மோனிஷா நாவல்கள்
மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 21

Quote from monisha on February 11, 2026, 7:00 PMஅத்தியாயம் – 21
கவிதா, ஸ்ரீதரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி முறைக்கிற?” என்றான் ஸ்ரீதர் அசால்ட்டாக.
“எனக்குத் தெரியாம அஜய் கிட்ட பேசியிருக்க... போதாகுறைக்கு வக்கீல் கிட்ட பேசி அந்த ரஞ்சனை வெளியே எடுக்கச் சொல்லியிருக்க. இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலையா உனக்கு?”
“நீ கூடத்தான் எங்க அக்காவுக்கும் மாமாவுக்கும் உளவு சொல்லிட்டு இருக்க... அதெல்லாம் என்கிட்ட கேட்டுட்டா செய்ற?” என்று அவன் எடக்காகக் கேட்க, அவள் எரிச்சலானாள்.
“அதுவும் இதுவும் ஒன்னு இல்ல ஸ்ரீ!”
“எப்படி ஒன்னு இல்லைங்கிற?”
“அவங்க உன் கூடப் பிறந்த அக்கா!”
“அப்படிப் பார்த்தா அஜய் உன்னோட பெஸ்ட் பிரண்ட்.”
“நாட் எனிமோர்! நீ இனிமே அவன்கிட்ட பேசாத... முக்கியமா அந்த ரஞ்சன் கிட்ட!”
“அப்போ நீயும் பேசாத.”
“என்ன?”
“எங்க அக்காகிட்ட,” என்றதும் அவள், “அது எப்படி முடியும் ஸ்ரீ?” என்று தணிந்த குரலில் கேட்டாள்.
“அப்போ என்னையும் நீ கண்ட்ரோல் பண்ணக் கூடாது,” என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, கவிதாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “அப்படியா? சரி... உன் இஷ்டம் போல என்னவோ பண்ணிக்கோ. நான் போறேன்,” என்றவள் அவசர அவசரமாகப் பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கிச் சென்றாள்.
ஆனால் செல்லாமல் அங்கேயே நின்று அவனைத் திரும்பிப் பார்க்க, “என்னாச்சு? கிளம்பு,” என்று விட்டு அவன் கண்கள் மூடிப் படுத்துக்கொண்டான். “போடா... நான் போறேன்!” என்று சொல்லிக்கொண்டே மருத்துவமனைக்கு வெளியே வந்துவிட்டாள்.
எங்கே போவது என்று சுற்றுமுற்றும் பார்த்தவள், சாலைக்கு எதிர்புறமிருந்த தேநீர்க் கடையைப் பார்த்துவிட்டு அங்கே சென்றாள்.
“அண்ணா ஒரு டீ,” என்று சொல்லிவிட்டு அமர்ந்தவள் கண்ணில், ரஞ்சனின் அட்டைப்படம் கொண்ட ஆங்கிலப் பத்திரிகை தட்டுப்பட்டது.
‘Best Entrepreneur of the Year’ — அஜய் சொன்னது போலவே அவளின் ‘கவி வியர்ஸ்’ நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்திருந்தது. அது அவளுடைய கனவு... லட்சியம். ஆனால் அவன் அதைச் சாதித்திருக்கிறான்.
“இந்த மேகஸின் ஒன்னு கொடுங்க,” என்று அதனை வாங்கிப் படிக்கப் படிக்க அவளுக்குப் பிரமிப்பு அடங்கவில்லை. மாதம் தவறாமல் ரஞ்சன் அவர்களின் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை மின்னஞ்சல் அனுப்பும் போது, இதெல்லாம் உண்மைதானா என்று அவள் சந்தேகப்பட்டதுண்டு. ஆனால் இன்று ஆதாரத்துடன் கண்டபோது, அவளுக்கே தெரியாமல் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.
‘You did it man!’ — மனதிற்குள் சொல்லிக்கொண்டு அந்தப் பத்திரிகையைப் பையில் திணித்தாள்.
மீண்டும் அறைக்குள் வந்தவளைப் பார்த்த ஸ்ரீதர், “என்ன... வாசல் வரைக்கும் போயிட்டுத் திரும்பி வந்துட்டியா?” என்று எள்ளலாகக் கேட்டான்.
“இல்ல, டீ கடை வரைக்கும் போனேன்,” என்றதும் அவன் சிரிக்க, “சிரிக்காத... நான் போயிட்டா உனக்குக் கவலையே இல்லையா?” என்றாள்.
அவன் சிரிப்பு மெல்ல அடங்கியது. அவளது கையை மென்மையாகப் பற்றி, “நீ கூட இருக்கிறதுதான் எனக்கு உண்மையிலேயே கவலையா இருக்கு... பேசாம போயிடேன் கவி,” என்றான். அவனது குரலில் வலியும், அவளைப் பிரியப்போகும் பயமும் இழைந்திருந்தது.
“பேசாம நம்ம திரும்பவும் நியூயார்க் போயிடுவோமா ஸ்ரீ? அங்க நிச்சயம் ஏதாவது ட்ரீட்மென்ட் இருக்கும்,” என்றாள்.
“நியூயார்க் வேண்டாம். நம்ம சென்னைக்குப் போவோம்.”
“சென்னைக்கு எதுக்கு?”
“நம்ம காலேஜுக்கு... அங்க போய்த் திரும்பவும் உன்னைக் காதலிக்கணும்னு தோணுது,” என்றவன் ஏக்கமாக சொல்ல, அவள் மனம் கனத்தது.
மதியம் மருத்துவர் வந்தபோதும் அவன் அதையே சொன்னான்.
“டாக்டர், ஒரு பத்து நாள் டைம் கொடுங்க. சென்னைக்குப் போய் என் பிரண்ட்ஸ் காலேஜ் எல்லாம் பார்த்துட்டு வந்துடுறேன். ப்ளீஸ்,” என்று கெஞ்சினான்.
“இந்த நிலைமையில டிராவல் பண்றது ரிஸ்க் ஸ்ரீதர்,” என்று மருத்துவர் மறுக்க, “இங்கேயே படுத்திருந்தா மட்டும் நான் பிழைச்சுடுவேன்னு நினைக்கிறீங்களா?” என்று அவன் கேட்டதில் அந்த இடமே நிசப்தமானது.
“இப்படி எல்லாம் பேசாதன்னு உன்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல,” என்று கவிதா கண்டிக்க, “அப்போ எனக்காக நீ பேசு,” என்று அவளையே உள்ளே இழுத்துவிட்டான்.
“ப்ளீஸ் கவி... ஜஸ்ட் டென் டேஸ்!”
அவள் யோசித்துவிட்டு, “சரி. ஆனா உன் அக்கா, மாமா நம்ம கூட வர நீ ஒத்துக்கணும்,” என்றாள்.
“சரி, ஆனா அவங்கத் தனியா வரட்டும். நம்ம கூட தங்குறது, டிராவல் பண்றது எல்லாம் தனித்தனியா இருக்கணும்.”
“ஏன், அவங்க கூட இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“நான் ஒரு கேன்சர் பேஷன்ட்டுங்கிறதை அந்தப் பத்து நாளாச்சும் மறந்து வாழணும்னு நினைக்கிறேன். அவங்க கூட இருந்தா அது முடியாது,” என்ற ஸ்ரீதரின் வாதத்தை அவளால் மறுக்க முடியவில்லை.
அவள் ராஜேஷிற்கு அழைத்து பேசினாள். அவர் தயங்கினாலும், ஸ்ரீதரின் ஆசைக்காகச் சம்மதித்தார்.
இதனை அறிந்த ஸ்ரீ மகிழ்ச்சியுடன், “சென்னை போனதும் நம்ம காலேஜுக்குப் போய் பார்க்கணும்,” என்றான்.
“அதுக்கு பெர்மிஷன் வாங்க வேண்டாமா? அதுவும் இல்லாம சென்னையில எங்கே தங்க போறோம்... என்ன பிளான்? இன்னும் எதுவுமே முடிவு பண்ணலையே.”
“அதெல்லாம் பேசியாச்சு... ஆல் செட்!” என்றான்.
“யார்கிட்ட பேசுன?”
“வேற யாரு... நம்ம அஜய்கிட்டதான்,” என்றதும் அவள் முகம் மாறியது.
இருப்பினும் ஸ்ரீதரின் சந்தோஷத்தை அவள் குலைக்க விரும்பவில்லை. சென்னைக்குப் போகும் ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடந்தன. தனி விமானம், மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் தயார் செய்யப்பட்டன. சென்னை வந்து இறங்கியதும் அஜயும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.
ஸ்ரீதர் சொன்னது போல முதலில் அவர்கள் கல்லூரிக்குச் சென்றனர்.
“உள்ளே போலாமா? யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களே?” என்று கவிதா தயக்கத்துடன் கேட்க, “பெர்மிஷன் எல்லாம் வாங்கியாச்சு. வா உள்ளே போலாம்,” என்று அஜய் முன்னால் வழிகாட்டினான்.
அந்தக் கல்லூரி முழுவதும் அவள் தடங்கள் இருந்தன. எங்கே திரும்பினாலும் அவள் நின்று பேசிச் சிரித்த தருணங்கள், அரட்டை அடித்த இடங்கள், அமர்ந்து படித்த மரங்கள், பரிசு வாங்கிய மேடை எனப் பற்பல நினைவுகள்.
அஜயும் ஸ்ரீயும் ஆர்வமாக அவர்கள் சண்டை போட்ட கதைகளைப் பேசி கொண்டே நடக்க, அவள் மனம் எங்கேயோ கழன்று தனியாக பயணித்தது.
அந்த இடமும் ஞாபகங்களும் அவளுக்கு அந்நியப்பட்டுப் போனதாகத் தோன்றியது. எல்லாம் பல யுகங்களுக்கு முன்பு நடந்தது போன்ற ஒரு உணர்வு.
“கவிதா!” என்று ஸ்ரீ அவள் தோளை உலுக்க, எல்லாம் கனவு போலக் கலைந்தது.
“என்னாச்சு கவி?” என்று அவன் கேட்க, “அது... பழைய ஞாபகம்,” என்றாள்.
“ஆமா, எனக்கும் அப்படியே அந்த டைமுக்கே போயிட்ட மாதிரி இருக்கு... ஏய் இந்த இடம் ஞாபகம் இருக்கா?” என்று ஒரு மரத்தடியில் இருந்த கல்மேடையைக் காட்டி, “நான் உன்கிட்ட ப்ரோபோஸ் பண்ணும்போது நீ இங்கேதான் உட்கார்ந்து படிச்சுட்டு இருந்த,” என்றான்.
“ஞாபகம் இருக்கு.”
“அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் பண்ணட்டுமா?” என்று அவன் ஆர்வமாகக் கேட்க, அவள் சிரித்தாள்.
“சீரியஸா கேட்குறேன்.”
“அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன செய்வ?”
“அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு சரிஞ்சுடுவேன்.”
“இப்படிப் பேசினா அறைஞ்சுடுவேன் பார்த்துக்கோ,” என்று அவன் தோளில் தட்டவும் அவள் செவியருகே குனிந்தவன், “அப்போ ரிஜெக்ட் பண்ணாத பேபி” என்றான்.
“அப்படியா... அப்போ அன்னைக்கு மாதிரி கைல ரோஸசோட ப்ரோபோஸ் பண்ணனும்.”
“இப்போ நான் ரோஸஸுக்கு எங்கே போறது?”
“அது உன் பிரச்சனை,” என்று அலட்டலாக சொல்லிவிட்டு கவிதா அந்த திண்டில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொள்ள, ஸ்ரீதர் அஜய்க்குச் சைகை காட்டினான்.
அடுத்த பத்தாவது நிமிடம், “நீ கேட்ட பிளவர்ஸ் வந்திருச்சு பேபி!” என்றான் ஸ்ரீதர்.
“எங்கே? உன் கைல இல்லையே,” என்றாள்.
“அங்கே,” என்று ஸ்ரீதர் காட்டிய திசையில் ரஞ்சன் ஒரு பெரிய ரோஜாப் பூங்கொத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்த கணமே கவிதாவின் இதயம் தாறுமாறாகத் துடித்தது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வு. அவள் சட்டென்று அஜயைத் திரும்பி முறைக்க, ‘நீதானே கேட்ட’ என்பது போல் தோள்களைக் குலுக்கினான்.
அதேசமயம் ஸ்ரீதரிடம் பூங்கொத்தைக் கொடுத்த ரஞ்சன், நொடிக்கும் குறைவாகவே அவளைப் பார்த்தான். என்றாலும், சிவப்பு நிறப் புடவையில் கம்பீரமாக அவள் அமர்ந்திருந்த விதம் அவன் மனத்திரையில் பதிந்தது. அந்தக் கணநேர பார்வையை எதிர்கொள்ள இயலாமல் அவள் தலைகவிழ்ந்து கொண்டாள்.
ஸ்ரீதர் பூங்கொத்தை நீட்டி, “ஐ கான்ட் இமேஜின் லைப் வித்தவுட் யூ பேபி. யூ ஆர் மை லைப் அன் யூ ஆர் மை லவ்... ஒன் அன் ஒன்லி லவ்,” என்று உருகினான்.
“யூ ஆர் மை லவ் டூ” என்று அவளும் புன்னகையுடன் அந்த பூங்கொத்தை வாங்கிக் கொள்ள, அஜய் அந்த காட்சிகளை அழகாக படம் பிடித்தான்.
“தேங்க் யூ... தேங்க் யூ!” என்று ஸ்ரீதரின் அதிகப்படியான சந்தோஷத்தைப் பார்க்கக் கவிக்குப் பதற்றமானது. “போதும் ஸ்ரீ... போலாம்,” என்றாள் மெல்லிய குரலில்.
“அதுக்குள்ளயா? நம்ம கிளாஸ் ரூம் எல்லாம் போய் பார்த்துட்டுப் போலாம்,” என்றவன் சொன்னதும், “ஆமா, இப்பதான் கவனிக்கிறேன். ஏன் காலேஜ்ல யாருமே இல்ல? இன்னைக்கு வொர்க்கிங் டே தானே?” என்று கேட்டாள்.
“ஆடிட்டோரியத்துல ஏதோ ஃபங்ஷன் நடந்துட்டு இருக்கு, அதான் கிளாஸ்ல யாரும் இல்ல.” என்றான் அஜய்.
“அப்போ போய் பார்க்கலாம் வா,” என்று ஸ்ரீ உற்சாகத்துடன் கவிதாவை அழைத்துச் சென்றான்.
அவர்கள் செல்வதைப் பார்த்தபடி ரஞ்சன் அவள் அமர்ந்திருந்த திண்டில் அமர்ந்து கொள்ள, “நீ வரலையா எங்க கூட?” என்று கேட்டான் அஜய்.
“இல்ல, எனக்கு இங்கே சுத்தி பார்க்க நல்ல மெமரீஸ்னு எதுவுமே இல்ல.”
“அதெப்படி சொல்ற? நீ கவிதாவை பார்த்தது இங்கேதானே?”
“ஆமா... ஆனா அவங்களை நான் பார்க்காம இருந்திருக்கலாம்னு இப்ப தோணுது. என்னோட சுயநலத்தாலதான் அவங்க இவ்வளவு கஷ்டப்படுறாங்க. இட்ஸ் ஆல் மை ஃபால்ட்,” என்றான் வருத்தத்துடன்.
“நடந்த எதையும் நம்ம மாத்த முடியாது ரஞ்சன். இனிமே என்ன பண்ணலாம்னுதான் யோசிக்கணும்,” என்று அவன் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றான் அஜய்.
பின்னர் அவனும் கவிதா, ஸ்ரீதருடன் இணைந்து கொண்டான். தங்கள் பழைய வகுப்பிற்குள் சென்று நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டனர்.
வெளியே வந்ததும் கவிதா அஜயைத் தனியாக அழைத்து, “எதுக்கு இவனை இங்க கூட்டிட்டு வந்த?” என்றாள்.
“அவனாலதான் நமக்கு இங்கே வர பெர்மிஷன் கிடைச்சுது.”
“பெரிய பெர்மிஷன்... நான் நினைச்சா கூடத்தான் பெர்மிஷன் வாங்கி இருக்க முடியும்”
“அவனை மாதிரி கேட்டதும் கிடைச்சிருக்காது.”
“ஏன்?”
“அங்கே பாரு” என்றவன் அருகிலிருந்த புதிய அரங்கத்தைக் காட்டினான். “நம்ம காலேஜுக்கு அந்த ஆடிட்டோரியத்தைக் கட்டிக் கொடுத்ததே அவன்தான்.”
“அவன் பெரிய கொம்புதாம்பா... ஒத்துக்கிறேன். அதுக்கு... அவன் காலில் நான் விழணும்னு சொல்றியா”
“நான் அப்படி சொல்லல”
“நீ அப்படித்தான்டா சொல்ற... இதுவரைக்கும் அவன் என் வாழ்க்கையில பண்ண குழப்பம் போதாதானு அவனை திரும்பவும் கூட்டிட்டு வந்து...” என்றவள் முடிப்பதற்கு முன்பாக, “உன் வாழ்க்கையில நடந்த குழப்பத்துக்கு அவன் மட்டும் காரணம் இல்ல... உன் ஈகோவும்தான்டி காரணம்” என்று அஜய் சத்தமிட்டான்.
அந்த வார்த்தைகளை கேட்டவள்உதடுகள் துடித்தன.
“என்ன சொன்ன?”
“உன் தலையில இருந்து கால் வரைக்கும் ஈகோன்னு சொன்னேன்,” என்று அஜய் இன்னும் அழுத்தமாக சொல்ல அத்தனை நேரம் அங்கே அமைதியாக நின்ற ஸ்ரீதர் அப்போது வேறு வழியில்லாமல் இடையில் வந்து, “கைஸ் கைஸ்... சண்டை வேண்டாம் ப்ளீஸ்,” என்றான்.
“இது சரிப்பட்டு வராது ஸ்ரீ. நம்ம தனியா போவோம். நான் டாக்டருக்கு போன் பண்ணி கார் அரேஞ்ச் பண்ண சொல்றேன்,” என்று ஸ்ரீதர் கையைப் பிடித்து அழைத்து கொண்டு கவிதா செல்லவும்,
“நோ வே!” என்று கையை உதறிவிட்டவன், “நான் ஏற்கனவே சொல்லிட்டேன், என் அக்கா மாமா கூட வர முடியாதுன்னு,” என்றான்.
“என்னாலயும் இவங்க ரெண்டு பேர் கூட டிராவல் பண்ண முடியாது.”
ஸ்ரீதர் கிண்டலாக சிரித்தான்.
“இப்போ எதுக்குச் சிரிக்குற? நான் என்ன காமெடியா பண்ணிட்டு இருக்கேன்”
“சுத்தி வளைச்சுப் பேசாம உண்மையைச் சொல்லு கவி.”
“என்ன உண்மை?”
“உன் மனசுல இருக்க உண்மை. அவனை நீ லவ் பண்ற. அவன் உன் பக்கத்துல இருக்கிறது உனக்கு டிஸ்டர்பிங்கா இருக்கு... அதான் அவனைப் பார்த்ததும் தடுமாறற... நேரா பார்க்க முடியாம அவஸ்தைப்படுற.”
“திஸ் இஸ் புல்ஷிட்! எனக்கு அவனை கண்டாலே பிடிக்கல.”
“பிடிக்காதவங்களை நீ எப்படி நேருக்கு நேரா தாக்குவனு எனக்குத் தெரியும்.”
“எனக்கு அவன் மேல எந்த பீலிங்ஸும் இல்ல.”
“அப்படின்னா இந்த பத்து நாளும் அவனும் நம்ம கூடவே ஸ்டே பண்ணட்டும். அப்போ உனக்கே புரியும், உன் மனசுல என்ன இருக்குன்னு.” என்றதும் முதலில் அதிர்ந்தவள் பின்னர் நக்கலுடன்,
“இது உன் ப்ளேனா இல்லா அவனுங்க இரண்டு பேரும் சேர்ந்து போட்ட ப்ளேனா?” என்று கேட்டாள்.
“யாருடைய ப்ளேனா இருந்தா என்ன? நீ சொல்ற மாதிரி உனக்கு அவன் மேல ஃபீலிங்ஸ் இல்லைன்னா, அவன் கூட இருக்கிறது உன்னை எந்த வகையிலும் பாதிக்காது இல்ல?” என்று ஸ்ரீதர் சொல்லி முடித்துதுமே பலமாக இருமினான்.
“அதுக்குதான் சொன்னேன்... கிளம்பலாம்னு கேட்டியா நீ” என்று அவனை ஆசுவாசப்படுத்தி காருக்கு அழைத்துச் சென்றாள்
அங்கே ரஞ்சன் நிற்பதைப் பார்த்து, “வந்து காரை எடு... கிளம்பலாம்” என்றாள்.
அவள் தன்னிடம்தான் பேசுகிறாளா என்று அவன் சுற்றும் முற்றும் பார்க்க, “உன்கிட்டதான் சொல்றேன்... காரை எடு!” என்றாள்.
“இல்ல, நான் என் கார்ல...” என்று அவன் தயங்க, “அதை அஜயை டிரைவ் பண்ணிட்டு வரச் சொல்லு. நீ வந்து இந்த காரை எடு” என்றவள் ஏறி அமர்ந்து கொண்டாள்.
கார் கதவு சத்தமாக அடைந்து மூடப்பட்டது.
கவிதா முன்பக்கம் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டே, “ரஞ்சன் நீயும் எங்க கூடத்தான் தங்குற.” என்றாள்.
ஸ்ரீதர் அவளைத் திகைப்புடன் பார்த்தான்.
ரஞ்சன் ஒரு நொடிக்கு காரை இயக்க மறந்துவிட்டான்.“கவி…” என்று அழைக்க முயன்ற ஸ்ரீதரை அவள் கை காட்டி நிறுத்தினாள்.
“எதுவும் பேச வேண்டாம்.”
ரஞ்சன் மெல்ல திரும்பிப் பார்த்தான்.
“நீங்க… இதை யோசிச்சு சொல்றீங்களா?”
“ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கையெழுத்து போட்ட போதும் மட்டும் யோசிச்சா பண்ணேன். ஜஸ்ட் லைக் தட் போட்டுடல... அப்படிதான் இதுவும்” என்றவள் கண்கள் அவனை தாக்கி நிற்க, அந்த பார்வையிலிருந்தது கோபமா வலியா இயலாமையா... அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அது அவனை பலமாக அடித்து நொறுக்கியது.
“சாரி…” அவனது குரல் உடைந்தது. “நான் செஞ்ச எல்லாமே தப்புதான். நீங்க கேட்ட மாதிரி… நான் வேணா டிவோர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து போட்டு தர்றேன்.” என, அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன.
“ரஞ்சன்… அவசரப்படாதே,” என்று ஸ்ரீதர் சொல்ல, “அவன் நடிக்குறான் ஸ்ரீ” என்று கவிதா உடனே வெட்டினாள்.
“இல்ல” என்று ரஞ்சன் நேராக அவள் கண்களைப் பார்த்தான்.
“நான் நடிக்கல.”“ஓ இது நடிப்பு இல்லயா... சாரி உன் நிஜம் எது நடிப்பு எதுன்னு எனக்கு சரியா தெரியல.” என்ற அவளின் எள்ளலில் அவன் நரம்புகள் துடித்தது. அவன் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்து கொண்டான்.
அவள் மீண்டும் பேசினாள். “அன்னைக்கு நான் எவ்வளவு சொல்லியும் நீ கேக்கல. இப்போ… நான் அடம் பிடிக்கிறேன்...”
அவள் அடுத்தடுத்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக அடித்தாள்.
“இந்த பத்து நாள்ல… ஒன்னு... நீ என்னை முழுசா வெறுக்கணும்.
இல்ல... நான் உன்னை ஏத்துக்கணும்.”ஸ்ரீதர் அதிர்ச்சியில் மூச்சை இழுத்தான்.
“தட்ஸ் இட்.” என்றவள் முடிக்க, ரஞ்சன் நீண்ட நேரம் பேசவில்லை.
அந்த காரில் கனத்த மௌனம் சூழ்ந்தது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு ரஞ்சன் மெதுவாக பேசினான்.
“நீங்க என்ன பண்ணாலும்… என்னால உங்களை லவ் பண்ண மட்டும்தான் முடியும். வெறுக்க முடியாது... அதுக்கு வாய்ப்பே இல்ல” என்று உறுதியாக சொன்னான்.
“அப்போ… வந்து தங்கு.”
ரஞ்சன் ஸ்ரீதரை நோக்க, அவன் தலையசைத்தான்
“சரி தங்குறேன்” என்றான் ரஞ்சன்.
கார் நகரத் தொடங்கியது.
கவிதாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் ஸ்ரீதர் பேசினான். “உன் ஈகோவை நான் குறைச்சு எடை போட்டுட்டேன் பேபி.”
முன்கண்ணாடியில் ரஞ்சனின் பிம்பத்தைப் பார்த்தவள், “இது ட்ரைலர்தான் பேபி. மெயின் பிக்சர்… இனிமேதான்.” என்று சத்தமாக சொன்னாள்.
ரஞ்சன் மென்னகையுடன் காரை இயக்குவதில் கவனம் செலுத்தினான்.
இப்போது ஸ்ரீதரின் மனதில் பயம் எட்டிப் பார்த்தது.
ஒருவேளை இந்த சாவல் மொத்தமாக அவர்கள் உறவையே மொத்தமாக முறித்துவிட்டால்...?
அத்தியாயம் – 21

ரஞ்சன் ஒரு நொடிக்கு காரை இயக்க மறந்துவிட்டான்.
“கவி…” என்று அழைக்க முயன்ற ஸ்ரீதரை அவள் கை காட்டி நிறுத்தினாள்.
“எதுவும் பேச வேண்டாம்.”
ரஞ்சன் மெல்ல திரும்பிப் பார்த்தான்.
“நீங்க… இதை யோசிச்சு சொல்றீங்களா?”
“ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கையெழுத்து போட்ட போதும் மட்டும் யோசிச்சா பண்ணேன். ஜஸ்ட் லைக் தட் போட்டுடல... அப்படிதான் இதுவும்” என்றவள் கண்கள் அவனை தாக்கி நிற்க, அந்த பார்வையிலிருந்தது கோபமா வலியா இயலாமையா... அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அது அவனை பலமாக அடித்து நொறுக்கியது.
“சாரி…” அவனது குரல் உடைந்தது. “நான் செஞ்ச எல்லாமே தப்புதான். நீங்க கேட்ட மாதிரி… நான் வேணா டிவோர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து போட்டு தர்றேன்.” என, அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன.
“ரஞ்சன்… அவசரப்படாதே,” என்று ஸ்ரீதர் சொல்ல, “அவன் நடிக்குறான் ஸ்ரீ” என்று கவிதா உடனே வெட்டினாள்.
“இல்ல” என்று ரஞ்சன் நேராக அவள் கண்களைப் பார்த்தான்.
“நான் நடிக்கல.”
“ஓ இது நடிப்பு இல்லயா... சாரி உன் நிஜம் எது நடிப்பு எதுன்னு எனக்கு சரியா தெரியல.” என்ற அவளின் எள்ளலில் அவன் நரம்புகள் துடித்தது. அவன் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்து கொண்டான்.
அவள் மீண்டும் பேசினாள். “அன்னைக்கு நான் எவ்வளவு சொல்லியும் நீ கேக்கல. இப்போ… நான் அடம் பிடிக்கிறேன்...”
அவள் அடுத்தடுத்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக அடித்தாள்.
“இந்த பத்து நாள்ல… ஒன்னு... நீ என்னை முழுசா வெறுக்கணும்.
இல்ல... நான் உன்னை ஏத்துக்கணும்.”
ஸ்ரீதர் அதிர்ச்சியில் மூச்சை இழுத்தான்.