You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Divya Sivakumar - நானும் நாவலும்

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு

ஹாய்...

*1 என்னோட வாசிப்பு பழக்கம் என்னோட சின்ன வயசுல சிறுவர் மலர் புக்ஸ் ல ஆரம்பிச்சுது...என்னோட அம்மா எனக்கு தமிழ் வாசிப்பு சரளமா வாசிக்க வரணும்னு பழக்கிய விஷயம் இது...வளர வளர வாரமலர்,நூலகத்தில் சிறுவர் கதை,தெனாலி ராமன் கதை இப்படி தொடர்ந்த பழக்கம் ஒரு கட்டத்துல படிப்ப விட கதை புக் முக்கியமானதா???அப்டின்ற கேள்வி வீட்ல இருந்து வர ஆரம்பிச்சதும் சைலண்ட மோட் க்கு போய்டுச்சு...கல்யாணம் ஆனதும் இன்னும் மட்டுபட்டுடுச்சு...எனக்கு குழந்தை பிறந்த சமயம் சில வேண்டாத நிகழ்வுகளால் நான் மனதளவில் ரொம்ப துவண்டு போய் இருந்த நேரம் எனக்கு மறுவாழ்வு தந்தது இந்த நாவல் கள் தான்....அப்போ ஆரம்பிச்சது  இப்போ இன்னும் இன்னும் நிறைய தேடல்கள் எனக்குள்ள விதைச்சுகிட்டே இருக்கு....

*2 எனக்கு ஃப்ரீ டைம் கிடைச்சா போதும் ஃபோன் ல எல்லா சைட் லயும் தேடி தேடி படிக்கிறது தான் வேலையே...அது போல இந்த ஆண்டி ஹீரோ கதை,பெண்ணடிமை கதை இதெல்லாம் படிக்க மாட்டேன்...பலவித பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து மனச ரிலாக்ஸ் பண்ணிக்க தான் கதை படிக்கிறதே... இங்கேயும் எரிச்சல் தர மாதிரியான கதை பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்..நிறைய நல்ல உள்ளங்களையும்,நண்பர்களையும் இந்த நாவல் உலகம் அடையாளம் காட்டி இருக்கு எனக்கு...எழுத்தாளர்கள் பலர் வேலைக்கும் போய்கிட்டு வீட்டயும் பாத்துகிட்டு எழுத்தையு ம் தொடரும் போது நிறைய inspiration தரும் எனக்கு....

monisha has reacted to this post.
monisha
நாவல்கள் எந்தளவு நமக்கு ஆறுதலும் அமைதியும் பல நேரங்களில் உத்வேகமும் தருவதை உங்களுடைய இந்த பதிவின் மூலம் மிக அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.
 
படிக்க சந்தோஷமாக உள்ளது. நன்றி திவ்யா 
Divya Sivakumar has reacted to this post.
Divya Sivakumar

You cannot copy content