You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

என்னை கவர்ந்த ஜானவி

Quote

தன்னம்பிக்கையோடு வாழும் ஒரு பெண்ணின் மனதை, மிக அருகில் பார்த்த உணர்வு ஜானவி. ஒன்றும் தெரியாத, அறியாதபெண்ணாய் திருமணபந்தத்தில் விழுபவள், தன்னையும், தன்மானத்தையும் காத்துக்கொள்ள அந்த பந்தத்தையே விலக்கிவைத்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அருமை.

பணத்தை விதைத்து, அதையே அறுவடை செய்யும் புத்திசாலி. தன்மேல் அன்பு காட்டுபவர் பஞ்சமான நேரத்தில், துவண்டு விடாமல், தைரியமாய் தன் சுயத்தை நிலைநாட்டிக் கொள்ளத் தயாராகும் பெண்.

யாருடைய ஆதரவும் இல்லாமல், பல தோல்விகளுக்குப் பிறகு, தன் குழந்தையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள தயாராகும் இடத்தில் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுவிட்டாள்.

நம் பக்கத்து வீட்டுப் பெண் என்ற உணர்வை, கதை முழுவதும் எனக்குள் ஏற்படுத்தியது. நம்ஜானவி என்று மனதிற்குள் உரிமையுடன் நினைத்து, இந்த கதையில் பயணித்தேன். கற்பனை என்று எப்பொழுதும் என்னால் நினைக்க முடியாது. கதையின் ஆரம்பத்தில் வரும் ஜானவிக்கும், இறுதியில் பக்குவப்பட்டு நிற்கும் ஜானவிக்கும் எத்தனை வித்தியாசங்கள்.

மிக எதார்த்தமான கதையை படித்த நிறைவு. எந்த இடத்திலும் முகத்தை சுளிக்க வைக்கும் பேச்சுக்கள் இல்லை. கதையோட்டமும், காட்சியமைப்புகளும் மிகவும் அருமை. இவரைப் போன்ற பெண்கள் இன்றைய உலகில் பெருமளவில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடாக நாம் பார்த்து வரும் உண்மை.

chitra devi has reacted to this post.
chitra devi
Quote

நன்றி ஸ்ரீ😍😍

ஜானவி முழுக்க முழுக்க என்னுடைய மற்ற பாத்திரங்களை விடவும் ரொம்ப எதார்த்த படைப்பு. அதை ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க பா.

ஜானவி கேரக்டர் உருவான காரண காரியம் என்ன தெரியுமா? டிவி சீரியல்கள்தான்.

நாயகிகள்னா பொறுப்பா இருக்கணும். விட்டு கொடுக்கணும்ம் பொறுமையா இருக்கணும். இதெல்லாம் உடைக்கணும்னு உருவானதுதான் ஜானவி.

இந்த மாதிரி பெண்கள் கூட நாயகிகளாக இருக்கலாமே. அதான். 😃

srinavee has reacted to this post.
srinavee

You cannot copy content