மோனிஷா நாவல்கள்
AA - 39
Quote from Krishnapriya Narayan on May 13, 2021, 9:40 PMஉண்மை அரங்கேறியது
சரவணன் மன்னிப்புக்காக ஏங்கியபடி தன் அத்தையிடம் மண்டியிட்டிருக்க ஆதி சிரித்துக் கொண்டே, "நல்லா கன்னம் சிவக்கிற மாதிரி இரண்டடி கொடுங்கம்மா" என்றாள்.
"வாய மூடு ஆதி" என்று செல்லம்மா அவளை அதட்டிவிட்டு சரவணனை அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்து அவரும் அமர்ந்து கொள்ள, "என்னை மன்னிச்சிடுங்க அத்தை" என்று மீண்டும் கைகூப்பினான்.
செல்லம்மா அவன் கையைப் பிரித்துவிட்டு, "மன்னிப்பெல்லாம் வேண்டாம் சரவணா... நீ இந்தளவுக்கு மனசு மாறி இருக்கிறதே எனக்கு போதும்" என்று முறுவலித்துச் சொல்ல,
சரவணன் தன் கண்ணீரைத் துடைத்தபடி "சரிங்க அத்தை... நீங்க வீட்டுக்கு வாங்கப் போகலாம்" என்றழைத்தான்.
செல்லம்மா அந்த நொடி ஆதியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க அவள் சரவணனைப் பார்த்து, "அம்மாவுக்கு அங்கே வர விருப்பமில்ல சரவணா... விட்டுடு" என்று தெரிவித்தாள்.
அவன் உடனடியாய் செல்லம்மாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, "அது உங்க வீடு அத்தை... நீங்க வாங்க" என்றழைக்க,
"இல்ல சரவணா... வேண்டாம்... அங்கே வந்தா உங்க மாமாவோட நியாபகம் வரும்... அப்புறம் சில மோசமான நியாபகங்களும் வரும்... வேண்டாமே" என்றவர் வேதனை நிரம்பியக் குரலில் சொல்ல
சரவணன் அதற்கு மேல் அவரை வற்புறுத்தவில்லை. எல்லோரும் இயல்பாய் பழைய விஷயங்களை நினைவுபடுத்த சோமுவுக்கு சரவணன் மீதான தவறான எண்ணம் அப்போது முற்றிலும் மாறி இருந்தது.
இந்த சம்பாஷணைகள் நிறைவு பெற்ற சமயம் ஆதி சரவணனை தனியாய் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் வந்தாள். அங்கே சங்கரி தனியாக யோசனையோடு அமர்ந்திருக்க, சரவணன் அவளை எகத்தாளமாய் பார்த்து,
"வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபி தண்ணிக் கொடுக்கிற பழக்கமெல்லாம் இல்லையா உனக்கு" என்றான்.
அவளை அங்கிருந்து அனுப்பவே அவன் அப்படிச் சொல்ல, ஆதிக்கு அவன் எண்ணம் புரிந்தது. ஆனால் சங்கரி அவனைக் கோபமாய் முறைத்துக் கொண்டு நிற்க ஆதி அப்போது,
"இஃப் யூ டோன்ட் மைன்ட்... எனக்கும் ஒரு காபி" என்றதும் சங்கரி மறுவார்த்தை பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
ஆதி அதன் பிறகு சரவணனை நோக்கியவள், "அவ இருந்தா இப்ப என்ன?... நீ என்ன பேசனுமோ அதைப் பேச வேண்டியதுதானே" என்று சொல்ல,
"இந்த பொண்ணுங்களே உளறு வாய்" என்றான். அவனை விழி இடுங்கப் பார்த்தவள்,
"இதானே வேண்டாங்குறது... என்னைப் பாத்தா உனக்கு எப்படி தெரியுது?!" என்க,
"ஆமாம் இல்ல... நான் மறந்திட்டேன்" என்று தலையிலடித்து கொண்டான்.
"சரவணா" என்றவள் முறைத்துப் பார்க்க,
"சத்தியமா மறந்துட்டேன்" என்றவன் அழுத்திச் சொல்ல அவனில் நிலைத்த அவள் பார்வை மாறாமல் இருக்க,
சரவணன் புன்முறுவலோடு, "தப்பா எடுத்துக்காதே ஆதி... நீ மத்த பொண்ணுங்க மாறி இல்ல... நீ வேற லெவல்" என்றவன் சொல்ல அவள் புன்னகைத்தாள்.
இப்படி பேச ஆரம்பித்தவர்கள் சிறிது நேரத்தில் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பற்றி பரிமாறிக் கொண்டனர். அப்போது வேல்முருகன் சொன்ன உண்மைகளை அவன் ஆதியிடம் சொல்ல ஆதியின் பார்வையில் உஷ்ணமேறியது.
"எவ்வளவு பெரிய துரோகம்" என்று சினத்தோடு அவள் பல்லைக்கடிக்க,
"மன்னிக்க முடியாத துரோகம்... தன் உயிரையே பணையம் வைச்சு இவரோட உயிரை காப்பாத்தின சுயநலமே இல்லாத சங்கரன் மாமாவை கொல்ல எப்படித்தான் பெரிய மாமாவுக்கு மனசு வந்துச்சு" என்றுச் சொல்லி சரவணனும் சீற்றமானான்.
ஆதி தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து, "சரி... சரவணா இப்போ பெரியப்பா என்ன செய்யலாம்னு முடிவு பண்ணிருக்காரு?" என்று கேட்க,
"உன்னையும் அத்தையையும் ஊர் மக்களைக் கூட்டி பஞ்சாயத்துல வைச்சு அவமானப் படுத்தனுமாம்... நீங்க அந்த அவமானத்தை தாங்காம ஊர்பக்கமே வரக் கூடாதுன்னு திட்டம் போட்டிருக்காரு" என்றான்.
ஆதி ஏளனமான புன்னகையோடு, "யார் யாரை அவமானப்படுத்த போறான்னு பாக்கதானே போறேன்" என்று சொல்ல,
"இல்ல ஆதி... எல்லோர் முன்னாடியும் அத்தையை அவமானப் படுத்திடுவாரோன்னு" என்று சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சங்கரி தட்டில் காபியுடன் வந்து ஆதியிடம் நீட்டினாள்.
"தேங்க்ஸ்" என்று சொல்லியபடி ஆதி எடுத்துக் கொள்ள,
சரவணனிடம் தட்டை காண்பித்த சங்கரி, 'ஆளையும் மூஞ்சியும் பாரு' என்று வாய்க்குள்ளேயே முனகினாள்.
"இப்ப ஏதாச்சும் சொன்னியா?!" என்று சரவணன் சந்தேகமாய் பார்க்க, "அதெல்லாம் இல்ல" என்று அவள் அலட்சியமாய் உரைத்தாள்.
“சொல்லிட்டு மழுப்புறா பாரு... வாயாடி... திமிரு பிடிச்சவ” என்றவனும் வாய்க்குள் முனக அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
"இப்ப நீ ஏதோ சொன்ன மாறி இருந்துச்சு" என்று முறைத்தபடி கேட்டாள் சங்கரி.
"இல்லையே" என்றவனும் அவளைப் போலவே தோள்களைக் குலுக்க சங்கரியின் முகம் கடுகடுக்க ஆதி இடைப்புகுந்து,
"எக்ஸ்க்யூஸ் மீ... இங்கே என்ன நடக்குது?" என்று கேட்கவும் இருவரும் மறுப்பாய் தலையசைத்து அசடு வழிந்தனர். அவர்கள் இருவரையும் ஆதி கூர்ந்துப் பார்க்க, சரவணன் காபியை எடுத்துக் கொள்ள, சங்கரி அவனிடம் உதட்டைச் சுளித்து விட்டுச் சென்றாள்.
"காபி நல்லா இருக்கு சங்கரி... தேங்க்ஸ்" என்று ஆதி சத்தமாய் சொல்ல,
சங்கரி திரும்பி பார்க்காமலே குபீரென்று சிரித்துக் கொண்டு சென்றுவிட்டாள். அந்த சிரிப்பிற்கான சூட்சமத்தைக் காபி பருகிய சரவணன் முகத்தைப் பார்த்தால்தான் புரியும்.
காபியை ருசித்த சரவணன் சட்டென்று தொண்டை அடைத்தபடி விக்கி புறையேற நின்றான். "என்ன சரவணன்? என்னாச்சு?" என்று பதட்டமாய் கேட்டாள் ஆதி.
"காபில உப்பு தூக்கலா இருக்கு" என்றவன் சொல்லி முகமெல்லாம் சிவக்க ஆதி கலீரென்று சிரித்து,
"என்ன உளர்ற? சக்கரை தூக்கலா இருக்கா?" என்று கேட்கவும்,
"அய்யோ ஆதி... சத்தியமா உப்பைத்தான் போட்டுவைச்சிருக்கா?!" கடுப்பாய் உரைத்தான் சரவணன். ஆதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிரிப்பை நிறுத்த முடியாமல் அவனை ஏறிட்டவள், "என் காபி நல்லாதானே இருக்கு... ஏன் உனக்கு மட்டும்?" என்றவள் வினவ,
"எனக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்... வேணும்னே செஞ்சிருப்பா" என்று சரவணன் பொறுமி கொண்டிருக்க,
"ஓ அப்படி போகுதா கதை" என்று ஆதி தனக்குள்ளேயே சொல்லி சூசகமாய் சிரிக்க சரவணனோ அப்போது கடுப்போடு,
"இந்த காபியை நாய்க்கு ஊத்தினா கூட அது நாண்டுகிட்டு செத்து போகும்" என்று சொல்லியபடி அந்த காபியை தூர ஊற்றிவிட்டு வந்தான்.
"அதை விடு சரவணன்... நாம நம்ம மேட்டருக்கு வருவோம்" என்று சொல்லி ஆதி அவனிடம் சில ரகசியமான வேலைகளைக் கொடுத்து செய்யச் சொன்னாள்.
அதேநேரம் அவன் தனக்காக செயல்படுதைப் பற்றி பெரியப்பாவிற்கு தெரியாமல் பார்த்து கொள்ளும்படியும் உரைக்க, அவனும் அவள் சொல்லும் எல்லாவற்றிற்கும் ஆமோதித்தான்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசி முடித்தபின், சரவணன் செல்லம்மாவிடம் சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றவன் வெளியே பூ பறித்துக் கொண்டிருந்த சங்கரியை குரூரமாய் பார்க்க, அவளோ அவனைக் கவனிக்கவில்லை.
அதுதான் சமயம் என்று அவள் பின்னந்தலையில் தட்ட அதிர்ச்சியாய் திரும்பி அவனைப் பார்த்தவள், "எரும பன்னி லூசு" என்று அவள் வசைமாறி பொழிய,
"எல்லாம் நீதான்டி வாயாடி" என்றவன் அடுத்த நொடியே தன் பைக்கில் புழுதியைக் கிளப்பிவிட்டு சென்றுவிடச் சங்கரி இருமத் தொடங்கினாள்.
நடந்ததை எல்லாம் ஆதி பார்த்து சிரித்துக் கொண்டே சங்கரி அருகில் வர அவளோ உச்சபட்ச எரிச்சலோடு,
"அவனுக்கு எவ்வளவு திமிரு பாத்தியா?!" என்றாள்.
"நீ மட்டும் அவனுக்கு உப்பு போட்டு காபிக் கொடுக்கலாமா?!" என்று ஆதி கேட்டு அவளைக் கூர்மையாய் பார்க்க,
"அது வந்து" என்று சங்கரி தட்டுத்தடுமாற ஆதி உள்ளூர நகைத்துக் கொண்டாள்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க... தோப்பில் இருந்த மரங்கள் எல்லாம் மண்ணோடு சாய்ந்துகிடக்க, வெளிச்சம் அமைத்து இரவு நேரங்களிலும் ரசாயன தொழிற்சாலை கட்டுமானப் பணிக்கான வேலை மும்முரமாய் நடந்துக் கொண்டிருந்தது. அப்போது ஆதி அந்த இடத்தைப் பார்வையிட சென்றிருந்தாள்.
அவள் அங்கே வெறும் பார்வையிட மட்டும் வரவில்லை என்பது அடுத்தடுத்து அங்கே வருகை தந்த பெரிய தலைகளை வைத்துப் புரிந்தது.
முதலில் அங்கே வேல்முருகன் வரப் பின்னர் அவரைத் தொடர்ந்து நவநாகிரீக உடையில் காரில் ஓர் தொழிலதிபர் ஆடம்பரமான காரில் வந்திறங்கினார்.
நம்முடைய கணிப்புப்படி அந்தத் தொழிலதிபர் அந்த கெமிக்கல் தொழிற்சாலையின் நிறுவனராய் இருக்கலாம். இந்த நேரத்தில் அவர்கள் வந்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்ற வாசகர்கள் எண்ணக்கூடும்.
அவர்கள் தானாக வரவில்லை என்றும் அவர்களை ஆதிதான் வரவழைத்திருக்கக் கூடும் என்று அவள் அவர்களிடம் அதிகாரமாய் பேசி கொண்டிருந்த தோரணையை வைத்தேப் புரிந்து போனது.
அதேநேரம் அவர்கள் மூவருக்கும் இடையில் நடந்தது மோதலா? வாக்குவாதமா? பேரமா? என்பதை இங்கே விவரிக்க முடியாமல் போனாலும் அது தானாகவே விரைவில் புரிய வரும்.
அடுத்த நாள் காலை...
ஊர்மக்கள் அனைவரும் ஆதிபரமேஸ்வரி கோயில் வாசலில் ஒன்று கூடினர். அந்தக் கூட்டம் எதற்காக என்று அங்கேயே கிடந்த அன்னம்மாவிற்கு விளங்கவில்லை.
வேல்முருகனும் சிலரும் அந்தக் கூட்டத்தில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தனர். இன்னும் சில கிராமங்களில் இப்படி எல்லாக் குடும்பங்களும் ஒன்றாய் கூடி முடிவெடுப்பது வழக்கமான ஒன்றுதான்.
அங்குக் கூடியவர்களில் பலர் ஆதியோடு செல்லம்மாவைப் பார்த்து அதிர்ச்சியாயினர். அந்த சமயத்தில் கனகவல்லி செல்லம்மாவை அணுகி பலமுறை மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார்.
ஆனால் செல்லம்மா அவர் முகத்தைக் கூட பார்க்க விருப்பமில்லாமல் ஒதுங்கி நின்று கொள்ள கனகம் மனமுடைந்து நின்றார். அங்கே கூடியிருந்த கூட்டத்தினர் விவாதிக்கப் போவது ஊர்த்தலைவனாய் இருக்கும் வேல்முருகனின் சொத்தைப் பற்றித்தான். அந்த ஊரைச் சுற்றிய பல நிலங்கள் அவனுக்கே உரியது.
இப்போது அதை ஆதி உரிமை கொண்டாடுவது அந்த ஊர்மக்களுக்கு அதிர்ச்சியான விவகாரமே!
ஏனெனில் மக்கள் நிலமும் அந்த இடங்களோடு பிணைந்திருக்கிறது. அந்த நிலங்களில் பிழைப்பு நடத்துபவர்கள் மற்றும் சுற்றிலும் தம் நிலங்களை வைத்திருப்பவர்கள் என எல்லோருக்குமே ஆதி அந்தச் சொத்தில் உரிமை கொண்டாடுவது பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
ஆதி அந்த ஊர் நிலத்தை அபகரிக்க நினைக்கிறாள் என்று ஊர்மக்களிடம் ஒரு வதந்தியை வேல்முருகன் பரப்பியிருந்தார். அதன் காரணமாக ஊரில் உள்ள பெரிய தலைகள் எல்லாம் ஆதியை சரமாரியாய் குற்றவாளி போல கேள்வி எழுப்பினர். ஆதி சிறிதும் அசராமல் கைக் கட்டியபடி அவர்கள் கேள்விகளைக் கேட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
"நீதான் சிவசங்கரன் பொண்ணுன்னு நாங்க எப்படி நம்பறது?" என்று அந்தப் பெரிய தலைகளில் ஒருவர் கேட்க,
மனோரஞ்சிதம் முன்னாடி வந்து, "நாக்கில் நரம்பில்லாம பேசாதீங்க" என்று கத்தினார்.
செல்விக்கு இழப்புகளும் அவமானங்களும் புதிதல்ல. ஆனால் இந்தக் கேள்வி அவளை எத்தனை வேதனைக்குள்ளாக்கியது என்று எப்படி சொல்ல?
இத்தனை நேரம் அமைதியாய் நின்றிருந்த ஆதி தன் அம்மாவின் வேதனை நிரம்பிய முகத்தைப் பார்த்து தன் மௌனத்தைக் கலைத்தாள்.
"நான் யாரு... எனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் என்ன உறவு... எனக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்னு பதில் சொல்லுங்க பெரியப்பா" என்று அத்தனை நேரம் மௌனமாய் இருந்த வேல்முருகனைப் பார்த்து ஆதி கேட்க,
எல்லோருமே தங்கள் பார்வையை வேல்முருகன் புறம் திருப்ப அவர் கணைத்துக் கொண்டு பேசத் தொடங்கினர்.
"அது வந்து... அந்த புள்ள ஆதிபரமேஸ்வரி என் தம்பி சங்கரனுக்கும் செல்விக்கும் பிறந்த மகதான்.. அதுல எந்த சந்தேகமும் இல்லை… ஏதோ அன்னைக்கு இருந்த மனவருத்தத்தில் செல்வி எங்க குடும்பத்தை விட்டும் இந்த ஊரை விட்டும் போற மாதிரி ஆயிடுச்சு... அதுல செல்வியோட தப்பு எதுவும் இல்ல" என்று சொன்னவர் சுற்றியிருந்தவர்களின் அதிர்ச்சியான முகபாவத்தைப் பார்க்க,
ஆதி அவரிடம் கண்ணசைத்து மேலும் பேச சொன்னாள்.
அவர் சற்று நிதானித்து, "பாவம் செல்வி! தன்னந்தனியாய் நகரத்துக்கு போய் கஷ்டப்பட்டு தான் பொண்ண படிக்க வைச்சு வளர்த்திருக்கா... அவங்க அப்பன் சொத்தைக் கேட்க அந்த புள்ளைக்கு எல்லா உரிமையும் இருக்கு... ஆனா இந்த ஊர் நிலத்தை அப்படி நான் மட்டும் முடிவு பண்ணிக் கொடுக்க முடியாது" என்று சொல்ல எல்லோரும் ஆச்சர்யம் மிகுதியால் பார்த்து கொண்டிருக்க ஆதி மட்டும் இயல்பாய் இருந்தாள்.
வேல்முருகனை அப்படி பேச வைத்ததே ஆதிதானே!
அந்தத் தொழிற்சாலைக் கட்டப்படும் நிலத்தின் பெரும்பான்மையானவை சிவசங்கரனின் பேரில் இருந்திருக்கிறது. இந்த விவரங்களை சரவணன் மூலமாய் தெரிந்துக் கொண்ட ஆதி அந்த ஒரு விஷயத்தை வைத்தே பேக்டரி நிறுவனரை மிரட்ட அது வேல்முருகனை கதிகலங்க வைத்தது.
ஆதி வேல்முருகனிடம், "ஊர்ல இருக்கிறவங்க எல்லோர் முன்னாடியும் நான் சிவசங்கரன் மகள்னு சொல்லணும்... எங்க அம்மாவைப் பத்தி நல்லவிதமா பேசணும்… இதை மட்டும் செஞ்சீங்கன்னா... இந்த சொத்து அப்புறம் இந்த பேக்டரி வேலையில் நான் தலையிடமாட்டேன்" என்று ஆதி சொல்ல அந்த முடிவு வேல்முருகனுக்கு சாதகமாய் இருந்தது.
ஆதலால் வேல்முருகன் அப்படி தலைகீழாய் பேசச் செல்லம்மா, மனோரஞ்சிதம், கனகவல்லி மூவரும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர். அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு வயதான நபர்,
"நீ வேல்முருகன் தம்பி சொன்ன மாதிரி சங்கரன் மகளாவே இருந்துட்டு போ... அதனால எல்லாம் இந்த ஊர் நிலத்தை உனக்குத் தூக்கி கொடுக்க முடியாது" என்றார்.
ஆதி சிரித்தபடி, "எனக்கு இந்த சொத்து நிலம் வீடு இதெல்லாம் எதுவும் வேண்டாம்... பெரியப்பா சொல்ல வேண்டிய சில உண்மையெல்லாம் உங்க எல்லோர் முன்னாடியும் சொன்னா மட்டும் போதும்" என்றாள்.
"நான்தான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேனே!" என்று வேல்முருகன் முறைக்க,
"சதி பண்ணி எங்கப்பாவைக் கொலை பண்ணீங்களே, அதைப்பத்தி யார் சொல்லுவா?!" ஆதி தன் கரத்தைக் கட்டி கொண்டு எகத்தாளமாய் கேட்க இந்த வார்த்தைகளைக் கேட்டதும் வேல்முருகன் அப்படியே திக்குமுக்காடிப் போனார்.
உண்மை அரங்கேறியது

Quote from Marli malkhan on May 31, 2024, 8:57 AMSuper ma
Super ma