மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Book Reviewsஅவனின்றி ஓரணுவும் - மோனிஷாPost ReplyPost Reply: அவனின்றி ஓரணுவும் - மோனிஷா

Quote from monisha on November 27, 2021, 9:06 PM
பரப்பரப்பையும் விறுவிறுப்பையும் தாங்கி நகரும் இந்த நாவலைப் படித்து முடிக்காமல் கீழே வைக்க எனக்கு மனமில்லை. அத்தனை சுவாரசியமாக கதையை நகர்த்தி இருப்பது நாவலாசிரியரின் சிறப்பு. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் கணிப்பதில் ஒரு வாசகியாக நான் தோற்றுத்தான் போனேன். எந்த இடத்திலும் துளியும் தொய்வில்லாமல் நேர்த்தியாக கதையை எடுத்துச் செல்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையில் கைத்தேர்ந்தவராகத் தான் நாவலாசிரியர் என் கண்களுக்குத் தெரிகிறார். ஆரவாரமின்றி அமைதியாகத் தொடங்கும் இந்தக் கதையின் பின்னால் இருப்பது இயற்கையின் பேராற்றல் என்பதை இதில் வரும் வரிகள் உணர்த்துகிறது. எங்கோ பிரேசிலில் உண்டாகும் ஒரு பட்டாம்பூச்சியின் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் கூட தொடர்பிருக்கிறது என்னும் கேயாஸ் தியரியை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்து நகர்கிறது கதைக்களம். கதையின் தொடக்கத்தில் வரும் சில எதார்த்தமான காட்சிகள் பின்னாளில் கதையின் முக்கிய காரணமாக அமைவது மிகவும் சிறப்பான விஷயம். ஆங்காங்கே வரும் எதிர்பாராத திருப்பங்கள் கதைக்குக் கூடுதல் சிறப்பு. ஆரம்பத்தில் வரும் கதாப்பாத்திரங்களும் சரி இறுதியில் வரும் கதாப்பாத்திரங்களும் சரி ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அனைத்துக் கதாப்பாத்திங்களுமே தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அறிவியலைப் பின்னணியாகக் கொண்டுள்ள இந்தக் கதையில் வரும் ஹரிஹரன், பிரபஞ்சன், ஷெர்லி, சத்யா, கிறிஸ்டோபர் எட்வர்ஸ், செல்லா, நீலா போன்ற கதாப்பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது இறுதியில் தெரிய வருவது வாசிப்பவர்களின் புருவங்களை வில்லாக்கும். அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கடற்கரை மணலுக்கு தெரியாது இன்னும் சில மணி நேரங்களில் ஓர் பேரழிவிற்கான தூதை இயற்கை விடுக்கப் போகிறது என்பது. அந்தப் பேரழிவின் அறிகுறி ஏதும் இல்லாமல் கடற்கரை மக்கள் மிகவும் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் கடல் தீண்டும் தூரத்தில் அமைந்திருந்த ஒரு வீட்டின் ஓரத்தில், சுமார் 90 வருடங்களுக்கு முன்பு நடந்த டெக்ஸாஸ் சூறாவளியைப் பற்றி படித்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன். அப்போது அவனுக்குத் தெரியாது அந்தக் கோர நிகழ்விற்கும் டெக்ஸாஸ் சூறாவளிக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பிருக்கிறது என்பது. அங்கு நடக்கப்போகும் பேராபத்தையும், கேட்க விருக்கும் மரண ஓலங்களையும் பிரபஞ்சனின் ஈஎஸ்பி சக்தி அவனுக்கு காட்சிப்படுத்தியது. அந்த பயங்கர சம்பவத்தைத் தடுக்க இயற்கையோடு அவன் நடத்தும் போராட்டம் தான் கதை. இந்த இயற்கையோடு நடக்கும் போராட்டத்தில் எங்கோ கலிபோர்னியாவில் இருக்கும் ஷெர்லிக்கும் பங்கு இருக்கிறது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நேச்சுரலிஸ்ட்டும் ஜீயாலஜிஸ்ட்டுமான ஷெர்லியின் தாத்தா கிரிஸ்டோபர் தான் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் நடந்த ஓர் விபத்திற்குக் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?. இந்தப் புரியாத புதிர்களுக்கான விடைகளைக் கிறிஸ்டோபரின் "டிசாஸ்டர்" ஃபைல் நமக்கு விளங்க வைக்கும். கதையில் இருக்கும் முடிப்புகளை அவிழ்க்க அந்த "டிசாஸ்டர்" ஃபைலைப் பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதையின் இடையிடையே மரபணுக்களைப் பற்றியும், ஆன்மாவின் சக்தியைப் பற்றியும் சில தகவல்கள் வருவதும், இறுதியில் அவை அனைத்தும் ஒரு கோட்டில் சந்திப்பதும் எழுத்தாளரின் ஆளுமையை உணர்த்துகிறது. இயற்கையோடு நடக்கும் போராட்டத்தில் பிரபஞ்சனுக்குத் துணை நின்றது குரு குணபாலனின் வார்த்தைகள் தான். அந்த மரணக்காண்டத்தைக் கடக்க அவரின் உதவியை நாடி சென்ற பிரபஞ்சனிடம் "அவனின்றி ஓரணுவும்" என்று அவர் சொல்லிய வார்த்தைகளே நாவலின் தலைப்பாக அமைந்துள்ளது. உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்னும் ஓர் உண்மையை நம் மனதில் ஆணித்தரமாகப் பதிய வைக்கிறது இந்த "அவனின்றி ஓரணுவும்" நாவல். கடந்த காலத்தில் நடக்கும் நிகழ்வுகளே எதிர் காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு அடித்தளமாக அமைவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படி கடந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையே அமையும் பாலம் தான் நிகழ்காலம். அறியாமல் தெரியாமல் செய்த பிழைகள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அந்தத் தாக்கத்தின் வீரியத்தைக் குறைக்கவும் கூட்டவும் ஓர் பேராற்றல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது தான் இயற்கை. இப்படியான பல உண்மைகளை வாசகரிகளின் மனதில் விதைத்திருக்கிறது இந்தப் புத்தகம். Review By VAISHNAVI

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா