மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 25Post ReplyPost Reply: Monisha's VET - 25

Quote from monisha on November 27, 2021, 8:58 PM

25
தர்மாவின் திமிரான பேச்சால் தமிழ் ரொம்பவும் கடுப்பானாள். அவள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்க ஆதி அவளை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அவர் எரித்த ஆதாரங்கள் யாவும் பல மாதங்களாய் அந்த இரு தோழிகளும் பாடுபட்டுச் சேர்த்தவை. பல வருட காலங்களாய் தொலைந்து போன, கோயில் நிர்வாகங்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் வெளிநாட்டிற்குக் குடியேற்றம் ஆன பல பொக்கிஷங்கள், சிலைகளைப் பற்றிய மொத்த தகவல்கள். அவை சாம்பலாக மாறுவதைப் பார்க்க, இருவரின் உள்ளமே கொதித்தது. அந்த இரு தோழிகளின் இலட்சியமே சிலை கடத்தல்களை வேரோடு அழிக்க வேண்டுமென்பதுதான். எரிந்து கொண்டிருந்த நெருப்பு மெல்ல மெல்ல அடங்கியது. ஆதி கொந்தளிப்புடன், "இத்தோட நாங்க தோற்று போயிடுவோம்னு நினைக்க வேண்டாம் மிஸ்டர். தர்மா... எப்படியாச்சும் உங்களையும் உங்களுக்குப் பின்னாடி இருக்கிற நெட்வொர்கையும் ஒழிச்சுக் கட்டுவோம்" என்று சூளுரைத்தாள். அவர்களை ஏற இறங்க பார்த்தபடி, "சின்னப் பொண்ணுங்க... வாழ வேண்டிய வயசு வேற... வீணா தேவையில்லாத விஷயத்தில எல்லாம் தலையிட்டு உங்க வாழ்க்கையை அழிச்சிக்காதீங்க" என்று எச்சரிக்கை விடுத்தார். தமிழ் கோபமாக, "சின்ன பொண்ணுங்களா?! எங்கள அவ்வளவு சாதாரணமா நினைச்சிட்டிங்களா?! சின்னத் தீப்பொறி போதும்... எவ்வளவு பெரிய காட்டையும் கூட அழிச்சிடும்... இனியும் ஒரு சின்ன பொருள் கூட எங்க நாட்டை விட்டுப் போக நாங்க அனுமதிக்கமாட்டோம்" என்று சொல்ல ஆதி அவள் கைப்பற்றியபடி, "இவர்கிட்ட பேசிறது டைம் வேஸ்ட்... வா போலாம்" என்று அழைத்தாள். இருவரும் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, தர்மா அவர்கள் காதில் விழும்படி, "இதுவரைக்கும் கடத்தினதெல்லாம் ஒன்னுமே இல்ல... வெறும் அஞ்சு ஆறு கோடி அரிய வகை சிலைங்க... அடுத்து நாங்க கடத்த போறது ஒரு பொக்கிஷம்... அது தோராயமா நூறு கோடி மதிப்பு... உம்ஹும்... அதுக்கும் மேலதான் இருக்கும்... சரியான டிமேன்ட்... முடிஞ்சா தடுத்துதான் பாருங்க" என்றார் சவாலாக! இரு தோழிகளும் அதிர்ச்சியோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். ஆதி அவரை நோக்கி, "விடமாட்டோம் தர்மா... இனியும் அப்படி எந்த பொக்கிஷமும் எங்க நாட்டை விட்டுப் போறதை நாங்க அனுமதிக்கவே மாட்டோம்... எங்க ஊரோட சிலையைப் பாதுகாக்க எங்க அப்பா அவர் உயிரையே கொடுத்திருக்காரு... நான் அவரோட மக... நான் அதுக்கு மேலயும் போவேன்... இதுக்காக கொலை செய்ய வேண்டி வந்தாலும் தயங்கமாட்டேன்" என்றாள் மிரட்டலான பார்வையோடு தர்மா அலட்சிய புன்னகையோடு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருக்க தமிழுக்கு உள்ளுக்குள் கோபத் தீப் புகைந்து கொண்டிருந்தது. தமிழ் பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்தபடி, "பெருமையான நம்ம முன்னோர்களோட வரலாற்றைப் படிச்சிருந்தும் கூட இப்படி ஒரு காரியம் செய்ய உங்களால எப்படிதான் முடியுது... என்ன மாதிரி மனுஷன் நீங்கெல்லாம்?! பணத்துக்காக என்ன வேணா செய்விங்களா?" என்று கேட்டவளைப் பார்த்து, "பணம் சம்பாதிக்கிறதுக்காகவும் அந்தஸ்த்துக்காகவும் இன்னைக்கு தமிழ் மொழியையே வேண்டாம்னு எல்லோரும் துச்சமாய் தூக்கிப் போட்டாச்சு... இதுல தமிழனோட வரலாறு பராம்பரியத்தை எல்லாத்தையும் மட்டும் சுமந்துகிட்டு என்ன கிழிக்க போறீங்க... போங்கடி வேலையைப் பார்த்துகிட்டு" என்றார். இருவருமே சீற்றமடைய தமிழ் கட்டுகடங்கா கோபத்துடன் மூச்சு வாங்கியபடி, "யார பாத்துடா... டிங்கிற... கொன்னுடுவேன்" என்று உணர்ச்சிவசப்பட்டாள். அவர் பயங்கரமாக சிரித்துவிட்டு, "குழந்தை மாதிரி இருந்துட்டு நீ என்னை கொல்லப் போறியா... பொம்பள பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கப் பாரு" என்றதும் தமிழின் விழிகள் சிவந்தன. அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையால் அவளுக்கு வெறி மிகுந்து கொண்டிருந்தது. ஆதி அவரை நோக்கி, "ஜெய்ச்சுட்டோம்னு ரொம்ப ஆடாதே தர்மா... கூடிய சீக்கிரம் உன் கேவலமான முகத்தை அம்பலபடுத்தி... உன்னை அசிங்கப்படுத்தல" எனறு சொல்லும் போதே அவர் கை நீட்டி இடைமறித்தார். "எது?! என்னை நீங்க இரண்டு பேரும் அசிங்கப்படுத்த போறீங்களா?! சிலையைக் கடத்திறதோட... உங்களையும் சேர்த்து வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிடுவேன்... அதுக்கும் செம ரேட் இருக்கு... நீங்களும் வேற... நல்லா செதுக்கின சிலை மாதிரிதான்டி இருக்கீங்க" என்று இழிவாய் பேசி அவர் பார்த்தப் பார்வையில் இருவருமே அருவருப்பாய் உணர்ந்தனர். ஆதி உக்கிரத்தோடு அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, "பொறுக்கி ராஸ்கல்... எக்ஸ்போர்ட் பண்ணிடுவேனா சொல்ற? போய் உன் அம்மாவையும் பொண்டாட்டியையும் பண்ண வேண்டியதுதானே... யாருக்கு தெரியும்?! காசு கொடுத்தா நீ எல்லாம் அதையும் செய்வடா... ஹ்ம்ம்ம்... இப்ப மட்டும் என்ன? தாய் நாட்டோட பாரம்பரியத்தை விற்கிறவன்தானே நீ" என்றதும் தர்மாவிற்கு அவமானத்தின் உச்சத்தில் முகமெல்லாம் சிவக்க, ஆதியைத் தாக்க முற்பட்டார். அப்போது நேராய் ஒரு கத்தி அவர் இதயத்தைக் கிழித்திட வந்தது. தமிழ் ஆரம்பத்திலிருந்தே தன் கோபத்தை எல்லாம் அணைப்போட்டு தடுத்திருந்தாள். ஆனால் கடைசியாய் அவர் பேசியது அந்த அணையை உடைத்தெறிந்து விட்டது. அப்போது அருகில் பழத்தின் மீது சொருகியிருந்த கத்தி அவள் கண்களில் பட, விளைவுகளைப் பற்றி எல்லாம் அவள் யோசிக்கவில்லை. அவனின் குற்றங்களும் இழிவான பேச்சுகளும் மட்டுமே அவள் எண்ணங்களில் எதிரொலித்தது. அந்தக் கூரிய கத்தியைக் கண்ட நொடி அதனை தன் கரத்தில் எடுத்தவள், தர்மாவின் இதயத்திற்கு நேராய் பாய்ச்ச, அது அவர் இதயத்தில் ஆழப் பாய்ந்து குருதி வெள்ளப்பெருக்காய் வெளியேறி இருக்க வேண்டியது. அதற்குள் துரதிஷ்டவசமாய் ஆதி அவள் கரத்தைப் பற்றித் தடுக்க, "விடு ஆதி... நம்மல எக்ஸ்போர்ட் பண்ணுவானாமே?! அவனை நான் மேலோகத்திற்கு எக்ஸ்போர்ட் பண்ணிடறேன்" என்றதும் ஆதி தமிழிடம், "வேண்டாம்... கத்தியைக் கீழே போடு தமிழ்" என்றாள். "போடமாட்டேன்... நம்ம நாட்டோட வளமையை அழிக்கிற பொக்கிஷத்தைத் திருடுற இந்த மாதிரியானவங்களை மன்னிக்கவே கூடாது... போலீஸ்ஸெல்லாம் வேஸ்ட்... நானே இவனுக்கு இன்ஸ்டன்டா தண்டனைக் கொடுக்கிறேன்" என்றவளின் கோபம் வெறும் மிரட்டல் அல்ல. தர்மா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். ஆதி மட்டும் தமிழைத் தடுக்கவில்லை என்றால் நிச்சயம் இந்நேரம் மேலோகம் போய் சேர்ந்திருப்பார். அத்தனை நெருக்கமாய் வந்த அந்தக் கத்தி அவர் கண்களுக்கு மரணத்தைக் காட்டிவிட்டுப் போனது. இயல்பை விடவும் பெரிதாய் மாறியிருந்த அவள் விழிகளில் அத்தனை கோபமும் ஆக்ரோஷமும் குடிகொண்டிருக்க, உக்கிரமான பெண் தெய்வங்களின் அவதாரமாகவே அவள் நின்றிருந்தாள். அதோடு அல்லாமல் இவள் போடும் சத்தத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் வேறு தர்மாவை ஆட்கொண்டிருந்தது. தமிழின் கோபம் தணிந்தபாடில்லை. ஆதியால் ஒரு நிலைக்கு மேல் அவளைத் தடுக்க முடியாமல் தத்தளிக்க, "என் கையை விடு ஆதி... இவன் எல்லாம் உயிரோட இருக்கக் கூடாது" என்று அவனைக் குத்தத் துடித்தவள், "டே தர்மா... பெண் சிலைகள்தான் கத்தியும் சூலமும் வைச்சுருக்கும்னு நினைச்சியா? உண்மையிலேயே தேவைப்பட்டா உன்னை மாதிரியான ஆட்களைக் கொல்ல கத்தியும் சூலத்தை நாங்களும் எடுப்போம்" என்று சொல்லும் போதே ஆதியின் கரம் தமிழின் ஆவேசத்தைத் தடுக்க இயலாமல் நழுவியது. அவனைக் குத்தி கொன்றுவிடலாம் எனும் போது அவள் மீண்டும் யார் கரத்திற்குள்ளோ கட்டுண்டது போல் ஓர் உணர்வு. வேறோர் கரம் அவள் கரத்தையும் தேகத்தையும் மொத்தமாய் கட்டிப்போட்டது போன்று தோன்ற அவள் கோபம் தீராமல், "என்னை விடு... நான் அவனைக் கொல்லணும்" என்றாள். "யாரை? என்னைக் கொல்லப் போறியா?" என்று கேள்வி அவளின் செவியின் உள்புகுந்து கேட்டது. அடங்கா தீயாய் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அவள் கோபமெல்லாம் ஒரு நொடியில் அணைத்துவிட்டது போல அந்தக் குரல் அவள் காதில் நுழைந்து அவள் மூளையை விழிப்படையச் செய்தது. அப்போது கண்விழிக்காமலே அவள் மனம் சிந்திக்க ஆரம்பிக்க, என்ன நிகழ்ந்தது? என யோசித்து, நடந்தவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தாள். அப்போது டாலரில் தொடங்கி தர்மாவினைப் பற்றி கண்ட கனவு வரை வரிசையாய் எல்லாம் அணிவகுக்க, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியவளுக்கு இறுதியாய் படுக்கையில் தான் அவன் அணைப்பில் கிடக்கிறோமா என்ற எண்ணம் உதித்த கணம் அவள் விழிகளைத் திறக்க, அவனை அத்தனை நெருக்கமாய் கண்டவளின் இதயம் தன் துடிப்பினைப் பதட்டத்தில் அதிகரிக்கச் செய்தது. அவன் அப்படி இருப்பதற்கான காரணத்தையும் தானே யூகித்தாள். அவள் கீழே விழ போகும் போது அவன் கரம் அவளைத் தடுத்தாட்கொண்டிருக்க வேண்டும். ஆனால் பிரச்சனை இப்போது அதுவல்ல. உறக்கத்தில் தான் என்னவெல்லாம் உளறினோமோ? அவன் அது குறித்து என்னவெல்லாம் கேள்வி எழுப்ப போகிறானோ? அதற்கு தான் எப்படி பதில் சொல்லி சமாளிப்பதோ? என மனதில் வரிசையாய் எழும்பிய கேள்விகளால் அச்சப்பட்டபடி இருக்கும் போதே, அவனின் விரல்கள் அவள் நெற்றியிலிருந்து வருடியபடி தன் அணிவகுப்பை தங்குதடையின்றி தொடர அதனை உணர்ந்து அவசரமாய் அவன் விரலை தட்டிவிட்டு நிமிர்ந்தவளுக்கு அவன் காட்சி தந்த விதம் கலவரப்படுத்தியது. பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமான் போல தன் ஒற்றைக் கரத்தால் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தான். அவன் விழிகளோ வில்லங்கமான திசையில் விபரீதமாய் பார்த்துக் கொண்டிருந்தது. அதிர்ந்தபடி அவனை விட்டு விலக எத்தனிக்க 'விடமாட்டேன்' என்பது போல் மௌன பாஷையில் உரைத்த அவனின் கூர்மையான விழி அவளை முழுவதுமாய் விழுங்கிடக் காத்திருந்தது. அவளை நாணமும் தவிப்பும் ஒரு சேர ஆட்கொள்ள, "வீர்" என்றவள் ஏதோ பேச எத்தனிக்கும் போது, அவன் அவள் இதழ்களில் தன் விரல்களை வைத்து, "உம்ஹும்... நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நானும் எதையும் கேட்க போறதில்லை... எனக்கு இந்த மொமன்ட் வேணும்... நீ வேணும்" என்று அழுத்தமாய் தன் முடிவைச் சொல்லிவிட்டு அவளை தன் பிடியில் இன்னும் இறுக்கமாய் பிணைத்துக் கொண்டான். அவன் தன் விருப்பத்தைக் கேட்க எண்ணவில்லை என்பது கொஞ்சம் வருத்தினாலும் அவள் அவனைத் தடுக்க முற்படவில்லை. அவனின் சிந்தனை வேறெதைக் குறித்தும் யோசிக்காமல் அவளைச் சுற்றி மட்டுமே இருப்பது அந்தத் தருணத்தில் அவளுக்குச் சாதகமான ஒன்றுதான் என எண்ணியவள் எதிர்வினை எதுவுமின்றி அவனின் விருப்பத்திற்கு இணங்கிவிட்டாள். அவனும் இதுதான் சமயமென்று அவளின் மீதான தன் உரிமையைக் கொஞ்சம் அதிகாரத்தோடு நிலைநாட்டிக் கொண்டான். * அந்த ரம்மியமான காலை பொழுதில் பகலவன் உதயமாகிப் பூ மகளை இதமாய் வருடி மெருகேற்ற, தன்னவளைக் காதலோடு பிணைத்திருந்தவனுக்கு காலம் நேரம் எல்லாம் காணாமல் போயிருந்தது. அந்த விடியல் அவர்களின் உறவையுமே மெருகேற்ற, அவனின் இந்தக் காதலும் அரவணைப்பும் டாலரைப் பற்றி தெரியும் வரைதான். அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின் எவ்விதம் அவளிடம் நடந்து கொள்வான் என அவள் கற்பனை கூடச் செய்திருக்கமாட்டாள். அந்த அறை இருளின் பிடியிலிருந்து மொத்தமாய் மீண்டு வெளிச்சம் படர தொடங்கியிருந்தது. வீரேந்திரனின் உள்ளுணர்வு விடியலினை உணர்ந்து மெல்ல விழித்துக் கொள்ள முயற்சிக்க, இரவு நடந்தவை எல்லாம் நினைவலைகளாய் அவனுக்குள் எழும்பியது. அப்போது அவன் உள்ளமோ மழை பொழிந்து பெருகிய புதுவெள்ளம் போல உற்சாகத்தில் நிரம்பி வழிந்திருக்க, அவன் கரங்கள் அனிச்சையாய் அருகாமையில் இருந்த தன் மனைவியின் தேகத்தை அணைத்துக் கொள்ள தேடியது. ஆனால் அவன் கரத்திற்கு அவள் சிக்கவில்லை. "தமிழ்" என்று அழைத்தபடியே அவன் விழித்துக் பார்த்த போது அவள் அருகில் இல்லை என்பதை அறிந்து கொண்டான். தன் போர்வையை விலக்கி எழுந்தவன் முகத்தை அழுந்தத் துடைத்து கொண்டு அறையில் மாட்டியிருந்த கடிகாரத்தைக் கவனித்தான். "என்ன? இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்" என்றவன் அவசரமாய் தன் பார்வையைச் சுழற்ற அப்போதும் அவள் அவன் கண்களுக்குத் தென்படவில்லை. 'எங்க போனா? என்னையும் எழுப்பி இருக்கலாம்... இல்ல' என்று எண்ணித் தேடியவன் குளியலறையிலும் அவள் இல்லையே என்ற ஏமாற்றத்தோடு அறையை விட்டு வெளியே வந்து தேடினான். அவன், “தமிழச்சி” என்று அழைக்க, அப்போது சந்திரா அவன் முன்னே வந்து, "தமிழ் ஆஃபிஸ் போயிட்டாளே வீர்?! உன்கிட்ட சொல்லிட்டுப் போகலயா?" என்று கேட்க, அவன் முகம் கோபத்தால் சிவந்தது. அவர் மேலும், "என்ன வீர் நீ... தூங்கிட்டியா... எப்பவும் டைமுக்கு எழுந்து ஜாகிங் கிளம்பிடுவியே?!" என்று கேட்டார். அவன் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றி, "நீங்க எப்போ வந்தீங்க?!" என்று கேள்வி எழுப்ப, "நைட்டே வந்துட்டேன்... நீங்க இரண்டு பேரும்தான் பொறுப்பா கதவைப் பூட்டாம தூங்கிட்டீங்களே!" என்று சொன்னதும் வீரேந்திரனின் முகம் அசட்டுத்தனமாக மாற அதனை கவனித்த சந்திராவின் முகத்தில் புன்னகை மிளிர்ந்தது. "நைட் சாப்பிட கூட இல்லை போல?!" என்றவர் மகனை விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தார். "ப்ச்… பசிக்கல சாப்பிடல... இப்போ என்னாயிடுச்சு? சும்மா கேள்வி கேட்டு நச்சரிக்காதீங்க... நான் கிளம்பணும்" என்று அவன் சாமர்த்தியமாக அவரிடமிருந்து நழுவிக் கொள்ள பார்த்தான். "டே வீர்... கொஞ்சம் இரு பேசணும்" என்றவர் அவனைப் போகவிடாமல் தடுக்க, "என்னம்மா? டைம் ஆயிடுச்சு கிளம்பணும்" என்று அவன் அவசரப்பட, "உங்க அப்பா ஃபோன் பண்ணாரு டா" என்றதும் அவன் அமைதியாய் நின்றபடி என்ன என்பது போல் சலிப்பாக மூச்சை இழுத்துவிட்டான். "உங்க அப்பாவும்... தமிழ் அப்பாவும் நாளைக்குப் புறப்பட்டு வர்றாங்களாம்" "அதுக்கு இப்போ நான் என்ன பண்ணனும்?" என்றவன் கடுப்பாக, "அப்பா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல சொன்னாரு" என்றதும் அவன் பெருமூச்சுவிட்டு, "என்ன?" என்று கேட்டான். "தமிழை அவங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வர சொன்னாரு" என்றதும் அவனுக்கு அவர்கள் வீட்டில் நிகழ்ந்த அந்த கசப்பான நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அவன் எரிச்சலோடு, "கண்டிப்பா அழைச்சிட்டுப் போகணுமா? " என்று கேள்வி எழுப்பினான். "இதென்ன கேள்வி வீர்? போகணும்... இதெல்லாம் சடங்கு... தமிழோட சித்தி எதிலயும் ஆர்வம் எடுத்துக்க மாட்டிறாங்க... அட்லீஸ்ட் நாமளாச்சும் இதெல்லாம் செய்யணும்" "அவங்களுக்கே விருப்பமில்லன்னா நீங்க ஏன் இதெல்லாம் பண்ணிட்டிருக்கீங்க? அதுவுமில்லாம அவங்க அன்னைக்கு என்னை என்னவெல்லாம் பேசினாங்கன்னு மறந்திட்டீங்களா?" என்று கேட்டு அவன் எரிச்சலானான். "நீ என்ன பேசுற வீர்... அவங்கப் பொண்ணை நீ அடிச்சா உன்னை கொஞ்சுவாங்களாக்கும்... அதான் கொஞ்சம் கோபப்பட்டுப் பேசிட்டாங்க" "அது கொஞ்சமா?!" என்று முறுக்கிக் கொண்டு நின்றான். "பின்ன... இன்னும் கேட்டா நீ செஞ்ச வேலைக்கு அவங்க ஒரு அறை கொடுத்திருந்தாலும் தப்பில்லன்னுதான் நான் சொல்லுவேன்" என்றதும் அவன் வாய்க்குள்ளேயே, 'அதான் அந்த திமிரு பிடிச்சவளே திருப்பி எனக்கு அறைக் கொடுத்திட்டாளே!' என்று முனங்க, "என்ன சொன்ன வீர்" என்று கேட்டார் அவர். "ஒன்னுமில்ல" என்றவன் அப்போதும் அவளை அழைத்துப் போக விருப்பம் தெரிவிக்கவில்லை. "சரி... அது இருக்கட்டும்... நீ தமிழ்கிட்ட நல்லபடியா நடந்துக்கிறியா வீர்?!" என்று கேட்டதும் "ஏன் அப்படி கேட்கிறீங்க?" என்று கேட்டுக் குழப்பமாய் பார்த்தான். "காலையில தமிழ் முகம் வாட்டாம இருந்துச்சு?" என்றதும் வீரேந்திரனின் மனம் நேற்று அவள் விருப்பத்திற்கு மாறாய் தான் நடந்து கொண்டுவிட்டோமா? என்ற கேள்வி அவன் மனதைத் துளைத்தது. அவர் அப்போது அவன் தோளினைத் தொட்டு, "நான் சொல்றதைக் கேளு வீர்... சும்மா வேலை வேலைன்னு வேலையைக் கட்டிட்டு அழாம அவ கூட கொஞ்சமாச்சும் டைம் ஸ்பென்ட் பண்ணு... முக்கியமா அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ... அவ வாழ்ந்து வளர்ந்த வீடு... அவளுக்கும் போகணும்னு தோனும்ல... உன் கோபத்தை எல்லாம் தூக்கிப் போடு... அவ பாவம்... அம்மா இல்லாத பொண்ணு வேற... அவ மனசுல இருக்கிறதை எல்லாம் யார்கிட்ட சொல்லுவா? நீதான் இனிமே அவளுக்கு எல்லாமுமா இருக்கணும்" என்று சொல்லவும் வீரேந்திரனின் மனமும் ஆழமாய் தன் தாயின் வார்த்தைகளை சிந்திக்கத் தொடங்கியது. அன்று அவள் சித்தியும் தம்பியும் நடந்து கொண்டதை நினைவுப்படுத்திய போது அவளுக்கு அவள் வீட்டில் பெரியளவிலான துணையோ அன்போ கிடைத்திருக்காது என்பதை உணர்ந்து அவள் மீது இரக்கமும் ஏற்பட்டது. இனி ஒருபோதும் தான் அவள் மனதை வேதனை அடைய விடக்கூடாது என்றும் முடிந்தளவு அவளைச் சந்தோஷமாய் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், முதல்முறையாய் அவளுக்காக தன்னுடைய சில கோட்பாடுகளைத் தளர்த்திக் கொள்ளவும் முடிவெடுத்தான். * தமிழச்சி பத்திரிக்கை அலுவலகம். தர்மாவின் டைரி. 'அந்தக் கடல் சீற்றத்தால் கடற்கரையில் ஒதுங்கியிருந்தது எல்லோரின் பார்வைக்கும் வெறும் கல்லாகவே தெரிந்தது. அந்தப் பெரிய கல்லில் பெரிய பொக்கிஷத்தின் ரகசியம் இருக்கும் என அதனைப் பார்க்கும் ஒருவரும் அறிந்திருக்கவோ யூகித்திருக்கவோ மாட்டார்கள். அன்றுதான் ஒதுங்கியிருந்த பாறை என் கண்ணில் பட்டது. அது சாதாரணமான பாறை அல்ல. அது ஒரு கோயில் கட்டமைப்பின் பிரமாண்டச் சுவர் என்று நான் மட்டுமே அறிந்து கொண்டேன். அது எந்த ஊரில் இருந்த கோயில் என்று தொடங்கிய தேடலில் கிடைத்த விடை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அந்த சுவரில் அதில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்கள் சிதிலமடைந்திருந்த போதும் அதனை பெரும் முயற்சியோடு பதிப்பிட அதில் கிட்டிய தகவல் என்னை அதிசயிக்க வைத்தது.' தமிழ் இதுவரை படித்துவிட்டு உடனே முன்புறம் இருந்த கல்வெட்டெழுத்துக்களைத் திருப்பிப் பார்த்தாள். அது வட்டெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. அவள் அவற்றைப் புரியும்படியாக மாற்றி எழுதினாள். அந்தக் கல்வெட்டு 'ராஜசிம்மன் எழுப்பிய இராஜஇராஜேசுவரி அம்மன் கோயில்' என்ற தகவலை உரைத்தது. மெல்ல மெல்ல அவளுக்கு அந்த எழுத்துக்கள் சொல்லும் ரகசியம் யாதென்பது விளங்க வெலவெலத்துப் போனாள். இராஜஇராஜசுவரி அம்மன் அவர்கள் சந்ததிகள் காலங்காலமாய் வழிபட்டு வந்த தெய்வம். மெல்ல மெல்லச் சமுத்திரத்தின் ஆக்கிரமிப்பால் முழுவதுமாய் அந்தக் கோயில் கடலுக்குள் மூழ்கிவிட்டதாக அவள் தாத்தா சொல்லியிருந்தார். தர்மா சொன்ன அந்த நூறு கோடி மதிப்புள்ள பொக்கிஷம்? அப்படியெனில் தன்னுடைய வம்சத்தின் பொக்கிஷத்தை களவாட அந்தத் தர்மா திட்டமிட்டிருந்தானா என எண்ணும் போது அவளின் மனம் பதட்டத்தை நிரப்பியது. அவனுக்குப் பின்னே இருக்கும் அந்தக் கூட்டத்திற்கு இவற்றைக் குறித்த தகவல் தெரிந்திருக்குமா என்று எண்ணியவள் அவர்கள் தேடி வந்தால் தான் எங்கனம் அதனைப் பாதுகாப்பது எனத் தவிப்படைந்தாள். தலையை அழுந்தப் பிடித்தபடி அந்தப் பிரச்சனைக்கானத் தீர்வை யோசிக்க அப்போது அவளின் செல்பேசி ஒலித்தது. யாரென்று கவனியாமலே அந்தச் செல்பேசி அழைப்பை ஏற்று , "ஹெலோ" என்றாள். எதிர்புறத்தில், "ஏ தமிழச்சி... நீ மட்டும் என் கண்ணில பட்ட... செத்தடி மவளே" என்று ரகுவின் குரல் கோபமாய் ஒலித்தது. தன் நண்பனின் குரலையும் அதிலிருந்த கோபத்தையும் உணர்ந்தவள், "ஏன்டா இப்ப கத்துற? என்னடா ஆச்சு?" என்று நிதானித்து கேட்க, "செய்றதெல்லாம் செஞ்சிட்டு என்னாச்சுன்னா கேட்கிற?!" என்று அதே கோபத்தோடுத் தொடர்ந்தான். "ப்ச்...இப்ப என்ன செஞ்சுட்டேன்னு இவ்வளவு டென்ஷன்? " "ஹ்ம்ம்ம்... அந்த தர்மாவோட டைரியை யாருடி எடுத்தது? " அவன் கோபத்தை உணர்ந்தவள் இயல்பாக, "என்ன டைரி? எந்த தர்மா?" என்று கேட்டாள். "ஏ தமிழச்சி... நேர்ல வந்தேன் உன்னை உரிச்சு உப்புக்கண்டம் போட்டிருவேன் பாத்துக்கோ" என்றான். "நீ என்னை உரிக்க போறியா? நேர்ல வா... யார் யாரை உரிக்கிறான்னு பார்க்கலாம்?" என்றாள். "ஓ... அப்படியாடி தமிழச்சி... சரி...இந்த டைரி மேட்டரை நான் உன் ஏசிபி புருஷன்கிட்ட சொல்லட்டுமா?!" என்று மிரட்டலாய் கேட்டான். அவன் இப்படிச் சொன்னதுமே அவளுக்கு உடல் நடுக்கமுற்றது. இருந்தும் மனதைத் திடப்படுத்தியபடி, "டே லூசு... ஏசிபி கிட்ட சொன்னா நீயும் சேர்ந்துதான் சிக்குவ" என்றாள். "பரவாயில்லை... எனக்கு ஒரு கண்ணு போனா உனக்கு இரண்டு கண்ணு போகும்ல" என்று அவன் உரைத்த மறுகணமே அவள் பதற்றமடைந்தாள். "டே ரகு... நாம ஃப்ரண்ட்ஸ்... நமக்குள்ள எவ்வளவு வேணா சண்டை போட்டுக்கிட்டாலும்... மூணாவது மனுஷன்கிட்ட விட்டுக்கொடுத்துக்கலாமா?" என்று அவள் தடலாடியாய் மாற்றிப் பேசவும் அவன் விழுந்து விழுந்து சிரித்தான். "யாருடி மூணாவது மனுஷன்... அந்த ஏசிபி உன் புருஷன்டி" என்றதும் அவள் மௌனமானாள். ஆம், அவன் தன் புருஷன்தான். ஆனால் அவனை தன் மனம் விரும்பினாலும் ஏனோ அவனை தன்னுள் ஒருவனாய் ஏற்கவோ நெருக்கமாய் உணரவோ மறுக்கிறது என தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். ரகு தொடர்ந்தபடி, "அந்த ஏசிபி இந்த கேஸ்ல ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் கூட விடாம நோட் பண்றாரு... டைரி மிஸ்ஸானதை கண்டுபிடிச்சது கூட அவர்தான்... நாம செஞ்ச வேலை தெரிஞ்சா சங்குதான்... அதனால நீ அந்த டைரியை என்கிட்ட கொடுத்திரு... நான் எப்படியாவது தர்மா வீட்டில வைச்சுட்டு... இந்த பிரச்சனையை மேனேஜ் பண்றேன்" என்றான். அவளோ யோசனையில் ஆழ்ந்தாள். இப்போது இந்த டைரியை கொடுத்தால் இந்த ரகசியமும் வெளிப்பட்டுவிடுமே. பிறகு அந்தப் பொக்கிஷத்திற்கு இன்னும் பெரிய ஆபத்து நேரலாம் என அவள் எண்ணி ரகுவிற்கு பதிலுரைக்கவில்லை. "தமிழ்... ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு... உன்கிட்ட டைரி இருக்கிறதை அந்த ஏசிபி மட்டும் கண்டுபிடிச்சா... நீ காலி" என்று அவன் மேலும் அவளை அச்சுறுத்திக் கொண்டிருக்க, இன்னும் டாலர் பற்றி ரகுவிற்கு தெரியாதோ என அவள் யோசிக்கும் போதே அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். அப்போது கதவை திறந்து வீரேந்திரன் பார்மலான பேண்ட் ஷர்ட்டில் புன்னகையோடு, "உள்ளே வரலாமா? " என்று நிமிர்வோடு கேட்க அவள் நெஞ்சம் படபடத்தது. 'இவன் இப்படி ஷாக் கொடுத்து கொடுத்தே சீக்கிரம் என்னை ஹார்ட் பேஷன்ட்டா மாத்திருவான் போலயே' என எண்ணியவள் விடிந்தும் விடியாமலும் அவன் எங்கே அந்தக் கனவைப் பற்றி கேள்வி எழுப்புவனோ அல்லது தன் முகத்தைப் பார்த்து தன் மனநிலையை அறிந்து கொள்வானோ என பயந்துதான் அவள் விரைவாகப் புறப்பட்டு வந்தாள். ஆனால் அவன் இங்கே வருவான் என அவள் நினைக்கவேயில்லை. அதுவும் வேலைக்குப் போக வேண்டியவன் யூனிபார்ஃம் கூட இல்லாமல் பார்க்க வந்திருப்பது அவளுக்குச் சந்தேகத்தையே புகுத்தியது. அதற்குள் அவன் அவள் அனுமதியில்லாமலே உள்ளே நுழைந்து நேராய் அவள் இருக்கையின் அருகே வந்து நிற்க, தமிழின் காதிற்குள் ரகுவின் குரல், "பதில் சொல்லுடி தமிழச்சி" என்று கேட்டுக் கொண்டிருக்க, அவள் அதனை அவசரமாய் அணைத்து மேஜை மீது வைக்கும் போது அங்கிருந்த தர்மாவின் டைரியை பார்த்தவள் திரும்பி வீரேந்திரனை ஒரு பார்வைப் பார்த்தாள். அவன் கழுகு பார்வை அந்த டைரியை அடையாளம் கண்டுவிடுமா என அச்சத்தோடு, "என்ன வீர்... நீங்க ஸ்டேஷன்... போகாம... இங்க... ஏன்?" என்று வார்த்தைகளைச் சரியாகக் கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா