மோனிஷா நாவல்கள்
மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 16

Quote from monisha on January 20, 2026, 1:02 PMஅத்தியாயம் - 16
சென்னையிலுள்ள கல்லூரியில் ரஞ்சன் சேர்ந்திருப்பதை அறிந்த பிரகாஷிற்கு அளவில்லா ஆனந்தம். பேரனைச் சந்தித்துப் பேச இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதினார். ஆனால் அவர் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை.
அவர் பாட்டிக்குச் செய்த துரோகமெல்லாம் அவனுக்கும் தெரியும் என்பதால் எத்தனை முயன்றும் அவரிடம் அவன் பேசவில்லை.
அந்தச் சமயத்தில் ராகவன் வேலூரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கே அவர் கைதி செய்து அழைத்து வந்த நபரை லாக் அப்பில் வைத்து அடித்து சித்ரவதை செய்து கொன்றதாக ஒரு செய்தி ஊர் முழுக்க பரவியது.
ராகவனையும் அங்கிருந்த மற்ற காவலர்களையும் கைது செய்தனர்.
சாரதாவிற்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலி வந்துவிட்டது. அப்படியொரு இக்கட்டான நிலையில் ரஞ்சனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ரத்னா வேறு மிகவும் சின்ன பெண். சொந்த பந்தம் அக்கம் பக்கத்தினர் யாருமே அந்த நொடி அவனுக்கு உதவிக்கு வரவில்லை. அந்தச் சமயத்தில் பிரகாஷ்தான் ஓடி வந்தார்.
அவனுக்குப் பக்கபலமாக நின்றார். மருத்துவமனை செலவுகளை எல்லாம் பார்த்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து சாரதா ஒருவழியாகக் கண்விழித்த சமயம் ராகவனை ரிமேண்ட் செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
இந்த தகவலறிந்த ரஞ்சன், “எங்க அப்பாவை காப்பாத்துங்க தாத்தா நீங்க நினைச்சா முடியும் தாத்தா, ப்ளீஸ் அப்பாவை காப்பத்துங்க” என்று கெஞ்சிக் கதற, அவர் மனம் இளகியது.
இருப்பினும் இது போன்ற வழக்கிலிருந்து காப்பாற்றுவது எல்லாம் அவ்வளவு சுலபமும் இல்லை. திறமையான வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்தவர், “இந்த விஷயம் உங்க அப்பாவுக்கும் பாட்டிக்கும் தெரிய வேண்டாம்” என்றார்.
“ஆனா தாத்தா...”
“உன் பாட்டி ரொம்ப சுயமரியாதை பார்ப்பாடா, இப்போ இருக்க நிலைமைல இது எதுவும் தெரியாம இருக்குறதுதான் நல்லது. எல்லாம் சரியாகட்டும். சொல்லிக்கலாம்” என்றவர் மேலும், “ஆமா உனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்குனு சொன்னியே படிச்சுட்டியா.” என்றார்.
“படிச்சுட்டேன். ஆனா இந்த மாதிரி நிலைமைல பாட்டியையும் தங்கச்சியையும் விட்டு எப்படி போறது”
“இங்க ஒரு நர்ஸ்கிட்ட ஏற்கனவே சொல்லி வைச்சுட்டேன். அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க நீ போய் எக்ஸாம் எழுதிட்டு வா”
அவன் தயங்கி நிற்க, “சொல்றேன் இல்ல, போயிட்டு வா.” என்றார். அவன் கல்லூரிக்கு தேர்வெழுத செல்ல, அங்கே ராகவனால் லாக் அப்பில் இறந்த நபரின் மகனும் உறவினர்களும் அவனை தாக்குவதற்காக காத்திருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் அவன் ஓட்டம் பிடித்தான். விடாமல் துரத்திக் கொண்டு வந்தவர்கள், கல்லூரி வளாகத்திற்குள்ளும் வந்துவிட்டனர். அவன் காலியாக இருந்த வகுப்பறை ஒன்றுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
அப்போதும் அவர்கள் விடவில்லை. அந்தக் கதவை இடித்து உடைக்க முற்பட்ட சமயத்தில் நண்பர்களுடன் படித்துக் கொண்டிருந்த கவிதா இதைப் பார்த்தாள். உடனடியாக மாணவர்கள் புடைசூழ அங்கே வந்து நின்று, “இது காலேஜ், நீங்க ரவுடிசம் பண்ற இடம் இல்ல. ஒழுங்கா வெளியே போங்க” என்று சத்தமிட்டாள்.
அவள் குரல் உள்ளே ஒளிந்திருந்த அவன் காதிலும் விழுந்தது.
“அந்த பயலை வெளியே வர சொல்லு, நாங்க போறோம்”
“அதெல்லாம் முடியாது. முதல நீங்க வெளிய போங்க. இல்லனா போலீஸ கூப்பிட வேண்டி இருக்கும்”
“போலீஸா.... உள்ளே போய் ஒளிஞ்சுட்டு இருக்கானே, அவங்க அப்பனே போலிஸ்காரன்தான். கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம எங்க அப்பாவை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் அடிச்சே கொன்னுட்டான்” என்ற விஷயத்தைக் கேட்டு அங்கே நின்ற எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கவிதா நிதானத்துடன், “அதெல்லாம் கோர்ட்டு விஷயங்க. இது காலேஜ். இங்கே இந்த மாதிரி ரவுடிசம் பண்ண கூடாது” என்று சொன்னாள். அந்தச் சமயம் அங்கே வந்துவிட்ட ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் அவர்களிடம் பேசி, ஒரு வழியாகச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் மாணவர்கள் எல்லோரும் தேர்வெழுதச் சென்றுவிட்டனர். ஆனால் ரஞ்சன் மட்டும் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. நடந்த கலாட்டாவிற்கு அவன்தான் காரணம் என்று கல்லூரி நிர்வாகம் அவனை மொத்தமாக நீக்கிவிட்டது.
விஷயமறிந்த பிரகாஷ், “இதென்ன அநியாயமா இருக்கு. உன்னை எப்படி டிஸ்மிஸ் பண்ணுவாங்க. இதை இப்படியே விடக் கூடாது. நான் காலேஜ்ல பேசுறேன்” என்றார்.
“இல்ல வேண்டாம். இனிமே நான் அந்த காலேஜ்க்கு போனாலும் எல்லோரும் என்னை கொலைகாரனோட மகனாதான் பார்ப்பாங்க” என்று கண்ணீருடன் கூறினான்.
“அப்படினா உன்னை வேற ஊர் ல இருக்க காலேஜ்ல சேர்த்து விடுறேன். அங்கே உனக்கு எந்த பிரச்னையும் வராது”
“உஹும் நான் இந்த நிலைமைல பாட்டி தங்கச்சியை விட்டு எங்கேயும் போக மாட்டேன்”
அவர் என்ன சமாதானங்கள் சொல்லியும் அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் அவனுக்கு இல்லாவிடினும் முதிர்ச்சி இருந்தது. தபால் முறையில் படித்துக் கொண்டே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து குடும்ப செலவுகளைப் பார்த்துக் கொண்டான்.
பிரகாஷ் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவரிடமிருந்து வேறெந்த உதவியும் அவன் பெற்றுக் கொள்ளவில்லை. பகலில் டெலிவரி பாயாக, இரவு நேரங்களில் பாரில் சர்வராக என்று அவன் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்து அவருக்குத்தான் மனம் தாங்கவில்லை.
வாடகை கார் ஒன்றை வாங்கி தந்து, “ப்ளீஸ் ரஞ்சு இந்த காசை கடனா வைச்சுக்கோ. மாசம் மாசம் கார் ஓட்டி வர்ற லாபத்துல இருந்து எனக்கு நீ கொஞ்சம் கொஞ்சமா அடைச்சிடு” என்றார்.
அவர் அந்தளவு அவனிடம் கேட்டுக் கொண்டதால் அதனை ஏற்றுக் கொண்டான். அன்றிலிருந்து மற்ற வேலைகளை விட்டுவிட்டு முழுவதுமாக வாடகை கார் ஓட்டத் தொடங்கினான்.
நான்கு வருடம் கழித்து ராகவன் வழக்கில் தீர்ப்பு வந்தது.
இது கொலை இல்லை வெறும் தவறி நடந்த விபத்து என்று தீர்ப்பு வழங்கப்பட்டதில் ராகவன் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இதற்காக பிரகாஷ் நிறையப் பெரிய இடங்களில் கையூட்டு கொடுக்க வேண்டி இருந்தது.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட போதும் ராகவனுக்கு அவருடைய வேலையோ வேறெந்த அரசாங்க சலுகைகளோ திரும்பக் கிடைக்கவில்லை.
அன்றிலிருந்து மொத்தமாக அவர் குடிபோதைக்கு அடிமையாகிவிட, ரஞ்சனின் பொறுப்பும் கடமையும் இன்னும் அதிகமானது.
எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு நிமிடம், ஏதோ ஒரு தருணம் மொத்தமாக மாற்றி அமைக்கும். ரஞ்சனுக்கு அப்படி ஒரு நாள் அது.
‘கவி வியர்ஸ்’ அலுவலகத்திற்காகப் புது இடத்தை வாடகைக்கு எடுத்து அதனை முழுவதுமாக சீரமைத்திருந்தனர்.
கவிதாவின் பிறந்த நாள் மற்றும் அலுவலகத்தின் திறப்பு நாள் என்று இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டாட முடிவு செய்து முக்கிய விருந்தினராக பிரகாஷை அழைத்திருந்தனர்.
அங்கே செல்வதற்காக ரஞ்சனிடம் பிரகாஷ் அவன் காரை எடுத்து வரச் சொன்னார். பங்களா வாயிலில் வந்து அவன் காத்திருக்கவும், “டைமாச்சு சீக்கிரம் காரை எடு” என்று முன்னிருக்கையில் அமர்ந்தார்.
“உங்ககிட்ட இல்லாத காரா தாத்தா, எதுக்கு என்னைய வர சொல்லி கூப்பிடீங்க”
“ஒரு முக்கியமான விழாவிற்கு போறோம். அதான் உன்னையும் கூப்பிட்டு போலாம்னு நினைச்சேன்”
“இல்ல, நான் உள்ளே எல்லாம் வர மாட்டேன். இறக்கி விட்டுவிட்டு வாசலில வெயிட் பண்றேன்”
“நீ வரணும். நான் ஒரு முக்கியமான ஆளுக்கு உன்னை அறிமுகப்படுத்த போறேன்”
“யாரு அது”
“அவ பெயர் கவிதா. மத்தது எல்லாம் நீ நேர்ல வந்து தெரிஞ்சிக்கோ” என்றார். அந்த பெயர் சட்டென்று அவன் மனதின் அடி ஆழத்திலிருந்த ஒரு முகத்தை நினைவுபடுத்தியது.
அலுவலக வாயிலில் வந்திறங்கியதும் இருவரும் மின்தூக்கியில் ஏறி இரண்டாவது தளத்திற்கு வந்தனர். கதவு திறந்ததுமே அவன் பார்த்தது அவன் மனதின் ஆழத்திலிருந்த அந்த முகத்தைத்தான்.
அப்படியே கண்களை மூடி அந்த நாளை மீண்டும் நினைத்துப் பார்த்த ரஞ்சன், “நீ அன்னைக்கு ஒரு நீல நிற சேலை கட்டி இருந்த. காதுல கூடை ஜிமிக்கி, வளையம் மாதிரி ஒரு முக்குத்தி, தங்க நிறத்துல ஒரு பொட்டு உன் முடி உன்னோட தோளில் அப்படியே சரிஞ்சு விழுந்துச்சு. அப்போ நீ ஒரு சிவப்பு ரோஜா பூங்கொத்து கையில வைச்சுட்டு வாசலில நின்னுட்டு இருந்த’ என்றவன் விவரித்துக் கொண்டே போக,
“ஆபிஸ் ஓபனிங்கு நீ வந்தியா. ஆனா உன்னை நான் பார்த்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்லையே” என்றவள் கதை கேட்கும் ஆர்வத்தில் அவன் கரங்களின் பிணைப்பில் இருப்பதைச் சுத்தமாக மறந்தே போனாள்.
அந்த நொடியே அவள் தேகத்தை முன்புறமாகத் திருப்பி, “ஏன் னா நான் உள்ளே வரல. உன்னை நேர்ல பார்க்க தைரியம் இல்லாம பயந்து அப்படியே திரும்ப ஓடிட்டேன்” என்றான்.
“போனவன் அப்படியே போக வேண்டியதுதானே, ஏன் டா திரும்பி வந்த என் வாழ்க்கையில”
“நீ வேணும்னு, அதுவும் எனக்கே எனக்கு நீ வேணும்னு அந்த நொடி தோனுச்சு. நீ மட்டும் என் வாழ்க்கையில் கடைசி வரைக்கும் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோனுச்சு” என்று அவள் கன்னங்களை ஏந்தியபடி சொல்ல, “அப்போ உனக்கு தோணினதை உன் தாத்தா அப்படியே செஞ்சுட்டாரு அப்படிதானே” என்றாள்.
“இல்ல இதெல்லாம் தப்புன்னு எவ்வளவோ அவர் எடுத்து சொன்னாரு. நீ என்னை விட வயசுல அதிகம்னும் சொன்னாரு. ஆனா என் மனசு எதையும் கேட்கல. ஏன்னு தெரியல. அதுவரைக்கும் எனக்காக னு நான் எதையுமே ஆசைப்பட்டது இல்ல. என் வாழ்க்கையை பத்தி நான் யோசிச்சது கூட இல்ல. ஆனா திரும்பவும் அன்னைக்கு உன்னை பார்த்த பிறகுதான்... எனக்கு ‘நான்’ அப்படிங்குற உணர்வே வந்துச்சு. வாழணும்கிற ஆசையே வந்துச்சு”
“நீ வாழணும்கிறதுக்காக நான் சாகணுமாடா?”
“கவி”
“கன்னத்துல இருந்து கையை எடுரா” என்றவன் கையை தட்டிவிட்டவள், “தாத்தாவும் பேரனுமா சேர்ந்து என்னை முட்டாளாகுனது இல்லாம இப்போ நீ அதை நியாயப்படுத்த வேற செய்யுறியாக்கும்” என்றாள்
“உன்னை பொறுத்த வரைக்கும் நான் செஞ்சது பெரிய தப்புதான். ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நான் வாழ்க்கையில செஞ்சே ஒரே சரியான விஷயம் உன்னை கல்யாணம் பண்ணதுதான் கவி”
அவள் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“திரும்ப திரும்ப நீ ஆரம்பிச்ச இடத்துல வந்து நிற்குற. உன் கூட பேசி பேசி எனக்குத் தலைவலி வந்ததுதான் மிச்சம். வேண்டாம் இதுக்கு மேல இதைப் பத்தி பேச எனக்கு விருப்பம் இல்ல. இங்கிருந்து இப்போ நீ போவியா மாட்டியா? அதை சொல்லு”
“உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்”
“அப்ப இப்படியே குளிர்ல கிடந்து சாவுடா” என்று விட்டு திரும்பி நடந்தாள்.
“உன்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் எல்லாம் நான் சாக மாட்டேன். கடைசி காலம் வரைக்கும் உன் கூடவே இருந்து உன்னை பத்திரமா வழி அனுப்பி வைச்சுட்ட பிறகுதான் நான் செத்து போவேன்” என்றவன் சொன்னதைக் கேட்ட அவள் திரும்பி முறைக்க, “லவ் யூ” என்று கை விரல்களை இதய வடிவத்தில் காட்டினான்.
“பைத்தியம், லூசு... இவனை” என்று எரிச்சலுடன் புலம்பிக் கொண்டே கேட்டை தட்டினாள்.
கதவைத் திறந்து விட்ட காவலாளி, “அந்த ஆளு போயிட்டானா மேடம்” என்று கேட்க,
“குளிர் அதிகமான தானா போயிடுவான். நீங்க விடுங்க” என்றவள் தன் அறைக்குள் வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.
அவ்வப்போது ஜன்னல் திரைசீலையை விலக்கி எட்டி பார்த்தாள். அவன் அங்கிருந்து அசைவதாக இல்லை. போதாகுறைக்கு பைக்கில் சாய்ந்தபடி அவள் அறையையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.
‘ஐயோ இவனை என்னதான் பண்றதுன்னு தெரியலயே’ தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. தன் செல்பேசியை எடுத்தாள்.
“ஹெலோ யாரு, யாருங்க பேசுறது, இராத்திரி நேரத்துல போன் பண்ணி தொல்லை பண்ணிட்டு”
“நான் கவிதா பேசுறேன்”
சட்டென்று இருபுறமும் மௌனம் குடிகொண்டது.
சில நொடிகளுக்கு பிறகு, “கவிதாவா, எந்த கவிதா?” என்று நக்கலாக ஒரு கேள்வி.
“நான் உன் பெஸ்ட் பிரண்டு கவிதா பேசுறேன்”
“எனக்கு அப்படி எந்த பிரண்டும் இருந்த மாதிரி நினைவு இல்லையே”
“அதானே! இப்போ நான் உன் பிரண்டு இல்லை. அந்த ரஞ்சன்தானே உன் பிரண்டு”
“ஆமா அவன்தான் என் பிரண்டு” என்று அழுத்தி சொன்னான்.
“உன்னோட அந்த பிரண்டு சொல்ல சொல்ல கேட்காம என் வீட்டு வாசல வந்து நின்னு பிரச்னை பண்ணிட்டு இருக்கான்.”
“அங்கே வந்திருக்கேனா? அதுவும் இந்நேரத்துலயா?”
“ஆமா, ஒழுங்கா வந்து அவனை கூட்டிட்டு போ”
“கூட்டிட்டு போகவா. நான் இப்போ சென்னையில இருக்கேன்”
“இவனை இங்க விட்டுட்டு நீ ஏன் சென்னைக்கு போன”
“ஆனந்திக்கு குழந்தை பொறந்திருக்கு”
“என்ன?” என்றவள் சட்டென்று இறங்கிய குரலில், “குழந்தையும் ஆனந்தியும் நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தாள்.
“ஆமா ஆமா உனக்கு ரொம்பத்தான் அக்கறை”
“இப்படி எல்லாம் பேசாத அஜய். எப்பவுமே நீதான் என் பெஸ்ட் பிரண்ட்” என்றதுமே அவன் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
என்னதான் அவள் மீது கோபம் இருந்தாலும் அவள் குரலைக் கேட்டதும் அவன் மனம் கரைந்துவிட்டது.
“பெஸ்ட் பிரண்ட்னு சொல்லிட்டு ஏன் டி சொல்லாம கொள்ளாம விட்டுட்டு போன”
“உன்கிட்ட சொன்னா என்னை போக விட்டிருக்க மாட்ட, அதானே”
“நீ முதல போக வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு”
“நம்ம ரொம்ப நம்புற நேசிக்குற மதிக்குற ஒருத்தர் நம்மல நம்ப வைச்ச ஏமாத்தும் போது நம்மால என்ன பண்ண முடியும் அஜய். அவங்க சட்டையை பிடிச்சு சண்டை போட முடியுமா? அப்படி என்னால செய்ய முடியல. அதான் அவங்க முகத்தில கூட முழிக்க கூடாதுன்னு தூரமா போயிட்டேன்”
“நீ யாரை சொல்ற?”
“பிரகாஷ் தாத்தாவை. அப்புறம் நீ பிரண்டு னு சொல்லிட்டு இருக்கியே... அந்த ரஞ்ஞ்ஞ்சனை”
“ரஞ்சனும் பிரகாஷ் தாத்தாவும் உன்னை நம்ப வைச்சு ஏமாத்துனாங்களா?”
“ஆமா, அதுவும் அந்த ரஞ்சன் அப்பாவி மாதிரி நடிச்சு என்னை நல்லா முட்டாளாக்கிட்டான்” என்றவள் சொல்ல, அஜயிற்கு ஒன்றும் புரியவில்லை.
அத்தியாயம் - 16