You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Abi bala - நானும் நாவலும்

இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு
Quote

வாழ்த்துக்கள் அபி

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். 

உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

 

Uploaded files:
  • best-tamil-quotes-about-book-education.jpg
Quote

 நானும் நாவலும் 

என்னோட ரீடிங் ஹேபிட் 5 வயதிலிருந்து ஆரம்பித்து இருக்கும் என நினைக்கிறேன். காமிக்ஸ் புக்ஸ்... பூந்தளிர்.. அம்புலிமாமா... இரும்புக்கை மாயாவி னு ஞாபகம் இருக்கு.

அம்மாவுக்கு படிக்கிற பழக்கம் நிறைய.. 75 வயதுக்கு மேலும் தொடர்கிறது. கண்ணாடி போடாமல்..என்பது கூடுதல் தகவல். நானும் books க்கு adict ஆனதுக்கு இதுவும் ஒரு காரணம். நம்ம நேரத்தை ஸ்வாகா பண்ண இப்ப போல டி.வி... செல்போன்... சினிமா எதுவும் இல்லாததும் இருக்கலாம். எங்க வீட்ல எப்பவும் சினிமாவுக்கு நோ தான். வருஷத்துக்கு ஒரு படம்...

வீட்ல ஸ்கூல் டேஸ் ல ஆனந்த விகடன்...கல்கி... கலைமகள்..கல்கண்டு மட்டுமே அனுமதி.நிறைய தொடர்கள் காத்திருந்து வாராவாரம் படிப்பது அலாதி சுகம். நிறைய தொடர்கள்( வேர்கள்..இந்துமதி..சுஜாதா..சிவசங்கரி) கிழித்து பைண்ட் பண்ணி வைத்திருக்கேன்.சங்கர்லால் புக்ஸ் சொல்லவே வேண்டாம். புத்தகங்களே என் முழு நேரத் தோழமை ஆனது. எனக்கு கூட்டாக என் தங்கையும் சேர்ந்து கொண்டாள்.

காலேஜில் சேர்ந்த புதிது... என் மாமாவின் நண்பர்... என் வீட்டருகிலேயே ஒரு lending library துவங்க அடித்துப் பிடித்து அதில் மெம்பர் ஆனேன்.

அங்கு தான் ரமணி மா... லட்சுமி... இந்துமதி...வாஸந்தி... அநுத்தமா.. அனுராதா ரமணன்... யத்தன்ன பூடி.. என்று பலரும் அறிமுகம். என் புத்தக உலகம் விரிந்தது. சுஜாதா...ராஜேஷ்குமார்.. சுபா.. பட்டுக்கோட்டை பிரபாகர்.. பாலகுமாரன்... என்று தேடல் தொடர்ந்தது . திருமணம்... வேறு ஒரு சுதந்திரத்தை வழங்கி இருந்தது. என் கணவரிடம் நான் எப்போது புக் வேண்டி நின்றாலும் வாங்கித் தர இன்று வரை மறுத்ததே இல்லை. எனக்கென்று ஒரு தனி குட்டி நூலகம்... புத்தகங்களை சேகரிக்க துவங்கினேன்... ஆனந்தமாக💜
சாண்டில்யன்...கல்கி..தேவன் ..ரா.கி.ர..( காதல் மேல் ஆணை.. லாரா... ஜெனிஃபர்).... எஸ். ஏ.பி...ஜ.ரா... எண்டமூரி... கொத்தமங்கலம் சுப்பு... என்று என் புத்தக பட்டியல் வெகு நீளம். இப்ப புக்ஸ் வைக்க ஷெல்ஃப் போதவில்லை. எனக்கே எனக்குன்னு பெரிய ஷெல்ஃப் செய்து கொடுத்தார் . இப்ப அவ்ளோ பெரிய ஷெல்ஃப். புக்ஸ் பார்த்தா கொஞ்சமா தெரியுது😁

பின் M.R... P.G. . காஞ்சனா மா.. சித்ராபாலா... ரேவதி... விஜிமீனா.. ஜோவிதா... சுபஸ்ரீ... னு இப்ப என் கலெக்ஷன் 8000 புக்ஸ் தாண்டி போச்சு. ஆனால் நான் படிப்பது தமிழ் மட்டுமே... என் பெரிய பையன் கிட்ட 2000 புக்ஸ் னு பெரிய கலக்ஷன் என்னுது. Maintenance கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் ஆசையா செய்வேன்.

தினமும் ஐந்து மணி நேரமாவது படிக்கிற பழக்கம் உண்டு. காலையில் நேரம் இல்லைனா நைட்.அப்பதான் என்னோட நாள் முழுமையான ஃபீல் இருக்கும். டிராவல் டைம் ல படிக்கறது ரொம்ப பிடிக்கும்.

ஒருமுறை புக் வாங்கித்தர கேட்டபோது என் பசங்க ' மீ... எல்லா புக்கும் வாங்கியாச்சு... இனி வேணும் னா நீ எழுதினா தான் உண்டு' என்ற கேலிதான் அபிபாலா வந்த கதை.அபி💚பாலா...இரண்டும் என் பசங்க பேர் தான். வெச்சு செஞ்சிட்டேன்😁

யாருக்கும் தெரியாமல் எழுதி பப்ளிஷிங் க்கு கொடுக்கும் வரை சஸ்பென்ஸ் மெயிண்டெயின் பண்றதுக்குள்ள...அப்பா... அதற்கு உறுதுணையாக நின்ற சுபம் பதிப்பகம் & பாலச்சந்திரன் சார்... ஷெண்பா மேம் க்கு கண்டிப்பாக தேங்க் பண்ணனும். அவ்வளவு பொறுமையாக எனக்கு கைட் பண்ணாங்க.

அப்புறம் புத்தகம் மூலமா அறிமுகமான பிரேம்ஸ்... ஷாஹி.. சுதா மேம்... இன்ஃபா...சரண்யா... ஸ்ரீ... ஸ்ரீநவி.. வதனி... பர்வின்.. அகிலா... இன்னும் இன்னும் நிறைய ரைட்டர்ஸ் இப்ப என் ஃபிரண்ட்ஸ் 💜 நம்ப முடியல.... என் புக்ஸ் படித்து விமர்சனம் பண்ண ப்ரியா... மஹா... ரமாக்கா....புவனா...சவீதா.. விஜி... ன்னு என் நட்பு வட்டம் பரந்து விரிய காரணமாக இருந்தது புத்தகங்களே. ஆன்லைன் ல படிக்காம ரொம்ப வருஷம் இருந்தேன். இப்ப அதுவும் படிக்க ஆரம்பிச்சாச்சு....நிறைய புது ரைட்டர்ஸ் அருமையாக எழுதறாங்க. அவங்க பேர் இதில் இல்லை னாலும் கண்டிப்பாக என் கலெக்ஷன் ல இருக்கும். 🌷🌷💚 HAPPY READING 🎉🎊 அபிபாலா ரொம்ப ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி 💗💖😘

monisha has reacted to this post.
monisha
Quote

8000 collections ... ப்ப்ப்ப்பா கேட்கும் போதே சும்மா கிர்ர்ர்ர்னு தலை சுத்துது. எந்தளவு புத்தகம் மீது காதலிருந்தால் இப்படி வீட்டிலேயே ஒரு நூலகத்தை உருவாக்க முடியும். அதுவும் நீங்கள் கொடுத்த எழுத்தாளர்கள் பட்டியல் பார்த்து வாயை பிளக்காத குறை!

செல்போன் டிவி இல்லாத காலகட்டம் உண்மையிலேயே அற்புதமானது. புத்தகம் எப்படியொரு போதை என்பதை எடுத்துரைக்க உங்களுடைய பதிவே போதுமானது. 

ஆனால் நல்ல போதை... அதை மறுக்க இயலாது 

வாழ்க நீங்களும் உங்கள் புத்தகமும் மேலும் உங்கள் எழுத்து பணியும் 

நன்றி அபி பாலா  

Quote

jams drug testing [url= https://forums.dieviete.lv/profils/127605/forum/ ] https://forums.dieviete.lv/profils/127605/forum/ [/url] female erectile dysfunction

You cannot copy content