You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Iru Thruvangal - Episode 6

6

காதலின் வலி

விந்தியா வனிதாவையும் சிந்துவையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சிவாவின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். ‘சிவாவை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ’ என்று கவலை ஒரு புறமும், ‘வனிதாவின் பிரச்சனையை எப்படித் தீர்க்கப் போகிறோம்’ என்ற கவலை மறுபுறமும் அவளை வேதனையுற செய்து கொண்டிருந்தது.

ஆனால் வனிதாவின் கவலையோ முற்றிலும் வேறு. விந்தியாவை நோக்கி அவளின் கேள்வியை எழுப்பினாள்.

“அக்கா...”

“ம்ம்ம்ம்...” என்றாள் சிரத்தையின்றி.

“நீ இன்னுமும் மாமாவை மறக்கலையா?” விந்தியா பதறிக் கொண்டு வனிதாவை நோக்கினாள்.

“என்னடி உளர்ற?” என்றாள் விந்தியா கோபத்தோடு.

“எனக்குத் தெரியும் அக்கா... மாமா கல்யாணம் ஆன முதல் நாளிலேயே உங்க காதலை பற்றிச் சொல்லிட்டாரு”

நெற்றி பொட்டில் கை வைத்துக் கொண்டு, ‘சிவாவுக்கு அறிவே இல்லை’ என்று நினைத்து கொண்டாள்.

“வனிதா... தேவையில்லாததைப் பற்றி யோசித்து மனசை போட்டு குழப்பிக்காதே”

“அப்போ அந்த ஃபோட்டோ?” விந்தியாவின் பார்வையில் வீசிய கோபத்தைக் கண்டு வனிதா மெளனமானாள். ஆட்டோ நேராகப் போலீஸ் குவாட்டர்ஸ் வாசலில் நின்றது. சிவா சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.

அந்த வேலை அவனுடைய சிறு வயது கனவு. பெரும் முயற்சிக்குப் பின் நிறைவேறியது.

சரோஜா விந்தியாவைப் பார்த்ததும் ஆவலோடு வரவேற்றாள். சரோஜாவின் அண்ணணை விந்தியாவின் தாய் மாதவி மணந்து கொண்டாள். மாதவியின் அண்ணன் தனசேகரனை சரோஜாவுக்கு மணமுடித்தனர்.

இது இரு வழி உறவுமுறை. இவர்களின் ஒரே மகன் சிவா.

விந்தியா உள்ளே நுழையும் போது வனிதா தயங்கி நின்று,

“என்னைக் கூப்பிடவேயில்லை?” என்றாள்.

“நீ என்ன விருந்தாளியா? இது உன்னுடைய வீடு” என்று சொல்லி அவளை இழுத்து வந்தாள்.

சிந்து உள்ளே நுழைந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த தன் தாத்தாவின் மடியில் ஏறிக் கொண்டாள்.

தனசேகரன் விந்தியாவைக் கண்டவுடன் அளவில்லா ஆனந்தத்தோடு வரவேற்றார். அத்தை, மாமா இருவரும் விந்தியா தன் குடும்பத்தை ஒற்றை ஆளாய் தாங்குகிறாளே என்று எண்ணத்தில் பச்சாதாபத்தையும் பாராட்டடையும் மாறி மாறி பொழிந்தனர்.

வனிதாவிற்குப் பொறாமை கனலாய் எரிந்து கொண்டிருந்தது.

அங்கே மாட்டப்பட்டிருந்த சிவாவின் சிறு வயது புகைப்படம் தேங்கியிருந்த பழைய எண்ணங்களை வடிய விட்டது. சிவாவிற்கும் விந்தியாவிற்கும் கிட்டதட்ட ஒரே வயது. பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தது மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.

பலரும் அவர்களைக் காதலர்கள் என்று பறைசாற்ற அது அவர்களின் மனதிலும் ஆழமாய்ப் பதிந்து போனது. போதாக்குறைக்கு அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தனர்.

படிப்பை முடித்ததும் சிவா தன் கனவின் பின்னோடு செல்ல விந்தியா தன் குடும்பத்திற்காக பணத்தின் பின்னோடு ஓடினாள். கடைசியில் சிவாவின் போலீஸ் கனவு நிறைவேறியதும் விந்தியாவைப் பெண் கேட்க வந்தனர். அப்பொழுதுதான் வனிதாவின் ஆசை தெரிய வர விந்தியா கதையை மாற்றினாள்.

அங்குதான் சிவாவின் கோபம் விந்தியாவின் மீது பாய்ந்தது.

“அம்மா அப்பாக்கிட்ட நம்ம இரண்டு பேரும் நண்பர்கள்னு சொன்னியா?”

“ம்... சொன்னேன். அதுதானே உண்மை! சுற்றி இருக்கிறவங்க நம்மைக் குழப்பிட்டாங்க. நம்ம வயசும் அப்படி யோசிக்க வைச்சிடுச்சு” என்று சிறிதும் சலனமில்லாமல் பதிலுரைத்தாள்.

“சோ... நான் வனிதாவை கல்யாணம் செஞ்சிக்கணும்... அப்படித்தானே மிஸ். விந்தியா?” இந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

“நீ பெரிய தியாகச் செம்மலா இருந்துட்டு போ... ஐ டோன்ட் கேர். ஆனா, என்னோட வாழ்கையையும் சேர்த்துத் தியாகம் செய்ய நீ யாருடி?”

“அப்படி இல்ல சிவா... நான் உனக்காகத்தான்...” என்று அவள் ஏதோ சொல்ல தொடங்க, சிவா விந்தியாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

“நான் உன் கூட இருக்கேன்டி. உன் குடும்பத்தோட எல்லாத் தேவைகளையும் பூர்த்திச் செய்ய உனக்குத் துணையா இருக்கேன்”

விந்தியா கைகளை உதறிக் கொண்டாள்.

“என் குடும்பத்துக்காக யாரும் எந்த உதவியையும் செய்ய வேண்டாம். உன்னோட துணை எனக்குத் தேவையும் இல்லை... நான் அத்தனை பலவீனமானவளும் இல்லை”

“அப்படின்னா சரி… ஆனால், கனவிலும் உன் தங்கையைத் திருமணம் செய்துப்பேன்னு நினைக்காதே” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே விந்தியா அங்கிருந்து அகன்றாள்.

அது அவனை நிராகரிக்க அல்ல. அவளையும் மீறிக் கொண்டு வந்த கண்ணீரை மறைக்க.

அவன் பிடிவாதம்… அவன் பெற்றோரின் வேண்டுதலுக்கு முன் பொய்யாய் போனது. விதி அவனை வனிதாவோடே இணைத்து வைத்தது.

வனிதாவுக்கும் சிவாவுக்கும் திருமணம் முடிந்த அன்று சிவா விந்தியாவிடம், “இனி என் கண் முன்னே வராதே...” என்று கோபமாக உரைத்தான்.

அந்தச்சமயத்தில் ஆபிஸில் அவளுக்குக் கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பு சிவாவை விட்டு அவள் வெகுதூரம் செல்ல ஏதுவாய் இருந்தது. மீண்டும் மூன்று வருடங்களுக்கு பிறகு தன்னை அவன் சந்திப்பது அவனுக்குத் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

இப்படி எண்ணிக் கொண்டு சமையலறையில் இருந்த சரோஜாவிடம் விடைபெற சென்றாள்.

“அத்தை” என்று சரோஜாவின் கைகளைப் பிடித்தாள்.

“என்னடா?” என்று செல்லமாகச் சரோஜா அவள் தலையைத் தடவினாள்.

“வனிதா ஏதோ விவரம் புரியாம நடந்துக்கிட்டா... நீங்க அவளை மன்னிச்சிடுங்க” என்று பணிவாக உரைத்தாள்.

“தப்பு அவளுடையது மட்டுமில்லை…  என்னுடையதும்தான்... நான் அவகிட்ட கொஞ்சம் பொறுமையாய் நடந்து கொண்டிருக்கணும். அம்மாவாக இல்லாம மாமியாராக நடந்துக்கிட்டேன்...” என்று சரோஜா வருத்தப்பட்டாள்.

“அப்போ நீங்க கோபமா இல்லையா?”

“இல்லம்மா... ஆனா சிவா என் மேலே ரொம்ப கோபமா இருக்கான்... முகத்தைப் பார்த்து பேசியே ஒரு மாசமாயிடுச்சு...”

“ஏன் அத்தை?”

“அவன் மனைவிகிட்ட சண்டைப் போட்டு துரத்திட்டேன்னு...” சொல்லிக் கொண்டே புடவை முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

விந்தியா சரோஜாவை தேற்றினாள்.

நாம் வந்த வேலை முடிந்தது என்று எண்ணிக்கொண்டு உடனடியாகக் கிளம்ப எத்தனித்தாள். சாப்பிட்டுவிட்டு போகும்படி வற்புறுத்தியும் வேண்டாம் என்று காரணங்களைச் சொல்லி வனிதாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.

வனிதாவிடம் இனியாவது பொறுப்போடு இருக்கும்படி புத்திமதி உரைத்தாள். பின்பு சிந்துவினை தூக்கி முத்தமிட்டுவிட்டு புறப்பட்டாள்.

கடைசியாகத் தன் பர்ஸிலிருந்த சிவாவின் ஃபோட்டோவை நீட்டினாள்.

“இதை ஞாபகார்த்தமாக வச்சிக்கல... தூக்கிப்போட மனசில்லாமல் இது என்னோட பர்ஸலயே தங்கிடுச்சு” என்று சொல்லி வனிதாவின் கையில் திணித்துவிட்டு புறப்பட்டாள்.

ஆனால் அவள் கிளம்பும் முன் சிவா வீட்டு வாசலில் கம்பீரமாய் பைக்கில் வந்து இறங்கினான்.

போலீஸ் உடையில் அவனுடைய கம்பீரம் பன்மடங்கு அதிகமாய் தோன்றியது. அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே இருந்த அவனுடைய கூர்மையான பார்வை விந்தியாவினை நோக்கின.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் விந்தியாவின் கண்கள் கலங்கின. விழிகளுக்குள் தேங்கிய நீரை வெளியே வரவிடாமல் துடைத்துக் கொண்டாள்.

அவன் பாராமுகமாய் போய்விடுவானோ என்று அவள் மனம் நினைத்துக் கொண்டது. வெகு நாட்களுக்குப் பின் விதி அவர்களை நேரெதிரே சந்திக்க வைத்தது.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content