You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

வேண்டுமடி

Quote

வேண்டுமடி ஒருவன்

இரும்பினை ஒத்த கைகளால்
எனக்காக பூங்கொத்தினை ஏந்திட வேண்டுமடி!

பாறையான மார்பகத்தில்
பளிங்கினை போன்ற இதயம் வேண்டுமடி!

பார்வதியின் பதி போல பாதியாக
அவனுள் நான் வேண்டுமடி!

கண்களாலும் பிறப் பெண்களை தீண்டிடாத உள்ளம் வேண்டுமடி!

பறவையாய் நானிருக்க அவன்
வானமாய் விரிந்திட வேண்டுமடி!

ஆசையானாலும் மீசையானாலும் அதில்
ஒரு அழகான நேர்த்தி வேண்டுமடி!

கடலென நிரம்பிய நம்பிக்கையும் அதில்
ஓயாத அலையென மோதிடும் அன்பும் வேண்டுமடி!

நிறத்தில் கண்ணனாகவும் என்னை மட்டும் சுற்றும் கள்வனாக வேண்டுமடி!

இராஜ்ஜியங்கள் மாறி பூஜ்ஜியங்களாய்
போனாலும் புன்னகை செய்திட வேண்டுமடி!

தங்க ஆபரணங்கள் வேண்டாத
சொக்க தங்கமாய் ஒருவன் வேண்டுமடி!

என் முதல் காதலான தமிழின் மீது
அவனுக்கும் தீராத பற்றுதல் வேண்டுமடி!

அருமையோ, வெறுமையோ என் கவிதைகளை படித்து குறை சொல்ல வேணும் சற்று ஆர்வமும், பொறுமையும் வேண்டுமடி!

You cannot copy content