மோனிஷா நாவல்கள்
Anbin Vazhiyathu - Episode 6
Quote from monisha on October 15, 2024, 9:09 PM6
‘Knowing yourself is the beginning of all wisdom’
காலை பதினோரு மணியளவில் ரெஜிஸ்டர் ஆஃபிஸில் மஹாவுக்கும் எனக்கும் நிகழ்ந்த திருமணம் பதிவு செய்யப்பட்டது. அத்தனையும் முன்னின்று பொறுப்பாகச் செய்து முடித்ததெல்லாம் அனுஷயாதான்.
மஹா கையெழுத்துப் போட்டுவிட்டு என்னிடம் பேனாவைக் கொடுத்தாள். அன்புவின் கையெழுத்து எனக்கு அத்துப்படிதான். ஆனாலும் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது.
தாலி கட்டும் போது கூட நடுங்காத என் கரம் அன்புவின் கையெழுத்தைப் போடும் போது கொஞ்சமாக நடுங்கியது. எப்படியோ போட்டுவிட்டேன்.
அதன் பின்புதான் நான் மனதில் போட்டு வைத்தத் திட்டத்தை மெதுவாக அரங்கேற்றம் செய்தேன். எல்லோரும் உணவகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது முக்கியமான அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி தனியாக வந்தேன். பேசிவிட்டு மீண்டும் அவர்களிடம் வந்து அவசரமாகக் கிளம்ப வேண்டுமென்றேன்.
என்ன ஏதென்று படபடப்புடன் கேட்ட மஹாவிடமும் மற்ற நண்பர்களிடமும் வந்து சொல்வதாகத் தெரிவித்துவிட்டு சிவாவிடம் மஹாவை அவன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி சொன்னேன்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘கல்யாணம் முடிச்சக் கையோடு எங்க போறான்?’ என்று குழம்பியவர்கள் அத்தனை பேருக்கும் அடுத்த ஒரு மணிநேரத்தில் அறிவின் விபத்தும் மரணமும் பதிலாகக் கிடைத்தது.
நான் இரவு மருத்துவமனை வந்து சென்றதை மறைப்பதற்காக அந்தப் பிணவறை ஊழியனின் கைகளில் கொஞ்சம் பணம் வைத்தேன். எங்கள் குடும்ப நண்பரான கிரி அங்களிடம் நான் அழுது கொண்டே செல்பேசியில் விவரத்தைத் தெரிவித்தேன். அவர் உயர் நீதிமன்ற வக்கீல்.
வந்ததும் அவருக்கும் நிறைய குழப்பமும் கேள்விகளும் வந்தன. ஆனால் காவல் துறையினர் தெள்ளத் தெளிவாக நடந்தது விபத்து என்று தெரிவித்தனர். என் வேலையை அவர்களே செவ்வனே செய்துவிட்டார்கள். அவர்களுக்கு அந்த வழக்கை முடிக்க வேண்டும் அவ்வளவுதான்.
நான் அவர்கள் உரையாடலில் கலந்துக் கொள்ளவில்லை. எந்தக் குழப்பமும் வராத வரை தலையிட வேண்டாமென்று நின்றேன்.
ஏற்கனவே போஸ்ட்மார்ட்டம் முடிந்திருந்ததில் உடலை எடுத்துச் செல்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. தெளிவாக அறிவு என்ற என் பெயருக்குத் டெத் செர்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்கள். எல்லாமே இத்தனை சுலபமாக முடியுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.
யாருக்கும் துளி கூடச் சந்தேகம் வரவில்லை.
கிரி அங்கிள் என்னிடம், ‘உடம்பை உங்க அப்பா வீட்டுக்கு எடுத்துப் போகலாம் அன்பு’ என்றார். இப்படிதான் சொல்வார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் ஒப்புகொள்ளவில்லை. நாங்கள் இருவரும் தங்கி இருந்த வீட்டில்தான் அவன் உடலைக் கிடத்த வேண்டுமென்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டேன்.
அன்பு இருந்திருந்தாலும் இப்படிதான் சொல்லி இருப்பான். ஐஸ் பெட்டியினுள் அவன் உடல் வீட்டின் வாயிலின் முன்னே பார்வைக்கு வைக்கப்பட்டது. சங்கூதி மணியடிக்கப்பட்டன. சாவு மேள சத்தங்கள் அவ்விடத்தை அதிர செய்தன.
என் மரணத்தை நானே பார்க்கும் அபூர்வமான காட்சி அது.
அன்புவின் நண்பர்கள் அத்தனை பேரும் அங்கே குவிந்திருந்தார்கள். எனக்கு ஆறுதல் சொன்னார்கள். அவர்களுக்காக வேண்டி நான் இப்போது அழுதாக வேண்டும். ஏற்கனவே நிறைய அழுதுவிட்டதால் கண்ணீர் வர மறுத்தது.
இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் முன்ஜாக்கிரதையாக கிளஸரின் பாட்டில் ஒன்றை வாங்கி வைத்திருந்தேன். அதன் துளிகளைக் கண்களில் சொட்டிய நொடி கண்ணீர் அருவியாகக் கொட்டியது.
அழுகை பொய்யாக இருந்தாலும் எனக்குள் இருக்கும் வலி உண்மையானது. என்னுடைய அந்த வலியை யாருக்கும் புரிய வைக்க முடியாது. அழுதால்தான் இந்த உலகம் நம் உணர்வுகளை நம்பும்.
மனதார மன்னிப்பு வேண்டியபடி நான் அன்புவின் உடலைப் பார்த்துக் கொண்டு நிற்க, அப்பா தளர்ந்த நடையுடன் அங்கே வந்தார். கேன்சர் நோய் அவரின் கம்பீரத்தைத் திமிரைக் கோபத்தை அத்தனையையும் உருகுலைத்துவிட்டிருந்தது.
கிடத்தப்பட்ட அவன் உடலருகே வந்தார். அவரைப் பொறுத்தவரை அது அறிவு. அவருக்குப் பிடிக்காத மகன் அறிவு. என்ன செய்கிறார் பார்ப்போம் என்று நான் நிற்க, அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியதைக் கண்டேன்.
அழுது கொண்டே அவர் என்னை நோக்கி வர, ஆச்சரியமாக அவர் அழுகையைப் பார்த்துக் கொண்டிருந்த நான் உடனடியாக என் பார்வையை வருத்தமாக மாற்றிக் கொண்டேன். அப்பா என் கையைப் பிடித்துக் கொண்டு கதறினார். அவர் தோளைப் பிடித்துச் சமாதானம் செய்து அமர வைத்தேன்.
இருக்கும் போது பாசமாக என்னை ஒரு நாள் கூட அரவணைத்துக் கொண்டதோ அன்பு காட்டியதோ இல்லை?
செத்த உடலின் மீது மட்டும் இவர்களுக்கு அப்படி என்ன பாசம் பொங்கி வழிந்துவிடுகிறது.
அடுத்து அப்பாவின் முன்னாள் செகரட்டிரியும் இரண்டாவது மனைவியுமான தேவிகாவும் அவர் மகள் நிரஞ்சனாவும் முகத்தில் சோகத்தை அப்பிக் கொண்டு வந்து அந்த ஐஸ் பெட்டி எதிரே நின்றனர். அத்தனையும் நடிப்பு. அவர்களின் இரண்டு எதிரியில் ஒருவன் செத்துப் போய்விட்டான் என்று உள்ளுர அவர்களுக்குப் படுகுஷியாக இருக்கும்.
அதுவும் நான் இறந்துவிட்டேன் என்ற செய்தி நிரஞ்சனாவை நிச்சயம் குதூகலப்படுத்தி இருக்கும். எப்படி நடிக்கிறாள் பார்? அவளைப் பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.
என்னுடைய இலக்கிய நண்பர்கள் பலரும் பெரிய பெரிய மாலையாக வாங்கிக் கொண்டு வந்தார்கள். என் மீது அவர்கள் கொண்ட மரியாதை என்பது மாலையின் அளவைப் பொறுத்தது போல. நிறைய பெரிய மாலைகள் தூக்கவே முடியாதளவுக்கு அந்த ஐஸ் பாக்ஸின் மீது விழுந்தன. கனத்த அந்த மாலைகளை சிவா முன்னே நின்று பொறுப்பாக அகற்றிக் கொண்டிருந்தான்.
நேரம் ஆக ஆக எழுத்தாளர்கள் வாசகர்கள் எனக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது. என் இறப்பிற்காக... எனக்காக இவ்வளவு பேர் வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
எனக்கு விழ வேண்டிய அத்தனை மாலைகளும் அன்புவின் மீது விழுந்தன. தொடர்ந்து மாலைகள் விழுந்த வண்ணம் இருந்தன. இறந்த பிறகும் கூட அவன் எனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைப் பறித்துக் கொள்கிறானோ என்று தோன்றியது. ஆனால் அதில் அவன் தவறு எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய முடிவு அல்லவா?
அந்த இடம் முழுக்க மாலைகளாலும் அவை உதிர்த்துச் சிதறிய பூக்களாலும் நிரம்பி வழிந்தன. அதனை எல்லாம் பார்த்த பொழுதில் என மனம் ஒரு மாதிரி அலைப்புறுகிறது. தவறான முடிவை எடுத்து விட்டோமோ?
அத்தனை நேரத்தில் அப்போதுதான் மஹாவைப் பார்த்தேன். அழுது சிவந்த கண்களுடன் நின்றிருந்தாள்.
அவள் எதற்காக அழ வேண்டும். ஓ! அன்புவின் சகோதரன் என்று அழுகிறாள் போல. சில மணிநேரங்களுக்கு முன்பாக அவள் கொண்டிருந்த மொத்த சந்தோஷமும் சீரழிந்துவிட்டது. எதிர்கால கனவுகளுடன் மாலையும் கழுத்துமாக நின்றவள். எல்லாமே நொடி நேரத்தில் சிதைந்துவிட்டது. அன்புவின் உடலைப் போல.
கிரி அங்கிள் மீண்டும் என்னிடம் வந்தார். விபத்தான உடல் என்பதால் அதிக நேரம் பார்வைக்கு வைக்காமல் விரைவாக அனைத்து சடங்குகளும் முடிக்கப்பட வேண்டுமென்றார். எனக்கும் எல்லாவற்றையும் முடித்துவிட்டால் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிட முடியுமென்று தோன்றியது.
அதன் பின் அவர் சொன்னபடியே இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட, கடைசி நிமிடம் வரை மாலையைத் தூக்கிக் கொண்டு யாராவது வந்த கொண்டே இருந்தார்கள். நான் என்றோ எப்போதோ பார்த்த முகங்கள். பேசிய மனிதர்கள்.
தகவலறிந்த மாத்திரத்தில் எனக்காக வந்தார்கள். அந்த மனிதர்களை எல்லாம் பார்த்த போது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்த உலகம் அத்தனை மோசமானது இல்லை. எனக்காகவும் அழ கூட இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் அதை எண்ணி நான் இப்போது சந்தோஷம் கொள்ள வேண்டுமா அல்லது துக்கப்பட வேண்டுமா என்றுதான் எனக்குத் தெரியவில்லை.
சடங்குகள் முடித்துக் கொள்ளிப் பானையைத் தூக்கிக் கொண்டு நடந்தேன். பிரேமி அந்தச் சாலையோரத்தில் நின்று தன்னந்தனியாக அழுது கொண்டிருந்தாள்.
என் உடலின் முன்னே வந்து நின்று பகிரங்கமாக அவளால் அழ முடியாது. சமூகம் அத்தகைய சலுகைகளை அவளுக்கு வழங்கவில்லை. ஏன் சமூகத்தின் மீது பழிப் போடுவானேன்? அவளை நான் தோழியாகப் பாவித்ததாகச் சொன்னாலும் உண்மையில் நானுமே அவளை அப்படி நடத்தவில்லை. வெறும் என் தேவைக்காக மட்டுமே அவளைப் பயன்படுத்திக் கொண்டேன்.
ஆனால் தற்சமயம் அவள் எனக்காக அழுது கொண்டு நின்றிருந்தாள். வெறும் பணத்திற்காக மட்டுமே அவள் என்னிடம் வரவில்லை. அவளுக்கு என் மீது அளவிட முடியாத அன்பு இருந்தது. நிச்சயம் அந்த அன்பிற்கு விலையேதுமில்லை.
அவளிடம் மட்டுமாவது உண்மையைச் சொல்லி இருக்கலாமோ என்று என் மனத்தவிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு நடந்தேன். அன்புவின் தொடக்கப் பயணத்தில் அவனுடன் இந்தப் பூமிக்கு வந்த நான் இன்று அவனை மட்டும் தனியாக வழியனுப்பி வைக்கப் போகிறேன்.
அன்புவுடனான என்னுடைய சிறு வயது நாட்கள் என் நினைவுகளில் முட்டி மோதின. வயிற்றில் கப்பென்று ஒரு உணர்வு இறுக்கிப்பிடித்தது.
நடந்து போய் கொண்டிருந்தாலும் என் கால்கள் அந்தப் பயணத்தை உணரவில்லை. எங்காவது தடுமாறி விழுந்துவிடுவேனோ என்று பயமாக இருந்தது.
இறுதியாக அவன் உடலைக் கிடத்தித் தீ மூட்டுகையில் என் உடலும் மனமும் கழன்று தனித் தனியாக நகர்வதைப் போலத் தோன்றியது. நெருப்பு சரசரவென்று பற்றிக் கொண்டது.
நானே அந்த தீயில் கருகுவதைப் போல உணர்ந்தேன்.
எல்லாம் முடிந்துவிட்டது.
அவனது மிச்சம் மீதி உடலையும் நெருப்பு விழுங்கிவிட்டது. எரிந்தது அவன் உடலாக இருந்தாலும் அழிந்ததும் அழிக்கப்பட்டதும் அறிவு என்கிற எனது அடையாளம்.
அந்த நொடி வரை கூட என் அடையாளத்தை இழப்பதை எண்ணி நான் பெரிதாக வருந்தவில்லை. ஆனால் அடுத்த வந்த இரண்டு நாளில்... முகநூல்களிலும் ட்விட்டர்களிலும் என் பெயர் ட்ரெண்டாகியது.
அமுதன் என்று நான் எழுதிய நாவலில் நாயகன் ஒரு மோசமான விபத்தில் மரணிப்பது போன்று முடித்திருப்பேன். அந்த முடிவை நான் திட்டமிட்டுக் கொடுக்கவில்லை.
ஆனால் அந்த நாவலை என் மரணச்செய்தியுடன் ஒப்பிட்டு முகநூல்களில் முகம் தெரியாதவர்கள் எல்லாம் பதிவிட்டு அதிர்ந்தார்கள். சமூக ஊடங்கங்களில் அந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கியது.
அதன் பின் சிறிய பெரிய என அத்தனை தமிழ் ஊடகங்களும் அறிவு அறிவு என்று என் பெயரை உச்சரித்தன. நான் வியந்து பார்க்கும் பிரபலமான எழுத்தாளர்கள் சிலர் என் நாவல்களை எல்லாம் போற்றிப் புகழ்ந்து பேட்டிக் கொடுத்தார்கள். அவர்கள் உண்மையில் என்னுடைய நாவல்களைப் படித்துவிட்டுத்தான் பேட்டிக் கொடுக்கிறார்களா அல்லது சும்மாவே பேசுகிறார்களா? தெரியாது.
அதோடு அவர்கள் முடித்திருந்தால் பரவாயில்லை. என் மரணத்தை தமிழ் இலக்கியத்தின் மிகப் பெரிய இழப்பாகக் கருதுவதாகச் சொன்னதைக் கேட்ட போதுதான் எனக்கு உண்மையில் நெஞ்சை அடைத்தது.
‘இவ்வளவு நாளா எங்கடா இருந்தீங்க நீங்க எல்லாம்?’
நடப்பது எதையும் நம்ப முடியாமல் நான் கனவு ஏதாவது காண்கிறேனா என்று கூடச் சந்தேகித்தேன். ஆனால் அத்தனையும் நிஜம். மறுக்கவும் மறைக்கவும் முடியாத நிஜம்.
இத்தனை நாளாக நான் எந்த அங்கீகாரத்திற்காக ஏங்கித் தவித்தேனோ அது எனக்கு இப்போது பூரணமாகக் கிட்டியிருந்தது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளவும் கொண்டாடவும் நான் இப்போது அறிவு இல்லை. அன்பு!
6

Quote from Marli malkhan on November 11, 2024, 3:06 PMSuper ma
Super ma