You don't have javascript enabled
RomanceRomantic comedysivaranjani novels

Vithai-4

விதை 4

   அவன் கவிதையைக் கேட்ட அதிதி ஆனந்தத்திலும் அதிர்ச்சியிலும்  திளைத்தவளாக  தன் இரு கைகளால்  வாயை மூடிக்கொண்டு  அழுகை, நகை இரண்டினையும்  ஒரு சேர முகத்தில் ஏந்தி, விழியோரம் துளிர்த்த  நீர்த்துளியுடன்  நின்றாள்.தன்னைத் தானே கிள்ளியும் பார்த்துக்கொண்டாள்.

        இதனைப்  பார்த்துக்கொண்டிருந்தவன், “ஏங்க உங்க ரியாக்ஸன்லாம்  பார்த்தால் பாஸிடிவாதான் தோணுது. இருந்தாலும் உங்க வாயால சொல்லிட்டீங்கன்னா கொஞ்சம் நெஞ்சம் மகிழும்.”

    அவள் கண்களை  அளவில்லா ஆர்வத்துடனும் சிறு தவிப்புடனும்  பார்த்துக் கேட்டான்.

   அவளோ தன் அலைபேசியைக்  குடைந்தவாறே,

      “கொஞ்சமாத்தான்  நெஞ்சம் மகிழுமா ? நிறைய இல்லையோ” என்றாள்

       “ஏங்க இப்டி மொக்கை போறீங்க.உங்க முடிவ உங்க வாயால  சொல்லிட்டு,அப்பறம் பொறுமையா எவ்ளோ வேணா  போடுங்க”

       அவள் அலைபேசி

“முதல் முறை  கிள்ளி பார்த்தேன், முதல் முறை கண்ணில்  வேர்த்தேன்”

என்ற பாடலை  அவள் குரலில் ஒலிபரப்பியது.

       “என் முடிவு என் வாயால, போதுமா?” என்றாள், சிறு நாணப் புன்னகையுடன். அவனோ அவனது நிறைந்த மனதினை முகத்தில் புன்னகையாக  வழியவிட்டான்.அவள் தொடர்ந்தாள்.

      “நீங்க சொன்ன கவிதை என் மனசை  அப்டியே சொன்னது போல இருந்துச்சு.நானும் உங்கள பார்த்த நாள்ல இருந்து, ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேன். உங்க கூட இருந்தா அவ்ளோ பரவசம். இந்த ஞானிங்கல்லாம் சொல்வாங்களே, மனம் அறுந்த   நிலைன்னு,அது போல,உங்க கூட இருந்தா,இனம் புரியாத நிம்மதி மட்டும் இருக்கும். வேற எதுவுமே வராது மைண்ட்ல.

           ஸ்டோரீஸ்ல, சினிமாலலாம் பார்த்தா எனக்கு சிரிப்பு வரும்.பட் நானே அப்டி ஒரு நிலைக்கு வருவேன்னு  நான் ஒருநாளும்  நினைச்சதில்ல.

         உங்களுக்கும்  ஏதோ இருக்குனு உங்க பார்வைல  தெரிஞ்சுது.ஆனா இந்த மதம் மனசுல வந்து,சரி வராதுன்னு  கண்ட்ரோல்  பண்ண பார்த்தேன். எங்க வீட்ல எந்த ப்ரோப்லமும்  இல்ல.எந்த கெட்ட பழக்கமும்  இல்லாத, ஒரு நல்ல பையன்,அவ்ளோதான் அவங்க டிமாண்ட்.

இருந்தாலும்  உங்க வீடு பத்தி எனக்குத் தெரியாதே.

பெரும்பாலும்  ஒரு செட் அப்ல இருந்து வெளில போக, யாரும் விரும்ப  மாட்டாங்க. படிப்பு தொழில்லாம் வெளியவே முடிஞ்சிருது. பட் கல்யாணத்துல  ரெண்டு குடும்பம் இணைஞ்சு நகமும்  சதையுமா இருக்க வேண்டி  இருக்கு. சாப்பாட்ல  இருந்து, நம்பிக்கை வரை எல்லாத்துலயும் ஒன்னு மாத்திக்கணும்  இல்ல ஏத்துக்கணும். அது அவங்களுக்கு கம்போர்ட்  ஜோன் விட்டு வெளில வர்றது  போல.

     இப்படித்தான் பெரும்பாலான குடும்பங்கள்  இருக்கு. ஆனா இந்த சின்ன நியாயத்தை  பிடிச்சிட்டு, அதை ஒரு நொண்டி  சாக்கா வச்சிட்டு  அவங்களோட எல்லா வக்கிரங்களையும் ஒரு சிலர் தீர்த்துக்குறாங்க.அதான் ரொம்ப வேதனையா  இருக்கு.

         எதையோ  பேச வந்து எங்கயோ போய்ட்டேன். பட் நீங்க என் கூட பேசாம இருந்தீங்களே, அப்போதான் புரிஞ்சுது,நீங்க இல்லாம லைப்  புல்லா வலியோட  வாழறத விட,வர பிரச்சனைய சமாளிக்கறதுதான் பெட்டர்னு.

       உங்க கிட்ட இருந்து  விலக  என் சைக்காலஜி யூஸ் பண்ணி,ஆயிரம் பூட்டு  போட்டு பார்த்துட்டேன்  மனசுக்கு .காதல்னு ஒரு சாவி  வச்சு மொத்த பூட்டையும் திறந்திருச்சு  மனசு.”

அவன் முகம் கொள்ளாப் பூரிப்புடன், “எங்க வீட்லயும்  ஒரு பிரச்சனையும்  இல்ல”  என்றான

        “ரியலி???!!!!” என்று வியந்து,அவளும் பரவசம்  பரப்பினாள் அவள் முகத்தில்.

       “அப்போ நம்ம காதல் வில்லன் இல்லாத காதல் போல”  என்று அவள் கூற, இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.

ஆனால் பாவம் அவர்களுக்கென்ன தெரியும்,ஒரு புது வகையான  வில்லன்  அவர்களின் காதலுக்கு வரவிருக்கிறது என்றும், அவர்கள் திக்குமுக்காடப் போகிறார்கள் என்றும். அவர்களுக்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவைப்படும் அன்பர்களே. உதவக் காத்திருங்கள்.ஆனால் உங்களில்  சிலர் அந்த வில்லனுடன்  கை கோர்ப்பீர்களோ  என்ற கவலையில் உள்ளேன்  நான்.

        அவளை ஒரு ஆழப் பார்வை பார்த்தவன் பின்பு அவசரமாக, “நம்ம இதுக்கு மேல இங்க நிக்கறது சரியா வராது வா போலாம்” ,என்றான்

         “ஏன் அமர் ஏதாச்சும்  பிரச்சனையா? திடீர்னு என்னாச்சு?”

       “ஆமா ரொம்ப சீரியஸான  பிரச்சனை”

       “என்னது?”  என்று  பதறி கேட்டாள்.

       “இதுக்கு மேல இங்க இருந்தா நான் உன்னை ஹக் பண்ணிடுவேன்”

         “ஹாஆஆஆன்”  என்று வாய்விட்டு  அதிர்ந்தவள்

        “இதைதான் இடம் குடுத்தா  மடம் பிடிக்கறதுனு  சொல்வாங்க”

         “ஹேய், ப்ளீஸ், தப்பா நெனச்சுக்காத, அது பிஸிக்கல் இல்ல, மெண்டல்  நீட். என்னதான் நமக்கு ப்ரோப்லேம் இல்லனாலும், உள்மனசு  எதோ ஒரு தவிப்போடயே இருக்கு.மனசை பிசையற  மாதிரி இருக்கு.இப்போவே உன்னை என் பொண்டாட்டி ஆக்கிக்கிட்டா நல்லா இருக்குமேன்னு தோணுது.தோணினத சொல்லிட்டேன்….தப்பா இருந்தா சாரி…”

      “புரிஞ்சுது அமர்,நீங்க சொல்றதுக்கு  முன்னமே”

        “தேங்க்ஸ் டா”

         “அடடா!  ஓவர் சென்டியா இருக்கே. கரம் பற்ற சிரம் அசைத்தால் போதும்னு சொன்னீங்க,மேலயும் கீழயுமா, இட வலமாவானு  சொல்லவே இல்ல.இட வலமா ஆட்டட்டுமா “

          “ஹேய்! ஆட்டிப்  பாரு,அதிதி உன்னை வெளுத்திருவா”

           “பார்ர்ராஹ்”

          “பார்த்தா பார்த்துட்டே இருப்பேன் பரவால்லையா”

           “நல்லாத்தான் பேசறீங்க “

        இவ்வாறு பேசிக்கொண்டே  வந்தனர்.

                அவன் ஒரு இடத்தில் நின்று, “ப்ளீஸ் ஒரு  ஹான்ட் ஷேக்  குடு” என்றான். அவள் ஆச்சர்யமாய் பார்த்துவிட்டுக் கொடுத்தாள்.

           தொழில் ரீதியாக, எத்தனையோ பேரிடம்  இருவருமே கை குலுக்கியுள்ளனர். ஆனால் இது அவர்களின் உயிர் வரை தீண்டி நிறைவு  கொள்ளும் உணர்வைத்  தோற்றுவித்தது. அதனைக் கண்களில் பரிமாறிக்கொண்டு  அலுவலகம் சென்றனர்.அங்கே வர்ஷன் இவர்களுக்காக  காத்திருந்த்தான்.

அவசரமாக வந்தனா எண்  வேண்டும் என்று அதிதியிடம் கேட்டான்.

  வர்ஷன் வந்தனா எண் கேட்டதும் ஆச்சர்யமாக பார்த்தாள் அதிதி.ஆனால் எதற்கு என்று குடையாமல்  தந்துவிட்டாள்.

        வர்ஷன் அவள் எண்ணுக்கு அழைக்க, அவர்களின் உரையாடல் இதோ:

            “ஹெலோ”

            “ஹெலோ நான் வர்ஷன் பேசறேன்”

             “எந்த வர்ஷன்?”

             “ஹான் கடன்காரன் வர்ஷன்”

             “வாட்ட்ட்?”

               “வாத்துமில்லை  கோழியுமில்ல “

அவள் கட் செய்திருந்தாள்.திரும்ப அழைத்தால் எடுக்கவில்லை.” நான் அமர் ப்ரண்ட் ப்ளீஸ் அட்டென்ட் தி கால்”  என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.பின்னர் எடுத்தாள்.

           “சொல்லுங்க வர்ஷன் ” என்று  எக்கச்சக்க கடுப்புடன் சொன்னாள் (  இவன் எதுக்கு நமக்கு  போன் பன்றான்.அதுவும் எப்பவும்  போல  ராங்கா பேசறான்.பேசாம  ராங்கு ரங்கன்னு பேர் வச்சுறலாம் ஆர் ஆர்.என்று மைண்ட் வாய்ஸ்)

             “நீங்க நாஸ்தி  செஞ்சீங்களே  அந்த ஷர்ட். அத  திரும்ப யூஸே செய்ய முடியாது. புல் ஸ்டெயின். வாஷ் செஞ்சா போகல”

              “ஐம் சாரி”  ( டேய்!ஒரு ஷர்ட்க்கு போன் பண்ணி  திட்டுவியா.என் பொறுமைய ரொம்ம்ப சோதிக்குறான். சரியான சிடுமூஞ்சி  )

               “சாரி சொல்லிட்டா  ஆச்சா?”

             “இப்போ என்ன செய்ய சொல்றீங்க?”

               “அது 2000 ருபீஸ். அன்னைக்குதான்  போட்டேன். சோ நஷ்ட  ஈடு  குடுங்க.என் மன உளைச்சல்  ,உடல் கஷ்டத்துக்கெல்லாம்  கேக்கல. எனக்கு பரந்த  மனசு.ஷர்ட்க்கு மட்டும் குடுங்க 2000  ருபீஸ்.”

          சத்தியமாக  இவள் இதனை எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்தாள்  என்றுதான்  கூற வேண்டும்.எப்படி ரியாக்ட் செய்ய என்றே புரியாமல் குழம்பினாள்  ஒரு கணம்.

        (ஒரு கம்பெனி  ஓனர்.சரியான கஞ்சப் பிசினாரி. ஏதோ தெரியாம இடிச்சதுக்கு, கூப்பிட்டு  காசு  கேக்கறான். வசூல்  ராஜா.இதுல என்னலாம் டயலாக் பேசறான். ஓடமும் வண்டில  ஏறும்.வண்டியும் ஓடத்துல ஏறும்னு சொல்லிருக்காங்க. எனக்கும் சான்ஸ் வரும்.அப்போ இருக்கு உனக்கு) ரொம்ப பெரிய மைண்ட் வாய்ஸ்மா .

      வந்தனா சொன்னது போல் வர்ஷன்னும்  எ ஜி சி பிரைவேட்  லிமிடெட் இன் 50%  பங்குதாரர்.

         “ஹெலோ,என்ன சைலன்ட்  ஆயிட்டீங்க. அப்டியே என்ன சொல்லி ஆட்டைய போடலாம்னு  பாக்கறீங்களா?”

         “அது, 2000 ரூபீஸ்னு நான் எப்படி நம்பறது . 200 ரூபா  சட்டையை  2000 சொல்லி கொள்ளை அடிச்சிடீங்கனா,அதான் யோசிச்சேன்.”

       “ஒரு டிடெக்ட்டிவ்  ஏஜென்சி  கிட்ட சொல்லி உளவு  பார்த்து கண்டுபிடிங்க.(வாய் இருக்கே வாய்.எப்பா ) இது அவன் மைண்ட் வாய்ஸ்

      “சரி ஓகே. கண்டுபிடிச்சிட்டு  தரேன்” (சரியான கொழுப்பு)   

“ஹெலோ, அதெல்லாம் வெய்ட் செய்ய முடியாது. ஐ ஹேவ்  எவிடென்ஸ். வந்து பார்த்திட்டு குடுங்க”

         அதெல்லாம் வர முடியாது.வாட்சப்  பண்ணுங்க உங்க எவிடென்ச,நான் அதிதிகிட்ட  குடுத்து விட்றேன்”

         “அதெல்லாம் முடியாது. அவங்களா  என் ஷர்ட் நாசம் பண்ணாங்க. நீங்களே  வந்து குடுங்க”

       “சரி உங்க அக்கவுண்ட்  நம்பர்  தாங்க போடறேன்”

       “அதெல்லாம் தர முடியாது.படு சீக்ரெட் . அதோட எங்க வச்சு பாவம் செஞ்சீங்களோ  அங்கேயே பரிகாரம்  பண்ணுங்க. ACC க்கு வாங்க.இந்த கைல எவிடென்ஸ்,அந்த கைல பணம்”

      (ஷபாஆஆஆ இவன் பேசறதெல்லாம் கேட்டா  எரிச்சலாவும் வருது.சிரிப்பாவும்  வருது.ஒரு ஷர்ட்க்கு எவ்வ்வ்வ்வ்ளோ  பேசறான்)

      “பெட்ரோல்  செலவு  செஞ்செல்லாம்  வர முடியாது.”

      “வரணும்ங்க. நீங்க செஞ்ச தப்ப நீங்கதானே  சரி பண்ணனும். இருந்தாலும் எனக்கு பெரிய மனசு,அதனால பெட்ரோல் செலவை  கழிச்சிட்டு  குடுங்க”

      (இவன் நம்மை இப்டி மொக்கை போட்டே கொன்னுடுவான்  போல,பேசாம போய் குடுத்திருவோம் )

   “சரி எப்போ வரணும்”

    “டுடே ஈவ்னிங்  5 ஓ க்ளாக்”

      “ஓகே பை”

      ( ப்ரம்மா!  சும்மா  சொல்ல கூடாது, உங்க இன்னோவேஷன்லாம்  கொட்டி  ஒரு க்ரீச்சர், சாரி க்ரியேஷன்  செஞ்சுருக்கீங்க. பட் அவுட்புட்தான்  கொஞ்சம் சொதப்பிருக்கு  போல.பெட்டர்  லக் நெக்ஸ்ட்  டைம்..நான் ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா சாரி,இந்த கிண்டல்  அந்த கிரீச்சருக்கு,உங்களுக்கு இல்ல)வர்ஷன்￰ மைண்ட் வாய்ஸ்

        வந்தனா சரியாக 5 மணிக்கு  அங்கு சென்றுவிட்டாள். இவளும் அவனும் ஒரு சேர ஏசிசி  இல் நுழைய, இவளைப் பார்த்தவுடன் பூங்காவிற்கு  வருமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டான். அவளும் அங்கே சென்றாள், இங்கயே வாங்கிகிட்டு  விட்றதுதானே.சரியான ஆர் ஆர் என்று மைண்ட் வாய்ஸ் போட்டுக்கொண்டே.

       “எங்க எவிடென்ஸ்?”  என்று கடுப்புடன் கேட்டாள்.

       “உங்க கூட சண்டை போட்டா  சந்தோசமா இருக்குங்க. லைப் லாங் லைசென்ஸோட என் கூட  சண்டை போட வறீங்களா?” சத்தமில்லாமல்  சரவெடி  வெடித்தான்.

       “வாட்ட்ட்ட்????”  இவங்க வேற எப்போ பார்த்தாலும்  வாத்தைக்  கூப்டுகிட்டு. என்னை கல்யாணம் பண்ணிக்குறீங்களா?”

        “வர்ஷன் ப்ளீஸ்,ரொம்பதான் ஓவரா போறீங்க. இந்தாங்க நீங்க கேட்ட காசு,நான் கிளம்பனும். எனக்கு வேலை  இருக்கு”

       இதற்குள்ளாகவே  அவள் முகம் இறுகியிருந்தது.

     “ஆமா, ஒரே டைம் பார்த்த பொண்ணுகிட்ட இப்டி சொல்றது ஓவர்தான். பட் உங்க வீட்ல மாப்ள பார்த்தாலும் ஒரே டைம் தானே பார்ப்பீங்க. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல,ரொம்ப மோசம்லாம்  இல்ல,கொஞ்சம் நல்ல பையன்தான்.நீங்க விசாரிச்சு  பார்த்துக்கோங்க.அப்பறம் சொல்லுங்க.மொட்டையா  வேணாம்னு சொல்லாதீங்க”

         “ஆர் யூ சீரியஸ்? “

        “என்னங்க இப்டி கேக்கறீங்க.உங்க முன்னாடி ஹெல்தியா  நல்லாதானே  நிக்குறேன்”

         முறைத்தாள்

      “ஓகே. ஓகே. கூல். யெஸ்,ஐம் டேம்  சீரியஸ்”

        “சாரி,இது சரியா வராது, பை”

        “ஏங்க? யோசிச்சு சொல்லுங்க”

        “யோசிக்கலாம்  ஒண்ணுமே இல்ல வர்ஷன். நீங்க நல்லவர்தான். ஒரு பொண்ணை பெத்தவங்க உங்களை போல ஒரு பையன் கிடைச்சா கண்டிப்பா சந்தோசமா பொண்ணு குடுப்பாங்க. அதெல்லாம் இல்ல,இது சரியா வராது”

         “அதான் ஏங்க? நீங்க வேற யாரையும்  விரும்பலனு  எனக்கு தெரியும். சண்டை போட்டேன், செட் ஆகாதுன்னு  யோசிக்குறீங்களா?”

        “அப்டிலாம் இல்ல வர்ஷன், யூ டிசெர்வ் எ பெட்டெர்  கேர்ள்”

        “பினான்சியல்  டிஃபரென்ஸ்  யோசிக்குறீங்களா?,அதெல்லாம் ப்ராப்லம் இல்லங்க.ஆப்டர்  மேரேஜ் ரெண்டும் ஒரே பேமிலிதான்,அந்த வகையில் எந்த ப்ராப்லமும் வராது,ஐ அஸ்யூர்  யூ”

       “அதெல்லாம் இல்ல வர்ஷன்.”

       “பின்ன என்னதாங்க  பிரச்சனை, நான் கல்யாணமே  செஞ்சுக்க  கூடாதுனு முடிவுல  இருந்தேங்க. என்னோட கசப்பான அனுபவம்  அப்டி. என் லைஃப் இப்டியே வெறுமையாவே போய்டுமோனு பீல் பண்ணிருக்கேன்.உங்கள பார்த்தப்பறம்தான் எனக்கு லைஃபே  உயிர்ப்போட இருக்கற மாதிரி இருக்கு. நம்பிக்கையா  இருந்துச்சு.இப்போ புரியுதுங்க, அந்த பொண்ணுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்னு  இப்போ புரியுது.ஆனா ரீசன் சொல்லுங்களேன்  ப்ளீஸ். ஒன்னு கரெக்ட்  செய்வேன்.இல்லனா என்னை தேத்திக்க ஹெல்பா  இருக்குமே”

        அவள் வெடித்து அழுதாள். அவன் பதறிவிட்டான்.

    “அச்சோ ப்ளீஸ் அழாதீங்க. நான் ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா சாரி,நான் எதுவும் கேக்கல.ப்ளீஸ் அழாதீங்க” அவள் கதறி  அழுதாள். அவன் செய்வதறியாது ஸ்தம்பித்து  போனான்

       “எனக்கு பதறுதுங்க.அழாதீங்க ப்ளீஸ். அச்சோ!  அந்த பொன்னும் இப்படியேதான் அழுதா, எனக்கு பயமா  இருக்கு, தாங்க முடிலங்க,ப்ளீஸ்,என்னனு  சொல்லுங்க.நான் உங்க பிரண்டை  கூப்படறேன்”

        அவன் பதற்றத்தைப்  பார்த்து சற்று சுதாரித்தவள்,

        “வேண்டாங்க, ஐம் ஓகே.நீங்க பதறாதீங்க.நான் சொல்றேன்.” என்று கூறி தன்னை சமன்  படுத்திக் கொண்டாள்.

     அவன் பதற்றத்தையும்  கண்களில் கசிந்த வலியையும் தவிப்பையும்  கண்டவள், கலங்கிப்  போனாள்.

       சிறிது நீர் அருந்தி  ஆசுவாசம்  அடைந்தாள். பின்னர் கண்ணாடி  எடுத்து முகம் பார்த்தவள் கூறியது  இதுதான். (ஹேண்ட்  பேக்ல எல்லாம் வச்சிருப்போம்,எங்க இருந்து தண்ணி,கண்ணாடின்னு  கேக்கப்டாது  )

           “என்னடா ரொம்ப பதறுறீங்களேன்னு பார்த்தா இப்போதான் புரியுது, மூஞ்சி அவ்ளோ கொடூரமா இருந்திருக்கு போல. ஆனா எவ்ளோ கெட்ட எண்ணம் இருந்திருந்தா இந்த மூஞ்சிய  என் பிரண்டுக்கு  காட்டி அவளையும் பயமுறுத்த  நெனச்சிருப்பீங்க. நாங்கல்லாம் யாரு, எங்ககிட்டயேவா?”

         அவள் கண்கள் வலியை குத்தகைக்கு  எடுத்திருக்க  இதழ்களின்  இந்த உற்சாக  சொற்களில், அவள் தன்னை (வர்ஷன்) சமனப்படுத்தவே  இவ்வாறு பேசுகிறாள் என்று உணர்ந்த  நொடி, கண்களில் நீருடன்  சிரித்தான்.

          ” ஹெலோ என்ன நக்கலா? சிரிக்குறீங்க “

          ” இல்ல விக்கல். விக்கல் வந்தா சிரிச்சா  சரியா போயிரும்னு  ஒரு சாமியார் சொன்னார்.அதான் சிரிச்சேன்

“(உண்மைலயே உன் குணத்தை பார்த்து விக்கிச்சு போய்தான்  நிக்குறேன்_வர்ஷன் மைண்ட் வாய்ஸ்)

         “ஓவரா ஓட்றதை  ஓவர் டைமா செய்றீங்க. ஐ திங்க்  உங்களுக்கு பேட் டைம்”

         “போகப் போக தெரியும் யார்க்கு  பேட் டைம்னு”

        இவ்வாறு பேசிக்கொண்டே முகம் கழுவிவிட்டு, ஊஞ்சலில்  குதித்து  அமர்ந்தாள்.

( வொய் சேம் லொகேஷன்னு கேக்குறது காதுல விழுது .இங்க தான் வாஸ்து  நல்லா இருக்குங்க .அதான் சேம் லொகேஷன்)

        “என் அறிவு அடமானத்துல இருக்குனு சொன்னீங்களே, உங்க அறிவை யார் கிட்ட வித்தீங்க.இவ்ளோ உயரமா ஊஞ்சல் வச்சா எப்படி உந்தி  ஆடறதாம். யாராச்சும் ஆட்டி விட்டா  மட்டும்தான் உண்டு. இதுக்கு நீங்களும்தானே  ஓனர்,இப்டி ஐடியாலாம் நீங்கதான் குடுத்திருப்பீங்க”

      அவனுக்கு அவள் மீது ரசனை தோன்ற சிரித்தவாறே பதிலுரைத்தான்

       “இதுல ஏகாந்தம்  அதிகம்.” அவளை ஆட்டிவிட்டுவிட்டு  இருபொருள்  பட கூறினான்.

       “யாரைக்  கேட்டு ஆட்டிவிட்டீங்க  “

        “ஊஞ்சல்தான்  ஆட்டி விட சொல்லி கேட்டுச்சு. நான் ஊஞ்சலத்தான்  ஆட்டினேன். நீங்க அதுல இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல”

      அவள் அதற்கு பதில் பேச வாயைத் திறக்கும் முன்,

         “போதும் வந்தனா. ஐம் ஓகே நவ்.எதுக்கு அப்டி அழுதீங்க.எனக்கு அது நார்மலா  தோணல. பல நாள் சேர்த்து வச்சு வெடிச்சது  போல இருந்துச்சு.”

        மீண்டும் அவள் முகம் இறுகியது. மௌனித்தாள்.

          “வந்தனா ப்ளீஸ். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்குனு  எனக்கு தெரியுது. உங்க கண்ல ஏக்கமும் தவிப்பும் போட்டி  போடுது. எதுவோ  உங்களைத் தடுக்குது.என்னனு சொல்லுங்களேன். என்னைப் பார்த்தா அவ்ளோ மோசமா  தோணுதா.முடிஞ்சா பிரச்சனையத்  தீர்ப்போம்.முடியாதுனா,ஐ வோண்ட் டிஸ்டர்ப்  யூ.”

         முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு, உடையும் குரலை உறுதிப்படுத்தும் முயற்சியுடன் பேசினாள்.

         “யெஸ் வர்ஷன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. உங்க கூட சண்டை போட்டா மனசுக்கு  சமாதானமா சந்தோசமா இருக்கு.நீங்க சொன்னது போல கல்யாணமே வேண்டாம்னுதான்  நானும் இருந்தேன்.

ஆனா உங்கள பார்த்தப்பறம்,உங்களப்  பத்தி ,இந்த ACC ல உள்ளவங்க  சொன்னதலாம் கேட்டப்பறம்,எனக்கு உங்க மேல மரியாதையும், ஈர்ப்பும், உங்கள போல ஒருத்தர் ஹஸ்பண்டா  வந்தா எப்டி இருக்கும்னு வரை எண்ணம் போய்டுச்சு.

ஆனா இது சாத்தியமே  இல்ல,எப்டி என் மனசு இவ்ளோ பெருசா ஆசைப்பட்டுச்சுனு  திட்டி  அடக்கி வச்சேன்.

அப்படி என்ன நிகழ்ந்தது வந்தனா வாழ்வில், தெரிந்துகொள்ள  காத்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content