மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 15Post ReplyPost Reply: Monisha's VET - 15

Quote from monisha on November 8, 2021, 6:47 PM

15
வீரேந்திரனுக்கு ஒரு பொட்டு உறக்கம் கூட வரவில்லை. கண்களை மூடினால் அவள்தான் காட்சி தந்தாள். இதுநாள் வரையில் இயல்பான உடையும், அலங்கரிப்பையே காணாத முகமாய் அவன் கண் முன்னே தோன்றியிருந்தவள் இன்று வானிலிருந்து இறங்கி வந்த தேவதையாய் அவன் கண்களுக்குக் காட்சித் தந்தாள் என்று சொன்னால் அது மிகையில்லை. புடவைக்குள் ஒளிந்து கொண்டாலும் நேர்த்தியாகத் தென்பட்ட அவளின் தேக அமைப்பு அவனை வெகுவாய் சலனப்படுத்தியது. மேலும் அவள் அணிந்திருந்த பூவும் பொட்டும் வளையலும் காதில் அசைந்தாடும் தங்க தோடும் தோளில் தவழ்ந்து விளையாடிய மல்லிகை சரமும் என அவள் பூர்ண சௌந்தரியத்துடன் வந்து நின்றதைக் காணுகையில் அவன் உலகையே மறந்து மீள முடியாமல் தொலைந்து போனான். தன்னையும் மறந்து அவள் அழகில் கிறங்கிப் போனான். அவன் மனதை அந்தக் கணத்திலேயே அவள் களவாடிவிட்டாள். ஆனால் ஸ்வேதாவிடம் இந்த மாதிரி எந்த உணர்வும் அவனுக்குத் தோன்றியதில்லை. ஒரு வேளை திருமணத்திற்குப் பின்பாய் தோன்றலாம் என்றவன் எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் செந்தமிழைப் பார்த்த பிறகுதான் புரிந்தது. இவள்தான் தனக்கானவள் என்று. அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து பார்த்து இரு குடும்பதாரும் பொருத்தமான ஜோடி என்று வாயார புகழ்ந்து மனதார வாழ்த்துவிட்டுச் சென்றனர். ஆனால் இத்தனைக்கு இடையிலும் ஒரே ஒரு குறை, அவள் முகத்தில் திருமணத்திற்கான களிப்பு கொஞ்சம் கூட இல்லை. கட்டாயப்படுத்தி அவளை சம்மதிக்க வைத்துவிட்டு அதனை எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை. எனவே திருமணத்திற்கு முன்பாக அவளிடம் பொறுமையாகப் பேசி தன் மனதைப் புரிய வைத்துவிட வேண்டுமென்று எண்ணியவனுக்கு அதற்கு பின் இருப்பு கொள்ளவில்லை. உடனடியாக அவளைப் பார்த்து பேசிட வேண்டும் என்றவன் மனம் தவித்தது. ஆனால் இந்த இரவு வேளையில் எப்படி அவளைப் பார்த்து பேசுவது என்றவன் தூக்கம் வராமல் குட்டிப் போட்ட பூனை போல அந்த அறைக்குளேயே சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான். “பகலிலேயே இந்த அரண்மனையில எந்தப் பக்கம் எந்த ரூம் இருக்குனு தெரியலேயே… ஒவ்வொரு ரூமுக்கும் மூணு நாலு வழி வேற இருக்கு… அவ ரூமை தேடிப் போறன்னு போய் வேற யார் ரூமுக்குள்ளாயாச்சும் புகுந்துட்டா… வம்பாயிடும் வீர்” என்றவன் தனியாகக் புலம்பிக் கொண்டிருக்க, அப்போது அவன் அறையை ஒரு சிறு வெளிச்சம் கடந்து செல்ல என்னவாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தான். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல டார்ச்சுடன் அவள் ஒளிந்து மறைந்து எங்கேயோ சென்று கொண்டிருந்தாள். . “நடுராத்திரில எங்கே போறா… ஒரு வேளை ஓடி கீடி போக யோசிக்கிறாளோ?” “உஹும் இருக்காது… தமிழச்சி அப்படி எல்லாம் செய்ய மாட்டா… தப்போ சரியோ… அவ முகத்துக்கு நேரா பேசுவாளே ஒழிய… ஓடி போகிற மாதிரியான சீப்பான காரியத்தை எல்லாம் ஒரு நாளும் செய்யணும்னு யோசிக்க கூட மாட்டா” என்றவன் மனம் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று மறுத்தது. அவன் நம்பிக்கையை அவள் பொய்யாக்கவில்லை. அவள் அரண்மனைக்கு வெளியே செல்லவில்லை. பின்புறமிருந்த சுழல் படிக்கட்டு வழியே ஏறி மேலே சென்று கொண்டிருந்தாள். அவன் நிம்மதியாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டான். இத்தனை நேரம் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அதுவாக அமைந்திருக்கும் போது அவன் அதனை நழுவவிட தயாராக இல்லை. அவனின் போலீஸ் மூளையும் கொஞ்சம் காதல் லீலையும் அவளைப் பின்தொடர சொல்ல, அவள் எங்கே செல்கிறாள் என்ற ஆவலோடு அந்த இருளில் அவளைப் பின் தொடர்ந்தான். அந்த இருளிலும் ஒரு சிறு இடர்பாடு கூட இல்லாமல் அவள் அத்தனை லாவகமாய் நடந்து செல்வதைப் பார்க்கையில் அந்த இடத்திற்கும் அவளுக்குமான நெருங்கிய தொடர்பை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வப்போது அவள் திரும்பி பார்க்க அவளின் பார்வையில் சிக்காமல் வருவது வீரேந்திரனுக்குப் பெரும் பாடாய் இருந்தது. அவளோ மாடிக்குச் சென்று பின் அங்கிருந்து சுற்றி சுற்றி செல்ல, அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவள் போகும் பாதை ஒன்றும் அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ‘இது அரண்மனையா இல்ல அலிபாபா குகையா?’ என்று கடுப்படித்தபடி நடந்தவனுக்கு எப்போது இந்த சுற்றல் முடியுமென்று இருந்தது. நல்ல வேளையாக அவள் அங்கே நின்று ஒரு அறைக்கதவை திறந்து உள்ளே சென்றாள். அவனும் அவளுக்குத் தெரியாமல் பின்னோடு நுழைந்தான். அவனை அந்த அறையின் பிரமாண்டம் அசர வைத்தது. விசாலமான அந்த அறையை அவன் பிரம்மிப்புடன் பார்வையிட்டுக் கொண்டிருந்த சில கணத்தில் அவள் அவன் கண்களை விட்டு மறைந்துவிட்டாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் எங்கே சென்றிருப்பாள் என்றவன் சுற்றும் முற்றும் பார்க்க, அந்த அறைக்குள்ளிருந்த மற்றொரு கதவையை கண்டான். அவள் அதன் வழியேதான் சென்றிருப்பாள் என்று கணித்து அவனும் அந்த கதவின் வழியே நுழைந்த அடுத்த நொடி, "ஆ..." என்ற பயங்கர அலறல் சத்தம். அந்த அலறலில் அவனின் திடமான மனமும் கூட கொஞ்சம் மிரண்டுவிட்டது. சுதாரித்துக் கொண்டு சத்தம் வந்த திசையில் அவன் திரும்ப, அவளோ அந்த அறையின் வலது புற ஓரமாய் நின்றிருந்த பெரிய அலமாரியின் மேற்புறத்தில் அமர்ந்திருந்தாள். தான் பார்த்தக் காட்சியை நம்ப இயலமால் உற்றுப் பார்த்தவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீறிட்டது. தமிழுக்கு அப்போதுதான் தான் அச்சம் கொண்டு கத்தியது பேயோ பூதமோ இல்லையென்று புரிந்தது. ஒரு வகையில் பேய் பூதத்திடம் மாட்டிக் கொண்டிருந்தாளே பரவாயில்லை. ஆனால் இவன் அவற்றை எல்லாம் விட மோசமானவன் என்று அவளுக்கு அப்போதுதான் இன்னும் அதிகமாகப் பீதியைக் கிளப்பியது. அவள் அவனைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, அவனோ அவளைப் பார்த்து பரிகசித்து சிரிப்பதில் மும்முரமாக இருந்தான். பின் மெல்ல அவன் தன் சிரிப்பைக் கட்டுபடுத்திக் கொண்டு, "ஆமா அலமாரி மேல ஏறி என்னடி பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டான். கேட்கும் போதே மீண்டும் அவனுக்கு சிரிப்பு பொங்கி வர, “இப்ப என்னத்த பார்த்துட்டீங்கன்னு இப்படி சிரிக்குறீங்க" என்றவளுக்கோ அப்போது கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. “பின்ன பேய் மாதிரி நடுராத்திரில நடந்து வந்து இப்படி அலமாரி மேல ஏறி உட்கார்ந்தா சிரிக்க மாட்டாங்களா?” என்றவன் அவளை நக்கலடிக்க, “அப்போ என்னை நீ ஃபலோ பண்ணிட்டு வந்திருக்கீங்க” என்றவள் அதே கோபத்துடன் கேட்டாள். “அது… ஆமா” என்றவன் கொஞ்சம் தயக்கத்தோடு ஆமோதிக்கவும், "உங்களை யாரு என் பின்னாடி வர சொன்னது? வேற வேலை வெட்டியே இல்லையா உங்களுக்கு?!" என்றவள் பதிலுக்குக் கடுகடுத்தான். அவன் புன்னகை ததும்ப, "இதுவும் என் வேலைதான்டி தமிழச்சி" என்று சொல்லவும், "எது? என் பின்னாடியே வந்து என் உயிரை எடுக்கிறதா?!" என்று அவள் எரிச்சலாக முகத்தைத் திருப்ப, "ம்ம்ம்... அப்படியும் வைச்சுக்கலாம்" என்று அவன் ரொம்பவும் இயல்பாய் பதலளித்தான். 'என் ஆயுள் முழுக்க வந்து என் உயிரை எடுக்க போறது பத்தல... இப்பவே வந்து என்னை டார்ச்சர் பண்ணனுமாக்கும்?!' என்று அவள் வாய்க்குள் முணங்க அவளைக் கூர்ந்து கவனித்தவன், "ஓய்... என்ன? மேலேயே உட்கார்ந்து தனியா புலம்பிட்டிருக்க? எதுவாயிருந்தாலும் இறங்கி வந்து பேசு" என்று அவன் அதிகாரமாகக் கூறினான். “நீங்க முதல்ல இங்கிருந்து போங்க... நான் இறங்கிக்கிறேன்" என்றவளுக்கு அவனிடம் தனியாக மாட்டிக் கொள்ள விருப்பமில்லை. “உனக்கென்ன மரகிற கழன்டிருச்சா? குரங்காட்டும் அது மேல ஏறி உட்கார்ந்திட்டு... விழுந்து வைக்க போற… முதல இறங்கி வா" என்று அவன் எரிச்சலாகச் சொல்லவும் அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவனிடம் தேவையில்லாமல் வாயைக் கொடுக்க கூடாது என அவள் யோசித்திருக்க, அவன் குதர்க்கமான பார்வையோடு, "என்ன தமிழச்சி... இறங்கி வர பயமா இருக்கோ?!! நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?!" என்று கேட்டான். அவள் கலவரத்துடன் பார்க்க அவன் சொன்னது போலவே அலமாரியை நோக்கி வரவும் அவள் பயத்துடன் கால்களை மேலே மடக்கி வைத்துக் கொண்டு, "எனக்கு பயமெல்லாம் இல்ல... கோயில் ஆராய்ச்சிகளுக்கு இதை விட உயரமான இடத்தில எல்லாம் நான் ஏறி இருக்கேன்… நீங்க முதல இங்கிருந்து போங்க… எனக்கு பத்திரமா இறங்கிக்க தெரியும்" என்று அவள் அவனைத் துரத்துவதில் குறியாக இருந்தாள். "அது சரி… அலமாரி மேலே ஏறி என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க மேடம்" "என்னவோ பண்றேன்... உங்களுக்கு என்ன?! நீங்க முதல இங்கிருந்து கிளம்புங்க" என்று அவள் அலட்சிய பார்வையுடன் உரைக்க, அவனுக்கு என்னவோ சரியாகப்படவில்லை. அதுவும் அவள் தன்னைத் துரத்துவதிலேயே குறியாய் இருக்கிறாளே எனச் சந்தேகமாய் யோசித்தவன் மீண்டும் அவளைச் சீண்டும் விதமாய், "ஏன் தமிழச்சி? உயரத்தைப் பார்த்துதான் உனக்கு பயம் இல்ல.. பட் இந்த பல்லி, பூரான், கரப்பான் பூச்சி... இதை பார்த்து கூட உனக்கு பயமில்லையா?" என்றவன் கேட்க, அவள் அடிவயிற்றில் ஏதோ உருண்டது போல் ஒரு உணர்வு. அவள் மனதில் லேசாய் அச்சம் பரவியது. ஏறுவதற்கு முன் அவற்றைப் பற்றி எல்லாம் தான் யோசிக்கவே இல்லையே என தன் பார்வையைச் சுற்றிலும் சுழற்றினாள். வெகுநாளாய் பயன்படுத்தாத அந்த அறையில் தூசும் தும்பும் ஏற்கனவே மாசுபடுத்தியிருந்தது. நிச்சயம் அவன் சொன்ன ஜீவராசிகள் இங்கே வசிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது ஒரு குரல் அவள் மனதிற்குள் இருந்து எச்சரித்தது. 'நோ தமிழ்... இதுக்கெல்லாம் பயந்து நீ அவன்கிட்ட போய் மாட்டிக்காதே' என, அவளுக்கு அந்த அறையின் தனிமையையும் இருளையும் விட அவனை பார்த்துதான் ரொம்பவும் மிரட்சியாக இருந்தது. அவள் இவ்விதம் யோசித்தபடி மேலேயே அமர்ந்திருக்க, அந்த கணம் அவனின் பொறுமை முற்றிலும் கரைந்து போனது. "நானும் சின்னப் பிள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றேன்... நீயும் அடவாடியா மேலயே உட்கார்ந்துட்டிருக்க... இப்ப நீ இறங்கி வருவியா மாட்டியா?!" என்று அதட்டியவன் அப்போதும் அவள் இறங்கி வருவது போலத் தெரியவில்லை என்று தெரிந்ததும், "உம்ஹும்... உன்கிட்ட எல்லாம் பேசினா சரிப்பட்டு வராது... இதோ வர்றேன்" என்று அவன் அலமாரியை நெருங்கி வந்தான். அவன் என்ன செய்ய நினைக்கிறான் என்பதை யூகித்தவளுக்குப் பதட்டமாக, "வேண்டாம்... வேண்டாம்... நானே வர்றேன்... ப்ளீஸ்" என்று இறங்கத் தயாரானாள். அவள் நிதானமாய் திரும்பி அந்த உயரமான அலமாரியில் இருந்து இறங்கத் தொடங்கினாள். ஏறும் போது இல்லாத தடுமாற்றம், இறங்கும் போது அவளுக்கு ஏற்பட்டது. எல்லாம் அவனால்! அளந்து அளந்து அவள் அடியெடுத்து கீழே வைக்க, அவள் பாதம் லேசாய் தடுமாறியதுதான் தாமதம். அவனின் இரு கரமும் அவளின் இடையைத் தாங்கிப் பிடித்து கீழே இறக்கி விட்டுவிட, காற்றில் மிதந்தது போன்ற உணர்வு அவளுக்கு. அவன் கரத்தை எடுக்க முயலும் போதே அவள் கால்கள் தரையைத் தொடவும் அவள் அவசரமாய் விலகி வந்தாள். "என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசில... யாரு உங்களைப் பிடிக்க சொன்னது" என்று அவள் அவனிடம் சீற, "நான் மட்டும் பிடிக்கலன்னா நீ கீழே விழுந்திருப்ப" என்றான். "விழுந்துட்டு போறேன்... உங்களுக்கு என்ன அக்கறை?!" "எனக்கு அக்கறையும் இல்ல. ஒரு மண்ணும் இல்ல... நாளன்னைக்கு கல்யாணத்தை வைச்சுகிட்டு நீ விழுந்து கை காலை உடைச்சுக்கிட்டா... அப்புறம் யாருக்கு நஷ்டம்" "அப்போ உங்கப் பிரச்சனையும் கவலையும் அதுதான் இல்ல... சரியான" என்று அவள் நிறுத்திவிட்டு ‘செல்பிஃஷ்’ எனச் சத்தமில்லாமல் சொன்ன போதும் அவள் வாயசைவில் அதனைப் புரிந்து கொண்டவனுக்கு கோபம் சரமாறியாக ஏறியது. “யாருடி செல்பிஃஷ்… நானா?” என்று அவன் அவளிடம் எகிற, “உங்க கூட சண்டை போடுற மூடு ல எல்லாம் நான் இல்ல” என்றவள் மெல்ல அங்கிருந்து நழுவப் பார்த்தாள். " ஏய் தமிழச்சி… எங்க தப்பிச்சு ஓடுற... நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போ" என்றவன் அவளை வழிமறித்தான். "ஹெலோ ஏசிபி சார்... இது ஒன்னும் உங்க போலீஸ் ஸ்டேஷன் இல்ல... நீங்க கேள்வி கேட்டதும் நான் கையைக் கட்டி பதில் சொல்றதுக்கு" அவள் அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவனைக் கடந்து செல்ல பார்க்க அவள் கரத்தை அவன் இறுக பற்றிக் கொண்டு, "இது போலீஸ் ஸ்டேஷன் இல்லதான்... பட் நீ என்கிட்ட கையும் களவுமா மாட்டிருக்கியே" என்றான். “கையை விடுங்க” என்று அவள் அவன் கரத்திலிருந்து தன் கையை விடுவிக்க போராடினாள். ஆனால் அவனின் கரத்தின் பிடி அவனைப் போலவே மிக உறுதியாய் இருந்தது. "ஆமா… என்ன திருட்டுத்தனம் பண்றதுக்கு இந்த ராத்திரில இங்க வந்த நீ?" என்று அவன் விசாரிக்க, அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. "திருட்டுத்தனமா... நான்ஸென்ஸ்... இது என் தாத்தாவோட ரூம்... இங்க வர்றதுக்கு யாரோட பெர்மிஷனும் எனக்கு தேவையில்ல" என்றாள். "நான் நான்ஸென்ஸ்தான்... பட் நீ ரொம்ப ஸென்ஸோடதான் அலமாரி மேல ஏறி உட்கார்ந்துட்டுருந்தியா?!" "இப்ப என்ன தெரிஞ்சிக்கனும் உங்களுக்கு?! நான் அந்த அலமாரில என்ன எடுக்க போனேன்... அதானே?!" என்று அவள் அழுத்தமாகக் கேட்க, "ம்ம்ம்" என்று அவன் தீர்க்கமான பார்வையோடுத் தலையசைத்தான். "அந்த அலமாரி மேல எங்க தாத்தாவும் நானும் இருக்கிற ஃபோட்டோ ஒன்னு இருந்துச்சு... அதை எடுக்கலாம்னுதான் வந்தேன்" என்று அவள் சொல்ல, "ஃபோட்டோவை எடுக்க வந்தியா?!" என்று அவன் அவளை சந்தேக கண்ணுடன் பார்க்க, "ஆமா… ஃபோட்டோவைத்தான் எடுக்க வந்தேன்" என்று அவள் மீண்டும் அழுத்திச் சொன்னாள். "சரி ஃபோட்டோ எங்க?!" என்றவன் பதில் கேள்வி கேட்கவும், "அது... " என்று முதலில் தடுமாறியவள் பின் இயல்பாய் மாறி, "நீங்கதான் அதுக்குள்ள என் பின்னாடியே வந்து பயமுறுத்தி எடுக்கவிடாமே பண்ணிட்டீங்களே" என்றாள். "நீ சொல்றதை இப்பவும் என்னால நம்பமுடியலயே?!" அவள் தோள்களைக் குலுக்கியபடி, "நம்பிக்கை இல்லைன்னா நீங்களே ஏறிப் பார்த்துக்கோங்க" என்று அலட்சியமாய் சொல்லவும் அவன் சிறிதளவும் தயங்காமல் வேகமாய் அந்த அலமாரியை ஏறிப் பார்க்க முற்பட்டான். ஒரு வார்த்தைக்குச் சொன்னால் அவன் அவ்விதம் செய்கிறானே! அவனுக்கு தன் மீது விருப்பம்தான் இல்லை என்று பார்த்தால் துளி கூட நம்பிக்கையும் இல்லை போலும் என்று எண்ணிக் கொண்டாள். வீரேந்திரன் அப்போது அந்த அலமாரியின் மேல் லாவகமாய் ஏறி அங்கே இருந்த ஃபோட்டோக்களைப் பார்த்துத் தேடினான். அவள் சொன்ன படம் அங்கே இருந்தது. அதனை எடுத்துக் கொண்டு ஒரே தாவலாய் இறங்கினான். அங்கே அந்த ஃபோட்டோ இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். அதே நேரத்தில் அவள் தேடி வந்தது அதனை இல்லை என்பதும் அவளுக்கு மட்டுமே தெரியும். 'ஏமாந்திட்டீங்களே ஏசிபி சார்... நான் என்ன தேடிவந்தேன்னு உங்களால கெஸ் கூட பண்ண முடியாது' என்று அவள் சூசகமாக மனதில் எண்ணிச் சிரித்து கொண்டாள். வீரேந்திரன் அவளை நெருங்கி, "இதான் அந்த ஃபோட்டோவா?" என்று கேட்டபடி அதன் மீது படிந்திருந்த தூசியை ஊதினான். அந்த ஃபோட்டோவில் சிறு பெண்ணாய் தமிழ் பாவடைச் சட்டை அணிந்து கொண்டு இரட்டை பின்னல் போட்டு அவள் தாத்தாவின் மடியில் அமர்ந்தபடி கள்ளங்கபடமில்லாமல் புன்னகைத்து கொண்டிருந்தாள். அதனைப் பார்த்ததும் அவளையறியாமல் விழிகளில் நீர் கோர்த்தன. அவள் அதனைத் தேடி வரவில்லை என்றாலும் இப்போது அந்தப் பழைய ஞாபகத்தை அந்தப் படம் நினைவுபடுத்த அவளின் மனம் அந்த அழகான நாட்களுக்காக ஏங்கியது. அவள் அந்தப் படத்தை அவனிமிடமிருந்த வாங்க முற்படுகையில் அவன் அதனை முதுகு புறம் மறைத்து வைத்துக் கொண்டான். அவள் புரியாமல், "அதை வைச்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க... கொடுங்க" என்றாள். அவன் கொடுப்பது போல நீட்டி மீண்டும் அதனை தன்புறம் இழுத்துக் கொண்டு ஏமாற்றவும் அவள் அதை வாங்கப் போராட அவனும் கைமாற்றி கைமாற்றி வைத்தபடி அவளைக் கலங்கடித்தான். “ப்ளீஸ்… அந்த ஃபோட்டோவைக் கொடுத்திருங்க” என்று அவள் அவனிடம் வாங்க போராடிய போது அவளை அறியாமல் அவள் நெருக்கத்தையும் லேசான உரசல்களையும் கெஞ்சல்களையும் அவன் ரசிக்கத் தொடங்கினான். அதற்காகவே அந்தப் படத்தைக் கொடுக்க விரும்பாமல் அவன் அவளை ஏமாற்றி விளையாட, அவளின் அழகில் அவனின் கண்ணியம் காணாமல் போனது. அவன் பார்வை கல்மிஷமாய் தன்னை ரசிப்பதை ஒருவாறு அவள் உணர்ந்துவிடச் சட்டென்று பின்வாங்கியவள், "ஃபோட்டோவை தரப் போறீங்களா இல்லையா?" என்றாள் கண்டிப்புடன்! அவன் விறைப்பாக நின்றபடி, "நீ கேட்டா... நான் உடனே கொடுத்திருவேனா?" என்று சொல்லி அவன் அந்த ஃபோட்டோவையும் அவளையும் அப்போது மாறி மாறிப் பார்த்தான். பின்னர் புன்னகையோடு, "குட்டி தமிழச்சி ரொம்ப க்யூட்டா இருக்காளே?" என்றான். "திஸ் இஸ் யுவர் லிமிட்... ஃபோட்டோவைக் கொடுங்க... என்னை இந்த மாதிரி நீங்க பார்க்கிறது எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு" என்ற போது அவள் கண்களில் தெரிந்த வெறுப்பு, அவன் மனதை ரொம்பவும் காயப்படுத்தியது. அவன் பொறுமையோடு, "நீ இந்தக் கல்யாணத்துக்கு முழு மனசோட சம்மதிக்கலன்னு எனக்கு தெரியும் தமிழ்... பட் புரிஞ்சிக்கோ... இப்ப இருக்கிற நிலைமையை எதுவோ அதை ஏத்துக்க பாரு" என்றான். "அட்வைஸ் பண்றீங்களா இல்ல ஆர்டர் போடுறீங்களா ஏசிபி சார்?" என்றவள் எரிச்சலான தொனியில் கேட்டு அவனை ஏறிட, அவன் கோபம் மிதம்மிஞ்சி போய் கொண்டிருந்தது. அதனை அவள் உணராமல் மேலும் அவனை வெறுப்பேற்றும் விதமாக, "பட் எதுவாயிருந்தாலும் சரி... நான் இந்த கல்யாணத்தை... அப்பவே சொன்ன மாதிரி என் தப்புக்கான தண்டனையாதான் ஏத்துப்பேன்... இன்னும் சொல்லனும்னா நீங்க கட்டப் போற தாலி என்னுடைய தப்பைதான் எனக்கு ஞாபகப்படுத்தி உறுத்திக்கிட்டே இருக்கும்" என்றாள். "அப்படின்னா இந்தக் கல்யாணத்தை நீ ரிலேஷன்ஷிப்பா ஏத்துக்கமாட்ட?!" என்று அவன் பல்லைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுக்குள் வைக்க முயல, "கண்டிப்பா ஏத்துக்க மாட்டேன்" என்றவள் அலட்டிக் கொள்ளாமல் உரைத்தாள். "இவ்வளவு திமிரும் அடெமன்ட்டும் நல்லதில்ல தமிழ்" "உங்க ஈகோவும் தலைகணமும் மட்டும் நல்லதா ஏசிபி சார்" "ஏ நிறுத்துடி... சும்மா ஏசிபி சார் ஏசிபி சார்னு கூப்பிட்டுக் கடுப்பேத்தாதே... கால் மீ வீர்... ஜஸ்ட் வீர்" என்றான் அழுத்தமான பார்வையோடு! "இந்த டி போட்டு பேசுற வேலையெல்லாம் வேண்டாம்" கனலேறிய பார்வையோடு அவளும் சொல்ல, "நீ என்னை ஏசிபி சார்னு கூப்பிடிறதை முதல்ல நிறுத்து" என்றான். "நான் அப்படித்தான் கூப்பிடுவேன்" "ஏன்?" "ஏன்னா உங்ககிட்ட அந்தளவுக்கு என்னால உரிமை எடுத்துக்க முடியல... எடுத்துக்கவும் விரும்பல" என்றவள் தன் அழுத்தமான நிராகரிப்பை அதன் மூலம் பதிவு செய்ய, கடுப்பானவன் அவளை விறைப்பாய் பார்த்து, "ஃபைன்... உன்னால என்கிட்ட உரிமை எடுத்துக்க முடியலன்னா பரவாயில்லை... பட் எனக்கான உரிமையை நான் எடுத்துப்பேன் தமிழ்... அதையும் நீ தண்டனையா ஏத்துக்கிட்டுதான் ஆகனும்" என்றான் அழுத்தமாக! "என்கிட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று கேட்டு அவள் அதிர்ச்சியாகப் பார்க்க, அவன் பதில் சொல்லாமல் அவளை தன் ஒற்றைக் கரத்தால் இழுத்து அணைத்து கொண்டான்.. "இப்போ புரிஞ்சிருக்கோமே… என்ன உரிமைன்னு?!" என்று அவன் கண்கள் சிமிட்டி அவளைப் பார்த்து வஞ்சமாய் புன்னகைக்க, அவள் மிரண்டு போனாள். "விடுங்க என்னை" என்று தவித்தவள், அவன் அணைப்பிலிருந்து வெளிவரப் போராடி தடுமாறித் தரையில் விழுந்தாள். அவள் எழுந்திருக்காமல் நடுக்கத்துடன் அவனைப் பார்க்க, “ரொம்ப முரண்டு பிடிக்கிறியே தமிழச்சி... இந்த வீர் பத்தி உனக்கு தெரியல... காலேஜ் டேஸ்ல என்கிட்ட மடங்காத பொண்ணுங்களே இல்ல... ப்ளே பாய்... கூடவே வெரி பேட் பாய்... பட் போலீஸ் டிரெயினிங் போன பிறகு... போனா போதுன்னு திருந்திட்டேன்... பட் நீ என்னடான்னா... தேவையில்லாம அந்த பேட் பாயை சீண்டி வெளியே வர வைச்சிட்டியேடி" என்றவன் அவள் அருகில் அமர்ந்த வாக்கில், "சரி எழுந்திரு, போலாம்" என்று தன் கரத்தை நீட்டினான். அவளோ அவனை முறைத்து பார்த்துவிட்டு பின் தானே மெல்ல எழுந்து கொண்டாள். "ஓ... மேடம் என் கையைப் பிடிச்சி எழுந்திருக்க மாட்டீங்களோ?! சரி ஓகே... எல்லோரும் நம்ம இரண்டு பேரையும் தேட போறாங்க... வா போலாம்" என்றவன் அழைக்க, அவள் அசையாமல் நின்றிருந்தாள். "ப்ச்... வந்து தொலை... இப்போ நம்ம போலன்னா... நம்ம சொந்தகாரங்க எல்லாம் ஏதாச்சும் கற்பனை பண்ணி தப்பா பேசுவாங்க" "பரவாயில்லை... பேசட்டும்... ஆனா நான் உங்க கூட வரமாட்டேன்... நீங்க என் ஃபோட்டோவை என்கிட்டு கொடுத்துட்டு கிளம்புங்க" என்று அவள் வெறுப்போடு உரைக்க, "ஃபோட்டோவா... என்ன ஃபோட்டோ?" என்றான் அவன் அலட்சியமான பாவனையில்! "உங்க கையில இருக்கே அந்த ஃபோட்டோ" என்று அவள் கேட்கவும் அவன் புன்னகையோடு முடியாதென தலையசைத்தபடி, "கொடுக்க மாட்டேன்... எனக்கு இந்தக் குட்டி தமிழச்சியும் வேணும்... பெரிய தமிழச்சியும் வேணும்" என்று சொல்லவும் அவளுக்குக் கடுப்பானது. "டூ மச்சா பேசிறீங்க ஏசிபி சார்" "ஏசிபி சார்னு கூப்பிடாதே தமிழச்சி" என்றவன் பார்வை கண்டிப்போடு அவளை மிரட்ட, "அப்படிதான் கூப்பிடுவேன்... என்ன பண்ணுவீங்க?" என்றவள் மேலும், "நல்லா கேட்டுக்கோங்க ஏசிபி சார்... நீங்க இந்தக் கல்யாணத்தை வேணா சமார்த்தியமா பேசி சம்மதிக்க வைச்சிருக்கலாம்... ஆனா அதுக்காக எல்லா விஷயத்திலையும் என்னைக் கட்டாயபடுத்தி சம்மதிக்க வைக்க முடியும்னு மட்டும் கற்பனை பண்ணிக்காதீங்க... அது எந்தக் காலத்திலயும் நடக்காது" என்று அவள் உறுதியாகச் சொல்லிவிட்டு விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியேறினாள். 'உங்க பேத்திக்கு இவ்வளவு திமிரும் அகம்பாவமும் ஆகாது தாத்தா' என்றவன் அந்த ஃபோட்டோவிலிருந்த சிம்மவர்மனைப் பார்த்து கூறிவிட்டுச் சீற்றமாக அந்த அறை கதவைக் காலால் எத்தினான். சட்டென்று ஒரு வௌவால் அந்தக் கதவின் பின்னிருந்து அவனைத் தாக்குவது போல் சிறகடித்து கொண்டு பறக்கவும் அவன் கணநேரத்தில் சுதாரித்து நகர்ந்துவிட்டான். மூச்சை இழுத்துவிட்டு கொண்டு மீண்டும் அந்த ஃபோட்டோவைப் பார்த்தான். “ஒரு வேளை தாத்தாவுக்குப் பேத்தியைச் சொன்னதும் கோபம் வந்திருச்சா?!' என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு. அது அப்படியும் இருக்கலாம்!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா