மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 21
Quote from monisha on April 22, 2022, 11:21 AM21
பைந்தமிழ் தான் வேலைக்குப் போகும் விஷயம் உறுதியாகும் வரை ஊரில் யாருக்கும் அது பற்றித் தெரியாமல் வெகுஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டாள். சந்திரனைத் தவிர்த்து அவள் பெற்றோருக்கு கூட தெரியாது. அவள் தெரிவிக்கவில்லை.
ஆனால் சந்திரன் மட்டும், “ஒன்ற வூட்டுல வேலைக்கு சேர போற விசயத்தைச் சொல்லிப் போடு… வேற யாரு மூலமாச்சும் தெரிஞ்சா வருத்தபடுவாங்க” என்றான்.
இதை கூட அவன் அவள் முகம் பார்த்து சொல்லவில்லை. ஏதோ போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனான். அவள் கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் போகட்டும் என்பது போல்தான் இருந்தது அவன் பாவனை.
நேரடியாக அவளிடம் அவன் சண்டைக்கு நின்றிருந்தால் கூட பரவாயில்லை. ஏதோ மூன்றாமவன் போல நடந்து கொண்டதுதான் அவளுக்கு எரிச்சலைக் கிளப்பியது.
இருப்பினும் அவனிடம் இறங்கிப் போகவோ அல்லது மன்றாடவோ அவள் விரும்பவில்லை. அன்று நடந்த பிரச்சனை மட்டுமே அவன் கோபத்திற்குக் காரணமா அல்லது தான் வேலைக்குப் போவதையும் மனதில் வைத்துதான் அவன் அப்படி நடந்து கொள்கிறானோ என்ற சந்தேகம் எழுந்ததில் அவனிடம் அவளால் இறங்கிப் போக முடியவில்லை.
அவள் வேலைக்கு சேர இருந்த கடைசி வாரத்தில்தான் தன் வீட்டிற்கு அவள் தெரியப்படுத்த, “நிசமா வேலைக்குப் போறிங்களாக்கா” என்று தங்கையானவள் ஆச்சரியப்பட,
“சூப்பருங்க க்கா” என்று தம்பி குதூகலிக்க,
“தனியா போய் இருக்க போற… பார்த்து பத்திரமா இருந்துக்க கண்ணு” என்று தந்தை அக்கறையோடு அறிவுரை வழங்க,
அவள் தாய் சகுந்தலாவும் சுற்றத்தாரும்தான் அவர்கள் வேலையை எப்போதும் போல செவ்வனே செய்தனர்.
“என்னடி… கண்ணாலம் முடிஞ்சு மூணு மாசத்துல இப்படி எங்கேயோ வேலைக்குப் போறன்னு சொல்ற… இது சரியா வருமா? ஒன்ற புருஷன் ஒத்துக்கிட்டாரா?”
“ஒன்ற கண்ணால வாழ்க்கையில ஏதாச்சும் பிரச்சனை வந்துட்டா”
“ஏற்கனவே ஆம்பளைங்களுக்கு சலன புத்தி… இதுல பெஞ்சாதி வேற கூட இல்லன்னா” என்று ஆளாளுக்கு ஒன்றைப் பேசி வைக்க. அவள் கடுப்பானாள்.
இந்தக் கூட்டம் இப்படியும் பேசும். அப்படியும் பேசும் என்று தமிழ் அவர்கள் பேச்சை எல்லாம் மூளைக்குள் ஏற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அவள் தாயின் வராத்தைகள் அவள் திடமான மனதையும் கொஞ்சம் அசைத்துவிட்டது.
“அன்னைக்கு ஒன்ற புருஷன் விவசாயம்தான் பார்ப்பாங்கனு அடிச்சு சொன்ன… இப்ப நீ பாட்டுக்கு இந்த வேலைக்கு போய் நல்லா சம்பாதிச்சன்னு வை… அது ஒன்ற புருஷனோட தரத்தைக் குறைச்சு போடாதா?”
“ஏற்கனவே ஒன்ற படிப்பை வைச்சு அவங்களைத் தாழ்த்திப் பேசறாங்க… இப்போ வேலை விசயத்துலயும் பேசுனா அதை ஒன்ற வூட்டுக்காரு சாதாரணமா எடுத்துப்பாங்களா? உங்களுக்குள்ள எதாச்சும் பிரச்சனை வந்துட்டா” ஒரு தாயாக மகளின் மணவாழ்க்கையில் பிரச்சனை வந்துவிட கூடாது என்று அவர் அக்கறையாகச் சொல்ல, அது குழம்பிய குட்டையில் மேலும் கல்லை எறிவது போலதான் இருந்தது.
இப்படியெல்லாம் பேசி அவளை நன்கு குழப்பிவிட்டவர், “பெரிய இடத்துல வேலைக்குப் போற… பேசாம இந்த வாரமே தாலி பிரிச்சுக் கோத்துடுவோம்… இப்படி கயிரோட போனா நல்ல இருக்காது” என்று அடுத்த இரண்டே நாளில் தாலி பிரித்து கட்டும் சடங்கிற்கும் ஏற்பாடு செய்ய அதன் ஏற்பாடுகளில் மற்ற இரண்டு நாட்களும் பரபரப்பாய் ஓடிவிட்டன.
ஆனால் அவள் மனம் அவர்கள் ஏற்படுத்திய குழப்பத்திலிருந்து மீளவில்லை. ஏற்கனவே இருவருக்குள்ளும் உடலாலும் மனதாலும் பெரிய இடைவெளி உண்டாகியிருந்த நிலையில் இந்த நீண்ட பிரிவு அவர்கள் உறவை கேள்விக்குறியாக்கிவிட்டால்…?
இப்படியாக யோசித்துக் குழம்பியவள், புறப்படுவதற்கு முன்னதாக அவனை சமாதானம் செய்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தாள்.
அவள் மைசூர் செல்ல நான்கே நாட்கள்தான் இருந்தன. அன்று பொழுது புலர்ந்ததும் விடியலில் அவனிடம் பேசிவிட எண்ணி அவனுக்கு தேநீர் கலந்து கொடுக்க அவன் அதனை அவள் முகம் பார்க்காமல் கூட வாங்கிப் பருகிவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டான்.
மீண்டும் அவன் வீட்டுக்கு வந்ததும் பேசலாம் என்று பார்த்தால் காலில் சக்கரத்தைக் கட்டியதைப் போல அப்படியும் இப்படியுமாக ஓடிவிட்டு குளியலறைக்குள் புகுந்துவிட்டான்.
அவளுக்கு எரிச்சலாக வந்தது. முகம் பார்த்து பேசக் கூட முடியாதளவுக்கு தான் அப்படியென்ன செய்துவிட்டோம் என்று கோபம் கோபமாக வந்தது.
அந்தக் கோபத்தை யாரிடமாவது கொட்ட வேண்டுமே என்று பின்கட்டில் அமர்ந்து காளையனிடம் ஏறிக் கொண்டிருந்தாள்.
“ஒன்ற அண்ணனுக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பா? எதுக்கு இப்போ ஓவரா பண்ணிட்டு இருக்கான்
நான் இறங்கி இறங்கிப் போனா அவன் ஏறி ஏறிப் போவானாமா?
வரட்டும்… குளிக்கத்தானே போயிருக்கான்… ஒன்ற நொண்ணனை ஒரு வழி பண்றேன்”
இதெல்லாம் காளையனிடம் மட்டும் சொன்னதல்ல. குளிக்கச் சென்ற சந்திரனின் காதில் விழ வேண்டுமென்பதற்காகக் கத்திக் கத்திச் சொன்னது.
பாவம்! காளையன் பரிதாபமாக விழிக்க சந்திரன் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற ரீதியில் குளித்து முடித்து வேட்டியைக் கட்டிக் கொண்டு துண்டால் தலையைத் துவட்டியபடி அவளைக் கண்டும்காணாமல் உள்ளே செல்ல பார்க்க,
“என்னங்க மிஸ்டர். எம்.சி.ஆர்… நான் சொன்னதெல்லாம் உங்க காதுல விழவே இல்லைல” என்று கேட்டபடி அவன் முன்னே வந்து வழிமறித்து நின்றாள்.
“என்ன பேசுன?” என்று சுவரை வெறித்தபடிக் கேட்டவனை எரிச்சலாகப் பார்த்தவள்,
“ஏன்? என்ற முகத்தைக் பார்த்து பேச மாட்டீரோ?” என்று வம்படியாக அவன் பார்வைக்கு முன்னே போய் நின்றாள்.
“ப்ச்… தேவையில்லாம என்னை வம்பிழுக்காதே… நான் போவோணோம்… வேலை இருக்கு” என்றவன் கடந்து செல்ல பார்க்க,
அவன் கரத்தைப் பிடித்து நிறுத்தி, “இப்போ உன்னோட பிரச்சனை என்ன? நான் வேலைக்குப் போறதா?” என்று கேட்டவள் மேலும்,
“ஒரு வேளை இங்கனயே இருந்து உனக்கு ஆக்கிப் போட்டு… புள்ள பெத்து போடோனோம்னு எதிர்பார்குறியோ?” என்று கேட்டதில் அவன் உள்ளம் கொதிகலனாக மாறியது.
“நான் அப்படி சொன்னேனாடி உன்கிட்ட”
“ஒன்ற மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்குடா… அதான் நீ இப்படி நடந்துக்குற”
“நீயா ஒன்ற இஷ்டத்துக்கு எதையாவது நினைச்சுக்கிட்டுப் பேசாதே”
“அப்போ ஒன்ற மனசுல என்னதான் இருக்கு அதையாச்சும் சொல்லித் தொலை”
“சில விசயத்தை எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது… அது உனக்கா புரியணும்டி… ஆனா உனக்கு புரியாது…. அதனால இதை இப்படியே வுட்டு போடு”
“எதை வுடோணோம்னு சொல்ற… இந்தப் பிரச்சனையவா… இல்ல நம்ம உறவையவா?”
“உனக்கு எது விருப்பமோ அதை வுட்டு போடு”
“அப்போ இந்த உறவு விட்டாலும் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல?” என்றவள் மேலும்,
“அதுக்கு எதுக்குடா… என்ற கழுத்துல தாலி கட்டின?” என்று ஆவேசமாகக் கத்தினாள்.
அவளை அலட்சியமாகப் பார்த்தவன், “வயத்துல புள்ளை நின்னா … சாதாரணமா கலைச்சு போடலாம்னு சொன்னவதானேடி நீ… இதுல நான் ஒன்ற கழுத்துல கட்டியிருக்கிறது வெறும் கயிறுதானே… அதை கழட்டிப் போடவா உனக்கு சிரமமா இருக்க போகுது” என்று வெகுசாதாரணமாகச் சொல்ல,
“கழட்டிப் போடவா என்னடா பேசற நீ?” அவள் உச்சமாய் அதிர்ந்தாள்.
அவள் வார்த்தைகளால் காயப்பட்டதன் விளைவு! அதுவும் அவள் மீண்டும் அவனது ஆழமான காயங்களைக் குத்திக் கிளற, யோசிக்காமல் அவனுமே சரமாரியாய் வார்த்தைகளை வீசிவிட்டான்.
அவன் இப்படி தன் வார்த்தைகளை வைத்தே தன்னைக் குத்திக் கிழிப்பான் என்று பெண்ணவள் எதிர்பார்க்கவே இல்லை. அன்று அவன் அடித்த அடியை விட இந்த வார்த்தைகள் அவளை ரொம்பவும் காயப்படுத்தியது.
விழிகளில் நீர் தாரைத் தாரையாய் கொட்டியபடி அவள் நிற்க, அவளது கண்ணீரைப் பார்த்து பரிதாபப்படும் மனநிலையில் எல்லாம் அவன் இல்லை. அன்று அவள் மட்டும் தன் மீது பரிதாபப்பட்டாளா என்ன என்றுதான் தோன்றியது அவனுக்கு!
“தாலியைக் கழட்டிப் போடுன்னு சொன்னதுக்கு உனக்கு வலிக்குது இல்ல… அதேபோலதான்டி எனக்கும் வலிச்சுது… என்ற நெஞ்சில சுமந்திட்டு இருக்க ஒன்ற பெயரை அழிச்சுப் போடுன்னு சொன்ன போது
ஆனா சத்தியமா… ஒன்ற வாழ்க்கையைக் கெடுக்கோணோம்னோ இல்ல உன்னைய அசிங்கப்படுத்தோணோம்னு நான் இதை குத்திக்கல… உன்னைய உயிரா நேசிச்சாதாலதான் குத்திகிட்டேன்… நீதான் வேணும்னு ஒரு நப்பாசையில குத்திக்கிட்டேன்
ஆனா நீ இப்படி என்னால அவமானப்பட்டு நிப்பன்னு தெரிஞ்சிருந்தா அப்பவே அழிச்சுத் தொலைச்சிருப்பேன்டி” என்றவன் குரல் உடைய, அவள் அவன் வார்த்தைகளில் பேச்சற்று நின்றுவிட்டாள்.
“என்னைய கட்டினதால நீ அசிங்கப்படுறதையும் அவமானப்படுறதையும் என்னால தாங்கிக்கவே முடியல…
என்னைக்கு என்னைய கட்டினதுக்காக நீ பெருமை படுறியோ அன்னைக்கு நம்ம இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழலாம்… அதுவரைக்கும் என்ற விரல் கூட உன் மேல படாது” என்றவன் அதற்கு மேலும் அந்தப் பிரச்சனையை வளர்க்க விரும்பாமல் மேற்சட்டையை எடுத்து அணிந்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அவன் கடைசியாகச் சொன்னவற்றைக் கேட்டவளுக்கு அவன் பிடிவாதத்தை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. அவனின் இந்த வைராக்கியம்தான் அவளை அவனிடம் ஈர்த்தது.
அவன் நிச்சயம் சொன்னதை செய்துவிடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதுவே அவளின் மனவருத்தத்தைப் போக்கியிருந்தது.
அடுத்த சில நாட்களில் அந்த இளம்தம்பதிகளின் பாதைகள் வெவ்வேறு திசைகளில் திரும்பியிருந்தன
21

Quote from Marli malkhan on May 17, 2024, 12:57 AMSuper ma
Super ma