மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 23Post ReplyPost Reply: Monisha's VET - 23

Quote from monisha on November 23, 2021, 9:18 PM

23
அந்த நாள் முழுக்க வலி ஒருபுறமும் தனிமை மறுபுறமும் தமிழை வாட்டி வதைத்தது. பூஜை எனச் சென்ற சந்திரா கோயிலில் இருந்து திரும்பியபாடில்லை. கேட்டால் நாளைதான் வருவார் என வேலையாள் உரைக்கவும் அறையில் தனியே அடைந்து கிடப்பது அவளுக்கு நரகமாயிருந்தது. வெளியே தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தாள். பின்னர் இருள் சூழ்ந்திடவும் அறைக்குள் நுழைந்தவள் அப்போதுதான் ஓயாமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த கைப்பேசியைக் கவனித்தாள். அந்தத் தொலைப்பேசி எண் யாருடையது என அவள் பதில் அழைப்புவிடுக்க எதிர்புறத்தில் ஒலித்த குரலைக் கேட்டதும், "ஆதி" என்றாள். அவள் முகம் பிரகாசித்தது. "ம்ம்ம்... மேடம் எப்படி இருக்கீங்க... ஃபோனை எடுக்கக் கூட நேரமில்லை... ரொம்ப பிஸி" "பிஸியா... நீ வேற... வெட்டியா இருக்கேன்... போரடிக்குது" "கல்யாணம் ஆன இரண்டாவது நாளே இவ்வளவு சின்ஸியர் சிகாமணியாய் உன் வீட்டுக்காரர் வேலைப் பார்த்துட்டிருந்தா உனக்கு போரடிக்கதானே செய்யும்" என்று சொல்லி ஆதி நக்கலடிக்க, "நீ சொல்றதைப் பார்த்தா... ஏசிபி உன்னைப் பார்க்க வந்தாரா?" என்று அவள் மிக சரியாய் கணிக்க, "ம்ம்ம் ஆமா" என்று ஆமோதித்தாள் ஆதி. "தர்மா கேஸ் பத்தி விசாரிச்சாரா?" "தர்மா பத்தி எதுவும் கேட்கல... சிலைக் கடத்தல் கட்டுரைப் பத்திதான் கேட்டாரு" என்றாள். "ஹ்ம்ம்... அவர் மனசில ஏதோ திட்டம் வைச்சிருக்காரு... அவர்கிட்ட நாம சிக்கக் கூடாது... அதனால்தான் அந்தக் கட்டுரைய இப்ப போட வேண்டாம்னு சொன்னேன்... நீதான் கேட்கல" "இல்ல தமிழ்... அந்தக் கட்டுரையை நான் போடக் கூடாதுன்னு நிறைய மிரட்டல் கால்ஸ்... அதான் போட்டேன்... நாளைக்கு நம்ம நிலைமை எப்படி இருக்கும்னு சொல்ல முடியாதே" தமிழ் மொத்தமாய் சிந்தனையில் மூழ்க, ஆதியே மேலே தொடர்ந்தாள். "இன்னொரு விஷயம் தமிழ்...ஏசிபி உன்னை எனக்கு தெரியுமான்னு கேட்டாரு?!" தமிழ் பதட்டத்தோடு, "அய்யோ... தெரியாதுன்னுதானே சொன்ன?" என்று கேட்க, "ஆமா... பழக்கமே இல்லன்னு சொல்லிட்டேன்" என்று சொன்னதும் தமிழ் நிம்மதியடைந்தாள். "சூப்பர்... அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம்... கால் பண்ணும் போது கூட நீ லேண்ட் லைன்னே யூஸ் பண்ணு" என்று தமிழ் சொல்ல, அப்போது ஆதி அவளிடம், "அது சரி... அந்த தர்மாவோட டைரியைப் படிச்சிட்டியா?" என்று வினவினாள். "உம்ஹும்... அது என் ஆஃபிஸ்ல இருக்கு... நான் இன்னும் அதைப் படிக்கல... அந்த டைரி கைக்கு வந்ததில் இருந்து பிரச்சனை மேல பிரச்சனை... இன்னைக்கு ஆஃபிஸ் போலாம்னு பார்த்தா இடுப்பு பிடிச்சிக்கிச்சு.... முடியல” என்று அவள் சொல்லி முடிக்க ஆதி விடாமல் சிரிக்க ஆரம்பித்தாள். "என் வலி... உனக்கு சிரிப்பா இருக்கா?" என்று தமிழ் கடுப்புடன் கேட்டாள். ஆதி சிரித்தபடியே, "அந்த ஏசிபி ரொம்ப விறைப்பா இருக்கும் போதே நினைச்சேன்... என்ன தமிழ்? ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாரோ?!" என்று அவள் பரிகாசம் செய்யவும் தமிழ் முகம் சிறுத்து போனது. "அய்யோ... ஆதி... நீ நினைக்கிற மாதிரி ஒரு மண்ணும் இல்ல" என்றவள் மறுக்க, "அப்புறம் எப்படி?" என்ற கேட்ட ஆதியில் குரலில் கேலியும் கிண்டலும் குறையவில்லை. "அது வேற விஷயம்" "என்ன விஷயம்?" "விழுந்திட்டேன்" என்று சொல்லி தமிழ் அலுத்துக் கொள்ள, "எங்கே இருந்து?" என்று ஆதி நிறுத்தாமல் தன கேள்விகளைத் தொடர்ந்தாள். தமிழ் சலிப்பின் மிகுதியால், "ஹ்ம்ம்ம்ம்... பெரிய போஸ்ட் கம்பத்திலிருந்து விழுந்திட்டேன்" என்றாள். "போஸ்ட் கம்பமா... என்ன உளற நீ?" "கடவுளே!. போதும் விடேன்" என்று தமிழ் இறங்கி கெஞ்சவும் "ஓகே ஓகே விட்டுட்டேன்... டென்ஷனாகதே... நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு... உன் வீட்டுக்காரு ரொம்ப தீவிரமா இருக்காரு தர்மா கேஸ்ல" என்று சொல்லவும் தமிழ் யோசிக்கலானாள். ‘காஞ்சிபுரத்திற்குப் போறதா இல்ல லெட்டர்ல எழுதியிருந்தாரு' அவள் உடனடியாய் ஆதியிடம், "ஏய் ஆதி... நீ அந்த ஏசிபியை எப்போ மீட் பண்ண?!" என்று விசாரிக்க, "இப்பதான் ஒரு அரைமணி நேரம் முன்னாடி இருக்கும்" என்றாள். "இப்பவா?" என்று அவள் அதிரும் போதே வாசலில் அவனின் வாகனத்தின் சத்தம். நடந்து சென்று ஜன்னலில் எட்டிப்பார்த்தவள், "அய்யோ... ஏசிபி" என்று அலறினாள். "என்னத்துக்கு இப்ப அலறுற?" "நீ முதல்ல ஃபோனை வை... அந்த ஏசிபி வீட்டுக்கு வந்துட்டாரு" "அவர் உன் வீட்டுக்காரர்மா... வீட்டுக்கு வராம" "வீட்டுக்காரரா... போலீஸ்காரார்ர்ர்ரு" "சரி சரி போய் உன் போலீஸ்காரரை கவனி... நான் ஃபோனை வைக்கிறேன்" என்று ஆதி அழைப்பைத் துண்டிக்க வெளயே அவனின் குரல் அதிகாரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. கதவருகில் போய் எட்டிப் பார்க்க அவன் சத்தமாய், "இப்ப அம்மாவுக்கு கோயில் பூஜைதான் முக்கியமா போச்சா?" என்று கேட்டவன் வேலைக்கார பெண்மணியைப் பார்த்து தமிழ் சாப்பிட்டாளா... தூங்கினாளா என்று அவளைப் பற்றியே அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டு விசாரித்து கொண்டிருந்தான். அவளுக்குக் குழப்பமாயிருந்தது. ஒரு நேரம் தன் மீது அவனுக்கு அக்கறையே இல்லையோ என யோசிக்க வைத்தவன் இன்னொரு சமயம் அன்பையும் அக்கறையையும் பொழிந்து தள்ளுகிறான். அப்போதுதான் கவனித்தாள். அவள் தூக்கியெறிந்த மலர் வாடியிருக்க அவன் எழுதிய கடிதம் கசங்கியிருந்தது. அவன் வாங்கி வைத்திருந்த பரிசும் பிரிக்கப்படாமல் படுக்கையில் கேட்பாரின்றி கிடக்க அவற்றை எல்லாம் பார்த்தால் அவன் மனம் வேதனைக் கொள்ளுமே என எடுத்து வைக்க எண்ணிய போதே கதவு திறக்கும் ஓசை. அந்தச் சத்தம் அவள் இதயத்துடிப்பினை அதிகரித்து மத்தளம் கொட்டுவதைப் போல அவள் செவியில் கேட்க, 'தமிழ் நீ காலி' என்று எண்ணி உறைந்து போய் நின்றவளைப் பார்த்த கணம் அவன் பின்னோடு வந்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான். அத்தனை காதலையும் தவிப்பையும் அவன் அணைப்பில் உணர்ந்தாலும் அதை அனுபவித்திட முடியாமல் 'இப்போ எப்படி எல்லாத்தையும் அவனுக்குத் தெரியாம எடுத்து வைக்கிறது' என்று எண்ணியபடி அவள் இடையைப் பூட்டியிருந்த அவன் கரத்தை விலக்க முயற்சி செய்து கொண்டிருக்க, அவனோ தன் கரத்தை இன்னும் இறுக்கமாய் பூட்டிக் கொண்டு அவள் காதில் கிசுகிசுத்தான். "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசிசிசி" உணர்ச்சிப்பூர்வமாய் அவனில் இருந்து வெளிவந்த அந்த ஒற்றை வாக்கியம் அவளின் தேகத்தின் அத்தனை கோடானு கோடி செல்களிலும் எதிரொலித்து அவளைச் சிலாகிக்க வைத்திட, அவள் செயலிழந்து... சொல்லிழந்து... அவன் காதலோடு கரைந்து போனாள். இன்னது நிலைமை என அப்போது மறந்தும் போனாளே! அவளை அணைத்திருந்தபடியே அவன் அவள் செவிமடல்களில் ஓதிய காதல் மந்திரம் அவளை உறைபனியாய் மாற்றியிருக்க, அவன் செந்தழலாய் அனலேற்றி அவளை உருகச் செய்திருந்தான். இருவருமே விழிகளை மூடி வேறு உலகிற்கே குடிப்பெயர்ந்துவிட்டதைப் போல யாவற்றையும் மறந்திருந்த அந்த நொடி வீரேந்திரன் அவள் காதோடு, "சாரிடி என் தமிழச்சி... நேத்து நான் உண்மையிலேயே அப்படி தெரிஞ்சு செய்யல... வேலைன்னு வந்துட்டா கொஞ்சம் செல்ஃபிஷ்ஷா மாறிடுறேன்" என்றான். "கொஞ்சம் இல்ல ஏசிபி சார்? ரொம்ப செல்ஃபிஷ்... பூகம்பமே வந்தாலும் யாருக்கு என்ன ஆனாலும் நீங்க ஆஃபிஸ் போயிடுவீங்க... இல்ல?!" என்று அவள் குத்தி காட்டவும், அவன் அவசரமாய் அவளைத் தன்புறம் திருப்பி நிறுத்தினான். அவன் கரங்கள் அவள் முகத்தை ஏந்தியபடி , "உனக்கு தெரியுமா?!.. காலையில எழுந்ததும் முதல் வேளையா உனக்கு மருந்து வாங்கிட்டு... அப்புறமா பொக்கே ஷாப் போய் பார்த்து பார்த்து அந்த ஃப்ளவர்ஸை வாங்கிட்டு வந்தேன்... ஆசையா நீயும் உங்க தாத்தாவும் இருக்கிற ஃபோட்டோவை நானே பேக் பண்ணி வைச்சேன்" என்று சொல்ல 'அப்போ அது நானும் என் தாத்தாவும் இருக்கிற ஃபோட்டோவா? சே, எப்பவும் நாம இவனைத் தப்பாவே புரிஞ்சிக்கிறோம்' என்று குற்றவுணர்வோடு எண்ணும் போதே, அவன் மேலும், "நீ நைட்டு வலியில அவஸ்த்தைப் பட்டுட்டு இருந்த... உன்னை எழப்ப மனசு வரல டி... அதான் அவசரத்தில ஒரு லெட்டர் எழுதி பக்கத்தில வைச்சிட்டு கிளம்ப வேண்டியதா போச்சு... உன்னைத் தவிக்க விட்டுவிட்டு போகணும்னு எனக்கு மட்டும் என்னடி ஆசையா?! என் வேலை அப்படி... இன்னும் கேட்டா நான் இப்போ காஞ்சிபுரத்திலதான் இருக்கணும்... கமிஷனர் சென்னையில ஒரு வேலைன்னு சொன்னதும்... உடனே கிடைச்சது சேன்ஸ்னு உன்னைப் பார்க்கிறதுக்காகவே கிளம்பி ஓடி வந்துட்டேன்... தெரியுமா?" என்றதும் அவள் நெகிழ்ந்துவிட்டாள். அவள் அவன் மார்பின் மீது சாய்ந்து கொள்ள அவன் அவளை அணைத்தபடி, "வேலை எல்லாம் ஒரு காரணம்தானடி.. என் மனசுக்கு மட்டும்தான் தெரியும்... உன்னைப் பார்க்கணுங்கிற எனக்குள்ள இருக்கிற தவிப்பை" என்று உரைத்தான். "ஒரு ஃபோனாச்சும் பண்ணி இருக்கலாமே வீர்... அம்மாவும் கோயிலுக்குப் போயிட்டாங்க... வலியால வேலைக்கும் போக முடியல... இங்க யாருமே இல்லாம எனக்குப் பைத்தியமே பிடிச்சிருச்சு... தெரியுமா?!" என்று அவள் குழந்தையாய் மாறி அவன் மார்பில் சாய்ந்தபடி அழுதிட, "சாரிடி... எனக்கு அம்மா கோயிலுக்குப் போவாங்கன்னு தெரியாது... தெரிஞ்சிருந்தா அவங்களைப் போக வேண்டாம்னு சொல்லி இருப்பேன்... எனக்கு மட்டும் உனக்கு ஃபோன் பண்ணணும்னு இருக்காதா என்ன? ஆனா என்ன? நான் உன்கிட்ட கால் பண்ணிப் பேசிட்டா என்னால வொர்க்ல கான்ஸன்டிரேட் பண்ணவே முடியாது... அப்புறம் என் நினைப்பெல்லாம் உன்னை சுத்தியே இருக்குமே... புரிஞ்சிக்கோ... என் வேலையில சின்னதா கான்ஸ்ட்ரேஷன் மிஸ்ஸானாலும் எல்லா தப்பாயிடும்.. இந்த ஏசிபியோட மனைவியாய் என்னை நீ புரிஞ்சிக்க மாட்டியா?!" என்று அவன் வினவ ஏனோ அவனின் வேலை மீது அவளுக்கு எப்போதுமே மதிப்பு கிடையாது. மாறாய் அவன் வார்த்தைகள் வெறுப்பையே வளர்க்க மௌனமாய் இருந்தவள் சட்டென்று அவன் அந்தப் பூக்களையும், பிரிக்காமல் இருந்த அந்தப் பரிசும் நினைவுக்கு வந்தது. அவற்றை எல்லாம் அவன் மட்டும் பார்த்துவிட்டால் அவனின் இத்தனை காதலும் அப்படியே கோபமாய் விஸ்வரூபம் எடுக்குமே என அச்சமுற்றாள். அவனோ அவளை இறுக்கமாய் கட்டிணைத்தபடியே இருக்க எப்படியாவது அவன் கண்ணில் படாமல் அவற்றை எல்லாம் இப்போதைக்கு அப்புறப்படுத்திவிட வேண்டும் எனத் தீவிரமாய் யோசிக்கலானாள். மனதில் ஒரு யுக்தி உதிக்க அதனைச் செயலாக்கம் செய்ய, "வீர்" என்றழைக்கவும், "ம்ம்ம்" என்றான். அவன் தன்னை மறந்த நிலையில் இருக்கிறான் என்பதை உணர்ந்தவள், "வீர்... நீங்க டயர்ட்டா இருப்பீங்க... போய் பிரஷாயிட்டு வாங்களேன்... நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்" என்றாள். அவனோ விடமாட்டேன் என்பது போல் அவளை அணைத்தபடியே, "எனக்கு இப்போதைக்கு உன்னைதான் சாப்பிடணும்" என்று அவளின் காதோரம் தன் இதழ்களால் வருடத் தொடங்க, அவளோ அவஸ்தையோடு, "ப்ளீஸ் வீர்... போய் குளிச்சிட்டு வாங்க... மத்ததெல்லாம் அப்புறமா... பார்த்துக்கலாம்" என்று இழுத்தாள். "அப்புறம் அப்புறம்னு என்னை அலைக்கழிக்கிறதே உனக்கு வேலையா போச்சு... இன்னைக்கு நீ இந்த வீர்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது" என்று தன் கரத்தை அவள் தேகத்தில் இறுக்க, அவள் எரிச்சலோடு அவனை விலக்கி விட முயன்றபடி, "விடுங்க வீர்... அனகோண்டா மாதிரி சுத்துகிட்டு இருக்கீங்க... எனக்கு... வலிக்குது" என்றாள். "அனகோண்டாவா? புதுசா புதுசா பேர் வைச்சி திட்டுற... ஹ்ம்ம்ம்... நான் அனகோண்டாதான்.... உன்னை என்ன பண்றன்னு பாரு" என்று அவனின் வலிய கரங்களால் அவள் மெலிந்த தேகத்தை அழுத்தமாய் சுற்றி வளைக்க அவள் வலியோடு, "சாரி சாரி சாரி... தெரியாம சொல்லிட்டேன்... ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் வலிக்குது... விடுங்க" என்று கதற அவன் கரத்தை விடுவித்தான். அவள் மூச்சை இழுத்துவிட்டு, "ஆ... என்னைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா?" என்று வலியோடு கேட்டவளிடம் அவன் சிறிதளவும் யோசிக்காமல், "சத்தியமா இல்ல" என்றான். அவளோ விஷயம் தெரியாமலே இவன் தன்னை இந்த பாடு படுத்துகிறானே என சிந்தித்தவள், எப்படியாவது அவனை அங்கிருந்து அனுப்பியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவன் கவனத்தைத் திசைத்திருப்பி எண்ணி, "வியர்வையா இருக்கீங்க... இட்ஸ் இரிட்டேட்டிங்... போய் குளிச்சிட்டு வாங்க" என்று முகத்தைச் சுளித்தாள். "அவ்வளவு அழுக்காவாடி இருக்கேன்" அவனை அனுப்ப வேறு வழியே இல்லை என எண்ணியவள், "ம்ம்ம்... ரொம்ப" என்று முகத்தைத் திருப்பியவளை வஞ்சத்தோடுப் பார்த்தவனை அவள் கவனிக்க தவறினாள். அப்போது அவன் அவளை இழுத்து அவள் முகத்தை முத்தங்களால் ஆராதிக்க அவளோ அவனை விலக்கி விட முடியாமல் அவற்றை ஏற்க வேண்டியதாயிற்று. அவனே போதுமென்பது போல் அவளை விட்டுவிட அவனின் செய்கையால் கோபம் மூள அவள், "சீ... என்ன நீங்க..." என்று முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். "இப்ப நீயும் அழுக்காயிட்ட... வா இரண்டு பேரும் குளிக்கலாம்" என்று அந்தக் கணமே எதிர்பாராமல் அவள் கையைப் பற்றிக் கொண்டு குளியலறைக்கு அவளை அழைத்துப் போக எத்தனிக்க, "விடுடா ராஸ்கல்... வாயில நல்லா வந்திரும்..." என்று அவன் கரத்தை எரிச்சலோடு உதறினாள். அவன் அந்த நொடி விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்க அவள் ஒன்றும் விளங்காமல் விழித்தாள். அத்தனை நேரம் அடக்கி வைத்த சிரிப்பை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டதைப் போல, "முடிஞ்சுதாடி உன் டிராமா?" என்று கேட்டான். "என்ன டிராமா?" என்று அவள் புரியாமல் கேட்க, அவன் நடந்து சென்று கசங்கியிருந்த கடிதத்தையும் வாடியிருந்து மலரையும் காண்பித்து, "ஆசையாய் வாங்கி வைச்சா... இதான் நீ அதுக்கு தர மதிப்பா?!" என்று கேட்க அவளோ மௌனமாய் நின்றாள். எப்போது கவனித்திருப்பான் என அவள் யோசிக்கும் போதே, "நான் போலீஸ்காரன்டி... என் பார்வை கழுகு பார்வை... சின்ன குண்டு ஊசியைக் கூட விடாமாட்டேன்... அதெப்படி என் பார்வை இதை எல்லாம் கவனிக்காம விட்டுடும்... உள்ளே என்ட்ரி ஆனதுமே எல்லாத்தையும் பார்த்துட்டேன்" என்றான். "அப்படியா?! அப்போ என் மேல கோபம் வரலயா?!" என்று வியப்போடுக் கேட்க, "ஏன் வரல? வந்துச்சு... உன் இன்னொரு கன்னத்தையும் வீங்க வைச்சிரலாம்னுங்கிற அளவுக்கு... ஆனா உன்கிட்ட சண்டைப் போட்டு சண்டைப் போட்டு எனக்குப் போரடிச்சிடுச்சு... உனக்கு புத்தியும் வந்தபாடில்லை... அதான் கொஞ்சம் ரொமான்டிக்கா விளையாடி வெறுப்பேத்தினேன்... நீ பயந்தையும் தவிச்சதையும் பார்த்து ரசிச்சேன்" என்று கண்ணடித்து புன்னகைத்த போது அத்தனை கள்ளத்தனம். "யூ" என்று அவள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் கழுத்தை நெறிக்கப் போக, அவன் அசறாமல் கைகளை விரித்தபடி, "கம்மான் தமிழச்சி..." என்று அவளைக் கட்டியணைக்க காத்திருப்பவன் போல் நிற்க அவளோ 'திரும்பியும் இந்த அனகோண்டா கிட்ட போய் மாட்டிக்கிறதா... நோ சேன்ஸ்' என்று தன் எண்ணத்தைக் கைவிட்டாள். அவன் புன்னகையோடு, "சரி சரி விளையாட்டெல்லாம் போதும்... இனிமே நாம கொஞ்சம் சீரியஸா ரொமான்ஸ் பண்ணுவோம்... நான் போய் ஃப்ரெஷ்யாகிட்டு வந்திடுறேன்" என்று குளியலறை நோக்கிச் செல்லவும் அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'இனிமேதான் சீரியஸா ரொமன்ஸ் பண்ணப் போறானா... என் நிலைமை சீரியஸாயிடும் போலிருக்கே' என்று எண்ணி அதிர்ச்சியாய் நின்றவளிடம் தன் யூனிஃபார்மை கழற்றி நீட்டினான். "என் யூனிஃபார்மை பார்த்து கசங்காம ஹேங்கர்ல மாட்டி வைக்கணும்... அப்புறம் டவல் எடுத்து வை" என்று அதிகார தொனியில் உரைத்துவிட்டுச் செல்ல, அவன் கதவடைத்ததைப் பார்த்ததும், 'பெரிய யூனிபாஃர்ம்' என்றபடி அதனைத் தூக்கித் தூர எறிந்தாள். அது கீழே கிடக்க அவள் அதனைப் பார்த்து, 'என்னை இந்த கசக்கு கசக்கிட்டு... உன்னை மட்டும் கசங்காம எடுத்து வைக்கணுமாமே... ராஸ்கல்... அப்போ நீதான் அவனுக்கு ரொம்ப முக்கியம்... நான் இரண்டாம் பட்சம்தான்?!' என்று உயிருள்ள பொருளிடம் பேசியது போலவே அந்தச் சட்டையைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்க, அவன் உள்ளிருந்தபடியே, "ஏய் தமிழச்சி... என் சட்டை கூட உனக்கு என்னடி சண்டை... எடுத்து மாட்டி வை" என்றான். அவள் கோபமாக விரல்களை மடக்கியபடி, 'சரியான பாம்பு காது... நான் பேசிறதெல்லாம் கேட்டிருமே! கழுகு கண்ணு... பாம்பு காது... அனகோண்டா கை.... இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஒரு மூஞ்சி.. சரியான ஜங்கிள் புக்டா நீ' என்று திட்டியபடி அவன் சட்டையை கையில் ஏந்தியவள், 'உன்னை நான் மாட்டி வைக்கணுமா? ஏசிபி சார் ஆர்டர் போட்டாரு' என அவள் அதனைப் பொறாமையாய் பார்த்து எரிச்சலோடு உதறி மாட்ட எத்தனிக்கவும் தரையில் ஏதோ விழுந்து 'க்ளாங்க்' எனச் சத்தம் எழுப்பியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா