You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru thruvagal - Episode 1

Quote

வாசகர்களுக்கு என் வணக்கங்கள்! இந்த நாவல்தான் என்னுடைய முதல் நாவல். நிறைய பிழைகள், என்னுடைய எழுத்தில் முதிர்ச்சியின்மை போன்றவை இருக்கலாம். தயவு கூர்ந்து  பொருத்தருள்வீராக. தொடர்ந்து வாசித்து என்னையும் என் எழுத்தையும் ஊக்குவிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன். - மோனிஷா 

இரு துருவங்கள் 

1

அறை எண். 603

பதினைந்து மாடி உயர கட்டிடம்.

வண்ண விளக்குகள் எங்கும் மின்னிக் கொண்டிருந்தன.

சுற்றிலும் பசுமையான புல்வெளிகள் படர்ந்திருந்தன. வரிசையாக விலை உயர்ந்த வாகனங்களின் அணிவகுப்புகள். அந்தக் கட்டிடத்தின் உச்சத்தில் கோபுரம் போல் அமைக்கபட்டிருக்க, சென்னை மாநரகத்தில் அந்தக் கட்டிடம் நூற்றாண்டுகள் முன் வடிவமைக்கப்பட்ட அரண்மனை போல் காட்சியளித்தது.

ஆனால் அது அரண்மனை அல்லவே! நட்சத்திர ஹோட்டல் ஆதித்யா!

பளிச்சென்ற தங்க நிற விளக்குகளால் ஆங்கிலத்தின் முதல் எழுத்து ‘ஏ’ கீரிடம் போல் மேல்மட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த நட்சத்திர ஹோட்டலின் ஆறாவது மாடியில் தங்கியிருந்த கேத்ரீன், தள்ளாடிக் கொண்டே தன் அறை எண். 603ல் சாவியை நுழைத்தாள்.

அவளின் உடையும், வெண் தோலும் அவள் வேற்று நாட்டவள் போல் தோன்ற செய்தது. கதவை திறந்து கொண்டு அவள் அறைக்குள் நுழைந்தவுடன் திரைச்சீலைகள் அசையத் தொடங்கின.

கேத்ரீன் நிலை தடுமாறும் அளவுக்கு மதுபானம் அருந்தியிருந்தாள். கண்கள் மங்கிய நிலையில் திரைச்சீலைகளை விலக்கிக் கொண்டு, அந்த அறையின் பால்கனி கதவை திறந்து வான்வெளியை ரசித்தபடி நின்று கொண்டிருந்தவளின் கால்கள் அந்த பளிங்குத் தரையில் வழுக்கின.

என்ன நேர்ந்தது என்பதை உணரும் முன்னரே அவளின் உடல் தரையில் மோதி இரத்தம் சிதறியது.

திடீரென எதிர்பாராமல் நிகழந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘கேத்ரீன்... ’ என்று ஆவேசமாய் ஒரு குரல் கதறியது.

You cannot copy content