மோனிஷா நாவல்கள்
இவான் 💛 முத்தமிழ் (ஒற்றை புள்ளி நாவல்)

Quote from monisha on January 9, 2026, 11:53 AMசிகிச்சை அறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த முத்தமிழுக்குத் திடீரென்று உறக்கம் களைந்துவிட்டது. கண்களைத் திறக்க மெல்லிய இருளும் வெளிச்சமும் அந்த அறையில் கலந்து பரவி இருந்ததைக் கவனித்தாள்.
பலவிதமான யோசனைகளுக்கு இடையில் அவள் மனம் இவானைப் பற்றியும் நினைத்துக் கொண்டது. அவன் சென்னை வந்திருப்பானா? சென்னை வந்தால் அவன் எப்படித் தன்னைச் சந்திப்பான் என்று யோசித்தவளுக்கு இதே போன்று ஒரு முறை அவள் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த போது அவன் செய்த உதவிகளை நினைத்துப் பார்த்தாள்.
அன்று அவனிடம் அந்தளவுக்குக் கோபத்தைக் காட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவன் பேசியது செய்தது எல்லாம் அவள் நினைத்து பார்க்கப் பார்க்க அவள் மனம் அவன் பக்கம் மொத்தமாகச் சாய்ந்திருந்தது.
‘மனசால மட்டும் ஸ்டிராங்கா இருந்தா போதாது... உடம்பாலயும் ஸ்டிராங்கா இருக்கணும் மிஸ் தமிழ்... இவ்வளவு டென்ஷன் எடுத்துக்காதீங்க... ஹை லெவல் டென்ஷன் இல்ல... பிரெஷர்ல இருக்கும் போது ப்ரீத் எக்ஸ்ஸசை பண்ணுங்க... இட் வில் ஹெல்ப்...
அப்புறம் இன்னொரு விஷயம்... இந்தப் பூமியே நம்மாலதான் சுத்திட்டு இருக்குங்குற மென்டாலிட்டியை நிறுத்திட்டு வேலை பாருங்க... எல்லாம் கூலா நடக்கும்’ என்று அவன் சொன்னதை ஆழ்ந்து யோசித்தபடி கண்களை மூடிக் கொண்டாள்.
ஆனால் அவள் உறங்க முயலவில்லை. அவனைத் தன் இமைகளுக்குள் நிறுத்தி வைத்தாள். அவனுடனான ஒவ்வொரு நினைவிலும் உணர்வுப் பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தாள்.
அவன் முத்தமிட நெருங்கிய தருணத்தை அதற்குப் பிறகு அவர்களுக்குள் நடந்த உணர்வுப்பூர்வமான உரையாடலை என்று அவனுடனான ஒவ்வொரு நொடிகளையும் நிமிடங்களையும் மனதிற்குள் புரட்டிப் பார்த்தாள். அவன் மீது அளப்பரிய மரியாதையும் காதலும் ஒரு சேரப் பொங்கியது.
அவன் இப்போது தன் பக்கத்தில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவள் மனம் ஏங்க ஆரம்பிக்க, அவள் உதடுகள் தானாக முணுமுணுத்தன.
“ஐ மிஸ் யூ இவான்... ஐ மிஸ் யூ ஸோ மச்” என்று சொல்லும் போது அவள் கண்களினோரத்தில் கசிந்த கண்ணீரை யாரோ தொட்டுத் துடைத்து அவள் கன்னங்களைத் தழுவிக் கொள்ள,
அந்த மென்மையான தொடுகையில் விழித்துக் கொண்டவள் தன் எதிரே தெரிந்த முகத்தைக் கண்டு, “இ..வா...ன்” என்று திகைக்க,
“ஐ மிஸ் யூ டூ” என்றவன் குரல் மிருதுவாக ஒலித்தது. அவளுக்குத் தான் காண்பது கனவா நிஜமா என்று புரியவில்லை.
ஆனால் இது கனவாகவோ அல்லது கற்பனையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணியவள் மனம் அந்தக் கற்பனையை விரும்பியது.
யூகங்களுடன் வாழ முடியாது என்றாலும் இது போன்ற கற்பனைகளுடன் சில நொடிகளாவது வாழ வேண்டும் என்று எண்ணியவள் அவளை அன்பாகவும் அக்கறையுடன் தழுவிய அவன் கண்களுடன் கலந்தாள்.
அவள் கன்னங்களைப் பற்றிய கரங்கள் மீது அவள் தன் கையைச் சேர்த்துக் கொண்டு,
“லவ் யூ இவான்” என்று தன் மன எண்ணத்தை அப்போது வெளிப்படையாகச் சொல்லிவிட, அவன் அதன் பின் எதுவுமே யோசிக்கவில்லை. உலகமே மறந்த நிலையில் இருந்தவன் அந்த நொடியே அவள் உதட்டில் குனிந்து முத்தமிட அந்த முத்தத்தில் அவள் மொத்தமாகக் கரைந்தாள். இது போன்ற முத்தத்திற்காக இன்னும் பல முறை சாவின் விளிம்பைத் தொட்டுவிட்டு வரலாம் என்று தோன்றியது.
மொத்தமாக வடிந்து போயிருந்த அவள் உணர்வுகள் எல்லாம் உயிர்ப்பித்துக் கொண்டன. தன்னை மறந்து அந்த முத்தத்தில் இலயித்தவளுக்கு இன்னும் கூட அது ஏதோ கனவு என்றுதான் இருந்தது.
இந்தக் கனவு களைந்துவிடக் கூடாது என்று அவள் விரும்பிய அதேசமயம், “இவான் ஸ்டாப் இட்” என்று வேறொரு பெண்ணின் குரல் பதட்டத்துடன் இடையிட அவள் விழிகளைத் திறந்தாள்.
அதேநேரம் இவானும் விலகி நிமிர, அப்போதுதான் தூக்கத்திலிருந்த விழித்தவள் போல முத்தமிழ் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அந்த மருத்துவமனை அறையில் அவள் அருகே அமர்ந்திருந்த இவானைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது படபடப்புடன் நின்ற பெண்ணையும் பார்க்க நேர்ந்தது. அவளை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? என்ற எண்ணம் வந்ததும் விமான நிலையத்தில் பார்த்தப் பெண் என்றும் அவள் பெயர் தமிழச்சியும் என்றும் நினைவு வந்தது.
அதே தமிழச்சிதான். அவள் இவானை உச்சபட்சக் கடுப்புடன் முறைத்து, “என்ன பண்ணிட்டு இருக்கீங்கணு தெரிஞ்சுதான் பண்றீங்களா?” என்று கேட்டு வைக்க, அவன் அவள் சொல்வதைக் காதில் வாங்கவே இல்லை. அவன் பார்வை முத்தமிழை விட்டு விலகவே இல்லை.
இன்னும் அவன் கரம் அவள் கன்னங்களில் பதிந்திருந்தது. அவள் தன் காதலைப் பயன்படுத்திக் கொண்டு தன்னிடம் பொய் சொல்லிவிட்டாளே என்ற கோபத்தில் இருந்தவனுக்கு அவள் கண்களைப் பார்த்ததும் அந்தக் கோபமெல்லாம் எப்படிக் கண் காணாமல் மறைந்து விட்டது என்றே தெரியவில்லை.
அவள் தன்னை உண்மையாகக் காதலிக்கிறாள் என்பதையும் அதை அவளே வாய் வார்த்தையாக உணர்வுப்பூர்வமாகச் சொல்லக் கேட்டவனுக்கு அளவில்லா சந்தோஷம் பொங்கிப் பெருகியது.
ஆனால் அவளோ கனவா நனவா என்று இன்னும் குழப்பத்தில் இருந்தாள்.
“இது அப்போ கனவு இல்லையா?” என்று தன்னுடைய ஆகப் பெரிய சந்தேகத்தை அப்போது அவள் கேட்டு வேறு வைக்கவும் இவானின் உதடுகள் பெரிதாக விரிந்தன.
“ஓ கம்மான்... கனவுனு நினைச்சுதான் அவ்வளவு இன்டன்ஸா கிஸ் பண்ணியா தமிழ்?” என்றவன் கேட்ட தொனியில் அது கனவு இல்லை என்று தெள்ளத்தெளிவாக விளங்கிவிட
‘ஐயோ! என்ன செஞ்சுட்டோம்!’ என்று சங்கடத்துடன் முகத்தைத் தன் கரத்தால் மறைத்துக் கொண்டாள். ௯
சிகிச்சை அறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த முத்தமிழுக்குத் திடீரென்று உறக்கம் களைந்துவிட்டது. கண்களைத் திறக்க மெல்லிய இருளும் வெளிச்சமும் அந்த அறையில் கலந்து பரவி இருந்ததைக் கவனித்தாள்.