மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 14Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 14

Quote from monisha on January 8, 2026, 12:57 PM

அத்தியாயம் – 14

அந்த வெள்ளை நிற கேக்கில் ‘ரஞ்சன்’ என்ற அவன் பெயர் வளைவுகளுடன் அழகாக எழுப்பட்டிருந்தது. அம்மா இறந்த பிறகு இது போன்ற கொண்டாட்டங்கள் எதுவும் அவன் வாழ்வில் நடந்ததாக அவனுக்கு நினைவில்லை. அதுவும் பாட்டி கை குழந்தையாக இருந்த ரத்னாவை தூக்கிக்கொண்டு ஊருக்கு சென்றுவிட, அவன் மட்டும் அப்பாவுடன் தனித்திருக்க நேர்ந்தது.

‘ஊர்ல ஒரு சின்ன ஸ்கூல எல்லாம் படிச்சா என் பையனோட ப்யூச்சர் என்ன ஆகுறது’ என்று அப்பாவும் பிடிவாதமாக அவனை ஊருக்கு அனுப்ப மறுத்துவிட்டார். அவருடைய வெறுப்பு கோபம் அத்தனையும் தாங்கும் ஒரு இடிதாங்கி போல அவன் மாறி போனான். உடலே மறுத்து போகுமளவுக்கு அடி உதைகள் வாங்கி இருக்கிறான்.

அதன் பிறகு அவன் வாழ்வில் நடந்த எதையும் அவன் யோசித்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை.

அப்போது அவன் தோளில் தட்டிய கவிதா, “ரஞ்சன் கேக்கை வெட்டு” என்றாள். அங்கே கூடியிருந்த கவிதாவின் நண்பர்கள் , ‘ஹாப்பி பர்த்டே டூ யூ’ பாட்டை கோசராகப் பாடவும், மெழுகுவர்த்திகளை ஊதி முடித்து கேக்கை துண்டாக வெட்டி கையிலெடுத்தான்.

நிமிர்ந்து கவிதாவின் வாய் வரை அதனைக் கொண்டு சென்றானே ஒழிய ஊட்டவில்லை. அப்படியே அவன் கை தயக்கத்தில் நின்றுவிட, “ம்ம்ம்” என்று அவள் வாயைத் திறந்தாள். அவன் மகிழ்ச்சியுடன் ஊட்ட, அவளும் பதிலுக்கு ஒரு துண்டை வெட்டி அவனுக்கு ஊட்டினாள்.

அவனுக்கு அந்த நொடி வானத்தில் பறப்பது போலிருந்தது.

“டேய் எங்களுக்கு எல்லாம் கேக்” என்று அஜய் கேட்கவும்தான் அவன் மற்றவர்களுக்கு எல்லாம் ஊட்டினான். அதன் பின் ஒவ்வொருவராக அவனுக்குப் பரிசுகள் தந்தனர்.

அஜய் அவனுக்கு ஐபோன் ஒன்றைப் பரிசாகத் தந்து ஆச்சரியப்படுத்த, அடுத்தடுத்து சில நண்பர்கள் பல விலையுயர்ந்த பரிசுகளை அவனுக்குக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இறுதியாக கவிதா, “இட்ஸ் மைன்” என்று ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்தாள்.

“இவ்வளவு சின்ன பெட்டிக்குள்ள என்ன இருக்க போகுது” என்று நண்பர்கள் எல்லாம் கேலி செய்ய, ரஞ்சனோ அதனைப் பிரித்துப் பார்க்கும் ஆவலில் இருந்தான்.

உள்ளே ஒரு சிறிய சாவி இருந்தது. அதனைக் கையிலெடுத்தபடி அவளை நிமிர்ந்து பார்க்கவும், “இட்ஸ் ஆ பைக் கீ. கீழே நிற்குது” என்று அந்த இருசக்கர வாகனத்தின் படத்தை அவனுக்குத் தன் செல்பேசி திரையில் காட்டினாள்.

பிரமாண்டமான தோற்றத்தில் இருந்த அந்த பைக்கை பார்த்தவன் விழிகள் வியப்பில் விரிய, “பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள். அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. நெகிழ்ச்சியில் தலையை மட்டும் அசைத்தான்.

ஒரு வழியாகப் பிறந்த நாள் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கிளம்ப, அஜய் மட்டும் இருந்தான்.

“ஆனந்தியும் வந்திருக்கலாம்” என்றாள் கவிதா.

“அதான் சொன்னேனே, கிளம்புற நேரத்துல அவங்க அம்மா அப்பா வந்துட்டாங்கனு” என்று இருவரும் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருக்க, ரஞ்சன் முகப்பறை முழுக்கவும் சிதறிக்கிடந்த காகிதத் தட்டுக்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

அதனை பார்த்தவள், “ரஞ்சன் இரு நானும் வரேன்” என,

“இருக்கட்டும் பரவாயில்ல, நானே பண்ணிடுறேன்” என்று அவன் மும்முரமாகச் சுத்தம் செய்வது கொண்டிருந்தான்.

“இப்படிதான் தினமும் பண்றான். என்னை ஒரு வேலை செய்ய விடுறது இல்ல. நான் தூங்கி எழுந்து வர்றதுக்குள்ள சமையலை எல்லாம் முடிச்சுடுறான். வேலைக்கு ஆள் வைச்சா அவங்க வேலையும் சேர்த்து இவனே பார்த்துடுறான்” என்று அவள் கடுப்பாக, “ஆபிஸ்ல யும் அவன் அப்படிதானே இருக்கான்” என்று சொல்லி அஜய் சிரித்தான்.

“அதான் அவன் பிரச்னையே. ஒரு பாஸ்னா மத்தவங்கள வேலை வாங்கணும். கெத்தா இருக்கணும். ஆனா அவன்கிட்ட அந்த பாஸி ஆட்டியூட்டையே வர மாட்டேங்குது.”

“போக போக வரும். இப்பவே அவன் நிறைய மாறி இருக்கான்தானே”

“மாறி இருக்கான்...தான்”

“அப்புறம்”

அவள் பெருமூச்சுடன் ரஞ்சன் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அஜய் குரலை தாழ்த்தி, “நான் உன்கிட்ட ரஞ்சன் பத்தி ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சிட்டேன் இருந்தேன்” என்றான்.

“என்ன விஷயம்?”

“அவன் உன்னை லவ் பண்றான்னு தோணுது”

“வாட்”

“ஏன்? உனக்கு தோணலயா... அவன் உன்னை பார்க்குற விதத்துல, பேசுற விதத்துல” என்றதும் சில நொடிகள் மௌனமானவள் பின்னர், “தோணி இருக்கு. ஆனா அதை நான் லவ்னு எல்லாம் நினைக்கல” என்றாள்.

“லவ் இல்லனா அப்புறம் அது என்ன”

“ஈர்ப்பு, அவன் நிறைய பெண்களோட பழகுனது இல்லயில்ல. அதுவும் இல்லாம நான் அவன்கிட்ட நல்லா பழகுற முதல் பொண்ணுங்குறதால அவன் என்கிட்ட அட்டிரேக்ட் ஆகி இருக்கான். போக போக எல்லாம் மாறிடும். அவனும் ஒரு பெரிய பிஸ்னஸ் டைக்கூன் ஆகிட்டானா அவன் வாழ்க்கையில் நிறைய பொண்ணுங்க வருவாங்க. நெருங்கி பழகுவாங்க. அப்புறம் அவனுக்கு எல்லாம் என் ஞாபகம் இருக்காது.”

“நீங்க இரண்டு பேரும் லீகலா ஹஸ்பென்ட் அன் வொய்ப்ங்குறதை மறுந்துட்டு பேசுற”

“வெறும் லீகலா” என்று சொல்லி அலட்சியமாகச் சிரித்தாள். ஆனால் அஜய் சென்ற பிறகு அவன் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்த்தாள். இதை இப்படியே வளர விட கூடாதோ என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், ரஞ்சன் தட்டில் வைத்து இரு கோப்பைகளை எடுத்து வந்தான்.

அதில் அவனுக்கும் பாலும் அவளுக்குத் தேநீரும் இருந்தது. வீட்டில் இருக்கும் சமயங்களில் பால்கனியில் ஒன்றாகக் காற்று வாங்கிக் கொண்டே தேநீர் அருந்துவது போன்ற பழக்கத்தை எல்லாம் அவள்தான் ஏற்படுத்தினாள்.

“தேங்க்ஸ்” என்று அமைதியாக அதனை வாங்கி பருகிக் கொண்டே, “ஆமா நீ பைக் ஓட்டுவதானே” என்று கேட்க, அவன் மெலிதாகப் புன்னகை சிந்தினான்.

“என்ன சிரிக்குற, தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதாடா”

“தெரியும். நான் புட் டெலிவரி பாயாவும் வேலை செஞ்சிருக்கேன். பல மணி நேரம் ரோட்லயே சுத்தி இருக்கேன். வெயில ரொம்ப தூரம் போகும் போதெல்லாம் எங்கயாச்சும் ஓரமா கொஞ்ச நேரம் நிற்க மாட்டோமான்னு இருக்கோம். ஆனா அடுத்தடுத்த டெலிவரி கொடுக்க வேண்டி இருக்கும். அதனால் நின்னு மூச்சு வாங்க கூட எனக்கு நேரம் இருந்ததே இல்ல.” என்று அவன் சொன்னதைக் கேட்டவள் முகத்தில் வருத்தம் பரவியது.

சில நிமிட மௌனத்திற்குப் பின், “சரி கிளம்பு. கொஞ்சமா தேவையான திங்க்ஸ் வரைக்கும் ஒரு பேக்பேக்ல எடுத்து வைச்சுக்கோ” என்றாள்.

“எதுக்கு?”

“நம்ம ஒரு லாங் டிரைவ் போக போறோம். அதுவும் பைக்ல”

அவன் அவளை புரியாமல் பார்க்க, “என்ன நிற்குற கிளம்பு. போ போய் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை” என்று விரட்டினாள்.

அவனும் தேவையான பொருட்களை எடுத்து ஒரு பையை நிரப்பிக் கொண்டான்.

“எல்லா எடுத்து வைச்சுக்கிட்டியா”

“எடுத்து வைசுக்கிட்டேனு நினைக்குறேன்”

“ஏதாவது வேணும்னா வாங்கிக்கலாம் விடு” என்றவள் , “சீக்கிரம் சாவி எடுத்துட்டு வா” என்றாள்.

கதவை பூட்டிக் கொண்டு இருவரும் கீழே வர, நேரில் அந்த பைக் இன்னும் பிரமாண்டமாகத் தெரிந்தது. அவனுக்குப் படபடப்பானது.

“என்ன பார்த்துட்டு இருக்க.ஹெல்மட்டை போட்டுட்டு வண்டியை எடு”

“எங்கே போறோம்?”

“எங்கேயோ போறோம், ஜாலியா ஒரு ரைட். யாருக்காகவும் நீ இன்னைக்கு வண்டி ஓட்ட போறதில்ல. உனக்காக ஓட்ட போற. நினைச்ச இடத்துல நின்னு ரெஸ்ட் எடுக்கலாம். பிடிச்ச இடத்துல சாப்பிடலாம். காத்து மாதிரி அப்படியே பறந்து போயிட்டே இருக்கலாம்” என்றவள் சொன்னதை எல்லாம் கேட்டு மகிழ்ச்சியுடன் பைக்கில் ஏறினான்.

அவளும் பின்னே ஏறிக்கொள்ள, அவன் தயக்கத்துடன் திரும்பினான்.

“என்ன?”

“நான் இந்த மாதிரியான பைக்..க ஒட்டுனதே இல்ல”

“நீ முதல ஸ்ட்ராட் பண்ணு. எல்லாம் தானா ஓடும்” என்றாள்.

தயக்கத்தை ஒதுக்கிவிட்டு அதனை இயக்கினான். உண்மையிலேயே காற்றில் பறந்து செல்வதை போலத்தான் இருந்தது. முக்கியமாகத் தோளில் பதிந்த அவள் கரங்கள்தான் இன்னும் இன்னும் அவனை மேலே பறக்கச் செய்தன.

எங்கே போகிறோம் என்ற உணர்வே இல்லாமல் வண்டியை ஒட்டிக் கொண்டு சென்ற அந்த உணர்வு உண்மையில் புதிதாக

இருந்தது. வானத்தில் அணிவகுத்துப் பறக்கும் பறவைகள், உடன் வரும் மேகக் கூட்டங்கள், மாலை சூரியனின் மஞ்சள் பொன் கிரணங்கள், சாலையோர டீ கடை, நெடுஞ்சாலை உணவகத்தின் வாசம் என்று காலத்தை அப்படியே நிறுத்திப் பிடித்து அவன் கண் முன்னே காட்டினாள்.

ஒவ்வொரு தருணத்தையும் நின்று நிதானமாக ரசிக்கச் செய்தாள். இரண்டு நாள் முழுவதும் ஊர் சுற்றிவிட்டு நடுநிசியில் மழைச் சாரல்களில் நனைந்து கொண்டே வீடு திரும்பிய போது அவனுக்குள் இருந்த மனஇறுக்கங்களும் துன்பங்களும் வாழ்க்கையின் வலி நிறைந்த அனுபவங்களும் கரைந்து காணாமல் போயிருந்தன.

“எப்படி இருந்துச்சு இந்த ட்ரிப்?” என்றவள் கேட்ட போது அப்படியே அவளைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் அதை செய்ய அவனுக்கு துணவில்லை.

“சூப்பரா இருந்துச்சு” என்று மட்டும் சொன்னான்.

“இந்த ட்ரிப் மாதிரிதான் வாழ்க்கையும். இலக்கில்லாத பயணம் மாதிரி. தொடங்குற இடம் தெரியும். முடியுற இடம் தெரியாது. ஸோ ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம ரசிக்கக் கத்துக்கணும். ரசிச்சு வாழ கத்துக்கணும். Journey is better than the destination. இனிமேயாச்சும் உனக்காக வாழு. பிடிச்சு வாழு” என்று சொல்லி விட்டு அவள் சென்றுவிட, அவன் மழையில் நனைந்தபடி அங்கேயே நின்றுவிட்டான்.

அவனுடைய உலகம் அப்படியே சுழலாமல் நின்று விட்டது.

அவளுடனான அந்தப் பயணம் பல யுகங்களின் பாதிப்பை அவனுக்குள் ஏற்படுத்தியது. வாழ்க்கை முழுக்கவும் அவளுடன் அப்படியே பயணம் செய்ய வேண்டும் போலிருந்தது. அதற்காக மனம் ஏங்கியது.

“ரஞ்சன்... ரஞ்சன்” என்றவள் அழுத்திக் கூப்பிடவும், அவன் பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வந்தான்.

“என்ன கனவுலகத்தில மிதந்துட்டு இருக்கியா... போதை தலைக்கு ஏறிடுச்சோ?” என்றவள் எள்ளலுடன் கேட்க, அவன் புன்னகைத்தான்.

“போதைதான். ஆனா இது இல்ல என் போதை... என் போதை” என்றவன் விரல்கள் அவளை நோக்கி நீளவும், அவள் கடுப்பாகிவிட்டாள்.

“உனக்கு எப்படிப் புரிய வைக்குறதுனே எனக்கு தெரியல”

“எனக்கும்தான், என் பீலிங்க்ஸ் உங்களுக்கு எப்படிப் புரிய வைக்குறதுனே தெரியல” என்றவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவளை அப்படியே விழுங்கி விடுவது போலப் பார்த்து வைக்க,

“எதுக்கு அப்படி என்னை பார்க்குற?” என்றாள்

“பார்க்குறது கூட குத்தமா என்ன?”

“என்னை அப்படி பார்க்காதன்னு சொன்னேன்”

“என் கண்ணுக்கு நீங்க மட்டும்தானே தெரியுறீங்க”

“இதுக்குதான் நேர்ல பார்த்து பேசணும்னு சொன்னியா?”

“பின்ன... போன்ல பேசுனா இவ்வளவு ரொமாண்டிக்கா இருக்காது இல்ல. இப்படிப் பார்க்கவும் ரசிக்கவும்”

“போதும் நிறுத்து ரஞ்சன்... ரொமாண்டிக்காம் ரொமாண்டிக்” என்று அவனை எரிச்சலுடன் பார்த்து, “நான் ஒன்னும் இதுக்காக வரல.” என்று சொல்லி ஒரு காகித உரையை மேலே வைத்து, “இதுக்காகதான் வந்தேன். ஆக்சுவலி இதை வாங்கிட்டு வர்றதுக்குத்தான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு” என்றாள்.

அது விவாகரத்து பத்திரம் என்று பார்த்ததுமே தெரிந்ததுவிட்டது. அத்தனை நேரம் அவன் முகத்திலிருந்த புன்னகையும் உடனடியாக மறைந்துவிட்டது.

சிப்பந்தியிடம், “பில்லை ரூமுக்கு அனுப்பிடுங்க” என்றவன் அவளை கண்டு கொள்ளாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான்.

“ரஞ்சன் நில்லு” என்றவள் அவனைப் பின்தொடர்ந்து சென்று, “நீதானே பேசணும்னு சொன்ன, இப்ப எங்க ஓடுற” என்றாள்.

தன் அறை வாசலுக்கு வந்து நின்றவன், “யார் ஓடுறா. நான் ஓட எல்லாம் இல்ல” என்று சொல்லி கொண்டே தன் கீ காட்டை எடுத்து கதவைத் திறந்துவிட்டு, “புருஷன் பொண்டாட்டி பிரச்னை எல்லாம் பார்ல வைச்சு பேசனா நல்லா இருக்காது இல்ல. அதான் ரூம்ல உட்கார்ந்து பேசலாம்னு வந்தேன். உள்ளே வாங்க. பேசுவோம்” என்றான்.

“எது, புருஷன் பொண்டாட்டி பிரச்னையா?” என்று அவள் முகத்தை சுருக்க,

“ஆமா” என்றான்.

“நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல, சரியா”

“அப்படினா நீங்க எதுக்கு எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுக்கணும்” என்றவன் கேட்டதில் ஒரு நொடி திக்கி நின்றாள்.

“நல்லா பேச கத்துக்கிட்ட”

“யார் கத்தக் கொடுத்தது.” என்றவன் கூற, அவள் கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள்.

“வெளியே ரொம்ப குளிருல. உள்ளே வாங்க” என்றவன் அழைக்க, தனிக் கூடாரம் போலிருந்த அந்த அறையின் தோற்றத்தை பார்த்தவள், “நான் உள்ளே வரல. இங்கேயே பேசுவோம்” என்றாள்.

“என்ன தயக்கம், நம்மிரண்டு பேரும் ஒரே வீட்டுல இருந்திருக்கோம். ஒரே பெட்ல கூட படுத்திருக்கோம்” என்றதும் அவள், “ஷாட் அப்” என்று கத்திவிட்டாள்.

“ஏன் கோபப்படுறீங்க. பேசத்தாங்க கூப்பிடுறேன்.”

“தேவை இல்ல. அதுவும் இல்லாம நம்ம பேச எதுவும் இல்ல. நீ கையெழுத்து போட்டா நான் கிளம்பிடுவேன்” என்று அந்த காகித உரையிலிருந்த பத்திரத்தை எடுத்து நீட்டி, “ஒழுங்கா சைன் போடு” என்றாள்.

அவள் முகத்தை ஒருவித அலட்சியத்துடன் பார்த்துக் கொண்டே, “ஓ போடலாமே” என்று அதனை வாங்கி கிழித்து வெளியே இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு, “போட்டாச்சு” என்றான்.

அவன் செய்கையைப் பார்த்து கடுப்பானவள், “சரி, நான் கோரட்ல பார்த்துக்கிறேன்” எனவும், “கோர்ட்ல போய் என்ன சொல்வீங்க. இவன் என்னை விட வயசுல சின்னவனா, இல்ல எங்களோடது கல்யாணமே இல்ல இட்ஸ் ஜஸ்ட் ஆ பிஸ்னஸ் டீல்னா” என்று நக்கலாகக் கேட்க, அவள் கோபம் இன்னும் அதிகமானது.

“அது என் பிரச்னை. உன் பிரச்னை இல்ல. அப்புறம் டிவோர்ஸ் கிடைக்கலனாலும் நான் உன் கூட வந்து வாழ மாட்டேன். சத்தியமா வாழ மாட்டேன்.” என்றவள் திரும்பி நடக்கவும், அவன் அவள் இடையைத் தன்புறம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் இதழ்கள் அவள் இதழ்களுக்கு மிக அருகில் சென்றுவிட்டது.

அவன் சட்டையைக் கெட்டியாகப் பிடித்து அந்த இடைவெளியை அப்படியே நிறுத்திவிட்டவள், “ரஞ்சன்” என, “நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன். சத்தியமா உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்றான்.

அவன் குரலிலிருந்த உறுதியும் பார்வையிலிருந்த தீவிரமும் அவளை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. ஆனால் சில நொடிகளிலேயே அவனிடமிருந்த இறுக்கம் தளர்ந்தது.

நனைந்த விழிகளுடன், “நீங்கதான் வாழ்க்கையை எப்படி எல்லாம் ரசிச்சு வாழணும்னு எனக்கு சொல்லி தந்தீங்க. அப்படி எல்லாம் நான் இருக்க முயற்சி செஞ்சாலும் நீங்க பக்கத்துல இல்லாம அந்த சந்தோஷம் எதுவும் முழுமையடைய மாட்டேங்குது கவிதா. உங்க கூட இருந்த மாதிரி வேற யார் கூடவும் என்னால இருக்க முடியல. இருக்க முடியும்னு எனக்கு தோணல.

ப்ளீஸ் என்னை விட்டு போகாதீங்க.” என்று அவன் குரல் மெது மெதுவாக இறங்கி காற்றைப் போல அவள் உணர்வுகளுக்குள் கலந்தது. கரைந்துருகியது.

“நேத்து வரைக்கும் என் மனசுல இருக்குறத எல்லாம் உங்ககிட்ட சொல்லாம அப்படியே மூச்சு முட்டி செத்த போய்டுவேனோனு பயந்துட்டு இருந்தேன். தெரியுமா?” என்றவன் மேலும் சொல்ல, அவள் கண்களிலும் கண்ணீர் இறங்கியது. அதேநேரம் அவனை நெருங்கவிடாமல் தடுத்து பிடித்திருந்த அவள் கரங்களும் நழுவியது.

அடர்ந்த இருளும் குளிருக்கும் இடையில் இருவரும் தனித்திருந்தனர். அவர்கள் தேகங்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கொண்டதில் தடையேதும் இல்லாமல் அவன் இதழ்கள் அவள் இதழ்களை நெருங்கின.

அதற்குள் ரஞ்சனின் கைப்பேசி சத்தமிட, அந்தச் சத்தம் இருவரையுமே உலுக்கிவிட்டது. கவிதா பட்டென்று அவனை விலகி நின்று கொண்டாள்.

“நீ என்னை விட அஞ்சு வயசு சின்ன பையன்” என்று கோபமாக கத்தினாள்.

“எது?”

“ம்ம்ம் சின்ன பையனு சொன்னேன்டா. அதுவும் அஞ்சு வயசு”

“திடீர்னு அஞ்சு வயசு சின்ன பையனாகிட்டனா நானு”

“ஆமான்டா சின்ன பையன்தான். இனிமே என்கிட்ட வந்தேனா கொன்னுடுவேன் உன்னை ”

“ஓ நான் மட்டும்தான் கிட்ட வந்தேன்னா... நீங்க வரல. நான் கிஸ் பண்ண போறேன்னு தெரிஞ்சும் என் பக்கத்துல நிற்கல”

அவனுடைய அந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் விறுவிறுவென்று திரும்பி காருக்கு சென்றுவிட்டாள். அவள் சாவியை காரில் நுழைக்கவும், ‘டொக் டொக்’ என்று ஒரு சத்தம்.

ரஞ்சன் அவள் கார் கண்ணாடியை இறக்கச் சொல்லிச் செய்கை செய்தான்.

கண்ணாடியை இறக்கியவள், “இன்னும் என்ன உனக்கு” என்று எரிச்சலுடன் மொழிய, “வயசு எல்லாம் ஒரு பிரச்னை இல்லங்க” என்றான்.

“பிரச்னைதான். நான் நாற்பதுல இருக்கும் போது நீ முப்பது அஞ்சுல இருப்ப. நான் அம்பதுல இருக்கும் போது நீ நாற்பத்து அஞ்சுல இருப்ப. இன்னைக்கு உன் கண்ணுக்கு அழகா தெரியுற நான். அன்னைக்கு உன் கண்ணுக்கு கெழவியா தெரிவேன். அப்போ உனக்கு என் மேல இருக்க மயக்கமெல்லாம் தீர்ந்து போய் என் வயசு என் தளர்ந்து போன உடம்பு மட்டும்தான் தெரியும்”

“அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுங்க”

“இன்னைக்கு நடக்காது. எதிர்காலத்துல நடக்கும். இப்போ தெரியுற மாதிரி அப்போ நான் உனக்குத் தெரிய மாட்டேன்” என்று விட்டு அவள் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட, அவன் அப்படியே உறைந்து நின்றுவிட்டான்.

வேறு எந்தக் காரணம் சொன்னாலும் அவனால் சமாளித்திருக்க முடியும். ஆனால் வயதை என்ன செய்ய முடியும்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா