You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

எங்கனம் சுதந்திரம்

Quote

ஆட்ட நாயகனாய் ஆட்சி பீடத்தில்
அமர வேண்டிய மக்கள்
சிப்பாய்களாய்
சிதைந்து கிடக்கின்றனர்...

மக்களை காக்க வேண்டிய அரசியல்வாதிகள்
மந்திரி வேடத்தில்
மத்தியில் மந்தமாய் படுத்துகிடக்கின்றனர்...

யானைகளாய் இருக்க வேண்டிய அதிகாரிகள் ஆட்டத்தின் ஆரம்பித்திலேயே
அடிச்சறுக்கி வீழ்ந்து கிடக்கின்றனர்..

ராணியாய் சுழன்று மக்களை
காக்க வேண்டிய பணம்
ராஜாவாய்
ஒலிந்து கிடக்கிறது...

பணமென்னும் ராஜாவை
காக்கும் ராணியாக இருப்பது
இயல்பாகவே நம்
இந்திய அரசியல் சட்டம்தான்...

சர்வாதிகாரம் எனும் சக்தியில் இருந்து
தப்பி மக்களாட்சி எனும்
புதைகுழியில் சிக்கி கொண்டோமே...

இத்தகைய அரசியல் சதுரங்கத்தில்
எங்கனம் இருக்கிறது நம் சுதந்திரம் ..???

You cannot copy content