You don't have javascript enabled
Bhagya novelsRomanceRomantic thriller

Kaavalum Kadhalum-9

9

காரை நிறுத்திவிட்டு  ரிசார்ட் மேனஜரிடம் தன்னுடைய மெம்பர் ஷிப் கார்ட்டை நீட்டி அவன் ஒரு நாள் தங்க அறை வேண்டும் என்று பதிவு செய்தான். 

“ஐயா உங்களுக்கு இல்லாததா? இந்தாங்க சாவி மேல பால்கனி ஒட்டினாப்புல ரூம் இருக்கு… தங்கிக்கோங்க .நைட் சாப்பிட எதாவது ஆர்டர் பன்றீங்களா? நம்ப ரெஸ்டாரன்ட் ல இன்னைக்கு சூடான நாட்டுக்கோழி பிரியாணி ஸ்பெஷலா பன்னிருக்காங்க வேற எதாவது வேண்டும் என்றாலும் சொல்லுங்கள் வரவழைத்து தரேன்”

‘நாட்டுக்கோழி மட்டுமா சூடா இருக்கு… நானும் தானே’ என்று மனதளவில் நினைத்துவிட்டு ஒரு சின்ன சிரிப்புடன், “சரி சரி இப்பவே வாங்கிட்டு என்னுடைய அறைக்கு போயிடுரேன்… நாளை வரைக்கும் நானாக கூப்பிடுற வரைக்கும் ரூம் சர்வீஸ் எவனையும் அனுப்ப வேண்டாம் ஓகேவா” என்று மேனஜரிடம் தெரிவித்தான் ஆதி.

“சரிங்க ஐயா…இந்தாங்க பிரியாணி கவர். இரண்டு இருக்கு வாட்டர் பாட்டில் எல்லாம் அதோடவே இருக்கு. ஐயா பீர் கூலிஙா இருக்கு வேணுமா” என்று வெடுக்கென்று கேட்டவுடன், “தெய்வமே வைத்துல பால் வார்த்த …கொடுங்க ஒரு பீர்” என்று அதையும் வாங்கிக்கொண்டு திரும்ப அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆனந்தி…

“ம்ம்ம் நல்லா வருத்தெடுக்க போறாள்” என்று நினைத்தவாறே அவளை நோக்கி தன் எதார்த்தமான பார்வையை செலுத்திவிட்டு தொடர்ந்து அவள் ஏதோ முனுமுனுக்க

அதை கவனித்து கொண்டே அனைத்திற்கும் சேர்த்து பணம் செலுத்தியவன், “சார் ஸ்பா எங்க இருக்கு” ?என்று வினவ..மீண்டும் அவளுக்கு கோபம் வந்தது. 

“டார்லிங் நான் ஸ்பா…எனக்காக கேக்கல கவலைபடாத …உனக்காக தான். போ…போ..போய் அங்க இருக்கிற அழகு கலை நிபுணர் கிட்ட தயார் ஆகிட்டு வா” என்று கூற

“அய்யே அதெல்லாம் ஒன்னும் வேணாடாம்….நான் இப்படியே இருக்கிறேன். எனக்கு சாதாரணமா இருந்தால் தான் பிடிக்கும் மாமா. மஞ்சள் தேய்த்து குளிக்கும் போது கிடைக்காத அழகா அழகு கலையில் கிடைக்க போகுது” என்று சலித்துக்கொள்ள,

“அதெல்லாம் முடியாது என் ஆர்டர் நீ மீற கூடாது போ..போ…ஒன்னுமில்லை ஜஸ்ட் ஒரு ஸ்டீம் பாத் மட்டும் எடுத்துட்டு வா உனக்கே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் பயணம் செய்த களைப்பு எதுவும் தெரியாது” என்று அவளை கட்டாயபடுத்த,

“விடமாட்டிங்களா மாமா… சரி போய் தொலைரன்”…என்றபடி நடக்க துவங்கினாள்.

அவள் வரும் முன் இவனும் குளித்துவிட்டு படுக்கை அறையில் அவன் வாங்கிட்டு வந்த 3டி போர்வையை விரித்து… மேல மல்லிபூவையும் ரோஜாவையும்…தூவி தான் வாங்கி வந்த ஸ்ராபரி ஸ்ப்ரேவை அடித்து …..மணக்கும் அளவுக்கு ரெடி செய்தான்.

அவளும் தயாரான நிலையில் அறையினுள் நுழைய அந்த அலங்காரத்தில் அசந்தே போனாள்

“வாவ்…என்ன மாமா இவ்ளோ அரெஞ்மண்டு…ப்பா கலக்குற போ…ம்ம்ம்… சரி பிரிங்க பிரியாணியை முதல்ல வாசனை கம கமன்னு வருது.”

“அப்போ…..நீ சாப்பிட தான் என்கூட இவ்வளவு தூரம் வந்த அப்படியா?”

“ம்ம்ம் பின்ன என்ன மாமா…ஸ்டீம் பாத் எடுத்து மொத்த கலோரியும் பர்ன் ஆயிடுச்சு சாப்பிட்டா…தான் தெம்பு வரும்”

ஹாஹா …..இருவரும் ரசித்தப்படி சாப்பிட்டுவிட்டு…. கை கழுவ…ம்ம்ம் குட்நைட் மாமா நான் தூங்குறேன் என்றுஅவள் கொட்டாவி விட…அட கிறுக்கி மவ…எதுக்கு வந்தோம்னு மறந்துட்டு படுக்குறா பாரு…எழு டி..”என்றபடி அவளை எழுப்ப,

எழுந்து அவனருகில் உட்கார்ந்தவள், “மாமா….இப்ப ஏன் என்னை எழுப்பி உக்காரவச்சிருக்க தூங்கனும் குட்நைட்” என்றபடி மீண்டும் சாய்ந்துக்கொள்ள உடனே அவனும் அவளருகே சாய்ந்தவன் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க,

“அய்யோ….போ…மாமா…. என்று சினுங்கிய அவளது உதடுகளை சிறைப்பிடிக்க….விழிகள் இரண்டு கோலி குண்டு போல அங்கும் இங்கும் உருள……

போதும் விடு என்று அவள் சைகையால் கூற….சற்று ஓய்வு தந்தவனை பார்த்து

மூச்சு வாங்கியபடி….ப்பா….என்ன மாமா நீ…..விட்டா மூச்சு முட்டி சாவடிச்சுருவ போல” என்று அவனை வம்பிழுக்க,

“ஏண்டி என் ஆசை மனைவியை முத்தமிடுறது ஒரு தப்பா?”

“ப்பா சாமி நீங்க கண்டதையும்  பார்த்து ரொம்ப கெட்டு போயிட்டிங்க. என்னை ஆள விடுங்க”

“ஹாஹா…… ஏய் நான் எதையும் கண்டதையும் பார்க்கிறது இல்லை. எப்பவுமே எனக்கு நீ மட்டுமே”

“ம்ம்ம் …சரி சரி நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரு போதுமா”

“உன் சர்டிபிகேட் க்கு ரொம்ப நன்றி பொண்டாட்டி”

“நற்சான்றிதழ் தருவதற்கு நான் என்ன ஸ்கூல் டீச்சரா” என்று கேலி செய்தவள்

மீண்டும் அவன் அணைப்பில் தன்னையே மறந்து அவனுடைய அவளானாள்

ரிசாட்டை விட்டு காலி செய்து தங்களது காரை கிளப்பி செல்ல முற்பட்டபோது அங்கு இறந்து போன ராகவனின் மனைவி அங்கு யாருக்கோ காத்திருப்பது போல நின்றுகொண்டு இருக்க அதை பார்த்து விட்ட ஆதி.

“ம்ம்ம்.. ஒரு நிமிஷம் ஆனந்தி இங்கேயே இரு வந்திடுறேன்” என்று கூறிவிட்டு காரை விட்டு இறங்கி அவளை நோக்கி செல்ல இவனை கண்டவுடன் விறுவிறு என்று நடந்தாள் அவளை பின் தொடர்ந்தவாறு அவனும் செல்ல.

“சார் நீங்க போலிஸா இருக்கலாம் அதுக்காக சும்மா காரணமே இல்லாம இப்படி பின்தொடரது எனக்கு பிடிக்கல…பிஹேவ் யுவர் செல்ப்.

ஹலோ ஹலோ….நான் எதுவும் தப்பா…பேசவோ இல்லை கேக்கவோ இல்லையே….உங்களை பின் தொடர பர்ஸ்னல் காரணம் எதுவும் இல்லை . எல்லாம் கேஸ் விஷயமா தான்.

எனக்கும் என் புருஷன் சாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை இதையே நான் எத்தனை வாட்டி சொல்றது.

எல்லாம் சரி ஆனால் இப்ப ஏன் நீங்க என்னை பார்த்து ஓடனும்.? தப்பு இல்லைனா தைரியமாக நிக்கலாமே.

சார் நான் உங்களை ஒன்னு கேக்கவா??? ரிசார்ட் க்கு நீங்க இங்க வந்தது க்கு காரணம் என்ன?”

“பர்ஸ்னல்… மேடம்”

“அப்படி தான் எனக்கும் பர்ஸ்னல் னு ஒன்னு இருக்கு இதையெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது புரியுதா.”

“அவளை முறைத்துவிட்டே சாரி மேடம்” என்று கூறி தன் காரை நோக்கி நடந்தான். காருக்கும் அவனுக்கும் சுமார் 20அடி தூரம் இருக்கும். இவன் நெருங்கி வருவதற்குள் அவன் காரை கிளப்பி யாரோ செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தான் .

காரை விரட்டி சென்றான் பின்னாடி ஒருவனோடு பைக்கில். “சார் அந்த காரை சேஸ் பன்னுங்க சீக்கிரம்… உள்ள என் மனைவி இருக்கா..”

“சார் இதுக்கு மேல வேகம் போனா பரலோகம் தான் போகனும் …இருங்க சார்….”

“யோவ் அவசரம் புரியாம பேசாத….நான் ஒரு இன்ஸ்பெக்டர் உள்ள என் மனைவியை யாராச்சும் கடத்திட்டு போக முயற்சி பன்றாங்களா னு தெரியல”

“ஓ….மன்னிச்சிறு சார் தெரியாம பேசிட்டேன்…இதோ பிடிச்சிருலாம் சார் காரை …

கார் இன்னும் சற்று அதிக வேகத்தில் சென்றது..அதை விரட்டியபடியே பைக்கும் சென்றது…இதற்கிடையில் சிக்னல்”

“சார் சிக்னல் போட்டுட்டான்…..

“பராவாயில்லை போ..யா…”

“ம்ம்ம் அது சரி இதே நாங்க இப்படி போனா நிக்கவைச்சி பைன் வாங்கிடுவீங்க…”

“ரொம்ப பேசாத சொல்றதை செய் ..”

“செஞ்சிறுவோம்….சார் அங்க பாருங்க உங்க டிபார்ட்மெண்டு ஆளு வணக்கம் வைங்க இல்லைனா பிடிச்சு நொங்கு எடுக்க போறான்.”

“யோவ் …அதெல்லாம் சரி…நீ வேகமா போ….உள்ள இருக்கிறது என் வைப் மட்டும் இல்லை என் லைப்பும் அவதான்”.

“இவ்ளோ பேசுறீங்க …எப்படி இவ்ளோ அஜாக்கிரதையாக இருந்தீங்க?”என்று கேள்வி கேட்க

“என் நேரம் நீயெல்லாம் கேள்வி கேக்குற ம்ம்ம்..”

“சார் சார் நெருங்கியாச்சு காரை வாங்க கேட்டு போடுவோம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content