You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சாக்ஷி-ஜென்னிதா சித்ராதேவி

Quote

சாக்ஷி -ஜென்னிதா

எனக்கு பிடித்த கதாபாத்திரம் சாக்ஷி .நான் அவள் இல்லை கதையின் ஹுரோயின் . ஒவ்வொரு பெண்ணும் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு உதாரணம். பாரதி கண்ட புதுமைப் பெண். தனக்கு நேர்ந்த விபத்துக்கு பின்பும் உயிர் வாழ வேண்டும் என விரும்புவாள். ஆம் பாலியல் வன்முறையை விபத்தாகவே கருத வேண்டும். சாக்ஷி அதிலிருந்து மீண்டு வந்து ஜென்னித்தாவா மாறுவது அருமை. தனது காதலன் மற்றும் தோழியின் நல்வாழ்விற்காக,தன்னை ஜென்னியாவே மாற்றிக்கொள்வது அருமை.தனது வீட்டின் வேலை செய்பவரின் மகன் சையத்திடம் அவர் செய்த தவறை உணர்த்துவது அருமை. டேவிட்டின் அப்பா அவளுக்கு செய்த தீங்கை மன்னிக்கும் பாங்கு அழகு. தன் காதலனின் அண்ணன் செய்த தவறை "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" என்பது போல் விபத்து ஏற்படும் போது காப்பாற்றுவது அருமை . ராகவ்க்கு கொடுக்கும் பதிலடி சூப்பர்.
ஒவ்வொரு பெண்ணும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜென்னி. டேவிட்டிடம் காதல் சொல்வது அருமை. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் கோழைப்போல் தற்கொலை முடிவு எடுக்காமல் சாக்ஷி போல் தைரியமாக போராட வேண்டும்.இதுவே எனக்கு இந்த கதாபாத்திரம் பிடிக்க காரணம்.

monisha and kavyajaya have reacted to this post.
monishakavyajaya
Quote

சாக்ஷி @ ஜென்னிதா

எனக்கு இந்த பதிவை பார்த்து உண்மையிலேயே வார்த்தைகளே வரவில்லை. அருமை தோழி. ஒரு பாத்திரம் பிடித்ததிற்கான வாசகனின் மனநிலையை அப்பட்டமாக தெரிவித்தது உங்கள் பதிவு.

வார்த்தைகளை கோர்த்ததை விட நீங்கள் உங்க உணர்வுகளை கோர்த்திருக் கீங்க. ஒரு கற்பனை கதாபாத்திரத்தை பாராட்டியது போல அல்ல. நிஜமாகவே வாழும் ஒரு பெண்ணை போற்றியது போல் உணர்ந்தேன். அதை என் எழுத்தின் வெற்றியாகவே நான் கொள்கிறேன்.

நீங்கள் இந்த போட்டியில் பங்கு கொண்டமைக்கு நன்றி

என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் சித்ரா!

kavyajaya and chitra devi have reacted to this post.
kavyajayachitra devi
Quote

My favorite too sakshi @ jennitha.. 😍😍😍

monisha and chitra devi have reacted to this post.
monishachitra devi
Quote

Thank you sis

monisha has reacted to this post.
monisha

You cannot copy content