிக்கலயே க்கா” என்றவள் யோசனையோடு, "ரூம்லதான் க்கா இருக்கும்… நம்ம இரண்டு பேரும் பொறுமையா தேடிப் பார்ப்போம்... இப்போ எல்லோரும் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க... நாம போவோம்" என்றாள். தமிழ் அவள் பேச்சைக் கேட்காமல், "இல்ல இல்ல... நீ முதல்ல தேடு... நானும் தேடுறேன்... டாலரைப் பார்த்தாதான் எனக்கு நிம்மதி" என்று சொல்லி தேவியையும் கட்டாயப்படுத்தி அறை முழுக்க தேட வைத்தாள். இருவரும் அந்த அறையையே முழுவதுமாய் அலசி ஆராய்ந்துவிட்டனர். ஆனால் அந்த டாலர் கிடைக்கவில்லை. அப்போது அறை வாயிலில் கணீரென ஒலித்தது வீரேந்திரனின் குரல். "ஏ தமிழச்சி… என்னடி நினைச்சிட்டிருக்க உன் மனசுக்குள்ள... வெளியே எல்லாரும் எவ்வளவு நேரமா காத்திட்டிருக்காங்க தெரியுமா... நீ பாட்டுக்கு ரூம்லயே இருந்தா என்ன அர்த்தம்... ஒவ்வொருத்தாரா வந்து உன்கிட்ட கெஞ்சிட்டிருக்கணுமா?!" என்று அவன் பொறுமையிழந்து அவளிடம் வந்து எகிற, அச்சத்தில் அவளுக்கு மூச்சே நின்று போனது. அந்த நொடி தர்மா வீட்டில் டாலர் விழுந்திருந்தால்… அது ஒரு வேளை இவன் கையில் கிடைத்துவிட்டால்… தன் நிலைமை அதோ கெதிதான் என்று அவள் மனம் நடக்காததை எல்லாம் கற்பனை செய்து அஞ்சியது. தமிழ் அந்தத் திகிலுணர்வுடன் பேச்சற்று நிற்க, “என்ன அமைதியா இருக்க? பத்திரிக்கையில என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாதையும் எழுதி அவமானப்படுத்தின மாதிரி… இங்கே உங்க ஊர்ல வைச்சு என் குடும்பத்தை அவமானப்படுத்தலாம்னு ப்ளேன் போட்டு வைச்சு இருக்கியா?” அவன் காட்டமாகக் கேட்க, "சேச்சே அப்படி எல்லாம் இல்ல மாமா" என்று தேவி பதறிக் கொண்டு அவனுக்குப் பதிலளித்தாள். “ஏன் உங்க அக்கா பேச மாட்டாளா?” என்றவன் கேட்ட நொடி, "எனக்கு யாரையும் அவமானப்படுத்தனமுங்குற நோக்கமெல்லாம் எப்பவுமே இருந்தது இல்ல… அதேபோல என் குடும்பத்துல எல்லோரும் சொன்ன வார்த்தையை காப்பாத்துவோம்… பைஃவ் மினிட்ஸ்தான்... நானே வர்றேன்... நீங்க போங்க" என்றவள் நிதானமாகவும் அழுத்தமாகவும் பதிலுரைக்க அவனுக்கு வியப்பானது. அதேநேரம் அவள் தன் முகம் பார்க்காமல் பேசியது கொஞ்சம் அவனுக்கு நெருடலாக இருந்தது. அவள் முகத்தைத் திருப்பாமலே நின்றிருப்பதை ஏக்கமாய் பார்த்துவிட்டு அவன் அகன்றுவிட, தேவியிடம் அவன் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு திரும்பினாள். அவளுக்கோ அவன் தன் முகத்தைப் பார்த்தாலே தன் மன எண்ணங்களைப் படித்துவிடுவான் என்று பயம். "ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்" என்று அவள் பலமுறை சொல்லி மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. “என்னக்கா ஆச்சு?” என்று தேவி அவளை விசித்திரமாகப் பார்த்தாள். “ஒன்னும் ஆகல… ஆனா நீ ஏசிபிகிட்ட மட்டும் என் டாலர் தொலைஞ்ச விஷயத்தைத் தப்பி தவறிக் கூட சொல்லிடாதே" “நான் ஏன் க்கா அவர்கிட்ட போய் இதை பத்தி சொல்லணும்” என்று தேவி குழப்பமாக வினவ அப்போதுதான் தமிழுக்கு தான் பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. "ப்ச்... நீ சொல்லாதன்னா... சொல்லாத" என்று சமாளித்தவள் தான் தேவையில்லாமல் பயப்படுகிறோம் என்று சொல்லி தனக்குத்தானே தைரியத்தைப் புகட்டிக் கொண்டாள். ஆனால் அவள் மனதை அழுத்திப் பிடித்து கொண்டிருந்த பயம் விலகமாட்டேன் என்று அடம்பிடித்தது. எது எப்படியிருந்தாலும் வீரேந்திரனிடம் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாதென்று எண்ணிக் கொண்டவளுக்கு அவன் ஏசிபியாக இருக்கும் போதே இத்தனை பிரச்சனை என்றால் அவன் தன் கணவனாய் மாறிவிட்டால்… நினைக்கும் போதே அவள் அடி வயிறெல்லாம் கலங்கியது. அதன் பின் அணிகலன்களை எல்லாம் அவசர அவசரமாக தாமே அணிந்து கொண்டு தயாராகி அவள் வெளியே வந்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா