மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 16Post ReplyPost Reply: Monisha's VET - 16

Quote from monisha on November 9, 2021, 4:59 PM

16
ராஜசிம்மன் அரண்மனை கிட்டதட்ட ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு நிகராய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் சிம்மவாசல் வழிநெடுக தோரணங்கள் பேனர்கள் வண்ணமயமான விளக்குகள் என அந்த ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராஜசிம்மன் காலத்தில் அந்த ஊர் நகரமாய் போற்றப்பட்டாலும் இன்று அது ஒரு சிறிய ஊராகவே பகுக்கப்பட்டிருந்தது. அன்றிருந்த புகழெல்லாம் இன்று தேய்ந்து காணாமல் போயிருக்க, சிம்மன் அரண்மனை மட்டுமே அந்த ஊரின் மிச்சம் மீதி பெருமையைச் சுமந்து கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அரண்மனையில் நிகழும் திருமணம் அந்த ஊரின் மீது பலரின் பார்வையைத் திருப்பிவிட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாய் நடந்தேறிக் கொண்டிருந்த நிலையில் பெரிய பெரிய அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் விலையுயர்ந்த கார்களில் வந்தவண்ணம் இருந்தனர். விருந்தினர்கள் வரவேற்பெல்லாம் பிரமாதமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜ விருந்து உபசாரம் எப்படி இருக்கும் என்பதை அங்கே பரிமாறப்பட்ட உணவு வகைகளிலும் சிறப்பான விருந்தோம்பலிலும் காண முடிந்தது. எல்லாமே சிறப்பாய் அமைந்திருந்த போதும் இந்தத் திருமணத்தில் முக்கியமான குறை ஒன்று இருந்தது. வந்த எல்லா விருந்தினர்களுக்கும் அது கொஞ்சம் உறுத்தலாகவும் பலருக்கு விவாதத்துக்குரிய ஒன்றாகவும் மாறியிருந்தது. அதே விஷயத்தைக் குறித்துத்தான் ரவியும் விஜயாவும் விவாதித்துக் கொண்டனர். “இந்த கல்யாணம் நடந்துடுமாடா” என்று விஜயா மகனிடம் ஆதங்கத்துடன் கேட்டார். அவளைப் பொறுத்தவரை ஏதேனும் மாயாஜாலங்கள் நிகழ்ந்து இந்த திருமணம் நின்று விடாதா என்ற எண்ணம்தான். ஆனால் ரவி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், "இந்தக் கல்யாணம் நடக்கிறதுதான் நல்லது... இல்லாட்டி தேவையில்லாத கடன்சுமை நம்ம தலையில வந்து விழும்... அதெல்லாம் எதுக்கு... இந்த அரண்மனையோட எல்லாம் ஒழியட்டும்" என்றான். "டே... அறிவுகெட்டவனே... அவ கழுத்தலிருக்கிற நம்ம குடும்ப பாரம்பரிய நகையோடு மதிப்பு தெரியுமாடா உனக்கு... எல்லாம் கைவிட்டுப் போகப் போகுதுன்னு நானே கவலையில இருக்கேன்... நீ என்னடான்னா?" என்று அவள் பொறுமிக் கொண்டிருக்க, "அது எப்படிம்மா நம்ம கைவிட்டுப் போகும்... எழுதி வைச்சுக்கோ... அவ சுவர்ல அடிச்ச பந்து மாதிரி திரும்ப நம்ம வீட்டுக்கு வாழாவெட்டியா வருவா... அதுவும் கூடிய சீக்கிரம்... அப்போ திரும்பி வாங்கிக்கலாம்" என்றான். "அதெப்டிடா அவ்வளவு உறுதியா சொல்ற" "நீங்க அவ கழுத்தில இருக்கிற நகையைப் பார்க்கிறதை விட்டுவிட்டு அவங்க இரண்டு பேரையும் பாருங்க... அப்போ நான் சொல்றது உங்களுக்கு புரியும்" என்றவன் உரைக்க, விஜயா அவர்கள் இருவரையும் கவனித்தாள். எந்த மணமேடையிலும் பார்க்க முடியாத அரிய காட்சி அது. * பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த மணமேடையில் அத்தனை அழகும் ஒரே இடத்தில் சங்கமித்திருந்தன. அந்தளவுக்குச் சிறப்பாய் அந்த மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த அழகிய மேடையில் பெண்மையின் இலக்கணமாய் அழகு பதுமையாகவே அமர்ந்திருந்தாள் செந்தமிழ். அவள் முகமோ வசீகரிக்கும் முழுமதியாய் ஒளி வீச, வீரேந்திரனும் அவள் அழகிற்கு சற்றும் குறைவில்லாத கம்பீரத்தோடு வேட்டி சட்டையில் மிடுக்காகவும் நிமிர்வாகவும் அமர்ந்திருந்தான். பார்ப்பவர் வியக்கும்படியாய் அவர்கள் முகப்பொருத்தம் அம்சமாய் அமைந்திருந்த போதும் எல்லோருமே அந்த நொடி குறைபட்டு விவாதித்துக் கொண்டிருந்தது அவர்கள் இருவரின் மனப்பொருத்தத்தைக் குறித்துத்தான். எப்போதும் மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகனும் மணமகளும் பார்த்து கொள்ளாமல் அமர்ந்திருப்பர். அது நாணத்தின் காரணமாகவோ அல்லது தயக்கமாகவோ தவிப்பாகவோ எதிர்கால வாழ்க்கைக் குறித்த கவலையினாலும் கூட அவ்விதமாய் அமர்ந்திருப்பது வழக்கம்தான். ஆனால் இவர்கள் இருவரும் முற்றிலும் நேருக்கு மாறாய் இருந்தனர். அத்தனை பேர் முன்னிலையிலும் குழந்தைத்தனமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த மணமேடையில் கிட்டதட்ட பெரிய களேபரத்தையே நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பலருக்கும் இந்தத் திருமணம் நடக்குமோ நடக்காதா என்ற பெரும் சந்தேகமே உண்டாகிவிட்டது. ஆனால் இதற்தெல்லாம் ஆரம்ப புள்ளி தேவிதான். மணமேடை ஏறி வந்த செந்தமிழ் உலகின் அத்தனை எரிச்சலையும் கோபத்தையும் மனதில் சுமந்தபடிதான் அவனருகில் வந்து அமர்ந்தாள். அது அவள் முகத்திலும் அப்பட்டமாக பிரதிபலிக்க, அதனை கவனித்தவனுக்கும் உள்ளுர கோபம் பொங்கியது. இருப்பினும் இன்னும் சில மணித்துளிகளில் அவள் தனக்கே உரியவளாகிவிடப் போகிறாளென்ற எண்ணத்தின்பால் பொறுமையாகவே அமர்ந்திருந்தான். ஆனால் இதற்கிடையில் எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பது போல தேவி தமிழிடம், "மாமா... பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா ஹேண்ட்ஸமா இருக்காரு க்கா... ரியிலி யூ ஆர் லக்கி" என்றவள் சொன்னதுதான் தாமதம். தமிழுக்குள்ளிருந்த கோபமும் வெறுப்பும் கொழுந்துவிட்டது. "உனக்கென்ன கண்ணுக் கெட்டுப் போச்சா... பார்க்க இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஒரு மூஞ்சி... இதுக்கு பேர் ஸ்மார்ட்டா... இதுல நான் லக்கி வேற... ஓடிப் போயிடு" என்றவள் எரிச்சலாக தங்கையிடம் கூற, அது அவன் காதில் தெள்ளத் தெளிவாக விழுந்துவிட்டன. இதற்கு மேலும் அவன் பொறுமையோடும் அமைதியோடும் இருக்க முடியுமா? "என்னடி சொன்ன?" என்று மிரட்டலாய் கேட்டு அவள் புறம் திரும்ப, அவள் கொஞ்சமும் அசராமல், "ம்ம்ம்... இஞ்சி தின்ன குரங்குன்னு சொன்னேன்" என்று அவள் முகத்திலறைந்தது போல பதிலளித்தாள். அவன் உடனே, "குரங்கு சேட்டை எல்லாம் பண்றது நீ... நீ என்னை குரங்குங்கிறியா?! நீதான்டி குரங்கு" என்றான். "வேண்டாம் ஏசிபி சார்" என்று அவள் கடுகடுக்க, அவளின் ஏசிபி என்ற அழைப்பு அவன் சீற்றத்தை இன்னும் அதிகப்படுத்தியது. "ஏசிபின்னு கூப்பிடாதன்னு உன்கிட்ட சொன்னேன் இல்ல" என்றவன் கண்டிப்புடன் கூற, "நான் அப்படிதான் கூப்பிடுவேன்" என்றவள் அழுத்தமாக உரைத்தாள். இதற்கிடையில் தேவி பின்னோடிருந்து, "சாரி மாமா... இதுக்கெல்லாம் நான்தான் காரணம்... இத்தோட விட்டிடுங்களேன்" என்றாள். "சாரின்ற வார்த்தைக்கு எல்லாம் சாருக்கு அர்த்தமே தெரியாது தேவி" என்று தமிழ் குத்தலாக அவனைப் பார்த்து கூற, "தப்பெல்லாம் செஞ்சிட்டு சாரி கேட்டா மன்னிச்சுடணுமா... தப்போட அளவுன்னு ஒன்னு இருக்கு தமிழ்" என்று அவனோ அவள் வீசிய கத்தியை அவள் புறமே திருப்பிவிட்டான். அப்போது மந்திரம் சொல்லும் ஐயர் சந்திராவிடம், "எதையாச்சும் சொல்லி அவங்களை சமாதானப்படுத்துங்கோ... என் இத்தனை வருஷ அனுபவத்தில பொண்ணும் புள்ளையும் மேடையில இப்படி சண்டைப் போட்டுப் பார்த்ததே இல்லை... நேக்கு மந்திரமெல்லாம் மறந்திடும் போல இருக்கும்மா" என்றார். "என்ன வீர் சின்ன பிள்ளை மாதிரி... அமைதியா இருடா" என்று சந்திரா மகனிடம் சொல்ல அவன் அவள் புறம் கைக் காண்பித்து, "நீங்க முதல்ல அவளை வாயை மூடச் சொல்லுங்க" என்றான். "நான் எதையும் ஆரம்பிக்கல... அவர்தான் என்னை சீண்டிறாரு" என்றாள் அவள் பதிலுக்கு. "யாரு ஆரம்பிச்சா... நீதான்டி என்னைப் பார்த்து இஞ்சி தின்ன குரங்குன்னு சொன்ன" என்று மீண்டும் அவர்கள் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க, சந்திராவிற்கு என்ன சொல்லி இவர்களை அமைதிப்படுத்துவது என்றே விளங்கவில்லை. ஆயிரம் பேர் முன்னிலையிலேயே இப்படி யோசிக்காமல் சண்டையிடும் இவர்கள் தனி அறையில் எப்படி இருப்பார்கள் என்று யோசித்தால் அவருக்குத் தலையே சுழன்றது. ஐயர் பொறுமையிழந்தவராய், "சத்த நேரம் இரண்டு பேரும் சும்மா இருக்கேளா... இந்தக் கல்யாணத்தை நடத்திறதா வேணாமான்னு எனக்கு டௌட்டே வந்திருச்சு" என, "அந்த டௌட்டே வேணாம் ஐயரே... இந்தக் கல்யாணம் நடந்தே தீரணும்... அப்பதான் நான் இவளை... நல்லா வைச்சு செய்ய முடியும்" என்றான் வீரேந்திரன். அவளும் பதிலுக்கு, “யாரை யார் வைச்சு செய்றான்னு பார்க்கலாம் ஏசிபி சார்" என்றாள். ஐயருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் அனைத்து சடங்குகளையும் சந்தேகத்துடனேயே நடத்தினார். மறுபுறம் திருமணத்தைப் பார்க்க வந்த உறவினர் கூட்டமோ மணமக்களின் சண்டையைக் குறித்து தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தனர். விஜயாவிற்கு அந்தக் காட்சியைப் பார்த்து உச்சிக் குளிர்ந்து போனது. ரவி சொன்னவாறே நடக்குமென நம்பிக்கையும் உண்டானது. இதற்கிடையில் வீரேந்திரனும் தமிழும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து துளி கூட மாறுபடவில்லை. தேவி சந்திரா விக்ரமவர்மன் என யாருடைய அறிவுரைகளுக்கும் அவர்கள் செவி சாய்க்கவும் இல்லை. ஏனெனில் அதுதான் அவர்கள் இருவரின் இயல்பே. இருவருமே மனப்பொருத்தம் இல்லாதவர்கள் என அங்கே இருப்பவர்கள் அனைவரும் எண்ணிக் கொண்டிருக்க, உண்மை அதுவல்ல. அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான குணமும் மனமும் கொண்டவர்கள். ஒரே மாதிரியான சிந்தனையும் செயலும் கொண்டவர்கள். மற்றவர்களுக்காக தங்கள் இயல்பை ஒரு நாளும் மாற்றிக் கொள்ளாதவர்கள் இருவருக்கும் பணமும் செல்வாக்கும் பெருமளவில் இருந்தாலும் தங்களுக்கான சுயஅங்கிகாரத்தை விருப்பமான துறையில் போராடி நிலைநிறுத்திக் கொண்டவர்கள். பிடிவாதத்திலும் கோபத்திலும் தங்களுக்கான வரையறையை வகுத்துக் கொண்டு அதிலிருந்து எந்நிலையிலும் எதற்காகவும் இறங்கி வர முற்படாதவர்கள். அதே நேரத்தில் தவறென்று புரிந்து கொண்டால் அதை உடனே திருத்திக் கொள்ளும் துணிவும் கொண்டவர்கள். தங்கள் சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர்கள். எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அதில் எத்தகைய இடையூறு வந்தாலும் பின்வாங்காமல் செய்து முடிக்கும் இயல்பு கொண்டவர்கள். இவர்கள் இருவரும் முரண்பாடுகளே இல்லாமல் முரண்பட்டு நிற்பவர்கள். காந்தத்தின் ஒரே மாதிரியான துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பது கோட்பாடு. இங்கேயும் அத்தகைய கோட்பாட்டிற்கு ஏற்றவாறே இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் மனதளவில் வெகுதூரம் விலகி நின்றனர். எப்படியோ திருமண சடங்குகளை எல்லாம் இருவரும் சண்டையிட்டபடியே செய்து முடிக்க இறுதியாக திருமண வைபவத்தின் முக்கிய சடங்கான மாங்கல்யத்தைக் கட்டும் நேரம் வந்தது. வீரேந்திரன் தாலியைக் கட்ட முனையும் போது, 'என் லைஃபே முடிஞ்சு போச்சு' என்று அவள் உள்ளம் புழுங்கிய அதேநேரம், 'நீங்க கட்டப் போற தாலி என் தவறையே ஞாபகபடுத்தி உறுத்திக்கிட்டிருக்கும்' என்று அவள் சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்து அவனை வேதனைப்படுத்தியது. எனினும் அவன் பிராயத்தனப்பட்டு அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவள் கழுத்தில் மாங்கல்யத்தைப் பூட்டினான். அவள் மீதான தன் வெறுப்பு கோபம் மற்றும் காதலையும் திணிக்க உதவப் போவது அந்த மாங்கல்யம்தான் என்ற எண்ணத்தோடு முடிச்சுகளை ரொம்பவும் இறுக்கமாய் அவன் போட்டபடி அவளைப் பார்க்க, அவர்களின் உதடுகள் மௌனமாகி விழிகள் ஒரு சேர மோதிக் கொண்டன. அவர்களுக்கு முன்பு அக்னி குண்டத்தில் எரிந்திருந்த தீயை விடவும் அவர்களின் பார்வைகள் கக்கிய கனல்தான் அதிக உஷ்ணத்தை உண்டாக்கியது என்று சொல்ல வேண்டும். இணையாத இணைக்கோடுகளாய் அவர்கள் இருவரும் இனி சேர்ந்தேதான் பயணித்தாக வேண்டும் என விதியே கட்டாயப்படுத்தி எதிரெதிராய் நின்றவர்களை இந்தத் திருமண பந்தத்தில் இணைத்து வைத்துவிட்டது. இனி அவர்களாகவே மனம் ஒத்து இணைந்தாலே அந்தப் பந்தத்தைக் காத்துக் கொள்ள முடியும். திருமண விழா முடிந்தாலும் முடிந்தது, ஒருவர் விடாமல் அவரவர்களின் அனுபவ பாடத்தை அறிவுரையாய் தமிழ் வீரேந்திரன் மீது சுமத்திவிட்டுச் சென்றனர். அவர்கள் பேச்சை எல்லாம் கேட்க கேட்க இருவருக்கும் எதற்காக சண்டையிட்டுத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. இதில் ஐயரும் புறப்படும் போது அவருடைய பங்குக்கு, "எல்லாரும் கல்யாணத்துக்கு அப்புறம்தான் சண்டைப் போட்டுப்பா... ஆனால் இப்பவே இரண்டு பேரும் இப்படி சண்டைப் போட்டுக்கிறேளே... என்னவோ? எப்படியோ? சண்டையிட்டுண்டாவது சேர்ந்தே இருங்கோ" என்று ஆசிர்வதிக்க, அந்த நொடி இருவருக்குமே தங்கள் சிறுபிள்ளைத்தனமான செயலை எண்ணிச் சிரிப்புதான் வந்தது. திருமண விழா அழகாகவும் பிரமாண்டமாகவும் மணமக்களின் சண்டையால் கொஞ்சம் அடாவடியாகவும் முடிந்துவிட்டிருந்தது. மெல்ல மெல்ல அந்த இடத்தின் ஜனசஞ்சாரம் குறையத் தொடங்கியது. திருமணம் முடிந்த கையோடு வீரேந்திரன் சென்னைக்குப் புறப்பட்டே தீர வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டான். சந்திராவும் மகேந்திரனும் என்ன சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. அவனின் பிடிவாத்தை மாற்றுவது கஷ்டமென அவர்கள் இருவருக்கும் நன்றாக தெரியும். ஆதலால் உடனடியாக ஊருக்குப் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை செய்தனர். அதேநேரம் எல்லா வேலைகளையும் விட்டு எல்லோரும் புறப்பட முடியாது காரணத்தால் சந்திரா மற்றும் தேவி, விஜயா, ரவியும் மணமக்களை அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்படுவதென்றும், விக்ரமவர்மனும் மகேந்திரபூபதியும் அரண்மனையிலேயே தங்கி வந்த உறவினர்களை எல்லாம் நல்லபடியாக கவனித்து அனுப்பிவைத்துவிட்டு வருவதென முடிவெடுத்தனர். ஆனால் அதற்குள் வேறொரு பிரச்சனை தலையெடுத்தது. தமிழுக்கு அரண்மனையில் இருந்து புறப்படுவதற்கு விருப்பமேயில்லை. அன்று கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு வீரேந்திரனால் வீணானதை எண்ணி இன்னும் அவளுக்குக் கோபம் கனனென்று கொண்டுதான் இருந்தது. இதையெல்லாம் விடப் பெரிய கவலையாய் அவனுடன்தான் இனி தன் வாழ்க்கை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. போதாக்குறைக்கு அவனுக்கு வேலை இருப்பதால் தானும் உடனே புறப்பட வேண்டுமா என்ற அவளின் ஈகோ வேறு எம்பி குதிக்க, தான் இன்னும் இரண்டு நாள் அரண்மனையில் தங்கிவிட்டுதான் வருவேன் என அவனுக்கு நேரெதிராக நின்று முரண்டுப் பிடித்தாள். இப்படி இவர்கள் முற்றிலும் எதிர் எதிர் அணியில் நின்று அவரவர்கள் விருப்பத்தைச் செய்வேன் என அடம் பிடித்திருக்க, அவர்கள் குடும்பத்தினர் பெரும் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டிருந்தனர். இருவரில் ஒருவராவது விட்டுக் கொடுத்து போகிறவர்களாய் இருந்தால் பரவாயில்லை. ஆனால் இருவருமே தங்கள் விருப்பத்திற்கு மட்டுமே முதன்மை முக்கியத்துவம் தருபவர்களாய் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அதிலும் திருமணம் முடிந்த கையோடு இருவரும் வெவ்வேறு திசையில் இருப்பதில் சந்திராவிற்கு உடன்பாடில்லை. ஆதலால் சந்திரா மகனிடம், "தமிழ் உன்னோட வர சம்மதிச்சா கிளம்பிப் போலாம்... இல்லன்னா அவ சொன்னது போல இங்கயே இரண்டு நாள் இருந்துட்டுப் போலாம்... இதனால் உனக்கு என்ன வேலை கெட்டுப் போனாலும் பரவாயில்லை... ஏன் உன் வேலையே போனாலும் பரவாயில்ல?" என்றார் வீரேந்திரன் அதிர்ந்து நின்றான். அவனைப் பற்றி நன்றாக தெரிந்த அவன் அம்மாவே அப்படி சொன்னதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதற்கு எல்லாம் அவள்தான் காரணம். அவளின் வறட்டுப் பிடிவாதமும் திமிரும்தான் காரணம் என உள்ளுர கொந்தளித்தவன், இப்போதைக்கு அமைதியாய் பேசி அவளைப் புறப்பட சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என அவள் அறைக்குச் சென்றான். அப்போது தேவி தன் அக்காவிடம் சமாதானமாக பேசி சம்மதிக்க வைக்க முயன்றாள். ஆனால் தமிழ் அவளின் முடிவிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வர தயாராக இல்லை. தேவி மனவருத்தத்தோடு அறை வாசலுக்கு வர வீரேந்திரனுக்கு நிலைமை ஓரளவு புரிந்தது. அவன் அவளிடம் பேசுவதற்கு முன்பாக, 'வீரியம் முக்கியமில்ல வீர்... காரியம்தான் முக்கியம்' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு நுழைந்தான். ஆனால் அவளோ அவனைப் பார்த்த மறுகணமே முகத்தைத் திருப்பிக் கொண்டு, “நீங்க என்ன சொன்னாலும் நான் இப்போதைக்கு இங்கிருந்து கிளம்புறதா இல்ல… வேணா நீங்க கிளம்புங்க” என்றாள். அவளின் நிராகரிப்பு அவன் பொறுமையை சிதில் சிதிலாக நொறுக்கிவிட்டது. "என்னடி நினைச்சிட்டிருக்க உன் மனசில?" என்று அவன் குரலை உயர்த்திவிட்டான். “சும்மா இந்த அதிகாரம் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்று அவளும் அவனுக்கு சரிக்கு சரியாய் எழுந்து நின்று எகிற அவனுக்கு அப்போதுதான் தான் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம் என்று உரைத்தது. 'பொறுமையா இரு வீர்' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், "நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோ தமிழ்... கமிஷ்னர் ஆஃபிஸ்ல இருந்து கால்... ஒரு முக்கியமான கேஸை டீல் பண்ண வேண்டியிருக்கு... அது நான் போனாதான் பண்ண முடியும்... ஸோ வீ கான்ட் ஸ்டே... இப்பவே கிளம்பினாதான் நாளைக்கு போய் சார்ஜ் எடுத்துக்க முடியும்" என்று அவளுக்கு தன் நிலைமையைப் புரிய வைத்துவிட எத்தனித்தான். "ஓ... அப்போ ஏன் வெயிட் பண்றீங்க?! உடனே கிளம்புங்க ஏசிபி சார்" என்றவள் அசட்டையாகச் சொல்ல, "நான் கிளம்பனும்னா நீயும் என் கூட வந்தாகணும்னு அம்மா சொல்லிட்டாங்க" என்றவன் அதே நிதானத்துடன் கூறினான். ஆனால் அவன் சொல்வதை அவள் காதிலே வாங்கவில்லை. "சாரி... நான் வரல... எனக்கு இங்க இரண்டு நாள் இருந்துட்டு வரணும் போல இருக்கு" என்றாள். அவன் அந்த நொடியும் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "இரண்டு நாள் என்னடி.. அப்புறமா பத்து நாள் கூட இருந்துக்கோ... பட் இப்ப முரண்டு பிடிக்காம கிளம்பு" என்றான். "முடியாது... என்னைக் கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ்... நான் வரமாட்டேன்" என்றவள் பதிலுரைக்க, அவன் கோபம் எல்லை மீறியது. இருப்பினும் கடைசி முயற்சியாகப் பேசிப் பார்ப்போம் என, "நான் சொல்றதை கேளு" என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவள் இடையில் நிறுத்தி, "சாரி... நீங்க சொல்றது எதையும் கேட்க விருப்பப்படல... ஸோ ப்ளீஸ்" என்று சொல்லி வாசல் புறம் கைக் காண்பித்து அவனை வெளியேறச் சொன்னாள். அவளைக் கோபமாய் முறைத்திவிட்டு அவன் அறையின் வாயிற்கதவருகே செல்லவும் அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். ஆனால் அவள் எதிர்பாரா வண்ணம் அறைக் கதவைத் தாளிட்டுவிட்டு உள்ளே வரவும் அவள் அதிர்ச்சியடைந்தாள். "பொறுமையா சொன்ன உனக்கு புரியாதில்ல" என்றபடி அவள் முன்னே வந்து நின்றவன் அவள் கரத்தை வலுக்கட்டாயமாய் அழுந்தப் பிடித்து படுக்கையில் தள்ளினான். அவளின் இருகரமும் இப்போது அவனுடைய பிடியில் சிக்கிக் கொண்டிருக்க, அவள் எழுந்திருக்க முடியாத நிலையில் கிடந்தாள். அவன் கரத்திலிருந்து தன் கரங்களை விடுவிக்க போராடியபடி, "என்ன பண்றீங்க?" என்றவள் கேட்டுப் படபடத்தாள். “நீதானடி இங்கேயே இருக்கலாம்னு சொன்ன” என்றவன் பேச்சும் பார்வையும் முற்றிலும் மாறியிருந்தது. அவளைக் கலவரப்படுத்தியது. "இது கொஞ்சங்கூட நியாயமே இல்ல... உங்க விருப்பத்துக்கெல்லாம் நானும் ஆடணுமா என்ன?" என்றவள் இயலாமையுடன் கேட்க, "நியாயம் அநியாயம் எல்லாம் அப்புறம்... என் வேலைதான் எனக்கு முதல்ல... ஸோ நீ இப்ப ஒழுங்கா என் கூட கிளம்பன்னா சரி… இல்லைனா" என்றவன் நிறுத்தி அவளைப் பார்த்து வஞ்சமாய் புன்னகைத்தான். "இல்லைனா… எ… என்ன பண்ணுவீங்க" என்றவளுக்கு படபடப்பில் குரல் தடுமாற அவன் அவளை வன்மமாய் நோக்கினான். அந்த நொடி அவனை வீழ்த்தக் காத்திருக்கும் அவளின் கூரிய விழிகளிடமிருந்து தப்பித்து தன் விழிகளைக் கீழ் இறக்கினான். இரக்கமில்லாமல் தன்னை வார்த்தைகளால் வறுத்து எடுப்பது அந்த மென்மையான இதழ்கள்தாமே என எண்ணியவன் கொஞ்சம் அதனைக் கடித்து காயப்படுத்தினால் என்ன என்று விபரீதமாய் யோசித்தான். அதனைப் புரிந்து கொண்டதோ அந்த இதழ்கள், "என்னை விடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சலாய் கேட்க, அவன் போனா போகிறதென அதனையும் மன்னித்துவிட்டு அவளின் சங்கு கழுத்தைப் பார்த்து சலனம் கொள்ள, அதற்கும் கீழாய் இறங்கப் பார்த்த அவன் விழிகளைக் கண்டு அதிர்ந்தவள் அதற்கு மேல் தாங்க முடியாமல், "ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்... நான் வர்றேன்.... என்னை விடுங்க" என்று தன் குரலை தாழ்த்திக் கெஞ்சினாள். அந்தக் கணமே அவள் கரத்தை விடுவித்துவிட்டு நிமிர்ந்து கொண்டவன் அவளைக் கர்வமாய் பார்த்து, "நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல தமிழச்சி... ரொம்ப பேட் பாய்னு... நீ ஏன் கேட்காம இப்படி என்னை சீண்டிப் பார்க்கிற... பெட்டர் இப்ப நான் எப்படின்னு புரிஞ்சுட்டிருப்பனு நினைக்கிறேன்... உன்னோட இந்தப் பிடிவாதத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வைச்சிட்டு கிளம்பிற வழியைப் பாரு... உனக்கு ரொம்ப நேரம் இல்ல... ஜஸ்ட் தர்ட்டி மினிட்ஸ்... காட் இட்" என்று அதிகாரமாய் சொல்லி அவளின் உணர்வுகளைக் காயப்படுத்திவிட்டு கவனியாமல் வெளியேறினான். கடிவாளமில்லாத குதிரை போல கட்டுக்கடங்காமல் போன அவனின் பார்வையைப் பற்றி எண்ணும் போதே அவளுக்கு உள்ளுர குளிர் பரப்பியது. நடுநடுங்கி நின்றாள். அவன் சென்றுவிட்ட பிறகும் அவன் பார்வையின் தாக்கமும் அவன் தன் பலத்தை பிரயோகித்து அழுத்தியிருந்த அவள் கரத்தில் உண்டான வலியும் அவளை வேதனைபடுத்தியிருக்க, ஏன் அவனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என சிந்தித்து அவளின் இயலாமையின் மீது அவளே வெறுப்பு கொண்டாள். அவனுக்கு தன் உணர்வுகள் மீது மதிப்பில்லை என்ற எண்ணம் அவன் மீதான வெறுப்பையும் கோபத்தையும் அளவில்லாமல் வளரச் செய்து கொண்டிருந்தது. வீரேந்திரனுக்கு தமிழின் மீது காதலும் விருப்பமும் இருந்தாலும் ஒருபக்கம் அவளின் பிடிவாதமும் இன்னொரு பக்கம் அவனோடே ஒட்டியிருந்த உடன் பிறப்புகளான கோபமும் தலைக்கணமும் அவளிடம் அவனை ரொம்பவும் இறங்கிப் போகவிடாமல் பார்த்துக் கொண்டது. அதற்கும் மேலாக அவன் அதிகமாய் நேசிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதும் அவனின் போலீஸ் வேலையைத்தான். அதற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க அவன் தயாராக இருந்தான். ஆனால் வீரேந்திரனோடு இனி விதி விளையாடப் போகும் விளையாட்டில், அவன் விட்டுக் கொடுக்க நேரிடப் போவது அவன் துணைவியாய் இருந்தால் என்ன செய்வான்?

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா