மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 20
Quote from monisha on April 20, 2022, 3:47 PM20
சந்திரன் வீட்டிற்கு வந்து சேர்ந்த சமயத்தில் அந்தி வான சிவப்பு மறைந்து இருள் சூழத் தொடங்கியிருந்தது.
திண்ணையில் கால்களை மடக்கிக் கொண்டு முகத்தை அதில் புதைத்தபடி அமர்ந்திருந்த மனைவியை விசித்திரமாய் பார்த்தவன், “என்னடி இப்படி உட்கார்ந்திட்டிருக்கவ? வந்து ரொம்ப நேரமாயிடுச்சா?” என்று கேட்டுக் கொண்டே கதவின் பூட்டைத் திறந்தான்..
அவன் கேள்விக்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை அசைவுமில்லை.
“என்னடி கோபமா? நீ ஒன்ற அம்மா வூட்டுக்குப் போயிருந்ததால வர நேரமாகும்னு நினைச்சேன் புள்ள” என்றவன் விளக்க, அப்போதும் அவள் இருந்தபடியேதான் இருந்தாள்.
“தமிழு” என்றவன் அழைத்து கொண்டே அவள் அருகில் அமரவும்தான் அவள் அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்திருப்பதை அறிந்தான். அழுது அழுது ஓய்ந்து போனதில் அவள் உள்ளமும் உடலும் வெகுவாகக் களைத்து போயிருந்தது. அதனை உறக்கமென்று சொல்வதை விட அது ஒருவிதமான ஆழ்ந்த அமைதி!
அத்தனை நேரம் அவள் மனதிலடித்த புயல் கொஞ்சமாக ஓய்ந்திருந்தது. தன்னைத்தானே ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“தூங்கிப் போட்டாளோ? ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டோமா?” என்று யோசித்தவன் இரு கரங்களால் அவளைக் குழந்தை போல தூக்கிக் கொண்டான். அதனை உணரந்த நொடி கண்விழித்தவள், “சந்திரா என்னை இறக்கி விடு” என்றாள்.
“அடிப்பாவி! நீ இன்னும் தூங்கலையா?” என்றவன் புன்னகை செய்த மறுகணம் கல்மிஷ பார்வையோடு அவளை இறக்கிவிட மனமில்லாமல் கழுத்து வளைவில் அவன் இதழ்களால் சரசமாட,
“உஹும்… ஏய் வுடுறா” என்றவள் தவித்தாள். ஆனால் அவளின் மறுப்புகளை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எப்போதும் இவள் இப்படி முரண்டு பிடிப்பது வழக்கம்தான் என்று அவன் லீலைகளைத் தொடர்ந்தான்.
அவள் அவன் கைகளிலிருந்து திமிறி வெளியே வர துடிக்க அவன் கரங்கள் இன்னும் பலமாக அவளை இறுகப் பற்றின.
அவளைக் கையிலேந்தியபடி வீட்டிற்குள் நுழைந்தவன் அவள் உதடுகளை அழுத்தமாகப் பிணைத்துக் கொள்ள, காமமோ காதலோ தாபமோ இதில் எந்த உணர்வுமே அவள் உணர்ச்சிகளில் பரவவில்லை.
மாறாக கோபம்! கோபம்! கோபம் மட்டும்தான்.
அவளிருந்த மனநிலைக்கு அவனது செயல் அவளை மேலும் மேலும் கொதிப்படைய செய்தது.
அவனை விட்டு விலக முடியாமல் அவன் முத்ததில் கரைந்துருக முடியாமல் அவள் தவித்த அதிமோசமானது. தன்னுடைய இத்தனை வருட கனவு மொத்தமும் பொய்யாகப் போய்விட்டதே என்ற வலி!
அந்த கனவினை அடைய எத்தனை தடங்கல்கள்!
“எஞ்சினியரிங் எல்லாம் கஷ்டம்… பேசாம வேறெதாச்சும் டிகிரி எடுத்து படிக்குற வழியைப் பாரு
பொம்பள புள்ள இம்புட்டு செலவு பண்ணி என்னத்த கிழிக்க போறவ…. எப்படி இருந்தாலும் வேற வூட்டுக்கு வாக்கப்பட போகுது” இப்படியான உறவினர்களின் அவமான பேச்சுக்கள்!
“சரியான நாட்டுப்புறம்… இதுக்கெல்லாம் யாரு இந்த காலேஜ் ல சீட்டு கொடுத்தா
மார்க் எடுத்தா மட்டும் போதுமா… இவளுக்கு எல்லாம் கேம்பஸ்ல கிடைக்கவே கிடைக்காது” என்று குத்திக் கிழித்த நண்பர்களின் அவமான பேச்சுக்கள் அனைத்தையும் முறியடித்து எத்தனையோ இரவு உறக்கங்களைத் துறந்து அயராத உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி அது!
தன்னுடைய அறிவீனத்தால் இந்த வெற்றி தற்போது ஒன்றுமே இல்லாமல் போய் விடுமோ என்று யோசிக்க யோசிக்க நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.
அவளது வேதனைகளையும் வலியையும் அவன் செய்கை இன்னும் அதிகமாகக் குத்தி கிளற, அவள் கைப் பிடிக்குள் அவள் திண்டாடினாள்.
சந்திரன் அவளை சாவகாசமாக இறக்கிவிடவும், “சை” அவனை எரிச்சலாக தன்னருகே இருந்து தள்ளிவிட்டு தரையில் சரிந்து வெடித்து அழுதாள்.
“தமிழு என்னாச்சு டி?” என்று பதட்டத்தோடு கேட்டுக் கொண்டே அவள் தோளைப் பற்றி அருகில் அமர,
“என் கிட்ட வராதே போ போ… எல்லாத்துக்கும் நீதான் காரணம்… போஓஓஓஓ” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி அவனைத் தள்ளிவிட்டாள்.
மீண்டும் அவள் தலை கவிழ்ந்தபடி அழ ஆரம்பிக்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஏய் என்னடி ஆச்சு? ஏதாச்சும் பிரச்சனையா? ஒன்ற வூட்டுல ஏதாவது சொன்னாங்களா?”
“எங்க வூட்டுல மட்டுமா பேசுறாங்க… இந்த ஊரேதான் பேசுது… என்னைய வுட சின்னவ எல்லாம் என்னைய கேவலமா பார்க்குறா… இப்ப அவங்க பேசறது எல்லாம் உண்மையாயிட போகுது… எல்லோரும் என்னைய இன்னும் அசிங்கமா பார்க்க போறாங்க” என்றவள் அழுது கொண்டே புலம்பித் தீர்த்தாள்.
“என்னடி சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல”
“உனக்கு எதுவும் புரியாது… என் வலி வேதனை எதுவும் புரியாது” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “உன்னைய யாரு என் பேரைப் பச்சகுத்திக்க சொன்னது… அப்பவே வேண்டாம் அழிச்சுப் போடுன்னு சொன்னேன் கேட்டியா நீ” என்று சொல்லி குழந்தை போல அழுதவள்,
“அந்தப் பிரச்சனையாலதானே நம்ம கண்ணாலம் பண்ணிக்க வேண்டியதா போச்சு… இல்லைன்னா நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டு போயிருப்பேன்” என்றாள்.
“இப்போ எதுக்குடி நடந்து முடிஞ்சு போன விசயத்தைப் பத்திப் பேசிட்டு இருக்கவ”
“ஆமா… முடிஞ்சு போச்சு… எல்லாம் முடிஞ்சு போச்சு… என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு… அன்னைக்கு நான் உனக்காக அப்படி ஒரு வார்த்தை சொல்லாம இருந்திருந்தா இது எதுவுமே நடந்திருக்காது… பெரிய தப்பு பண்ணிட்டேன்” அவனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை.
“தப்பு பண்ணி போட்டேன்னு எதைடி சொல்றவ?”
“எல்லாமே தப்புதான்… நான் செஞ்ச எல்லாமே தப்புதான்… இப்போ இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் சொல்லி இருக்கோணோம்… பெரிய தப்பு பண்ணிட்டேன்” அவள் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருக்க,
அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் மனதைக் கூறுப்போட்டது.
“ஓ! இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் உன்னோட பிரச்சனையா?” என்றவன் ஆவேசமாகக் கேட்க,
“என் டென்ஷன் என்னன்னு தெரியாம நீ பாட்டுக்கு ஏதாவது தப்பா புரிஞ்சிகிட்டு உளறாதே” என்றாள்.
“அப்போ என்னன்னு விளங்குற மாதிரி சொல்லு”
“எனக்கு இப்போதைக்கு குழந்தை எல்லாம் வேண்டாம்… எனக்கு வேலைக்குப் போவோனோம்… ஒரு வேளை…” என்று தயக்கமாக நிறுத்தி,
“அப்படி குழந்தை நின்னுட்டா நான் அதை பெத்துக்க மாட்டேன்… கலைச்சு போடுவேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே,
“என்னடி சொன்ன?” என்று பொங்கியவன் பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்துவிட்டான்.
பலமாக விழுந்த அறையில் அவள் கன்னங்கள் பெயர்ந்து விழுமளவுக்கு வலி எடுக்க அதிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு அவளுடைய கோபமும் பிடிவதாமோ கொஞ்சமும் இறங்கவில்லை. மாறாக அது இன்னும் அதிகரிக்க, “இப்போ எதுக்கு டா என்னைய அடிச்ச… நான் என்ன உனக்கு புள்ள பெத்து கொடுக்கவா இம்புட்டு சிரமப்பட்டுப் படிச்சேன்…
என் ஆசை கனவெல்லாம் மண்ணோடு மண்ணாக்கிப் போட்டு ஒரு வாழ்க்கையை வாழுறதுக்கு பதிலா நான் சவமா கிடந்திட்டு போவேனாக்கும்” என, அவன் விழிகள் கனலைக் கக்கின.
“இம்புட்டு வக்கனையா இப்போ பேசற இல்ல… இதை நீ முத ராத்திரில சொல்லி இருக்கோணோம்… இப்ப வந்து கலைச்சு போடுவேன் அது இதுன்னு”
“அப்போ என் மரமண்டைக்குத் தோணலயே… என்ன பண்ண சொல்ற?” என்றவள் மேலும்,
“என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ சந்திரா… ஏற்கனவே என்ற சொந்தபந்தமெல்லாம் என்னை அசிங்கப்படுத்துறாங்க… என்ற அம்மா நான் படிக்கறேன்னு சொல்லி காசெல்லாம் வீணாக்கிப் போட்டேன்னு சொல்றாவுங்க… இதுல இது வேற” என்று அவள் தலையைக் கவிழ்ந்து அழுதபடியே சொல்ல,
“என்னைய கட்டிகிட்டதாலதான் உனக்கு இம்புட்டு அவமானமும் அசிங்கமும் இல்ல” என்றவன் வேதனையோடு வினவ, அவள் ஆம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை.
அவளுக்கு அவள் பிரச்சனை. அதை தவிர வேறு எதை பற்றியும் அவள் மூளை யோசிக்கவில்லை. தன் வார்த்தைகளால் எதிரே இருப்பவனின் உணர்வுகளை உயிரோட எரித்து விட்டோம் என்று அவளுக்குப் புரியவில்லை.
சில நொடிகள் மௌனமாக கழிய அவள் விசும்பல் சத்தம் மட்டுமே ஒலித்திருந்தது.
“எல்லாம் என்ற தப்புதான் தமிழு… தகுதிக்கு மீறி நான் ஆசைப்பட்டிருக்க கூடாது… உன்னைய நான் காதலிச்சிருக்கக் கூடாது… முட்டாள் மாதிரி கிறுக்குப் புடிச்சு ஒன்ற பின்னாடி சுத்தி இருக்க கூடாது
வலிக்க வலிக்க ஒன்ற பேரை நான் என் நெஞ்சுல பச்சகுத்தியிருக்க கூடாது… அதுதான் இதுவரைக்கும் நான் செஞ்சதுலேயே பெரிய தப்பு… கொஞ்சம் கூட யோசிக்காம… பண்ணிப் போட்டேன்
ஒன்ற வாழ்க்கையை நான் அழிச்சுப் போட்டேன்” என்றபடி அவ்விடம் விட்டு அகன்றவன் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான்.
‘அவ வாழ்க்கையை நான் அழிச்சுப் போட்டேன்’ திரும்ப திரும்ப அவன் காதுகளில் இந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு செல்களிலும் ஆழமாகப் பதிவானது.
இரவு முழுக்க உறங்கவில்லை. அழவில்லை. எந்தவித உணரச்சியையும் அவன் முகம் பிரதிபலிக்கவில்லை. தன் அம்மத்தாவின் இறப்பின் போது அவனுக்குள் ஏற்பட்ட அதே வெறுமையான உணர்வு!
அவளுடன் கழித்த சந்தோஷமான நொடிகள் யாவும் ஒரு அழகான கனவு போல கலைந்துவிட, தனக்கென்று இனி யாருமே இல்லை என்று அவனுக்குள் நிர்மானிக்கப்பட்ட தனிமை உணர்வு மீண்டுமே அவனைப் பீடித்துக் கொண்டது.
எல்லைகளின்றி இன்பமயமாகப் பறந்திருந்த அவனது மனம் சிறகொடிந்த பறவை போல வீழ்ந்ததில் மனதளவில் பெரிதாக அடி வாங்கினான்.
அவளோ அழுது அழுது உறங்கிப் போக, அவனோ விடிந்தும் விடியாமல் தயாராகிவிட்டு, “சீக்கிரம் கிளம்பு… போயிட்டு வந்துடலாம்” என்றான்.
“எங்க?” என்றவள் எழுந்து அவனைப் புரியாமல் பார்க்க,
“ஆஸ்பத்திரிக்குதான்” என்றவன் சொல்ல, “என்ன விசயமா?:” என்று அவள் கேட்கவும்,
“நேத்தெல்லாம் புலம்பித் தள்ளிட்டு… இப்போ என்ன விசயம்னு கேட்குறியா?” என்றவன் அவளை முறைத்தபடி,
“முன்கூட்டியே பார்த்துட்டே… மாத்திரைலயே கலைச்சு போடலாம்ல…. அதான்” என்ற நொடி அவனை அதிர்ச்சியாக ஏறிட்டாள்.
“சீக்கிரம் புறப்பட்டு வா… வெயிலுக்கு முன்ன போயிட்டு வந்துடுவோம்” என்று அவன் திண்ணையில் போய் அமர்ந்து கொள்ள, அதன் பின் நிறைய குழப்பங்கள் யோசனைகளுக்கு இடையில் கிளம்பித் தயாராகி அவளும் அவனும் மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அவள் பயந்தது போல எதுவுமில்லை.
மருத்துவர் அவள் உடலைப் பரிசோதித்துவிட்டு மாதவிடாய் வருவதற்கான சத்து மாத்திரைகளை எழுதித் தந்திருந்தார். மாத்திரை உட்கொண்ட இரண்டு நாளில் மாதவிடாய் வந்துவிட, அவள் மனதிலிருந்து பாரம் வெகுவாக இறங்கியது.
“தேங்க்ஸ் சந்திரா… என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு” என்றவளின் நன்றியோ அல்லது அடுத்தடுத்த இயல்பாகப் பேசிய எந்த வார்த்தைக்கும் அவனிடமிருந்து பதில் வரவில்லை
அப்போதிருந்த மனநிலையில் அவனை ரொம்பவும் காயபடுத்திவிட்டோம் என்று புரிந்து அவனிடம் அவள் சமாதானமாகப் பேச முயல, “வேண்டாம்… வுட்டு போடு… அதை பத்தி திரும்பவும் பேச வேண்டாம்” என்று கண்டிப்போடு மறுத்தான்.
அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கொஞ்ச நாட்களில் அவனே சரியாகிவிடுவான் என்று அவள் எண்ணியிருக்க, அவள் எண்ணத்திற்கு நேர்மாறாக அவன் விலகல் அதிகமாகிக் கொண்டேதான் போனது.
அடுத்த ஒரு மாதம் முற்றிலுமாக அவள் விழிகளைப் பார்த்து பேசுவதையே தவிர்த்தான். அப்படியே பேசினாலும் அது வெறும் அவசியத்திற்கானதாக மட்டுமே இருக்கும். இரவுகளில் அவன் திண்ணையில் உறங்கினான்.
அவனின் அந்த விலகல் அவளை வெகுவாகப் பாதித்தது. இந்த நிலையில் பயற்சிக்காக அவள் மைசூருக்குச் செல்ல வேண்டிய அழைப்பு வந்திருந்தது.
அடுத்த மாத இறுதிக்குள் அவள் அங்கே இருந்தாக வேண்டும்.
20

Quote from Marli malkhan on May 17, 2024, 12:53 AMSuper ma
Super ma