You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

எனக்கு அதிகாரி நானா இல்லை என் ஜீனா - பேரா. கா. மணி

Quote

இது ஏதோ அறிவியல் புத்தகம். நமக்கு இதெல்லாம் செட்டாகாதுபா... என்று நீங்கள் ஒரு வேளை நினைப்பீர்களானால்... உறுதியாக சொல்கிறேன்.

நீங்கள் ஒரு சுவாரசியமான புத்தகத்தை படிக்காமல் தவறவிட போகிறார்கள்.

அப்படி என்ன இப்புத்தகம் சுவாரசியமாக சொன்னது.

ஒரு உலக தத்துவம். அது என்ன தெரியுமா?

இந்த ஒட்டு மொத்த உலகத்தின் ஆதியும் அந்தமும் நானே... நீக்கமற நிறைந்திருப்பவனும் நானே... எல்லாமும் நானே என்ற தத்துவம்தான்.

ஆன்மீக புத்தகத்தில் இந்த 'நான்' இறைனாக இருப்பான். ஆனால் இது அறிவியல் தத்துவம்.

இங்கு நான் என்பவன் ஜீன்.

அப்போது நாமெல்லாம் யார்... ?

இந்த ஜீன்களுக்கு அடிமைகளா?

இக்கேள்வியை தொடர்ந்து மிக சுவாரசியமாக பயணிக்கும் இக்கட்டுரையின் வரும் எடுத்துகாட்டுகள் ஆச்சரியப்படுத்தவும் சில நேரங்களில் அதிர்ச்சிக்குள்ளாக்கவும் செய்கிறது.

Richard dawkins எழுதிய The selfish gene என்ற தமிழாக்கமே இந்நூல் எனினும் அறிவியல் சொற்களை ஆசிரியர் கையாண்ட விதமும் விளக்கிய மிகவும் எளிய முறையில் இருந்தது இப்புத்தகத்தின் சிறப்பம்சம்.

சேப்பியன்ஸ் படித்து முடித்த பிறகு மனிதனும் எல்லாவற்றையும் போல சாதாரண விலங்கு என்பதை ஏற்று கொள்ள வைப்பது போல இந்நூல் நாமெல்லாம் வெறும் ஜீன்களின் கைப்பாவை என்று புரிய வைக்கிறது.

பின் என்னதான் நம் வாழ்க்கைக்கான அர்த்தம்?

சிம்பிளா சொல்லணும்னா நத்திங்...

Kindle unlimitedல் இப்புத்தகத்தை எடுத்து படித்து நீங்களும் என்னை போன்று ஜென் நிலையை அடையலாம்.

Review by Monisha

You cannot copy content