மோனிஷா நாவல்கள்
Aval Draupathi Alla - 21
Quote from monisha on November 15, 2020, 10:20 PM21
ஸ்தம்பித்தாள்
அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு லிஃப்டில் போய் கொண்டிருந்தான். சாரதியிடம் ஃபோனில் பேசிய பிறகு அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.
அதே நேரம் அவனை மேலும் எதிர்த்துக் கொண்டு வேறெந்த பிரச்சனையையும் இழுத்துவிட்டுக் கொள்ள அவன் விரும்பவில்லை. இருக்கும் பிரச்சனையைத் தீர்த்து நிலைமையை சீர் செய்தால் போதுமென்றிருந்தது.
அதுவும் அந்த தீ விபத்தை சாரதி எத்தனை புத்திசாலித்தனமாய் நடைமுறைப்படுத்தியிருக்கிறான் என்று யோசிக்கும் போதே அரவிந்திற்கு அதிர்ச்சியும் பிரமிப்புமாய் இருந்தது. அவனைத் தான் ரொம்பவும் குறைவாக எடைப்போட்டுவிட்டோம் என்பதை ஒருவாறு உணர்ந்தவன்,
சாரதியை நேராய் சந்தித்து இப்போதைக்கு இந்த பிரச்சனையை தற்காலிகமாய் முடிவுக்குக் கொண்டு வர எண்ணினான்.
ஆம்! தற்காலிகமாகத்தான். அவனைப் பொறுத்துவரை சாரதியை அத்தனை சீக்கிரத்தில் விட்டுவிடும் எண்ணமில்லை.
மனதில் தீராத வஞ்சத்தோடே அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்தான். அவனிடம் சமரசம் பேச!
கணேஷ் சாரதியிடம் அவன் வந்த தகவலை பேசியில் உரைக்க,
"உள்ளே அனுப்பி விடு கணேஷ்" என்றான்.
சாரதியின் எதிரே வந்து நின்ற அரவிந்திற்கு அவனை எதுவும் செய்ய முடியவில்லையே என்று வெறி கூடியது. அவன் மனமெல்லாம் எரிமலையாய் குமுறி கொண்டிருக்க,
"பரவாயில்ல தம்பி... சொன்னதும் வந்துட்ட" சாரதி சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே கேட்டவன் மேலும்,
"இப்ப புரிஞ்சிருக்குமே உனக்கு... இந்த சாரதி யாருன்னு" என்றான் அழுத்தமாக!
அரவிந்தின் உள்ளம் கொந்தளிக்க, "வேண்டாம்... இந்த பிரச்சனையை இதோட முடிச்சுக்கலாம்" என்க,
"என்னடா கைப்பிள்ளை ரேஞ்சுக்கு... பேசிட்டிருக்க? வேண்டாம்... விட்டுடுங்க... நான் அழுதிருவேன்" என்று சொல்லி கேலியாய் சிரிக்க,
"சாரதி" என்று பொறுமினான்.
"ஏய்! என்னடா நானும் பார்த்துட்டிருக்கேன்... பேரை சொல்லிக் கூப்புடுற... வாடா போடாங்குற... நான் உன்னை விடப் பெரியவன் இல்ல.. அண்ணான்னு கூப்பிட்டு பழகு"
"நான் உன்னைப் பார்க்க வந்ததே இந்த பிரச்சனையை இதோட முடிச்சுக்கலாம்னு சமாதானம் பேசதான்... தேவையில்லாததெல்லாம் பேசிட்டிருக்க வேண்டாம்"
"ஆமான்டா! நீயும் நானும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் ப்ரைம் மினிஸ்டரு பாரு... சமாதான உடன்படிக்கை போடுறதுக்கு... ஒழுங்கா நீ செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்டுட்டு கிளம்பற வழியைப் பாரு... எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றபடி அவன் தன் கரத்திலிருந்த ஃபைல்ஸைப் புரட்ட,
"நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்... நீ எங்க அப்பாவையும் எங்க குடும்பத்தையும் அசிங்கப்படுத்தின.. அதுக்காகதான் நான் உன்னை ஆளை வைச்சு போட்டுத் தள்ள பார்த்தேன்... சரி அது தப்பாவே கூட இருக்கட்டும்... அதுக்காக நீ எங்க கடையை எரிச்சதெல்லாம் ரொம்ப டூ மச்" என்றவன் சொல்லிக் கோபாவேசமாய் முறைக்க,
"தம்பி! நீ என்னைக் கொல்ல பார்த்ததுக்காக ஒண்ணும் நான் கடையை எரிக்கல... நீ என்கிட்ட பேசுன வார்த்தை இருக்கு பாரு... அதுக்காகதான்" என்றவன் சொல்லும் போதே அவன் விழிகள் சிவக்க,
"நான் தப்பா எதுவும் சொல்லலயே... உண்மைதானே சொன்னேன்... உனக்கு சொந்தபந்தம்னு யாராச்சும் இருந்திருந்தா நான் அனுபவிச்ச வலி உனக்குப் புரிஞ்சிருக்கும்... எங்கப்பா மரண படுக்கையில உயிருக்கு போராடுறாரு... உன்னால... அதே போல் உனக்கும் யாராச்சும் இருந்து அவங்களுக்கு என்னால இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா நீ என்னை சும்மா விட்டிருப்பியா?!"
"ஹ்ம்ம்! இமோஷனலா பேசி மடக்குற!" என்று சாரதி அலட்சியப் புன்னகையோடு அவனைப் பார்த்து,
"சரி நானும் உன் பாயின்டுக்கே வர்றேன்."
"நீ சொல்ற மாதிரியே உங்க அப்பாவுக்காக நீ கோபப்பட்டது நியாயம்னா... நான் பார்த்து பார்த்து வியர்வையும் ரத்தமும் சிந்தி கஷ்டப்பட்டுக் கட்டின என் கடையில... உங்க அப்பா கையை வைச்சாரே... அது தப்பில்லையா தம்பி?! உனக்கு உங்க அப்பா முக்கியம்னா எனக்கு என் கடை முக்கியம்”
"அந்த கடைதான் அனாதையா நாதியில்லாம இருந்த இந்த சாரதிக்கு அங்கீகாரமும் மரியாதையும் கொடுத்திருக்கு... என் கடையில ஒரு துரும்பைத் தொட்டாலும் எனக்கு கோபம் வரும்... எப்படி உங்க அப்பாவைத் தொட்டா உனக்கு கோபம் வருமோ?!" என்றவன் ஆக்ரோஷமாகப் பேசி முடிக்க,
அரவிந்த் மௌனமாய் எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.
சாரதி மேலும், "இதப் பாரு அரவிந்த்... நம்ம பிரச்சனையை இதோட முடிச்சுக்கணும்னா... ஒழுங்கா... நீ பேசினதுக்கெல்லாம் என்கிட்ட மன்னிப்பு கேளு... இல்லன்னா ... லெட்ஸ் கன்டின்யூ த கேம்" என்றான்.
"வேண்டாம்... இந்த பிரச்சனையை இதோட முடிச்சிக்கலாம்... நான் பேசினதெல்லாம் தப்புதான்னு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்... என்னை மன்னிச்சிடு" என்று அரவிந்த் இறங்கிவர,
"இது நல்ல பையனுக்கு அழகு... ஓகே ஓகே நான் உன்னை மன்னிச்சிட்டேன்... நீ கிளம்பு" என்று சாரதி சொல்லி ஆணவமாய் புன்னகைக்க,
அரவிந்த் மனதிற்குள் எரிந்து கொண்டிருந்த அடங்கா கோபத் தீயை பிரயத்தனப்பட்டு உள்ளடக்கிக் கொண்டு செல்ல எத்தனித்தான்.
"அரவிந்த்" என்று சாரதி அழைக்க, அரவிந்த் யோசனைக்குறியோடு திரும்பினான்.
"இத பாரு... முடிஞ்ச விஷயத்தை திரும்பவும் கிளறி பார்த்துராதே... இந்த சாரதியை அப்புறம் நீ இன்னும் மோசமானவனா பார்க்க வேண்டியிருக்கும்" என்று சாரதி எச்சரிக்க அரவிந்த் வேண்டா வெறுப்பாய் அவனிடம் தலையசைத்துவிட்டு வெளியேறினான்.
அவன் தரைதளத்தில் கார் நிறுத்தம் நோக்கி வர, வீரா அப்போது காரில் சாய்ந்து கொண்டு சுகுமாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
"இன்னைக்காச்சும் ஏதாச்சும் உருப்படியான வீடா பாரு"
"நேத்தே ஒரு வீடு ஓகேயாச்சு இல்ல... நீ ஏன் வேணான்னு சொன்ன... அதை விட நல்ல வீடா உனக்கு எவன் கொடுப்பான்"
"அந்த ஆளு என்னைப் பார்த்த பார்வையே சரியில்ல... அவன் ஆளும் மூஞ்சியும்... நானும் தங்கச்சிகளுன்னு சொன்னதுக்கு அவன் வாயெல்லாம் பல்லு... அந்த பேமானி வூடு வேணா... நீ வேற வூடு பாரு"
"நான் என்ன வூடு ப்ரோக்கரா... என்னைத் தெரு தெருவா வீதி வீதியா அலைய விடற... இதுக்கு மேலெல்லாம் என்னால முடியாது"
"என்ன சுகுமாரு ?!... நாம அப்படியா பழகினோம்?!"
"இது ஒண்ண சொல்லிடு ஆனா வூனா" இவ்வாறாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, வீரா அப்போது அரவிந்த் அங்கே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
"இவன் அவன் இல்ல" என்றவள் சொல்ல,
"எவன்" என்று கேட்டான் சுகுமாரு.
"சுகுமாரு... நீ ஃபோனை வை நான் அப்புறம் பேசுறேன்" என்று அவன் பதிலுரைக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்தவள்,
'இந்த லூசு கண்ணுல நாம சிக்கினோம்... அவ்வளவுதான்' என்று சொல்லியபடி காரின் ஓரமாய் உட்கார்ந்த வார்க்கில் மறைந்து கொண்டாள் உச்சபட்ச கோபத்தோடு நடந்த வந்த அரவிந்த் தன் கரத்தால், "சே!!" என்று தன் காரின் மீது குத்தியவன்,
'இது உன்னோட டைம் சாரதி... ஆனா இதே மாதிரி எனக்கொரு டைம் வரும்... அப்போ உன்னை நான் கதறவிடல என் பேர் அரவிந்த் இல்ல' என்று சூளுரைத்துக் கொண்டான்.
அதே சமயம் சாரதி தன் அலுவலக அறையில் இருக்க, கணேஷ் அவனிடம், "சார்! தாம்பரம் பக்கத்துல அந்த லேண்டை பார்க்கணும்னு சொல்லியிருந்தீங்களே" என்றதும்,
"ஆமா ஆமா... நான் கிளம்பறேன்... "
"சார் நான்"
"இல்ல கணேஷ்.... ஷிப்பான் மெட்டிரீயல்ஸ் வந்திருக்கும்... எல்லாம் டேமேஜில்லாம இருக்கான்னு செக் பண்ண சொல்லு... அன்ட் நீயே கிட்ட இருந்து எல்லாத்தையும் சூப்பர்வைஸ் பண்ணு... டேமேஜ் பீசஸ் இருந்தா உடனே திருப்பி அனுப்பிடுங்க" என்றவன் பணிக்க, "ஒகே சார்" என்று தலையசைத்தான் கணேஷ்.
சாரதி தன் அறையை விட்டு வெளியேறியதும் வீராவின் பேசிக்கு அழைத்தான். அது அவள் கையிலிருந்து கொண்டு அலற, அப்போது அங்கே புலம்பியபடி நின்று கொண்டிருந்த அரவிந்தின் காதிலும் அந்த சத்தம் ஒலித்தது.
அவன் துணுக்குற்று சுற்றும் முற்றும் தேடலாய் பார்த்தவன் சத்தம் வந்த திசையைக் கண்டறிந்து அவள் ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான்.
வீரா தலையைக் கவிழ்ந்து பதட்டத்தில் தவறவிட்ட அவள் செல்பேசியின் உபகரணங்களை ஒன்றிணைத்துக் கொண்டிருந்தாள்.
"யார் நீங்க? கீழே குனிஞ்சு என்ன பண்ணிட்டிருக்கீங்க?" என்றவன் கேட்க,
"ஃபோனு கீழே வூந்திருச்சு... அதை எடுத்துக்கின்னு இருந்தேன்பா" என்று முகத்தைக் காண்பிக்காமலே கச்சிதமாய் அவள் ஆண் குரலில் சமாளித்துவிட , அவனும் நம்பிவிட்டு தன் காருக்குள் ஏறி அமர்ந்துகொண்டான்.
'தப்பிச்சோம்' என்று எண்ணியபடி அவள் பலமாய் பெருமூச்சுவிட்டுக் கொண்டே எழுந்திருக்க, அப்போது முன்னே சென்ற அரவிந்த் கார் அப்படியே நிற்க, அவன் இறங்கி இவளை நோக்கிதான் நடந்து வந்தான்
'இன்னாத்துக்கு இந்த அரைலூசு இப்போ திரும்பி வருது?!' என்று எண்ணிக் கொண்டவள் முகத்தை மறைத்தபடி காரைத் துடைப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்.
"சார்" என்று அரவிந்த் அழைக்க அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
'கண்டுக்கின்னு இருப்பானோ?' என்று பதட்டம் கொண்டவள் அவன் முகத்தைப் பாராமல், "இன்னா வேணும்?" என்று கேட்டாள்.
"இந்த அட்ரெசுக்கு வழி தெரியல... கொஞ்சம் வழி சொல்ல முடியுமா?"
"எனக்கு எந்த வழியும் தெரியாது... வேற யாராச்சையும் கேளுப்பா"
"டிரைவரா இருக்கீங்க... உங்களுக்குப் போய் தெரியலயா?"
"நான் வேலைக்கு புதுசுபா... நீ போய் வேற யாரையாச்சும் கேளு"
"கொஞ்சம் ட்ரை பண்ணுங்க... உங்களுக்குத் தெரிஞ்சு கூட இருக்கலாம்" என்றவன் கேட்க,
'இன்னாத்துக்கு இவன் இப்படி நம்மகிட்ட ரப்சர் பண்ணின்னுகீறான்' என்று எண்ணிகொண்டே,
"எனக்கு தெரியாதுன்னா தெரியாது... போப்பா" என்று காட்டமாய் பதிலளித்துவிட்டாள். இத்தனை சம்பாஷணையிலும் அவனிடம் முகத்தைக் காட்டாமல் அவள் தப்பித்துக் கொண்டிருக்க,
"அட்ரஸ் தெரியாது சரி... வீரமாக்காளியவாச்சும் தெரியுமா? பொன்னியம்மன் கோவில் தெரு வியாசர்பாடி" என்றதும் அவள் முகம் இருளடர்ந்து போனது.
அரவிந்த் காரில் ஏறி அமர்ந்து காரை ஓட்டிக் கொண்டு செல்லும் போதே பின்னோடு நின்றவளை, வலதுபக்க கண்ணாடியில் பார்த்துவிட்டான். அப்போதே அவளை அடையாளம் கண்டுகொண்டும் விட்டான். அவன் மறக்கக் கூடிய முகமா அது! அவளை முதல்முதலாய் அப்படிதானே பார்த்தான்.
வீரா தவிப்போடு அவனைப் பார்க்காமல் நிற்க, "ஏ வீரா! நீயா திரும்புறியா இல்ல நானா உன் வேஷத்தைக் கலைக்கவா?!" என்றவன் கண்டிப்பாய் சொல்ல, அவளுக்குப் பதட்டமானது.
அவள் எப்படி இவனிடமிருந்து தப்பிக் கொள்வது என்று யோசிக்கும் போதே அவளை வலுக்கட்டாயமாய் திருப்பி அவள் முகத்தில் ஒட்டியிருந்த மீசையை அவன் பிரித்து எடுத்துவிட, "யோவ் அதை கொடுய்யா" என்று தன் கரத்தை வீசினாள்.
அவன் விலகி நின்று, "எதுக்குடி இந்த வேஷம்? இங்க என்ன பண்ணிட்டிருக்க?" என்று கேட்க,
"என்னவோ பண்றேன்? உனக்கு என்னயா? உன் வேலையை பார்த்துக்கின்னு போ" என்று சொல்லி அவன் கையிலிருந்த ஓட்டு மீசையை அவள் பறிக்க எத்தனிக்க அவன் அதனைத் தராமல்,
"அன்னைக்கு உன் ஃப்ரண்ட்செல்லாம் கூப்பிட்டு வைச்சு என்னை நீ எப்படி அசிங்கப்படுத்துன" என்றவன் ஆவேசமாய் கேட்க அவள் வெலவெலத்துப் போனாள்.
அவனிடம் தனியாய் வந்து இப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோமே என்றவள் பதட்டமடைந்து சுற்றும் முற்றும் பார்க்க யாருடைய நடமாட்டமும் இல்லாமல் அந்த இடமே வெறிச்சோடியிருந்தது.
அவள் அச்சத்தில் நிற்பதைப் பார்த்தவன் சிறுநகையோடு, "இப்ப வேணா விசிலடிச்சு காட்டட்டுமா?" என்று அவளிடம் எகத்தாளமாய் கேட்டான்.
"புரிஞ்சுக்கோயா! அன்னைக்கு நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... அவனுங்கதான் லூசாட்டம் உன்னை அப்படி கலாய்ச்சுவுட்டானுங்க"
"அப்போ உனக்கும் அன்னைக்கு நடந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என்றவன் அவளைக் கூர்ந்து பார்த்து கேட்க,
"சத்தியமா இல்ல.. நான் உன்கிட்ட பேசிப் புரிய வைக்கதான்யா சொன்னேன்" என்றாள்.
"ஏன்? என்னைக் காதலிச்சா நீ என்ன குறைஞ்சு போயிடுவியா... அப்படி என்னடி திமிரு உனக்கு?"
அவனிடம் இப்போது எது பேசினாலும் பிரச்சனை என்று உணர்ந்தவள், "ப்ளீஸ் மீசையை கொடுத்திருய்யா" என்று அவனிடம் கெஞ்ச,
"கொடுக்குறேன்... எதுக்கு இந்த வேஷம்? அதை சொல்லு முதல்ல" என்று அழுத்தமாய் கேட்டான்.
அவள் நெற்றியை தேய்த்துக் கொண்டு, "உனக்கு எப்படியா சொல்லி புரிய வைப்பேன்... நான் டிரைவரா வேலை பார்க்கிறேன்" என்றாள்.
"டிரைவராவா?!" அதிர்ந்தவன் அடுத்த நொடியே நக்கலாய் சிரித்து,
"உனக்கு போய் எந்த கூமுட்டை டி டிரைவர் வேலை கொடுத்தான்... அதுவும் ஆம்பள வேஷத்துல... சரியான லூசு கேணயா இருப்பான் போல" என்க,
"அதல்லாம் உனக்குத் தேவையில்ல... நீ என் மீசையைக் கொடு" என்றாள் கோபமாக!
அவளை ஏறஇறங்க பார்வையால் அளவெடுத்தவன், பின் தன் கரத்திலிருந்த மீசையை அவளிடம் நீட்ட அவள் அதை ஆர்வமாய் வாங்க முற்பட்ட சமயம்,
எதிர்பாராவிதமாய் அவள் கரத்திலிருந்த ஃபோனை அவன் பறித்துக் கொள்ள, "யோவ்" என்று கத்தினாள். அவனிடம் இருந்து அவள் அதனைப் பறிக்க முற்பட அவனோ அவள் பேசியின் மூலமாய் தன் பேசிக்கு அழைப்பு விடுத்துவிட்டு அவள் பேசியைத் திருப்பி தந்தான்.
"எதுக்குய்யா என் ஃபோன்ல இருந்து உன் ஃபோனுக்கு கால் போட்ட, லூசாய்யா நீ"
"இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல டார்லிங்... ஒரே ஒரு ஃபோன் பண்ணி... என்னை லவ் பண்றேன் சொல்லு... சொடக்கு போடுற நேரத்துல உன் வாழ்கைய நான் மாத்திக் காட்டுறேன்" என்று சொல்லிக் கொண்டே முன்னேறி நடந்தவன்,
"மறக்காம ஃபோன் பண்ணு வீராமாக்காளி" என்று காரில் ஏறிய பின்னும் சத்தமாய் சொல்லிவிட்டு அகன்றான்.
"சரியான லூசு பைத்தியம்" என்று தலையிலடித்துக் கொண்டவள் கரத்திலிருந்த மீசையை கார் கண்ணாடியைப் பார்த்து சரிபார்த்து ஒட்டிக் கொண்டிருக்கும் போதே,
"வீரா" என்று சாரதி அழைக்க அவள் படபடப்போடு திரும்பினாள்.
"காரை எடு கிளம்பணும்"
'இவன் எப்போ வந்து தொலைச்சான்... அந்த லூசு பேசுனதெல்லாம் கேட்டிருப்பானோ?!' என்று எண்ணிக் கொண்டே அவள் கார் கதவை திறந்து உள்ளே ஏற,
"ஏன் ஃபோன் பண்ணா எடுக்கல?" என்றான் சாரதி காரில் அமர்ந்தபடி!
"அது..... சாரி சார்...நீங்க ஃபோன் பண்ணும் போது தெரியாம ஃபோன் கை தவறி விழுந்துடுச்சு" என்றாள்.
"ஆமா! நீ ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?" என்றவன் கேட்க,
"அப்படி அல்லாம் இல்லையே சார்" என்று சொல்லும் போதே அவளுக்கு உள்ளூர உதறலெடுத்துக் கொண்டிருந்தது.
"சரி, தாம்பரத்துல ஒரு லேண்ட் பார்க்கணும்... நீ ஹைவேஸ்ல போயிடு... சீக்கிரம் போயிடலாம்" என்க, நேரம் கடந்து செல்ல அவள் பதட்டம் குறைந்து மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாள்.
சாரதி தாம்பரத்தில் இடம் பார்ப்பதாகச் சென்றவன் மதியம் முடிந்து மாலை நேரத்தில்தான் வந்தடைந்தான். அதற்குள் அவள் ஓர் குட்டித்தூக்கமே போட்டிருந்தாள்.
அவன் வந்த பின்னே அலறித் துடித்து எழுந்து கொண்டவள், "போலாமா சார்?!" என்று கேட்க,
"போலாம்... ஆனா சாவி கொடு" என்றான்.
"ஏன் சார்?" அவள் அதிர்ச்சியோடு வினவ,
"போற இடம் கொஞ்சம் புதுசு... உனக்கு வழி தெரியாது... நான் டிரைவ் பண்றேன்" என்று சாதாரணமாகவே தெரிவித்துவிட்டு "சாவி" என்று கரத்தை நீட்டினான்.
"நீங்க ரூட் சொல்லுங்க சார்... நான் போறேன்" என்றவள் தயங்க,
"உனக்கு ரூட் சொல்லிட்டிருக்க எல்லாம் எனக்குப் பொறுமை இல்ல... சாவி கொடுத்துட்டு போய் உட்காரு" என்றான்.
அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்பது புரிந்து அவள் சாவியைக் கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து கொள்ள,
கார் அவனின் இயக்கத்தில் எடுத்து எடுப்பிலேயே கொஞ்சம் அபரிமிதமான வேகத்தில் செல்ல, அவள் இதயதுடிப்பு சரமாரியாய் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
நிமிடங்கள் மணிதுளிகளாய் மாற கார் தன் வேகத்தைக் குறைத்து கொண்டு ஓர் வீட்டிற்குள் நுழைய, செக்யூரிட்டி வேகவேகமாய் வந்து கதவைத் திறந்தான்.
அவன் காரை நிறுத்திவிட்டு, "இறங்கு" என்க,
"யார் பங்களா சார் இது?" என்று கேட்டுக் கொண்டே வண்ணமயமாய் ஒற்றை மாடியோடு இருந்த அந்த மினி சைஸ் பங்களாவை நோட்டமிட்டாள்.
"சாரதீஸ்" என்றவன் சொல்லிக் கொண்டே முன்னேறி நடக்க,
அவள் கார் அருகில் அப்படியே நின்று கொண்டாள்.
அவள் தன்னுடன் வராததைக் கவனித்து, "வீரா வா" என்றவன் அழைக்க,
"எதுக்கு சார்? நான் இங்கேயே நிக்கிறேனே" என்றாள்.
"ம்ச் வா... ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்றவன் அழுத்தமாய் சொல்ல, அவள் மனதிற்கு நடப்பதொன்றும் சரியாய் படவில்லை.
‘வீரா ஆல் இஸ் வெல் சொல்லு...ஆல் இஸ் வெல்...ஆல் இஸ் வெல்’ என்று திரும்பத் திரும்ப சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொண்டபடி அவன் பின்னோடு நடக்க,
"இந்த வீடு எதுக்கு தெரியுமா?!" என்று திரும்பி அவளைப் பார்த்தபடி கேட்டான்.
"அதானே! இன்னாத்துக்கு சார்?"
"பெரிய பெரிய டீலிங், ப்ரொஜக்ட்ஸெல்லாம் அப்ரூவல் வாங்கணும்னா... கவர்மென்ட் ஆபீஸர்ஸ் மினிஸ்டர்ஸ்னு எல்லோர்க்கும் தேவையானதைக் கொடுக்கணுமே... அந்த மாதிரி டீலிங்கெல்லாம் இங்கதான்... எல்லோருக்கும் அவங்க அவங்களோட தேவை... சிலருக்கு பணம் சிலருக்கு பொருள் சிலருக்கு பொண்ணுங்க... உன் ஸ்லெங்கில சொல்லணும்னா நல்ல ஷோக்கான ஃபிகருங்க" என்று இயல்பாய் சொல்லிக் கொண்டே அவன் படியேறி செல்ல,
'அடப்பாவி டேய்!' என்றெண்ணியவள் விக்கித்துப் போய் சிலையாய் நின்றுவிட்டாள்.
"என்ன நிக்கிற வா" என்றவன் மேலே ஏறிவிட்டு அவள் நிற்பதைப் பார்த்து அழைக்க, "ஏதோ வேலைன்னு சொன்னிங்களே சார்... இன்னா வேலை?" என்று சற்று நடுக்கத்தோடே கேட்டாள்.
"இன்னா வேலை கொடுத்தாலும் நீ அசால்ட்டு பண்ணிட மாட்ட... செம தில்லு பார்ட்டியாச்சே" முறுவலித்தான் சாரதி.
'இவன் பேசுறதில ஏதோ உள்குத்து இருக்க மாதிரியே இருக்கே... வீரா அலர்ட்டா இருந்துக்கோ' என்றவள் சொல்லிக் கொண்டே நடக்க,
அவனோ, “இதான் என் பர்சனல் பெட் ரூம்... நான் மட்டும்தான் இதை யூஸ் பண்ணுவேன் ரேரா” என்று சொல்லி அறைக்குள் நுழைந்தான்.
அவள் அறையின் வெளியே ஒதுங்கி நிற்க, அவளை கடுப்பாகிப் பார்த்தவன், “ஏன் அங்க அங்க ஸ்ட்ரக்காகி நிக்கிற... வா... உன் வேலையே இங்கதான்” என்றான்.
“இன்னா சார் வேலை... எதாச்சும் சுத்தம் செய்ற மாதரியா?” என்று வெளியேவே தயங்கி நின்று கேட்டாள்.
“அதுகெல்லாம் இங்க ஆள் இருக்கு... நீ உள்ளே வா” என்றவன் அழுத்தமாகவும் மிரட்டலாகவும் சொல்ல, ‘இவன் கூட படா பேஜாரா போச்சே’ என்று எண்ணியபடி அந்த அறைக்குள் அச்ச உணர்வோடு காலெடுத்து வைத்தாள்.
சாரதி அந்த அறைக் கதவை தள்ளிவிட அதுவே சென்று படாரென்று மூடிக் கொண்டது. அவள் பதட்டத்தோடு திரும்பிப் பார்க்க,
“அது ஆட்டோமெடிக் டோர்... அப்படிதான்” என்றான்.
அவள் தேகமெல்லாம் சில்லிட்டுப் போனது.
“சார் இப்பவே லேட்டாயிடுச்சு... எப்போ கிளம்புறது”
“நீ ஓகே சொன்னதும் வேலையே முடிச்சிட்டு உடனே கிளம்பிடலாம்” என்றபடி சோபாவில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
“நான் ஓகே சொல்லணுமா... இன்னாத்துக்கு சார்”
“ப்ச்... புரியாத மாதிரியே கேட்குறியே” என்றவன் விஷமமாய் புன்னகைக்க , “இன்னா சொல்ல வரீங்கன்னு சத்தியமா புரியல சார்” என்றாள் படபடப்போடு!
அவன் சிகரெட்டை புகைத்துக் கொண்டு, “ஹ்ம்ம்... வீரமாகாளிக்கு எப்படி சொன்ன புரியும்னு சொல்லு... அப்படி சொல்றேன்” என்றவன் சோபாவில் சௌகரியமாய் அமர்ந்து கொண்டு கல்மிஷமாய் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி அவள் இதயம் வெளியே எம்பி குதித்துவிடுமோ என்பது போல் துடிக்க ஆரம்பித்தது.
இல்லை! குதித்தேவிட்டது. அப்படிதான் இருந்தது அதன் துடிப்பின் வேகமும் ஆவேசமும்!
அதே நேரம் அவள் உடலின் அத்தனை புலன்கள் மூளை உட்பட... வேலை செய்ய மறுத்துவிட்டது அல்லது அதிர்ச்சியில் வேலை செய்ய மறந்துவிட்டதோ? அவள் அப்படியே அவனைப் பார்த்தபடி ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
21