You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சிவசக்தி ❤ சக்தி செல்வன்(சொல்லடி சிவசக்தி நாவல் )

Quote

சிவசக்தி அலைபாயும் விழிகளோடு கார்கள் பல நின்றிருந்த அந்த நிறுத்தத்திற்குள் நுழைந்து தேடினாள். அவன் சொன்ன அடையாளங்களுடன் கூடிய காரில் சாய்ந்படி சக்திசெல்வன் நின்றிருந்தான்.

அவன் சிவசக்தியின் வருகையை நோக்கியபடியே இருக்க, அவன் கம்பீரத் தோற்றம் என்பது உடலமைப்பில் மட்டுமல்ல. அவன் நின்றிருந்த தோரணையிலும் வெளிப்பட்டது. என்னதான் கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினாலும் இப்போதுதான் இருவருமே முதல்முறையாய் நேரெதிர் நிற்கிறார்கள்.

பல முறை அவனைப் பார்க்க வேண்டுமென அவள் எண்ணியபோது நடைபெறாத அந்தச் சந்திப்பு இன்று அவனைத் தவிர்க்க நினைத்த போது நிகழ்ந்துவிட்டது. இந்த விந்தையான விதியை யார் வடிவமைத்தது?

அவனின் தோற்றம் அவளின் கற்பனைகளுக்கும் எட்டாத வண்ணமே பிரம்மிப்பை ஏற்படுத்தின. சக்திசெல்வன் தன் கண்களிலிருந்த கூலர்ஸை கழட்டிவிட்டு சக்தியை பார்த்துப் புன்னகைப் புரிந்தான்.

அவள் அவனை நேர்கொண்டு பார்க்காமல்,

“டைமாச்சு மிஸ்டர். சக்தி டிக்கெட் கொடுங்க” என்றாள்.

“நீ கேட்டதும் கொடுக்கவா... நான் இந்த டிக்கெட்டை எடுத்தேன்” என்றான் சக்திசெல்வன் அவனின் புன்னகை மாறாமல்.

“அப்போ தரமாடீங்க” என்று தன் கூர்மையான பார்வையை அவன் மீது வீசியபடி சிவசக்தி கேட்டாள்.

“தருவேன்... நான் உன்கிட்ட சொல்ல நினைச்சதை சொன்ன பிறகு”

“சீக்கிரமா சொல்லுங்க... ப்ளீஸ்... இட்ஸ் கெட்டிங் லேட்” என்று சிவசக்தி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி அலட்சியமாய் உரைத்தாள்.

சக்திசெல்வன் அவளின் அந்த அலட்சியத்தையும் திமிரையும் ரசித்தபடி,

“எதுக்கு என்னைப் பார்க்க டெல்லி வரைக்கும் வரனும்... ஏன் சொல்லிக்கலாமலே இப்போ அவசரமா கிளம்பினும்”என்று சக்தி செல்வன் கேட்க, அவள் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

அவன் கண்களில் கோபம் வெளிப்பட்டது.

“நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்... பார்த்துட்டேன் இப்போ... கிளம்பறேன்” என்று சக்தி ஏளனமான புன்னகையோடு உரைத்தாள்.

“நாம மீட் பண்ணலாம்னு சொன்னது... சீட்டிங் இல்லயா?”

“என் கண்முன்னாடி வராம நீங்க என்னைச் சீட் பண்ணலயா... அப்படித்தான்” என்று சிவசக்தி தன் பதட்டத்தை மறந்து புன்னகையோடு சொன்னாள்.

அவளின் பதிலில் அவன் மீதான வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்ட எண்ணம் புலப்பட்டது.

“அப்போ இது ரிவஞ்ச்... நான் செஞ்சதை எனக்கே திருப்பிச் செய்யற... அப்படிதானே சக்தி” என்று சக்திசெல்வன் முறைத்தபடி கேட்க,

சற்றும் பயமின்றி,”ஆமாம் அப்படிதான்” என்றாள் தோள்களைக் குலுக்கியபடி.

“நீ புத்திசாலிதான் சக்தி... ஆனா நீ சொல்ற பொய்யை நம்பற அளவுக்கு நான் முட்டாள் இல்லை... நீ இந்த மாதிரி ஏடாகூடாம யோசிப்பன்னு தெரிஞ்சுதான் நான் இன்னைக்குச் சென்னைக்குப் போற ப்ஃளைட்ஸ் பேஸஞ்சர்ஸ் லிஸ்டை செக் பண்ண சொன்னேன்... துரதிஷ்டவசமா உன் பிளான்... எனக்குத் தெரிஞ்சி போச்சு “ என்றான்.

அவனின் பதிலில் சிவசக்தியின் ஏளனம் மாறி கோபம் உண்டானது.

“நீங்க பெரிய புத்திசாலிதான்... ஒத்துக்கிறேன்... ஆனா என்னை ஏன் முட்டாளாக மாத்தி பாக்கிறீங்க... எதுக்கு என் முன்னாடி வராம விளையாட்டு காண்பிச்சீங்க... அதுல என்ன உங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் ?...

நான் உங்ககிட்ட எந்த உதவியாச்சும் எதிர்பார்த்தேனா?... பின்ன எதுக்கு நீங்க உதவனிங்க?... என்ன எண்ணத்தை மனசுல வைச்சிட்டு இப்படி எல்லாம் செஞ்சிட்டிருக்கீங்க ?... இது உங்களுக்குப் பொழுது போக்கா?... இல்ல உங்களோட பணத் திமிரா?... எனக்குப் புரியல... பதில் சொல்லுங்க மிஸ்டர். சக்தி” என்று சிவசக்தி கோபத்தோடு தம் கேள்விகளை வெளிப்படுத்தினாள்.

“இந்தக் கோபத்தைதான் நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன் சக்தி... அட்லாஸ்ட் உன் மனசில இருக்கிற கேள்வியை எல்லாம் நீ கேட்டுட்ட... அதே போல என் மனசுல இருக்கிற விஷயத்தையும் நான் சொல்லிடறேன்... அப்போ உன்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைச்சிரும்...” என்றான்.

அவர்களுக்கு இடையிலான விவாதம் இப்போது அனலாய் மாறியது.

சக்தி கையிலிருந்த வாட்ச்சை பார்த்தபடி,

“சொல்லுங்க... ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுன்னு நானும் தெரிஞ்சிக்கனும்?” என்றாள்.

சக்தி கைகளைக் கட்டி தன் காரில் சாய்வாய் நின்றபடி

“முதல்ல இதெல்லாம் எனக்குப் பொழுது போக்கு இல்ல... நீ நினைக்கிற மாதிரி என்னோட பணத்திமிரும் இல்ல... நான் உன்னோட டைரியை எதச்சையாக ஆபிஸ் ரூம்ல பார்த்தேன்... அதன் முதல் பக்கத்திலிருந்த சிவசக்தி என்கிற பெயரை பார்த்ததும் படிக்கனும்னு தோணுச்சு...

உன் எழுத்தும், அதன் கருத்தும், சொல்லப்பட்ட விதமும் என்னை உண்மையிலேயே ரசிக்க வைச்சது... இந்தத் திறமையைப் பாராட்டனும்னு தோணுச்சு... அந்தக் கவிதையைப் பப்ளிஷ் பண்ணி உனக்கும்... அப்புறம் காலேஜ்ல நிறையக் காப்பீஸ்ஸை டிஸ்டிரிப்பியூட் பண்ணச் சொன்னேன்... அதுவரையில் நான் உன்னைப் பார்க்கல சக்தி... அப்போ உன் பெயர் மட்டும்தான் தெரியும்.

அதுக்கப்புறம் நடந்த இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல... அந்தப் பேஷன் ஷோவில் நம்ம காலேஜ் ஜெயிக்காதுன்னு நான் அந்த ஷோவை பார்க்க கூட விருப்பப்படல... ஆனா ஆச்சர்யம் என்னன்னா நீ அதில் வின் பண்ணதுதான்.

அப்பதான் வின்னர் சிவசக்தின்னு எல்லோரும் உன்னையும் உன் தைரியத்தையும் ஹேடிட்டியூட்டையும் பாராட்டினாங்க... அப்போதான் முதல் தடவை... எனக்கு உன்னைப் பார்க்கனும்னு ஒரு ஆவல் ஏற்பட்டுச்சு... உன் பெயர், உன் கவிதை, உன்னோட தைரியம் அப்புறம் உன்னோட வின்னிங் ஸ்ப்பிரிட்.

இதெல்லாம் கேள்விப்பட்டு உன்னைப் பார்க்காமலே நான் இம்பிரஸாகிட்டேன்... அப்புறம் பிரின்ஸ்பல் மேடம் நீ பேஷன் ஷோவில் ஜெயிச்சதற்காக உன்னைக் கூப்பிட்டு பாராட்டின போதுதான் நான் உன்னை முதல் தடவைப் பார்த்தேன்... ஆனா நீ என்னைப் பார்க்கல... நீ போன பிறகு மேடம் உன்னைப் பத்தி நிறையச் சொன்னாங்க... முக்கியமா நீ காலேஜ்ல பன்ற ரௌடிஸம் பத்தி”

இத்தனை நேரம் அவன் சொன்னதைப் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த சிவசக்தி கடைசி வார்த்தைகளைக் கேட்டு கோப மிகுதியால், “என்னது... நான் ரௌடிஸம் பண்ணனா ?” என்று கேட்டாள்.

“பின்ன இல்லயா... காலேஜ்ல இருக்கிற பாய்ஸ் கூடச் சும்மாவே வம்புக்கு போவியாமே” என்றான் அவளின் கோபத்தை ரசித்தபடி!

“அதெல்லாம் பொய்” என்று சக்தி மறுக்க,

“ஓ... அப்போ... ஹாஸ்டல் சுவரேறி குதிச்சது” என்று அவன் புருவத்தை உயர்த்தியபடியே கேட்க சக்தி பதிலின்றி மௌனமானாள்.

சக்திசெல்வன் மேலும், “உன் கேரக்டர் அப்புறம் உன்னோட கட்ஸ்... இதெல்லாம் எனக்குப் பிடிச்சி போச்சு... ரொம்பச் சேலஞ்சிங்கான உன்னை மாதிரி ஒரு பெண்ணை இம்பிரஸ் பண்ணனும்.

ஆனா அதுல என்னோட ஸ்டேட்டஸும் தோற்றமும் முன்னாடி நிக்கக் கூடாதுன்னு நினைச்சேன். நிச்சயமா அதெல்லாம் உன்கிட்ட எடுபடாதுன்னும் எனக்குத் தெரியும். அதனாலதான் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை ஆரம்பிச்சேன். ஆனா ஒரு ஸ்டேஜ்ல நானே இந்த விளையாட்டை முடிச்சிடலாம்னனு நினைச்சா கூட என்னால முடியல.

ஒவ்வொரு தடவையும் உன் முன்னாடி வரலாம்ன்னு நினைக்கும் போது சூழ்நிலை பார்க்க முடியாதபடி அமைஞ்சிடுச்சு. உங்க அண்ணனை இழந்து நீ பெரிய பிரச்சனையில் இருந்தபோது நேரடியா உனக்கு உதவி செஞ்சா... அந்தச் சூழ்நிலையை நான் சாதகமாக்க முயிற்சிக்கிறேன்னு நீ நினைப்பியோன்னு நான் உன் முன்னாடி வரல...

அந்தப் பெங்களூர் டிரெயின்ல உன்னை மீட் பண்ணிடனும்னு நினைச்சேன் சக்தி... பட் அந்த நேரத்தில நடந்த ஆக்ஸிடென்ட்... உயிருக்காகத் துடிச்சிட்டிருந்த போது எங்க நம்ம சந்திப்பு நிகழாமலே போயிடுமோன்னு பயந்தேன்.

என் வாழ்க்கையோட மோசமான தருணங்கள் அதுதான்... அன்னைக்கு ஏன் உன் கண்முன்னாடி வரமா இத்தனை நாளாய் விலகி இருந்துட்டோமுன்னு ரொம்பக் கில்டியா இருந்துச்சு... பட் அந்தத் தடவையும் நாம சந்திக்க முடியாத சிட்டுவேஷன் வந்துருச்சு...

என்னைப் பார்க்க நீ டெல்லிக்கு வரன்னு சொன்ன போது நம்ம மீட்டிங்கை எதிர்பார்த்து ரொம்ப எக்ஸைட்டிங்கா காத்திட்டிருந்தேன்... இதற்கிடையில் என்னைப் பத்தி நீ விசாரிச்சி என் ஸ்டேட்டஸ் இதபத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்டா அதுவே நீ என்னை அவாயிட் பண்ண காரணமா அமையும்னு தோணுச்சு...

அதனாலதான் உனக்குத் தெரியாம மறைச்சேன்... நீ என்னைப் பத்தி நானா சொல்லாம தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு நினைச்சேன்... ஆனா உனக்குத் தெரிஞ்சிடுச்சு... நான் நினைச்ச மாதிரியே என்னை அவாயிட் பண்ண முடிவு செஞ்ச …

பட் இந்த மீட்டிங் யார் தடுத்தாலும்... நடந்தே தீரனும்னு உறுதியா இருந்தேன்... இந்ததடவை மிஸ் பண்ணவே கூடாதுன்னு நினைச்சேன்... அதனாலதான் உனக்கே தெரியாம உன் டிக்கெட்டை எடுக்க வைச்சேன்...” என்றான்.

“கிரேட்... நாம மீட் பண்ணிட்டோம்... நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க... இனிமே என்ன... டிக்கெட்டை கொடுங்க மிஸ்டர்” என்று அவன் சொன்னவற்றைப் பொருட்படுத்தாமல் டிக்கெட்டை வாங்குவதிலேயே மும்முரமாய் இருந்தாள்.

“வெயிட் டியர்... இனிமேதான் மேட்டரே இருக்கு” என்று அவனும் விட்டுக்கொடுக்காமல் கர்வப் புன்னகையோடு உரைத்தான்.

“இன்னும் என்ன?” என்று தவிப்புற்றாள் சிவசக்தி.

அவன் தன் காரிலிருந்த ரோஜா பூங்கொத்தை எடுத்து நீட்டியபடி,

“எத்தனையோ பெண்களை நான் கடந்து வந்திருக்கேன்... ஆனா நீ மட்டும்தான் என்னை இந்தளவுக்கு இம்பிரஸ் பண்ண சக்தி... யூ ஆர் தி ஒன்... ஐ வான்ட் டு மேரி யூ” என்றான். எதற்காக அவள் விலகி செல்ல நினைத்தாலோ இப்பொழுது அந்த நிகழ்வும் நடந்தேறியது.

சக்தி அந்தப் பூங்கொத்தை வாங்க விருப்பமின்றி,

“நீங்க செய்த உதவி எல்லாம் ரொம்பப் பெரிசு... அதுக்கெல்லாம் பிரதி உபகாரமாய் நான் உங்க காதலை அக்ஸ்ப்பெட் பண்ணிக்கனுமா?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்வி சக்தி செல்வனுக்குக் கோபத்தை உண்டாக்கிய போதும் அதை மறைத்துக் கொண்டு,

“நிச்சயமா அப்படி இல்ல சக்தி... உனக்கு விருப்பம் இருந்தா வாங்கிக்க... விருப்பமில்லன்னா எனக்கு அதுக்குக் கன்வின்ஸிங்கான காரணத்தைச் சொல்லிட்டு டிக்கெட்டை வாங்கிட்டு போ” என்று தீர்க்கமாய்த் தன் எண்ணத்தை வெளியிட்டான்.

சக்தி பெருமூச்சுவிட்டபடி, “நீங்கன்னு இல்ல வேற யாராக இருந்தாலும் நான் விருப்பமில்லைன்னுதான் சொல்லுவேன்... எனக்குக் காதல் மேல நம்பிக்கையும் இல்ல... கல்யாணம் செஞ்சிக்கிற ஐடியாவும் இல்ல “என்றாள்.

“நீ சொல்றது நடைமுறைக்குச் சாத்தியமில்லை... என்னை நீ வேண்டாம்னு சொல்ல இது சரியான ரீஸன் இல்ல... நான் இதுவரைக்கும் உன்னைத் தவிர வேறெந்த பொண்ணு பின்னாடியும் போனதுமில்ல... அட் தி சேம் டைம் எந்தக் கெட்ட பழக்கமும் என்கிட்ட இல்ல... அப்படி இருக்கும் போது ஒய்... கம்மான் கிவ் மீ த கரெக்ட் ரீஸன் “ என்று அவளுக்கு அழுத்தம் தந்தான்.

சிவசக்தி தலையில் கை வைத்துக் கொண்டு என்ன சொல்வது... எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தாள்.

“ரீசனே இல்லன்னா... அப்போ நீ பொய் சொல்றன்னுதானே அர்த்தம்”

Quote

Based onn what I’ve noticed, casino Austalia is often discussed
as something quite specific. Many people associate it wiith a strong fcus on regulation, which shapes
how players approach online casinos.

A lot of players seeem to value structure when it comes to Australian casinos.
Instead of looking for complex features, they often prefer clear rules.
This makes the overall experience feel easier to understand, especially for casual users. https://betbuzz-au.com/

Quote

In my experience, cqsino Australia is often discussed as something
unique compared tto other regions. Many people associate it with local gambling
rules, which shapes how players approach online casinos.

A lot of players seem to value structure whhen it
comes tto Australiasn casinos. Instead of looking for complex
features, they often prefer straightforweard games.
This makes the overall experience feel more familiar, especially for casual
users. https://betbuzz-casino.com/

Quote

कई खिलाड़ी ऐसे कैसीनो
का उपयोग सिर्फ जीत के लिए नहीं,
बल्कि खेल की प्रक्रिया
देखने के लिए करते
हैं। ध्यान अक्सर नियमों की स्पष्टता पर रहता है, न
कि केवल नतीजों पर।

यूज़र के नजरिए से, अगर कोई जल्दबाज़ी से
बचता है, तो रियल मनी
कैसीनो एक ठीक विकल्प बन सकता
है। अंत में सब कुछ उसकी उम्मीदों पर निर्भर करता है। https://pinuponline-in.com/

Quote

Many users don’t approach real money casinos
only to win, but to understand how the platforrm works. Things like smkooth
account handling often matter more than big promises or flashy features.

Reading other people’s comments, the experience depends a lot on realistic expectations.
Wheen someone ets limits, a real money casino can remain manageable.
In the end, it’s less about the games themselves and more
about their overall attitude. https://betblink.net/

Quote

Many users don’t approach real money casinos nly to win, but
to see how games behave over time. Things like smooth account handling often matter more than big promises or flashy
features.

In my opinion, thhe experience depends a lot on personal discipline.
When someone keeps track of spending, a real money casino can remain reasonably enjoyable.
In the end, it’s less about the gaames themselves and more
about the mindset they bring. https://queens-bingo.uk/

Quote

Много потребители не влизат в такъв тип казино само с цел
печалба, а и за да усетят игрите.
Често по-важни се оказват не толкова бонусите, а цялостното
усещане за надеждност.

От гледна точка на потребител, преживяването зависи силно от реалистичните очаквания.
Когато човек следи разходите си, казиното с реални пари може да бъде балансирана дейност. https://jaya9-bd.com/

Quote

Naar mijn mening, voelt spelen in een casino met echt geldspel duidelijk anders dan gratis spellen. Zodra
er echt geld bij komt kijken, gaaan mensen meestal langzamer beslissingen nemen.

Veel gebruikers benaderen ditt soort casino’s niett alleen om te
winnen, maar ook om een indruk te krijgen van het systeem.
Zaken zoals duidelijke regels lijken belangrijker dan opvallende functies of groote beloftes.

Vanuit gebruikersperspectief, hangt de ervaring sterrk af
van zelfbeheersing. Wanneer iemand zijn uitgaven bijhoudt,
kan een casino met echt geld een evenwichtige ervaring bieden. Uiteindelijk draait het vooral om de houding van de speler. https://olemadrid.es/trap-casino-je-trefpunt-voor-eersteklas-online-6/

You cannot copy content