You don't have javascript enabled
RomanceRomantic comedysivaranjani novels

Vithai-5

விதை 5

    ஆனா இது சாத்தியமே  இல்ல,எப்டி என் மனசு இவ்ளோ பெருசா ஆசைப்பட்டுச்சுனு  திட்டி  அடக்கி வச்சேன்.

பட் என் நிலைலதான் நீங்களும் அச்சு பிசகாம இருந்திருக்கீங்கனு  தெரிஞ்சப்பறம்  என் மனசுல ஆசையும் ,இது நடக்கவே  முடியாதுன்ற  நிதர்சனமும்  அதுக்கான காரணமும்,எல்லாம் ஒன்னு சேர்ந்து,தப்பே செய்யாம தண்டனை அனுபவிக்க  வேண்டி இருக்கேனு  சுய பச்சாதாபம்  வந்திருச்சு.இவ்ளோ நாளா அடக்கி வச்சிருந்த  கோபம்,ஆற்றாமை எல்லாம் அழுகையா  வெடிச்சிருச்சு”

   ” அப்டி என்ன ப்ராப்லெம், கல்யாணமே வேணாம்னு முடிவெடுக்குற  அளவுக்கு”

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆய்டுச்சு”

“வாட்ட்ட்ட்ட் ????”

“வாத்துக்கு  இல்லங்க எனக்கு”

 “ஏங்க விளையாடாதீங்க  ப்ளீஸ் “

“நான் விளையாடலைங்க. எல்லாருமா  சேர்ந்து என் வாழ்க்கைல விளையாடிட்டாங்க  “வெறுப்புடன்  நகைத்தாள்.

அவன் அதிர்ந்து உறைந்தே  போனான்.நம்பிக்கை எல்லாம் நொறுங்குவதாய்  உணர்ந்தான்.

   “அப்போ நிஜமாவே கல்யாணம் ஆய்டுச்சா? அன்னைக்கு அமர் கேட்டப்போ  மிஸ்.வந்தனானு  சொன்னீங்களே?”

“ஆமா, இப்போவும் நான் மிஸ்.வந்தனாதான்”

” டிவோர்சியா  நீங்க?”

“கைன்ட் ஆப்”

” புரியற  மாதிரி சொல்லுங்க”

   “மைனர்  மேரேஜ். செல்லாது. அது கல்யாணமே இல்ல சட்டப்படி. ஆனா சமூகப்படி  எனக்கு கல்யாணம் ஆய்டுச்சு,நான்  வாழாம இருக்கேன்.வாழாவெட்டி ஆர் டிவோர்சி”

      மேலும் மேலும் அதிர்ச்சி அலைகள் அவனுள்.அவளே தொடர்ந்தாள்.

       “நான் நல்லா படிப்பேன். படிப்பு மட்டும் இல்ல,எல்லாத்துலயும் டாப்பர்தான். நல்லா படிச்சு ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகணும்.நல்லா சம்பாதிக்கணும். சைபர்  கிரைம்ல   சேரணும்.இன்னும் நிறைய நிறைய கனவோட படிச்சிட்டு  இருந்தேன்.

அதுல மண் அள்ளி போடற மாதிரி,நான் +2படிக்கும் போது எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதா சொன்னாங்க.

      எங்க வீடு மிடில்  கிளாஸ். எனக்கு கீழ ரெண்டு தங்கச்சி.

     ஒரு வசதியான  குடும்பத்துல  இருந்து பொண்ணு கேட்டாங்க என்னை.முதல்ல  பேரன்ட்ஸ் ஒத்துக்கலதான்.

       ஆனா அவங்க பொண்ணை நாங்களே  படிக்க வைக்குறோம்.நகைன்னு நாங்க எதுவும் எதிர்பார்க்கல.உங்களால முடிஞ்சதை  செய்ங்க.இல்லனாலும் பரவால்ல.கல்யாண செலவும்  நாங்களே செஞ்சுக்குறோம்.

      ஒரு கல்யாணத்துல உங்க பொண்ணைப் பார்த்தோம்.பழகுற விதம்,சுறுசுறுப்புன்னு  ரொம்ப பிடிச்சு போச்சு.பையனுக்கு  இப்போ விட்டா அப்பறம் குரு பலனே  இல்லயாம். ரொம்ப லேட்டா  கல்யாணம் ஆகும்,ஆகாமயும்  போகும்னு  ரெண்டு மூணு ஜோசியர்  சொல்லிட்டாங்க.

       ரொம்ப யோசிக்காதீங்க. இன்னும் ரெண்டு  பொண்ணு இருக்கு.வர வாய்ப்ப சரியா பயன்படுத்திககணும்.ராணி போல வச்சுப்போம்னு  இப்டி நிறைய சொல்லி அவங்க பாதி  கரைக்க,

  எங்க சொந்தக்காரங்களாம்  இப்டி வசதியான குடும்பம் கிடைக்குமா? என்ன யோசிச்சிட்டு, அவங்களே படிக்க வைக்குறேங்குறாங்க. இவள சிரமப்படாம  தாட்டிட்டா மத்த  பொண்ணுங்கள  கட்டிக் குடுக்க வசதியா  இருக்கும்னு  சொல்லி மீதியும்  கரைச்சிட்டாங்க.

    நான் எவ்ளவோ அழுது, கெஞ்சி, கதறி பார்த்துட்டேன். ஒன்னும் வேலைக்கு ஆகல. அவங்கதான் என்னை சென்டிமெண்டா  பேசி அமைதியாக்கிட்டாங்க.

       அழுதுட்டே  கல்யாணமும்  ஆய்டுச்சு.அங்க போய் அடுத்த நாள், நைட், நான் தூக்கம் வராம மாடில உலாத்திட்டு  இருந்தேன். அப்போதான் கீழ அவன் பேசிட்டு இருந்தது கேட்டுச்சு. நான் ரூம்ல  தூங்கிட்டதா  நெனச்சு பேசிருக்கணும்.

        அதுலதான் தெரிஞ்சுது, அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு, அவங்களுக்கு குழந்தை

  பிறக்கால 5 வருஷம் ஆயிருக்கு அப்போ ரெண்டாந்தாரத்துக்குத்தான் குழந்தை பிறக்கும்னு  எவனோ ஒரு ஜோஸ்யக்காரன்  சொல்லிட்டானாம்.

       அதனால இப்டி ஒரு கல்யாணம் பண்ணி குழந்தை பிறந்தப்பறம், ஏதாவது சொல்லி என்னை டிவோர்ஸ் பண்ணிட்டு அந்தப் பொண்ணை கூப்டுப்பாங்களாம். இதெல்லாம்  அவன், அவன் பொண்டாட்டி கூட பேசினது வச்சே  ஓரளவு புரிஞ்சுது. பின்னாடி விசாரிச்சதுல கன்ஃபார்ம் ஆயிருச்சு.

      எனக்கு ஒரு  சைடா போனை வச்சு முடிவு செய்றது தப்புனு  தோணினாலும், ஒரு %  இது உண்மைனா கூட, அவங்க டேஞ்சரஸ், நான் ஆபத்துல இருக்கேன்னு தெரிஞ்சுது.

கடவுள் கிருபையால கல்யாணம்ன்ற  பேர்ல அதுவரை  நான் வேற எதையும் இழக்கல. அப்டி எதுவும் நடக்கறதுக்கு  முன்னாடி அங்க இருந்து தப்பிக்கணும்.

    அன்னைக்கு பயப்படாம நான் எடுத்த முடிவுதான்  என் வாழ்க்கைய இந்த அளவுக்காச்சும்  காப்பாத்துச்சு.

     அது வேலூர்ல  இருந்து 45 km  டிஸ்டன்ஸ்ல  உள்ள ஒரு வில்லேஜ். ஏர்லி  மார்னிங் 4.30க்கு வேலூருக்கு  வர பஸ் இருக்கும்.அதுல எஸ்கேப் ஆயி, அதிதி வீட்டுக்கு போனேன்.அப்போ நாங்கல்லாம் வேலூர்லதான்  இருந்தோம். இப்போவும் என் பேமிலி அங்கதான் இருக்கு.

     எங்க நான் எங்க வீட்டுக்குப் போனா அட்வைஸ் பண்ணி, திருப்பி அனுப்பிடுவாங்களோனு  பயம்.அதிதி பேரண்ட்ஸ்தான்  அவங்களப்பத்தி விசாரிச்சு,எங்க வீட்ல பேசி,அதுக்கப்பறம் லீகலா எனக்கு எந்தப்  ப்ராப்லமும்  வராத மாதிரி எவ்ளவோ  செஞ்சாங்க.

      அவங்களும் என்னைக் காணாம பயந்து,அப்பறம் எங்க வீட்டுக்கு வந்து, நான் யார்கூடவோ  ஓடி போய்ட்டேன்னு சொல்லி, பெரிய்ய கலாட்டா பண்ணி, அப்பறம் போலீஸப் பார்த்த உடனே பயந்து எல்லா உண்மையும்  சொல்லிட்டாங்க.

    எங்கள விட்டா போதும்னுதான் அவங்க இருந்தாங்க.நாங்களும்  காம்ப்ளெய்ண்ட்லாம்  ஒன்னும் கொடுக்கல.

      நல்லா மிரட்டி அனுப்பிட்டாங்க.

    அதுக்கப்பறம் என் பேரண்ட்ஸ பார்த்தாலே எதோ ஒரு அன் கம்பர்ட்டபிள்  பீல்.ஒழுங்கா விசாரிக்காம  இப்டி பண்ணிட்டாங்களேன்னு.

       அதுக்கப்பறம் நான் அதிதி வீட்லதான்  இருந்தேன். +2 முடிக்கிற வரை. என் அப்பா கிட்ட எதுக்கும்  காசு வாங்க மாட்டேன்.அதிதி அப்பாதான் எல்லாம் செஞ்சார். நான் கடனாதான்  வாங்கிப்பேன்னு  சொல்லி, கணக்கு எழுதி வச்சு வட்டியோட  கட்டிட்டேன்.

   காலேஜ் கவெர்மென்ட்  சீட் கோவைல   கிடச்சுது.பார்ட் டைம் ஜாப்  பண்ணி,முடிஞ்சவரை  என் செலவை நான் பார்த்துப்பேன்.

இப்போ வரை அப்டித்தான். என் தங்கச்சிங்கள  நான்தான் படிக்க வைக்குறேன். ஒருத்தி பி.இ பைனல்  இயர், இன்னொருத்தி  பி ஏ செகண்ட் இயர்,அவளுக்கு  வக்கீல்  ஆகணுமாம்.

     அவங்களயாச்சும் நல்லபடியா  கல்யாணம் பண்ணி குடுக்கணும். அதுக்கு முன்னாடி அவங்க சொந்தக்  கால்ல நிக்கணும்.

     இப்போ சொல்லுங்க வர்ஷன், எய்டீஸ்ல வர்ற தமிழ்ப் பட ஹீரோ போல இவ்ளோ பொறுப்பு  வச்சுகிட்டு, இப்டி ஒரு கொசுவர்த்திச்  சுருள்  வச்சுக்கிட்டு, நான் எப்டி கல்யாணம் பண்ணிக்க  முடியும்.

  கல்யாணத்துக்கு  முன்னாடி காதல் மட்டுமே இருக்கும். பட் கல்யாணத்துக்கு அப்பறம், உங்க குடும்பம் ,என் குடும்பம், உரிமை, ப்ரயாரிடி,ஈகோ இப்டி எல்லாமும்  சேரும். நார்மல் கல்யாணத்துலயே  ஆயிரம் பிரச்சினை. இதுல இப்டினா,நீங்க தியாகி  போலவும்,நான் ஏதோ கடனாளி  போலவும் தோணும். புருஷன் பொண்டாட்டி  உறவுல  இது செட் ஆகாது.

          அவளை அது வரையில் ஒரு அழுத்தத்துடன்  பார்த்துக் கொண்டிருந்தவன்  மிகுந்த மலர்ச்சியோடு,

          “கை குடுங்க வந்தனா.இப்போதான் எனக்கு நிம்மதி.எனக்கு கம்பெனிக்கு  ஒரு ஆள் கிடைச்சிருச்சு.”

         “என்ன சொல்றீங்க? “

        ” நான் ஒரு கதை எழுதினேன். போட்டி கதை. சமூக  அவலங்கள்  டாபிக்.”

        “இப்போ எதுக்கு தேவை இல்லாம இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க?”

       “வெயிட்.சொல்றேன்.முழுசா  கேளுங்க புரியும் “

         ” சரி சொல்லுங்க”.   கடுப்புடன் கூறினாள்.

          “அதுல, ரெண்டு பேரு லவ் பண்ணுவாங்க. ஒருத்தன்  அந்த பொண்ணை ரேப்  பண்ணிடுவான்.அந்தப் பொண்ணை எப்டிக்  கல்யாணம் பண்ண முடியும். சோ பிரிஞ்சிடுவாங்க. இந்தப் பொண்ணு சமூக சேவை  செய்யும்.அவன் வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிப்பான். இப்டி முடிச்சேன்”

        அவள் உக்கிரமாகப்  பார்த்தாள் .

      “எல்லாரும் கமெண்ட்ல வந்து கழுவி  கழுவி ஊத்துறாங்க. வீட்டு அட்ரஸ்  வேற கேக்கறாங்க.அவங்க கைல அட்ரஸ்  கிடைச்சுது, கல்லடி கன்பார்ம்.”

       அவள் பேச யத்தனிப்பதற்குள் ,

     ” இன்னுமொன்னு, சொல்ல மறந்துட்டேன்.நல்ல வேளையா உங்க   கதைய சொல்லி, நீங்களே செட் ஆகாதுன்னு சொல்லிடீங்க.எங்க எனக்கு வாழக்கை  குடுன்னு  சொல்லிருவீங்களோனு  பயமாயிருச்சு.

     வாழ்க்கைல வழுக்கி  விழுந்த பொண்ணுக்கெல்லாம் வாழ்க்கை குடுக்க நான் என்ன மகாத்மாவா?”

    “எக்ஸ்க்யூஸ்மீ மிஸ்டர்.வர்ஷன்,நான் ஒன்னும் வழுக்கி விழல”

    “சரி விடுங்க,யாரோ உங்க காலை தடுக்கி  விட்டாங்க. விழுந்தீங்க. எப்டியோ விழுந்தீங்கதானே.நான் அதிர்ஷ்டசாலி. தப்பிச்சிட்டேன்”

      அவ்வளவுதான். எரிமலை அவளைக் கண்டிருந்தால்  அஞ்சியிருக்குமோ  என்னவோ,அந்த அளவுக்கு வெடித்தாள்.

     “நான் விழல. விஸ்வரூபமா  எழுந்து நிக்குறேன். அவ்ளோ இக்கட்டான சூழ்நிலைலயும், பயந்து நடுங்கி அழுதுட்டு  உட்காராம, என்ன செய்னுமோ அதை செஞ்சேன்.அப்போ இருந்து இப்போ வரை என் சொந்தக் கால்ல நிக்குறேன்.

     எல்லாமே என் தன்னம்பிக்கை, ஹார்ட் வொர்க், கொஞ்சமும் விட்டுக் குடுக்காம   தளராம போராடற வைராக்யம், இதால  நடந்துச்சு. இன்னும் முன்னேறுவேன்.

   ஆஃப் கோர்ஸ் எனக்கு உதவி செஞ்சாங்க. கடவுள்  துணை  இருந்தார். பட் அதுக்கு நான் தயாரா  இருந்தேன். எப்போவும் கடவுள் தூக்கிவிட  தயாரா இருப்பார்.ஆனா அதைப் பிடிச்சு எழுந்து நிக்க நாம  தயாரா இருக்கனும், நான் இருந்தேன்.

      “அவனும் சளைக்காமல் , என்ன இருந்தாலும் செகண்ட்  ஹேண்ட் தானே” என்று முணுமுணுத்தான்.

       “உங்களப்  போல தேர்ட் கிளாஸ் மைண்ட் இருக்கறதுக்கு பதிலா நான்  செகண்ட் ஹேண்டா இருக்குறது  எவ்ளவோ மேல். உங்களப் போய் எல்லாரும் அப்டி புகழறாங்க! நம்பிட்டு  இருக்காங்க.!

     ச்சை.மைண்ட் முழுக்க வக்கிரம். ஆணாதிக்கம். கதையப் பாரு.முடிவப் பாரு, எந்தப் பொறுக்கியோ  செஞ்ச தப்புக்கு இந்தப் பொண்ணுக்கு தண்டனையாம். என்னமோ அந்தப் பொருக்கி  போல ஆளுங்கதான்  சமூக அவலம்னு  சொல்வோம். ஆனா இது ஐ மீன் உங்களப்  போல தாட் உள்ள ஆட்களும்தான்  சமூக அவலம்.”

    “என்ன ஓவரா பேசுறீங்க, என் ரேஞ்ஜ்க்கு நீங்கலாம் தூசு  மாதிரி.மைண்ட் யுவர் டங்.”

     கொதிக்கும் கதிரவனாய்  வெம்மை  கொண்டவள்,

     “ஐம் ஆல்வேஸ்  மைண்டிங்  மை டங், யூ ப்ளீஸ், பர்ஸ்ட் மைண்ட் யுவர் மைண்ட் அண்ட் வாஷ் இட் நைஸ்லி வித் ஆசிட்.

     பார்ன் வித் சில்வர்  ஸ்பூனா இருக்கறதுல  என்ன பெருமை. உங்க சொந்த உழைப்புல  உங்க குழந்தையை பார்ன் வித் சில்வர் ஸ்பூனா ஆக்குறதுதான்  பெருமை.

    அப்பறம் நான்தான் அதிர்ஷ்டசாலி.உங்களப் போல ஒரு கேவலமான  மனநிலைல  உள்ளவர்கிட்ட  இருந்து தப்பிச்சிட்டேன்.நீங்க அப்டி ஒரு பொண்ணை மிஸ் பண்ணிட்டோமேன்னு  பீஈஈல்  பண்ணுவீங்க  பாருங்க “

        அவள் பேசுவதை  கையைக்  கட்டிக்கொண்டு வெற்றிப் புன்னகையுடன், ராட்சத  ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

     அவள் சீண்டப்பட்டதிலும் வாக்குவாத  வேகத்திலும் எதையும் யோசிக்கவில்லை, அவனது மௌனமான மழைச்   சாரல்  புன்னகையில் தான், சற்று சாந்தமாகி சிந்தித்தாள்.

      ” அடப்பாவி!  எனக்காக  என்னையவே எனக்கெதிரா  பேச வைக்கத்தான்  இவ்ளோ  ட்ராமாவா?”

     எல்லாம் புரிந்தவுடன், அவளிடமும் பலத்த மௌனம். அவள் முக பாவனைகளில்  அவள் மனம் படித்தவன், அவனே மௌனம் கலைத்தான்.

       “எனக்கும் என் குழந்தய என் சொந்த உழைப்புல, பார்ன் வித் சில்வர் ஸ்பூனா  ஆக்க  ஆசைதாங்க. ஆனா நான் மட்டும் என்ன செய்ய முடியும்,மத்த எல்லாமே நான் செஞ்சிடுவேன். குழந்தைக்கு ஒரு பொண்ணு என்னை கல்யாணம் கட்டிகிட்டாதானே  முடியும்.கொஞ்சம் சிரமம்  பார்க்காம  என்னை கட்டிக்கோங்களேன். நீங்க சொன்னதை  செஞ்சிறலாம்”

      அவள் கண்ணீருடன்  சிரித்தாள். அவனே தொடர்ந்தான்.

      “நீங்க சொன்னதெல்லாம்  சரிதான்.அது எல்லாத்துக்கும் நீங்களே ஜஸ்டிபை பண்ணிட்டீங்க. நார்மல் கல்யாணமே ஆயிரம் பிரச்சினை உள்ளதுதானே. இது ஆயிரத்து  ஓராவது பிரச்சினைனு  நெனச்சுக்கோங்க. ஆனா அப்டிலாம் எதுவும் வராது.என் வகையிலும் என் பேரன்ட்ஸ்  வகையிலும்.

       அப்டியே வந்தாலும், அதை பேஸ் பண்ற தைரியமும் திறமையும் உங்களுக்கு இருக்கு. ஆடெட்  ப்லேவரா நான் இருக்கேன் உங்க கூட.அவ்ளோ சின்ன வயசுலயே  உலகம் தெரியாதப்போவே அவ்ளோ ப்ராப்லம் அழகா சமாளிச்சாச்சு. இதுக்கு மேல என்ன வேணும். நானே பிரச்சினை செஞ்சாலும் சமாளிப்பீங்க.

       உங்க கொசுவர்த்தி சுருள் கேட்டப்பறம் உங்களை ரொம்ம்ம்ம்ம்ப  ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்குது.இப்டி ஒரு பொண்ணை இழக்க  நான் என்ன லூஸா,பிட்வீன், ஸ்டோரி ரொம்ப த்ரில்லிங்கா  இருந்துச்சு.”

     அவள் பொய்யாக  முறைக்க  முயன்று சிரித்தாள்…

      “தேங்க்ஸ் வர்ஷன்”  என்று நெகிழ்வுக்  கண்ணீருடன் அடி மனதிலிருந்து  நவின்றாள்.

     ” எதுக்கு?”

     “இவ்ளோ நாளா, நான் செய்யறதெல்லாம்  ஒழுங்கா  செஞ்சிட்டு, நெனைக்கறதெல்லாம் ஒழுங்கா இல்லாம இருந்திருக்கு. எப்போவும் எனக்கு என் மேல சுய பச்சாதாபம். ஏமாத்திட்டாங்க.பேரன்ட்சே இப்டி பண்ணிட்டாங்க.எனக்கு மட்டும் ஏன் நார்மல் வாழ்க்கை இல்லனு.

       ஆனா இன்னைக்கு எனக்குள்ள புதைஞ்சு  கிடந்த என்மேலான  என் மரியாதையை வெளிய எடுத்துட்டீங்க.எனக்குள்ள இருந்த தேவை இல்லாத பயம் பரப்பி  இருந்த இருட்டை  உங்க டிராமா  கேண்டில்  போல வந்து  போக்கிருச்சு.”

     “ஒரு ட்யூப்  லைட்னு  சொல்லிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும். இன்னும் வெளிச்சம்  குடுக்க எனக்கு பயிற்சி  தேவையோ ?”

    அவள் வெடித்து சிரித்தாள்.

“இல்ல இல்ல கண்ணு கூசுற  அளவு வெளிச்சம்.காரிருள்  நீக்கிய  கதிரவன் ,பாரிருள்  போக்கிய  பகலவன்  போதுமா?”

   ” பத்தாது”

“அச்சோ அதுக்கு மேல எனக்கு வராதே”   சிரித்தவாறே கூறினாள்.

” அதெல்லாம் வேணாம். எனக்கு எப்போ ஓகே சொல்லுவ?”

  ” இப்போவே  சொல்வேனே ஓ.கே.ஓகே சொல்றதெல்லாம்  ஒரு மேட்டரா?”

   “ ப்ளீஸ் வந்தனா“

    “ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்  வர்ஷன்“

     எவ்வளவு முயன்றும்  அவன் முகம் பார்த்து  நாணப்படாமல்  கூற முடியவில்லை அவளால்.

     “ ஐ எனக்கு ரெண்டு தங்கச்சிங்க  கிடைக்க போறாங்க ஜாலி  ஜாலி“

    அவனது இந்த  துள்ளளிலும் சொன்ன வார்த்தையிலும் நெகிழ்ந்தவள்,

      “கூடவே இலவச இணைப்பா  ஒரு ராட்சசியும்  கிடைக்க போறா “ என்று ஓட்டினாள்.

     “அது பரவால்ல, நான் ஒன்லி  சைல்ட். சோ சிபிலிங்  கிடைக்கும்போது  இதெல்லாம் அட்ஜஸ்ட்  பண்ணிக்கலாம்,தப்பில்ல”

   இவர்களின் இந்த மகிழ்ச்சி நிலைக்குமா?,என்ன காத்திருக்கிறது அவர்களுக்கு என்று பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content