You don't have javascript enabled
Bhagya novelsRomantic comedyRomantic thriller

Kavalum kadhalum- prefinal

12

உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே..

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உன் கைகள் கோர்க்கும் ஒரு நொடி

என் கண்கள் ஓரம் நீர் துளி….

என்னமோ தெரியல கர்ப்பம் ஆனது ல இருந்து இந்த பாட்டு கேட்டாலே மனசு என்னமோ பன்னுது…என்று ஆதியின் தோளில் சாய்ந்தபடி அவள் சொல்ல அவளின் கூந்தலை வருடியவாறு,

 “ஆனந்தி இந்த மாதிரி நேரத்தில் நீ எமோஷனல் ரொம்ப ஆககூடாது, முன்பு எப்படி இருந்தியோ அப்படியே இரு. இங்க பாரு மத்த ஆம்பளைங்க மாதிரி புள்ள தான் முக்கியம் னு சொல்ல மாட்டேன் முதல்ல எனக்கு நீ தான் முக்கியம், உன் மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருக்கனும் புரியுதா போ…போய் ரெஸ்ட் எடு.”

வித்யா – “அண்ணி நிச்சயதார்த்தம் புடவை வாங்குறதுக்கு கார்த்திக் வீட்டில் இருந்து போன் வந்தது ,ரெடி ஆகுங்க எல்லாரும்”.

ஆதி – “ஆனந்தி மட்டும் வீட்டில் இருக்கட்டும் வித்யா தி.நகர் வந்தா அசதி ஆயிடுவா இப்ப இருக்கிற நிலமைல”.

“அண்ணா….கார் ல தானே ப்ளீஸ் வரட்டும் அண்ணியும்”

“ஏங்க அவ சொல்றது சரி தான் நானும் வரேன்… கையில் தண்ணீரும் மெடிசன் எல்லாம் கைல எடுத்துக்குறேன்”

“நீ சமாளிப்ப னா எனக்கு ஓகே டி..சரி ரெடி ஆகுங்க நான் போய் அதுக்குள்ள ஒரு தம் அடிச்சிட்டு வரேன்”

“டேய் அண்ணா… என்ன பழக்கம் டா இது?”

“ரொம்ப கொந்தளிக்காத தங்கச்சி மா…உங்க சார் க்கும் தம் அடிக்கிற பழக்கம் இருக்கு… இன்பேக்ட் நானும் கார்த்திக்கும் தம் ப்ரண்டுஸ் னு கூட சொல்லலாம்”

“ச்சி…ச்சி என் ஆளு அப்படி இல்லை ப்ரோ….நீ தப்பா சொல்லாத”

ஆனந்தி – “ஏங்க விடுங்க….இதெல்லாம் ஒரு டாபிக் னு அண்ணணும் தங்கச்சியும் ஆர்க்யூ பன்றீங்க”

“அண்ணி நீங்க அண்ணணுக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க

“ஹாஹா… அப்படி இல்லமா குழந்தை பொறக்கட்டும் வச்சிக்கிறேன் கச்சேரி.”

“அடிபாவி பெருசா எதாவது ஆப்பு வச்சிருக்க போல”

அறையை விட்டு வெளியே சென்ற வித்யா தன் வருங்கால கணவன் கார்த்திக் க்கு போன் செய்தாள். “என்னங்க…. எனக்கு ஒரு டவுட்”

“சொல்லு டி தங்கம் என்ன டவுட்? ,நான் ஏன் பொறந்த னு கேக்க போறியா?”

“ஐயோ அது இல்லை…. நீங்க….நீங்க” என்றிழுக்க

“சொல்லு”

“தம்மு….அடிப்பிங்களா?” என்று தயங்கியவாரே கேட்க,

“எந்த  பயபுள்ள சொன்னது?” குறும்புத்தனத்துடன் கேட்க

“எங்க அண்ணன் தான். உங்களுக்கு இல்லை தானே பழக்கம்?”

“உங்க அண்ணன் தப்பா சொல்லியிருக்காரு மா…ச்ச…டூ ..பேட்”

“அதானே எனக்கு தெரியும் உங்களை பத்தி”

“ம்ம்ம்… அதானே நான் தம்மு மட்டும் இல்லை லைட்டா வோட்காவும் குடிப்பேனு உனக்கு எப்படி தெரியும்?”

“வோட்கா வா? அது என்ன?”

“ம்ம்ம் அது எங்க வீட்டு பக்கத்து வீட்டு அக்கா டி தங்கம்”

“என்னங்க சொல்றீங்க?”

“ஐயோ….அடியேய் வருங்கால பொண்டாட்டி சாவடிக்காத டி…விடு டி ப்ளீஸ் நான் இப்ப கிளினிக் ல இருக்கேன்”

“ஓ….அப்போ நீங்க ஜவுளிக்கடை க்கு வரலையா?”

“வரேன்…வரேன் கொஞ்சம் லேட் ஆகும் இங்க ஒரு பெராலிஸஸ் பேஷன்ட பாத்துட்டு இருக்கேன்”

“எப்ப பாரு இதே சொல்லுங்க..”.

“ஏய் அவருக்கு பெராலிஸஸ் னா நான் என்ன டி பண்றது…அவருக்கு கை கால் நீவி விடுறேன் பிஸியோதெரபி ட்ரீட்மெண்ட்” என்று அவன் சலித்துகொள்ள,

“சீக்கிரம் வாங்க நீங்க வந்து தான் புடவை செலக்ட் பன்னனும்.”

“செலக்ட் பன்றது மட்டும் இல்லாமல் பில் பே பன்ன போறதும் நான் தான் கண்டிப்பாக வருவேன் டி..நம்பு டி.” என்று நக்கலடிக்க

“சரி சரி…வரும்போது அந்த ப்ளூ ஷர்ட் போட்டு வாங்க ஏனெனில் நானும் ப்ளூ சுடிதார் போட்டுறுக்கேன்.”

“ப்ப்பா…. இந்த பொன்னுங்க எப்ப தான் இந்த பழக்கத்தை விட போறிங்களோ…சரி சரி போடுறேன் தாயே  போன் வை.”

அந்த பெராலிஸஸ் பேஷண்ட் க்கு சிகிச்சை அளித்துவிட்டு கூட வந்திருந்த பெண்ணிடம் “மா இந்த ஆயில் தினமும் தடவுங்க அவருக்கு அப்புறம் ஏதாவது அவசரம் னா கூட்டிட்டு வாங்க”

“சரிங்க சார”

“மேடம் உங்களை பார்த்தா சின்ன பொண்ணா தெரியுது …இவரு யாரு உங்களுக்கு?”

“என்…பு…ருஷன் சார்.”

அனைவரும் புடவை எடுக்க தயாரானார்கள்.

“அண்ணி…நீங்க அண்ணனோட முன்னாடி உட்கார்ந்துகோங்க நானும் அம்மாவும் பின்னாடி உட்காருவோம்.”

“இல்லை வித்யா முன்னாடி வேணாம் உங்க அம்மா உட்காரட்டும் அம்மாவும் புள்ளையும் பணம் விஷயம் எதாவது பேசிட்டு வருவாங்க ,கல்யாண செலவு பற்றி எதாவது… நம்ப இரண்டு பேரும் பின்னாடி உக்காரலாம்.”

“சரிங்க அண்ணி மெதுவா ஏறுங்க…தண்ணீர் பாட்டில் தாங்க நான் வச்சிக்கிறேன்.” 

ஒருவழியாக காரில் ஏறி, காரை கிளப்பினான் ஆதி. கார் கிளம்பிய சிறிது நேரத்திற்கு பிறகு, “ஆ…ஆ..ம்மா னு தன் வயிற்றை பிடித்து அழ துவங்கினாள் ஆனந்தி.

 “அண்ணி என்ன ஆச்சு”???ஏய் ஆனந்தி என்னடி ஆச்சு,ஆனந்தி செல்லம் என்னடா பன்னுது” என்று காமட்சி ஒருபக்கம் கேட்க யாரிடமும் பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள். 

காமாட்சி – “டேய் ஆதி பயமா இருக்கு டா முதல்ல கார் போர வழியில் ஒரு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நிறுத்து. செக் பன்னிக்கலாம்.”

“சரி மா பதறாத…பார்த்துக்கலாம். என்றபடி ட்ரைவர் சீட்டில் இருந்து இறங்கியவன் தன்னவளின் பக்கத்தில் அமர்ந்து அவளை தன் தோளில் சாய்த்தவாறு” ஆனந்தி என்ன பன்னுது சொல்லு மா எனக்கு பயமா இருக்கு…

“என்னங்க… என..க்கு பிளிடிங் ஆகுற மாதிரி இருக்குங்க…பயமா இருக்குங்க.” என்று அவன் காதில் ஓதியவாறு அழ துவங்கினாள். 

“ஒன்னுல ஆஸ்பத்திரியில் ஒரு ஸ்கேன் பன்னிக்கலாம் ஓகேவா… பயப்படாத நான் இருக்கேன் ..ஒன்னும் ஆகாது . உள்ள வளரது போலிஸ்காரன் புள்ள டி தங்கம், எதுக்கும் துணிஞ்சவனா தான் இருப்பான்.” என்று அவளை சமாதானபடுத்திவிட்டு காரை செலுத்தினான். அங்கு ஒரு மகளிர் மருத்துவமனை அருகே கார் நின்றது.

*****

அதற்குள் கார்த்திக்கின் குடும்பம் ஜவுளிக்கடயை நெருங்கியது ….இவர்கள் வர தாமதமாக நல்ல நேரம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது எனவே,

“கிளம்பலாம் டா கார்த்திக்” என்று அவன் தாய் கூற “மா சும்மா நில்லுங்க.”

“அவங்களுக்கு என்ன பிரச்சனையோ..கொஞ்சம் வெயிட் பன்னி பார்க்கலாம் கண்டிப்பாக வருவாங்க”

“நல்ல நேரம் முடிஞ்சிறும் டா கார்த்திக்”

“மீ…நல்ல நேரம் முடிஞ்சா என்ன? எந்த நேரத்துல எடுத்தாலும் கடைக்காரன் காசு கட்டினா தான் புடவையை தரபோறான்… வெயிட் பன்னு.”

அதற்குள் தகவல் வித்யா மூலமாக கார்த்திக்கு தெரிய வந்தது . பதறியபடி அவன் மட்டும் மருத்துவமனைக்கு சென்றான் .போற வழியில் ஆனந்தியிடம் கைப்பேசியில் பேசியவாறே சென்றான்

“தங்கச்சி மா அண்ணன் வரேன் டா உனக்கு ஒன்னும் ஆகாது …ஸ்கேன் பன்னி பார்த்தா என்னனு தெரிஞ்சிறும் . பதற்றம் ஆகாத தண்ணீர் குடி..பிலாடர் புல்லா இருந்தா தான் ஸ்கேன் கிளியரா தெரியும். நான் வந்து டாக்டர் கிட்ட பேசிக்கிறேன். நீயும் மச்சானும் டென்ஷன் ஆகாதிங்க. ஓகேவா.

அதற்குள் வித்யா போன் வாங்கி கார்த்திக்கிடம் “என்னங்க எங்க அண்ணிக்கு ஒன்னும் ஆகாது ல..பயமா இருக்குங்க… பாப்பா நல்லா தானே இருக்கும் சொல்லுங்க…நீங்க மெடிக்கல் பீல்டில் தானே இருக்கிங்க ப்ளீஸ் சொல்லுங்க”

“வித்யா டென்ஷன் ஆகாத…ரிலாக்ஸ் .உங்க அண்ணிக்கு ஒன்னும் ஆகாது நான் வரேன் வந்து டாக்டர் கிட்ட பேசுறன். ஸ்கேனுக்கு இன்னும் எத்தனை பேரு இருக்காங்க?”

இன்னும் 5 பேர் இருக்காங்க கார்த்திக்.

“ஓகே….தண்ணீர் நிறைய குடிக்க சொல்லு. ஆனால் யூரின் போக கூடாது . ம்ம்ம்.. நான் வந்துட்டே இருக்கன்.”என்று அறிவுரை அளித்தவாறே பைக்கை கிளப்பினான்

ஆதிக்கும் ஆனந்திக்கும் இதயத்துடிப்பு அதிகமானது.

“என் குழந்தை… என் குழந்தை என்று முனுமுனுத்தபடி ஆதியின் நெஞ்சில் சாய்ந்து யோசித்து கொண்டிருந்தாள் ஆனந்தி”

காமாட்சி, “ஆத்தா மாரியம்மா…என் வாரிசு காப்பாத்து மா…உனக்கு இந்த வருஷம் கடா வெட்டி பொங்கல் வைக்கிறேன்”

கார்த்திக் வருவதை பார்த்த வித்யா “கார்த்திக் …வந்துடிங்களா.. எனக்கு பயமா இருக்கு என்று அவனது கைகளை இருக பற்றி கொண்டாள்”

அடுத்த பேஷண்ட், “ஆனந்தி”என்று நர்ஸ் அழைக்க ஆனந்தி உள்ளே சென்றாள் டாக்டர், கார்த்திக்கிற்கு தெரிந்தவர் என்பதால் அவனும் உள்ளே சென்றான்.

“டாக்டர் …இது வித்யாவோட அண்ணி பேரு ஆனந்தி கார்ல வர வழியில் இப்படி ஆச்சு கம்ப்ளீட்டா ஸ்கேன் பன்னி சொல்லுங்க….

சரி மிஸ்டர் கார்த்திக்… சொல்றேன் நர்ஸ் அவங்களை டேபிள் ல படுக்க வைங்க.

கார்த்திக் – ஓகே டாக்டர் நான் வெளியே வெயிட் பன்றேன் . என்று 

போக இருந்தவனின் கைகளை டேபிளில் படுத்தவாறு பிடித்துக்கொண்டு “அண்ணா போகாத…இரு எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ்”என்று கெஞ்ச தனது உடன்பிறவாத தங்கையின் கெஞ்சலில் இறங்கியவன்

“சரி ஆனந்தி நான் போகல…என்று அவளுக்கு கைகொடுத்து ஆறுதல் கூற டாக்டர் அந்த ஸ்கேன் ப்ரோபில் ஜெல் தடவி வயிற்றில் தேய்த்தார் இங்கும் அங்கும்..”

ஸ்கேன் முடிந்தது…32 பல்லும் தெரியும் அளவு சிரித்து கொண்டே வந்தாள் ஆனந்தி.

 “என்ன எல்லாரும் டல்லா இருக்கிங்க? எனக்கு ஒன்னும் இல்லை பேபியும் நார்மலா இருக்கு னு” டாக்டர் சொன்னாங்க.

காரத்திக்- “ஆமா ஆதி மச்சான் சில பேருக்கு லைட்டா ப்ளீடிங் படுமாம் முதல் மூனு மாசத்துல ,அது பயப்படுற அளவு ஒன்னும் இல்லையான் . Implantation bleeding அதாவது குழந்தை கரு போய் கர்பபை ல சேர்ந்துக்குது ல அதனால அப்படி… வேற ஒன்னுமில்லை.” 

“ம்ம்ம் ஆமாங்க அண்ணன் சொல்றது உண்மை” டாக்டர் சொன்னார்.

வானத்தில் இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது ஆதிக்கு… சரி சரி வாங்க என்று எல்லோரும் கிளம்ப கார்த்திக் தனது கிளினிக் வந்த அந்த பெராலிஸஸ் பேஷண்ட் மனைவியை பார்த்தான்.

“ம்ம்ம் இவங்க எங்க இங்கே?” நமக்கு ஏன் வம்பு நம்ப கிளம்புவோம்.

“ஓகே…ஓகே ரைட்டு இப்ப எங்க விஷயத்தை கவனிங்க.. புடவை எடுக்கலாம் வாங்க” என்று கார்த்திக் கூற எல்லோரும் மனசு விட்டு சிரித்தார்கள்.

கார் கடையை நெருங்கியது….கார்த்திக்கின் அம்மா அப்பா வெயில் வாட்டி வதைத்ததில் இருவரும் இளநீர் குடித்துக்கொண்டு இருந்தனர்…பின்னாடியே கார்த்திக், “மீ…எனக்கு ஒரு ஸ்ட்ரா தாங்க மீ உரியிரேன்”

“ஏய் வாலு எங்க டா போன திடிருனு போன் வந்ததும்.”

“மீ அது பெரிய கதை மீ….வா ..உள்ள போய் புடவை வாங்கலாம்”

“நல்ல நேரம் முடிஞ்சிருச்சு லூசு”

காமாட்சி – “சம்மந்தி… நல்ல நேரம் துவங்கியாச்சு ,எங்களுக்கு இப்ப தான் மனசு நிறைஞ்ச மாதிரி இருக்கு . வாங்க சம்மந்தி புடவை எடுப்போம்.”

“சரிங்க சம்மந்தி”

“ப்பாடா…..ம்ம்…என்று பெருமூச்சு விட்டான் அதை பார்த்து வித்யா “என்ன டார்லிங் கண்ணு கட்டுதா?”

“ம்ம்ம் சத்தியமா டி உன்னை கட்டுறதுக்குள்ள எனக்கு கண்ணு கட்டுது. “என்று பதிலளித்தான்

“ச்சி…பே… லூசு.”

“ஓய் லூசு னு சொல்ல என் மீ க்கு மட்டும் தான் ரைட்ஸ்”

“ஏன் அப்படி?”

“ஏன்னா என்னோட மீயும் லூசு தான்”

“அடப்பாவி… இரு சொல்றேன் அத்தை கிட்ட.”

உடனே நறுக்கென்று அவள் இடையை கிள்ளினான். “போய் இதையும் சொல்லு உங்க அத்தை கிட்ட”

“ச்சி பே…”

“ஹாஹா”

சிவகாமி – “டேய் கார்த்திக் வா வந்து புடவை செலக்ட் பன்னு உன் வருங்கால பொண்டாட்டி க்கு.”

காமாட்சி- “வாங்க மாப்பிள்ளை”

“ம்ம்ம்…. மனதில் தன்னவளை நினைத்து கொண்டு ஒவ்வொரு புடவையாய் பிரித்து பார்த்தான். 

வித்யா – “அந்த பிங்க் கலர் கோல்டன் பார்டர் காட்டுங்க.”

கார்த்திக்- “அய்யே உன் மூஞ்சி மாதிரி இருக்கும்”

“ப்பே…” என்று கோபித்துக்கொண்டாள்

ஆனந்தி – “ஏய் வாலு…கட்டிக்கபோறவனை அப்படி மரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது.”

கார்த்திக்- “அதானே என்ன வளத்துருக்கிங்க உங்க வீட்டு வானரத்தை” என்று கிண்டல் பன்ன.

கோபித்து கொண்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து முறைத்தாள். அவனோ அவளது மனதை புரிந்து கொண்டு,

 “அந்த பிங்க் கலர் கோல்டன் பார்டர்” புடவையை தேர்வு செய்தான். பிறகு அந்த கூட்டத்தில் இருந்து சற்று விலகி அவள் அமர்ந்திருந்த சேரின் அருகில் சென்று கோபமான அவளது கண்களை உற்று நோக்கினான்.

 அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்து கொள்ள, “வித்யா… புடவையை பிரிச்சு பாரு இந்தா” என்று அவனிடம் நீட்டினான்.

வெடுக்கென்று வாங்கி கவரில் இருந்து எடுக்க அவளுக்கு பிடித்த அதே கலர் புடவையை பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம் பொங்கியது. 

“தேங்க்ஸ்” என்றவளை ஒருமுறை கண்ணத்தை கிள்ளி, “எப்பவுமே நான் உனக்கு பிடிச்சது மட்டும் தான் செய்வேன் என்ன நம்பு” என்றான்.

சிறிது நாட்கள் கழித்து.

மல்லிகா தன்னை விட்டு விலகி செல்வதை உணர்ந்த ரேணுகா அவளை தனிமையில் அழைத்து பேசினாள் “மல்லி என்னடி உன் பிரச்சினை ஏன் இப்பலாம் நீ அப்பார்ட்மண்டு வீடு பூட்டிட்டு வெளியே எங்கேயோ தங்குறீயான் எல்லாம் அரசல் புரசலாக பேசுறாங்க”

நமட்டு சிரிப்புடன், “அக்கா சுற்றி இருக்க ஜனங்கள் வாய் இருக்குனு என்ன வேணாலும் பேசுவாங்க அதெல்லாம் நீ நம்புறீயா?”

“இல்லை டி …ஆனால்..”

“விடுக்கா…நான் தப்பாலாம் எதும் பன்னல என்று சொன்னவுடன் அடுத்தநொடி எதையோ கீழே விழுந்ததை எடுக்க முற்பட்ட போது அவள் கழுத்திலிருந்து மாங்கல்யம் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி ஆனாள் ரேணுகா.”

“மல்லி… இது என்னடி உன் கழுத்துல தாலி கொடி? எப்ப…எப்பமா உனக்கு கல்யாணம் ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேள்விகளை அடுக்கி கொண்டே போக எதுவும் பேசமுடியாமல் மௌனமானாள் மல்லிகா

கார்த்திக் – வித்யா நிச்சயதார்த்தம் கார்த்திக்கின் வீட்டில் விமர்சையாக நடந்தது…இருவரையும் பக்கத்தில் அமரவைத்து சந்தனம் பூசி நெற்றியில் பொட்டு வைத்து பூ தூவி வாழ்த்தினர்.இருவருக்கும் வெட்கத்தில் முகம் சிவக்க… ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அந்த பிங்க் கலர் புடவை அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்தது.

இந்த அழகான புடவையில் தேவதை போன்று காட்சியளிக்கும் தனது வருங்கால மனைவியை அவளுக்கே தெரியாமல் தனது போனில் புகைப்படம் எடுத்து கொண்டு. பிறகு அவளையே ரசித்துக்கொண்டு இருந்தான்.

மச்சான் என்ற முறையில் தோழன் மாப்பிளையாக… ஆதியும் அருகில் அமர்ந்தான்… போட்டோகிராபர் கட்டளைப்படி போஸ் கொடுத்து பல அழகான புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.

வித்யா சார்பில் ஆதியும் ஆனந்தியும் கார்த்திக் சார்பில் சிவகாமியும் அவரது கணவரும் தட்டை மாற்றிக்கொண்டனர்.

நிச்சயதார்த்தம் முடிந்து அவரவர் வீட்டுக்கு வந்துசேர்ந்தனர். “ஏங்க கார்த்திக் வீடே மண்டபம் மாதிரி பெருசா இருக்குல”

“ஆமா ஆனந்தி… அது அவங்க பூர்வீக வீடு..ஒரு காலத்துல அவங்க குடும்பத்தில் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தினு எவ்வளவு கலகலப்பா இருக்கும் தெரியுமா… சின்ன வயசுல நான் கார்த்திக் இரண்டு பேரும் ஓடி ஆடி விளையாடிருக்கோம்.”

“ம்ம்ம்… எப்படிங்க அவங்க அம்மாவும் உங்க அம்மாவும் ப்ரண்டுஸ்?”

“ப்ரண்டுஸ் னு சொல்ல முடியாது பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தோம். அப்படியே போகும்போது வரும்போது பேசிபழகினாங்க.”

“ஓ….ரொம்ப அழகான குடும்பம் ங்க…நம்ப வித்யா கொடுத்து வைத்தவள்”

“வித்யா மட்டும் இல்லை ஆனந்தி நாமளும் தான். கார்த்திக் மாதிரி ஒரு மாப்பிள்ளை யார் வீட்டுக்கு அமையாது. அன்னக்கு நீ ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப எப்படி ஓடி வந்து ஆறுதல் சொன்னான். செம்ம பையன் டி அவன்.”

“ஹாஹா உண்மை தான். சரி வாங்க பால் குடிச்சிட்டு படுப்போம்.”

தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை தன் அக்காவிடம் தெரிவிக்காமலே தெரிந்துவிட்டது என்பதாலோ என்னமோ குற்றவுணர்வில் அனைத்தும் ஒப்பக்கொண்டாள்.

அவள் சொல்ல சொல்ல ரேணுகாவிற்கு அதிர்ச்சியும் கண்ணீருமே மிஞ்சியது. இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டதே தவறு இருப்பினும் ஏதோ நல்ல வாழ்க்கை அமைந்திருந்தாலும் பராவாயில்லை ஆனால் இப்படி போய் மாட்டிக்கொண்ட தன் தங்கையின் நிலமையை அறிந்து வருந்தினாள். அவளின் வருத்தம் நியாயமானதுதான்.

“அக்கா நான் கிளம்புறன் நான் போய் தான் வீட்டில் அவருக்கு சமைக்கனும் பை..கா” என்று கட்டி தழுவி. தனது ,ஏக்கத்தை கண்ணீர் மூலம் சிந்திவிட்டு கிளம்பினாள்

*********.

கார்த்திக் மற்றும் வித்யா இருவரும் ஒரு கோவிலுக்கு சென்றனர். இது அவர்களின் இரண்டாவது சந்திப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில். அங்கு இருவரும் தரிசனத்திற்கு நின்று நின்று அவளுக்கு கால் வலிக்க, “கார்த்திக் எனக்கு கால் வலிக்குது”

அதுக்காக நான் தூக்கி வச்சிக்க வா முடியும்.

“அச்சோ….பசிக்குது டா..”

“ஏய் சின்ன புள்ள மாதிரி பன்னாத வித்யா . தரிசனம் முடிந்ததும் சாப்பிடலாம்”

நல்லபடியா தரிசனம் முடிந்தது. சாமியின் கழுத்தில் இருந்த மாலை அவர்கள் கழுத்தில் போடபட்டது. என்னமோ இப்பவே திருமணம் நடந்தது போல இருக்க… மனதில் சந்தோஷம் பொங்கி எழ… இருவரும் கோவில் பிராகரத்தை சுத்திவிட்டு ஓரமாக உக்காந்து பிராசதம் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் அவர்களுக்கு தெரியாமலே கோவில் கதவு பூட்டிவிட்டனர்.

என்ன செய்வதறியாது தவித்தனர்.. அப்போது ஓர் யோசனை சுவர் ஏறி வெளியே குதித்து விடலாம் என்று… ஆனால் வலது புறம் சுவர் எறி பார்த்தால் கோவில் குளம். ஐயோ சுவர் ஏறி வெளியே செல்ல இயலாது போல என்று இடது புரம் சுவர் ஏறி பார்த்தால் அதற்கு கீழே பெரிய பள்ளம்.

எந்த பக்கம் சுவர் ஏறி குதிக்கிறதுனு ஒரே குழப்பம். உடனே கோவிலின் பின்புறம் கோவில் சுவர் ஏற வசதியாக இல்லை…. எனினும் சிரம பட்டு முதலில் கார்த்திக் ஏறிகுதித்துவிட, அவளால் குதிக்க முடியவில்லை.. “நீ தைரியமாக குதித்து விடு நீ கீழே விழாதவாறு பிடித்துகொள்கிறேன்” என்று அவன் சொன்ன அடுத்த நொடி அவள் குதித்து விட கையில் வந்து தாங்கிக்கொண்டான்.

கையில் தாங்குபவன் வாழ்க்கையில் தாங்க மாட்டானா என்ன…

“இந்த கேஸ் சீக்கிரமே முடிக்கனும் ஆதி… உங்க பர்ஸனல் வேலை எல்லாம் கொஞ்ச நாள் ஒதுக்கி வச்சிட்டு சீக்கிரம் கேஸ் முடிங்க” என்றுஅசிஸ்டண்ட் கமிஷனர் கூற இந்த கேஸ் சம்மந்தமான ஆதாரத்தை திரட்ட முயற்சித்தான். 

ராகவன் இருந்த அதே அபார்ட்மெண்ட் இல் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தான்..யாரும் உடன் இல்லாமல் தான் மட்டும் அங்கும் தங்கும் அளவு வசதிகள் ஏற்படுத்திக்கொண்டான். அவனுடைய முதல் நோட்டம் மல்லிகா….

ஆம் அவளை கண்காணிக்க துவங்கினான் ஏங்கே செல்கிறாள் என்ன செய்கிறாள் என்று… அடுத்த நோட்டம் ராகவனின் குடும்பத்தினர் . ராகவன் வீட்டுக்கு யார் யாரில்லாம வருகிறார்கள் என்று. 

அதே அபார்ட்மண்டில் வேலை செய்யும் செக்யூரிட்டி உள்பட அனைவரையும் நோட்டமிட்டான்.

அவனை விட்டு பிரிந்து இருக்கும் ஆனந்திக்கோ…சீமந்தம். ஆம் அவள் கருவுற்று ஏழு மாதம் ஆகியிருந்தன…அவளது தாய் வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் இங்கேயே இருந்தாள். சீமந்தம் சிம்பிள்ளா வீட்டிலேயே நடந்தது. இவளுக்கு இப்போது ஒரே ஆதரவு மாமியார் காமாட்சி. 

வித்யா.. கார்த்திக் கிளினிக் சென்று அவனுக்கு ஒத்தாசையாக இருப்பது. அவளுடைய கல்லூரிக்குச் செல்வது என்று பரபரப்புடன் இருந்தாள்.தற்போது கல்யாணத்துக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில்… கல்யாணம் “இவன்ட் மேனஜ்மன்டிடம் கொடுக்க பட்டது ஏனெனில் ஆதியால் தன் தங்கையின் கல்யாண வேலைகளை இழுத்து போட்டு செய்ய இயலாது. அவனது மனமும் உடலும்ராகவன் கேஸ் வழக்கில் மட்டுமே உள்ளது. கேஸ் முடித்தால் அவார்டு கிடைக்கும். இன்ஸ்பெக்டர் ஆகி இதான் அவன் எடுத்து நடத்தும் முதல் கேஸ். 

ரேணுகா மீதோ அல்லது ராகவன் மனைவி மீதோ துளி அளவும் சந்தேகம் இல்லை… ஆனால் மல்லிகா மீது சந்தேகம் ஏற்பட்டது…. அவளை கவனித்ததில் அவள் காலை 6மணியிலிருந்து இரவு 9வரை வீட்டில் இல்லை எங்கோ செல்கிறாள் என்பதை அறிந்துகொண்டான். அவள் எங்கு செல்ல வேண்டும் யாரை சந்திக்க செல்கிறாள் இதைலெல்லாம் தெரிந்து கொள்ள முயற்சி செய்தான். 

ரேணுகா அவ்வப்போது மல்லிகாவை சந்தித்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் இதுவரைக்கும் ஆதி அந்த அப்பார்ட்மண்டில் குடியிருக்கும் விஷயம் யாருக்கும் தெரியாது… பஞ்சாப் சிங் போன்று டர்பனும் தாடியுமாக….இருந்தான் மாற்று வேடத்தில்.

*********

கார்த்திக்கும் வித்யாவும் வெளியே சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் அவர்களது அன்பு எல்லை அடுத்தக்கட்ட நிலைக்கு சென்றது

அன்று அவனது கிளினிக்கு ஒத்தாசையாக இருக்க சென்றாள். கிளினிக் கூட்டம் குறைந்துவிட்ட நிலையில் கதவை தாழிட்டு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

திடிருனு சுவற்றில் இருந்த பல்லி வித்யா மீது விழ… அவள் பயத்தில் அவளது சுடிதார் சுழற்றி உதற, பல்லி கீழ் நோக்கி ஓடிவிட்டது ஆனால் கார்த்திக்கின் பார்வை அவள்மீது  சென்றது……முதன் முறை தன் வருங்கால மனைவியின் அந்த அழகான பயத்தினை ரசித்தவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்ப்பதை அவளும் கவனித்துவிட 

இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமானது….

…….

அவன் அவளருகே செல்ல செல்ல…அவளோ பின்நோக்கி நடந்தாள். “கார்த்திக்… ப்ளீஸ் அப்படி பார்க்காத….

அவனோ எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தான்….

“கா…ர்..த்..என்று அவன் பெயரை உச்சரிக்கும் முன்பே அவளது இதழ்களை தன் இதழோடு சேர்த்து முத்தமிட்டான். அவள் சற்றும் எதிர்பாராத அந்த முத்தம் அவளுக்கு என்னவோ போல் மனதை உண்டுபண்ணியது.

கண்களை மூடியவாறு அவள் சிலைபோல் நிற்க…

“என்னடி பாக்குற?எதாவது நடந்துருமோனு பயந்தியா?”

“ம்ம்ம்” என்று தலைகுனிந்து நிற்க,

“அப்போ…என் மேல நம்பிக்கை இல்லை அப்படிதானே?”

“அதெல்லாம் ஒன்னுல்ல” என்று அவள் கூறி முடிக்கும் முன் அவனருகே அவளை இழுத்து..அவளோ அவன் மீது மோதியவாறு நிற்க,  “இங்க பாருடி…உன்னை அப்படி எதுவும் பண்ணமாட்டேன். நீ என்னை தாராளமா நம்பலாம்”

அவன் சொல்வதை காதில் வாங்கியபடி ஆச்சரியதோடு பார்த்தாள்.

“ஏன் கார்த்திக் நீ நினைச்சா கல்யாணம் க்கு ஒரு மாசம் தானே இருக்கு தப்பு பண்ணாலும் எங்க தெரியபோகுது னு நீ இந்த சந்தர்ப்பத்தில் தப்பு பண்ணியிருக்கலாம் ஆனால் நீ அப்படி பண்ணல….ஸோ…யூ …ஆர்…ரியலி க்ரேட்”

“ஹாஹா….. போதும் போதும் ….புகழாரம் வா…கிளம்பலாம் மறுபடியும் பல்லி விழுந்தா கஷ்டமாயிடும்.அப்புறம் எதாவது நடந்தா நான் பொறுப்பு இல்லை”என்று கூறி நகைக்க இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

*****

அன்று மல்லிகா பின்னாடி தொடர்ந்து கொண்டு போனான் ஆதி ….அவளை எப்படியாச்சும் இன்று வசமாக பிடிக்கனும்னு விரைந்துக்கொண்டு போனான்

அவளோ அவளது ஸ்கூட்டி யை எடுத்து கொண்டு சந்து சந்தாக வளைச்சு வளைச்சு சென்றாள் பின்னாடி ராயல் என்பீல்டு வில் இவன் தொடர்ந்தான்….நடுவில் சிக்னல் வந்தது…சிக்னலில் ஒரு பிச்சைகாரிக்கு காசு தரும் இடைவேளியில் அவள் பறந்துவிட்டாள்….எப்படியோ அவளை பார்த்துவிட்டான் அவளும் முன்னேறி சென்றாள்….அங்கு பணக்காரர்கள் குடியிருப்பு ஒன்று வந்தது வீட்டு நம்பர் 4..இவள் நுழையும் போது கேட் ஆட்டோமேடிக் திறந்தது….

ஆதி – பார்ரா….கேட்டே….ஜம்முன்னு இருக்கு..உள்ள வீடு எப்படி இருக்குமோ…ஆனால் இந்த வீட்டில் இவளுக்கு என்ன வேலை.

இவனுக்கு கைபேசி அழைப்பு வந்தது…”ஹலோ ஆதி அண்ணா என்ன பாலோ பன்னிட்டு வந்தீங்க னு எனக்கு நல்லா தெரியுது….உள்ள வாங்க விவரமா சொல்றன்…

அடிப்பாவி நம்ப பின் தொடர்ந்த விஷயம் எப்படி தெரிஞ்சிக்கிட்டா????ஒருவேளை மிரர் ல பார்த்துருப்பாளோ…மல்லிகா பெரிய ஆளு தான். 🤣சரி உள்ள போய் தான் பார்ப்போம்

பூவரசனின் தங்கையிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை உணர்ந்தாள் ரேணுகா, “என்னடா இவ.. கொஞ்சம் மைண்டு சரியில்லாதவ னு பூவரசன் சொல்லியிருக்கானே… ஆனால் இவ ஏதோ ஆன்லைன் ஷாப்பிங் தெளிவாக பன்னிட்டு இருக்காளே அமெசான் ல ….ம்ம்ம்… எப்படி முடியும்?”

“என்னங்க….உங்க தங்கை …என்று அவள் ஆரம்பிக்கும் முன் இவன் முந்திக்கொண்டு “என்னடி அவளுக்கு போய் வேலையை பாரு”

“சரி அது விடுங்க….என் தங்கச்சி பற்றி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் அவ நமக்கு சொல்லாம கல்யாணம் பன்னிட்டு இருக்கா”

“ஏதோ பன்னிக்கிட்டா ல விடு”

“ஏங்க எல்லாத்தையும் இப்படி சாதாரண மா சொல்றீங்க…பூவரசன் நீ என்கூட படிச்சவன் என்னை இம்ப்ரஸ் பன்ன அப்படிங்கிற ஒரே காரணத்திற்காக தான் கல்யாணம் பன்னிக்கிட்டேன் ஆனால் நீ…இப்படி எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுற”

“ப்பா…. கொஞ்சம் டென்ஷன் டி வேற எதுவும் இல்லை”

“அப்படி என்ன டென்ஷன்?”

“அது இப்ப உனக்கு வேண்டாம் ப்ளீஸ் விடு போ…சமயல் பன்னு சீக்கிரம் எனக்கு பசிக்குது டி”

“ரேணுகா மனசு – ச்ச நம்ப கல்யாணம் முன்பு எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்… எனக்கு னு ஒரு வாழ்க்கை… சொந்தம் னு சொல்லிக்க ஒரு தங்கச்சி…. ஆர்டிஸ்ட் னு ஒரு பெருமை….ஆனால் இப்ப…கல்யாணம் அப்படிங்கிற பேருல ச்ச”

நான் ஆதியை தான் முதன் முதல்ல ரசிச்சு பார்த்தேன். அப்புறம் எதிர்பாராத விதமாக அவன் எனக்கு நண்பனா கிடைச்சான்… ஒரு வாட்டி நிர்வாணம் பெயிண்டிங் க்கு நான் மாடலாக நின்னப்போ என்னை உரிமைல கண்டிச்சான். ஐ..ரியலி..மிஸ்யூ ஆதி…யூ அண்டு யுவர் ப்ரண்டிஷிப்.

இவள் நினைத்துக்கொண்டிருக்கும் போது அவனிடமிருந்து அழைப்பு வந்தது, “ஹேய் ..ரேணு…எப்படி இருக்க?”

“நல்லாயிருக்கேன் ஆதி…நீங்க”

“ம்ம் ஐயம் பைன்….அப்புறம் உன் தங்கச்சியை பார்த்தேன்…அது பத்தி உன்கிட்ட கேக்கலானு “ஏன் ரேணு இதெல்லாம் என்கிட்ட மறைச்ச?”

“சாரி ஆதி”

“ஓகே விடு….ஸோ என்னோட சந்தேகம் க்ளியர்.” 

….

“நம்ப ரொம்ப எரிஞ்சு விழுறோம் போல அவகிட்ட சீ பாவம்” என்று நொந்து கொண்டு சமையலறைக்குச் சென்றான்.

 பூவரசன் அங்கு அவள் காய்கறிகளை ப்ரிட்ஜில் அடுக்கிகொண்டிருந்தாள்.

“ம்ம்..க்குரும்” என்று தொண்டையை இரும்பிக்கொண்டு அவளை நோக்கினான். அவளோ எதுவும் கண்டுக்காமல் அவள் வேலையை பார்த்து கொண்டிருக்க, வெடுக்கென்று அவள் கையிலிருந்த பொருளை பிடுங்கினான்…

“என்னங்க வேணும்?”

“ஏண்டி கோவமா?”

“இல்லை ரொம்ப ஆசையா இருக்கேன் ஏன்னா நீங்க அப்படியே என்கிட்ட ஆசையா இருக்கிங்க பாருங்க அதான்.”

“மன்னிச்சிரு  டி”

“ப்பா… சாமி உங்களை மன்னிக்க நான் யாரு”

“கோவப்படாத டி…..சரி இப்ப என்ன உனக்கு வேணும்… சரி அது இருக்கட்டும் உன் தங்கச்சி ஏதோ கல்யாணம் பன்னிருக்கானு சொல்றீயே யார் அது?”

அதை கேட்டவுடன் அவளுக்கு அழுகையே வந்தது”

“என்னங்க… அவ 35 வயசு மதிக்கதக்க ஒரு பெராலிஸஸ் பேஷண்ட் கல்யாணம் பன்னிருக்கா..அவன் பெரிய பணக்காரனாமாம்…அவனை கட்டிகிட்ட பணம் தரதா சொன்னாங்களாமாம் அதான் அவனை கட்டிகிட்டு அவங்க தந்த பணத்தில் நமக்கு கல்யாணம் கிப்டா 2 லட்சம் பிக்ஸட் டெபாஸிட்  பன்னிவச்சிருக்கா அந்த பெரிய மனுஷி”

“என்ன? எப்போ இதெல்லாம் நடந்தது?”

“நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே அவ கல்யாணம் பன்னியிருக்கா….அன்னைக்கு கீழ குனிந்து ஏதோ எடுக்குறப்ப தாலி தொங்குச்சு அப்போ தான் எனக்கே தெரியும்.”

“ஓ……”

“என்ன ஓ……போங்க… நீங்க என்கிட்ட என்ன சொன்னிங்க நம்ப இரண்டு பேரும் சேர்ந்து அவளுக்கு வரன் பாக்கலாம்னு சொன்னிங்க அதை நம்பி உங்களை கட்டினேன்…இப்படி அவ கிருக்கு தனமா எதாவது பன்னுவானு தான் நான் முதல்ல அவளுக்கு கல்யாணம் பன்னனோம் னு சொன்னேன்”

“ஐயம் சாரி டியர்….நான் உன்னை அவசரமாக கல்யாணம் பன்னதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது.

“என்ன? என்ன பூவரசன் சொல்றீங்க?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content