மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 20Post ReplyPost Reply: Monisha's VET - 20

Quote from monisha on November 18, 2021, 9:28 PM

20
வீரேந்திரனின் கார் தமிழின் வீட்டு வாசலை அடைந்திருந்தது. காரிலிருந்து இறங்கியவள் ஏன் இவன் தன் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் எனப் புரியாமல் நிற்க, அவனோ வேகமாய் இறங்கி முன்னே நடந்தான். "ஏசிபி சார்!" என்று அழைத்தவள் அவன் திரும்பவும், "உங்க மேல பழி போட்டவன் யாருன்னு காண்பிக்கிறேன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்துட்டு... இப்போ இங்க என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?!" என்று வினவினாள். "ஏன் வாசலிலேயே நின்னு கேள்விக் கேட்டுட்டிருக்க? உள்ளே வந்தா தானா தெரிய போகுது" என்றான் அவன். "எனக்குப் புரியல… இங்கே என்ன தெரிய போகுது?” என்றவள் குழப்பத்துடன் வினவி வாசலிலேயே நிற்க, "எல்லோரும் அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்களான்னு ஏங்குவாங்க... நீ என்னடான்னா இங்கே ஏன் வந்திருக்கோம்னு கேட்கிற... ஏன்?! நான் என் மாமியார் வீட்டுக்கு வரக் கூடாதா?" என்று நக்கல் பார்வையுடன் கேட்டவன், அவளை உள்ளே வரச் சொல்லிக் கையசைத்து விட்டு முன்னே நடந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. யோசனையோடு அவனைப் பின்தொடர அவனோ, 'வாடி.. என் தமிழச்சி! நேற்று நீ எனக்குக் கொடுத்தியே ஷாக்... இப்ப நான் உனக்குக் கொடுக்கிறேன்டி ஷாக்' என்று மனதில் எண்ணிக் கொண்டபடி யாருமின்றி தனிமையில் வெறிச்சோடியிருந்தது அந்த முகப்பறைக்குள் நுழைந்தான். தமிழ் ஆர்வம் மேலிட, “தேவி” என்றழைக்க, அக்காவின் குரல் கேட்ட மறுகணமே அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள் தேவி. “உனக்கு நூறு வயசு க்கா... நான் இப்பதான் உன்னைப் பத்தி நினைச்சிட்டே இருந்தேன்” என்று சந்தோஷம் பொங்க தமக்கையைக் கட்டிக் கொண்டவள் வீரேந்திரனிடம், “தீடீர்னு அக்காவைக் கூட்டிட்டு வந்து நின்னு இப்படி சர்ப்ரைஸ் கொடுத்திட்டீங்க ... ரொம்ப தேங்க்ஸ்... மாமா” என்று சந்தோஷம் பொங்க சொன்னாள். வீரேந்திரன் விழிகளோ அந்த வீட்டை மொத்தமாய் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தன. விஜயா ஆடி அசைந்து வெளியே வந்து அவர்கள் நின்றிருப்பதைக் கவனித்தும் கவனியாதது போல அலட்சிய பார்வையை வீச, தமிழுக்கு அவரின் செய்கை சங்கடத்தையும் வேதனையையும் தோற்றுவித்தது. திருமணமாகி முதல்முறை தாய் வீட்டிற்கு வருபவளுக்கு இதென்ன இப்படி ஒரு வரவேற்பு என்று வீரேந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தேவி அவர்களிடம், "நான் பாருங்க சந்தோஷத்தில உங்களுக்கு எதுவும் சாப்பிட கொடுக்காம பேசிட்டிருக்கேன்... நீங்க இரண்டு பேரும் உட்காருங்க... நான் போய் எடுத்துட்டு வர்றேன்" என்றவள் உள்ளே செல்ல எத்தனிக்க, வீரேந்திரன் அவளை நிறுத்தி, "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... உங்க அண்ணன் ரவி வீட்டிலதானே இருக்கான்... அவனைக் கூப்பிடு... நான் அவன்கிட்ட பேசணும்" என்றான் இறுக்கமான பார்வையோடு! தமிழும் தேவியும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொள்ள, தேவி தன் தமையனை அழைக்க உள்ளே சென்றாள். "எதுக்கு ரவியைக் கூப்பிடுறீங்க... அவன்கிட்ட என்ன பேசணும்?" "நீ இப்போ ஏன் பதட்டப்படற? நான் என் மச்சான் கூட பேசக் கூடாதா என்ன?" என்று அவன் கிண்டலாக கேட்க, அவள் புரியாமல் திகைத்தாள். அவன் பார்வையும் பேச்சும் அவளுக்குப் பிடிபடவேயில்லை. ரவி ஏதேனும் தவறு செய்துவிட்டானா என யோசித்தவளுக்கு, அப்போதும் அவன்தான் வீரேந்திரனின் மீதான தவறான செய்தியை ஜோடித்திருப்பான் என்று எண்ணத் தோன்றவில்லை. தேவியைக் கடிந்து கொண்டபடி அறையை விட்டு வெளியே வந்த ரவி அவர்கள் இருவரையும் சலிப்புடன் பார்த்து உச்சு கொட்டினான். வீரேந்திரனின் பார்வையில் கனலெனக் கோபம் தெறிக்க, "என்னாச்சு? ரவி ஏதாச்சும் தப்பு செஞ்சிட்டானா?" என்று அவள் பதட்டத்துடன் கேட்டாள். "ஏதாச்சும் தப்பு செஞ்சுட்டானாவா?!” என்று சீற்றமாக அவள் புறம் திரும்பியவன், “நீ என்னை அசிங்கப்படுத்தி பக்கம் பக்கமா எழுதினியே... அதுக்கெல்லாம் அவன்தான்டி மூலக்காரணம்" என்ற உண்மையைப் போட்டு உடைக்க, அவள் தாங்க முடியாத அதிர்ச்சியோடு சிலையாய் சமைந்தாள். அவளை மேலும் கீழுமாக சந்தேகமாகப் பார்த்தவன், "சத்தியமா சொல்லு... என் பேரைக் கெடுத்ததுல அக்காவும் தம்பியும் கூட்டுதானே?!" என்று கேட்டு வைக்க, அந்தக் கணமே அவள் உதிரமெல்லாம் தலை முதல் கால் வரை வேகமாய் பாய்ந்தது. ஏற்கனவே சுமத்தப்பட்ட பழியே மாறாத கரையாய் அவள் மீது படிந்து கிடக்க, இப்போது மீண்டும் அதே போல பழியைத் தாங்கிக் கொள்வதா? அதுவும் அவன் முன்னிலையில் மீண்டும் தான் குற்றவாளியாய் நிற்பதா? அவன் சாதாரணமாகவே அவள் தன்மானத்தைச் சீண்டுபவன். இப்போது அதற்கான வாய்ப்பு மீண்டும் அவனுக்கு கிட்டப் போகிறது. இவ்வாறாகச் சிந்தித்து கொண்டிருந்தவளின் விழிகள் அனிச்சையாய் நீர் சுரக்க, அதனைப் பார்த்து வீரேந்திரனின் மனதில் பொங்கிய கோபம் தளர்ந்துவிட்டது. ரவியைப் பார்த்தும் பேசாமல் அவன் அமைதி காத்தான். ஆனால் தமிழால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை. 'எல்லாமே இவனாலதான்' என்று எண்ணிக் கொண்டவள் ஆக்ரோஷமாய் அவன் சட்டையைப் பிடித்துக் உலுக்கியபடி, "ஏன்டா இப்படி பண்ண... நான் என்னடா பாவம் பண்ணேன் உனக்கு... என் வாழ்க்கை கனவு எல்லாத்தையும் இப்படி சுக்குநூறா உடைச்சிட்டியே" என்று கொந்தளித்தாள். 'என் வாழ்க்கை கனவு எல்லாத்தையும் சுக்கு நூறா உடைச்சிட்டியே டா' என்றவள் சொன்னதைக் கேட்ட நொடி வீரேந்திரனின் திடமான மனமும் உள்ளூர உடைந்து போனதென்றே சொல்ல வேண்டும். அந்த வார்த்தை அவனைக் காயப்படுத்தவென்றே குறி வைத்து அவள் சொல்லியதோ எனவும் தோன்றியது. அவனின் நெஞ்சத்திற்கு எதையும் தாங்கவல்ல சக்தி இருக்கிறதென்பது உண்மைதான். அதற்காக அவள் இப்படி வார்த்தைகளால் அதனைத் துளைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? என மனவேதனையோடு அவன் ஊமையாய் நிற்க, ரவி விஷயம் இன்னதென்று யூகிக்க முடியாமல் போனாலும் தமக்கையின் செயலால் ஆத்திரமடைந்தவன், "விடுடி" என்று சொல்லியபடி அவள் கரத்திலிருந்த சட்டையை விடுவித்து உக்கிரத்தோடு தள்ளிவிட்டான். அவள் பின்னோடு விழப்பார்த்தாள். அத்தனை நேரம் அமைதியாய் நின்ற வீரேந்திரன் தமிழ் விழுவதை பார்த்த கணம் தன் தோளோடு அவளை அணைத்தபடி தாங்கிக் கொண்டான். அதுமட்டுமின்றி ரவியின் கன்னத்திலும் ஓங்கி அறைந்துவிட, அவன் மின்னல் தாக்கியது போலச் சுருண்டு போய் தரையில் விழுந்தான். விஜயாவும் தேவியும் அதிர்ந்து விட்டனர். ரவி விழுந்தமேனிக்கே, "எதுக்கு இப்போ என்னை அடிச்சீங்க?!" என்று கேட்கவும், “முதல்ல நீ எதுக்கடா அவளைத் தள்ளிவிட்ட... அவ மேல உனக்கு அக்காங்கிற மரியாதை இல்லாம இருக்கலாம்... ஆனா அவ இப்போ என் மனைவி... அது ஞாபகம் இருக்கட்டும்" என்று அழுத்தம் திருத்தமாய் ஆணி அடித்தது போல் அவன் சொன்ன வார்த்தை யாருக்கு உரைத்ததோ இல்லையோ? வீரேந்திரனின் கரத்தின் அணைப்பில் அவனின் உறுதியான தோள்களில் சாய்ந்தபடி நின்றிருந்தவளுக்கு நன்றாகவே உரைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவளுக்கும் அவனின் தோள்களை விட்டுவிலகிட மனதில்லாமல் நிற்க, அப்போது அவனும் அவள் பிடியை விட மறந்தானோ? இல்லை ஒரு துணைவனாய் அவளுக்கு என்றும் துணையாய் இருப்பேன் என்பதை அழுத்தமாய் புரிய வைக்க அவன் அணைத்திருந்தானோ? அந்தக் கணம் மொத்தமாய் அவள் அவன் வசம் ஈர்க்கப்பட்டாள். அப்போது அவள் உணர்ந்து கொண்டாள். அவன் அவளை எதச்சையாக தாங்கிக் கொள்ளவில்லை. அதில் தன்னவள் மீது அவன் கொண்ட அக்கறையும் பொறுப்பும் வெளிப்பட்டது. ரவியின் கன்னத்தில் விழுந்த அறை வெறும் கோபம் அல்ல. அவளின் மீது அவன் கொண்ட ஆழமான காதல். வாழும் காலம் முழுக்கவும் சாய்ந்து கொள்ள அத்தகைய உறுதியான தோளும், அவளை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் தாங்கிக் கொள்ளும் அத்தகைய இரும்புக் கரமும் வேண்டுமென்ற அவளின் நெடு நாளைய கனவு இன்று பலித்துப் போனதென அவள் எண்ணிக் கொண்ட நொடி தன் கணவனின் இறுக்கமான முகத்தில் உள்ள கூர்மையான கண்களும், நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் வளர்ந்திருந்த மீசையும் அவள் அறையில் எழுதியிருந்த பாரதியின் ஓவியத்தை கண் முன்னே நிறுத்தியது. ரவி சுதாரித்து எழுந்து கொள்ள விஜயா கோபமாக தமிழைப் பார்த்து, "உன் புருஷனைக் கூட்டிட்டு வந்து என் பிள்ளையை அடிக்க வைக்கிறியா... நன்றி கெட்டவளே... முதல்ல அவனைக் கூட்டிட்டு வெளியே போடி?" என்று அவர் காட்டமானார். அப்போதே தன்னிலை உணர்ந்தவள் கணவனிடம் இருந்து விலகி நின்று, "என்ன பேசிறீங்க சித்தி... நாங்க இரண்டு பேரும் ஏன் வெளியே போகணும்... எனக்கும் அவருக்கும் இந்த வீட்டில எல்லா உரிமையும் இருக்கு... அப்படி பார்த்தா உங்க பிள்ளையைதான் வெளியே தள்ளணும்... மொத்தமா நம்ம குடும்ப மானத்தையே வாங்கிட்டான்"என, தமிழ் உரிமையோடு தன்னையும் இணைத்து பேசுவதை ஆச்சர்யத்தோடு வீரேந்திரன் பார்த்திருந்தான். "அப்படி என்னடி என் பையன் குடும்ப மானத்தை வாங்கிட்டான்?" என்றவர் எகிற, "ஒன்னு இரண்டு இல்ல சித்தி... நிறைய... ஆனா இப்ப அவன் செஞ்சிருக்கிறது இருக்கே" என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ரவி இடைமறித்து, "போதும் நிறுத்துடி" என்று சொன்னதுதான் தாமதம். வீரேந்திரன் அவன் சட்டை காலரைப் பற்றி, "மரியாதை தெரியாதா உனக்கு... டி போட்டுப் பேசுற... கொன்னுடுவேன் ராஸ்கல்" என்று அவனைக் கண்டிக்க, இவன் மட்டும் தன்னை ஓயாமல் 'டி' போட்டு பேசலாமோ?! என விழிகளை சுருக்கி அவனை ஒருவிதமாக பார்த்தாலும் அந்த உரிமையை தான் மட்டும்தான் எடுத்துக் கொள்வேன் என்ற அவனின் கர்வத்தை ஒரு ஓரத்தில் விரும்பவே செய்தாள். அந்த கணம் அவள் முகத்தில் மெலிதாக ஒரு புன்னகை எட்டிப் பார்த்து மறைந்தது. வீரேந்திரனோ அப்போது ரவியின் சட்டையை இன்னும் அழுத்தமாய் பற்றி, "ஒரு பொண்ணை மிரட்டி ட்ராப் பண்ணி என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்ல வைச்சிருக்க... எதுக்கடா அப்படி பண்ண?" என்று மிரட்டி கேட்க ரவிக்கு ஓரளவு விஷயம் இன்னதென்று தெளிவானது. அவனை அச்சம் பீடித்துக் கொண்டது. தான் நன்றாய் சிக்கிக் கொண்டோமே என எண்ணியவன் எப்படியாவது நிலைமையைச் சமாளிக்கத் தீவிரமாக யோசிக்கலானான். "முழிக்காதே... நீ செஞ்சது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு... குறைஞ்சது உன்னை ஐந்து வருஷமாச்சும் உள்ளே தள்ளலாம்" என்று வீரேந்திரன் சொல்ல ரவி அந்தக் கணமே தமிழைப் பார்த்து, "உங்க பொண்டாட்டி அவளைக் காப்பாற்றிக்க என்னை மாட்டிவிட பார்க்கிறா?" என்றான். "வேண்டாம் ரவி... நீ பேசிறது சரியில்லை..." என்று தமிழ் எச்சரிக்க, "பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது ரவி" என்று வீரேந்திரனும் கூறினான். ஆனால் ரவி கொஞ்சமும் அசரவில்லை. "நான் பொய் சொல்லலை... எல்லாத்துக்கும் காரணம் உங்க பொண்டாட்டிதான்... ஆனா இப்போ என் மேல பழிப் போட்டுத் தப்பிக்க பார்க்கிறா" என்றதும் தமிழ், “கொன்னுடுவேன்டா உன்னை" என்றவள் கொதிப்புடன் கத்தினாள். "நீ பொய் சொல்ற ரவி... நீதான் அந்தப் பொண்ணை மிரட்டினன்னு அந்தப் பொண்ணே என்கிட்ட சொல்லிட்டா" என்றான் வீரேந்திரன். ரவி கொஞ்சமும் பதட்டப்படாமல், "நான் மிரட்டினேனா?! அவ்வளவும் பொய்.. அந்தப் பொண்ணுகிட்ட என் பேர்ல பழி போட சொல்லி உங்க மரியாதைக்குரிய பொண்டாட்டியே சொல்லிருக்கலாம் இல்லயா?!" என, தமிழ் பொறுமையிழந்தவளாய், "நீ ரொம்ப ஓவரா பேசிட்டிருக்க ரவி... நீ செய்றதெல்லாம் செஞ்சிட்டு என் மேல இப்படி அபாண்டமா பழிப் போடாதே" என்றாள். "இப்ப ஏன் டென்ஷனாகிற... அவன் சொல்றதிலயும் பாயின்ட் இருக்கு இல்ல" என்று வீரேந்திரன் உரைக்க, அந்த வார்த்தை அவளை நெருப்பிலிட்டது போல் சுட்டது. அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவள் வெளியேற யத்தனிக்க, வீரேந்திரன் அவளைப் போகவிடாமல் கரத்தைப் பிடித்து தடுத்தான். "கையை விடுங்க... இவன் சொல்ற பொய்யெல்லாம் கேட்டுட்டு என்னால இங்க இருக்க முடியாது" "பொய்யா உண்மையாங்கிறதை நான் முடிவு பண்றேன்... நீ இப்படி டென்ஷனாகிறதைப் பார்த்தா அவன் சொல்றதிலயும் உண்மை இருக்கும்னு எனக்கு தோனுது" என்றதும் அதிர்ச்சியானவள் இனி நடப்பனவற்றை எதுவாயிருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என விரக்தியுற்று அமைதியாய் அங்கேயே நின்று கொண்டாள். "நீ சொல்றதெல்லாம் சரி… ஆனா தமிழ் ஏன் என் பேரைக் கெடுக்கணும் தேவையில்லாம" என்று வீரேந்திரன் ரவியிடம் கேள்வி எழுப்ப, “அவளை நீங்க ரொம்ப சாதாரணமா எடை போட்டுராதீங்க... எல்லாம் பிளேன்... உங்க அப்பா கடன் கொடுத்து எங்க குடும்ப அரண்மனையை வாங்கிட்டாரு... எங்க குடும்ப கௌரவமும் பாரம்பரியமும் கையைவிட்டு போகிறது உங்க பொண்டாட்டிக்குப் பிடிக்கல.... அதுக்காக உங்க குடும்ப கௌரவத்தைக் கெடுக்கணும்னு நினைச்சா... அதுக்காகதான் உங்களைப் பத்தி அவ தப்பு தப்பா எழுதினா... ஏதோ சந்தர்ப்பவசத்தில இன்னைக்கு உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு... இப்போ அரண்மனையும் மேடமுக்கு சொந்தமாயிடுச்சு... பிரச்சனையில இருந்து தப்பிக்க யாரோ ஒரு பொண்ணைப் பத்தி சொல்லி என்னை மாட்டி விட பார்க்கிறா... அப்பதானே என் பேர்ல இருக்கிற இந்த சொத்தோட பங்கையும் அவளே எடுத்துக்கலாம் பாருங்க” என்றான். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தலையே சுழன்றது. வீரேந்திரன் சிறிது நேர மௌனத்திற்கு பின், “தமிழ்தான் அப்போ இதெல்லாத்துக்கும் காரணம்னு சொல்ல வரியா?” என்று அழுத்தமாகக் கேட்கவும் ரவி தலையசைத்து ஆமோதித்தான். அந்த நொடியே வீரேந்திரன் கடுங்கோபத்துடன், “அவளோட நேர்மையையும் தைரியத்தையும் பார்த்துதான்டா நான் அவளைக் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்... நீ என்னடான்னா… அவளைப் பத்தி உன் இஷ்டத்துக்கு கதை அளந்துட்டுருக்கே... உனக்கு எவ்வளவு திமிரு” என்று தன் விரல்களை எல்லாம் மடக்கி ரவி முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட அவன் தள்ளிச் சென்று விழுந்தான். வீரேந்திரன் அதோடு நிறுத்தாமல் அவனை சரமாரியாக தாக்க துவங்கினான். தமிழுக்கோ கணவனின் வார்த்தைகள் கேட்டு மெய்சிலிர்த்தது. அவள் கால்கள் தரையில் நிற்கவில்லை. மேகங்கள் போல வானில் மிதந்து கொண்டிருந்தாள். அவன் மீதான காதலும் மரியாதையும் அவளுக்கு அபிரமிதமாய் பெருகியது. கணவன் மீதான காதல் மயக்கத்தில் நடப்பவற்றை அவள் உணராமல் நின்றிருக்க, விஜயாவோ மகனைக் காப்பாற்ற தவியாய் தவித்துக் கொண்டிருந்தார். ரவியோ வீரேந்திரனின் பிடியில் திக்குமுக்காடினான். தேவி அப்போது தன் தமக்கையின் தோள்களைப் பற்றி, "அக்கா ப்ளீஸ்... மாமாவை அடிக்க வேணான்னு சொல்லுங்க" என்று அச்சமுற, அப்போதே நிலைமையை உணர்ந்தவள் வீரேந்திரனை தடுக்க எண்ணி, "அடிக்கிறதை நிறுத்துங்க" என்று கத்த அவன் காதில் வாங்கவேயில்லை. அவள் மீண்டும் "அய்யோ... அடிக்காதீங்க... அவனுக்கு ஏதாச்சும் ஆகிடப் போகுது" என்று சொல்லவும் அவன் நிறுத்தி விட்டு அவள் முகத்தைப் பார்த்து, "இவன் எல்லாம் இல்லாம போயிட்டா நாட்டுக்கு ஒன்னும் நஷ்டமாயிடாது" என்றான். "கொஞ்சம் மனிஷத்தனத்தோட பேசுங்க" என்றவள் சொல்ல அவன் பார்வையில் கனலேறியது. "எனக்கு மனிஷத்தனம் இல்லையா?" என்றவன் ஆவேசமாகிட, "அவன் என்ன பண்ணியிருந்தாலும் நீங்க அவனை இப்படி அடிக்கிறது தப்பு" என்றவள் அழுத்தமாக உரைத்தாள். தனக்காகப் பரிந்து பேசும் தமக்கையை ரவி திகைப்பாய் பார்த்திருக்க, வீரேந்திரன் அப்போது, "அடிக்க கூடாதுன்னா அவனை உண்மையைப் பேச சொல்லு... ஏன் என் பேர்ல அப்படி ஒரு கீழ்தனமான பழியை சுமத்தினான்னு கேளு" என்றான். அவள் ரவியைப் பாராமல் தன் சித்தியை நோக்கி, "ப்ளீஸ்... அவனை உண்மையைச் சொல்ல சொல்லுங்க சித்தி... அப்புறம் அவர் கோபத்தில என்ன பண்ணுவாருன்னே தெரியாது" என்றாள். ரவி முகமெல்லாம் குருதி வழிந்திருந்தது. விஜயா கண்ணீருடன் மகனை அணுகி, “உண்மையை சொல்லிடுபா” என்றார். ரவி சிரமப்பட்டு அவர்களை எல்லாம் நிமிர்ந்து பார்த்து நடந்தவற்றை உரைத்தான். “கொஞ்ச நாளைக்கு முன்ன என் ஃப்ரண்ட்ஸ் பார்ட்டிக்குப் போயிட்டுக் குடிச்சிட்டு ரொம்ப ரேஷா டிரைவ் பண்ணிட்டு வந்தாங்க... நீங்க அவங்களோட ஸ்டேட்டஸ் பத்தி எல்லாம் கவலைப்படாம அடிச்சு உள்ளே வைச்சு அவமானப்படுத்திட்டீங்களாம்... உங்களையும் அதே போல அவமானப்படுத்தனம்னு எல்லோரும் சேர்ந்து பெட் கட்டினானுங்க" என்றதும் வீரேந்திரனின் முகத்தில் சிவப்பேற, ரவி தொடர்ந்தான். "அப்ப விசாரிச்ச போதுதான் நீங்க மகேந்திர பூபதி அங்கிள் பையன்னு தெரிய வந்தது... உங்க அப்பா எங்க அப்பா நஷ்டத்தில இருக்கும் போது உதவினாருன்னு கேள்விப்பட்டேன்" என்று சொல்லும் போதே வீரேந்திரன் இடைமறித்தான். "ஓ அதுக்கு நீ செஞ்ச நன்றி கடனா டா இது?" தமிழ் உடனே வீரேந்திரனைப் பார்த்து, "இப்ப எனக்கு புரியுது... இவன் என்ன நினைச்சிட்டு... இப்படியெல்லாம் செஞ்சான்னு... உங்களை நான் அவமானப்படுத்த என்னை பகடை காயா யூஸ் பண்ணிக்கிட்டான்... நான் போடற நியூஸ் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அவர் எங்க அப்பாவுக்கும் பிரெஷர் தருவாரு... எனக்கும் அப்பாவுக்கும் பிரச்சனை வரும்... போதாக்குறைக்கு உங்க கோபமெல்லாம் என் மேல திரும்பும்... நான் அசிங்கப்பட்டு அவமானப்படுவேன்... அதைப் பார்த்து என் அருமை தம்பி சந்தோஷப்படணும்" என்று அவள் சொல்ல, வீரேந்திரனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இது இருவருக்காகவும் பின்னப்பட்ட வலை என்பது அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. கண்ணீர் தளும்ப ரவியைப் பார்த்தவள், "அன்னைக்கு நீ என்னை நடுக்கடல்ல தள்ளிவிட்ட போது கூட ஏதோ கோபத்தில தவறி நடந்திருக்குகோம்னுதான் நினைச்சிட்டிருந்தேன் ரவி... ஆனா இப்ப தெரியுதுடா... நீ சின்ன வயசுல இருந்தே என் மேல அவ்வளவு வக்கிரத்தை வைச்சிட்டிருக்கன்னு” என்றவள் மேலும், சுவரிலிருந்த தன் தாத்தாவின் படத்தைப் பார்த்து, “என்னை நீங்க அன்னைக்கு காப்பாத்தாம இருந்திருந்தா... நான் நிம்மதியா போய் சேர்ந்திருப்பேன் இல்ல... ஏன் தாத்தா என்னை காப்பாத்துனிங்க?!” என்று வேதனையுடன் கேட்டுவிட்டு அவள் முகத்தை மூடி அழ தேவி தமக்கையை அணைத்து பிடித்து அவளை அமைதிபடுத்த முயன்றாள். வீரேந்திரனுக்கும் அந்த நொடி தமிழின் மீது இரக்கம் உண்டானது. அவன் ரவியை சீற்றத்துடன் பார்த்து, "நீ செஞ்ச வேலைக்கு உன்னை ஒரு அஞ்சு வருஷமாச்சும் உள்ளே தள்ளணும்... அப்பதான்டா என் மனசு ஆறும்" என, ரவியும் விஜயாவும் அதிர்ந்தனர். வீரேந்திரனிடம் ரவி மன்னிப்பு கோர, விஜயா கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அவற்றை எல்லாம் கேட்க விரும்பாமல் தன் கைப்பேசியை எடுத்து காதில் வைத்தபடி விறுவிறுவென அவன் வீட்டிற்கு வெளியே போய் நின்று கொண்டான். இப்போது ரவிக்கு இருக்கும் ஒரே வழி தமிழ்தான். அவளால் மட்டுமே தன்னைக் காப்பாற்ற இயலும் என வேறுவழியின்றி ரவி தமிழிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியவன் கண்ணீரோடு இறங்கிப் பேச விஜயாவுமே மகனுக்காக அவளிடம் பரிந்து பேசினார். தேவியும் தமிழின் கைகளைப் பிடித்து கொண்டு, "ப்ளீஸ்... வேண்டாம்னு மாமாகிட்ட சொல்லுக்கா" என்று இறைஞ்சுதலாகக் கேட்கவும் அவர்களுக்கு எல்லாம் எப்படிப் புரிய வைப்பது? அவன் யாருக்காகவும் எதற்காகவும் தன் பிடிவாதத்தை விட்டுத் தரமாட்டான். அதுவும் அவனைத் தாக்க எய்த அம்பான தன்னையே இந்தப் பாடுபடுத்திவிட்டான். எய்தவனே கிட்டினால் சும்மா இருப்பானா? அவனின் பிடிவாதத்தை உடைப்பதை விடவும் சிரமமான காரியம் ஒன்று இருக்க முடியுமா? அதுவும் தான் அவனிடம் நேற்று பேசிய பேச்சுக்கு, இப்போது தான் ரவிக்காகப் பரிந்து பேசினால் அவன் தன்னைக் கொன்றே விடுவான் என எண்ணியவள், தேவியின் வார்த்தைக்காகவாச்சும் அவனிடம் பேசி பார்ப்போமே என வாயிலுக்கு வெளியே வந்தாள். அவனோ மும்முரமாய் கைப்பேசியில் அளவளாவிக் கொண்டிருக்க, அவன் பின்னோடு சென்று நின்றவளைக் கவனித்தவன் தன் பேசியை அணைத்துவிட்டு, 'என்ன?' என்பது போல் புருவத்தை உயர்த்தினான். எப்படிச் சொல்வது என்று தயங்கியவளைப் பார்த்து, "உன் தம்பியை அரெஸ்ட் பண்ண கூடாது அதானே" என்றவன் அவள் முகத்தைப் பார்த்தே மனதைப் படித்தான். அவள் பதிலுரைக்க முடியாமல் தலையை மட்டும் அசைத்தாள். "என்னவோ என் வாழ்க்கையை நாசமாக்கிட்டான்னு அந்த கத்து கத்தின... இப்ப என்னாச்சு?" என்றவன் கேட்டு அவளை இளக்காரமாய் பார்க்க, "அது... ரவி... என்கிட்டயும் உங்ககிட்டயும் மன்னிப்பு கேட்கும் போது..." என்று அவள் தயங்கி தயங்கிச் சொல்லும் போதே, அவன் உச்சபட்ச கோபத்தை எட்டி, "அவனை எப்படிறி உன்னால மன்னிக்க முடியுது... அவன் எனக்கு செஞ்சது கூட பரவாயில்லை... உனக்கு செஞ்சது ரொம்ப பெரிய துரோகம்... போதாக்குறைக்கு செய்றதெல்லாம் செஞ்சிட்டுப் பழியைத் தூக்கி உன் மேலயே போடுறான்... ராஸ்கல்" என்றான். தமிழுக்கு அவன் தனக்காக கோபம் கொள்கிறான் என எண்ணும் போது பெருமிதம் உண்டானாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமாகிவிடுமோ என அஞ்சவும் செய்தாள். "என்கிட்ட நீ அவனுக்காகப் பேசாதே... உன் டைம்தான் வேஸ்ட்... என் முடிவை யார் நினைச்சாலும் மாற்ற முடியாது" என்று உறுதியாய் சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குள் செல்ல பார்க்க, தமிழ் அவன் முன்னே வந்து வழிமறித்து நின்றாள். "இப்ப நான் என்ன பண்ணனுங்கிற" என்றவன் எரிச்சலாக, "நான் சொல்றதை ஒரே நிமிஷம் கேளுங்க" என்றவள் தவிப்புடன் கேட்க, அவன் கைகளை கட்டி கொண்டு அவளை மௌனமாய் பார்த்தான். தமிழ் அவனிடம் நிதானமாக, "எனக்கு தெரியும்... மன்னிப்பு கொடுக்கிறது உங்களுக்குப் பழக்கமில்லாத விஷயம்னு... ஆனா மாறணும்னு நினைக்கிறவனுக்கு ஒரே ஒரு சேன்ஸ் கொடுக்கிறதுல என்ன தப்பு? என் தம்பிங்கிறதுக்காக நான் இப்படி சொல்றேன்னு நினைக்க வேண்டாம்... யாராக இருந்தாலும் இதான் சொல்லி இருப்பேன்... அவனை ஜெயிலுக்கு அனுப்புறதால இன்னும் உங்க மேலயும் என் மேலயும் அவனுக்குப் பழி உணர்வுதான் அதிகமாகும்... அவன் செஞ்சதெல்லாம் தப்புதான்... நான் இல்லங்கில்ல... ஆனா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் இந்த ஒரே தடவை ரவிக்கு சேன்ஸ் கொடுங்க... அவன் நிச்சயம் மாறிடுவான்" என்றவள் விளக்கம் தர, அவனால் ஏனோ அவள் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்க மனமில்லை. அதுமட்டுமின்றி அவள் சொன்னதிலும் நியாயம் இருப்பதாகத் தோன்ற, அவன் அவளிடம் பதிலுரைக்காமல் வீட்டிற்குள் நுழைந்தவன் அடிப்பட்டுக் கிடந்த ரவியிடம், "இத பாரு ரவி... நீ உன்னை மாத்திக்க ஒரே ஒரு சேன்ஸ் கொடுக்கிறேன்... அது உனக்கு கிடைச்சிருக்கிற லாஸ்ட் சேன்ஸ்... திரும்பியும் நீ தப்பித் தவறி ஏதாவது தப்பு பண்ணேன்னு மட்டும் தெரிஞ்சிது நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்... அப்புறம் உனக்கு காலம் பூரா ஜெயில் வாழ்க்கைதான்" என்க, ரவி நிம்மதி பெருமூச்சுவிட்டபடி அவனிடம் மன்னிப்பையும் நன்றியுணர்வையும் சேர்த்தே வெளிப்படுத்தினான். அப்போது வீரேந்திரன் அவனிடம், "நீ இவ்வளவெல்லாம் தமிழுக்கு செஞ்ச பிறகும்... உனக்காக அவ ஒரே ஒரு சேன்ஸ் கொடுக்க சொல்லி என்கிட்ட கெஞ்சினதாலதான்... நீ இப்போ பிழைச்சுக்கிட்ட" என்று சொல்ல ரவிக்கு தமிழின் மீது தான் வளர்த்து வைத்திருந்த பழிவுணர்வும் விரோதமும் அர்த்தமற்றது என்று புரிந்தது. அவன் தான் சொன்னதற்காக ரவியை மன்னித்துவிட்டானா என அவள் திகைப்புடன் நிற்க, வீரேந்திரன் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினான். அப்போது தேவி தன் தமக்கையின் கரத்தைப் பிடித்து அழுத்தி, "அக்கா போங்க... மாமா கிளம்பிட்டாரு" என்க, அவளுக்கு அந்த நொடி ஒன்றும் புரியவில்லை. அவன் வாயிலைத் தாண்டிச் செல்வதைப் பார்த்ததும், அவசரமாய் தன் தங்கையிடம் விடைபெற்று கொண்டு அவன் பின்னோடு ஓடினாள். ஆனால் அவனுக்கோ அவளை உடன் அழைத்து செல்லும் எண்ணமே இல்லை. அவள் பின்னோடு வருவதைப் பார்த்தவன், "நான் கிளம்புறேன்" என்று திரும்பி அவளைப் பார்த்து சொல்லிவிட்டுச் செல்ல, "கிளம்புறீங்கன்னா... அப்போ நான் வர வேண்டான்னு சொல்றீங்களா?!" என்றவள் அவனை அதிர்ச்சியுடன் கேட்டாள். "வேண்டாம்... நீ இங்கயே இரு... உன் பிரச்சனை முடியனும்னா அதான் ஒரே வழி... என்னால உன் லைஃப் லாஸாகவும் வேண்டாம்... உன் கனவெல்லாம் உடைஞ்சி போகவும் வேண்டாம்" என்று அவளின் வார்த்தையை அவளுக்கே குத்தலாய் சொல்லிவிட்டுத் திரும்பி நடக்க, தான் சொன்ன வார்த்தைகள் அவன் மனதை எந்தளவுக்குக் காயப்படுத்திருக்கும் என்பதை இப்போது உணர்ந்தவளுக்கு எப்படி அந்த தவற்றை சரி செய்வதென்று புரியவில்லை. தன்னுடைய உணர்ச்சிகளை அவன் புரிந்து கொள்ளாதது போல் தானும் அவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம் என்று எண்ணி வருந்தினாள். அதேநேரம் அவனைத் தடுக்க முடியாமல் தவிப்பில் நின்றவளுக்கு அந்த நொடி தன் வாழ்க்கையின் முடிவுகளைத் தன்னைக் கேட்காமலே எடுக்க இவன் யார்? என்ற கோபமும் மனதில் உதித்தது. காதலை உணர்த்திய மறுகணமே அதன் வலியையும் அவன் அவளுக்கு உணர்த்தி விட்டுச் செல்ல அவளின் விழிகளை கண்ணீர் மறைத்தது. கல்நெஞ்சனாகத் தன்னைத் திரும்பி கூட பாராமல் செல்பவனைக் கரைப்பது தன்னால் முடியுமா என்று சந்தேகித்தவளிடம் அவள் மனம் சொல்லியது. 'முயற்சி செய்யாமல் தோற்றுப் போவது இந்தத் தமிழச்சிக்கு வழக்கமில்லையே' அவளுக்கே உரிய பிடிவாத குணம் அவளின் காதலை மட்டும் எப்படி அத்தனை சாதாரணமாய் விட்டுக்கொடுத்துவிடும். அப்போது தூர விலகிச் சென்றவனை அவள் தன் சக்தி எல்லாம் திரட்டி, "வீர்ர்ர்ர்ர்ர்ர்..." என்று அழைத்தாள். வேகமாய் முன்னேறி நடந்தவன் தன் பெயரை அவள் உச்சரித்த மறுகணம் ஸ்தம்பித்து நின்றான். அவளை விட்டுப் போக வேண்டுமென்ற எண்ணமும் அந்த நொடியே அவனுக்குத் தளர்ந்து போனதே! 'வீர்' என்ற அவன் பெயருக்கா அத்தனை வீரியம். இல்லை... அவளின் அழைப்புக்கும் அவளின் குரலுக்கான வீரியம் அது. தான் அவளை அப்படி அழைக்கச் சொல்லிக் கேட்ட போதெல்லாம் முடியாது என்று பிடிவாதமாய் மறுத்தவள், இப்போது ஏன் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டும் என்ற கேள்வியோடு திரும்பினான். ஒற்றை வார்த்தையில் அவள் மனதில் உள்ள அவளின் காதலை அழுத்தம் திருத்தமாய் சொல்லி முடித்துவிட்டாள். எத்தனையோ ஆயிரமாயிரம் வார்த்தைகள் இருக்கலாம் அவள் காதலை சொல்ல. ஆனால் இதைவிடவும் எளிதாகவும் அழுத்தமாகவும் அவளின் எண்ணத்தை அவனுக்குச் சொல்லிவிட முடியுமா என்ன? அவள், "வீர்" என்று அழைத்த பின் அவனுக்கு மேலே செல்ல மனம் வரவில்லை. அதே நேரத்தில் நேற்று நிகழ்ந்த சம்பவத்தால் அவள் ஏற்படுத்திய அவமானத்தையும் அவனால் உடனடியாக மறந்துவிடவும் முடியவில்லை. ஒரு பக்கம் ஈகோவும் இன்னொரு பக்கம் அவனுடைய காதலும் மோதிக் கொண்டிருக்க, அவன் எதற்கு முக்கியத்துவம் தருவதென புரியாமல் நின்றிருந்தான். அவன் இவ்வாறான குழப்பத்தில் இருக்கையில் மூச்சு வாங்கியபடி ஓடி வந்து அவன் முன்னே நின்றவள், "என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசில? கொஞ்சங் கூட பொறுப்பே இல்லாம நீங்க பாட்டுக்கு என்னை விட்டுவிட்டு போனா என்ன அர்த்தம்?!" என்று கேட்க, அவன் புருவங்கள் சுருங்கின. "பொறுப்பே இல்லாம விட்டுவிட்டு போறேன்னா?! நீதானடி உன்னால என் லைஃப் போச்சு... என் கனவு போச்சுன்னு புலம்பித் தள்ளின... அப்புறம் எதுக்குடி நான் உன் வாழ்க்கையில?!" என்று அவன் அழுத்தமாய் கேட்டான். "எவ்வளவு பெருந்தன்மை? ஆனா இந்த நல்லெண்ணம் கல்யாணத்துக்கு முன்னாடியே வந்திருந்தா ஓகே... அப்ப எல்லாம் நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் எங்க தாத்தா பேரை எல்லாம் சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப என்னடான்னா, கொஞ்சங் கூட மனசாட்சியே இல்லாம விட்டுவிட்டு போறேன்னு சொல்றிங்க... இதுதான்... இதுக்கு பேர்தான் ஸேடிஸம்..." என்று கோபமாய் அவள் கடிந்து கொள்ளவும் அவன் பார்வை அனலைக் கக்கியது. "யாரு? நான் ஸேடிஸ்டா... நீதான்டி ஸேடிஸ்ட்… புருஷனை ஒரு மனைவி எப்படி எல்லாம் இன்ஸல்ட் பண்ணக் கூடாதோ அப்படி எல்லாம் இன்ஸல்ட் பண்ணவளாச்சே நீ... என் பொறுமைக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கு தமிழ்... அதை நீ நேத்தே உடைச்சுட்ட... கூட என் காதலையும் சேர்த்து" என்றான். அவள் சிறிது நேரம் அமைதி காத்தவள் பின் தாழ்வான குரலில், "தப்புதான்... நான் அப்படி பேசி இருக்கக் கூடாது... ஏதோ உங்களைப் புரிஞ்சிக்காம அப்படி பேசிட்டேன்?" என்று உரைத்தாள். ஆனால் அவன் கோபம் குறையவேயில்லை. "நீ எப்போ என்னைப் புரிஞ்சிக்கிட்டுப் பேசின... உனக்கு எல்லாத்திலயும் அவசரம்தான்" என்றான். "போதும் வீர்... என்னை மட்டுமே குற்றவாளியா மாத்தாதீங்க... நீங்களும் காரணம்தான்... இப்போ வந்து காதல்ங்கிறிங்க... உண்மையா நேசிச்சேன்னு சொல்றீங்க... ஆனா... ஏன் நீங்க இதெல்லாம் முன்னாடியே என்கிட்ட சொல்லல" என்று அவளும் கோபமாய் கேட்கவும், "நீ சொல்றதுக்கான வாய்ப்பைதான் எனக்கு கொடுக்கவே இல்லயே" என்றான் அவன் முகத்தைத் திருப்பியபடி. "சும்மா என் மேல பழிப் போடாதீங்க... உங்க ஈகோ உங்களைச் சொல்ல விடல" "ஆமான்டி... ஈகோதான்... இப்ப என்ன பண்ணனும்ங்கிற..." என்றதும் அவன் கண்ணாடி போல தன் கோபத்தை அப்படியே பிரதிபலிக்கிறான் என்று எண்ணமிட்டவள், அவனுக்கு நிலைமையைப் பொறுமையாய் சொல்லிதான் புரிய வைக்க வேண்டும் என்று தாழ்வான குரலில் பேசத் தொடங்கினாள். "நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க வீர்" என்றதும் அவன் மௌனமாக அவளைப் பார்த்தான். "நான் சொல்ல வர்றதை தப்பா எடுத்துக்காதீங்க... நம்ம இரண்டு பேர்க்குள்ள இருக்கிற ஈகோதான் நம்ம பிரச்சனையே... நாம பொறுமையா பேசி இந்தப் பிரச்சனையை சால்வ் பண்ணுவோமே... ஏன் புரிஞ்சிக்காமலே பிரிஞ்சுடணுமன்னு முடிவெடுக்கணும்" என்று அவள் கேட்க அவன் யோசனையோடு சில நிமடங்கள் மௌனமாய் இருந்துவிட்டு பின் நிதானமாகப் பேசினான். "ம்ம்ம்... நீ சொல்றதிலயும் பாயின்ட் இருக்கு... ஒத்துக்கிறேன்... பட் நேத்து நீ எனக்கு செஞ்ச இன்ஸல்ட்டை என்னால மன்னிக்கவும் முடியாது... மறக்கவும் முடியாது... என்ன செய்ய?!" என்று வினவ, "சரி... அதுக்கு நான் என்னதான் பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க" என்றாள். "கேள்வி கேட்காம நான் எது சொன்னாலும் செய்யணும்... முடியுமா?!" அவள் விழிகளை அகல விரித்தபடி, "அதெப்படி முடியும்?" என்று கேட்டாள். "நாம ஒன்னா இருக்கணும்னு நீ ஆசைப்பட்டா முடியும்" "அதெல்லாம் ரொம்ப கஷ்டம் வீர்... என்னால முடியாது... ஒருத்தர் ஒருத்தர் பரஸ்பரம் புரிஞ்சிக்கிறதுதான்... கணவன் மனைவி உறவு... நீங்க சொல்றது சர்வாதிகாரம்... டாமினேஷன்" என்று பொறுமியவளைப் பார்த்து ஏளனமாய், "அந்த வியாக்கியானம் எல்லாம் எனக்கும் தெரியும்... பட் அந்த கான்ஸ்ப்ட் நம்ம உறவுக்குள்ள செட் ஆகாது... நீயும் டாமனிட்டிங்... நானும் டாமினேட்டிங்... இரண்டு பேருக்கும் பொறுமையில்லை... எதுக்கெடுத்தாலும் கோபம்... ஈகோ... அப்படி இருக்கும் போது இந்த ரிலேஷின்ஷிப்பை நம்மால எப்படி காப்பாத்த முடியும்... ஒரே வழிதான்... யாராச்சும் ஒருத்தர் மட்டும்தான் டாமினேட்டிங்கா இருக்கணும்... ஒய் நாட்... அது நானா இருந்துட்டு போறேன்" என்றான். அவள் மனம் அவன் முடிவை ஏற்றுகொள்ளாமல், "அது ஏன் நீங்கதான்? ஏன் நான் சொல்றதை நீங்க கேட்க கூடாதா?!" என்று கேட்டாள். "நீதானடி என்கிட்ட வந்து புரிஞ்சிக்காம பிரிஞ்சிட வேண்டாம்னு கெஞ்சின... இப்போ நான் ஏன் விட்டுகொடுக்கணும்னு கேட்கிற... அப்போ நீ பிரச்சனையைத் தீர்க்கலாம்னு சொன்னதெல்லாம்... சும்மா வாய் வார்த்தையா... அதுவுமில்லாம அப்படி ஒன்னும்... நான் உன்னை அடிமையா நடத்த மாட்டேன்... என்னை நீ புரிஞ்சுக்கிட்டேனா... வா... ஒன்னா கிளம்புவோம்" என்றவன் சொல்லி தன் காரின் மீது சாய்ந்து நிற்க, அவன் ரவி விஷயத்தில் செய்தவற்றை எல்லாம் நினைவுக்கூர்ந்தவள் அவனுக்காக தான் இறங்கிப் போனாலதான் என்ன தவறு என்று எண்ணமிட்டாள். அவன் சொன்னதற்கு அவள் சம்மதம் தெரிவிக்கும் விதமாய் அவள் காரில் ஏறி அமர, அவன் முகம் பிரகாசித்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா