You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Avalukaga avan -10

Quote

தமிழின் படிப்பும் முடிவுக்கு வந்தது. என்னவோ தெரியவில்லை மேற்கொண்டு படிக்கவோ வேலைக்குச்செல்லவோ எண்ணம் வரவில்லை அதனால் தன்னுடைய அம்மாவிற்கு ஒத்தாசையாக கொஞ்சநாள் வீட்டிலேயே இருந்தாள்.

"என்னடி சி.ஏ முடிச்சிட்டு வீட்ல இருக்க" என்று சில தோழமைகள் கேட்டாலும்

"இல்லை பா இவ்வளவு நாள் படிப்பு படிப்பு என்று வீட்ல எதையும் கவனிக்காமல் அம்மா அப்பாக்கூட பேசக்கூட நேரமில்லாமல் சுத்திட்டு இருந்தேன். கொஞ்ச நாள் போகட்டும் வேலைக்கு போய்க்கலாம்" என்று சொல்லிவிட்டு இயல்பாகவே இருந்தாள்.

இதற்கிடையில் கார்த்திக்கிற்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் வேலைக்கிடைத்தது. அந்த மகிழ்ச்சியை எப்படியேனும் தமிழிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவளை சந்திக்க முடிவுசெய்து அவளை ஒரு பூங்காவிற்கு அழைத்திருந்தான்.

"தமிழ்... எப்படி...இருக்க ஏன் ஒருமாதிரியாக டல்லா இருக்க" என்றதும்.

"ஒன்றுமில்லை கார்த்திக் நீ வந்த விஷயத்தை முதல்ல சொல்லு . என்ன விஷயம்" என்றதும்.

"இந்தா முதல்ல இந்த ஸ்வீட் எடுத்துக்க " என்று ஸ்வீட் டப்பாவை நீட்டினான் அதை வாங்கி சுவைத்தவள்.

"இப்ப சொல்லு என்ன சந்தோஷமான விஷயம்" என்றதும்.

"எனக்கு ஒரு பிரபல மருத்துவமனைல வேலை கிடைச்சிருக்கு. ரியலி ஐயம் ஸோ ஹாப்பி" என்றவனை ஏறிட்டு பார்த்தவளாய்.

"அப்படியா...ஓ" என்று சாதாரணமாக சொன்னவளை குழப்பத்துடனே பார்த்தவன்.

"என்ன தமிழ் ஆர் யு ஓகே" என்று கேட்க...ஆமாம் என்றே தலையசைத்தாள்.

"நான் நல்லா தான் இருக்கேன்" என்க.

"இல்லையே ஏதோ சரியில்லையே" என்றதும்..

"ஒன்றுமில்லை கார்த்திக். என்னை ரொம்ப நாள் கழிச்சு பார்த்தும் உன்னோட சந்தோஷம் எல்லாம் வேலை கிடைச்ச விஷயத்தில் தான் இருக்கே தவிற என்மேல இல்லையே என்றதும்"

"என்ன தமிழ் இப்படி சொல்லிட்ட "

"ஆமாம் கார்த்திக்... உன்கிட்ட நிறைய பேசணும் ஷேர் பண்ணணும் நினைச்சிட்டு வந்தேன். " என்றவளை

"சொல்லு தமிழ் " என்க...

"நான் எதையோ மிஸ் பண்றேன். நிஜமாவே நான் நானாகவே இல்லை. என்கிட்ட இருந்த எதையோ ஒன்றை இழந்துட்ட மாதிரி இருக்கு. அப்போதெல்லாம் என் மாமா மகிழை பார்க்க போனால் அவ்வளவு சந்தோஷமா இருக்கும்... கலகலனு எதையாச்சு சொல்லிட்டு சிரிச்சிட்டு இருக்கும். என் கனகவள்ளி பாட்டி பேத்தி பேத்தினு உருகும் ஆனால் இப்ப அதெல்லாம் காணமல் போயிடுச்சு...."

"ஏய் இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணுவியா விடு " என்று ஆறுதல் சொல்ல முற்பட்டபோது தடுத்தவள் இரு நான் முழுசா சொல்லி முடிச்சிடுறேன். என்று சுதாரித்து மனதில் பட்டதை எல்லாம் அவனிடம் சொல்ல முடிவெடுத்தாள்.

"கார்த்திக் உனக்கு ஒன்று தெரியுமா" என்று வினவ...

"என்ன "?

"என் மாமா அதாவது மகிழ் , என்கிட்ட சொல்லாமலையே காதலிச்சிட்டு இருந்துச்சு போலருக்கு ஆனால் அப்போ என்னால புரிஞ்சிக்க முடியல...ஆனால் அதுக்கு கல்யாணம் னு கேள்விபட்டு நான் வாழ்த்துக்கள் சொல்றப்ப அவரு முகத்தை பார்க்கணுமே என்னை எதிர்கொள்ளவே முடியல...ரொம்ப ஏக்கத்தோட என்னை எதிர்கொண்டாரு. கனகவள்ளி பாட்டிக்கு கூட என்மேல அம்புட்டு பிரியம் ....என்னை அவருக்கு கட்டிக்கொடுக்கனும்னு ஆசைப்பட்டுச்சு போல...எங்கள் அம்மா அப்பாட்ட பேசுறப்ப காதுகொடுத்து கேட்டேன்."

"புரியுது தமிழ் உன்னோட ஃபீலிங்க்ஸ் பட் இப்ப ஒன்றுமே பண்ணமுடியாது. இட்ஸ் எவ்ரித்திங் கான்" என்க...

"சொல்லப்போனால், தர்ஷா மாமாவோட வாழந்துகொண்டு இருக்கும் போது தான். எனக்கு மாமாமேல ஒருமாதிரி ....ஒருமாதிரி பொஸஸிவ் வருது . நான் மாமாவை மிஸ் பண்றேன் . " என்று கூறி முகத்தை மூடி அழத்துவங்கினாள்.

அவள் அழுகையை நிப்பாட்டியவன்.
"இங்கே பாரு தமிழு உனக்கு ஒரு புது உலகத்தை நான் காட்டவா" ?

"என்னது எனக்கு புரியல" என்றதும்.

"அது வந்து அந்த உலகத்தில் நீயும் நானும் மட்டும் தான். புதுசா என்கூட உன் லைப்பை ஸ்டார்ட் பண்ணு. வா என்கூட" என்று அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

"மாம்...மாம் இங்கே வாங்க..."

"என்ன கார்த்திக் யார் இந்த பொண்ணு"

"மாம் ஷி இஸ் மை லைப்" என்றதும் அதிர்ந்தவர்..

"வாட் யு மீன்"

"நான் இவளைத்தான் கட்டிக்க போறேன். " என்று சொல்லிவிட்டு முறைப்படி பேச அவன் பொற்றோரை அழைத்துக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றான்.

"சாரி ஆக்சுவலி எங்களுக்கே இது ஷாக்கிங்கா இருக்கு. பட் எங்கள் பையன் இதுல உறுதியாக இருக்கான்" என்றதும் இவளுடைய பெற்றோர் ஆமோதித்தனர். வேறு வழியென்ன ஒப்புக்கொண்டு தானே ஆகவேண்டும் ஏனெனில் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பியாயிற்றே இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது..

"சரிங்க எங்கள் பொண்ணை கட்டிவைக்க சம்மதம் தான். சீக்கிரமே ஒரு நல்ல முஹுர்த்தம் நாளில் திருமணம் பண்ணிடலாம்" என்றதும் நம் கதாநாயகி தமிழுக்கு சந்தோஷம் மிகுந்தது. ஏனோ தன் வாழ்க்கையை புதுபிக்க ஒருவாய்ப்பாக எண்ணினாள்.

ஆனால் திருமணத்திற்கு முன்பு ஒரே ஒரு நாள் மகிழை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றியது.. அன்று மகிழை சந்திக்க வந்தவள் அவனைக்கண்டதும்..

"மாமா எப்படியிருக்க" என்று கேட்க...

"எனக்கென்ன தர்ஷா என்னை நல்லா பாத்துக்குறா அப்றம் கவலை என்ன" என்றதுமே...

"ஆமாம் ல தர்ஷா அக்கா உன்னை நல்லா பாத்துப்பாங்கல " என்று கண்கலங்கியபடி நிற்க...

"ஏய் என்ன ஆச்சு ஏன் அழுவுற " என்று உலுக்கினான் மகிழ்.

"மாமா ஐயம் எக்ஸ்டிரீம்லி சாரி...." என்று காலில் விழப்போனவளை தடுத்தவன்.

"இந்த சாரி எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா" என்றதும்.

"தெரியல ஆனால் சொல்லணும் போல இருந்துச்சு. சரி மாமா என் கல்யாணத்துக்கு கண்டிப்பாக நீங்க தர்ஷாவை அழைச்சிட்டு வரணும் . ப்ளீஸ் என் தாய் மாமனா எப்பவுமே என்கூட இருக்கனும். இருப்பீங்களா" என்றதும்.

"தமிழு என்னடா இப்படி எல்லாம் சொல்ற . நான் எப்பவுமே உன் மாமா டா. விதி என்ன செய்றது நான் தர்ஷாவை கட்டிக்க வேண்டிய சூழ்நிலை. அதுக்காக மொத்தமா உன்னை விட்டுட்டு போயிட்டேனு அர்த்தமா? எப்பவுமே உன் பக்கத்தில் தாய்மாமனாக இருப்பன். போயிட்டு வா" என்று வழியனுப்பிவிட்டு கதறி அழுதான்.

தமிழு....தமிழு....நீ நல்லாயிருக்கனும் டா..என்று.

என்றும் தாய்மாமனாக மகிழ்.

நிறைவடைந்தது.

வணக்கம்.

You cannot copy content