You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Avalukaga avan -6

Quote

 

வகுப்பு நேரம் முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் வெளியே வர நடந்து கொண்டு இருந்தவளை பிடித்து நிறுத்திய கவிதா...

"ஓய் எங்கேடி எதுவுமே சொல்லாமல் போற.." என்க

"ஓ...நான் யாரை காதலிக்கிறேனு உனக்கு தெரியனும் அதானே"என்றாள் அதற்கு அவள் ஆமாம் என்று தலையசைக்க

"ஹாஹா நான் என் குடும்பத்தை காதலிக்கிறேன் போதுமா" என்றுரைக்க அதைக்கேட்டு கடுப்பாகியவள் கடுகடுத்தாள்..

"போடி நீயும் உன் பதிலும்" என்று முறைக்க...இம்முறை அமைதியை இழந்தவள்.

"கவி இங்கே பாரு சும்மா இதையே கேட்டுட்டு இருக்காத டென்ஷன் ஆகுது. நான் யாரையும் விரும்பல போதுமா எனக்கு என் குடும்பம் என்ன முடிவு எடுக்குதோ அதுபடி தான் செய்வேன்" என்றுரைக்க...

"சரி விடு இனி நான் கேட்கல" என்றாள் முகத்தை தொங்கப்போட்டு.

"இங்கபாரு கவி இதை தவிர நீ என்கிட்ட எதுவேணும்னாலும் கேளு பதில் சொல்றன் ஆனால் நீ கேட்குற இந்த கேள்விக்கு எனக்கு சத்தியமா பதிலே தெரியல டி." என்று அவள் தோளில் கைப்போட்டு அவளுடன் கல்லூரியிலிருந்து வெளியேறினாள்.

....

அன்று வழக்கம் போல் மகாலட்சுமி வேலை செய்துகொண்டு இருக்க திடிரென மயக்கம் ஏற்பட்டு தள்ளாடி விழ துரைசிங்கம் தாங்கி பிடித்து

"மகா என்ன ஆச்சு" என்று வினவ..

"ஓன்றுமில்லைங்க"என்று கூறிவிட்டு தன் வேலையை கவனிக்கலானாள். ஆனால் அவளால் இயல்பாக இருக்க இயலவில்லை. எனவே வேலைகள் முடித்துவிட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றாள். மருத்துவரை அணுகி பரிசோதிக்க டாக்டர் அவளுக்கு லோ சுகர் மற்றும் பி.பி. இருக்கிறது என்று மருந்துகள் எழுதி தர அதை வாங்கிக்கொண்டு நடந்து வந்தாள். வயது 45 எட்டியவள் மகாலட்சுமி.

19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டு இந்த குடும்பத்திற்கு வந்தவள். பி.ஏ பட்டதாரி ஆகவேண்டும் என்ற ஆசையை சுக்குநூறாய் ஆக்கியது திருமணம். பி.ஏ வரலாறு மீது ஆசைக்கொண்டு படிக்க எத்தனித்த போது திருமணம் முடிந்து விட்டது.

வரலாறு படிக்கிறாளாம் வரலாறு என்று மாமியார் மட்டம் தட்ட ஆரம்பிக்க அவளுடைய படிப்பு பற்றி கனவு காணுவதை நிறுத்திவிட்டாள். பிறகு வீட்டில் சும்மா தானே இருக்கிறோம் என்று தையல் பழக சென்றாள். தனக்கு தேவையான ப்ளவுஸ் எல்லாம் தானே தைத்து போட்டுக்கொள்வாள். இப்படியே நாட்கள் செல்ல தனது 23 வயதில் குமரனை பெற்றெடுத்தாள் அடுத்து நான்கு வருடங்களில் தமிழும் பிறந்துவிட வாழ்க்கை குழந்தைகளுடனே சென்றுவிட்டது. தற்போது 45 வயது ஓடி ஓடி உழைத்து அயர்ந்தாள்.

 

சீக்கிரமே தமிழுக்கு திருமணம் முடித்திட வேண்டும் இல்லையெனில் இன்னும் வயதாக ஆக எதையும் எடுத்துப்போட்டு வேலை செய்யக்கூட உடம்பில் தெம்பு இருக்காது. என்று எண்ணியவள் தமிழின் படிப்பு முடிவதற்குள் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என தீர்மானித்தாள். ஆனால் ஒருபோதும் அவளுடைய படிப்பிற்கு அவளுடைய திருமணம் தடையாக இருக்கக்கூடாது , அவளது கனவுகளை சுமக்கும் கணவனாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அதற்கு தகுந்தாற்போல் குருபலனும் தமிழுக்கு கூடி வந்தது. இதுவே சரியான நேரம் என்று பெரியவர்கள் முடிவு செய்து மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை துவங்கினாள். இது கனகவள்ளி காதுகளுக்கு எட்டினாலும் பொருட்படுத்தவில்லை.

'நீ ஆயிரம் மாப்பிள்ளை பாரு டி ஆனால் என் பேத்தி என் பையனுக்கு தான்' என்று அளவுக்கடந்த நம்பிக்கையில் மிதக்க ஆரம்பித்தார். ஆம் சில நேரத்தில் நம் நம்பிக்கையே நம்மை வாழவைக்கும். நாம் நம்பியவாறு சிலது நடக்கவும் செய்யும்.

அந்த மனதிடம் கனகவள்ளியிடம் இருந்தது. ஆனால் மகிழ் தான் துவண்டுபோய் இருந்தான்.

அன்று கல்லூரிக்கு சென்று திரும்பும்போது நேரே மகிழை சந்திக்க வந்தாள் தமிழ்.

"வா தமிழு என்ன இந்தப்பக்கம்" என்றான் எதார்த்தமாக.

"மாம்ஸ் எங்கள் வீட்ல என்னென்னமோ நடக்குது கல்யாணம் அது இதுனு உயிரை வாங்குறாங்க. இதோ இன்னைக்கு கூட யாரோ பொண்ணு பார்க்க வராங்களாம். உன் அக்கா தானே இதேல்லாம் தட்டி கேட்கமாட்டியா மாம்ஸ்.. ஏய் பாட்டி உன்னையும் தான் சொல்றன்" என்று கடிந்து கொள்ள..

"இங்கபாருத்தா...உங்கள் அம்மா மாப்பிள்ளை பாக்குறது இருக்கட்டும் உனக்கு பிடிக்கல ல அப்ப கல்யாணம் நடக்காது தைரியமா இரு. பொண்ணை பார்க்க வர மாப்பிள்ளை கிட்ட தனியாக பேசுறேனு சொல்லி மனசுல இருக்கிறதை சொல்லிடு...இஷ்டம் இல்லைனு" என்று கனகவள்ளி ஐடியா தர...

"அட ஆமாம் ல மாப்பிள்ளை கிட்ட டைரக்டா சொல்லிடுவோம்" என்றவள் இப்பதான் தெளிவு கிடைச்சிருக்கு ஐ லவ் யூ பாட்டி என்றபடி கிளம்பினாள். அன்று சாயந்தரம் பெண் பார்க்கும் சம்பரதாயம்...

"பொண்ணை பார்த்துட்டு கை நனைக்கிறோம் " என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்ல...

தமிழை அழைத்து வந்து மகாலட்சுமி நிற்க வைக்க...

"பொண்ணை எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு." என்று கூற சட்டென்று தமிழ்.

"நான் மாப்பிள்ளை கிட்ட பேசணும்" என்க இருவரும் தனியே அனுப்பப்பட்ட நிலையில் எப்படி பேச்சை துவங்குவது என்று தெரியாமல் ஆரம்பித்தாள்.

"நீங்க எங்கே வொர்க் பண்றீங்க"

"நான் ஒரு கெமிக்கல் பேக்ட்ரி மேனஜர்" என்றான் ஷர்ட் காலரை பிடித்தபடி.

"ஓ...அது சரி ஆமாம் என்ன படிச்சிருக்கீங்க" என்றாள் மீண்டும் கேள்வி எழுப்பியபடி.

"நான் எம். எஸ்ஸி கெமிஸ்ட்ரி" என்று பதிலளித்தான் பிறகு இந்த முறை அவன் கேட்க..

"ஆமாம் சி.ஏ படிக்கிறீங்களாமே அது ரொம்ப கஷ்டமாமே..ஒரு சப்ஜெக்ட் பெயில் ஆனால் எல்லாம் மொத்தமாக எழுதனுமாமே" என்று அவளை எரிச்சலூட்ட பேச...

"சரி என்ன சொல்ல வரீங்க"

"இந்த படிப்பெல்லாம் கல்யாணம் ஆகி செட் ஆகாது விட்டுடுங்க" என்றான் அசால்ட்டாக.

ஒரு ஏளனப்பார்வை பார்த்துவிட்டு

"ஹலோ மிஸ்டர்... நீங்க உங்கள் வேலையை விட்டுட்டு வேற வேலை பார்க்க சொன்னால் செய்வீங்களா.." என்று வினவ...

"அது எப்படி முடியும்" என்றான் தீர்க்கமாக..

",ஓ...அப்போ நாங்க மட்டும் எங்கள் லட்சியத்தை விட்டுட்டு உனக்கு டீ காபி பரிமாறனும் அதானே" என்றாள் விலுக்கென்று

"ஆம்பளைங்க லட்சியமும் பெண்கள் லட்சியமும் ஒன்னா" என்றான் கோபமாக..

"மிஸ்டர்... லட்சியத்துல என்ன ஆம்பளை பொம்பள..." என்க இப்படியே வாக்குவாதம் போக ஒருவழியாக பேச்சு நின்றது.

வெளியே வந்த மாப்பிள்ளை

"மா எனக்கு இந்த பொண்ணு வேண்டாமே சரியான திமிர் பிடிச்ச பொண்ணா இருக்கும் போலருக்கு" என்று கோபமாக கூறிவிட்டு நடையை கட்ட...

பெரியவர்கள் ஒன்றும் புரியாமல் யோசிக்க...ஆகமொத்தம் அந்த சம்மதம் கெட்டு போனது. சம்மதம் போனது நினைச்சு யாரும் பெரியதாக அலட்டிக்கொள்ள வில்லை ஆனால் நம் கதாநாயகிக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.

"ஏய் தமிழு மாப்பிள்ளை கிட்ட என்னடி பேசின"என்று மகாலட்சுமி வினவ நடந்தவற்றை எல்லாம் அவள் சொல்ல...

"சபாஷ் டி தங்கம்...இப்படி நான் அந்த காலத்துல பேசியிருந்தா இந்நேரம் பட்டதாரி ஆகியிருப்பேன்" என்று மகளை நினைத்து பெருமைபட...

"மா..நீ திட்டுவியோனு நினைச்சன் நீ பாராட்டிட்டு இருக்க " என்று சொல்லிவிட்டு தன் தாயிடம் புரியாமல் எதிர்நோக்க..

"இங்கபாரு தமிழு உனக்கு கல்யாணம் பண்ணணும் நினைச்சன் ஆனால் அதுக்காக உன் கனவை அழிச்சிட்டு இல்லை... உன் மனசுக்கு பிடிச்சிருந்து உன் படிப்புக்கு ஓகே சொல்ற மாப்பிள்ளை தான் நானும் தேடுறன்" என்று கண்ணீர் மல்க உரைத்த தன் தாயை கட்டியணைத்து..

"மாம் ரியலி யூ ஆர் ஸோ ஸ்வீட்" என்றாள் .

தமிழின் வாழ்க்கையில் யார் வரப்போகிறாராகள் பார்ப்போம்.

 

 

 

You cannot copy content