மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 28
Quote from monisha on May 14, 2022, 12:04 PM28
அடுத்த மாதமே மீண்டும் தமிழ் ஊருக்கு திரும்பியதைக் கண்டு சந்திரனுக்கு சொல்லவொண்ணா ஆச்சரியம்! அதுவும் அவள் தன் வேலையை விடுத்த செய்தியைச் சொல்லி அப்போதே அவனுக்கு இன்ப அதிர்ச்சியும் தந்திருந்தாள்.
“நிசமாவா தமிழு?” என்றவன் கிட்டத்தட்ட நூறாவது முறையாகக் கேட்டுவிட, “ஐயோ! ஆமா ஆமா” என்று உச்சபட்சமாகக் கடுப்பாகி அவன் காதிற்குள் கத்திவிட்டாள்.
அவன் மனம் எல்லையில்லா சந்தோஷத்தில் இறக்கைக் கட்டிப் பறக்க, இனி அவள் தன்னோடே இருந்து விட போகிறாள் என்ற எண்ணமே அவனை இன்ப கடலில் ஆழ்த்தியது.
ஆனால் அந்த இன்பத்தில் முழுவதுமாக மூழ்கிவிட முடியாமல், “எதற்கு நீ வேலையை விட்ட?” என்று கேட்க,
“உனக்காகதான்” என்றவள் சொன்ன நொடி அவன் மனதிற்குள் பொங்கிய பலத்தரப்பட்ட உணர்வுகளில் சிக்குண்டு அவன் பேச்சற்று போனான் என்று சொன்னால் அது மிகையில்லை.
அவளின் லட்சியம் அந்த வேலை! தனக்காக அவள் அந்த வேலையைத் துறந்திருப்பதை எண்ணும் போது அவன் உள்ளம் நெகிழ்ந்தான். ஆனால் அவற்றோடு அவனுக்கு அவள் தந்த அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் முடியவில்லை.
“இனிமே நானும் ஒன்ற கூட சேர்ந்து நம்ம நிலத்துல விவசாயம் செய்ய போறேனாக்கும்” என்று அவள் அடுத்து போட்ட போடில் அவனுக்குத் தலை சுற்றிப் போனது. அவன் மூர்ச்சையாகி விழவில்லை. அவ்வளவுதான்.
“லூசா நீ… அம்புட்டு பெரிய படிப்பு படிச்சுப் போட்டு நீ எதுக்கு வெயில்லையும் மழையில்லையும் நின்னு விவசாயம் பார்க்கோணோம்… உங்க ஐயன் உன்னைய கஷ்டப்பட்டுப் படிக்க வைச்சதே நீ இப்படியெல்லாம் கஷ்டப்பட கூடாதுங்குறதுக்காகதான்?”
“அதெல்லாம் எனக்கும் தெரியும்… ஆனா நான் முடிவு பண்ணிட்டேன்… விவசாயம்தான் பார்க்க போறேன்”
“நீ படிச்ச படிப்புக்கு இங்கனயே பக்கத்துல உனக்கு நல்ல வேலை கிடைக்கும்டி… அதுவும் நம்மூரை சுத்தி பெரிய பெரிய காலேசுங்களா கட்டி வைச்சு இருக்காங்க இல்ல… நீ எதுக்குடி கஷ்டப்பட்டு விவசாயம் பார்க்கோணோம்”
“நான் அந்த வேலைக்கு எல்லாம் போக மாட்டேன்… விவசாயம்தான் பார்க்க போறேன்”
“முட்டாள்த்தனமா பேசாதே… நீ நினைக்குற மாதிரி விவசாயம் ஒன்னும் அம்புட்டு சுலுவான வேலை கிடையாது… அதுவும் பொம்பள புள்ள உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்றவன் சொன்ன நொடி சுறுசுறுவென கோபமேற,
“ஓ! பொம்பள புள்ளைங்க எல்லாம் விவசாயம் பார்க்க முடியாதுன்னு சொல்றியா?” என்று அவள் கேட்ட தொனியில்,
“ப்ச்… ஏன் தமிழு புரிஞ்சிக்காம பேசுற? ஏற்கனவே நீ நிலத்துல நின்னு என் கூட வேலை செஞ்சதுக்கே உங்க ஐயன் செம கோபத்துல இருக்காங்க… ஊர்க்காரவுங்க நான் உன்னைக் கட்டிக் கூட்டிட்டு வந்து கொடுமை படுத்துறேன்னு பேசுவாங்க… எனக்கு இதெல்லாம் தேவையா?” என்றான்.
“இந்த ஊருக்காரவுங்களுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா? அடுத்தவன் என்ன செய்றன்னு பார்க்கிறதுதான் வேலையா… முன்ன போனா முட்டுது… பின்ன வந்தாலும் இடிக்குதுங்குற மாதிரி எப்படி போனாலும் குத்தம் சொல்வாங்களா?” என்று கடுப்பானவள்,
“இந்த ஊருக்காரவுங்க பேசறதை எல்லாம் நம்ம காதுல வாங்கிக்காம இருக்குறதுதான் நமக்கு நல்லது” என்றாள்.
“சரி ஊர்க்காரங்களை வுடு… உன்னைய கஷ்டப்பட்டுப் படிக்க வைச்ச உங்க ஐயனைப் பத்தி யோசிச்சியா?” என்று கேட்க, அவனுக்கு உண்மையில் தெரியாது அவர்களைப் பழிவாங்கத்தான் அவள் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள் என்று!
சந்திராவை அவர்கள் அவமானப்படுத்திப் பேசியதால்தான் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தோம் என்று அவர்களுக்குக் குத்த வேண்டும். இருப்பினும் தன் எண்ணத்தை சந்திரனிடம் அவள் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் அவளுக்கு தன் பெற்றோர்களுக்கு மீது ஆயிரம் கோபமும் வருத்தமும் இருந்தாலும் அது அவர்களுக்கும் தனக்குமான தனிப்பட்ட விஷயம். தன் பெற்றோருடன் நடந்த பிரச்சனையை சந்திரனிடம் பகிர்ந்து கொள்ள அவள் விரும்பவில்லை.
ஆனால் சந்திரனோ அவள் விவசாயம் செய்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
“நீ விவசாயம் எல்லாம் செய்ய வேண்டாம் தமிழு… நான் உனக்காக இருக்கேன் இல்ல… நான் கஷ்டப்படுறேன்” என்றவன் சொன்னதைக் கேட்டு,
“அப்போ உனக்கு சமைச்சு போட்டு என்னைய வூட்டோட இருக்க சொல்றியாட்டுமா இருக்கு” என்றவள் அவன் மீதே பழியைத் திருப்பிவிட, அவன் தலையிலடித்துக் கொண்டான். இவள் பிடிவாதத்தை மாற்றவே முடியாது என்று புரிந்தது.
“எது சொன்னாலும் நீ ஏன் டி இப்படி ஏடா கூடமா புரிஞ்சிக்குற”
“நான்தான் ஏடா கூடமா புரிஞ்சிக்குறன்னு தெரியுதல்ல… புறவு எதுக்கு என்கிட்ட தேவையில்லாம வாதம் பண்ணிட்டு இருக்க… நான் சொன்னதுதான்… நாளைல இருந்து நானும் நிலத்துக்கு வருவேன்… நீ எனக்கு எல்லா விவசாய வேலைய கத்து தரணும்… அம்புட்டுதான்” என்று அவனிடம் முடிவாகச் சொல்லிவிட்டாள்.
ஆனால் அடுத்து வந்த நாட்களில் சந்திரன்தான் அவளுடைய விவசாய ஆர்வத்தைக் கண்டு மிரண்டு போனான். அப்பணிகளை அவள் கற்றுக் கொள்ள காட்டிய வேகத்திலும் ஆவலிலும் சின்னாபின்னமாகிப் போனான்.
முக்கியமாக உழவு முறைகளைப் பற்றியும் அதன் வகைகளைப் பற்றியும் விளக்கினான்.
உழுவதன் மூலமாகத்தான் கடினப்பட்டிருக்கும் மண் இலகுத்தன்மைக்கு வரும். உழவன் தன் நிலத்தை சீராகவும் ஆழமாகவும் களைகொத்தில் கிளறி விடுவதன் மூலமாக மண் காற்றோட்டமாக மாற்றப்பட்டு பாய்ச்சும் நீரானது ஆழமாக உறிஞ்சப்பட்டு மண்ணில் ஈரப்பதத்தைக் காப்பாற்றி வைக்கிறது.
உழவு முறையில் பல வகைகள் உண்டு. மழைக்காலங்களில் பருவ மழை வரும் தருணத்தில் இப்படி மண்ணை இலகுவாக்கி உழுவதன் மூலம் மழையினால் நமக்கு கிடைக்கும் நீராதரத்தை உழுவு செய்யப்பட்ட மண் சீராக மழைநீரை உள்வாங்கி மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து கொள்ளும்.
ஆனால் மழை வந்த பிறகு நிலம் அமுங்கி காற்றோட்டம் இல்லாமல் மாறிவிடுவதால் மீண்டும் உழுது ஆழப்படுத்தி விதை விதைக்கும் முறையை நம் உழவர்கள் கடைபிடித்து வந்தனர்.
பல ஊர்களில் நிலத்தடி நீராதரங்கள் பொய்த்துவிட்ட நிலையில் முழுக்க பருவகால மழையினை மட்டுமே நம்பி பல ஊர்களிலும் மானாவாரி சாகுபடி முறையைப் பின்பற்றுகிறார்கள்.
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி மற்றும் பவானி நதிகளின் இடையே அமைந்த காரணத்தால் நீர் வளம் மிகுந்த பகுதியாகவே இருந்தது.
இந்த நதிகளோடு முன்னொரு காலத்தில் காஞ்சி மாநதியென்று அழைக்கப்பட்ட நொய்யல் நதி அவர்கள் ஊரின் மிக அருகாமையில் இருந்தது. ஆனால் அப்படி ஒரு நதி மனித இனத்தின் சுயநலத்தாலும் பேராசையாலும் பணத்தாசையாலும் இன்று இருக்குமிடமே தெரியாமல் போனதுதான் வேதனை!
திருப்பூரிலுள்ள சாயப்பட்டறைகளில் ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டுள்ள புரோசியான் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே துணிகளுக்குச் சாயத்தை ஏற்றுகின்றனர். சாயப்பட்டறையிலிருந்து வெளியேறும் பத்து லிட்டருக்கும் மேலான கழிவு நீர் நொய்யல் நதியிலும் அதன் துணை ஆறுகளிலும் கலப்பதனால் அந்த நதியின் ஆதாரத்தைக் கொண்டு மிகச் செழிப்பாக நடந்திருந்த பருத்தி, வாழை, மஞ்சள், கரும்பு, சோளம் விவசாயம் நலிவடைந்தது.
அதன் பிறகு நிறைய பேர் விவசாயத்தை விட்டுப் பின்வாங்கத் தொடங்கிய பின் அவர்கள் ஊரின் விவசாயம் பெரும்பாலும் நெல் சாகுபடி மற்றும் மஞ்சளை மட்டுமே நம்பி இருக்கிறது.
சந்திரன் இந்தத் தகவல்களை எல்லாம் மனைவியிடம் சொல்லிக் கொண்டே அவளுக்குக் கலப்பையைப் பிடித்து உழுவதற்கும் கற்றுத் தந்தான். ஆனால் பழக்கமில்லாத காரணத்தால் அவளால் அதனை அசைக்க கூட முடியவில்லை. அவள் அதை இழுத்து களைத்து விட்ட போதும் அவளின் கற்றுக் கொள்ளும் ஆர்வம் குன்றிவிடவில்லை.
அடுத்தடுத்த நாட்கள் விடாமல் அவள் அந்த வேலையைச் செய்ய முயற்சித்தாள். தான் ஒரு பெண். ஆதலால் தன்னால் இது போன்ற விஷயங்களைச் செய்ய முடியாது என்று அவள் எந்தவித சப்பைக் கட்டுகளும் சொல்லாமல் உண்மையாகவே அந்த வேலையில் ஈடுபாட்டோடு செயல்பட்டது சந்திரனை வியப்படைய செய்தது.
இன்னொரு புறம் மதுசூதனன் தங்கள் நிலத்தில் வேலை செய்தபடி அவர்கள் நிலத்தில் தமிழ் செய்யும் அளப்பறைகளைக் கவனிப்பது புரிந்து எப்படி எப்படியோ அவளை அனுப்பிவிட முயல, அவன் கையாண்ட யுக்திகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.
யார் பார்த்தால் எனக்கென்ன என்று அவள் செய்வதைதான் செய்து கொண்டிருந்தாள். மதுசூதனன் ஒருபக்கம் சந்திரனைக் கோபமாகப் பார்ப்பதும் மகளைப் பாவமாகப் பார்ப்பதும் என்று தூரத்திலிருந்தே தன் உணர்வுகளைப் பறைசாற்றினாலும் அவர்களை அணுகி எதுவும் அவர் பேச முயலவில்லை.
போதாக்குறைக்கு சில நாட்களாகவே அவர் எங்காவது வழியில் பார்த்தால் கூட முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதற்கான காரணமும் அவனுக்கு விளங்கவில்லை.
ஆனால் நடப்பதை வைத்து பார்க்கும் போது தமிழுக்கும் அவர்கள் பெற்றோருக்கும் ஏதோ மனத்தாங்கல் என்று ஓரளவு புரிந்துவிட, அவளாக சொல்லாமல் அவனாக அதை பற்றிக் கேட்க விழையவில்லை.
கடந்து மூன்று நாட்களாக அவள் பழக்கப்படாமல் செய்த கடினமான வேலைகளின் விளைவாக அவளது உள்ளங்கைகள் சிவந்து கன்றிவிட்டிருந்தது.
“உனக்கு இதெல்லாம் தேவைதானா?” அவள் கரத்தில் மருந்து பூசிக் கொண்டே கேட்க,
“இதெல்லாம் ஒரு விசயமே இல்ல சந்திரா” என்று அவள் மிக சாதாரணமாகச் சொல்ல, அவனுக்குக் கோபமாக வந்தது.
“ஏன் டி பிடிவாதம் பிடிக்குற… உனக்கு எதுக்கு இந்த விவசாயம் எல்லாம்?”
“பசிக்குது சாப்பிடலாமா?” என்று அவள் பேச்சை மாற்ற அவளை முறைப்பதை தவிர அவனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
அதன் பின் இருவரும் உண்டு முடிக்க, “சந்திரா உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்னு நினைச்சேன்” என்று ஆரம்பித்தவள் தன் கைப்பேசியை அவனிடம் நீட்ட,
“இந்த பேஜ்ல சகா ன்னு ஒருத்தர் இயற்கை விவசாயம் டெக்னிக் எல்லாம் நல்லா சொல்லி இருக்காரு… அதிக செலவில்லாம நம்மகிட்ட இருக்க பொருட்கள் வைச்சே பூச்சிகளை எப்படி இயற்கை முறையில விரட்டுறது… நாம் நிலத்துக்கு இயற்கை முறையில ஊட்டம் கொடுக்கிறது மண் வளத்தை எப்படி அதிகப்படுத்திறதுன்னு நிறைய விஷயம் போட்டிருக்காவுங்க” என்றாள்.
“அது சரிதான்… ஆனா எதுவும் தெரியாம எந்த நம்பிக்கையில எங்கேயோ யாரோ போட்டதை நாம செஞ்சு பார்க்க முடியும்… அது பலனளிக்காம போயிடுச்சுன்னா நட்டம் நமக்குத்தானே” சந்திரன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
“எப்படி நம்ம இதை செய்ய போறோம்னு தெரியல” என்றவன் முகத்தில் படர்ந்திருந்த அவநம்பிக்கையைப் பார்த்து அவன் கைகளை தன் கரத்திற்குள் சேர்த்து கொண்டவள்,
“ஏன் நீ நம்பிக்கை இல்லாம பேசற… நம்ம செய்வோம்” என்றாள்.
“ப்ச் அப்படியெல்லாம் கண்மூடித்தனமா நம்பிக்கை வைச்சா பெரிய அடி வாங்கி போடுவோம்… புறவு திரும்பவும் எழுந்திருக்கவே முடியாது”
“நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றவள் அவனை ஆழமாகப் பார்க்க, ‘என்ன?’ என்பது போல் அவன் புருவத்தை நெறித்தான்.
“எந்த நம்பிக்கைல என் பேரை நீ பச்ச குத்திக்கிட்ட?”
அவன் திகைப்பாய் அவளைப் பார்க்க, “சொல்லு சந்திரா” என்று வினவ,
“அந்த வயசுல நீதான் வேணும்னுட்டு ஒரு குருட்டு நம்பிக்கை… உன்னையதான் கட்டிக்கணும் உன் கூடத்தான் வாழணும்னு ஒரு வைராக்கியம்… ஆனா சத்தியமா நீ என்சனியரிங் முடிச்சுப் போட்டு வந்த புறவு… என் வைராக்கியம் எல்லாம் உடைஞ்சு போச்சு… உன் கூட வாழுற ஆசையெல்லாம் நான் அப்பவே வுட்டுட்டேன்” என்றவன் சொல்வதைக் கேட்டு அவன் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டவள்,
“ஆனா உன் நேசம் உண்மை சந்திரா… அந்த நேசம்தான் என்னைய உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு” என்றாள்.
“அப்படி உண்மையா நேசிச்சு நாம முழு நம்பிக்கையோடு செய்ற காரியம் நிச்சயமா ஜெயிக்கும்… அதுக்கும் மேல நாம செய்ய போறது நல்ல விசயம்… நான் பிறந்ததில இருந்து சாமிய கும்புடுற கருப்பனும் உனக்கு சாமியா இருக்க ஒன்ற அம்மத்தாவும் நமக்கு துணையா நிற்பாங்க… நீ பார்த்துக்கிட்டே இரு” என்று அவள் சொன்ன போது, அவள் விழிகளில் ஜொலித்த நம்பிக்கை அவன் மனதில் சூழ்ந்திருந்த அவநம்பிக்கை இருளை விரட்டியடித்து புது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் புகுத்தியிருந்தது.
“நம்ம கண்டிப்பா செய்வோம் தமிழு” என்று புன்னகைப் பூத்தவன், “சரி நீ படுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு அவன் திண்ணையில் சென்று படுத்துக் கொண்டான்.
அவள் தன் வேலையை விடுத்து ஊருக்கு வந்த பிறகும் கூட அவன் அவளிடம் காண்பிக்கும் ஒதுக்கம் இம்மியளவும் மாறவில்லை.
அவனுடைய அந்த விலகலுக்கான காரணம் அவனின் தாழ்வுமனப்பான்மைதான் என்று அவளுக்கு ஓரளவு புரிந்தும் போனது. ஆனால் அதை அவனாகப் புரிந்து கொண்டு அந்த எண்ணத்திலிருந்து வெளியே வரட்டும் என்று அவள் அமைதி காத்தாள்.
அடுத்த ஒரு வாரம் நிலத்தில் உழுவது போன்ற வேலைகள் எல்லாம் முடிந்திருந்தது. என்னென்ன பயிர் செய்கிறோம்? எப்படி இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கான திட்டமிடலைச் செய்ய போகிறோம் என்று சந்திரன் குழம்பியிருந்தான். அவனுக்கு இதில் பெரிதாக அனுபவமில்லை அவர்கள் ஊரிலோ யாருமே இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்க துணியவில்லை.
அவன் இந்தக் குழப்பத்திலிருந்த போதுதான் தமிழ் அவனை ஒரு முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்வதாகச் சொன்னாள்.
“எங்க போறோம்னு இப்பயாச்சும் சொல்லேன்?” என்றவன் கேட்டுப் பார்க்க, அவள் அவன் கேள்விக்குப் பதலளிக்காமல், “போய் சேர்ந்த புறவு தானாவே தெரியத்தானே போகுது” என்று விட்டாள்.
இருவரும் பேருந்தில் ஏறிய பிறகு, “இப்பயாச்சும் சொல்லுடி… எங்கடி போறோம்?” என்றவன் இறுதியாகக் கெஞ்சியும் பார்த்துவிட,
அவள் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் அவனை அமைதியாக வரச் சொல்லி செய்கை செய்துவிட்டு திரும்பும் போது அவளின் பள்ளி ஆசிரியர் கிரேஸியைப் பார்க்க நேர்ந்தது.
“கிரேஸி மிஸ்” என்றவள் வியப்பும் சந்தோஷமாக அழைக்க,
“தமிழ்… எப்படி இருக்க?” என்று அவரும் அவளைக் கண்டு கொண்டு நலம் விசாரித்தார்.
“ஆமா… நீ இப்போ என்ன பண்ற?” என்று அவர் கேட்கவும்,
“விவசாயம் மிஸ்” என்று மிக சாதாரணமாக பதிலளித்தாலும் அவர் முகம் போன போக்கு அவர் எண்ணத்தைத் தெள்ளத்தெளிவாக அவளுக்குப் பறைசாற்றியது.
“என்ன மிஸ்? விவசாயம் பண்றது தப்பா?” என்று உடனடியாகக் கேட்கவும், “சேச்சே நான் அப்படி சொல்லல… நீ ஏதோ என்சினியரிங் படிச்சிருக்கேன்னு” என்று இழுக்க,
“எஞ்சினியரிங் படிச்சிருந்தா விவசாயம் பண்ண கூடாதாங்களா மிஸ்… இங்க எல்லோரும் என்ன படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையா பார்க்குறாங்க… நம்ம குணாவை சமீபமா பார்த்தேனுங்க மிஸ்… அவளுக்கு கண்ணாலம் ஆகி இரண்டு பசங்க
இப்ப என் கூட எஞ்சினியரிங் படிச்சப் பொண்ணு… அவ கல்யாணம் ஆகி வீட்டுகாரரோட வெளிநாட்டில செட்டிலாகிட்டா… நிறைய பேர் சம்பந்தமில்லாத வேலைதான் பார்க்குறாங்க… நான் அப்படி எல்லாம் இல்லாம விவசாயம்தானே பார்க்குறேன்” என்றாள்.
அவள் சொல்லும் காரணங்கள் சரியாக இருந்தாலும் அதனை எப்படி ஏற்பது என்று அவருக்குப் புரியவில்லை. பள்ளியில் அவள் புத்திசாலித்தனத்தையும் திறமையையும் பார்த்து ஒரு ஆசிரியராக அவருக்கும் அவள் வளர்ச்சியை எண்ணி நிறைய கனவுகள் இருந்தது. ஆனால் அவள் இப்படி விவசாயி என்று சொன்னதில் அவர் மனம் அடிவாங்கியது என்பதுதான் உண்மை!
“ஆமா திடீர்னு உனக்கு விவசாயத்து மேல இன்டிரஸ்ட்?” என்றவர் சந்தேகமாக வினவ,
“என் கணவராலதான்” என்றாள்.
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்றவர் வியக்கும் போதே,
“அவங்களும் ஒரு விவசாயிதான்… உங்களுக்கு அவங்கள நல்லா தெரியும்” என்றவள் சுற்றும் முற்றும் தேட அருகில் நின்ற சந்திரனைக் காணவில்லை.
அவன் எங்கே போய்விட்டான் என்று அவள் சுற்றும் முற்றும் பார்க்க, “நான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துருச்சு” என்று அவர் இறங்கும் பரபரப்பில்,
“நாம இன்னொரு நாள் பேசுவோம் தமிழு” என்று சொல்லியபடி இறங்கிவிட. “சரிங்க மிஸ்” என்று சொல்லிவிட்டுத் திரும்பும் போது சந்திரன் அவள் பின்னோடு நின்றிருந்தான்.
“எங்கடா போனே? நான் இம்புட்டு நேரம் சுத்திச் சுத்தித் தேடினே” என்றவள் குழப்பமாகக் கேட்க,
“ஆமா நாம இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துருச்சா?” என்றான்.
அவள் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு, “அடுத்த ஸ்டாப்தான்” என்று அவள் சொல்லவும்,
“சரி வா… அப்படி போய் நிற்போம்” என்று அவன் இறங்குமிடத்திற்கு அவள் கைப் பற்றி அழைத்துச் சென்றான்.
“நான் கிரேஸி மிஸ்ஸைப் பார்த்தேன்… இப்பதான் இறங்கிப் போனாங்க… உன்னைத் தேடினேன்டா… உன்னைய காணோம்” என்று அவள் சொல்லும் போது அந்தப் பேருந்து நிற்கவும், இருவரும் இறங்கினர்.
“இப்பவாவது சொல்லு… நாம இங்க யாரைப் பார்க்க வந்திருக்கோம்?” என்றவன் பேச்சை மாற்றினான்.
“நான் அட்ரஸ் வைச்சு இருக்கேன்… நீ வா” என்றவள் நடந்தபடி, “ஆமா நீ மிஸ்ஸைப் பார்க்கல? அதுக்குள்ள எங்க போன?” என்றவள் திரும்பவும் அந்த உரையாடலை விட்ட இடத்திலிருந்து தொடர,
“பார்த்தேன்” என்றான்.
“பார்த்தியா? புறவு நான் தேடும் போது உன்னைய காணல”
“நான்தான் தள்ளிப் போய் நின்னுட்டேன்” என்றவன் சொல்லவும் அதிர்ச்சியாக ஏறிட்டவள்,
“எதுக்கு?” என்றாள்.
“நான்தான் உன் புருஷன்னு தெரிஞ்சா அவங்க உன்னைக் கேவலமா பார்ப்பாங்க… உனக்கு அப்படியொரு அசிங்கம் தேவையா?” என்றவன் கேட்ட நொடியில் அப்படியே திகைத்து நின்று,
“ஏன் டா இப்படியெல்லாம் லூசுத்தனமா யோசிக்குற” என்றாள்.
“அவங்களுக்கு என்னையும் நல்லா தெரியும்… உன்னையும் எப்படின்னு தெரியும்… அதுவும் கடைசியா அந்த லெட்டர் விசயம்… உன்னால என்னை ஸ்கூல வுட்டு டிஸ்மிஸ் பண்ணதுன்னு எல்லாமும் அவங்களுக்குத் தெரியும் வேற… இதுல இப்போ என்னையவே நீ கண்ணாலம் பண்ணிகிட்டன்னு தெரிஞ்சா உன்னைய எப்படி பார்ப்பாங்கன்னு யோசிச்சியா?” என்றவன் கேள்விக்கு அவளால் பதில் சொல்லவே முடியவில்லை.
அவன் எண்ணப்போக்கு மிகவும் ஆபத்தானது என்று அவனுக்குச் சொல்லி புரிய வைக்க முடியமென்று தோன்றவில்லை. அவள் எதுவும் பேசாமல் மௌனமாக நடக்க, “எங்கடி போறோம்?” என்று அவன் கேள்வியில் நிமிர்ந்தவள் தன் பேசியிலிருந்த விலாசத்தைப் பார்த்து அந்தச் சாலையில் நடந்து வந்தவரிடம் விசாரிக்க அவரும் வழி சொன்னார்.
“வந்துட்டோம்னு நினைக்கிறேன்” என்று அங்கிருந்த விசாலமாக இருந்த பழைய கால மாடி வீட்டின் முன்பு நின்று மீண்டும் விலாசத்தைச் சரிப் பார்த்தாள்.
“இப்பயாச்சும் சொல்லு” என்றவன் கேட்க,
“நான் சொன்னேன் இல்ல சகான்னு ஒரு இயற்கை விவசாயத்தை பத்தின பேஜ்… இது அவங்க வீடுதான்” என்றாள்.
“அவங்க விலாசம் உனக்கு எப்படி?”
“அவங்க பேஜ்ல நம்ம ஊர் பக்கத்து பேர் போட்டு இருந்துது… கூடவே ஃபோன் நம்பர் இருந்துச்சு… ஃபோன் போட்டு… நேர்ல வரலாம்னு கேட்டேன்… வர சொன்னாவுங்க” என்றவள் பேசிக் கொண்டே வாசலில் எட்டிப் பார்க்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்த தன் மனைவியை எண்ணிக் கோபமாக வந்தது. அதேநேரம் உள்ளே இருந்து ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி வந்து, “யாருங்க நீங்க?” என்று விசாரிக்க,
“இது ராசப்பன் அவங்க வூடுதானே?” என்றாள்.
“ஆமா நீங்க” என்றவன் சந்தேகமாக இழுக்க, “இல்ல நான் சகா பேஜ் ஃபாலோ பண்றேன்… அவங்க கிட்ட பேசிட்டேன் அவங்கள பார்க்க” என்று அவள் தயங்கியபடி சொல்லவும்,
“ஓ! தம்பியைப் பார்க்க வந்திருக்கீங்களா? அவங்க வயலுக்குப் போயிருக்காவுங்க… இப்ப வந்துருவாங்க… நீங்க உள்ளர வாங்க” என்று மரியாதையாக அழைத்தார்.
“இல்லைங்க நாங்க திண்ணையில உட்கார்ந்துக்கிறோம்… அவங்க வந்ததும் பார்த்து பேசிட்டுப் போயிடுறோம்” என்றவள் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்… நீங்க உள்ளர வந்து உட்காருங்க” என்று அந்த பெண்மணி அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து அமர வைத்து அவர்கள் குடிக்க மோர் எடுத்து வந்து தந்திருந்தார்.
அந்த வீடு முழுக்க சிறு பிள்ளைகளின் கூட்டமாக நிரம்பி வழிந்தது. அவர்களின் அபார கூச்சலில் அந்த வீடு முழுக்க கலகலத்து கொண்டிருக்க,
“சத்தம் போடாதீங்க… எல்லாம் அங்கன போய் விளையாடுங்க?” என்று அந்தப் பெண்மணி கூற, அந்தப் கூட்டத்தில் பெரிய பெண் போல் இருந்தவள்,
“யாரு சித்தி?” என்று கேட்க,
“ரொம்ப முக்கியம்… பெரிய மனுஷி கேட்க வந்துட்டா” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டார்!
பின்னர் அந்த வீடு கொஞ்சமாக அமைதி நிலைக்குத் திரும்பிவிட இருவரும் ஒருவித தயக்கத்தோடே அமர்ந்திருந்தனர்.
“எதுக்கு நாம இங்க வந்தோம்?” என்று சந்திரன் அவளிடம் ரகசியமாகக் கேட்க,
“இயற்கை விவசாயம் செய்றதை பத்தி நேரடியா பார்த்து தெரிஞ்சுக்கதான்… நீதானே சொன்ன இன்டர்நெட்ல போடுற போஸ்ட் எல்லாம் வைச்சு எந்த முடிவுக்கும் வர முடியாதுன்னு” என்றாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்குள் ஒரு வெள்ளை வேட்டி நபர் நுழைந்து இவர்களை யாரென்பது போல பார்க்க, இருவரும் எழுந்து நின்றுவிட்டனர்.
“உட்காருங்க உட்காருங்க” என்றவர் சொல்லும் போதே,
“தம்பியைப் பார்க்க வந்திருக்காங்க மாமா” என்று தண்ணீர் சொம்பை அவரிடம் நீட்டியபடி அந்தப் பெண்மணி அவராகவே சொல்லவும்,
“என்ன விசயமா?” என்று அவர் கேட்டார்.
“அதான் சகாங்குற பேர்ல அவங்க இயற்கை விவசாயம் பத்தி எழுதிட்டு இருக்காங்க இல்ல… அதை படிச்சிட்டு அவங்கள பார்க்க வந்திருக்காங்க” என்றதும் அவர் முகத்தில் மிதமான புன்னகை மலர்ந்தது.
“ஓ அப்படியா?” என்றவர் அவர்களைப் பார்த்து, “உங்க ஊர் எது?” என்பது போன்ற விவரங்களை விசாரித்துக் கொண்டிருக்கும் போதே,
“இதோ தம்பி வந்துட்டாங்களே?” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த தமிழ் எதிர்பாராத இன்ப அதிர்ச்ச்யில் திகைத்தபடி, “சார் நீங்களா?” என்று எழுந்து நின்றுவிட்டாள்.
கம்பீர தோரணையில் வேட்டியும் சட்டையுமாக அவனைப் புது பரிமாணமத்தில் பார்த்தது அவளுக்கு வியப்பை அளித்த அதேநேரம் சகா என்பவர் தன்னுடைய மதிப்புமிக்க ஆசிரியர் காமராஜ் என்பது வியப்பின் விளிம்பிற்கே அவளைக் கொண்டு நிறுத்திவிட்டது.
“தமிழ்… நீங்க எப்படி இங்க?” என்று அவனும் அதே திகைப்புடன் கேட்டான்.
28

Quote from Marli malkhan on May 17, 2024, 1:47 AMSuper ma
Super ma