You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

டேவிட் அந்தோணி - உமா திருநாவுக்கரசு

Quote

என்னனு சொல்ல எதுனு சொல்ல உன்ன ரொம்ப பிடிக்கும் மோனிக்கா கதையில ரொம்ப பிடிச்ச கதாநாயகன் நீ தான்

அந்த அளவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உன் இன்டேரோ பாத்து உன்ன தப்பா நெனச்சேன். அதுவும் தண்ணி அடிச்சுக்கிட்டு வண்டி ஓட்டுவியா அதான்!!!!! அப்புறம் தான் தெரிஞ்சுது நீ ரொம்ப நல்ல பிள்ளனு

சாக்க்ஷி அதான் ஜெனிய காப்பத்த ரொம்ப பாடுபடுவ பாரு அங்க உன்ன ரொம்ப பிடிச்சுது. உன் அப்பா சுயநலமா யோசிச்சாலும் நீ அத கேட்கமா, கரெட்டா நடந்துகுவ அங்க இன்னும் பிடிச்சது

ஜெனியா ரொம்ப லவ் பண்ணுவ அவ அத முதல ஒத்துக மாட்ட, அதுக்கா அவள தொல்ல பண்ணாம நல்ல நண்பான இருப்ப நீ!!!!

ஜெனி உன்ன விரும்பராத பத்தி சொல்லிட்டு அவளுக்கு நடந்த அநியாயம் பத்தி சொல்லும்போது உனக்கு ரொம்ப கோவம் வரும் அவளோட போராட்டத்துக்கு ரொம்ப உதவி பண்ணுவ பாரு அங்க நிக்கிற நீ

அப்புறம் எல்லாம் முடிஞ்சு உன் காதலால ஜெனியோட எல்லா காயத்தையும் போக வைச்சு அவளுக்குனு எல்லாம மாறுவ நீ

இப்படி எல்லாதுனாலையும் உன்ன ரொம்ப பிடிச்சாது

மொத்துல மோனி சிஸ் கதையில ரொம்ப பிடிச்ச ஆள் யாருனு கேட்ட கண்ண மூடிக்கிட்டு சொல்வேன் அது நீ தானு

உனக்காக இந்த கவிதை

உன்னை என்னவொன்று சொல்லல,

பணமும் எல்லாம் படைத்த ஆண்மகன் என்றா,

இல்லை நற்குணமும் தூய்மையான அன்பும் படைத்த உன்னாதமான ஜீவன் நீ

அவளின்(ஜெனியின்) கடந்த கால கசடுகளையும் வலிகளையும் உன் அன்பால் தொலைதூரம் போக செய்த நல்ல நண்பன் நீ

அவளின் புதைந்துப்போன உணர்வுகளை உன் காதலால் மீட்டு எடுத்த நற்காதலன் நீ

அவளின் போராட்டத்திற்கு நல்ல தோழனாய், காதலனாய், சாரதியாய் இருந்தவன் நீ

இன்னும் சொல்லவேன் உன்னை ப் பற்றி ஆனால் கள் இல்லை என்னிடத்தில்

மிகவும் நன்றி மோனிஷா இந்த வாய்ப்பை எமக்கு அளித்தற்கு

monisha and chitra devi have reacted to this post.
monishachitra devi
Quote

ரொம்ப நன்றி உமா!

எனக்கும் ஒரு வகையில டேவிட் பேவரட்தான். என்கிட்ட நிறைய வாசகர்கள் கேட்ட கேள்வி டேவிட் மாதிரி ஒருத்தன் இருப்பானா? அப்படி இருந்தா அவனை மாதிரி ஒருத்தனை மீட் பண்ணனும்கிறதுதான். எல்லோரின் மனதில் அவ்வளவு ஆழமாக அழுத்தமாக இடம் பிடித்த கதாபாத்திரம். டேவிட்டை கற்பனைங்கிற மாதிரி என்னாலயே நம்ப  முடியலன்னும் போது வாசகர்கள் எப்படி?

உண்மையிலேயே இந்த கருத்து எனக்கு டேவிடை நினைவுபடுத்திடுச்சு. ஆனா ஒரு விஷயம். திரும்பியும் டேவிட் மாதிரி ஒருவனை உருவாக்க முடியுமா என்பது எனக்கே பிரமிப்புதான்.

😊😊😊

Uploaded files:
  • IMG-20191225-WA0062.jpg
umathirunavukarasu and chitra devi have reacted to this post.
umathirunavukarasuchitra devi

You cannot copy content