மோனிஷா நாவல்கள்
மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 22

Quote from monisha on February 13, 2026, 2:05 PMஅத்தியாயம் – 22
அவர்களின் கார் ஒரு பிரமாண்டமான கிழக்கு கடற்கரை சாலை பங்களாவிற்குள் நுழைந்தது.
“வாவ்! நான் கேட்ட மாதிரியே இருக்கு இந்த இடம்,” என்று ஸ்ரீதர் உற்சாகமாகச் சொல்லும் போதே, “நான் இங்கே தங்க மாட்டேன்” என்று உடனடியாக மறுத்தாள் கவிதா.
“என்னாச்சு பேபி? உனக்கு இந்த இடம் பிடிக்கலையா?” என்று ஸ்ரீதர் வாஞ்சையுடன் கேட்க, ரஞ்சன் திரும்பி, “இப்போ இது பிரகாஷ் தாத்தா பேர்ல இல்ல... வித்தாச்சு,” என்றான் ஒருவித விலகலுடன்.
“இதான் உன் பிரச்னையா?” என்று ஸ்ரீதர் கேட்க, “நிஜமாவே வித்தாச்சா?” என்று சந்தேகம் தீராமல் கேட்டாள்.
“இந்த பிராபர்டில கொஞ்சம் லீகல் இஸ்யூஸ் இருந்துச்சு. சோ வித்துட்டாரு,” என்றவன், சற்றுத் தயங்கி, “இப்போ நாம ரென்டலுக்குத்தான் இங்கே தங்கப் போறோம்,” என்றான்.
“இப்போ பிராப்ளம் சால்வ்தானே?” என்று ஸ்ரீதர் அவளின் தோளை அணைத்து கேட்க, கவிதாவின் மனம் சமாதானம் அடையவில்லை. அவளும் ரஞ்சனும் 'போட்டோ ஷூட்' செய்த அதே இடம் இது. இன்று அதை நினைத்தாலும் ரத்தம் கொதித்தது. எல்லாமே ஒரு மாய வலை, தன்னை வீழ்த்த விரித்த சதி
“என்ன கவி... இங்க தங்க விருப்பம் இல்லன்னா சொல்லு” என்று ஸ்ரீதர் அவளின் முகம் வாடக் கூடாது என்பதில் குறியாக இருக்க, “இல்ல... இங்கேயே தங்கலாம்,” என்று ஒரு தீர்மானத்துடன் காரை விட்டு இறங்கினாள்.
வேலையாட்கள் பெட்டிகளை உள்ளே கொண்டு சென்றனர். ரஞ்சன் ஸ்ரீதருக்கு வீட்டைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருக்க, கவிதா சோபாவில் வந்து சிலையென அமர்ந்து கொண்டாள்.
அவளிடம் வந்த அஜய், “இவங்கதான் ரோஷினி, நர்ஸ். இங்கேயே ஒரு ரூம்ல தங்கிப்பாங்க. இன் கேஸ் எனி எமர்ஜென்சி...” என்றான்.
“ம்ம்ம்...”
“பக்கத்துலயே ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலும் இருக்கு, பயப்படத் தேவையில்லை.”
“ம்ம்ம்...” அவள் உணர்ச்சியற்ற இயந்திரமாகத் தலையசைக்க, அஜய் தயங்கினான்.
“சாரி கவி, நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது,” என்றான். அவள் அவனை ஏறிட்டு நோக்கி, “நோ இட்ஸ் ஓகே. என்னை பத்தி நீ என்ன நினைக்கிறேன்னு இப்போவாச்சும் வெளிப்படையா சொன்னியே, அது வரைக்கும் சந்தோஷம்,” என்றாள் கசப்புடன்.
“ஏதோ கோபத்துல பேசிட்டேன்டி...” என்று அவன் இறங்கி வர, “கோபத்துலதான் எல்லோரும் உண்மையை பேசுவாங்க அஜய்” என்றாள் பதிலுக்கு.
“உன்கிட்ட மனுஷன் பேச முடியுமா?” என்று சலித்துக் கொண்ட அஜய், மாடிக்கு விரைந்தான். அங்கே கண்ட காட்சி அவன் ரத்தத்தை உறைய வைத்தது.
ஸ்ரீதர் தன் நெஞ்சைப் பலமாகப் பிடித்தபடி சோபாவில் சரிந்திருக்க, ரஞ்சன் பதற்றத்துடன், “டாக்டருக்கு போன் பண்றேன்” என்று அலறிக் கொண்டிருந்தான். ஸ்ரீதரின் முகம் வெளிறி, மூச்சுக்காற்று சீரற்றுத் திணறியது.
“என்னாச்சு ஸ்ரீ?” என்று அஜய் ஓடி வர, ஸ்ரீதர் சிரமப்பட்டுச் சைகை செய்தான். “டேய்... கத்தாதீங்க... கவிதாவுக்குக் கேட்டுடப் போகுது.”
“ஆனா ஸ்ரீ, உன் நிலைமை...”
“எனக்கு ஒன்னும் இல்ல... ஐ வில் பி ஆல்ரைட். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். யாருக்கும் போன் பண்ண வேண்டாம்,” என்று மூச்சை ஆழமாக இழுத்து விடப் போராடினான். நுரையீரல் மெட்டாஸ்டாஸிஸ் காரணமாக அவனது நுரையீரல் போதுமான ஆக்சிஜனை உள்வாங்க மறுத்தது. ரஞ்சன் என்ன செய்வதென்று தெரியாமல் அஜய்யைப் பார்த்தான்.
“நர்ஸை கூப்பிடட்டுமா?”
“நோ நோ... கவிதாவுக்குத் தெரிஞ்...சிடும்”
“அதுக்காக எதுவும் பண்ணாம எப்படி இருக்குறது” என்று ரஞ்சன் கவலை கொள்ள, ஸ்ரீதர் தன்னுடன் வைத்திருந்த Portable Oxygen Concentrator-ஐ ஆன் செய்து, நாசி வழியாக வரும் குழாயைச் (Nasal Cannula) சரிசெய்து கொண்டான். சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு மூச்சு சீராகவும், மெதுவாக எழுந்து நின்றான். ரஞ்சன் பால்கனி கதவைத் திறந்துவிட, குளிர்ந்த கடற்கரை காற்று உள்ளே நுழைந்தது.
“இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கு”
“நிஜமா பயந்துட்டேன் ஸ்ரீ” என்று அஜய் ஆசுவாசமடைய, “நம்மளை எப்பவும் பயத்துலயே வைக்கிறதுதான் இந்த நோயோட ஸ்பெஷாலிட்டியே” என்று ஒரு கசந்த புன்னகையுடன் பால்கனியில் சீறும் அலைகளைப் பார்த்தபடி நின்றான் ஸ்ரீதர்.
“என்னை பத்தி கவலைப்படுறதை விட்டுட்டு, கவிதா மனசை மாத்துற வழியைப் பாருங்க” என்றவன் மெதுவாக கூற, “முதல் நாளிலேயே நம்ம பிளான் வொர்க் அவுட் ஆகும்கிற நம்பிக்கை எனக்குப் போயிடுச்சு” என்றான் அஜய்.
“என்ன பிளான்?” என்று ரஞ்சன் புரியாமல் கேட்க, “கவிதாவையும் உன்னையும் சேர்த்து வைக்கிற பிளான்” என்று அஜய் உடைத்துச் சொன்னான்.
ரஞ்சனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. “அப்போ கார்ல கவிதா அப்படிப் பேசினதுக்கு...”
“நாங்கதான் காரணம்” என்று அஜய்யும் ஸ்ரீதரும் ஒருசேரச் சொன்னார்கள்.
ரஞ்சன் நம்பிக்கையற்ற ஒரு பார்வையை வீசி, “நானும் ஆரம்பத்துல அவ மனசை மாத்தணும்னு தான் நினைச்சேன்... ஆனா இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம்...” என்று நிறுத்த ஸ்ரீதர் இடையிட்டு, “அவ மனசுல இன்னும் நீதான் இருக்க ரஞ்சன். அவளே உன்னை லவ் பண்ணதா அஜய்கிட்ட சொல்லி இருக்கா” என்றான்.
“நிஜமாவா?” என்று ரஞ்சன் திகைப்புடன் அஜய்யைப் பார்க்க, அவன் கவிதா சொன்ன வார்த்தைகளை அப்படியே விவரித்தான். ரஞ்சனின் முகம் இறுகித் தவித்தது.
ஸ்ரீதர் அவன் தோளைத் தட்டி, “எல்லோருக்கும் செகண்ட் சான்ஸ் கிடைக்காது. உனக்கு அது கிடைச்சிருக்கு” என்றான். ஆனால் அதை சொல்லும் போது ஸ்ரீதரின் மனம் தவிப்புக்குள்ளானது. தனக்கு கிடைத்திருக்கும் இந்த இரண்டாவது வாய்ப்பும் எப்போது நழுவிப் போகுமோ என்ற மரண பயம் அவனுக்குள் அழுத்தத் தொடங்கியது.
“போதும்... கவிதா மேல வரப்போறா, நாம கீழே போலாம்...” என்று உஷார்ப்படுத்திய அஜய், “அப்புறம் அவ உன்னை லவ் பண்ணதா என்கிட்ட சொன்னதை நான் உங்ககிட்ட சொன்னேன்னு அவகிட்ட சொல்லி வைச்சுராதுராதீங்கடா, என்னை கொன்னுடுவா அப்புறம்” என்று பயபக்தியுடன் சொன்னான்.
அதேசமயம் கவிதா சமையல்காரரிடம் ஸ்ரீதருக்கு வழங்க வேண்டிய பத்திய உணவுகள் குறித்து அறிவுறுத்திக் கொண்டிருந்தாள்.
அவர்கள் மூவரும் ஒன்றாக வருவதைப் பார்த்ததும் அவள் புருவம் சுருங்கியது.
“என்னக் கேக்கப் போறாளோ?” என்று அஜய் முணுமுணுக்க, கவிதா சாதாரணமாக, “ஸ்ரீ, உனக்கு டேப்லெட் எடுத்து வச்சிருக்கேன், வந்து போட்டுக்கோ. அப்புறம் லஞ்ச் ரெடியாம்... வாங்க சாப்பிடலாம்” என்றாள்.
அவள் கொடுத்த மாத்திரையை ஸ்ரீதர் விழுங்கவும், அவனை அமர வைத்து அவளே பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள் .
“எல்லோரும் ஒண்ணா சாப்பிடலாம், உட்காருங்க,” என்று ஸ்ரீதர் அழைக்க, “நான் அப்புறம் சாப்பிடுறேன்,” என்றாள் கவிதா.
“ஹாஸ்பிடல்லதான் இப்படின்னா இங்கேயுமா? வாங்க... அஜய், ரஞ்சன் எல்லோரும் உட்காருங்க ஒண்ணா சாப்பிடலாம்” என்றான் மீண்டும்.
எல்லோரும் அமர்ந்து சாப்பிட தொடங்க, “ஆமா... மேலே மூணு பேரும் என்ன அப்படி ரகசியமா பேசிட்டு இருந்தீங்க?” என்று சாப்பிட்டுக் கொண்டே கவிதா கேட்க, மூவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
ஸ்ரீதர் உடனடியாகச் சமாளித்தான். “நம்ம ரீ-யூனியன் பத்திப் பேசிட்டு இருந்தோம்.”
“வீக்கெண்ட் தானே?”
“ஆமா... நம்ம ஊர்ல இருக்க எல்லோரும் வர்றேன்னு சொல்லிட்டாங்க. அவுட் ஆப் ஸ்டேட் கன்டிரில இருக்கவங்கதான் கொஞ்சம் கஷ்டம். அதிலயும் ஜகதீஷ், முகில் வரேன்னு மெசேஜ் போட்டாங்க” என்று அஜய் சொல்லி கொண்டே சாப்பிட்டான்.
அப்போது கவிதா தன் எதிரே அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஞ்சனை ஊடுருவிப் பார்த்தாள்.
‘எல்லாம் பண்ணிட்டு சைலன்டா சாப்பிட்டுட்டு இருக்கியா... இரு உன்னை’ என்று மனதில் கறுவிக் கொண்டவள் ஸ்ரீதரிடம் திரும்பி,
“ஏன் ஸ்ரீ... எப்பயாச்சும் ரஞ்சனை நம்ம காலேஜ்ல பார்த்திருக்கியா நீ?” என்று தற்செயலாகக் கேட்பது போல ரஞ்சனின் பெயரை இழுத்தாள்.
அத்தனை நேரம் உணவில் கவனமான இருந்தவன் நிமிர்ந்து அவளை நோக்கினான்.
அதேநேரம் ஸ்ரீ, “இல்ல, எனக்கு பார்த்த மாதிரி ஞாபகம் இல்லையே” என்று கூற, “ஆக்சுவலி நீ பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. ஏன்னா இவன் நமக்கு ஜூனியர்... நம்ம எல்லோரையும் விட சின்ன பையன்” என்றாள் ஏளனமாக.
அந்த வார்த்தையை கேட்டதுமே ரஞ்சனின் தாடை இறுகுவதைக் கண்டவள் புன்னகைக்க, “ரஞ்சன் வயசு பத்தி அஜய் சொல்லி இருக்கான்” என்றான் ஸ்ரீ.
அவள் உடனே, “ஆனா எனக்கு யாருமே சொல்லல. ரெஜிஸ்டர் ஆபீஸ்ல தான் தெரிஞ்சுக்கிட்டேன்,” என்றவள் ரஞ்சனிடம் நேரடியாக, “இதே பங்களால எனக்கும் அவனுக்கும் போட்டோ ஷூட் நடந்துச்சு...” என்றாள்.
ரஞ்சன் அமைதியாக தலையை கவிழ்ந்து கொள்ள அவள் விடாமல் வெறுப்பேற்றினாள்.
“அன்னைக்கு இவனுக்கு டை கட்டக் கூட நான்தான் சொல்லித் தந்தேன். ஏன் ரொமான்ஸ் போஸ் கொடுக்கக் கூட நான்தான் கிளாஸ் எடுத்தேன், ஆமாதானே ரஞ்சன்?” என்று அவள் இம்முறை நேரடியாக அவனை தாக்க, அவன் எதுவும் பேசவில்லை.
“கவி போதும்” என்று ஸ்ரீதர் தடுத்து அவள் கையை அழுத்தினான்.
அதற்குள் அஜய், “அன்னைக்கு அவனுக்கு எதுவும் தெரியாதுதான், ஆனா இன்னைக்கு அவன் அப்படி இல்லை” என்று பரிந்து கொண்டு வர,
“நான் இல்லைன்னா இன்னைக்கு அவன் இப்படி இருந்திருக்க மாட்டான்... ஏன், இருந்திருக்கவே மாட்டான்!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“அதுக்குத்தான் உன் பேரையும் சேர்த்து வச்சுட்டு சுத்துறான் இல்ல? அப்புறம் என்ன?” என்று அஜய் வினவ, அவள் உதடுகளை சுழித்துவிட்டு, “என் பேரை அவன் சேர்த்துக்ல... சாகடிச்சிருக்கான்!” என்றாள்.
“கவிதா... ப்ளீஸ் விடு...” என்று ஸ்ரீதர் குரல் கெஞ்ச, “ஓகே விட்டுடுறேன்... பாவம், சின்ன பையன்தானே” என்றாள் கவிதா நக்கலாக.
அத்தனை நேரம் அவளை நிமிர்ந்து கூட பார்க்காத அவன் விழிகள் அவளின் ‘சின்ன பையன்’ என்ற வார்த்தையில் அவளை நேருக்கு நேர் முற்றுகையிட்டன.
அவன் பார்வையின் தீவிரத்தை உணர்ந்தும், அவள் மீண்டும் உதட்டை அசைத்து, ‘சின்னப் பையன்’ என்று ஒலி எழுப்பாமல் சொன்னாள்.
அவன் உணவை பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்து செல்ல, “உனக்கு இப்போ சந்தோஷமா?” என்று கேட்டான் அஜய்.
“ரொம்ப!” என்ற அவளும் எழுந்து சென்றுவிட்டாள்.
ஸ்ரீதர் ரகசியமாக அஜய்யிடம் இறங்கி, “உண்மையிலேயே இவளுக்கு ரஞ்சன் மேல லவ் இருக்காடா?” என்று கேட்டான்.
“அவனை லவ் பண்ற காரணத்தால்தான் அவளால் அவனை மன்னிக்கவே முடியல” என்று சொன்னான் அஜய். ஒரு வகையில் அது உண்மை என்றே ஸ்ரீதருக்கும் தோன்றியது.
“இருந்தாலும் எனக்குப் பயமா இருக்கு. பேசாம நீயும் இங்கேயே தங்கிடுறியா?” என்று ஸ்ரீ அவனிடம் கேட்க, “குழந்தைக்குப் பேர் வைக்கிற ஃபங்ஷன் இருக்கு ஸ்ரீ, முடிஞ்சதும் நானே வர்றேன்” என்றான்.
எல்லோரும் உண்டு முடித்ததும் அஜய் புறப்பட ஆயத்தமாக, ரஞ்சனும் தேவையான உடைகள், பொருட்களை எடுத்து வருவதாக சொல்லி அவனுடனே கிளம்பிவிட்டான்.
அன்று மாலை கடற்கரை மணலில் ஸ்ரீதரும் கவிதாவும் நடந்தனர். அவள் கையுடன் எடுத்து வந்த போர்வையை விரிக்க இருவரும் கடலலைகளை பார்த்தபடி அங்கே அமர்ந்து கொண்டனர்.
அந்த அலைகளின் இறைச்சலில் ஓர் ஆத்மார்த்தமான அமைதி இருந்தது. ஸ்ரீதரின் தோளில் சாய்ந்தபடி அந்த அமைதியை முழுவதுமாக உள்வாங்கியவள், “நமக்கே நமக்கான இந்தத் தனிப்பட்ட சந்தோஷத்தை நாமளே கெடுத்துக்கணுமா? ம்ம்ம்... நீயும் நானும் மட்டும் இங்கே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்று கேட்டு ஏக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.
“நல்லா இருக்கும்தான்” என்றான் அவனும்.
“அப்புறம் எதுக்கு ரஞ்சன் இங்கே?” என்று அவள் முடிப்பதற்குள், ஸ்ரீதர் முந்திக்கொண்டு, “அவன் இருக்கட்டும்... இப்போ இருக்க நிலைமைல சப்போர்ட்டுக்கு யாராவது இருக்கணும் இல்ல?” என்றான்.
“அதான் அந்த நர்ஸ்... பேர் என்ன... ஆ ரோஷினி இருக்காங்களே? அப்புறம் உங்க மாமாவும் பக்கத்துல தான் தங்கி இருக்காரு...”
ஸ்ரீதர் அவளின் கண்களை நேராகப் பார்த்து, “நான் இப்போதைக்குச் சொல்லல... வாழ்க்கை முழுமைக்கும் சொல்றேன்,” என்றான்.
அவன் எதை உணர்த்துகிறான் என்பதைப் புரிந்துகொண்ட கவிதா, “ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்!” என்று விட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
“கவி...”
“ப்ளீஸ்... இதை பத்தி பேசி இந்த மொமன்டை நாசம் பண்ணாத”
“சரி பேசல” என்றவன் அவளை அணைத்தபடி அப்படியே சாய்ந்து படுத்தான். மெல்ல மெல்ல வானின் வண்ணங்கள் எல்லாம் மறைந்து கருமை பூசிக் கொண்டிருந்ததை கண்டவன், மனதிலும் அதே நிலை.
தனது அருகிலிருந்த Portable Oxygen Concentrator-ஐ ஆன் செய்து, அதன் மெல்லிய இரைச்சலுக்கு நடுவே நாசி வழியாகச் சென்ற குளிர்ந்த காற்றை ஆழமாக இழுத்துக் கொண்டான். அந்தச் செயற்கை சுவாசம் அவனது நுரையீரலுக்குத் தற்காலிகத் தெம்பைக் கொடுத்தது.
'இன்னும் எவ்வளவு நாளைக்கு... இந்த மூச்சைப் பிடித்து வைக்க முடியும்?'
அணைத்திருக்கும் கவிதாவின் கதகதப்பு, சீறிப் பாயும் கடலலைகளின் சத்தம், நாசியில் நுழையும் ஆக்சிஜன்... இந்தத் தருணம் அப்படியே உறைந்துவிடாதா என்ற ஏக்கம் கண்ணீராகத் துளிர்க்கப் பார்த்தது. அதை அவசரமாகத் துடைத்துக் கொண்டான். தன் மரணவலியை விட, அது அவளை பாதிக்குமோ என்ற பயம்தான் அவனுக்குப் பெரிதாக இருந்தது.
அத்தியாயம் – 22