You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

கதையை கண்டுபிடி போட்டி

Quote

 

சென்னை புத்தக கண்காட்சி 2024
வாசகர்களுக்கு எல்லாம் புத்தக கண்காட்சி என்பது வண்ணமயமான திருவிழா போல. அது ஆரம்பிக்கும் போதே கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். பல வருட கால வாசகியாக நானும் இதை உணர்ந்திருக்கிறேன். உணர்வுபூர்வமாக அனுபவித்திருக்கிறேன்.
ஆனால் தற்சமயம் எழுத்தாளரான பின் அந்த கொண்டாட்ட மனநிலை மாறியது. அது இன்னும் ஒரு படி அதிகமாக போய் தவம் என்ற நிலையை எட்டியது.
நம்முடைய ஒரே ஒரு புத்தகமாவது அந்த புத்தக கடலில் ஒரு ஓரத்தில் இருப்பதை பார்க்கையில் ஏற்படுகிற நிறைவும் சந்தோஷமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
இந்த வருடம் எனது இருபதாவது நாவல் "அமரா" வெளியாகிறது.
அந்த சந்தோஷத்தை கொண்டாடும் பொருட்டு இந்த போட்டியை ஆரம்பித்துள்ளேன்.
போட்டி பெயர்
கதையை கண்டுபிடி!!!
என்னுடைய நாவல் பெயர் சொல்லாமல் ஒன் லைனை மட்டும் நமது தளத்தில் Siteல் பதிவு செய்வேன்.
அந்த பதிவுக்கு கீழான ரிப்ளை பாக்ஸில்
கதை பெயரை கண்டுபிடித்து கமெண்ட் செய்ய வேண்டும். நாயகன் நாயகி பெயர் மற்றும் கதையை பற்றிய தகவல்களுடன் போஸ்ட் செய்பவர்களுக்கு எனது புத்தம் புது நாவல் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
இருபது பதிவுகள். தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களில் பதில் எழுதுபவர்களுக்கு
அமரா நாவல் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.
நான்காம் பரிசாக கல்யாணம்@ நாவல்
ஆறுதல் பரிசாக நான் அவள் இல்லை ஒருவருக்கு வழங்கப்படும்.
Happy book fair
Rathi has reacted to this post.
Rathi
Quote

நன்றி monisha நீங்க அனுப்பிய அமரா புத்தகம் வந்து சேர்ந்தது..

Uploaded files:
  • 17068631668018973134559188226778.jpg

You cannot copy content