மோனிஷா நாவல்கள்
Aval Draupathi Alla - 19
Quote from monisha on November 15, 2020, 10:17 PM19
பயங்கர தீ விபத்து
அனைத்து டிவி சேனல்களும் டி நகர் மங்களம் சில்க்ஸை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன.
இப்படியொரு தீ விபத்தை அந்த டீ நகர் வீதியே இதுவரை பார்த்திருக்காது. இனியும் பார்க்கப் போவதில்லை. அப்படிதான் அந்த பயங்கர விபத்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அது திட்டமிட்ட சதிதான் எனினும் அது அப்போதைக்கு எதிர்பாராமல் நிகழ்ந்த தீ விபத்தாகவே எண்ணி எல்லோரும் விவாதித்து கொண்டிருந்தனர்.
நெருப்பு அடங்கும் நிலையில் இல்லை. அது டிவி சேனல்களிலும் நேரடியாய் ஒளிப்பரப்பாகி எல்லோரையும் பீதியடையச் செய்திருந்தது.
தீயணைக்கும் படையும் வெகுநேரமாய் அவர்களின் முழு முயற்சியைக் கொடுத்து அந்த தீயை அணைக்க பெரும் பாடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் முயற்சியைக் கடந்து அந்த தீ கொழுந்துவிட்டு தாறுமாறாய் எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே இருப்பது துணிகளாயிற்றே! அத்தனை சீக்கிரத்தில் நெருப்பு அடங்கிவிடுமா? அது மேலும் மேலும் உள்ளுக்குள்ளேயே பரவிக் கொண்டுதான் இருந்தது.
கரும்புகை அந்த இடத்தை சூழ்ந்து அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது. அருகாமையில் இருக்கும் பல பிரமாண்ட நகை மற்றும் துணிக் கடைகளுக்கு சொந்தகாரர்கள், எங்கே தீ அவர்கள் கடைகளிலும் பரவிவிடுமோ என்று பயந்து அதற்கான பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் சாரதி எத்தகைய கவலையும் பதட்டமுமில்லாமல் தன் படுக்கையறையில் பொறுமையாய் காபியை ருசித்துக் கொண்டே அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே தீ பரவினால் அது அடுத்ததாய் அவன் கடைக்காகத்தான் இருக்கும்.
இதில் இத்தனை பெரிய ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் அவன் இதை செய்திருக்கிறான் எனில் அவனின் வெறியும் பழிவாங்கும் உணர்வும் அத்தனை பெரிதாக இருந்தது. அதே நேரம் அதற்கான பலமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்த பின்னரே இந்தத் திட்டத்தை செயல்படுத்தினான்.
சில வார்த்தைகள் வெல்லும் சில வார்த்தைகள் கொல்லும் என்பார்கள்!
அரவிந்த் சாரதியின் மீது கொஞ்சமும் யோசிக்காமல் பிரயோகப்படுத்திய வார்த்தையினால் ஏற்பட்ட விபரீதம் அது!
விடிந்தும் விடியாமலும் காலை நான்கு மணியளவில் பரவிய தீ குறித்த தகவல் அரவிந்தையும் வந்தடைந்த போது அவன் வசிக்கும் லண்டன் மாநகரில் நேரம் இரவு நடுநிசியை தொட்டுக் கொண்டிருந்தது.
இதற்கெல்லாம் யார் காரணம் என்பதை அவன் அறியானா என்ன? இது விபத்தாயிருக்கும் என்று அவன் துளிக் கூட நம்பவில்லை. இது நிச்சயம் சாரதியின் வேலைதான். அவனைத் தவிர வேறு யாரும் இத்தனை பெரிய காரியத்தை செய்திருக்க முடியாது.
முன்னமே அவன் தந்தை சாரதியிடம் மோத வேண்டாமென அவனை எச்சரித்தது இப்போது நினைவுக்கு வந்தது. கண்கெட்டதற்கு பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல தான் செய்த முட்டாள்தனத்தை வெகுதாமதமாகவே உணர்ந்து கொண்டான் அரவிந்த்!
விழியெல்லாம் கலங்கி தலையில் கை வைத்து கொண்டு அப்படியே நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தான். பல இடங்களில் மங்களம் சில்க்ஸ் கிளைகள் இருந்தாலும் டி நகர் கிளையின் லாபத்தை வேறெந்த கிளைகளும் முந்திக் கொள்ள முடியாது. இது எத்தனை பெரியளவிலான நஷ்டம் என்பதை யோசிக்கும் போதே அவனுக்கு தலைசுற்றியது. இதனை எப்படி தன் தந்தை எதிர்கொண்டிருப்பார் என்று எண்ணும் போதோ உள்ளூர நடுங்கியது அவனுக்கு!
ஆனால் இத்தனையும் செய்த சாரதி ஒய்யாரமாய் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு டிவி சேனல்களில் பரபரப்பாய் பிரத்யேகமாய் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த அந்த தீ விபத்தை பார்த்துக் கொண்டிருந்தான். துளியளவும் குற்றவுணர்வே இல்லாமல்!
எதிராளியை எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிப்பதில் சாரதிக்கு நிகர் சாரதிதான்!
அரவிந்தின் முகம் இருளடர்ந்து போயிருந்தது. அவனும் காலையிலிருந்து அந்த கோர தீ விபத்தைப் பார்த்து மிரண்டு போயிருந்தான்.
தீ பற்றி சரியாய் மூன்று மணிநேரம் அசாதாரணமாய் கடந்திருக்க, தீயின் உக்கிரம் தாங்காமல் மேல்தளம் சரிந்து விழுந்ததைப் பார்த்து பதறிப் போயிருந்தான். கணேஷ் இந்தளவுக்கான விளைவை எதிர்பார்க்கவில்லை.
அப்போது அவன் அறைக் கதவு தட்டப்பட, "வாங்க கணேஷ்" பின்புறம் திரும்பி ஒரு நொடிப் பார்த்துவிட்டு அழைக்க,
சாரதி பின்னோடு நின்றவன், "சார்!" என்று மிரட்சியோடு அழைக்க,
"சொல்லு கணேஷ்!" என்றான்.
"டோட்டல் டி நகர் ரூட்டையே பிளாக் பண்ணிட்டாங்க சார்"
"பின்ன பண்ண மாட்டாங்களா? எவ்வளவு பெரிய பைஃயர் ஆக்ஸிடென்ட்... உலக தொலைக்காட்சியில் முதல்முறையாக" என்று சமிஞ்சையோடு சொல்லி அவனை எகத்தாளமாய் பார்க்க,
கணேஷ் அதிர்ச்சியோடு பதிலின்றி நின்றான்.
"ஏன் கணேஷ்?! இப்ப லண்டன்ல டைம் என்ன இருக்கும்?" என்று சாரதி கேட்க அவசரமாய் கணேஷ் ஃபோனை எடுத்து,
"நைட் மணி மூணு இருக்கும் சார்" என்றான்.
"தூங்கிட்டிருப்பானோ? ம்ஹும் இருக்காது... மேட்டர் தெரிஞ்சிருக்கும்... நொந்திருப்பான்" என்று சாதாரணமாய் ஆரம்பித்து வெறியோடு முடிக்க, சாரதியைப் பற்றி நன்றாய் அறிந்திருந்தாலும் இம்முறை அவனின் செயல் கண்டு கணேஷ் சற்றே அதிர்ந்து போனான்.
அரவிந்தை அடிக்கவா இத்தனை பெரிய கலவரம் என்று, ஏற்பட்ட மோசமான விளைவுகளை பார்த்த பின்னரே கணேஷுக்கு யோசிக்கத் தோன்றியது.
"என்ன? உன் மைண்ட் வாய்ஸ் கணேஷ்" என்று சாரதி எழுந்து நின்று அவன் முகத்தைப் பார்க்க, "அது வந்து சார்" என்று தயங்கினான் கணேஷ்.
"கணேஷ்" என்றவன் கூர்மையாய் பார்க்க,
"இது இவ்வளவு பெரிய இஷ்யூவாகும்னு நானே எதிர்பார்க்கல சார்" என்றான் தயக்கத்தோடு!
அலட்சியப் புன்னகையோடு, "ஸோ வாட்?" என்று சாரதி கேட்க,
"சார் இதனால நம்ம ஸேல்ஸும் அடிபடுமே... இப்ப நடக்கிறதைப் பார்த்தா இதெல்லாம் க்ளியர் பண்ணவே மூணு நாலு நாள் ஆகும் போல.. கஸ்டமர்ஸ் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு டிநகர் பக்கம் தலை வைக்கவே இரண்டு மூணு வாரமாகிடும்... ஸோ இது நமக்குமே லாஸ்"
"அப்படியா சொல்ல வர்ற?!" கேட்கும் போதே சாரதியின் புருவங்கள் சுருங்கியது.
"ஆமா சார்"
"ஹ்ம்ம்... அப்ப நான் ஒண்ணு கேட்கிறேன்... பதில் சொல்றியா?!"
"சொல்லுங்க சார்"
"ஏன் கணேஷ்? கஸ்டமர்ஸ் நம்ம கடைக்கு ஜாஸ்தியா... இல்ல மங்களம் சில்க்ஸுக்கா?"
"ஒப்வியஸ்லி மங்களம் சில்க்ஸ்க்குதான்" உடனடியாய் பதிலளித்தான் கணேஷ்!
"சரி... இப்போ மங்களம் சில்க்ஸ்... இந்த ஆக்ஸிடென்ட்ல இருந்து மீண்டு பழையபடி புதுசா எல்லாத்தையும் மாடிஃபை பண்ண...எவ்வளவு நாள் ஆகும்?"
"கண்டிப்பா ரொம்ப டைம் எடுக்கும் சார்... பில்டிங் புஃலா டேமேஜ்"
"அப்போ மங்களம் சில்க்ஸோட ரெகுலர் கஸ்டமர்ஸோட பார்வை அடுத்து எங்கு திரும்பும்"
"சார்" என்றவன் யோசனைக்குறியோடு பார்க்க,
"நம்ம கடை பக்கம்தான் திரும்பும்... திரும்ப வைக்கணும்" என்றான்.
கணேஷ் மௌனமாய் நிற்க சாரதி மேலும், "இந்த சான்ஸை விட்டா அவங்க கஸ்டம்ர்ஸை நம்ம பக்கம் இழுக்க வேற சான்ஸே கிடைக்காது?"
"உண்மைதான் சார்"
"ஹ்ம்... நான் சொல்ற மாதிரி செய்யுங்க... நம்ம டெக்ஸ்டைல்ஸ்ல எல்லா நீயூ வெரைட்டி ஆஃப் மாடல்ஸை இறக்குங்க... பழைய ஸ்டாக்ஸெல்லாம் அப்புறம் ஆஃபர்ல தள்ளிக்கலாம்... வர்ற கஸ்டமர்ஸ் நம்மோட ரெகுலர் கஸ்டமர்ஸா மாத்தணும்... மங்களம் சில்க்ஸ் தலை தூக்குறதுக்கு முன்னாடி நம்ம அந்த இடத்தைப் பிடிக்கிறோம்... இப்ப சொல்லு கணேஷ்... நமக்கு நஷ்டமா லாபமா?" என்றவன் கேட்க,
உச்சபட்ச வியப்போடு நின்ற கணேஷ், "சத்தியமா லாபம்தான் சார்" என்றான்.
"அது மேட்டர்!" என்று சொல்லி கம்பீரமாய் புன்னகைத்தான் சாரதி!
கணேஷுக்கு சாரதியின் வியாபார யுக்திகள் எப்பவுமே அடங்கா வியப்புதான்!
அவன் வாயடைத்துப் போய் நிற்க, "சார் இன்னைக்கு ஆபீஸ் வர போறதில்லயா?!" என்றவன் கேள்வியாய் பார்க்க,
"நான் ஹாப்பி மூட்ல இருக்கேன்... ஆபீஸ்லாம் வந்து என் மூடை ஸ்பாயில் பண்ண விரும்பல" என்று கணேஷிடம் சொல்லி முடித்தவன் அவனிடம் வேலைகளை சிலவற்றை வரிசைப்படுத்திவிட்டு,
"ஏதாச்சும் முக்கியமான மேட்டர்னா எனக்கு மெசெஜ் பண்ணுங்க... காட் இட்" என்றான்.
கணேஷ் புறப்பட்ட சமயம் பார்த்து வீரா வீட்டிற்குள் நுழைந்தவள் அவனைப் பார்த்து, "இன்னா சார்... நீ ஆபீஸ்லயும் இருக்க... இங்கயும் இருக்க... சாரை ஏன் ஓயாம தொல்லை பண்ணினே கீற" என்றாள்.
"எது? நான் தொல்லை பண்றேனா?!" அவன் முறைத்தபடி கேட்க,
"இல்லையா பின்ன?" என்றாள் வீரா.
"உன்னை எப்படி சாரதி சார் இத்தனை நாளா வைச்சிருக்காருன்னு சத்தியமா எனக்குத் தெரியல" என்று கணேஷ் சொல்லி அவளைக் கூர்ந்து பார்க்க,
"உனக்கு பொறாமை சார்... உன்னை விடவும் சார் என்கிட்ட நல்லா பேசுறாருல்ல" என்றாள் அவள்.
"என் நேரம்" கணேஷ் தலையிலடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
வீரா அதன் பின் நேராய் சமையலறையில் எட்டிப் பார்த்து, "சார் கிளம்பிட்டாரா?" என்று ரகசியமாய் முத்துவிடம் வினவ,
"ஹ்ம்ம்ம்... அந்த மனுஷன் இறங்கி கீழேயே வரல" என்றான் முத்து.
"அப்படியா?! டைமுக்கு கிளம்பிடுவாரே... என்னாச்சு? உடம்புக்கு ஏதாவதோ?!" என்று அவள் அடுத்த கேள்வி கேட்க,
"தெரியலேயே வீரா" என்று முத்து சலித்து கொண்டான்.
அவள் யோசனைகுறியோடு, 'பேசாம நம்மளே போய் பார்ப்போம்' என்றவள் விறுவிறுவென படிக்கட்டில் ஏறிவிட்டு அவன் மூடிய அறைக்கதவை பார்த்து அப்படியே பிரேக் போட்டு நின்றுவிட்டான்.
'நம்ம பாட்டுக்கு கதவைத் தட்டி இவன் பாட்டுக்கு அரைகுறையா வந்து நின்னா? ம்ஹும் வேணாம் பா... பேசாம காரண்டையே போய் நிப்போம்' மனதில் எண்ணிக் கொண்டவள் மேலும்,
'அவனுக்கு இன்னா வந்தா உனக்கென்ன? அவன் உன்னை அதிகபிரசங்கின்னு சொல்றதுல தப்பே இல்லை' என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு அவள் திரும்பி நடக்க, அப்போது கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.
அவள் அப்படியே அதிர்ச்சியாக நின்றுவிட, "வீரா" என்றழைத்தான் சாரதி!
அசடு வழிந்து கொண்டே அவன் புறம் திரும்பினாள். டிராக் பேண்ட் டீஷர்டுமாய் அவன் நின்றிருக்க, 'நல்ல வேளை... முழுசா டிரெஸ் பண்ணிண்ணு கீறான்' என்றவள் மனசாட்சி நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டது.
"என்ன...? ரூம் வரைக்கும் வந்துட்டு நீ பாட்டுக்கு போற" என்றான்.
"இல்ல சார்! நீங்க கிளம்பிட்டீங்களான்னு" அவள் சமாளிக்க முற்பட,
"மூடின கதவு வழியா நான் கிளம்பிட்டேனா இல்லையான்னு உனக்கெப்படி தெரிஞ்சுது" என்று எகத்தாளமாய் கேட்டுக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தவன் அவளையும் உள்ளே வர சொல்லி சமிஞ்சை செய்தான்.
"இல்ல சார்... வந்தேன்... அப்புறம் உங்களைத் தொல்லை பண்ண வேணாம்னு"
"சமாளிக்காதே... நீ வேறெதோ கேட்க வந்த"
'எல்லாத்தையும் கண்டுபிடிச்சிருவானே... எமகாதகன்' என்றவள் மனம் எண்ணிக் கொண்டதும்,
'வீரா கம்முன்னு இரு' என்று தனக்குதானே சொல்லிக் கொண்டாள்.
என்னதான் அவனைக் குறித்து அவன் முன்னிலையில் எதுவும் சிந்திக்க கூடாது என்று எண்ணினாலும் சிந்தனைக்கு அணை போட முடியுமா என்ன? அது பாட்டுக்கு ஒரு புறம் ஊற்றாய் பெருகிக் கொண்டுதான் இருந்தது அவளுக்கு!
"சரி என்ன விஷயமா பேச வந்த" என்றவன் இருக்கையில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைக்க, "ஒண்ணியும் இல்ல சார்" என்று மறுத்தாள்.
"அதுக்கு எதுக்கு நீ என் ரூம் வாசல் வரைக்கும் வரணும்"
"சும்மாதான் சார் வந்தேன்"
"விஷயம் என்னன்னு சொல்லு? எந்த தேவையும் இல்லாம நீ என் ரூம் வாசல் வரைக்கும் வந்தியாக்கும்... என்ன? ஏதாவது பிரச்சனையா? பணம் ஏதாவது"
"சேச்சே அதல்லாம் இல்ல சார்"
"அப்புறம் வேறென்ன?"
அவனைத் தயக்கத்தோடு ஏறிட்டவள்,
"இல்ல சார்... நீங்க விடிஞ்சதுல இருந்து கீழே கூட வரலன்னு முத்த ண்ணா சொன்னாரு... அதான் உடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லையோன்னு?!" என்றவள் சொல்ல,
சாரதி சில நொடிகள் அவளை பிரம்மிப்பாய் பார்த்துவிட்டு,
"ஆமா! ஏன் என் மேல உனக்கு இவ்வளவு அக்கறை? சிகரெட் பிடிச்சா உடம்புக்கு நல்லதில்லங்குற... குடிச்சிட்டு டிரைவ் பண்ண கூடாதுங்குற... ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்... நீ ஆஃப்ட்ரால் எனக்கு ஒரு டிரைவர்... எனக்கென்ன வந்தா உனக்கென்ன?!" அவன் அவளைப் பார்த்து வினவினான்.
"இன்னா சார்... நீ நல்லா இருந்தாதானே உன்கிட்ட வேலை செய்ற நான் நல்லா இருக்கு முடியும்" என்று சாதாரணமாய் உரைத்தாள்.
சாரதி அவளைக் கூர்ந்து பார்த்து, "சரி... அன்னைக்கு என் உயிரை நீ காப்பாத்துனியே... அது எதுக்கு? அப்போ உனக்கு நான் யாரு?" என்க,
"சார்! அன்னைக்கு அந்த ரவுடிப் பசங்க காரோட உன்னை உள்ளே வைச்சி எரிக்கிறேனானுங்களா... எனக்கு அல்லு உட்டிருச்சு... யாரு என்னன்னு எல்லாம் யோசிக்கணும்னு தோணல... உன்னைக் காப்பாத்தணும்னு மட்டும் தான் தோணுச்சு... அவ்வளவுதான்?!"
அவன் அடங்காத வியப்போடு, "உன்னைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு வீரா... இதுவரைக்கும் உன்னை மாதிரி நான் யாரையும் பார்த்ததேயில்ல... எதையும் எதிர்பார்க்காம அடுத்தவங்களுக்கு உதவி செய்ற குணமெல்லாம் இன்னைக்கு யாருக்கு இருக்கு" சொல்லிவிட்டு அவளை மெச்சிய பார்வை பார்க்க,
"அதல்லாம் நிறைய பேருக்கு இருக்கு சார்" என்றாள்.
"நான் பார்த்ததில்லையே.. எல்லோருக்கும் அவங்க அவங்க தேவை... சுயநலம்" என்றவன் இறுகிய பார்வையோடு சொல்ல,
"மத்தவனுங்க எப்படி இருந்தா என்ன சார்... நாம நாமளா இருக்கணும்" என்றாள் வீரா!
"ஆஹான்!" என்றவன் அழகாய் முறுவலிக்க, அவன் முகம் மலர்ச்சி அவளுக்கு ஒருவித சிலாகிப்பை உண்டுபண்ணியது. ரொம்பவும் அரிதாய் வரும் புன்னகையல்லவா?!
"சரி வீரா! நீ கார்கிட்ட வெயிட் பண்ணு... கிளம்பணும்"
"ஆபிஸுக்கா சார்"
"இல்ல ரிஸார்ட்டுக்கு"
அதிர்ந்து, "இப்பதானே சார் போயிட்டு வந்தோம்" என்று கேட்டுவிட்டவள், அவசரத்தில் தான் அவ்விதம் கேட்டுவிட்டதை எண்ணி உதட்டைக் கடித்து கொண்டாள்.
"தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸின்ஸ்... நான் எங்க போகணும்னு சொல்றேனோ அங்க போகணும்... அது மட்டும்தான் உன் வேலை".
"சார் நம்ம நைட் வந்துருவோமா?!" என்றவள் கேட்க அவன் கோபமாய் அவளை முறைக்க ஆரம்பிக்க,
"கோச்சுக்காதீங்க சார்... வீட்ல தங்கச்சிங்க தனியா இருக்காங்க... கண்ட சோமாரிப் பசங்க எல்லாம் வம்பு பண்றானுங்க... எங்க ஏரியால இதே தொல்லை... அதான் பயமா இருக்கு... நைட் நேரம்" என்றாள்.
ஆழ்ந்த யோசனையோடு அவளைப் பார்த்தவன் "ஹ்ம்ம்ம்... அப்படின்னா ஒண்ணு பண்ணு" என்க,
"இன்னா சார்" என்று கேட்டாள் அவள்!
"பேசாம உன் தங்கச்சிங்கள கூட்டிட்டு வந்து நம்ம அவுட் ஹவுஸ்ல வந்து தங்கிடு"
"சார்" என்று அதிர்ந்தவள், "மாமி..சார்" என்றவள் கேட்க,
"அவங்க இரண்டு பேருக்கு ஒரு கிச்சன் ஹால் போதாதா? அதில இன்னொரு ரூம் இருக்கு... நீ உன் தங்கச்சிங்களோடு அங்க தங்கிக்கோ... சாப்பாடெல்லாம் இங்க சாப்பிட்டுக்கோ"
"சார் நாங்கெல்லாம் லோக்கல்... மாமி கூட அல்லாம்"
"அவங்க உன்னைவிட படுலோக்கல்... பார்க்கதான் டீஸன்டு... ம்ச்... அவங்க விரும்பினா இருக்கட்டும்... இல்லன்னா போகட்டும்... உனக்கு உன் பிராப்ளம் ஸால்வட்டா? அதப் பாரு" என்றவன் தீர்க்கமாக சொல்ல அவள் பதட்டமானாள்.
'அதைவிட இது பெரிய பிராப்ளமாச்சே! இருபத்தி நாலு மணி நேரமும் ஆம்பிளையாவே நடிக்கணுமே" என்று எண்ணமிட்டவள்,
"அய்யோ! அதெல்லாம் வேணா சார்... நான் சமாளிச்சுக்கிறேன்... அதுவுமில்லாம தங்கச்சிங்களுக்கு ஸ்கூலெல்லாம் அங்கதான் சார்... இம்மா தூரம் வந்து போணும்னா சிரமம்"
"அதெல்லாம் ஒரு பிரச்சனையில்ல... ஸ்கூல்தானே... பக்கத்துலேயே சேர்த்திடலாம்"
அவள் பதில் பேச முடியாமல் அவனை ஆச்சர்யமாய் பார்க்க, "என்ன? இவன் எப்படிப்பட்ட ஆளுன்னு யோசிக்கிறியா?!"
அவன் அப்படி கேட்டதும் ஆமாம் என்பது போல் தலையசைத்தவள், "அய்யோ இல்ல சார்" என்று பதறிக் கொண்டு மறுப்பாய் தலையசைத்தாள்.
அவன் அவளைப் பார்த்து முறுவலித்து, "குட் ஆர் பேட்... எனக்கு யார் எதை செய்றாங்களோ... அதையே நானும் அவங்களுக்குத் திருப்பி செஞ்சிருவேன்... ஒண்ணுக்கு பத்து மடங்கா... அது சாரதி!" என்றான் அழுத்தமாக!
அவன் சொன்ன விஷயம் அவள் பிரச்சனைக்கு தீர்வுதான் எனினும் அதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இரண்டுங்கெட்ட நிலையில் நின்றாள் வீரா!
19