மோனிஷா நாவல்கள்
Iru Thruvangal - Episode 11

Quote from monisha on July 2, 2025, 7:05 PM11
நிச்சயதார்த்தம்
சந்திரகாந்த்தின் பிரம்மாண்டமான வீடு முழுவதும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நிச்சயத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் வேலையாளிகள் எல்லோரும் சேர்ந்து செய்து கொண்டிருக்க, சமுத்திரனும் அவனுடைய மனைவி சுபாவும் மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தனர்.
சமுத்திரன் பற்றி நாம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அவன் ஆதியின் நெருங்கிய நண்பன் என்று சொல்வதை விட சந்திரகாந்த்தின் வளர்ப்பு மகன் என்றே கூற வேண்டும்.
ஆதித்தியா ஹோட்டல் இத்தனை பெரிய வளர்ச்சியை அடைவதற்கு முன்பு சமுத்திரனின் தந்தை அங்கே சாதாரண வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சமுத்திரனின் திறமையை அறிந்து கொண்ட சந்திரகாந்த் அவனை ஆதியோடு சேர்த்து படிக்க வைத்தார்.
அவன் இன்று பெரிய கிரிமனல் லாயராக இருப்பதற்கு சந்திரகாந்தே முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி அவருடைய நெருங்கிய தோழனும் வக்கீலுமான திருமூர்த்தியின் ஒரே மகள் சுபாவினை திருமணம் முடித்து வைத்தார்.
ஆதி தன் தந்தை சந்திரகாந்த்திடம் நேரடியாக பேசாத அளவுக்கு இருவருக்குமிடையில் சில மனவருத்தங்கள் இருப்பதின் காரணத்தால் அவர்களின் உறவுக்கிடையில் சமுத்திரனே பாலமாகத் திகழ்ந்தான்.
நிச்சயத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு சமுத்திரன் மாடியிலிருந்த ஆதியின் அறைக்குள் நுழைந்தான். ஆதித்தியா வெள்ளை நிற சட்டையும் அதன் மேல் ஒரு கருப்பு நிற ஓவர் கோட் அணிந்து கொண்டிருந்தான். இந்த உடையில் அவனின் உயரமும் கம்பீரமும் நம்மை மலைக்கச் செய்கிறது.
அவனின் முடியை கைகளாலேயே கோதியபடி நின்று கொண்டிருந்தான்.
“என்ன ஆதி... ஹீரோ மாதிரி ரெடியாயிருக்க”
“ஹீரோ மாதிரி இல்ல... நான் ஹீரோவேதான்” என்றான்.
“சரி... மதுமிதாவை மீட் பண்ணி நிச்சயத்தை நிறுத்த போறேன்னு சொன்ன. ‘கடைசியில் மாடலிங் பண்ணப் போறேன்... மேரேஜ் வேண்டாம்’னு சொன்னவள் உன்னைப் பாத்ததும் என்கேஜ்மென்டுக்கு ஓகே சொல்லிட்டாளாம். நீ என்ன சொன்ன? இப்ப என்ன பண்ணி இருக்க?” என்று சொல்லி குலுங்கி குலுங்கி சிரித்தான்.
“தட்ஸ் நாட் மை மிஸ்டேக். நான் ஃபிரண்ட்லியாத்தான் பேசினேன். ஷி மிஸ்அன்டர்ஸ்டுட் மீ... வாட் டு டூ? பட் அது மேட்டர் இல்ல... இப்ப நடக்கப் போது பாரு ரியல் மேட்டர்... வா காட்டறேன்” என்று சொல்லி ஆதி சமுத்திரனை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
******
விந்தியா பார்க்க அழகுப்பதுமை போலவே காட்சியளித்தாள். ஆனால் விந்தியா தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வேறு யாரையோ பார்ப்பது போலிருந்தது. அவள் இயல்பாக இருந்தாலே அழகு என்பது அவளுடைய எண்ணம்.
ஏற்கனவே அவள் நகைகளை அணிந்து கொண்டிருக்க மாதவி இன்னும் சில நகைகளைப் போட்டு விட வந்தாள்.
“அம்மா... என்னைப் பார்த்தா நகை ஸ்டான்ட் மாதிரி தெரியுதா உனக்கு?” என்று மாதவியிடம் கோபம் கொண்டாள் விந்தியா.
“அழகா இருக்கும்டி போட்டுக்கோ”
“ஒண்ணும் வேண்டாம்... போட்டுட்டிருக்கிற நகையே கழுத்து வலிக்குது. பொண்ணுங்க தப்பித் தவறி கூடத் தலைய நிமிந்திரக்கூடாது... அதுக்குத்தான் இந்த நகை எல்லாம்... இல்ல?” என்றாள் விந்தியா.
இவளிடம் பேசினாள் ஏதேனும் வம்பு வளர்ப்பாளோ, என அந்த நகைகளை மாதவி திருப்பி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். மாதவி சென்றதும் விந்தியா தனியே புலம்பிக் கொண்டிருந்தாள்.
“எப்ப கேட்டாலும் செலவாயிடுச்சு... காசு இல்லனு சொல்லும் போதே நினைச்சேன். எல்லாம் நகையா மாறியிருக்கு”
“என்ன விந்து... எல்லோரும் கல்யாணம் ஆன பிறகுதான் தனியே புலம்புவாங்க. நீ இப்பவேவா?” என்றாள் நாம் விமானத்தில் சந்தித்த தோழி சித்ரா.
“வா சித்ரா!”
“இப்பதான் லண்டன் மாப்பிள்ளையைப் பார்த்தேன்... சூப்பர்... யு ஆர் வெரி லக்கி”
“நீ வேற எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றாதே”
“வாட் விந்து... செம லுக்... நீ வேண்டாம்னு மட்டும் சொல்லேன்”
“வேண்டாம்...”
“என்னடி இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்ட?”
“அப்புறம்?”
இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே விந்தியாவை வெளியே நிச்சியதார்த்த சடங்கிற்கு அழைத்தனர். வனிதா மாதவிக்கு உதவியாய் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிவா கிருஷ்ணகுமாருடன் பேசிக் கொண்டிருந்தான். அவனின் சொந்தக் கதையும், வெளிநாட்டு பெருமையையும் வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான். இவனை எப்படி விந்தியாவிற்கு பிடித்தது என்பது சிவாவிற்குப் புரியாத புதிராய் இருந்தது.
சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும் விந்தியாவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் திடீரென எழுந்து கொண்டான். அவன் வாங்கி வைத்திருந்த வைர மோதிரத்தை விந்தியாவின் கைகளில் அணிவிக்க அவள் அருகில் வந்து நின்றான்.
அவன் அவளின் விரல்களில் அணிவித்த மோதிரம் மனதில் ஏதோ புரியாத சோகத்தை விந்தியாவிடம் ஏற்படுத்தியது. தன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளாமல் விந்தியா அங்கிருந்து சென்றாள். நிச்சியதார்த்த சடங்குகள் எல்லாம் நிறைவு பெற்றது.
ஆனால் ஆதியின் வீட்டில் நடப்பவை எல்லாம் தலை கீழாய் இருந்தது. மாடியில் இருந்தபடி ஆதி நடப்பதை இயல்பாய் பார்த்துக் கொண்டிருக்க, சமுத்திரன் குழம்பி கொண்டிருந்தான்.
சந்திரகாந்த் நடக்கவிருந்த நிச்சியத்தை நிறுத்தினார். எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க ஆதி மட்டும் தான் நினைத்ததை நடத்தி விட்ட ஆனந்தத்தில் இருந்தான்.
அறைக்குள் சென்ற ஆதியிடம் சமுத்திரன், “என்ன நடக்குதுன்னு சொல்லி தொலையேன்”
“நான் பத்த வைத்தது கொழுந்து விட்டு எரிகிறது” என்று ஆதி புன்னகையுடன் சொன்னான்.
“நீ நினைச்சதை சாதிச்சிட்ட... பட் எப்படி?” என்று சமுத்திரன் சந்தேகம் எழுப்பினான்.
“மதுமிதாவை மீட் பண்ண போன போது அதே சமயத்தில் அவளை ஒருவன் பார்க்க வந்திருந்தான். அவன் யாருனு தெரிஞ்சிக்கணும் என்ற ஆவலில் விசாரிச்சேன். தட்ஸ் மை குட் டைம்...
அவன்தான் விஜய் இன்டஸ்டிரீஸோட எம். டி குணாளன்... அதான் மதுமிதவோட அப்பா, அவருடைய முதல் மனைவியோட மகன்.
மிஸ்டர். குணாளன் தன் முதல் மனைவியோட நகை எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து, பெரிய ஆளா வளர்ந்து அந்தக் குடும்பத்தை மறந்துட்டு, இங்க வேற ஒரு ஃபேமிலியோட ஜாலியா இருக்காரு மனிஷன்... அவன்தான் மதுவை மீட் பண்ண வந்தவன்...
வெரி சேட்... அவன் மதுமிதாகிட்ட கெஞ்சிட்டிருந்தான். அவங்க அம்மா பைத்தியமாகிட்டாங்க... அவங்கள குணப்படுத்த மிஸ்டர் குணாளன் வரணும்னு கெஞ்சி கேட்டான். அவனுக்கு நான் ஒரு சின்ன உதவி செய்தேன்... அதுதான் இப்போ எனக்கு உதவியாய் இருக்கு”
“என்ன உதவி ஆதி?”
“அவனுக்கு அவனோட லீகல் ரைட்ஸ் தெரியல. அதான் நம்ம லாயர் திருமூர்த்தி... உங்க மாமனாரோட விசிட்டிங் கார்ட் கொடுத்தேன். அந்த மேட்டர்... ஒழுக்கத்தின் உதாரணமா இருக்கிற மிஸ்டர் சந்திரகாந்த்துக்குப் போனா என்ன ஆகுமோ... அதுதான் இப்போ நடந்திருக்கு. நான் சொன்ன மாதிரி என்கேஜ்மென்ட்டை ஸ்டாப் பண்ணிட்டேன். அதுவும் மிஸ்டர். சந்திரகாந்த் உதவியோடவே” என்றான் ஆதி கர்வத்தோடு.
“நீ ஆட்டத்திலேயே இல்லாம வின் பண்ணிட்ட... அப்படித்தானே?” என்றான் சமுத்திரன்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ஆதியின் செல்ஃபோன் மணி ஒலித்தது.
“இட்ஸ் ஒகே பேபி. நீ பீஃல் பண்ணாதே... நாம மீட் பண்ணுவோம்... டோன்ட் ஒரி” என்றான்.
“யாரு?” என்று சமுத்திரன் கேட்டதும் ...
“மதுமிதா” என்றான் ஆதி.
“........” சமுத்திரன பேச வார்த்தையின்றி மெளனமானான்.
“பாவம்டா... என்கேஜ்மெண்ட் நின்னு போன வருத்தத்தில் இருப்பா”
“இது ரொம்ப ஓவர்... பிள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டுறியா?”
“இன்னும் அந்தளவுக்கு எல்லாம் போகல” என்று ஆதி வேடிக்கையாகச் சொல்ல சமுத்திரன் தலையில் அடித்துக் கொண்டான்.
கடைசியாகச் சந்திரகாந்திடம் ஆறுதல் கூறிவிட்டு புறப்படும் போது ஆதியை பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.
“எல்லா விஷயத்தையும் நீ கூலா ஹேண்டில் பண்ற. ஆனா ஹோட்டலில் பிரச்சனை என்றதும் நீ காணாமல் போனதுதான்... எனக்குப் புரியவே மாட்டேங்குது!”
இந்தக் கேள்வியைக் கேட்ட மாத்திரத்தில் ஆதித்தியாவின் முகம் வெளுத்துப் போனது.
“வேண்டாம் சமுத்திரன்... இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும். இனிமே அந்த விஷயத்தைப் பத்தி பேசாதே...” என்று கோபமாய் விரல்களை ஆட்டி கண்டித்துவிட்டு ஆதி டென்ஷனோடு தன் அறை டிராவில் இருந்த சிகரெட்டை பற்ற வைத்தான்.
விந்தியாவின் வீட்டில் நிச்சயம் முடிந்து எல்லோரும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். அறையினுள் விந்தியாவும் சித்ராவும் மும்முரமாய்ப் பேசி கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. அனைவரும் பதறிப் போயினர்.
11