மோனிஷா நாவல்கள்
Amara - Episode 11
Quote from monisha on August 20, 2024, 9:26 PM11
இடிப்பட்ட வேகத்தில் அமி வலியுடன் நெற்றியைத் தேய்த்து கொண்டிருக்க, ஹரீஷ் அவளை ஆராய்வாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எதிரே நிற்பவள் அமிர்தாவோ அல்லது அமிர்தாவின் பிம்பமோ? என்ற யோசனை அவனுக்கு!
அப்போது அமி சுதாரித்து நிமிர, இன்னும் ஹரீஷின் பார்வை அவளை முற்றுகையிடுவதை நிறுத்தவில்லை. அவன் அப்படி பார்ப்பதில் அசௌகரியமாக உணர்ந்தவள்,
‘யார்றா இவன்? இன்னாத்துக்கு நம்மல வைச்சு கண்ணு வாங்காம பார்த்துனுகீறான்’ என்று எண்ணிக் கொண்டாள்.
அதேநேரம் நேற்று அவன் புகைப்படத்தை முகப்பறையிலிருந்த சுவரில் பார்த்த நினைவு தட்ட அவன் கமிஷனரின் மகன் என்பதை கணித்தவள்,
“சார்” என்று மரியாதையாக அழைத்து அவன் மோன நிலையைக் கலைக்கவும் ஹரீஷ் தலையை உலுக்கி கொண்டான்.
“என் மூஞ்சில இன்னா கீதுன்னு அப்படியே முறைச்சு பார்த்துன்னுகீற சார்” என்றவள் கொஞ்சம் நக்கலுடன் கேட்க அவன் கண்கள் அதிர்ச்சியைக் காட்டின.
அனாயசமாக மேற்கத்திய ஆங்கிலம் விளையாடிய அந்த நாவில் இப்படி சென்னை தமிழ் பாய்ந்து வருமா?
அந்த நொடிதான் எதிரே நிற்பவள் அமிர்தாவே இல்லை என்று அவன் மூளைக்கு உரைத்தது. மேலும் அவள் உடை நிறம் ஒல்லியான உடல்வாகு என்று நிறைய வித்தியாசங்கள் இருப்பதும் புரிந்தது.
ஆனால் அந்த முகஜாடை மட்டும் எப்படி ஒரே மாதிரி இருக்கிறது என்ற அவன் யோசித்த போது தன் அம்மா அமராவைப் பற்றிச் சொல்லிய விஷயங்களும் மற்றும் அனுப்பிய அந்த கிராஃபிக் ஃபோட்டோவும் நினைவிற்கு வர,
“உன் பேர் அமராவா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“ம்ம்ம்” என்றவள் தலையசைக்க,
“ஓ” என்று வியப்புற்றவனுக்கு அமிர்தாவும் அமராவும் எப்படி ஒரே போல இருக்க முடியுமென்ற கேள்வி எழுந்தது. பல்லாயிரம் மையில்கள் கடந்து வசிக்கும் இருவருக்குமான தொடர்பு என்னவாக இருக்க முடியும்?
இந்தக் கேள்வி அவன் முளையைக் குடைந்து கொண்டிருக்கையில் அமி அவனைப் பார்த்து,
“இப்படியே வழில நின்னுகுன்னு என்னை முறைச்சு பார்த்துன்னு இருக்க போறியா சார்?” என்று கேட்டாள்.
அவளின் நக்கலான பார்வையிலும் கேள்வியிலும் கடுப்பானவன், “இது என் ஆஃபிஸ்… உள்ளே ஒரு ஃபைல் இருக்கு… எடுக்கணும்… நீ வழியை மறிச்சு நின்னா… நான் எப்படி உள்ளே போறதாம்?” என்று அவள் மீதே பழியைத் திருப்பி போட்டான் முறைப்புடன்.
‘எதிரே நின்னு முறைச்சு முறைச்சுப் பார்த்துட்டு… நான் வழியை மறிச்சு நிக்கிறனாம்’ என்று முனங்கிக் கொண்டே அவள் அவனுக்கு வழிவிட்டு தள்ளி நின்று கொண்டாள்.
நேராக மேஜையில் எதையோ எடுக்க வந்தவன் சோஃபாவில் கால் நீட்டி படுத்திருந்த தேவாவைப் பார்த்து, “ஓ மை காட்… என் சோஃபா” என்று அதிர்ந்து,
“யார் இவன்… கொஞ்சம் கூட டீஸன்ஸியே இல்லாம என் ரூம்ல என் சோஃபால காலை நீட்டி படுத்திட்டு இருக்கான்” என்று கேட்க,
“என் புருஷன்” என்றாள் அவள் சாதாரணமாக.
“புருஷனா… அப்போ உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சா?” என்ற அதிர்ச்சியான ஹரீஷை அவள் குழப்பத்துடன் ஏறிட்டாள்.
‘எனக்கு கல்யாணம் ஆனா இவன் இன்னாத்துக்கு ஷாக்கவுறான்’ என்றவளின் மன எண்ணம் அப்படியே அவள் முகத்தில் பிரதிபலிக்க, அவனுக்கும் தான் ஏன் இப்படி கேட்டோம் என்றானது.
நடந்த குழப்பத்தில் எதற்காக அங்கே வந்தோம்… எதைத் தேடி வந்தோம் என்ற காரணம் காரியமெல்லாம் ஹரீஷிற்கு சுத்தமாக மறந்து போக, வேக வேகமாக மேஜை மீதிருந்த கோப்புகளைத் துழாவி விட்டு வெளியே வந்துவிட்டான்.
‘சரியான லூசா இருப்பான் போல’ என்று எண்ணிக் கொண்ட அமியின் பார்வை தேவாவைப் பார்க்க, அவனோ இத்தனை அளப்பறையிலும் அசராமல் உறங்கிக் கொண்டிருந்தான்.
‘இன்னும் தூங்கிட்டு இருக்கான் பாரு’ என்று அவள் அவனை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்த அதே சமயத்தில் ஹரீஷ் தன் அம்மாவிடம் சென்று குதி என்று குதி குதித்துக் கொண்டிருந்தான்.
“என் ஆஃபிஸ் ரூம்ல… என் பெர்மிஷன் இல்லாம… யாரோ இரண்டு பேரைத் தங்க வைச்சு இருக்கீங்க”
“நான் சொன்னேன்டா… உங்க அப்பாதான் கேட்கல” என்ற கீதா மேலும், “அவங்களுக்கு மேலே இருக்க ரூமை ரெடி பண்ண சொல்லி இருக்கு ஹரீஷ்… அது ரெடியானதும் அங்கே அவங்களைத் தங்க வைச்சுடலாம்… நீ ஒன்னும் டென்ஷனாகாதே” என்று மகனை சமாதானம் செய்தார்.
“மேலே இருக்க ரூம்ல தங்க வைக்கப் போறீங்களா… எதுக்கு?”
“ப்ச்… உன்கிட்டதான் நான் ஏற்கனவே ஃபோன்ல சொன்னேன் இல்ல… அதான்… அந்தப் பொண்ணு… பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால தொலைஞ்சு போன அமரா” என்று கீதா தெரிவிக்க.
“அது அந்தப் பொண்ணை பார்த்ததுமே எனக்கு தெரிஞ்சு போச்சு” என்று அலட்சியமாக உரைத்தான் ஹரீஷ்.
“அனேகமா அவங்க அப்பா இன்னைக்கு நைட் ஃப்ளைட்ல சென்னை வந்திருவாருன்னு நினைக்கிறேன்… அவர் வந்து அந்தப் பொண்ணை கூட்டிட்டு போயிடுவாரு… அது வரைக்கும் இங்க தங்கட்டுமேன்னு… அதுவுமில்லாம… அந்தப் பொண்ணுக்கு ஏதோ உயிருக்கு ஆபத்து இருக்காம்”
ஹரீஷ் அப்போதும் அமைதியடையாமல், “இருந்தாலும் அவங்களை என் பெர்மிஷன் இல்லாம அங்கே தங்க வைச்சது தப்புமா” என்று எரிச்சலுடன் அதே பாட்டைப் பாட,
“என்னடா ஆச்சு உனக்கு… நீ இந்த மாதிரி எல்லாம் பேச மாட்டியே… எல்லாத்தையும் ஜாலியா எடுத்துப்ப… நேத்துல இருந்து ஒரு மாதிரி இருக்க” என்று கீதா மகனின் மனதைப் புரிந்து கேட்க,
“ப்ச் அதெல்லாம் ஒன்னும் இல்லமா” என்றான்.
“இருக்கு… அந்த அமிர்தா விஷயமா நீ இன்னும் அப்செட்டா இருக்கியா?” என்றவர் சரியாக கணித்துவிட ஹரீஷ் அமைதியானான். மீண்டும் அதே முக ஜாடையில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவன் மனக்காயங்கள் குத்திக் கிளறப்பட்டுவிட்டன.
“என்னடா ஹரீஷ்?” என்று ஆதரவாகத் தோளைத் தொட்ட தாயிடம் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டவன்,
“ம்மா… எனக்கு தலை வலிக்குது… காபி போட்டுத் தர்றியா?” என்று பேச்சை மாற்றிவிட்டான்.
“இதோ கண்ணா… போட்டுத் தர்றேன்” என்று அவரும் காபி தயாரிக்க தொடங்கிவிட, ஹரீஷ் முகப்பறை சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
அமிர்தாவுடனான நாட்கள் அவன் மனக்கண் முன்பு ஓட, அவனால் அந்த நினைப்பிலிருந்து வெளிவரவும் முடியவில்லை. அந்த ஏமாற்றத்திலிருந்து மீளவும் முடியவில்லை.
அப்போது நடைப்பயிற்சி சென்றுவிட்டு திரும்பிய பாலமுருகன் சகஜமாக வந்து அவன் அருகே அமர்ந்து, “எழுந்துட்டியா ஹரீஷ்… எப்படி இருந்துச்சு ஜர்னி எல்லாம்… ஷூட்டிங் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று விசாரிக்க தொடங்கவும் அவனும் புன்னகையுடன் அவர் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறினான்.
“ஆன்… அப்புறம் ஹரீஷ்… உன் ஆஃபிஸ் ரூம்ல இரண்டு பேரைத் தங்க வைச்சிருக்கேன்… ஆக்சுவலி அவங்க வந்தது நைட் டைமா… வேற வழி இல்லாம அங்கே தங்க வைக்க வேண்டியதா போச்சு… அதான் உன்கிட்ட சொல்ல முடியல… சாரி” என்று அவர் இயல்பாக மன்னிப்பு கோரவும், அவன் கோபமெல்லாம் காணாமல் போயிருந்தது.
“அதுக்கென்னப்பா பரவாயில்ல” என்றவன் பதில் சொல்ல,
“சரி அப்புறம் உன்கிட்ட வேறொரு விஷயம் சொல்லணும்” என்றவர் ஆரம்பிக்க,
“சொல்லுங்க பா” என்றான்.
“என் கூட போலீஸ் ட்ரைனிங்ல இருந்த சரத்தோட பொண்ணு தீபிகா… ரொம்ப நல்ல பொண்ணு… எம்.டெக். முடிச்சிருக்கா… பெரிய கம்பெனில வேலை பார்க்குறா… நல்ல சம்பளம்” என்று அவர் விவரங்கள் சொல்ல, அவனுக்கு விஷயம் என்னவென்று ஓரளவு புரிந்து போனது.
அவர் மேலும், “அந்தப் பொண்ணோட ஃபோட்டோவை உன் வாட்ஸ் அப்க்கு அனுப்புறேன்… பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு… பேசி முடிச்சிரலாம்” என, அவன் பதிலேதும் சொல்லவில்லை.
அவன் முகத்திலிருந்த தயக்கத்தை உற்றுக் கவனித்தவர், “இத பாரு ஹரீஷ்… இப்பதான் நீ உன் ப்ரோஃபஷன்ல கொஞ்சம் மேலே வந்திட்டு இருக்க… திரும்பியும் காதல் கீதல்னு எந்தக் குழப்பமும் பண்ணாம… கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகுற வழியைப் பாரு” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு நேரத்தைப் பார்த்தவர்,
“சரி நாம அப்புறம் பேசுவோம்… டைமாச்சு” என்று எழுந்து அலுவலகம் புறப்பட தயாரானார்.
அப்போதும் கீதாவும் தன் பங்குக்கு காபி எடுத்து வந்து கொடுத்துவிட்டு, “பொண்ணு ஃபோட்டோவை உடனே பார்த்துட்டு முடிவைச் சொல்லிடுறா… லேட் பண்ணாதே… திரும்பியும் உங்க அப்பாகிட்ட மல்லுக்கட்ட முடியாது” என,
“யோசிக்கிறேன் மா” என்றான்.
அவன் காபியைக் குடித்துவிட்டு அறைக்குள் சென்று தன் கைப்பேசியைத் திறக்க அதில் முழுக்க முழுக்க நிறைந்திருந்தது அமிர்தாவுடனான அவனின் படங்கள்.
அதனை எல்லாம் வேக வேகமாக செலக்ட் செய்து அழிக்க முற்பட்டவன், பின் என்ன காரணத்தினாலோ அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
அவளின் உணர்ச்சி ததும்பும் கண்களிலும் உயிரோட்டமான அந்தச் சிரிப்பிலும் நெருக்கமாக உரசிக் கொண்டு நின்ற அவள் கையணைப்பிலும் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என்று அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவள் விஷயத்தில் ஏதோ ஒன்று உள்ளுர நெருடிக் கொண்டே இருந்தது.
வீட்டிற்குள்ளேயே இருந்தால் அவள் நினைப்பிலேயே புழுங்கிச் செத்துவிடுவோம் போல தோன்ற வேக வேகமாகக் கிளம்பித் தயாரானவன்,
“ம்மா…ஃப்ரெண்ட்ஸைப் பார்த்துட்டு வரேன்” என்று செல்ல,
“டேய்… சாப்பிட்டுப் போ” என்ற கீதா பின்னோடு வந்தார்.
“ஃப்ரெண்ட்ஸ் கூட சாப்பிட்டுக்கிறேன்” என,
“மதியம் வந்துருவ இல்ல” என்று கீதா கேட்க,
“நோ மா… நைட்தான்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான். கீதாவிற்கு இதெல்லாம் புதிதல்ல என்றாலும் மகனின் செயலிலும் பேச்சிலும் ஏதோ சரியில்லை என்று உள்ளுர உறுத்தியது.
இந்த நிலையில் வாயிலுக்கு வேகமாக சென்ற ஹரீஷ் தன் பைக்கின் அருகே மிக நெருக்கமாக நின்ற தேவாவின் பைக்கைப் பார்த்துக் கடுப்பாகிவிட்டான்.
“எவன்டா அவன்… என் பைக் பக்கத்துல” என்று அந்த பைக்கை தள்ளி நிறுத்த சிரமப்படும் போது, அந்தக் காட்சியைப் பார்த்த தேவா ஓடி வந்து,
“சார் சார்… நான் வரேன்” என்று அனாயசமாக தன் பைக்கை ஒரமாகத் தூக்கிதள்ளி வைத்துவிட்டு, “இப்போ போ சார்” என்று வழிவிட்டு நின்றான்.
முதல் பார்வையிலேயே ஹரீஷிற்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனை எரிச்சலுடன் பார்த்துவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டான்.
அதன் பின் தேவா உள்ளே வர, “டிஃபன் சாப்பிட வாப்பா” என்று கீதா அழைக்க,
“இல்ல ம்மா…” என்று தேவா தயங்கி நிற்க,
“அவர்தான் கூப்பிட்டாரு… வா” என்றதும் அவரைப் பின்தொடர்ந்து அவன் டைனிங் அறைக்கு சென்றான். பாலமுருகன் தன் காக்கி உடையில் தயாராகி உணவு உண்ண அமர்ந்திருந்தார்.
“உட்காருங்க” என்று தேவாவையும் அமியையும் அவர் அமர சொல்ல,
அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
“நீ என் பொண்ணு மாதிரிதான்… எந்த தயக்கமும் வேண்டாம்… உட்காருங்க” என்றவர் மனைவியை அழைத்து அவர்களுக்கும் உணவு பரிமாறச் சொல்ல இருவருமே வேறு வழியில்லாமல் அமர்ந்தனர்.
பாலமுருகன் சாப்பிட்டுக் கொண்டே, “மேலே உங்களுக்கு ரூமை ரெடி பண்ணியாச்சு… நீங்க இனிமே அங்கேயே தங்கிக்கலாம்” என, அவர்களுக்கு தங்கள் உணர்வுகளை எப்படி காட்டுவது… அவரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவதென்று ஒன்றும் தெரியவில்லை.
எல்லா காலத்திலும் மேல்தட்டு மக்களுக்கும் கீழ் தட்டு மக்களுக்கும் இருக்கும் வித்தியாசம்தான் இருவரையும் அவரிடம் இயல்பாகப் பேச முடியாமல் தள்ளி நிறுத்தியிருந்தது. ஆனால் பாலமுருகன் அந்த வித்தியாசத்தை எல்லாம் பார்க்கவில்லை. அவர்களிடம் இயல்பாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சாப்பிட்டார்.
“அப்புறம் அமி… நான் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன்… அவரு நல்ல வேளையா மும்பைலதான் இருக்காராம்… இன்னைக்கு நைட் சென்னை வந்துடுறேன்னு சொல்லி இருக்காரு” என்றதும் அமி ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
பாலமுருகன் மேலும், “உங்க அப்பா இந்தப் பதினைஞ்சு வருஷமா… உன்னை எங்கெல்லாம் தேடி அலைஞ்சாரு தெரியுமா அமி” என்று ஆரம்பித்து அத்தனை விவரங்களையும் கூற அமியின் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டன. தொண்டையிலிருந்து உணவு இறங்காமல் அப்படியே திக்கி நின்றது.
தேவா அவள் மனநிலை புரிந்து அவள் தோளை ஆதரவாகத் தடவிக் கொடுக்க அவள் அழுது விடாமல் இருக்க மிகவும் பிராயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ ரொம்ப அதிர்ஷ்டகார பொண்ணுமா… ஆல்வினும் நீயும் சந்திக்க போற மொமென்ட்காக நானே ரொம்ப எக்ஸைட்டடா காத்திருக்கேன்” என்றவர் மேலும், “இன்னும் சில மணிநேரங்களில் உங்க அப்பாவை நீ பார்க்கப் போற” என்றும் தெரிவித்தார்.
அமியின் மனம் ஆனந்தத்தில் திளைக்க, இத்தனை நாள் மறக்கடிப்பபட்ட உணர்வு மீண்டும் உயிர்பெற்றுக் கொண்டது. தந்தையைப் பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு மீண்டுமே துளிர்விட்டது.
புது பிரவாகமாக அவள் உள்ளம் உற்சாகத்தில் பொங்கிப் பெருக அப்போதைக்குத் தன்னைப் பற்றி தன் தந்தை என்ன நினைப்பாரோ என்று அவள் மனதிலிருந்த தவிப்பெல்லாம் காணாமல் போயிருந்தது. தேவாவைப் பார்த்து அவள் சந்தோஷமாகப் புன்னகைக்க அவனும் அவளுக்காக சந்தோஷம் கொண்டான்.
அப்போதிருந்து அமரா தன் தந்தையை சந்திக்க போகும் அந்த ஒரு நொடிக்காக ஆவலாகக் காத்திருந்தாள்.
காத்திருக்கும் அவளின் ஒவ்வொரு நொடிகளும் யுகங்களாக நகர்ந்தன.
இந்நிலையில் ஆல்வினை அழைத்து வர பாலமுருகனே விமான நிலையம் செல்வதாக இருந்தார். ஆனால் அவர் முதலமைச்சருடனான ஒரு அவசர சந்திப்பில் மாட்டிக் கொள்ள நேர்ந்துவிட, மகனுக்கு அழைப்பு விடுத்தார்.
“நான் இங்கே சி.எம். கூட ஒரு மீட்டிங்ல மாட்டிக்கிட்டேன் ஹரீஷ்… நீ ஏர்போர்ட் போய் ஆல்வினை பிக் அப் பண்ணிட்டு வந்துடுறியா?” என்றவர் கேட்க,
“ஓகே பா… டன்” என்றான்.
“சரி நான் அவர் ஃபோட்டோ அனுப்புறேன் பார்த்துக்கோ… பிக் அப் பண்ணதும் எனக்கு மெசேஜ் போட்டுடு” என்றவன் அழைப்பைத் துண்டிக்க,
“ஓகே பா” என்றவனோ அப்போது சரியான போதையில் இருந்தான். அமிர்தாவின் நினைப்பில் நண்பனின் வீட்டிற்குப் போய் மூச்சு முட்ட குடித்துவிட்டு, “அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சான் மச்சான்… அதெப்படி அவ என்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடி வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்று புலம்பித் தீர்க்க,
“விடு மச்சான்… இதெல்லாம் உனக்குப் புதுசா என்ன?” என்று அவர்கள் எவ்வளவோ சொல்லித் தேற்றியும் அவன் சமாதானம் அடைவதாக இல்லை.
மீண்டும் அதே புலம்பல். எப்படியோ அவன் போதையைத் தெளிய வைத்து அவன் நண்பனில் ஒருவன் உடன் வந்து அவனை வீட்டில் இறக்கிவிட்டான்.
“பார்த்துப் போயிடுவ இல்ல… ஒன்னும் பிரச்சனை இல்லையே”
“எங்க ப்பா இப்பதான் ஃபோன்ல பேசுனாரு… ஏர்போர்ட் போய் ஒருத்தரை பிக் அப் பண்ணிட்டு வர சொல்லி இருக்காரு… நான் வேற குடிச்சிருக்கேன்… வண்டி ஓட்டிட்டுப் போய் சிக்கினேன்… சிட்டி கமிஷனர் பையன் எங்க பா மானம் போயிடும்… நீ கொஞ்சம் கார் ஓட்டிட்டு வர்றியா மச்சான்” என்றவன் உடன் வந்த நண்பனிடம் கேட்க,
“சாரிடா மச்சான்…ஏற்கனவே லேட்டாயிடுச்சு… என் பொண்டாட்டி என்னைக் காய்ச்சி எடுத்துடுவா” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல,
“பொண்டாட்டிங்கனாலே அப்படிதான்… உஹும் நான் என் லைஃப்ல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்” என்றான்.
“நல்ல முடிவு மச்சான்… இந்த முடிவை யாருக்காகவும் எதுக்காகவும் மாத்திக்காதே” என்று அறிவுரை கூறிய நண்பன் அவன் தோளைத் தட்டிவிட்டு, “சரிடா மச்சான்… நான் கிளம்புறேன்” என்று புறப்பட்டுவிட்டான்.
ஹரீஷும், “ஆமா… கல்யாணமே பண்ணிக்க கூடாது… நெவர்… முக்கியமா அந்த அமிர்தாவை… சை… அவளுக்குதான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல” என்று புலம்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைய,
அவனைப் பார்த்த கீதா, “வா ஹரீஷ்… உனக்காகதான் வெயிட் பண்றேன்… ஃப்ரஷாகிட்டு வாடா… சாப்பிடலாம்” என்று சொல்ல,
“இல்ல மா… அப்பா என்னை உடனே ஏர்போரட் போய் மெல்வினை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காரு” என,
“மெல்வினா... அவரு பேர் மெல்வின் இல்ல... ஆல்வின்டா” என்று கீதா தெளிவுப்படுத்த,
“எஸ் எஸ் ஆல்வின்” என்றவன் கார் சாவியைத் தேடிக் கொண்டிருந்தான்.
மகனின் தடுமாற்றத்தைக் கவனித்தவர் அவன் குடித்திருப்பதை அறிந்து, “என்னடா… குடிச்சிருக்கியா?” என்றவன் கையைப் பிடித்து முகத்தை உற்றுப் பார்க்க,
“கொஞ்சமாதான் மா” என்றவன் சமாளிக்க,
“கொஞ்சமாவா… டேய்… நீ இப்படியே டிரைவ் பண்ணிட்டு போய்… போலீஸ்ல மாட்டினா… உங்க அப்பா மானமே போயிடும்” என்று கீதா கடுப்பாக,
“நான் போகலன்னா அதுக்கும் அவர்கிட்ட வாங்கிக் கட்டிக்கணும்”என்றான் ஹரீஷ்.
“அவர் மானம் போகுறதுக்கு… நீ திட்டு வாங்குறது எவ்வளவோ பரவாயில்ல” என்றவர் சாவியைப் பறித்துக் கொண்டுவிட,
“ம்மா… நான் பத்திரமா போயிட்டு வந்துடுவேன்… சாவியைக் கொடுங்க” என்று ஹரீஷ் சொல்ல, சில நொடிகள் யோசித்த கீதா உடனடியாக மாடியறையிலிருந்து தேவாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.
“நீங்க கார் ஒட்டுவீங்க இல்ல தம்பி” என்று கேட்க, அவன் தெரியும் என்று சொல்லவும் அவர் அவனிடம் சாவியை நீட்டினார்.
ஹரீஷிற்கு அவனைப் பார்த்ததும் எரிச்சல் மூள, “அப்பா என்கிட்டதான் சொன்னாரு… நான்தான் போவேன்” என்று அடாவடியாக சாவியைப் பிடுங்கிக் கொள்ள, “நீ ஒன்னும் போக வேண்டாம்” என்று கீதா தடுத்தார். ஆனால் அவன் கேட்பதாக இல்லை.
“சரி சார்… நான் வண்டி ஓட்டினு வரேன்… நீ கூட வா” என்று தேவா சொல்ல,
“நான் வரேன்… நீ என் கூட வண்டி ஓட்டிட்டு வா” என்று அந்த போதை நிலையிலும் அவன் தெள்ளதெளிவாக உளறிக் கொண்டு வந்தான்.
இருவரும் ஒன்றாக விமான நிலையத்திற்குப் புறப்பட்டனர்.
11