மோனிஷா நாவல்கள்
AA - 4
Quote from monisha on March 21, 2021, 9:27 PM5
திருப்புமுனை
பாரதி பத்திரிக்கையின் இணை ஆசிரியர் பதவியில் இருந்தாள் ஆதி. அவள் ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு முன்பிலிருந்தே அங்கே ரிப்போர்டராக வேலைப் பார்க்கத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாய் அவளுடைய திறமையால் இணையாசிரியர் பதவியை எட்டியிருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.
அவளுக்கு அனுபவம் குறைவாக இருப்பினும் அவள் வேலையின் நேர்த்தி, ஒழுங்கு, புதுமையான சிந்தனை ஆகியவையாலேயே அவள் இளம் வயதிலேயே அந்தப் பதவியினை அடைந்தாள்.
ஆதி அவளுடைய அறைக்குள் அந்த வாரத்திற்கான கோயில்கள் பற்றிய தொடர் கட்டுரையின் முதல் அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்க, அப்போது அமுதா அவள் அறையின் கதவை உள்ளே வந்தாள்.
பின்னர் ஆதி, "இந்த வீக்குக்கான மேகஸின் டிசைன் எல்லாம் ரெடியா அமுது?!" என்று அமுதாவிடம் கேட்க,
"இல்ல ஆதி... ஆனா இன்னைக்கு முடிச்சிடுவேன்" என்று அமுதா இழுக்க,
"அப்போ வேறென்ன விஷயம்?" என்று தன் கணினியைப் பார்த்தபடி கேட்க, அமுதா அவள் கரத்திலிருந்த கடிதத்தை ஆதியிடம் நீட்டினாள்.
அதனைப் பார்த்த ஆதி எரிச்சல் தொனியில், "திரும்பியுமா அமுது?!" என்று முகம் சுணங்க,
"அய்யோ இல்ல ஆதி... இது கொஞ்சம் முக்கியமான லெட்டர்" என்றவள் அதனை ஆதியிடம் கொடுத்தாள். அதனை யோசனையாக ஆதி வாங்கி படிக்க, அவள் முகம் மெல்ல வியப்புக்குறியாக மாறியது.
முகவாயைத் தடவியபடி அமுதாவை ஏறிட்டவள், "இது கொஞ்சம் சீரியஸான மேட்டர் மாதிரிதான் தெரியுது... இல்ல அமுது?!" என்றாள்.
அமுதாவும் ஆம் என்பது போல் தலையசைத்து ஆமோதிக்க,
"சரி அமுது... நீ போ... நான் இதைப் பத்தி கருணா அங்கிள்கிட்ட பேசிட்டு வர்றேன்" என்று ஆதி சொல்லி அவளை அனுப்பிவிட்டு பக்கத்திலிருந்த தலைமைப் பதிப்பாசிரியர் அறைக்கு சென்று கதவைத் தட்டி அனுமதி கேட்டாள்.
கருணாகரனோ அவளை உள்ளே வர அனுமதித்துவிட்டு தன் மேஜையின் மீது இருந்த பொருட்களை அவசரமாகச் சரிசெய்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தார்.
அவள் ஆச்சிரியத்தோடு, "என்ன அங்கிள்?! அதற்குள்ளே கிளம்பிட்டீங்களா?" என்று கேட்க,
"ஆமா ஆதி... அந்த விஷ்வா பையன் திடீர்னு சொல்லாம கொள்ளாம புறப்பட்டு இங்கே வந்திருக்கானாம்... சாரதா இப்பதான் கால் பண்ணா... நான் வீட்டுக்கு கிளம்பறேன்... வேற வேலை ஏதாவது இருந்தா நீ முடிச்சிடும்மா" என்று அவர் புறப்படுவதிலேயே மும்முரமாய் இருக்க, அவள் அவரை வழிமறித்தபடி,
"அங்கிள் ஒரு முக்கியமான லெட்டர்" என்று அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுக்க முயல, அதை வாங்கி அவர் படிக்கும் நிலையில் இல்லை.
"எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு ஆதிம்மா... எந்த முக்கியமான விஷயமா இருந்தாலும் நீயே ஹேண்டில் பண்ணிடு" என்றுச் சொல்லிவிட்டு கதவைத் தாண்டி வெளியே சென்றவர் மீண்டும் உள்ளே வந்து,
"ஆமா ஆதி... அம்மாதான் ஊரில் இல்லையே... நைட் நீ நம்ம வீட்டுக்கு வந்துடேன்" என்று சொல்ல, அவளும் மௌனமாய் தலையசைத்து சம்மதிக்கவும் அவர் அதன் பிறகும் தாமதிக்காமல் புறப்பட்டுவிட்டார்.
ஆதி அந்தக் கடிதத்தைப் பார்த்தபடி சிந்தித்தவள் தன்னுடைய கைப்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.
"ஹலோ ஜேம்ஸ்"
எதிர்புறத்தில் ஒரு குரல், "சொல்லுங்க ஆதி" என்றது.
"ஜேம்ஸ் நான் சில டீடைல்ஸ் மெஸேஜ் பண்றேன்... நீங்க உடனே அத பத்தின ரிப்போர்ட்டை கலக்ட் பண்ணி எனக்கு அனுப்ப முடியுமா?!" என்றவள் கேட்க, "இன்னைக்கேவா?" என்று அவன் சந்தேகித்து கேட்டு நிறுத்த, "ஹ்ம்ம்" என்றாள்.
அவன் மௌனமாகிட, "எனி பிராப்ளம்?!" என்றவள் கேட்கவும் அவன் அவசரமாக,
"நோ ஆதி... நான் போறேன்... பட் எந்த இடம்?" என்றவன் வினவ, அவள் தன் கரத்திலிருந்த கடிதத்தை ஒருமுறை பார்த்துவிட்டு,
"இட்ஸ் ஆதித்தபுரம்" என்றாள்.
"ஓ! அது எங்கே இருக்கு?"
"டிஸ்டன்ஸ்தான்னு நினைக்கிறேன்... நான் லெட்டர் வந்த அட்ரஸை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... நீங்க அதை வைச்சி ஃபைன்ட் பண்ணிக்கோங்க... அன் தி திங் இஸ்... நீங்க போயிட்டு உடனே ரிப்போர்ட் கலெக்ட் பண்ணிட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க... வெரி அர்ஜ்ன்ட்... அந்த மேட்டர் மட்டும் உண்மையா இருந்தா அதை இந்த வீக்கே டிலே பண்ணாம பப்ளீஷ் பண்ணனும்" என்றாள்.
"கண்டிப்பா ஆதி" என்றவன் சம்மதம் சொல்ல, அவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அதன் பிறகு ஆதி தேங்கியிருந்த மற்ற வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு இரவு வெகுநேரம் கழித்து கருணாகரனின் வீட்டைச் சென்றடைந்தாள். இங்கே கருணாகரனுக்கும் ஆதிக்குமான உறவைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
செல்லம்மா ஆதியை வளர்ப்பதற்கு ஒரு நண்பனைப் போல உறுதுணையாய் நின்றவர் கருணாகரன். அவருக்கு பாரதியின் கருத்தின் மீதான அலாதியான காதலினால் ஆதியின் வளர்ப்பில் அதன் தாக்கம் தெளிவாய் தெரிந்தது.
எழுத்தின் மீதான ஆர்வம் செல்லாமாவின் மூலமாக வந்தாலும் ஊடகவியலின் மீதான ஈர்ப்பு கருணாகரனின் வளர்ப்பின் தாக்கத்தினாலேயே அவளுக்கு ஏற்பட்டது.
ஆதி கருணாகரன் வீட்டிற்குள் நுழைய, அங்கே கருணாகரனின் மனைவி சாரதா முகப்பு அறையிலேயே அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
"என்ன ஆன்ட்டி? எனக்காகவா இவ்வளவு நேரம் காத்திட்டிருந்தீங்க?" என்று ஆதி கேட்க,
"ஆமாம் ஆதிமா... நீ ஃப்ரெஷ்யிட்டு வா... சாப்பிடலாம்" என்று சாரதா அவளை பரிவாக அழைத்தார்.
"ஃப்ரெஷ்யிட்டு வர்றதா? நோ... எனக்கு பயங்கரமா பசிக்குது... நீங்க சாப்பாடு எடுத்துவையுங்க... நான் ஹேன்ட்வாஷ் பண்ணிட்டு வர்றேன்" என்று கை அலம்பிக் கொண்டு உணவு உண்ண அமர்ந்தவள் ஓரிரு கவளங்களை உள்ளே தள்ளியபடி, "விஷ்வா வந்துட்டானாமே... எங்க ஆளை காணோம்?" என்றவள் கேட்க,
"அவன் எப்பவோ தூங்க போயிட்டானே" என்றார்.
"என்ன திடீர்னு கிளம்பி வந்துட்டான்? என்ன விஷயம்மா?" உணவு உண்டபடியே அவள் கேட்க,
"அவனுக்கு வேலை இங்க சென்னைக்கு மாத்தல் ஆயிடுச்சாம்" என்றவர், ஆதியிடம் நெருங்கிக் குரலைத் தழைத்தயபடி,
"அவன் சொல்லாம வந்தது கூட பரவாயில்ல ஆதிமா... அவன் கூட ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்திருக்கான்" அதிர்ச்சியோடும் ஆவலோடும் அவர் விளம்பினார்.
"அய்யோ ஆன்ட்டி... ரொம்பல்லாம் யோசிக்காதீங்க... அந்த பொண்ணு அவன் ஃப்ரண்டா இருக்கும்" என்று அவள் வெகுசாதாரணமாக உரைக்க,
அவரோ நம்பிக்கையின்றி, "உம்ஹும்... இல்ல ஆதிமா... எனக்கென்னவோ சரியா படல... அதுவும் விஷ்வா முகத்தில் ஒரு திருட்டுத்தனம் தெரியுதே" என்றார். ஆதி கொல்லென்று சிரித்துவிட்டு,
"அவன் மூஞ்சியே அப்படிதான் ஆன்ட்டி" என்றாள்.
"விளையாடாத ஆதிமா... அவன்கிட்ட நீதான் என்ன ஏதுன்னு கேட்டு சொல்லணும் " என்றவர் சொல்லவும்,
"அப்படியே உங்க பிள்ளை கேட்டா சொல்லிடுவானா?" என்று அவள் சலித்துக் கொண்டாள்.
"என்ன ஆதிமா? நீ என் செல்லம்ல" என்று கொஞ்சலாக அவள் முகவாயைப் பிடிக்க ஆதி யோசித்தபடி,
"ஆமா... எங்க அந்தப் பொண்ணு?" என்று புருவத்தை உயர்த்தினாள்.
சாரதா வலதுபுறம் இருந்த மூடிய அறைக் கதவைக் காண்பித்து, "உள்ளே" என்றுக் கைக்காண்பிக்க,
ஆதி சமிக்ஞையால் தான் அந்தப் பெண்ணிடம் பேசி விஷயத்தை வாங்குவதாக அவரிடம் உறுதிக் கொடுத்துவிட்டு அவளும் அந்த அறையிலேயே படுத்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்றாள்.
சாரதா நிம்மதி பெருமூச்சொன்றை வெளிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, ஆதி கதவு திறந்து தயக்கத்தோடு நுழைந்தாள். அந்த ஓசை கேட்டு உள்ளே படுக்கையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொள்ள,
"சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்று ஆதி தயங்கியபடிக் கேட்டு கொண்டே அவளைப் பார்க்க, "நீங்க?" என்றபடி சந்தேகமாய் கேட்டு அவளும் இவளைப் பார்த்தாள்.
"ஐம் ஆதி... ஆதிபரமேஸ்வரி" என்றவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் அந்தப் பெண்ணின் முகம் மலர்ந்தது.
"ஓ! நீங்கதான் ஆதியா?!" என்றவள் புன்னகைத்துவிட்டு,
"என் பேர் மாலதி... விஷ்வாவோட ஃப்ரண்ட்" என்று அவளும் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டாள்.
ஆதி புருவத்தைச் சுருக்கிக் கொண்டு, "நான் விஷ்வாவோட எனிமி... இப்படிதானே விஷ்வா உங்ககிட்ட என்னை பத்தி சொல்லி இருப்பான்" என்று உரைக்க மாலதி அதிசயத்து அவளைப் பார்த்தாள்.
ஆதி சிரித்து கொண்டே, "சரி அதை விடுங்க... நீங்க உங்களைப் பத்தி சொல்லுங்களேன்" என்றவள் பேச்சை மாற்ற, மாலதி அதன் பின்னர் அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள். அவளுடைய ஊர் திருச்சி என்றும் அதோடு அவள் விஷ்வாவோடு பெங்களூரில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் சொன்னாள்.
இருவருக்கும் சென்னைக்கு ஒன்றாய் மாற்றலானதாகவும் சொன்னவள், கடைசியில் அவர்கள் இருவருக்கிடையில் இருந்த காதலைப் பற்றியும் உளறினாள்.
மாலதி, பெண்களுக்கென்று இந்தச் சமுதாயம் வரையறை செய்யப்பட்ட அத்தனை குணங்களும் அம்சமாய் பொருந்தியவள்.
அதோடு அவளை அழகு என்று சொல்வதை விட பேரழகி என்று வர்ணிப்பதுதான் சரியாக இருக்கும். அதாவது ஆதிக்கு அப்படியே நேர்மறை. அந்தக் குணத்தைத்தான் விஷ்வாவும் நேசித்திருக்கக் கூடும்.
இரு பெண்களும் வெகுநேரம் பேசி கொண்டிருக்க, இறுதியாய் மாலதி களைப்புற்று உறங்கிப் போக ஆதி அந்த அறையிலிருந்த மேஜையின் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தபடி அவளுடைய கட்டுரையை எழுத ஆரம்பித்தாள்.
அதனை முடிக்கும் தருவாயில் அவள் விழிகளில் இருள் சூழ அப்படியே மேஜை மீதே தலைசாய்த்து உறங்கிப் போனாள். விடிந்ததை உணராமல் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சாரதாவின் குரல் கேட்டே அவள் விழித்தெழுந்தாள்.
அப்போதுதான் கட்டுரையை முடிக்காமலே தான் உறங்கிவிட்டதை நினைவுபடுத்திக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தை பார்த்தவள், "என்ன ஆன்ட்டி நீங்க? கொஞ்சம் சீக்கிரம் என்னை எழுப்பியிருக்கக் கூடாதா?" என்று பதட்டப்பட,
"இல்ல ஆதிமா... நீ ரொம்ப டயர்டா தூங்கிட்டிருந்த... அதான் எனக்கு உன்னை எழுப்பவே மனசு வரல" என்றவர் மேஜை மீது கலைந்திருந்த தாள்களைப் பார்த்து,
"எப்பவும் வேலை வேலை வேலைதானா உனக்கு... என்ன பொண்ணோ? நல்லா படுத்து தூங்கினாதானே கொஞ்சமாச்சும் அலுப்பு போகும்" என்றார் அக்கறையோடு!
"அய்யோ ஆன்ட்டி... இதுக்கு மேல தூங்கினா என் வேலைதான் கெட்டுப் போகும்" என்றவள் பரபரவென புறப்படத் தயாரானாள்.
காலை உணவைச் சாப்பிடும் போதே சாரதாவிடம் அந்தப் பெண் மாலதி எங்கே என்று கேட்க, விஷ்வா அவளை ஊருக்கு அனுப்ப பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாக தெரிவித்தாள். அதன் பிறகு ஆதி அங்கிருந்து அலுவலகத்திற்குப் புறப்பட்டு விட, அன்று முழுக்கவும் அவளுக்கு அயராத வேலை.
ஜேம்ஸ் அனுப்பப் போகும் செய்திக்காக அவள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தவள், அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் பொறுத்தே அந்த வார இதழின் அட்டைபடத்தை வடிவமைக்க வேண்டி பிரசுரத்தை கூட நிறுத்தி வைத்திருந்தாள்.
கருணாகரனிடம் இதைப் பற்றி சொல்ல யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த எண்ணம் அன்றும் ஈடேறாமல் போனது. அவர் அன்று மாலையே திருச்சிக்கு சென்று மாலதி வீட்டாரிடம் விஷ்வாவிற்காக பெண் கேட்க போவதாக முடிவெடுத்திருந்தார்.
சாரதாவை போல் அவருக்குக் குழப்பம் இல்லை. மகனைப் பார்வையாலேயே தெளிவாய் கணித்து வைத்திருந்தவர், தன் மகனின் அனைத்து ஆசைகளையும் தடை ஏதுமின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஆதிக்கும் அவரைப் பற்றி நன்றாகவே புரிந்தது.
மகன் என்று வந்துவிட்டால், அவருக்கு மற்ற வேலைகள் யாவும் அவருக்கு இரண்டாம் பட்சமமாகிவிடும். இதனால் ஆதிக்கு வேறொரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருந்தது. அந்த வாரப் பிரசுரத்தின் முடிவெடுக்கும் பொறுப்பு அவளிடம் வந்திருக்க, அந்தச் சூழ்நிலை தானாக உருவாயிற்றா இல்லை அது விதியின் வசமா என்பதை யார் அறியக் கூடும்.
அதேநேரம் ஆதி ஆவலாய் ஜேம்ஸின் தகவலுக்காகக் காத்திருக்க, அவள் எதிர்பார்த்தது போலவே அவனிடம் இருந்து செய்தி வந்தது. அந்த நொடியே அந்த வாரப் பிரசுரத்தின் அட்டைபடம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவெடுத்தவள், அந்த வார இதழின் செய்திகளை கோர்வையாய் தயார் செய்து பதிப்பிற்கு அனுப்பி வைத்தாள்.
அதுவரையிலும் அவள் யூகித்திருக்க மாட்டாள். அந்த வார பாரதி இதழ்தான் அவள் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனையை உருவாக்கப் போகிறது என்று!
ஆதி தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு நேரம் பார்க்கும்போது, நடுநிசியாகியிருந்தது. ஊரே ஓய்ந்து கிடக்க, அவள் கருணாகரன் வீட்டு வாசலில் தன் பைக்கில் வந்து இறங்கினாள்.
அவள் வாயிற்கதவைத் தட்ட முற்பட்ட போது அது தானாகவே திறந்து கொள்ள, விஷ்வா சோஃபாவில் அமர்ந்தபடி தன்னுடைய கணிணியில் மும்முரமாய் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆதி உள்ளே நுழைந்ததைக் கண்டதும் அவன் பார்வை அனிச்சையாய் வெறுப்பை உமிழ, அவளோ அவனைப் பொருட்படுத்தாமல் சாரதாவை தேடினாள். அவள் எங்குத் தேடியும் சாரதா இல்லையென்பதை யூகித்தவள்,
வேறு வழியின்றி விஷ்வாவை பார்த்து, "ஆன்டியும் அங்கிளோட திருச்சிக்கு போயிருக்காங்களா?!" என்றுக் கேட்டு அவன் பதிலை எதிர்பார்க்க.
அலட்சியமாய் அவளைப் பார்த்தவன், "ஆமாம் அவங்களும்தான் போயிருக்காங்க" என்று பதிலுரைத்தான்.
'சே! இது தெரியாமலா நாம இங்க வந்து தொலைச்சோம்' என்று மனதில் எண்ணிக் கொண்டவள், அடங்காத பசியின் காரணமாக டைனிங் டேபிளில் எடுத்து வைத்திருந்த உணவைத் தானே போட்டுக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
விஷ்வா வாயிற்கதவைச் சென்று பூட்டிய கையோடு ஆதியை எரிச்சலாய் பார்த்து, "இதுதான் மேடம் எப்பவும் வீட்டுக்கு வர டைமா?!" என்று வினவ,
"நாட் ஆல்வேஸ்... இன்னைக்கு வொர்க் கொஞ்சம் அதிகம்... அதான் லேட்டாயிடுச்சு" என்று அலட்டிக் கொள்ளாமல் அவள் பதிலுரைக்கவும் அவன் கோபம் இன்னும் அதிகமானது.
"இட்ஸ் ஆல்மோஸ்ட் மிட்நைட்... எவ்வளவு நேரம்தான் காத்திருக்கிறதாம்... கொஞ்சங்கூட பொறுப்பே இல்ல"
அவன் எரிந்து விழ, அவளும் கடுப்பானாள். இருந்தும் அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் அவள் மௌனமாய் தலை கவிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க,
அவன் விடாமல், "எல்லாமே உனக்கு டேக் இட் ஃபார் கிரான்டட் இல்ல?" என்று கேட்டான். அவள் முகமெல்லாம் சிவக்க பொறுமையிழந்தவள்,
"இப்ப என்ன உனக்கு பிரச்சனை? நான் லேட்டா வந்ததா... இல்ல நான் இங்க வந்ததா?!" என்று சாப்பிடுவதைவிட்டு எழுந்து நின்று அவனை முறைத்தாள். அந்த நொடி இருவரின் பார்வையும் ஒரு சேர அனலைக் கக்கி கொண்டது.
அவள் மேலும், "நீ மட்டும்தான் இருப்பன்னு தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன்" என்றவள் சொல்ல, விஷ்வா அதற்கு மேல் தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென மூடினான்.
ஆதிக்கு அவன் செயல் அவமானத்தை விளைவிக்க அதற்கு மேல் சாப்பிட மனமில்லாமல் அதனை மூடிவைத்தாள். இவர்கள் இருவரின் உறவு இன்று நேற்று இப்படியில்லை.
சிறுவயதிலிருந்தே இவர்கள் இப்படித்தான் சண்டையிட்டு கொண்டும் கோபித்து கொண்டும் இருந்தனர். கருணாகரன் சாராதாவின் ஒரே மகன்தான் விஷ்வா என்கிற விஸ்வேஸ்வரன். அறிவு, உயரம், கம்பீரம் என எதிலும் குறைந்தவன் அல்ல. அதேபோல் கோபப்படுவதிலும் உணர்ச்சி வசப்படுவதிலும் அவனை மிஞ்ச ஆளில்லை.
விஷ்வாவிற்கு தன் தந்தை ஆதியின் மீது காட்டும் அக்கறையும் அன்பையும் ஏனோ இயல்பாய் ஏற்க முடியவில்லை. அதுவே அவனுக்கு அவள் மீதான வெறுப்பை வளர்த்தது. அவன் ஏன் தன் மீது வெறுப்பைக் காட்டுகிறான் என்று தெரியாமலே அவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நின்றாள் ஆதி.
விஷ்வா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனுக்கு அப்பாவை போல எழுத்து, பத்திரிக்கை துறை எதிலும் ஆர்வமில்லாத நிலையில் ஆதி கருணாகரனைப் பின்தொடர்ந்து பத்திரிக்கைத் துறையில் ஆதிக்கம் செலுத்துவது அவனின் வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தி இருந்ததென்றே சொல்ல வேண்டும்.
இவர்களின் வெறுப்பு இனி வரும் காலங்களில் கரையுமா என்ற கேள்விக்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
5

Quote from Marli malkhan on May 30, 2024, 9:06 PMSuper ma
Super ma
Quote from Guest on November 7, 2024, 9:18 PMlevitra can you mix naproxen and tylenol pm The actions taken by Michael Waltrip s Racing team this past weekend leading to the penalties assessed by NASCAR are very concerning, Гў a statement on the companyГў s website read on Sept buy priligy without a script All estimates were weighted to reflect the population from which the sample was drawn
levitra can you mix naproxen and tylenol pm The actions taken by Michael Waltrip s Racing team this past weekend leading to the penalties assessed by NASCAR are very concerning, Гў a statement on the companyГў s website read on Sept buy priligy without a script All estimates were weighted to reflect the population from which the sample was drawn
Quote from Guest on November 28, 2024, 5:18 AMDangerous and ineffective Plavix has raked in up to 6 billion in sales annually how to get cytotec without dr prescription
Dangerous and ineffective Plavix has raked in up to 6 billion in sales annually how to get cytotec without dr prescription
Quote from Guest on January 18, 2025, 1:19 PMUntreated bacterial keratitis may result in endophthalmitis and subsequent loss of the eye achat lasilix 100 mg en france
Untreated bacterial keratitis may result in endophthalmitis and subsequent loss of the eye achat lasilix 100 mg en france