You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA- Intro

Quote

முன்னோட்டம்

தொன்று தொட்டு தமிழர் பின்பற்றிவரும் சில பழக்க வழக்கங்களை நாம் மூடநம்பிக்கை எனத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அவையெல்லாம் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பெரும் காரண காரியத்தோடு நமக்குள் புகுத்தப்பட்டவை.

எடுத்துக்காட்டாக நாம் பின்பற்றிவரும் சில மறுக்கமுடியாத பழக்கவழக்கங்கள்… வடக்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாது. வெள்ளி, சனிக்கிழமைகளில் எண்ணெய் வைத்துக் குளிப்பது. விரதங்கள் கடைப்பிடிப்பது. வேம்பு, அரசம், ஆலம் போன்ற மரங்களை கடவுளாக வணங்குவது போன்று நிறைய சொல்லலாம். ஒரு காலத்தில் கேலியாக பேசப்பட்ட இவையெல்லாம் இன்று ஏன் செய்யக்கூடாது, செய்யவேண்டும் என அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இப்படி நம் சம்பிரதாயங்கள் கணக்கில் அடங்கா பதில்களைக் கொண்டிருக்க, நாம்தான் கேள்விகளை எழுப்புவதேயில்லை.

கவிஞன், சிற்பி, ஓவியன், படைப்பாளி, புலவன், வீரன், பெரும் சாம்ராஜ்யங்களை கட்டியாளும் ஆளுமை என பன்முகத் திறமை கொண்டவன் தமிழன் என்பது எல்லோரும் அறிந்ததே! ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அவன் அறிவியல் சிந்தனையாளனாகவும் திகழ்ந்துள்ளான்.

அவனின் அத்தகைய அறிவியல் சிந்தனைக்கும் கலை அறிவிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவதே நம் கோயில்கள்!!! இதனைப் பற்றிய பல கேள்விகளுக்கு இன்றுவரையில் நாம் விடையறியாமலே உள்ளோம் என்பதே வருத்தமான உண்மை.

இந்தக் கதை இச்சிந்தனைகளின் விளைவாக நான் தேடிய அகண்டு விரிந்த ஆழியில் இருந்து கிடைத்த முத்து. கடவுள் என்ற நம்பிக்கையின் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் கண்களுக்கு புலப்படாத அறிவியல் பற்றியது.

நாணயம் சுழல்வது போல் இந்தக் கதை கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் மாறி மாறி காண்பிக்க போவதை வாசகர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் நிறைய கற்பனைகளோடு சில உண்மைகளும் கலந்துள்ளன.

காதல், சஸ்பென்ஸ், சமூககருத்து, ஆன்மீகம் என்ற அனைத்தும் கலந்த கலவை இந்த நாவல். என்னுடைய இந்த புது முயற்சியை வாசக தோழமைகளாகிய நீங்கள் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு… வாருங்கள் கதைக்குள் பயணிப்போம்.

இந்த நாவலை முழுவதுமாக படிக்க அமேசான் லிங்க்

https://www.amazon.in/Crime-Thriller-Mystery-Monisha-Books/s?rh=n%3A1318161031%2Cp_27%3AMonisha

இந்த நாவலை புத்தகமாக வாங்க

https://www.udumalai.com/aathiye-anthamai.htm

You cannot copy content