மோனிஷா நாவல்கள்
En Iniya Pynthamizhe - 4
Quote from monisha on March 23, 2022, 10:46 AM4
பைந்தமிழ் அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருந்தாள். ‘சனியன் பிடிச்சவன்… சின்ன புள்ளைங்க முன்னாடி போய்’ என்று தனக்குத் தானே முனங்கியவளுக்கு அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமும் ஆத்திரமும் எரிமலையாக உள்ளுரக் குமுறியது. அவனைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட வேண்டும் என்றளவுக்கு உள்ளம் கொதித்தது.
ஆனால் அவள் அடுத்த நாள் மாலை சென்னைக்குப் புறப்பட்டுவிட்டதால் அவன் மீதிருந்த கோபமெல்லாம் அப்போதைக்கு அடங்கிப் போனது. அதோடு அவள் தன் மொத்த கவனத்தையும் படிப்பில் செலுத்தியிருந்த காரணத்தால் அவள் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்தாள்.
ஒரு வருட படிப்பு காலம் முடிந்து கல்லூரியில் விடுமுறை அறிவித்திருந்தார்கள். அவளுடைய பயணச்சீட்டு உறுதி பெறாத காரணத்தால் அவளுக்கு பெர்த் கிடைக்கவில்லை.
அமர்ந்து கொண்டு பயணம் செய்தவள் அப்படியே உறங்கிப் போக, கனவிலும் அந்த சம்பவம்தான் வந்து தொலைக்க வேண்டுமா?
அதுவும் அவள் கண்டது கனவு போலவே இல்லை. உண்மையாக அந்த நிகழ்வை அப்படியே அவளுக்கு நினைவுறுத்திவிட பதறித் துடித்து கண்விழித்தவள் குமட்டுவது போல வாயை மூடிக் கொள்ள அவள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை வித்தியாசமாக ஒரு பார்வைப் பார்த்தான்.
சட்டென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்திக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
“ஏனுங்க எதாச்சும் பிரச்சனைங்களா? உடம்புக்கு முடியலீங்களா?” என்று எதிரே இருந்தவன் அக்கறையாக வினவும், அவனைத் திகைப்பாகப் பார்த்துவிட்டு பின் ஒன்றும் இல்லை என்பது போல மறுப்பாகத் தலையை மட்டும் அசைத்தாள்.
இந்த ஒரு வருடத்தில் சில முறைகள் அவள் ஊருக்கு பண்டிகைகள் மற்றும் விடுப்புகளுக்கு வந்து சென்றிருந்த போதும் ஒரு முறை கூட அவனை மீண்டும் பார்க்கும் சூழ்நிலை அமையவில்லை. அவனைப் பார்ப்பதை அவளும் விரும்பவில்லை.
இருப்பினும் அவனைப் பற்றிய செய்திகள் அரசல் புரசல்களாக அவள் காதுகளிலும் விழத்தான் செய்தன. அவன் வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டுச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
‘தருதலை’ ‘குடிகார பையன்’ என்று ஊர்க்காரர்கள் அவனுக்கென்று பிரத்தியேக அடைமொழிகளும் வைத்திருந்தனர்.
ஏனோ அவனைப் பற்றி அவள் யோசிக்க கூடாது என்று நினைத்தாலும் அவள் மூளை ஏதாவதொரு விஷயத்தில் அவனை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தன.
தொலைகாட்சியில் எம். ஜி. ஆர் படக்காட்சிகளைப் பார்த்தால் கூட ஒரு காத தூரம் ஓடிவிடுவாள் . ஏன்? எம்.ஜி.ஆரின் சுவரொட்டிகளைப் பார்த்தால் கூட அவன் நினைவு வந்து தொலைவதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.
இதெல்லாம் கூட பரவாயில்லை. சினிமாவில் வரும் முத்தக்காட்சிகளைக் கூட அவள் அறவே வெறுத்தாள்.
காதலின் அடுத்த படிநிலையான காமத்தின் முதல் படிநிலை முத்தம். ஆனால் அவன் செய்த வேலையால் முத்தமென்ற ஒன்றின் மீதே அவளுக்கு மொத்தமாக வெறுப்பு வந்திருந்தது.
அதுவும் அந்த வருட முடிவில் வந்திருக்கும் நீண்ட கால விடுமுறை என்பதால் இம்முறை ஊரிலிருக்கும் போது அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்ற பயத்தில் கண்ணயர்ந்தவளுக்கு அந்த நிகழ்வு அப்படியே கனவாக வந்து அவளின் உறக்கத்தையும் நிம்மதியையும் மொத்தமாகக் கெடுத்துவிட்டது.
அப்படியாக அவள் அன்றும் அவனை முனகியபடி திட்டித் தீர்க்க அப்போது அவள் எதிரே அமர்ந்திருந்த ஆடவன் துணுக்குற்று,
“இப்ப யாரை வைஞ்சிட்டு இருக்கீங்க… என்னையவா?” என்று கேட்க, அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு, “உஹும்… உங்களை இல்லீங்க… வேறு ஒருத்தனை” என்றதும் அவன் புன்னகைத்துவிட்டு, “அப்படின்னா சரிங்க” என்று சொன்னதோடு நிறுத்தி கொள்ளாமல், “ஆமா நீங்களும் நம்மூர் பக்கம்தானுங்களோ?” என்று கேட்டதில் அவள் முகம் கடுகடுத்தது.
பதில் சொல்லாமல் அவனை அவள் ஏறஇறங்க ஒரு பார்வை பார்க்க, “இல்லீங்க… உங்களை நம்ம காலேஜுல பார்த்திருக்கேன்... அதான் ஒரே ஊரான்னும் தெரிஞ்சிகலாம்னுட்டு” என்று இழுக்க அவன் ஒரே கல்லூரி என்றதில் அவள் புருவங்கள் நெறிந்தன.
“என்னைய நீங்க பார்த்தது இல்லீங்களா? நான் கம்ப்யூட்டர் சைன்ஸ்” என்று அவன் ஆரம்பிக்கும் போதே கைக்காட்டி அவனைப் பேச வேண்டாமென்று நிறுத்திவிட்டு.
“இத பாருங்க… நீங்களும் நானும் ஒரே காலேஜ்ல படிக்கலாம்ங்க… ஏன்? ஒரே ஊர் பக்கமா கூட இருக்கலாம்ங்க… ஆனா அதுக்காக எல்லாம் நான் உங்ககிட்ட பேசோணோம்னு எந்த அவசியமும் இல்லீங்க… அதனால உங்க வேலையை நீங்க பாருங்க… என்ற வேலையை நான் பார்துக்கிறேனுங்க” என்றவள் மேலும் இதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்பது போல தம் காதுகளில் ஹெட்செட்டை மாட்டி விழிகளை மூடிக் கொண்டாள்.
அவள் பேசிய விதமும் கோபத்தைக் காட்டிய விதமும் எந்தவிதத்திலும் அவனுக்குக் கோபத்தையோ அல்லது வெறுப்பையோ வரவழைக்கவில்லை. மாறாக அவளின் திடமான பேச்சு மற்றும் தெளிவான சிந்தனையைப் பார்த்து மதிப்பு உண்டாகியிருந்தது. மெல்லிய புன்னகை இழையோட அவளைப் பார்த்தவன் அதன் பின் அவளுடன் பேசும் எண்ணத்தைக் கைவிட்டு தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அதனைப் படிக்க இறங்கியிருந்தான்.
சில மணிநேரங்கள் கழித்து மெல்ல அவள் விழிகளைத் திறந்த போது அவன் மொத்தமாகப் புத்தகத்திற்குள் மூழ்கியிருந்தான்.
“கம்ப்யூட்டர் சைன்ஸ் இன்ஜினியரிங்க படிக்கிறவனுக்கு எதுக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தின புக்கு” என்று கொஞ்சம் குழப்பமும் கொஞ்சம் ஆச்சரியமுமாகப் பார்த்தவள் பின் தனக்கு என்ன வந்தது என்று தன் பையை எடுத்துக் கொண்டு இறங்க தயாறானாள்.
இருவரும் அவரவர்கள் பாதையில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர், ஆனால் யார் யாரின் பயணம் எந்தத் திசையில் எப்படி திரும்பும் என்பதெல்லாம் மனதனின் கணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டது.
பேருந்தின் மூலமாக தமிழ் தன் ஊர் எல்லையை வந்தடைந்திருந்தாள். ஆனால் ஊருக்குள் பேருந்து செல்லாத காரணத்தால் எப்போதும் உள்ளே வரை நடைபயணம்தான். ஒரு வேளை அதிர்ஷ்டவசமாக ஊர்காரர்கள் அல்லது உறவுக்காரர்கள் யாராவது பைக்கில் வந்தால் சௌகரியமாகப் போய் இறங்கி கொண்டுவிடலாம்.
தமிழும் அப்படி யாராவது வருகிறார்களா என்று களைப்பும் சோர்வுமாக நடந்து வந்து கொண்டிருக்க நல்ல வேளையாக அவளின் மாமா சங்கரன் அவள் வருவதைப் பார்த்துவிட்டு, “வா தமிழு.. உன்னைய வீட்டுல கொண்டு போய் விட்டுடுறேன்” என்று அழைக்கவும், ‘நல்லதா போச்சு’ என்று அவளும் அவர் பைக்கில் ஏறிக் கொண்டாள்.
அவரோ. “நம்ம தோப்புக்குள்ள காய் அறுக்க சொல்லி இருக்கேன்… பேசிப் போட்டு வந்துடுறேன்… செத்த நேரம்தான்… இங்கனயே இரு… வீட்டுக்குப் போயிடலாம்” என்றவர் பைக்கை கருப்பன் கோவிலில் நிறுத்திவிட்டு செல்ல, அவளுக்குப் பதட்டமானது.
“மாமா நில்லுங்க” என்றவள் சொன்னதை அவர் காதில் வாங்கவில்லை.
அந்த சம்பவம் நடந்த பின் அந்தக் கோவில் பக்கம் வருவதையே அவள் தவிர்த்திருந்தாள். ஆனால் எந்த விதியோ அவளை அங்கே இழுத்து வந்துவிட்டது. அவளுக்கு அந்த இடத்தில் நிற்க கூடப் பிடிக்கவில்லை.
“இதென்னடா தொல்லையா போச்சு” என்றவளுக்கு நடந்தே போய்விடலாமா என்ற யோசனையும் வந்தது. இருப்பினும் அவர் திரும்பி வந்தால் நம்மை தேடுவாரே என்று கடுப்போடு அவள் அங்கே காத்திருந்தாள்.
அவள் கவனம் அப்போது ஆக்ரோஷமாக அரிவாளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த கருப்பன் புறம் திரும்ப, எப்போதும் அவளுக்கு அவன் மீதிருக்கும் பயபக்தி இப்போது துளி கூட இல்லை. மாறாக கோபம்தான் வந்தது.
“கத்தியைத் தூக்கிப் பிடிச்சிக்கிட்டு சும்மா உருடாப்பு (அல்டாப்பு) காட்டிக்கிட்டு இருக்கியாக்கும்… அன்னைக்கு அவன் செஞ்ச காரியத்துக்கு அவன் கழுத்துல ஒரே போடா போட்டு இருக்க வேண்டாமா… அப்படி போட்டு இருந்தேன்னா நீ காவல் தெய்வம்… வேடிக்கைப் பார்த்து இல்ல நின்னுட்டு இருந்த.. நீயெல்லாம் சாமியே இல்ல… வெறும் கல்லுதான்” என்றவள் தன் மனதிலிருந்த கோபத்தை அப்போதிருந்த மனநிலையில் வாய்விட்டே சொல்லிவிட,
“ஆரு டி அவ… சாமியைப் போய் கல்லுங்கிறது” என்று ஒரு குரல் அவளை அதட்டியது. அவள் திரும்பி பார்த்த திசையில் பேச்சி கிழவி நின்றிருக்க, அவள் கோபம் இன்னும் பன்மடங்கானது.
“என்னை ஆருன்னு உனக்கு தெரியல” என்றவள் எகத்தாளமாகக் கேட்டுக் கொண்டே பேச்சியின் முன்னே சென்று நிற்க, அவர் நெற்றியில் கையை வைத்து உற்றுப் பார்த்துவிட்டு,
“அந்த டீ வீக்குறவ மவதானே நீயி” என்றார்.
அந்த வார்த்தையிலிருந்த ஏளனம் அவள் கோபத்தை இன்னும் அதிகப்படுத்த, “ஆமா… எங்க அம்மா டீ தான் விக்குறாங்க… டீ வித்துதான் என்னைய என் தம்பி தங்கச்சிங்கல படிக்க வைக்குறாங்க… ஒழுக்கமாவும் வளர்த்திருக்காங்க… ஆனா நீயி” என்றவள் நிறுத்தி,
“உனக்கு இருக்க ஒரே பேரனை செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்கி வைச்சு இருக்க… அந்தத் தருதலை இப்போ குடிச்சு போட்டு ஊரை சுத்திட்டுக் கிடக்கு… இதுல நீ ஊருக்கெல்லாம் சாபம் கொடுத்துட்டு இருக்க… நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு யாரு கிழவி சாபம் கொடுக்கிறது” என்றவள் கோபத்தில் வெடிக்க, அதிசயிக்கும் விதமாக பேச்சி கிழவி அவளை எதிர்த்து எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தார்.
அதுவும் அவளை ஏறிட்டும் பார்க்காமல் அவர் தலையைத் தாழ்த்திக் கொண்டிருக்க, அவள் அதோடு நிறுத்தவில்லை. அவன் மீதான கோபம் அப்போதும் அவளுக்கு அடங்கவே இல்லை.
“அப்படி ஒரு கேடு கெட்டவனை வளர்த்ததுக்கு நீயெல்லாம் நாண்டுகிட்டு சாகோணும்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
வீடு வரும் வரை தான் ஏன் அப்படி பேசினோம் என்ற யோசனையெல்லாம் அவளுக்கு இல்லை. தன் கோபத்தைக் கொட்டிவிட்டோம் என்று ஒருவகையில் அவளுக்கு நிம்மதியாகவே இருந்தது.
ஆனால் வீட்டை அடைந்த பின்தான் பேச்சி கிழவி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற எண்ணம் தோன்ற, அவளுக்கு ஏதோ நெருடலாக இருந்தது. எந்நிலையிலும் பேரனை விட்டுக் கொடுக்காமல் அவன் எது செய்தாலும் நியாயம் என்று அடித்து பேசுபவர் ஏன் மறுப்பாக அவளிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை?
அவள் யோசனையோடு தங்கையிடம் கோவிலில் நடந்தவற்றைச் சொல்ல செல்வியோ அச்சம் மேலிட,
“போச்சு போ… அந்தக் கெழவி வரிஞ்சு கட்டிகிட்டு நம்ம வீட்டு வாசலில வந்து நிற்க போவுது” என்றாள். ஆனால் அவர்கள் பயந்தது போல அப்படி ஒன்றும் நிகழவில்லை. ஆனால் விடியற்காலையில் அவர்கள் எதிர்பாராத வேறு ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது,
பேச்சி கிழவியின் மரணம்!
4

Quote from Marli malkhan on May 16, 2024, 7:16 PMSuper ma
Super ma