You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

ஆத்தரின் படைப்பில் எனக்கு பிடித்தது - 2

Quote

ஹாய்..

ஒரு கதாப்பாத்திரம் தான்னு லிமிட் வைக்காம அன்லிமிடட் ஆஃபர் கொடுத்ததால யாருக்கும் பராபட்சம் பாக்காம.. எனக்கு பிடிச்ச அடுத்த கதைமாந்தருக்கும் எழுதிரலாம்னு முடிவு பண்ணிடேன்.. வேற வழியில்ல நீங்களும் ஏத்துகிட்டுதா ஆகனும்..

மோனி கதைகளில் பெரும்பாலும் பெண் கதை மாந்தரின் முக்கியத்துவம் கொண்ட கதைகளமாகவே இருக்கும்.. எடுத்துக் கொண்ட கதை களத்திற்கு நியாயமும் செய்திருப்பாங்க.. அந்த வரிசையில் மோனியின் எழுத்து நடைக்கு இன்னோமொரு சான்றாய்.. நாயகியின் மாறுபட்ட தோற்றமாய் அமைந்த கதைதான்.. அவள் திரௌபதி அல்ல..

வீரா - சூட்டிகையான கல்லூரி பெண் விதிவசத்தால் தாயை இழந்து.. தந்தையின் கட்டுபாடற்ற உணர்ச்சி வெளிபாட்டால் பெண் பிறப்பை வெறுத்து தன்னையும் தன் தங்கைகளையும் காக்க ஆணாக வேடம் தரித்தவள்.. இவள் வாழ்வின் நிகழ்வுகளை அவளது உணர்வுகளின் வெளிப்பாட்டினையும் அறிய அவள் திரௌபதி அல்ல.. படிங்க..

ஏன்னா? நா இப்போ வீராக்கு எழுத வரல.. வீராவின் கதாபாத்திரம் மையமாக இருந்தாலும் கதையின் நகர்விற்கு முக்கியமானவன் இவன்.. Hero இல்ல antihero வாக அறிமுகமானவன்.. அவன் தி கிரேட் தீ சாரதீ.. One more character i applause what a man he? ஆனா வியந்தது அவனது நல்ல குணத்திற்கு அல்ல.. அது அவன்ட வலை வீசி தேடினாலும் கிடைக்காது.. Bad man very very bad man unlimited characterless Negative character ah இருந்தாலும் தன்னிலை மாறாதவன் ரசிக்க வச்சான்.. (ஆத்தரின் நடுநிலை எழுத்தால்) அவன் அவன் தான்..

யாருக்காகவும்? எதற்காகவும்? தன்னை வளைத்துக்கொள்ளாத கற்பாறை.. ( அதனையும் உளி கொண்டு செதுக்கிய வளைத்தவன் நம் தமிழன்) ஆனால் இந்த கற்பாறை எந்த உளிக்கும் சிலையாகாது..

இளகிய பாறையாக இருந்தவனை சமூகம் அவனுக்கு அளித்த கற்களை கொண்டு தன்னை வடித்துக் கொண்ட சுயம்பு பாறை.. சமூகம் அவனிடம் இருந்து பறித்த இளமை பிராயத்தை தன் சுயத்தால் நிலை நிறுத்திக் கொள்ள எந்த எல்லை கோடுகளை வேண்டுமானாலும் களைந்து செல்வான்.

பாறைக்குள்ளும் வேர்விட்டு வளரும் செடியாக நுழைந்த நங்கை வீரா.. ஆனாலும் அவனது இயல்பு மாறவில்லை போகும் பாதையை நேர்வழியாக்கிக் கொண்டான்.. நிலைமாறாத அவனது அதிரடிகள் கதை களத்தின் நகர்விற்கு பெரும் பலம்..

சில கதாப்பாத்திரங்கள் can't replace it அதில் சாரதியும் ஒருவன். கற்பனை பாத்திரம் சாரதிக்கு நிழலுரும் விஜய் ஆண்டனி பாக்கா மாஸ்.. இன்றும் விஜய் ஆண்டனி சாரதியாக மட்டுமே தெரிகிறான்.

monisha and kavyajaya have reacted to this post.
monishakavyajaya
Quote

Unmai.. vijay antony paartha sarathy strike aaguthu.. 😂😂 paavam kaa avan nalla manusan 😛

jeyalakshmigomathi has reacted to this post.
jeyalakshmigomathi
Quote

sarathium nalavanthan

kavyajaya has reacted to this post.
kavyajaya
Quote

சாரதீ.... உண்மையிலேயே அவன் தீ தான் ... நல்லதும் செய்வான். கெட்டதும் செய்வான். ஆனால் இரண்டு தன் மனதை பொருத்து. அவனை இந்த போட்டியில் நினைவு கூர்ந்து எழுதியதற்கு நன்றி ஜெயா

jeyalakshmigomathi has reacted to this post.
jeyalakshmigomathi

You cannot copy content