மோனிஷா நாவல்கள்
மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 12

Quote from monisha on December 26, 2025, 12:41 PMஅத்தியாயம் – 12
ரஞ்சனால் நம்ப முடியவில்லை. அவனுக்குத் தெரிந்த கவிதா அழுததில்லை. அவனுக்குத் தெரிந்து வரையிலும்... உஹும் இல்லை. ஒரே ஒரு முறை கூட இல்லை.
மனம் தாங்காமல் அவள் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை அவன் கை துடைக்கச் சென்றது.
பட்டென்று அவன் கையை தட்டிவிட்டவள், “நீ எந்த தப்பும் செய்யாத மாதிரி என்னை அடிக்குற” என்று கேட்டாள்.
“நான் என்ன தப்பு செஞ்சேன்?”
“நீ எதுவுமே செய்யலயா?” அவள் அழுத்தமாகக் கேட்க, அவன் அப்போதும் சாதாரணமாகப் பதிலளித்தான்.
“எனக்கு தெரிஞ்சு இல்ல”
“அப்போ உன்கிட்ட பேசுறதுக்கும் எனக்கு எதுவும் இல்ல” என்று விட்டு திரும்பி நடக்க, “அப்போ டிவோர்ஸ்” என்று அவன் கேட்ட நொடி அவள் கால்கள் அப்படியே நின்றுவிட்டன.
“அதுக்காகவாச்சும் இரண்டு பேரும் பேசித்தானே ஆகணும்” என்றபடி மீண்டும் அவள் அருகே வந்தான்.
கோபமாக அவனை முறைத்தவள், “பேசுறதுக்கு எல்லாம் எதுவும் இல்ல. நானும் கையெழுத்து போட்டு தர்றேன். நீயும் கையெழுத்து போட்டு தா. முடிச்சுக்கலாம்” என்றாள்.
“இதையே நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடி கேட்டிருந்தா கண்ணை மூடிட்டு கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பேன். பட் இப்போ’’ என்று நிறுத்தியவன் விழிகள் அவளை ஆழமாக ஊடுருவின. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவன் தவிப்புகளை எல்லாம் தன் கண்கள் வழியாக அவன் கடத்த முயன்றான்.
ஒரு நிலைக்கு மேல் அவன் விழிகளை அவளால் நேர் கொண்டு நோக்க முடியவில்லை. ஏதோ தான்தான் அவனுக்கு அநியாயம் செய்துவிட்டது போலத் தோன்ற வைத்தான்.
அவன் மேலும், “கவிதா நான் உங்களை...” என்று பேச வர,
“ரஞ்சன் ப்ளீஸ், நீயும் நானும் எப்பவுமே கணவன் மனைவியா இருந்தது இல்ல. இனியும் அதுக்கு வாய்ப்பு இல்ல.” என்றாள்.
“ஏன்?”
“ஏன்னா...” என்று நிறுத்தியவள் பின் மூச்சை இழுத்து விட்டு கொண்டு, “நானும் ஸ்ரீயும் லிவிங் இன் இல இருக்கோம். ஆக்சுவலி இந்த மாசம் கல்யாணம் பண்ணிக்கலம்னு முடிவு பண்ணி இருக்கோம்.” என, அவன் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.
“நிஜமாவா?” அவன் குரல் உள்ளே போயிருந்தது. கண்களில் தெரிந்த திடம் உடைந்திருந்தது.
அவள் சொன்ன விஷயத்தை ஏற்க முடியாமல் அவன் அவதியுறுவதை நிதானமாக உள்வாங்கியவள், “ஆமா” என்று விட்டு, “அப்புறம் ஏதோ கமிட்மென்ட்னு சொன்னியே, எனக்கு தெரிஞ்சு நம்ம உறவு சார்ந்து எந்த கமிட்மென்ட்டையும் நான் உனக்கு கொடுத்ததா எனக்கு நினைவில்லை. ஒரு வேளை நீ அப்படி ஒரு கற்பனைல வாழ்ந்துட்டு இருந்தா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது ரஞ்சன். டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன். ஒழுங்கா கையெழுத்து போட்டு அனுப்பி வைக்குற வழிய பாரு” என்றவள் அதன் பின் நேராக டீக்கடைக்கு சென்று, “கிளம்பலாம் ஸ்ரீ” என்று கை காட்டினாள்.
“ஏய் என்னாச்சு. எனக்கு ஒன்னும் புரியல. உனக்கும் அஜயிற்கும் ஏதாவது சண்டையா? ஆமா அவன் யாரு. நான் அவனே பார்த்தே இல்ல. அவன் கூட நீ என்ன பேசிட்டு இருந்த”
“ப்ச் கிளம்பலாம்னு சொன்னேன்” என்றவள் ஓரமாக நின்ற அந்தக் கருப்பு நிற ஸ்கோடாவின் பக்கம் நடந்தாள்.
ரஞ்சன் அங்கேயே நின்று அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்க, அஜய் அருகே வந்து அவன் தோளைத் தொட்டான்.
ஸ்ரீதர் அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே காரில் ஏறினான். ஆனால் அவள் ஒருமுறை கூட திரும்பிப் பார்க்கவில்லை.
இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, “கவி” என்று ஸ்ரீ அழைக்க, “ப்ளீஸ் ஸ்ரீ என்னை எதுவும் கேட்காத” என்றவள் பார்வையை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்.
“சரி ஓகே, எதுவும் கேட்கல. ரிலேக்ஸ்” என்றவன் ஆறுதலாக அவள் கரத்தை பிடித்தான். ஆனால் அந்தப் பிடி இன்னும் அவள் அமைதியைக் குலைத்தது. கண்களிலிருந்து சரசரவென்று இறங்கிய நீரை அவனுக்குத் தெரியாமல் அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.
அந்த பெரிய பங்களாவின் உள்ளே சென்று அந்த கார் நின்றதுமே, கவிதா மாடியிலிருந்த தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
ஸ்ரீதருக்கு ஒன்றும் புரியவில்லை. நேராக அவன் தமக்கை அமலாவின் அறைக்குச் சென்றான். அங்கே அவள் தன் இரண்டு வயது மகளைத் தோளில் போட்டு உறங்க வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே அப்படியே வாசலில் நின்றுவிட்டான்.
அவன் முகத்திலிருந்த கலக்கத்தைப் பார்த்தவள், ஏதோ பிரச்னை என்பதைக் கணித்து விட்டாள். அவனை உள்ளே வர சொல்லி சைகை செய்தாள்.
மகளைத் தூங்க வைத்துவிட்டு அவன் அருகே அமர்ந்து, “இரண்டு பேரும் நல்லாதானே வாக்கிங் போனீங்க. இப்போ என்ன நீ மட்டும் தனியா வந்திருக்க. கவி எங்கே” என்று விசாரிக்க,
“அவ ரூம்ல இருக்கா” என்றான்.
“சண்டை ஏதாச்சும் போட்டுக்கிட்டீங்களா?”
“எங்களுக்குள்ள எந்த பிரச்னையும் இல்லக்கா. ஆனா நாங்க டீ குடிக்க ஒரு கடைக்கு போனோம், அங்கே எங்க காலேஜ் ப்ரெண்ட் ஒருத்தனை பார்த்தோம்”
“யாரு?”
“அவன் பேர் அஜய்... ஸ்கூலில இருந்தே கவியும் அவனும் ரொம்ப க்ளோஸ்”
“பிரண்டை பார்த்து ஏன் அப்செட் ஆகணும்”
“தெரியலயே க்கா, ஆனா அவ அஜயை பார்த்து மட்டும் அப்செட் ஆகல. கூட வேறொருத்தன் இருந்தான்க்கா. அவன்கிட்ட போய் பேசுறேன் போனா. அப்புறம்தான்.. ”
தன் முகத்தில் உண்டான மாறுதலை அமலா சட்டென்று மறைத்துக் கொண்டு,
“சரி சரி நீ டென்ஷன் ஆகாதே. நான் கவிக்கிட்ட பேசுறேன்” என்றாள்.
“அவ ரொம்ப அப்செட் ஆ இருக்கா க்கா. நேரா ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா”
“சரிடா. நான் போய் பேசுறேன். முதல போய் நீ குளிச்சுட்டு டிபன் சாப்பிடு”
“ஆனா கவி”
“நான்தான் பேசுறேனு சொன்னேன் இல்ல. நீ போ.” என்று கட்டாயப்படுத்தி தம்பியை அனுப்பிவிட்டவள், மாடியிலிருந்த கவிதாவின் அறைக்கு விரைந்தாள்.
அமலா கதவைத் தட்டத் தட்ட, அவள் திறக்கவே இல்லை.
“கவிதா ப்ளீஸ் கதவைத் திற” என்ற குரல் கேட்ட போதும் அவள் அமைதியாக அந்த அறைக் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முக்கியமாக அவள் கன்னத்தில் பதிந்திருந்த அவனின் விரல் தடங்களை.
மூன்று வருடங்களுக்கு முன்பாக அவள் பார்த்த ரஞ்சன் இது இல்லை. ஆனால் அவன் எப்படி நிற்க வேண்டும், எப்படி எல்லாம் பேச வேண்டும், என்ன மாதிரியான உடைகள் அணிய வேண்டுமென்று அவள் கற்றுக் கொடுத்தாலோ, அச்சு அசலாக அப்படியே அவன் இன்று இருந்தான்.
படபடப்பு ஏதுமின்றி துணிச்சலுடன் நோக்கிய அவன் விழிகள், பேச்சிலிருந்த தெளிவு, தோற்றத்தில் கூடியிருந்த கம்பீரம் என்று அவனுடைய இந்த மாற்றங்கள் எல்லாம் அவளை வியக்க மட்டும் செய்யவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவளை வசீகரிக்கவும் செய்தது.
அதுவும் இந்தளவு அவன் தன்னை மாற்றிக் கொண்ட பிறகும் அவள் மீது கொண்ட காதலில் மட்டும் அவன் கொஞ்சம் கூட மாறவே இல்லை. அன்று எப்படி அவளைப் பார்த்தானோ இன்றும் அதேபோல பார்க்கிறான்.
என்ன? அன்று அவள் பார்க்காத போது பார்ப்பான். ஆனால் இன்று நேருக்கு நேராகப் பார்க்கிறான்.
ஆரம்பக்கட்டத்தில் அவளுக்கு அது புரியவில்லை. ஆனால் மெது மெதுவாக அவனுடைய பார்வை ஒவ்வொன்றுக்கும் அவளுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது.
*********
ரஞ்சனை அவன் பாட்டி வீட்டிலிருந்து அழைத்து வந்த கவிதா, தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று அவனுக்குச் சுற்றிக் காட்டினாள். பத்தாவது மாடியிலிருந்த அந்த வீட்டின் பால்கனியை திறக்க அதில் பலமாகக் காற்று வீசியது.
“என்கிட்ட நிறைய பேர் ப்ளேட் வாங்காதன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு என்னவோ இந்த வீட்டை பார்த்ததும் பிடிச்சிருச்சு. முக்கியமா இந்த பால்கனி. அதுவும் இங்க நின்னா அப்படியே காத்துல பறக்குற மாதிரி பீல் ஆகும்” என்றவள் கைகளை விரித்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவள் அப்படியே அந்த உணர்வில் லயித்து நிற்க, அவனோ அவளிடம் லயித்தான்.
அந்த நொடி அவன் தன்னையே மறந்து நிலையில் நின்றதை கவினித்துவிட்ட கவிதா, “ரஞ்சன்... ரஞ்சன்” என்று அழைக்க, அவன் தலையை உலுக்கிக் கொண்டான்.
“என்னாச்சு உனக்கு?”
“ஒன்னு ஆகலையே. நீங்க சொன்னதைத்தான் கேட்டுட்டு இருந்தேன். இங்கே நல்லா காத்து வரும்னு...” என்றவன் பேச்சிலிருந்த தடுமாற்றத்தையும் அவள் உணர்ந்து கொண்டாள்.
ஆனால் அப்போதைக்கு அதனை அவள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
மீண்டும் உள்ளே வந்து, “சரி ஒகே. இங்கே ஒரு சோபா வாங்கி போட்டிரலாம், இரண்டு ரூமுக்கு தனித்தனி பெட். டிவி ஹாலில் வைச்சுக்கலாம். அப்புறம் வேற என்ன” என்று கேட்டாள்.
“கிச்சன் திங்க்ஸ்”
“ஆமா இல்ல. கிச்சனுக்கு தேவையான ஐட்டம்ஸ்... ஒரு சின்ன பிரிட்ஜ் வாஷிங் மெஷின்.. இரண்டு ரூமுக்கும் தனித்தனி ஏசி... ஒகே இல்ல”
“இல்ல என் ரூம்ல ஏசி இல்லனா கூட பரவாயில்ல”
அவள் கடுப்புடன், “ஐயோ! உனக்கு நான் எத்தன தடவதான்டா சொல்றது. நீ பிரகாஷ் க்ரூப் ஆப் கம்பனிஸோட எம் டி. எம் டி எம் டி. இந்த மாதிரி அல்பத்தனமா பேசுறதை நிறுத்து. முக்கியமா இந்த மாதிரி கசங்கின சட்டை போடுறதை” என்று அவன் சட்டையை காட்டினாள்.
“நான் இப்படியே பழகிட்டேன்”
“அப்போ உன் பழக்கத்தை மாத்து. சரி, இப்போ நம்ம பர்னிச்சர் கடைக்கு போறதுக்கு முன்னாடி டிரஸ் கடைக்கு போறோம். உனக்கு நல்ல காஸ்டிலியான பிராண்டட் ஷார்ட்ஸா வாங்குறோம்” என்றாள்.
அவள் பேசுவதை அவன் அமைதியாகக் கேட்டிருக்க, “என்ன! என் வாயை பார்த்துட்டு இருக்க, கிளம்பு போலாம்” என்றாள்.
“இப்பவேவா?”
“ஆமா இப்பவேதான்” என்றவள் அவனை முதலில் துணிக்கடைக்கு அழைத்து சென்றாள்.
அங்கே ஐயாயிரத்திற்குக் குறைவாக ஒரு சட்டை கூட இல்லை என்பதைப் பார்த்து அதிர்ந்தவன் தப்பித்தவறி அது குறித்த அவளிடம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
“போ இந்த ஷர்ட்ஸ் எல்லாம் ட்ரையல் பண்ணு” என்றவள் எடுத்துத் தந்த சட்டைகளை எல்லாம் எதுவும் பேசாமல் அணிந்து வந்தான்.
“இது வேண்டாம் இது ஓகே... இது வேண்டாம்” என்று அவனுக்கு பொருத்தமானவற்றை அவளே தேர்வு செய்தாள்.
அதன் பின் அனைத்தையும் பணம் கட்டி வாங்க, “இது எல்லாத்துக்கும் உங்ககிட்ட காசு இருக்கா?” என்று ரஞ்சன் அடக்க முடியாமல் தன் எண்ணத்தை கேட்டுவிட, “இது என் கார்ட் இல்ல. உங்க தாத்தா கார்ட்தான்” என்றாள் அலட்சியமாக.
அங்கிருந்து கிளம்பியவர்கள் அதன் பின் வீட்டிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டனர். அடுத்த இரண்டு நாள் அந்தந்த பொருட்களை அதற்கான இடத்தில் வைத்து வீட்டை ஒழுக்கப்படுத்துவதற்குள் அவர்களுக்குப் போதும் போதுமேன்றாகிவிட்டது.
“இதுக்கு மேல என்னால முடியாதுபா” என்றவள் சோர்வுடன் சோபாவில் சரிய,
“கிச்சன் மட்டும்தான் செட் பண்ணனும், நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றான் ரஞ்சன்.
“ரெஸ்ட் எடுக்குறதா? இன்னிக்கு அஜயோட எங்கேஜமென்ட். நான் சீக்கிரம் போகலனா அவன் என்னை கொன்னுடுவான்”
“அப்போ நீங்க கிளம்புங்க.”
“என்ன விளையாடுறியா? நீயும்தான் என் கூட வர போற. போய் கிளம்பு”
“இல்ல, நான் எதுக்கு?” என்று கேட்க, அவனை கடுப்புடன் முறைத்தாள்.
“இல்ல நீங்க வர சொன்னா நான் வரேன்” என்றவன் அதன் பின் அமைதியாக சென்று அவள் வாங்கி தந்த சட்டை ஒன்றை அணிந்து கொண்டு வரவும், அவள் மீண்டும் கோபமானாள்.
“டேய் இது பார்மல்ஸ்... ஆபிஸ் க்கு போடுறது. பங்கஷனுக்கு இதை போட கூடாது” என, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாச் சட்டையுமே அவனுக்கு ஒரே போலத்தான் தெரிந்தது
வேறு வழியில்லாமல் அவளே ஒரு சிவப்பு நிறச் சட்டையை எடுத்துத் தந்து, “இதைப் போட்டு வா” என, அவன் மறுபேச்சின்றி அதனை வாங்கி மாற்றிக் கொண்டான்.
அதன் பிறகும் அவன் தலையைச் சரி செய்து விட்டு சட்டையை சரியாக டக் இன் செய்ய வைத்து என்று முழுமையாக அவனைத் தயார் செய்தாள்.
“அப்புறம் ரஞ்சன், நம்ம முதல் முதலா ஜோடியா ஓரிடத்துக்கு போறோம். ஆக்சுவலி அஜயிற்கு நம்மள பத்தி தெரியும். ஆனா மத்தவங்களுக்கு நம்ம உண்மையான கப்பில் மாதிரி தெரியணும். நான் சொல்றது உனக்கு புரியுது இல்ல?” என்று அவனிடம் நிதானமாகக் கூற,
“புரியுதுங்க” என்றான்.
“முதல இப்படி வாங்க போங்கனு கூப்பிட்டு தொலையாத. அப்புறம் எல்லோருக்கும் நம்ம வயசு வித்தயாசம் தெரிஞ்சிடும். அதுவும் இல்லாம அஜயிற்கே இன்னும் அந்த விஷயத்தை சொல்லல” என்றவள் ரஞ்சனை விடவும் அதிக படபடப்புடன் இருந்தாள்.
இருவரும் மண்டபத்தில் வந்திறங்கவும், “எதுவும் சொதப்பிட மாட்ட இல்ல” என்று கேட்க, “இல்ல ஆனா அப்பா இங்க நம்மள தேடிக்கிட்டு ஒரு வேளை வந்துட்டா” என்று பயத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க, அவள் தலையிலடித்து கொண்டான்.
“உங்க அப்பா எப்படி இங்க வர முடியும்”
“இல்ல ஒருவேளை நம்மள தேடிக்கிட்டு”
“அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல. நீ முதல பயப்படுறத நிறுத்து. உன் கண்ணுல பயத்தை பார்த்தேன்... கொன்னுடுவேன்” என, அவன் சிரமப்பட்டு தன் முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டான்.
“சிரிக்குறதுக்கு கூட உனக்கு நான் டிரயின் கொடுக்கணுமா?” என்றதும் அவன் இயந்திரத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்தான்.
“வேணாம் சாமி, நீ சிரிக்கவே சிரிக்காத” என்றதும் அவன் உதட்டை மூடி கொள்ள, “இதுவே பெட்டர், சரி வா போலாம்” என்று விட்டு அவனுடன் நடந்தவள் வாயிலில் நின்ற அஜய் பெற்றோரிடம் பேசினாள். கூடவே ரஞ்சனையும் அறிமுகம் செய்தாள்.
“என்னம்மா நீ, உன் கல்யாணத்துக்கு கூட சொல்லல” என்று அதிர்ச்சியுடன் கேட்டனர்.
“அது ஒரு அவசரத்துல நடந்திருச்சு” என்றவள் அதே பதிலை நிறைய பேரிடம் சொல்ல வேண்டியிருந்தது. சிலர் வித்தியாசமாகப் பார்த்தாலும் பலரும் அவர்கள் இருவரையும் பொருத்தமான ஜோடி என்று வாழ்த்தினர்.
“இது வரைக்கும் ஆல் குட்” என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவள், “ஓகே நீ இங்கயே இரு, நான் உள்ளே போய் அஜய்கிட்ட பேசிட்டு வரேன்” என்றதும் அவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
அவள் மணமகன் அறைக்கு செல்ல, அஜய் அவளைக் கடித்துத் துப்பாத குறையாகப் பார்த்து வைத்தான்.
“சாரி சாரி நான் சீக்கிரம் வரணும்னுதான் நினைச்சேன். ஆனா இந்த வீடு செட் பண்ற வேலைதான் கொஞ்சம் இழுத்துட்டே போயிடுச்சு”
அப்போதும் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “அதான் சாரி சொல்றேன் இல்ல. கொஞ்சம் சிரியேன்” என, “போடி” என்றான்.
“சரி போறேன்”
“ஏய் நில்லுடி” என்றவன் அவள் கையை பிடித்து கொள்ள, “என்னடா உன் கை இப்படி சில்லுனு இருக்கு” என்றாள்.
“ஆமா, டென்ஷனா இருக்கு”
“ஏன் டென்ஷன். அதுவும் நீ லவ் பண்ண பொண்ணு வீட்டுல பேசி ஓகே வும் பண்ணி நிச்சயம் வரைக்கும் வந்துட்ட, அப்புறம் என்ன?”
“நீ நினைக்குற மாதிரி இல்ல. ஆனந்தி வீட்டுல இருக்கவங்க யாருக்குமே என்னை பிடிக்கலடி.”
“பிடிக்கலனா இவ்வளவு வேகமா என்கேஜமென்ட் பண்ணுவாங்களா?”
“ஆனந்தி ஏதோ மிரட்டி இருக்கா. அதான் எல்லாம் இவ்வளவு வேகமா நடக்குது”
“அப்புறம் என்ன டென்ஷன். விடு, எல்லா நல்லபடியா நடக்கும். ரிலேக்ஸ்” என்று நண்பனின் கையை பிடித்து ஆறுதல்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் ஆனந்தியின் தந்தை அவரின் நண்பர்கள் சிலருடன் வாசலில் வந்து நின்றார்.
“ஆனந்தி அப்பா” என்றவன் சொன்ன நொடி கவிதா உடனடியாக நண்பனின் கரத்தை விட்டாள்.
“ஆமா நீ” என்று அவர் கவிதாவை பார்க்க, “நானும் ஆனந்தியோட பிரண்ட்தான் அங்கிள்” என்று சொன்னாள்.
“ஆமா ஆமா ஆனந்தி சொல்லி இருக்கா, நீதானே கவிதா” என்றவர் பார்வை அவர்கள் இருவரையும் வித்தியாசமாகப் பார்த்தது.
அதற்கு மேல் அங்கே நிற்க கூடாது என்று, “சரி அஜய் நான் வெளியே இருக்கேன்” என்று அவசரமாக வெளியே வந்தவளுக்கு வேறொரு பிரச்னை வெளியே கூட்டமாக காத்திருந்தது.
ரஞ்சன் உட்கார்ந்த இடத்தை சுற்றி அவளின் கல்லூரி தோழர்கள் வட்டமிட்டு அமர்ந்திருந்தனர் .
“போச்சு” என்று விரைவாக அவ்விடத்திற்குச் சென்றவள், “ஹாய் கைஸ்” என்றாள்.
“ஏய் கவிதா வா வா உட்காரு. இப்பதான் உன் ஹஸ்பென்ட்கிட்ட நாங்க எல்லாம் இன்ட்ரோ ஆயிட்டு இருந்தோம்” என்று கூற, அவள் பதற்றத்துடன் ரஞ்சன் அருகே அமர்ந்தாள்.
“ஆமா நீயும் ரஞ்சனும் சீக்ரெட்டா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிடீங்... களாமே” என்று சுனிதா கிண்டலாக இழுக்க கவிதா தலையசைத்து, “ஆமா... சிட்டுவேஷன் அந்த மாதிரி அமைஞ்சிடுச்சு” என்றாள்.
“சரி.நீயும் ரஞ்சனும் எங்கே முதல் முதல மீட் பண்ணீங்க” என்று சுனிதா கேட்க, மற்றவர்களும் ஆவலாக அவள் முகத்தை பார்த்தனர்.
“எனக்கு பிரகாஷ்னு ஒருத்தர் ஸ்பான்சர் பண்ணாரு இல்ல. அவரோட கிராண்ட் சன்தான் ரஞ்சன். அப்படிதான் நாங்க பார்த்து பேசி பழகினது எல்லாம்”
“அப்போ நம்ம காலேஜ்ல மீட் பண்ணலயா?”
“நம்ம காலேஜ்ல யா?”
“ஆமா ரஞ்சனும் நம்ம காலேஜ்தானே... என்ன ரஞ்சன்?” என்றதும் அவன் முகம் வெளிறியது.
சுனிதா மேலும், “ஆனா நம்ம பேட்ச் இல்ல. ஜூனியர் பேச்... ஜூனியர்னா ரொம்பபபப ஜூனியர்” என்று இழுத்து சொல்ல, “எவ்வளவு ஜூனியர்?” என்று மற்ற நண்பர்கள் அதிர்ச்சியுடன் கேட்டனர்.
“சுனிதா போதும்” என்று கவிதா நிறுத்த, “ஏய் நான் ஜாலியாத்தான் பேசுனேன்” என்று மழுப்பிய சுனிதா, “ஆனாலும் உன்னை விட அஞ்சாறு வயசு சின்ன பையனைக் கல்யாணம் பண்றது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்டி” என்றாள்.
அவ்வளவுதான். நண்பர்கள் எல்லோரும் சகவிதாவை நம்ப முடியாமல் பார்த்தனர்.
“இதுக்கு மேல என் பெர்ஸ்னலை பத்தி பேசுனா உன் செவுலு திரும்பிடும். சொல்லிட்டேன்” என்று கோபத்துடன் எழுந்து நின்று கொண்ட கவிதா, “ரஞ்சன் போலாம்” என்றாள்.
அவன் அமைதியாக அவளைப் பின்தொடர்ந்து செல்ல, “ஏன் அவ அஞ்சாறு வயசு சின்ன பையனை கட்டிக்கிட்டானு இப்போ புரியுதா?” என்று சுனிதா கேலியாகக் கூற, கொல்லென்று எல்லோரும் சிரித்தனர்.
அவர்களின் சிரிப்பு சத்தம் கவிதவை உச்சத்திற்கு கடுப்பேற்றிய போதும் நண்பனின் நிச்சயத்தில் எந்த பிரச்னையும் செய்யக் கூடாது என்று தன்னை அடக்கி கொண்டு கார் நிறுத்தத்திற்கு சென்றுவிட்டாள்.
அங்கே சென்றதும் ரஞ்சனை சீற்றத்துடன் பார்த்து, “நீ எங்க காலேஜ்ல படிச்சனு ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்று கேட்க,
“நான் ஒரே ஒரு வருஷம்தான் அங்கே படிச்சேன். அப்புறம் டிஸ்கண்டினியூ பண்ணிட்டேன்” என்றான்.
“அது சரி, அந்த சுனிதா லூசுக்கு நீ அங்கே படிச்சது எப்படி தெரியும்”
“காலேஜ் படிக்கும் போது நான் அவங்க வீட்டு மாடிலதான் கொஞ்ச நாள் வாடகைக்குத் தங்கி இருந்தேன்”
“சூப்பர்... என் தலையில நானே மண்ணை வாரி போட்டுக்கிட்டேன். இதுக்கு அப்புறம் நான் திரும்பி உள்ளே போனா சரியா வராது. காரை எடு நம்ம கிளம்பலாம்” என்று அவள் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவனும் எதுவும் பேசாமல் ஓட்டிக்கொண்டு வந்தான்.
ஆனாலும் அவன் பார்வை அவள் முகத்தில் படர்ந்த வேதனையை அளந்து கொண்டே வந்தது.
வீட்டுப் பூட்டைத் திறந்ததும் சாவியை ஒரு பக்கமும் பையை மறுபக்கமும் விசிறி விட்டு, அவள் பாட்டுக்கு தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்.
அதனை எல்லாம் எடுத்து மேஜையில் வைத்தவன், மூடிய கதவை சில நிமிடங்கள் வருத்தமாகப் பார்த்துவிட்டு தன் அறையில் சென்று படுத்துக் கொண்டான்.
அவனுக்கு விழிப்பு வந்து எழுந்த போது அவள் பால்கனியில் நின்றபடி தூரமாக எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள். இன்னும் அவள் நேற்றைய மனநிலையிலிருந்து மீண்டு வரவில்லை என்று அவனுக்கு புரிந்தது.
எத்தனை மோசமான மனநிலையிலும் தேநீர் குடித்தால் அவள் மனம் அமைதியடைந்துவிடும் என்பதை அறிந்திருந்வன், உடனடியாக சமையலறைக்குச் சென்று அவளுக்குத் தேநீர் தயாரித்து எடுத்து வந்து நீட்டினான்.
அந்த தேநீர் கோப்பையை வியப்புடன் பார்த்தவள், “கிச்சன் செட் பண்ணலனுதான் நானே டீ போட்டு குடிக்காம இருக்கேன். ஆமா நீ எப்படி?” என்றாள்.
“தேவையான பொருட்கள் வரைக்கும் எடுத்து செட் பண்ணிக்கிட்டேன்”
“எனக்கு அதை கூட செட் பண்ற மூட் இல்ல, பட் தேங்க்ஸ்” என்று அதனை வாங்கி கொண்டவள், “நல்லா இருக்குமா?” என்று கேட்க, “குடிச்சு பாருங்க. நல்லா இல்லனா ஊத்திடுங்க” என்றான்.
அதனை பருகியவள், “யே நல்லா இருக்கு. ஆமா நீதான் டீ குடிக்க மாட்டியா. அப்புறம் எப்படி?” என்றான்.
“குடிக்க மாட்டேன்தான். ஆனா போடுவேன்”
“ம்ம்ம் நல்லா போட்டிருக்க, அது சரி நீ பால்தானே குடிப்ப. உனக்கு போட்டுக்கல”
“இல்ல நான் பால் குடிக்குறதை விட்டுட்டேன்”
“ஏன்?”
“இல்ல விட்டுட்டேன்.”
“நான் உன்னை அன்னைக்கு கிண்டல் பண்ணதாலதானே”
“அது”
“தப்புதான் சாரி, அப்படி பண்ணி இருக்க கூடாது. ஆனா நான் கிண்டல் பன்னங்குறது க்காக உனக்கு பிடிச்ச விஷயத்தை ஏன் நீ விட்டு கொடுக்கணும்.”
“எனக்கு பிடிச்ச விஷயம்னு எல்லாம் எதுவும் பெருசா இல்லங்க”
“அதெப்படி அப்படி இருக்க முடியும். எல்லோருக்கும் பிடிச்ச விஷயங்கள் இருக்கும் ரஞ்சன். அந்த விஷயத்தை செய்யும் போது நம்ம மனசு ரொம்ப சந்தோஷமா உணரும். எனக்கு டீ மாதிரி உனக்கும் ஏதாவது இருக்கும்” என்றவள் சொல்ல, ‘உங்களை பார்த்துட்டே இருக்குறதுதான் எனக்கு சந்தோசம்’ என்று தன் மனதிற்குள் சொல்லி கொண்டான்.
“எனிவே தேங்க்ஸ் பார் தி டீ. அப்புறம் உனக்கு பால்தான் குடிக்க பிடிக்கும்னா குடி. நான் அன்னைக்கு ஏதோ உளறனதை எல்லாம் மனசுல வைசுக்காதே” என்றாள்.
“சரி” என்று திரும்பியவன் மீண்டும் அவள் புறம் பார்த்து, “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்றான்.
“கேளேன்”
“நமக்கு தகுதியே இல்லாத விஷயத்து மேல நம்ம ஆசைப்படுறது தப்பா?”
“நம்ம தகுதியை நம்மதான் தீர்மானிக்கணும். ஒரு வேளை நீ ஆசைப்பட்ட விஷயத்தை அடையறதுக்கு இப்போ இருக்க தகுதி போதாதுன்னா அதை நீ உயர்த்திக்கணுமே ஒழிய அதை விட்டுட்டு உன் விருப்பத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது?”
“நீங்க சொல்றது சரிதான். ஆனாலும் நம்ம நினைச்சது எல்லாம நம்மால் அடைய முடியறது இல்லையே”
“முடியாதுன்னு எல்லாம் இல்ல. முடிய வைக்கணும். அதுக்கு நீ அடம் பிடிக்கணும். எனக்கு இதுதான் வேணும்னு உறதியா நிற்கணும்” என்று ரஞ்சனுடனான நினைவுகளில் ஆழ்ந்திருந்த கவிதாவை, அவளுடைய செல்பேசி உலுக்கியது.
அமலா கதவு தட்டுவதை நிறுத்திவிட்டு அலைபேசி வழியாக வந்திருந்தாள்.
“என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க ப்ளீஸ்”
“உன்னை தனியா விடுறது எனக்கு பிரச்னை இல்ல கவிதா. ஆனா கேட்டுக்கு வெளியே ஒருத்தன் உன்னைப் பார்த்தே ஆகணும்னு பிடிவாதமா நிற்குறான். அவன்கிட்ட நான் என்ன சொல்றது” என்று கேட்டாள் அமலா.
அத்தியாயம் – 12